World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Media demands France prepare for world war

செய்தி ஊடகமானது பிரான்சை உலகப் போருக்கு தயாராகும்படி கோருகிறது

By Kumaran Ira
16 July 2010

Back to screen version

வருங்காலத்தில் பெரும் போர்களுக்கு தயாரிக்கும் விதத்தில் ஐரோப்பிய அரசாங்கங்கள் அவற்றின் இராணுவச் செலவுகளை அதிகரிக்க வேண்டும் என்று பல முக்கிய பிரெஞ்சு செய்தித்தாட்கள் கோரியுள்ளன. இக்கோரிக்கைகளும், செய்தி ஊடகம் முன்வைக்கும் ஆபத்தான தோற்றங்களும் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு தீவிர எச்சரிக்கையாகும்.

அரசாங்கக் கடன் நெருக்கடியை எதிர்கொள்ளும் செலவு வெட்டுக்களின் ஒரு பகுதியாக ஐரோப்பா முழுவதும் உள்ள அரசாங்கங்கள் பாதுகாப்புச் செலவுகளை தற்காலிகமாக குறைத்தல் அல்லது முடக்கி வைத்துல் என்று அறிவித்துக் கொண்டிருக்கின்றன. அடுத்த மூன்று ஆண்டுகளில் கிட்டத்தட்ட 5 பில்லியன் யூரோக்களை சேமிக்கும் திட்டம் கொண்டுள்ளது. இதில் இராணுவப் படைகளில் 54,000 வேலைகளும் அடங்கும். 2011 பாதுகாப்புத் துறை வரவு-செலவுத் திட்டம் 30.1 பில்லியன் யூரோ என்று 2010ல் இருந்ததை போல்தான் இருக்கும்.

முக்கிய முதலாளித்துவ வெளியீடுகளால் இத்தொகைகள் முற்றிலும் போதாதவை எனக் கருதப்படுகின்றன.

ஜூலை 3 திகதி தலையலங்கம், “ஆயுதங்களுக்கு, ஐரோப்பியக் குடிமக்களே!” என்ற தலைப்பில் பிரான்சின் நாளேடு LE MONDE எழுதியது: “தன்னை அதிக ஆயுதங்களை நிறைந்ததாக ஆக்கிக் கொள்ளும் உலகத்தில், ஐரோப்பா ஆயுதங்களை களைகிறது. நெருக்கடியின் பாதிப்பு மற்றும் பொது நிதிகளைச் சரிபடுத்த வேண்டும் என்ற உணர்வில், ஐரோப்பிய நாடுகள் தங்கள் பாதுகாப்புச் செலவுகளை பெரும் அளவில் குறைக்கின்றன. இது மிகவும் ஆபத்தானது.”

ஜூன் 24 அன்று வலதுசாரி நாளேடு Le Figaro “ஐரோப்பா, ஒரு இராணுவ சக்தி?” என்ற தலைப்பில் Therese Delpech என்று பாரிஸில் உள்ள Centre detudes et de recherches Internationals (CERI) ல் மூத்த ஆராய்ச்சியாளராக இருப்பவரின் கட்டுரையை வெளியிட்டது. அவர் எழுதினார்: “பாதுகாப்பு வரவு-செலவுத் திட்டங்களில் உணர்வுடன் வெட்டுக்கள் ஏற்பட்டுள்ளது ஐரோப்பிய இராணுவ சக்தியின் வருங்காலத்திற்கு ஐரோப்பிய சமாதானம் அல்லது “மிருதுவான சக்தி’ கொண்டாடும் நிகழ்வு அல்ல. மாறாக இது அமைதியின்மை அளிக்கும் திறனுடையது.”

இத்தகைய கருத்துக்கள் செய்தி ஊடகத்தில் மேலாதிக்கம் செலுத்தும் அப்பட்டமான வர்க்கப் பார்வைக்கு சாட்சியம் ஆகும். ஓய்வூதியங்கள், தொழிலாளர்கள் உரிமைகளில் பெரும் வெட்டுக்கள் பாராட்டப்படுகின்றன ஆனால் பிரான்சின் போர் தொடுக்கும் திறனை அச்சுறுத்தும் எந்த வெட்டும் முழு முதலாளித்துவ செய்தி ஊடகத்திற்கும் ஏற்புடையதாக இல்லை.

உண்மையில், பிரான்ஸ் மாபெரும் அளவில் வளங்களை இராணுவ இருப்பதற்குத்தான் செலவழித்து வருகிறது. 2008ல் பாதுகாப்பு பற்றி ஒரு வெள்ளை அறிக்கையை அறிமுகப்படுத்தி, பிரான்சின் இராணுவ மூலோபாய சார்பை வரையறுத்தது. 2009-2011 பாதுகாப்பு வரவு-செலவுத் திட்டத்தின் உறுதிப்பாட்டிற்கு வெள்ளை அறிக்கை வழிவகுத்தது. ஆனால் 2012 ற்கு 1 சதவிகிதம் அதிகரித்தது. 377 பில்லியன் யூரோக்கள் ஆறு ஆண்டுகளுக்கு என பாதுகாப்பு வரவு-செலவுத் திட்டத்தில் வழங்கப்பட்டது. திட்டமிடப்பட்டுள்ள பாதுகாப்புச் செலவுகள் சேமிப்புக்களில் பிரான்சின் முக்கிய ஆயுதத் திட்டங்களை பாதிக்காது. Rafale போர் ஜெட், அணுவாயுதம் தாங்கும் நீர்மூழ்கிக் கப்பல்கள், அல்லது ஏயர்பஸ் A400M இராணுவ போக்குவரத்து விமானம் ஆகியவை தொடரும்.

இந்த திட்டங்களின் தன்மை தெளிவாக்குவது போல், பிரெஞ்சு முதலாளித்துவத்தின் நோக்கம் அதன் போட்டி நாடான அமெரிக்காவுடன் வெளிநாடுகளில் ஏகாதிபத்திய தலையீடுகளுக்கு தயாரிப்பதாகும்.

Le Monde எழுதுகிறது: “ஐரோப்பா போன்ற ஒரு கண்டத்திற்கு பாதுகாப்பு அதன் மூலோபாய விழைவுகளை நியாயப்படுத்தும் திறனைக் கொள்வதாகும் (இன்னும் ஏதேனும் அது கொண்டிருக்கிறதா?); வருங்காலப் பொருளாதார பணயத்தில் ஓரளவு இருக்கும் தொலை அரங்குகளிலும் அதிகாரத்தை முன்னிறுத்தும் திறன். மற்ற கண்டங்களில் தலையீடு செய்வதற்கான வாய்ப்புக்கள்…..சுருங்கக் கூறின், நம் காலத்தின் சக்திகளுக்கு இடையே அந்தஸ்தை நிலைநிறுத்திக் கொள்ளுதல்.”

ஒரு முக்கிய ஏகாதிபத்திய சக்தி என்று இருப்பதற்கு ஒரு விலை உண்டு எனத் தொடரும் Le Monde எழுதுகிறது: “பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் அவற்றின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 1.5 சதவிகிதத்திற்கும் குறைவாகத்தான் பாதுகாப்பிற்கு ஒதுக்குகின்றன. நம் காலத்தில் மிகப்பெரிய இராணுவ சக்திகளில் ஒன்றாகத் தொடர அமெரிக்கா விரும்புகிறது—மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4 சதவிகிதத்திற்கும் மேலாக பாதுகாப்பிற்குச் செலவழிக்கிறது; அதே அளவு ரஷ்யர்களும் 5 சதவிகிதத்திற்கு முயற்சிக்கிறார்கள், சீனர்கள் இன்னும் அதிகமாக.”

Delpech ன் கட்டுரை உறையவைக்கும் காட்சிகளை முன்வைக்கிறது. இதில் அமெரிக்காவும் ஐரோப்பாவும் சீனாவிற்கு எதிராகத் தொடுக்கும் உலகப் போரும் அடங்கியுள்ளது—இதில் பிரான்ஸ் ஆனது சீனாவின் மத்திய கிழக்கு எரிசக்தி இருப்புக்களின் விநியோகத்தை மத்திய கிழக்கில் தடுப்பதற்கு தலையிடுவதும் உள்ளது.

“ஆசியா இன்னும் பெரிய அளவில் [ஐரோப்பாவில்] ஒரு பொருளாதார பங்காளியாகக் கருதப்படுகிறது. அதே நேரத்தில் அமெரிக்கா சரியான முறையில் அதை மூலோபாயத் தலைவலி என்று கருதுகிறது. இன்னும் அருகே, மத்திய கிழக்கு அரேபிய-இஸ்ரேலிய பூசல் விகிதத்தில்தான் பல நேரமும் அறியப்படுகிறது. இதில் ஈரானிய அணுசக்திப் புதிரைத் தவிர கருத்திற்கொள்ளப்பட வேண்டிய பல பிரச்சினைகள் உண்டு—துருக்கியின் புதிய பிராந்தியக் கொள்கை, எகிப்து, சௌதி அரேபியா ஆகியவற்றில் அவற்றின் தற்போதைய ஆட்சியாளர்களுக்கு பின்னர் என்ன நேரிடும் போன்றவை.” என்று அவர் எழுதியுள்ளார்.

“21ம் நூற்றாண்டின் பூசல்கனின் சாத்தியமான தன்மை மிக வெளிப்படையானது. இதில் ஐரோப்பா முற்றிலும் வெறும் பார்வையாளராக இருக்கும். ஆசியா கூட பலர் நம்புவது போல் அவ்வளவு தொலைவில் இல்லை. மத்திய ஆசியா, மத்திய கிழக்கு, ஆபிரிக்கா மற்றும் இலத்தின் அமெரிக்கா ஆகியவற்றில் சீனா பிரவேசித்துள்ளது—அதாவது எல்லா இடங்களிலும்” என்று Delpech சேர்த்துக் கூறுகிறார்.

சீனாவின் எழுச்சியை பிரான்சின் உலக நலன்களுக்கு முக்கிய அச்சுறுத்தல் திறன் என்று Delpech குறிப்பிட்டுக் கூறுகிறார். சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஒரு பூசல் வந்தால், ஐரோப்பியர்கள் “சிலவற்றை செய்தாக வேண்டும்—உதாரணமாக, மத்திய கிழக்கில் கடல்வழிப் பாதைகளை மூட உதவ வேண்டும். இதைச் செய்வது ஒருபுறம் இருக்க, இவ்வித நினைப்பைக்கூட ஐரோப்பா கொண்டுள்ளதா?”

ஐரோப்பிய இராணுவச் செலவுகள் ஐரோப்பாவிற்கு வெளியே உள்ள சக்திகளுக்கு எதிராக மட்டும் இயக்கப்படவில்லை. பெருகிய முறையில் ஐரோப்பாவிற்குள்ளேயே இருக்கும் மூலோபாய உறவுகளுக்காகவும் இயக்கப்படுகிறது.

கிரேக்க அரசாங்கக் கடன் நெருக்கடியுடன் தொடங்கிய தெற்கு ஐரோப்பியக் கடன் நெருக்கடி ஐரோப்பிய ஒன்றியத்திற்குள், குறிப்பாக பிரான்சிற்கும் ஜேர்மனிக்கும் இடையே அழுத்தத்தைத் தோற்றுவித்தது. மே மாதம் ஜேர்மனி கிரேக்கக் கடனைத் தாமதப்படுத்தும் விதத்தில் வங்கிகள் மூலம் கொடுக்கப்படும் ஐரோப்பிய பிணை எடுப்பிற்கு உடன்படத் தயக்கம் காட்டியபோது, பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி யூரோவில் இருந்தே முறித்துக் கொள்ளுவதாக அச்சுறுத்தியதாகக் கூறப்படுகிறது. ஐரோப்பிய மத்திய வங்கியின் இயக்குனர் Jean-Claude Trichet சர்வதேச நிலைமை இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மிகக் கடினமாக உள்ளது என்று கூறினார்.

செயல்படுத்தப்படவுள்ள சிக்கன நடவடிக்கைகளானது ஐரோப்பா முழுவதும் தொழிலாள வர்க்கத்தையும் தொழில்துறை தளத்தையும் அச்சுறுத்துகின்றன. ஆனால் தேசிய அரச அமைப்பு முறையின் கீழ் இது தவிர்க்க முடியாமல் ஒரு பெரிய இராணுவத்தை ஆதரிக்கும் விதத்தில் எவர் வலுவான தொழில்துறைத் தளத்தை நிலைநிறுத்துவர் என்ற வினாவை எழுப்புகிறது. அதாவது உலக மந்தநிலைச் சூழ்நிலையில் பொருளாதாரப் போட்டி இராணுவப் போட்டித் தன்மையையும் கொள்கிறது.

Le Post ல் எழுதிய Jean-Pierre Chauvin ஐரோப்பிய நாடுகள் “இராணுவத் துறையில் பிறர் விஞ்சிவிடக்கூடிய நிலையிலும், தொழில்துறையில் அகற்றப்பட்டுவிடும் நிலை பற்றியும் அஞ்சுகின்றன—இவை வேலையின்மை விகிதங்கள், பொருளாதாரம், இறைமை மற்றும் நாட்டின் வலிமை பற்றிக் கூட நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்தும்.”

இரண்டாம் உலகப் போரின் ஆரம்பத்திலேயே, 1940ல் பிரான்ஸ் இராணுவ ரீதியில் தோல்வி அடைந்ததைக்கூறி, “பிரெஞ்சு வரலாறு…. அதிலும் குறிப்பாக இரண்டாம் உலகப் போருக்கு முன் பாரிஸ், ஜேர்மனி ஆயுத வலிமை பெற்ற நேரத்தில் ஏதும் செய்யாதது, இப்பொழுது ஒரு படிப்பினையாக எடுத்துக் கொள்ளப்படவேண்டும்” என்றும் சேர்த்துக் கொள்ளுகிறார்.

அதே நேரத்தில், பிரெஞ்சு ஆளும் வர்க்கம் அதன் பொருளாதார, அரசியல் உறவுகளை ரஷ்யாவுடன் தீவிரப்படுத்திக் கொள்கிறது. பிரதான ஐரோப்பிய இருபக்க வணிகப் பங்காளியோ ஜேர்மனி ஆகும். 2009ல் பிரான்ஸும் ரஷ்யாவும் 14 பில்லியன் யூரோக்கள் வணிகப் பறிமாற்றம் செய்து கொண்டன. ஆனால் ஜேர்மனிய-ரஷ்ய வணிகத் தொகுப்போ 44 பில்லியன் யூரோக்கள் என்று இருந்தது.

ஜூன் மாதம் பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி ரஷ்யாவிற்கு Saint Petersburg International Economic Forum ல் பங்கு பெறச் சென்றிருந்தார். வணிகக் குழுக்களை உடன் அழைத்துச் சென்றிருந்த சார்க்கோசி 25 பெரிய ஒப்பந்தங்களான உணவு, எரிசக்தி, போக்குவரத்து, வான்வியல் துறைகளில் பிரெஞ்சு, ரஷ்ய நிறுவனங்கள் கையெழுத்திட்டதை மேற்பார்வையிட்டார். அவை மொத்தம் 5 பில்லியன் யூரோக்கள் மதிப்புடையவை. பிரெஞ்சு எரிசக்தி நிறுவனங்களான GDF-Suez, EDF (Electricite de France) இரண்டும் முறையே ரஷ்யாவின் North Stream, South Stream குழாய் திட்டங்களில் 9, 10 சதவிகிதப் பங்குகளை வாங்கின.

இது ஒரு வளரும் இராணுவ உறவுடன் தொடர்புடையது. மார்ச் மாதம் பிரான்ஸ் நான்கு Mistral வகுப்பு தரை-கடல் பயணிக்கும் கப்பல்களை ரஷ்யாவிற்கு விற்பது பற்றிய பேச்சு வார்த்தைகளைப் பற்றி அறிவித்தது.

தன்னுடைய முக்கிய உரையில் சார்கோசி கூறினார்: “ஐரோப்பாவும், ரஷ்யாவும் ஒரு மூலோபாய வகையில் ஒன்றாகச் செயல்பட வேண்டும், மிக மிக நெருக்கமாக, நம்பிக்கை நிறைந்த உறவில் என்பது என்னுடைய நம்பிக்கை” என்றார். “பனிப்போர் முடிந்துவிட்டது. சுவர் தகர்ந்து விட்டது. ரஷ்யா ஒரு பெரிய சக்தி. நாம் அண்டை நாட்டினர். நாம் நண்பர்களாகத்தான் இருக்க வேண்டும், நெருக்கமாக செயல்பட வேண்டும்.” என்று சேர்த்துக் கொண்டார்.

ரஷ்யாவுடனான பிரான்சின் ஒப்பந்தங்கள், ஜேர்மனியுடன் போட்டியிடும் நோக்கத்தை கொண்டவை, ஐரோப்பாவிற்குள் விரிவடையும் மூலோபாய அழுத்தங்களின் அடையாளம் ஆகும். பெருகிய முறையில் இவற்றில் அமெரிக்கா மற்ற முக்கிய நேட்டோ சக்திகளைத் தவிர மற்றவற்றிடையேயும் போட்டி உள்ளது.

ஐரோப்பியச் சந்தையில் சீன ஊடுருவல் அதிகரித்துள்ளது பற்றி பிரெஞ்சு ஆளும் உயரடுக்கு கவலை கொண்டுள்ளது. அரசாங்கம் நடத்தும் இரயில் நிறுவனம் OSE தனியார் மயமாக்கப்படும் என்று கிரேக்கம் அறிவித்ததில் இருந்து—ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 110 பில்லியன் பிணை எடுப்பு உடன்பாட்டின் போது செய்யவேண்டும் என்று கூறப்பட்ட நடவடிக்கைகளில் ஒன்று—பிரான்சின் தேசிய இரயில் நிறுவனம் SNCF அதில் ஆர்வம் காட்டியுள்ளது.

பல தகவல்கள்படி, சீன நிறுவனங்களும் கிரேக்கத்தின் இரயில்வே அமைப்புக்களை வாங்குவதில் அக்கறை காட்டுகின்றன. ஜூன் மாதம் சீனா கிரேக்கத்துடன் பல பில்லியன் யூரோக்கள் மதிப்புடைய வணிக உடன்பாடுகளில் கையெழுத்திட்டது. இவை ஐரோப்பாவில் சீனா செய்த ஒற்றை மிகப் பெரிய முதலீடு என்று கருதப்படுகின்றன. சீன நிறுவனங்கள் 14 ஒப்பந்தங்களை கப்பல்கட்டுதல், சுற்றுலா, கட்டமைப்பு மற்றும் தொலைத்தொடர்பு பிரிவுகளில் கையெழுத்திட்டுள்ளது.

ஜூலை 1ம் திகதி, பிரெஞ்சு போக்குவரத்து மந்திரி Dominique Bussereau கிரேக்கத்திற்கு பயணித்து “இரயில் போக்குவரத்துத் துறையில் ஒரு மூலோபாயப் பங்காளித்தனம்” என்பதில் கிரேக்கப் போக்குவரத்து மந்திரி Dmitris Reppas உடன் கையெழுத்திட்டார். Bussereau, “நான் உண்மையை நன்கு உற்றுக் கவனிக்கிறேன். பிரான்ஸ் செயற்படாவிட்டால், மற்றவர்கள், ஐரோப்பியர்கள் இல்லாதவர்களும் செயல்படுவர்.”