சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Mining executive’s speech points to key role in Australian coup

ஆஸ்திரேலிய சதியில் சுரங்கத் தொழில் நிர்வாகியின் பேச்சு முக்கிய பங்கைச் சுட்டிக்காட்டுகிறது

Nick Beams
15 July 2010

Use this version to print | Send feedback

மிகப் பெரிய சுரங்க சர்வதேச நிறுவனமான Rio Tinto வின் தலைமை நிர்வாகி டோம் அல்பனீசின் உரையானது ஆஸ்திரேலிய பிரதம மந்திரி கெவின் ருட் ஜூன் 24ம் திகதி நடத்தப்பட்ட ஒரு அரசியல் சதியின் மூலம் அகற்றப்பட்டதில், முக்கிய சுரங்க நிறுவனங்களின் பெரும் பங்கையும் அவை உலகளவில் தங்கள் நலன்களை இரக்கமற்ற முறையில் தொடர்வது பற்றியும் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது.

கடந்த வியாழனன்று பெருமை பொருந்திய லண்டன் லோர்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த நிகழ்வில் 500 சுரங்கத் தொழில் நிர்வாகிகளுக்கு உரையாற்றிய அல்பனிஸ், ருட் திட்டமிட்டிருந்த RSPT எனப்பட்ட வளஇருப்புக்கள் மீது மிக அதிக இலாப வரிகளுக்கு எதிரான ரியோவின் அசாதாரண பிரச்சாரம் என்பது ஒரு முறை நடவடிக்கை அல்ல என்றும் அதன் இலாபவகைக்கு அச்சுறுத்தல் என்று உணரப்படும்போதெல்லாம் நிறுவனம் இதேவிதத்தில் செயல்படும் என்றும் தெளிவாக்கினார்.

பெரும் இலாபத்திற்கு எதிரான தன்னுடைய நிறுவனத்தின் எதிர்ப்பை பரிசீலித்த அல்பனீஸ், அதன் பின்னர் உலகம் முழுவதும் உள்ள அரசாங்கங்களுக்கு மாபியாத்தனம் போன்ற அச்சுறுத்தல் ஒன்றை வெளியிட்டார்: “இத்தலைப்பில் இருந்து நகர்வதற்கு முன் ஆஸ்திரேலிய அணுகுமுறை பற்றி ஆராயும் பிற அதிகார வரம்புகள் கொண்டுள்ள இடர்கள் பற்றியும் கூற விரும்புகிறேன். நாட்டின் குறிப்பிட்ட காரணிகள் பற்றிக் கவனமாக சிந்திக்குமாறு கொள்கை இயற்றுபவர்களுக்கு நான் ஆலோசனை கூறுவேன். அதாவது முடிவின் பாதிப்பு சர்வதேச போட்டித்தன்மையில் எப்படி இருக்கும். ஏற்றுக் கொள்ள இருக்கும் இடர்களுக்கு உரிய இழப்பீடு கொடுக்கப்படுகிறதா.”

வேறுவிதமாகக் கூறினால்: அதைப் பற்றி நினைக்கவும் செய்யாதீர்கள், இல்லாவிடில் ருட் சென்ற பாதையில்தான் நீங்களும் செல்வீர்கள். ரியோ மற்றும் பிற சுரங்கப் பெருநிறுவனங்களான BHP Billiton, Xstrata போன்றவற்றின் முக்கிய அக்கறைகளில் ஒன்று, தங்கள் வருவாய்களைப் பெருக்கிக் கொள்ள முற்படுகையில் தேசிய அரசாங்கங்கள் ஆஸ்திரேலிய உயர் இலாப வரி “வளஇருப்புக்களை தேசியமயமாக்குதல்” என்பதைக் கையாளலாம் என்பதில் கொண்டுவிடலாம் என்பதுதான். திடீரென ருட் அகற்றப்பட்டது அவற்றைச் சிந்திக்க வைக்கும்.

“உலகெங்கிலும் உள்ள கொள்கை இயற்றுபவர்கள் வருவாய் இடைவெளியை நிரப்ப ஒரு புதிய வரியை சுமத்த அல்லது உள்ளூர் அரசியல் வேலை செய்யும்போது ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும். இதுதான் பரந்த பொருளாதார விளைவுகள் மற்றும் தொடர்ந்த முதலீட்டுப் பாதிப்புக்கள் பற்றி முழுமையாக ஆராய வேண்டியதின் முக்கியத்துவம். அத்தகைய முடிவுகள் பரந்த கண்ணோட்டத்தில் எடுக்கப்பட வேண்டும், ஆலோசனை, கலந்து பேசுதல் என்ற உணர்வுகளைக் கொண்டு.” உரை பற்றிய ஒரு அறிக்கை “இரவு விருந்தில் கலந்து கொண்ட சுமார் 500 சுரங்கத் தொழில் நிர்வாகிகள் இதற்குப் பெரும் ஆர்வத்துடன் வரவேற்பு கொடுத்தனர்” என்று குறிப்பிட்டுள்ளது.

“ஆலோசனை கலந்து பேசும் உணர்வு” என்று அல்பனீஸ் கூறியதின் பொருள் ஆஸ்திரேலியாவில் நிரூபணம் ஆயிற்று. RSPT ஐ உடனடியான ருட் பதவி நீக்கத்திற்குப் பின்னர் அகற்றிய பிரதம மந்திரி ஜூலியா கில்லர்ட் அதற்குப் பதிலாக தாதுப்பொருட்கள் வள வரி ஒன்று விதிக்கப்படும் என்றார். இப்புதிய வரி பற்றிய விவரங்கள் BHP Billiton இன் முன்னாள் தலைவர் Don Argus தலைமையின் கீழுள்ள ஒரு குழுவால் முடிவெடுக்கப்படும்.

அடுத்த இரு ஆண்டுகளில் RSPT மூலம் எதிர்பார்க்கப்பட்ட 12 பில்லியன் டொலருக்குப் பதிலாக புதிய வரியினால் ஏற்படக்கூடிய அரசாங்க இழப்பு 1.5 பில்லியன் டொலர்தான் என்று அரசாங்கம் கூறுகிறது. ஆனால் வரிவிகிதம் 40 சதவிகிதத்தில் இருந்து 22.5 சதவிகிதம் என்று குறைக்கப்பட்டது மற்றும் அது மூலதனத்தில் இருந்து கிடைக்கும் வருமானம் 13 சதவிகிதத்தைத் தாண்டினால்தான் பொருந்தும் (RSPT யின் கீழ் இருந்த 6 சதவிகிதம் என்பதற்குப் பதிலாக) மற்றும் வரி செலுத்தும் நிறுவனங்களின் எண்ணிக்கை 2,500ல் இருந்து 320 எனக்குறையும் ஆகியவற்றைப் பார்க்கும்போது அரசாங்கத்தின் கூற்று நம்பமுடியாத வகையில்தான் எதிர்கொள்ளப்பட முடியும். இந்த 1.5 பில்லியன் டொலர் என்பது கூட ஒரு கட்டுக்கதை, உண்மையான வருவாயிழப்பை மூடிமறைக்கும் நோக்கம் கொண்டது, உண்மையான வருவாய் இழப்பு நிதி அமைச்சரக மதிப்பீடுகளின்படி 7.5 பில்லியன் டொலராக இருக்கும் என்பது நிரூபணம் ஆகியுள்ளது.

தாராளவாதிகளாலும் மற்றவர்களாலும் மார்க்சிஸ்ட்டுக்கள் முதலாளித்துவ முறையின் அடித்தளத்தில் உள்ள பொருளாதார உந்து சக்திகள் எப்படி அரசியல் நிகழ்வுகளை உருவாக்கி அவற்றின் முடிவை நிர்ணயிக்கின்றன என்பது பற்றிக் கூடுதல் வலியுறுத்தல் செய்கின்றனர் என்று குறைகூறப்படுகின்றனர். அவர்கள் இரக்கமற்ற முறையில் பெருநிறுவன நிர்வாகிகள் தங்கள் செயற்பட்டியலைத் தொடர்வது இலாபக் குவிப்பின் இடைவிடாத உந்துதலின் உருவகமாக உள்ளது என்று சுட்டிக்காட்டுவது நயமற்றது என்றும் கூறுகின்றனர்.

இத்தகைய குறைகூறல்கள் உயிர்த்த முறையில் மறுக்கப்பட வேண்டும் என்பதைத்தான் அல்பனீஸ் உரை எடுத்துக் காட்டுகிறது. தன்னுடைய பார்வையாளர்களிடம் அவர், “வளஇருப்புக்கள் முடிவுடையவை என்பது கட்டுக்கதை, சில கொள்கை இயற்றுபவர்கள் இக்கருத்தை ஆதரிக்கத்தான் விரும்புகின்றனர்” என்பதை தான் அகற்ற விரும்புவதாகக் கூறினார். “வளத்தை எடுப்பதில் வரம்புகள் வைக்கப்பட்டால், வளஇருப்புக்கள் முடிவு உடையனவாக இருக்கும். ஏனெனில் ஒரு நாடு திடீரென முதலீட்டை ஈர்க்கும் தன்மையில் குறைந்துவிடக்கூடும்.”

இத்தகைய தடைகளை போடப்பட்டால், பின் அவை அகற்றப்பட வேண்டும் என்பதுதான் தொடர்ச்சியான கருத்து…. ருட்டிற்கு எதிரான அரசியல் சதியில் நிரூபிக்கப்பட்டது போல் எந்தவழியையும் கையாண்டு.

இந்த வெளிப்படைத் தன்மையை ஒட்டி, அல்பனீஸின் உரை ஆஸ்திரேலியச் செய்தி ஊடகத்தில் பரந்த அளவில் வெளியிடப்படவில்லை என்பது மிகவும் முக்கியம் வாய்ந்ததாகும்—இதைப்பற்றிக் குறைந்த தகவல்தான் கொடுக்கப்பட்டுள்ளது, வணிகப் பக்கங்களில் அவை புதையுண்டன. தொலைக்காட்சியின் உரையாடல் பிரிவு தலைவர்களோ செய்தித்தாள் கட்டுரையாசிரியர்களோ, அவற்றின் முக்கியத்துவத்தை பற்றி எடுத்துக் கூறுவது ஒருபுறம் இருக்க, அவருடைய கருத்துக்கள் பற்றி எதுவித கருத்தும் தெரிவிக்கவில்லை.

இது தெரியாமல் விடப்பட்டதோ அல்லது தற்செயல் நிகழ்வோ அல்ல. ஜூன் 23-24 நிகழ்வுகளுக்கு முழு நனவுடன் கூடிய விடையிறுப்பாகும் இது. மக்களின் பரந்த பிரிவுகள் ருட் அகற்றப்பட்டது குறித்து ஆழ்ந்த கவலை கொண்ட நிலைமையில், அதிலும் கூடுதலான அரசியல் நனவுடைய தட்டுக்கள் பாராளுமன்ற ஜனநாயகம் என்ற முகப்பின் பின் செயல்படும் உண்மையான சக்திகள் பற்றி எச்சரிக்கை அடையும்போது, செய்தி ஊடகம் ஒரு முக்கிய பங்கை செய்கிறது: ஆட்சி மாற்றம் பற்றிய விசாரணை, அதை அமைத்த சக்திகள் பற்றிய விசாரணையை தடுத்தல் என்பதே அது. இந்த நோக்கத்தை ஒட்டி, அது ஒரு இரு வழிப்பாதையை தொடர்கிறது; ஒரு புறம் ருட் கருத்துக் கணிப்புக்ளை ஒட்டி அகற்றப்பட்டார் என்று வலியுறுத்துகின்றன —அதே நேரத்தில் தொழிற் கட்சி அரசாங்கத்திற்கான ஆதரவுத் தளம் ஆட்சி மாற்றத்திற்கு முன்பு இருந்ததைப்போல்தான் உள்ளதைக் காட்டுகிறது— மேலும் அவருடைய எதேச்சதிகார நிர்வாக முறையினாலும் என்று கூறுகின்றன. அதே நேரத்தில் கில்லர்டிற்கு ஆதவு தருவதில் எந்த வாய்ப்பையும் இழந்துவிடவில்லை.

செய்தி ஊடகம் மூடிமறைப்பது என்பது வரவிருக்கும் தேர்தல் பிரச்சாரம் முழுவதும் தீவிரமாக இருக்கும். அதுதான் சதியின் அரசியல் உட்குறிப்புக்கள் பற்றிய விவாதம் அடக்கப்படும் என்பதை உறுதி செய்யும்.

ஆனால் பெருவணிக நிர்வாகக் குழுக்கள் மற்றும் நிதிய உயரடுக்கின் உயர் தட்டுக்களிலும் வேறு கதைதான் உள்ளது. அங்கு ஆஸ்திரேலிய நிகழ்வுகள், அவற்றின் உலகப் பொருளாதார நெருக்கடியுடனான உறவு ஆழ்ந்து இருப்பது பற்றித் தீவிர விவாதங்கள் உள்ளன.

தன்னுடைய உரையை அல்பனீஸ், “மாறும் உலகப் பொருளாதாரம் மற்றும் வெளிப்படும் சவால்கள்” பற்றிய குறிப்புடன் முடித்தார். வரவிருக்கும் காலம் சீன எழுச்சி மற்றும் பிற எழுச்சி பெறும் பொருளாதாரங்களின் காலமாக இருக்கும் என்று அவர் கணித்து “இதையொட்டி OECD நாடுகளின் அடிப்படை மாற்றங்கள் கொண்டுவரும் பெரும் கொந்தளிப்புத் தன்மையும் நிறைந்திருக்கும். இந்தக் கொந்தளிப்பு பழைய வணிகச் சுற்றுக்கள் போல் இராமல் கடந்த இரு ஆண்டுகளில் நாம் அனுபவித்ததைப் போல் இருக்கும்” என்றார்.

இத்தகைய பொருளாதார உறுதியற்ற தன்மை, மற்றும் “அடிப்படை மாற்றங்கள்” தொலை விளைவுடைய அரசியல் மாற்றங்களைக் கொண்டுவரும்.

ருட்டிற்கு எதிரான ஆட்சி மாற்றமானது வரவிருக்கும் அரசியல் அதிர்ச்சிகளுக்கு ஒரு முன்கூட்டிய அறிவிப்புத்தான். உலக நிதிய மற்றும் பெருநிறுவன உயரடுக்குகளின் மேலாதிக்க பிரிவுகள் பெருகிய முறையில் பாராளுமன்ற ஜனநாயகத்தின் பொறிகளைப் பயன்படுத்தி தங்கள் நலன்களை செயல்படுத்த சர்வாதிகார வழிவகைகளையும் மேற்கொள்வர். இதற்கு சர்வதேச சோசலிச வேலைத்திட்டம் மற்றும் தொழிலாளர் அரசாங்கம் என்ற அடிப்படையில் உண்மையான ஜனநாயகத்திற்காக போராடுவதற்கு ஐக்கியப்பட்ட அரசியல் போராட்டம் தேவை. அவ்விதத்தில்தான் சர்வதேச தொழிலாளர் வர்க்கமானது உலக நிதிய தன்னலக்குழுவின் ஆணைகளுக்கு எதிராக அதன் தேவைகளைக் பாதுகாத்துக் கொள்ள முடியும்.