WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் : கலை
விமர்சனம்Swiss authorities decide against extraditing Roman Polanski
ரோமன் போலன்ஸ்கியை திருப்பி அனுப்புவதற்கு எதிராக சுவிஸ் அதிகாரிகள் முடிவு
By David Walsh
13 July 2010
Use
this version to print | Send
feedback
திங்களன்று சுவிஸ் அரசாங்க அதிகாரிகள் 76 வயது திரைப்படத் தயாரிப்பாளர் ரோமன் போலன்ஸ்கியை அமெரிக்காவிற்கு திருப்பி அனுப்பப்பட முடியாது என்று முடிவு எடுத்தனர். செப்டம்பர் 26, 2009ல் ஒரு திரைப்பட விழாவில் பங்கு பெற வந்தபோது போலன்ஸ்கி கைது செய்யப்பட்டிருந்தார். டிசம்பர் 4, 2009 முதல் 4.5 மில்லியன் சுவிஸ் பிராங்குகளை ($4.2 மில்லியன்) பிணை எடுப்பிற்காகக் கட்டியபின் அவர் அவருடைய Gstaad ல் உள்ள விடுமுறைக்கால இல்லத்தில் வீட்டுக்காவலில் உள்ளார்.
சுவிஸ் முடிவு லாஸ் ஏஞ்சல்ஸ் மாவட்ட வக்கீல் அலுவலகத்திற்கும் ஒபாமா நிர்வாகத்தின் நீதித் துறைக்கும் ஒரு அடியாகும். இவற்றின் பழிவாங்கும், அரசியல் நோக்கம் கொண்ட போலன்ஸ்கிக்கு எதிரான பிரச்சாரம் இப்பொழுது சிதைந்துவிட்டது.
1977ல் லாஸ் ஏஞ்சல்ஸில் பதின்வயதுப் பெண் ஒருவருடன் பாலியல் தொடர்பு வழக்கில் குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து அமெரிக்க அதிகாரிகள் போலன்ஸ்கியை நாட்டிற்குத் திரும்பக்கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். திரைப்பட இயக்குனர் 42 நாட்கள் ஒரு கலிபோர்னிய மாநிலச் சிறையைச் சேர்ந்த உளவியல் மருத்துவமனை ஒன்றில் காவலில் வைக்கப்பட்டார்; ஆனால் வழக்கின் நீதிபதி குற்றத்தை ஒப்புக் கொண்டால் குறைந்த தண்டனை என்ற குற்ற ஒப்பந்த உடன்பாட்டை ஒதுக்கி வைத்து முழு தண்டனையைச் சுமத்த இருப்பதாக அச்சுறுத்தியவுடன், போலன்ஸ்கி அமெரிக்காவை விட்டு நீங்கி ஐரோப்பாவிற்கு புகலிடம் நாடிச் சென்றார்.
பல தசாப்தங்கள் போலன்ஸ்கி தடையின்றி வருகை புரிந்து ஒரு விடுமுறைக்கால இல்லத்தையும் வாங்கியிருந்த நிலையில் திடீரென 2009ல் போலன்ஸ்கி கைதுசெய்யப்பட்டமையும் மற்றும் அவரை மீண்டும் அமெரிக்காவிற்கு அனுப்பும் அச்சுறுத்தலும் இழிந்த அரசியல் நோக்கங்களுடன் பிணைந்துள்ளன.
கடந்த ஆண்டு சுவிஸ் அதிகாரிகள் பெரும் வங்கியான UBS ல் வைக்கப்பட்டுள்ள வரி ஏமாற்றுடன் தொடர்புடையவை என்று கூறப்பட்ட 4,000க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் பற்றித் தகவல் கோரியிருந்த அமெரிக்க அரசாங்கத்தின் தயவைப் பெற விரும்பியது. தற்செயல் நிகழ்வோ அல்லது மாறுபட்டதோ, சுவிஸ் பாராளுமன்றம் கடந்த மாதம் இரகசியத்தை வெளியிடும் பிரச்சினையை தீர்க்கும் விதத்தில் ஒரு உடன்பாட்டிற்கு ஒப்புதல் கொடுத்தது; Blookberg Business week குறிப்பிட்டபடி, இது “சுவிட்ஸர்லாந்தின் மிகப் பெரிய வங்கியின் அமெரிக்காவுடனான வணிகத்தை அச்சுறுத்திய இரண்டு ஆண்டு சட்ட வழக்கை முடிவிற்குக் கொண்டு வந்தது.”
போலன்ஸ்கியை நாடுகடத்துவதில்லை என்ற முடிவு சுவிஸ் அரசாங்கத்தின் மிக உயர்ந்த மட்டங்களில்தான் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். திங்களன்று ஆளும் சுவிஸ் கூட்டாட்சிக் குழுவின் ஏழு உறுப்பினர்களில் ஒருவராகவும் பணிபுரியும் சுவிஸ் நீதித்துறை மந்திரி Eveline Widmer-Schlumpf இந்த அறிவிப்பை வெளியிட்டார். இவர் முன்னதாக, குடியேறுவோர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வலதுசாரி சுவிஸ் மக்கள் கட்சியில் இருந்தவர் ஆவார்.
அமெரிக்க அதிகாரிகளிடம் உண்மையில் சட்டநிலைப்பாடு ஏதும் போல்ஸ்கியை பிடிக்கும் முயற்சியில் இல்லை. நாடுகடத்துதல் நடவடிக்கையில் மத்திய பிரச்சினை போலன்ஸ்கி 1977லேயே ஒரு சிறுபெண்ணிடம் பாலுறவு கொண்ட குற்றத்திற்குத் தண்டனை அனுபவித்திவிட்டாரா இல்லையா என்பதுதான். ஒரு அமெரிக்க-சுவிஸ் நாடுகடத்தும் உடன்பாட்டின்படி, ஒரு தனிநபர் குறைந்தது ஆறு மாதங்களாவது சிறைதண்டனை அனுபவிக்க வேண்டும் என்றால்தான் திருப்பி அனுப்பப்பட முடியும்.
சுவிஸ் அதிகாரிகள் ஜனவரி 2010த்தில் 1977 போலன்ஸ்கி வழக்கிற்குப் பொறுப்பேற்றிருந்த வக்கீல் ரோஜர் கன்சன் கொடுத்த சாட்சியத்தின் பதிப்பைக் கேட்டிருந்தனர் என்று Widmer-Schlumpf விளக்கினார். அந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கன்சன், நீதிபதி லாரன்ஸ் ரிட்டன்பாண்ட் விசாரணை நடத்திய, பாதுகாப்பு வக்கீல்கள் இருவருக்கும் 42 நாட்கள் போலன்ஸ்கி காவலில் இருந்தது “அவருக்குக் கொடுக்கப்பட்ட சிறைத்தண்டனை முழுப் பகுதியையும் பிரதிபலித்தது” என்று உறுதியளித்திருந்ததாகச் சாட்சியம் அளித்திருந்தார்.” (சுவிஸ் சுயாட்சி குழுவின் செய்தி அறிக்கை)
அமெரிக்க நீதித்துறை ஆவணம் பற்றிய சுவிஸ் வேண்டுகோளை நிராகரித்தது; கன்சனின் அறிக்கை இரகசியமாகத்தான் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. “இச்சூழ்நிலையில், போதுமான உறுதிப்பாட்டுடன் ரோமன் போலன்ஸ்கி ஏற்கனவே அவருக்குக் கொடுக்கப்பட்ட தண்டனையை அப்பொழுதே அனுபவித்துவிட்டார், திருப்பி அனுப்புவது பற்றிய வேண்டுகோள் பெரும் தவறினால் குறைமதிப்பிற்கு உட்பட்டுவிட்டது என்ற கருத்தை ஒதுக்க முடியாத இவ்வழக்கில், உண்மைகளை முன்வைப்பதில் தொடர்ந்து சந்தேகங்கள் இருந்துவரும் நிலையில் [திரும்பப் பெறலுக்கான] வேண்டுகோள் நிராகரிக்கப்பட வேண்டும்.” என்று சுவிஸ் அரசாங்கத்தின் செய்தி அறிக்கை கூறியுள்ளது.
Widmer-Schlumpf பல ஆண்டுகளாக போலன்ஸ்கி சுவிட்சர்லாந்துக்குப் பயணிக்கிறார், அமெரிக்கா அவரை திரும்பப் பெறுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுத்ததில்லை என்ற வெளிப்படையான உண்மையையும் சுட்டிக்காட்டினார். இது 2009ல் அமெரிக்காவின் நடவடிக்கை “நல்ல நம்பிக்கைக் கோட்பாட்டை” மீறுவது போல் உள்ளது என்பதைக் காட்டுகிறது. நீதித்துறை மந்திரி, போலன்ஸ்கி செப்டம்பர் கடைசியில் சூரிச்சில் இருப்பார் என்று அமெரிக்க அதிகாரிகளுக்கு இரகசியமாகத் தெரிவித்தனர் என்று வந்த பரவலான தகவல் பற்றி ஏதும் குறிப்பிடவில்லை.
சுவிஸ் நீதித் துறை அமைச்சரகம் இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சாமந்தா கீமரின் விருப்பங்களையும் மேற்கோளிட்டது. அவர் போலன்ஸ்கிக்கு எதிரான வழக்கு தொடரப்பட வேண்டாம் என்று கூறியிருந்தார்.
சுவிஸ் அரசாங்கத்தின் அறிக்கை, அவை பற்றி ஏதும் குறிப்பிடவில்லை என்றாலும், நீதிபதி ரிட்டன்பாண்டிற்கு எதிரான தவறான நடத்தை பற்றிய கணிசமான, ஆதாரபூர்வ குற்றச்சாட்டுகள் பற்றி சுவிஸ் அரசாங்கத்திற்கு தெரியாமல் ஒன்றும் இருக்காது போலன்ஸ்கியின் வக்கீல்கள் சமீபத்தில் லாஸ் ஏஞ்சல்ஸில் அவர் இல்லாத நிலையில் தண்டனை பெற்றது பற்றிய தகவல்களை திரட்டியபோது 1977ல் ரிட்டன்பாண்டின் ஏற்கமுடியாத நடவடிக்கை பற்றி சக்தி வாய்ந்த ஆதாரங்களைம் திரட்டினர். அவற்றில் சில ரோமான் போலன்ஸ்கி: Wanted and Desired, என்று Marina Zenovich இயக்கிய 2008 ஆவணத் திரைப்படத்திலேயே வெளிவந்துள்ளன.
வெளிச்சத்திற்கு அடிமையாகி, தான் எத்தனை கடினமாக இருக்க முடியும் என்பதை நிரூபிக்க வழக்கில் தொடர்பில்லாத ஒரு வக்கீலால், ரிட்டன்பாண்ட் போலன்ஸ்கியை சீனோ அரசாங்க சிறைக்கு உளரீதியான மதிப்பிட்டிற்கு அனுப்புமாறு ஆலோசனை கூறப்பட்டார். இது ஒன்றுதான் போலன்ஸ்கியை மேல்முறையீடு செய்யாமல் சிறைக்கு அனுப்பக்கூடிய வாய்ப்பு ஆகும். அரசாங்க வக்கீல் கன்சனும், குற்றம்சாட்டப்பட்டவரின் வக்கீல் டுக்லாஸ் டால்ட்டனும் ஒரு குற்றத்திற்கு அபராதமாக மருத்துவ ஆராய்ச்சி காவலைப் பயன்படுத்துவது சட்டவிரோதம் என்று வாதிட்டனர். ரிட்டன்பாண்ட் அவர்களுடைய வாதத்தை புறக்கணித்ததாகக் கூறப்படுகிறது.
போலன்ஸ்கி ஒரு படத்தை எடுத்து முடிப்பதற்காக ஓராண்டு இடைக்காலத் தடையை டால்டன் கோரியதால், நீதிபதி அரசாங்க வக்கீல், எதிர்வக்கீல் இருவருக்கும் ஒரு தந்திரத்தை முன்வைத்தார். தொடர்ச்சியான 90 நாட்கள் காவல் தீர்ப்பை வெளியிட தான் ஒப்புக் கொண்ட ரிட்டன்பாண்ட் நீதிமன்றத்தில் அவர், போலன்ஸ்கியின் வக்கீல், அரசாங்க வக்கீல் மூவரும் அத்தகைய முடிவு மூடிய கதவுகளுக்குப் பின் எடுக்கப்படவில்லை என்று பாசாங்கு செய்ய வேண்டும் என்றும், அதையொட்டி நீதிபதி ஏற்கனவே தான் எடுத்த முடிவைக் கூறவதாகவும் உடன்பட்டார். இது செய்தி ஊடகத்தின் முன் தன் கௌரவத்தை காப்பாற்ற அவருக்கு உதவும்.
திரைப்படத் தயாரிப்பாளர் வருங்காலத்தில் வெளியேற்றப்படுவது பற்றிய வழக்கில், அமெரிக்காவை விட்டு அவரை வெளியேற்றும் தீர்ப்பினை எதிர்க்க தனக்கு உரிமை கிடையாதது என்று ஒப்புக் கொள்ள வேண்டாம் என்றும் ரிட்டன்பாண்ட் கேட்டுக் கொண்டார். Wanted and Desired பற்றிய விமர்சனக் கட்டுரையில் WSWS குறிப்பிட்டபடி, “வெளியேற்றுதல் நடவடிக்கையில் ரிட்டன்பாண்டிற்கு அதிகார வரம்பு கிடையாது. வெளியேற்றும் வழக்கு பற்றி விசாரணை நடத்தும் போலன்ஸ்கியின் உரிமையை பறிக்கும் இவரின் முயற்சி தவறான நடத்தைக்கு மற்றொரு உதாரணம் ஆகும்.”
ரிட்டன்பாண்டின் நடவடிக்கை மட்டும்தான் போலன்ஸ்கி வழக்கு நீண்ட காலம் முன்னரே தூக்கி எறியப்பட்டதற்குக் காரணமாக இருந்திருக்க வேண்டும். இது ஒன்றும் “சட்ட நுட்பங்கள்” விவகாரம் அல்ல; அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீறல், வழக்கின் தன்மையுடனேயே நெருக்கமாக தொடர்புடையது.
போலன்ஸ்கி நிகழ்ச்சி ஒருபொழுதும் “சிறுமி கற்பழிப்பு”, சிறாரிடம் பாலியல் தவறாக நடத்தல் அல்லது செய்தி ஊடகங்கள் வெறித்தனத்துடன் காட்டும் பிரச்சினைகளில் எதுவும் அல்ல. ஒரு கொலை செய்துவிட்டு அதில் இருந்து தப்பியோடிவிடலாம் என்று நினைக்கும் ஒரு புகழ் பெற்ற செல்வந்தருக்கு “நீதியளித்தல்” அல்லது தண்டனை கொடுத்தல் என்பதும் 10 மாதங்களாக நடப்பதல்ல.
போலன்ஸ்கிக்கு எதிரான பிரச்சாரம் தாராளவாத ஆசிரியர்கள், கட்டுரையாளர்கள், பெண்ணுரிமைவாதிகள், தீவிர வலதுசாரிகள் ஆகியோரின் ஒரு கூட்டு சேர்வதற்கான பயனுள்ள புள்ளியாகிவிட்டது. இந்த புனிதமற்ற கூட்டு, New York Times, Salon, Nation… மற்றும் Rush Limbaugh, Glenn Beck, Pat Buchanan ஆகியோரைக் கொண்டது, எரியூட்டும், போலித்தன ஜனரஞ்சகவாதங்களை அமெரிக்க மக்களின் மிகப் பிற்போக்குத்தன தட்டுக்களை தூண்டிவிடும் வகையில் முன்வைத்து, “கொள்ளையர்களிடம் இருந்து குழந்தைகள் பாதுகாப்பிற்கு” உடனடி நடவடிக்கைக்கு முறையீடுகள் வைக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது. இப்படி அடித்துக் கொல்லும் கும்பலின் இலக்குகள் “ஹாலிவுட் மாதிரியிலான” கலைஞர்கள், அறிவுஜீவிகள், சகலவகையிலான தேவாலய விதிமுறைகளை மறுப்பவர்களாவர். போலன்ஸ்கி-எதிர்ப்பு முயற்சி நாட்டுவெறியும் யூத எதிர்ப்புவாதமும் பழைய வகை அமெரிக்க புரட்டஸ்தாந்துவாதத்துடனும் இணைந்துள்ளது.
முக்கிய சமூக மற்றும் வர்க்கப் பிரச்சினைகள் பற்றி பொருட்படுத்தாமல் இருக்கும் பெண்ணுரிமை வாதிகளுக்கும் தாராளவாதிகளுக்கும், அமெரிக்க அரசாங்கம் போலன்ஸ்கியை பின்தொடர்வதற்கு வலுத்திரட்டுவது என்பது 1977ல் அவர் நடவடிக்கைகளுக்காக பழிவாங்குவது என்பதில் இல்லை. அந்த நிகழ்ச்சி 33 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. அதில் தொடர்புடைய பெண்மணி இன்னும் சட்ட நடவடிக்கை தேவையில்லை என்றார், குற்றம்சாட்டப்பட்டுள்ள நபருக்கு வயது 76, அவருடைய வாழ்க்கையில் பெரும் அதிர்ச்சிக்கு உட்பட்டுள்ளார்—இவை அனைத்திலும் புதிய அறநெறிக்குழுவிற்கு அக்கறை இல்லை.
இவர்களுடைய செயற்பட்டியல் லாஸ் ஏஞ்சல்ஸ் மாவட்ட அரசாங்க வக்கீல் தன்னை உயர்த்திக் கொள்ளும் பிற்போக்குத்தனத்துடன், இந்த ஆண்டு கலிபோர்னியாவின் தலைமை அரசாங்க வக்கீல் வேட்பாளராக நிற்பதுடன் முற்றிலும் பொருந்தியுள்ளது. அதேபோல் ஒபாமா நீதித்துறை நிர்வாகம் தன்னை அதன் முன்னோடி அரசாங்கத்தைப் போலவே ஜனநாயக உரிமைகள் பற்றிப் பொருட்படுத்துவதில்லை என்று நிரூபிக்க முற்படும் முயற்சிகளுடனும் பொருந்தியுள்ளது.
எப்படிப்பார்த்தாலும், நடைமுறை சுவிஸ் அரசாங்கம் UBS வங்கிப் பிரச்சினையை ஒருவழியாக முடித்தபின், அமெரிக்காவிடம் போலன்ஸ்கியை ஒப்படைப்பதின் மூலம் கிடைக்கும் எந்த ஆதாயமும் ஐரோப்பாவில் பொதுக் கூக்குரலைத் தவிர்ப்பதைக் காட்டிலும் மேலானது என்று முடிவெடுத்து, லாஸ் ஏஞ்சல்ஸில் திரைப்படத் தயாரிப்பாளரின் வழக்கு எப்படியும் சங்கடத்தில்தான் முடியும் என்றும் கருதியது. இந்த முடிவில் அமெரிக்காவின் சர்வதேச நிலைப்பாடு வலிமை குறைந்துள்ளதின் மற்றொரு அடையாளமாகும். அதேபோல் செப்டம்பர் கடைசியில் ஒபாமா நிர்வாகத்தில் இருந்த நிலைப்பாட்டிலும் அதே கருத்தும் இருக்கக் கூடும்.
தன்னுடைய கருத்துக்களில் Widmer-Schlumpf வெற்றுத்தனமாகக் கூறினார்: “அமெரிக்கா அதன் நம்முடனான உறவுகளைப்பற்றி மறு சிந்திக்க காரணம் கொள்ளவில்லை போலும். நமக்கு எங்கெல்லாம் உரிய கடமைகள் இருந்தனவோ, அவற்றையெல்லாம் நிறைவேற்றியுள்ளோம்.”
மே மாதத் தொடக்கத்தில் போலன்ஸ்கி சூரிச்சில் கைதானதில் இருந்து முதல் பகிரங்க அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பலமுறை “இனியும் மௌனமாக இருக்க முடியாது” என்று கூறியுள்ளார். பிரான்ஸ்-போலந்தைச் சார்ந்த திரைப்படத்தயாரிப்பாளர் விளக்கியது: “என்னுடைய பங்கிற்கான நாடக நிகழ்வுகள், மகிழ்ச்சியையும் கொண்டேன், நம் அனைவரையும் போல்; என் வாழ்வின்மீது பரிதாபப்படுங்கள் என்று உங்களைக் கேட்கப் போவதில்லை. மற்றவரைப் போல் என்னையும் நியாயமாக நடத்துங்கள் என்றுதான் கேட்கிறேன்.”
அவர் மேலும் கூறினார்: “நான் இனியும் தொடர்ந்து மௌனமாக இருக்க முடியாது; ஏனெனில் அமெரிக்கா என்னைத் திருப்பி அழைப்பதில், உலகின் செய்தி ஊடகத்திற்கு என்னைப் பற்றி எழுத வாய்ப்புக் கொடுப்பதில், 33 ஆண்டுகளுக்கு முன்பே உடன்பாட்டின் மூலம் அடையப்பட்ட ஒரு தீர்ப்பை வழங்குவதைவிட, ஆர்வம் காட்டுகிறது.”
“சுவிட்சர்லாந்தில் நாடுகடத்துவதற்கு விதிகள் இல்லை என்பதை உணரும் நான் அதையொட்டி அமைதி காணமுடியும், என் குடும்பத்துடன் மீண்டும் ஒன்றுபடுவேன், சுதந்திரமாக என் தாய்நாட்டில் வாழ்வேன்” என நம்புவதாக போலன்ஸ்கி கூறியுள்ளார். அவருக்கு அதுவும் கொடுக்கப்பட்டுள்ளது என்றே தோன்றுகிறது.
|