அரசாங்கக் கடன்கள், வங்கி நெருக்கடிகள் ஆகியவற்றால் ஐரோப்பியப் பொருளாதாரம் மந்தமாகிறது
By Stefan Steinberg
13 July 2010
Back to
screen version
கடந்த வார இறுதியில் செய்தியாளர்களிடம் பேசிய ஐரோப்பிய மத்திய வங்கி (ECB) யின் தலைவர் Jean-Claude Trichet யூரோப் பகுதி ஒரு புதிய மந்த நிலையில் நுழைவது பற்றிய வாய்ப்பின் ஊகத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்த முற்பட்டார்.
“பல உண்மைகளும், புள்ளிவிவரங்களும், தகவல்களும் நாம் தேக்க நிலையில் இருப்போம் அல்லது இரட்டைச் சரிவை (மந்தநிலை) காண்போம் என்ற உறுதி செய்யாத வகையில்தான் உள்ளோம்,…. வெளியில் உள்ள சில போக்குகள் மிக அதிகமாக அவநம்பிக்கை கொண்டிருப்பதை நான் காண்கிறேன்…. ஆனால் நம்மிடம் உள்ள புள்ளிவிவரங்கள் இத்தகையை அவநம்பிக்கைத் தன்மையை உறுதிபடுத்தவில்லை” என்றார் அவர்.
ECB யின் நிர்வாகக் குழு அதன் அடிப்படை வட்டி விகிதத்தை எப்பொழுதும் இல்லாத வகையில் மிகக் குறைந்த 1 சதவிகிதமாக 15வது தொடர்ச்சியான மாதத்திலும் தக்க வைத்திருக்கும் முடிவை எடுத்தது. சந்தைகளை அவர் சமாதானப்படுத்த வைத்த முயற்சியை அடுத்து பல சர்வதேச தகவல்கள் வெளிவந்தன. அவை அனைத்தும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் யூரோப் பகுதியின் பொருளாதாரங்களுக்கு துல்லியமாக அத்தகைய அவநம்பிக்கைத்தன கணிப்புக்களைத்தான் செய்துள்ளன.
கடந்த வியாழனன்று வெளிவந்த அறிக்கை ஒன்றில் சர்வதேச நாணய நிதியமானது (IMF), யூரோப் பகுதியின் வளர்ச்சி உலகிலேயே மிகக் குறைந்தாக 2010 மற்றும் 2011ம் ஆண்டுகளில் இருக்கும் என்று கணித்துள்ளது. புதிய IMF மதிப்பீடுகளின்படி, உலகப் பொருளாதாரம் 2010ல் 4.6 சதவிகிதமும் 2011ல் 4.3 சதவிகிதமும் வளர்ச்சி அடையும். ஆனால் யூரோப் பகுதியில் வளர்ச்சி 2010ல் 1 சதவிகிதமும் அடுத்த ஆண்டு 1.3 சதவிகிதமும்தான் இருக்கும்.
IMF இன் ஐரோப்பியப் பொருளாதாரத்தின் தேக்கம் பற்றிய கணிப்பானது புதனன்று ஐரோப்பிய ஒன்றிய புள்ளிவிவர அலுவலகமான Eurostat வெளியிட்ட புள்ளிவிவரங்களால் நிரூபித்து காட்டப்பட்டது. இது பொருளாதார வளர்ச்சி 2010 முதல் காலாண்டில் 0.2 சதவிகிதம் தான் என்று குறித்துள்ளது.
யூரோஸ்டாட்டின் புள்ளிவிவரங்களானது 27 உறுப்பு நாடுகள் கொண்ட ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் 16 உறுப்பு நாடுகள் கொண்ட யூரோப்பகுதி இரண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் பொருந்தும். யூரோஸ்டாட்டின் 0.2 வளர்ச்சி என்னும் மதிப்பீடு இந்த ஆண்டின் எஞ்சிய மூன்று காலாண்டுகளிலும் அப்படியே வருமானால், ஆண்டு விகிதமான 0.8 சதவிகிதம் என்பது IMF இந்தக் காலத்திற்கு கணித்துள்ள புள்ளிவிவரங்களில் இருந்து 1 சதவிகிதம் குறைந்துவிடும்.
யூரோஸ்டாட்டின் புள்ளிவிவரங்கள் தனி நாடுகளுக்கு இடையே கணிசமான மாறுதல்களை வெளிப்படுத்தியுள்ளது. ஐரோப்பா முழுவதிலும் மிகக் கடுமையான சிக்கன நடவடிக்கை திட்டங்களில் ஒன்றைச் செயல்படுத்திய பின்னர், அயர்லாந்தின் பொருளாதாரம் மிக அதிக வளர்ச்சியை (2.7 சதவிகிதம்) பதிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து ஸ்வீடன் (1.4 சதவிகிதம்) மற்றும் போர்த்துக்கல் (1.1 சதவிகிதம்) ஆகியவை வருகின்றன.
கீழ் நிலையில் லித்துவேனியாவின் பொருளாதாரம் 3.9 சதவிகிதம் சுருங்கியது, இது 2009 ம் ஆண்டின் கடைசிக் காலாண்டுடன் ஒப்பிடப்பட்டுள்ளது. பொருளாதார நடவடிக்கைகளில் சுருக்கம் ஏற்பட்ட மற்றய நாடுகளாக ஆஸ்திரியா, பின்லாந்து, எஸ்டோனியா, ருமேனியா, ஸ்லோவேனியா மற்றும் கிரேக்கம் ஆகியவை உள்ளன.
பிரிட்டனில் தேசிய புள்ளி விவர அலுவலகம் (ONS) கொடுத்துள்ள சமீபத்திய அறிக்கைப்படி 2008 இலையுதிர்காலத்தில் வெடித்த நிதிய நெருக்கடியில் இருந்து பொருளாதார சேதத்திற்கான மதிப்பீடு அதிகரித்துள்ளது. இப்பொழுது பிரிட்டிஷ் பொருளாதாரம் 6.4 சதவிகிதம் சுருங்கிவிட்டதாக ONS கூறுகிறது. இது அதன் ஆரம்ப மதிப்பீடான 6.2 சதவிகிதத்தைவிட அதிகம் ஆகும். 2008ல் முதல் மூன்று மாதங்களில் இருந்து 2009 கடைசி மூன்று மாதப் போக்குகள் வரையில் கொண்டிருந்த உச்ச நிலையில் இருந்து சரிவாகும்.
Guardian உடைய பொருளாதாப் பிரிவு ஆசிரியர் லாரி எலியட் அறிக்கையை பற்றிய தன் சுருக்க உரையைக் கொடுத்துள்ளார்: “ஏற்றுமதிகள் திணறுகின்றன, நுகர்வோர் பிரிவு மந்த நிலையில் உள்ளது, பொதுத் துறையில் இருந்து வரும் முட்டுக்கொடுத்தல் அகன்றுவிடும் போல் உள்ளது. 2010ன் இரண்டாம் அரையாண்டு இரட்டச் சரிவு மந்த நிலையின் ஆதிக்கத்தை கொண்டிருக்கும்.”
இப்படிக் கண்டம் முழுவதும் பொருளாதாரங்கள் திணறல்களிலும் சுருக்கங்களிலும் இருக்கையில், IMF ஆனது ஐரோப்பிய வங்கிகளின் இருப்புநிலைக் குறிப்புக்களின் நச்சுச் சொத்துக்களின் உயர்ந்த அளவு தொடர்ந்து இருப்பது உலகப் பொருளாதாரத்திற்கு கணிசமான ஆபத்துக்களை கொடுக்கும் என்று குறிப்பிட்டுள்ளது. ஐரோப்பிய வங்கி முறை “முற்றுப்பெறா தூய்மைப்படுத்துதலின் எச்சத்தினால்” பாதிக்கப்பட்டுள்ளது என்றும் இது “பாதிப்பிற்குட்படும் தன்மை, கூடுதல் திறனழிப்பு மற்றும் மிகக் குறைந்த இலாபங்கள்” ஆகியவற்றை விட்டுச் செல்லும் என்று கூறியுள்ளது.
கிரேக்கம், ஸ்பெயின், போர்த்துக்கல் போன்ற ஐரோப்பாவில் மிக பலவீனமான பொருளாதாரங்கள் வட்டிவிகிதம் முறையாக ஏறுவதைக் காண்கின்றன. இது அவற்றின் அரசாங்கப் பத்திரங்களில் முதலீடு செய்தவர்களுக்கு அவை கொடுத்தாக வேண்டும்.
வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலில் வந்துள்ள கட்டுரை ஒன்றின்படி, யூரோப் பகுதி அரசாங்கப் பத்திரங்களில் மொத்தம் 1.7 டிரில்லியன் டொலர் 2010-2011 ல் மீட்கப்பட வேண்டும். இது அமெரிக்கா, இங்கிலாந்து அல்லது பிற இடங்களில் மறு கடன் வாங்குவதற்குத் தேவையான அளவை விட மிக மிக அதிகம் ஆகும்.
நிதியச் சந்தைகளின் இடைவிடா அழுத்தத்தை எதிர்கொள்ளும் வகையில், கிட்டத்தட்ட அநேகமாக எல்லா ஐரோப்பிய நாடுகளும் சிக்கன நடவடிக்கைகளை அறிவித்துள்ளன. இவை ஏற்கனவே வேலையின்மை மற்றும் சரியும் நுகர்வோர் கோரிக்கை ஆகியவற்றில் இருந்து துன்பப்படும் பொருளாதாரங்களை மேலும் மந்தமாக்கும்.
IMF ன் நிதிய, மூலதனச் சந்தைகள் பிரிவின் இயக்குனரான Jose Vinals கடந்த வாரம் ஐரோப்பாவின் கடன் மற்றும் வங்கிகள் பிரச்சினைகள் “மற்றய பிராந்தியங்களுக்கும் கசியக்கூடும், உலக மீட்பை ஒத்திப் போடக்கூடும்” என்று கூறினார்.
யூரோப் பகுதி அரசாங்கங்களானது ஐரோப்பிய ஒன்றிய அவசரக்கால 500 பில்லியன் யூரோ மீட்பு நிதியை ஐரோப்பிய பொருளாதாரங்களை “முற்றிலும் செயல்திறன்” கொள்ளப் பயன்படுத்த வேண்டும் என்று IMF அழைப்புவிடுத்து, ஐரோப்பிய மத்திய வங்கியானது அரசாங்கப் பத்திரங்களைப் புதிதாக வாங்குவதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்று முறையிட்டார். மேலும் ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தச் சோதனைகளில் தோல்வி அடையும் வங்கிகளுக்கு அது எப்படி உதவப்போகிறது என்று விளக்குமாறும் அழைப்பு விடுத்துள்ளது.
ஐரோப்பிய வங்கிகள் பற்றி அழுத்தச் சோதனைகள், ஜூலை 23 அன்று வெளியிடப்பட உள்ள முடிவுகள், கடந்த ஆண்டு அமெரிக்க வங்கிகள் மீது நடத்தப்பட்ட சோதனைகளை மாதிரியாகக் கொண்டவை, அவற்றைப் போலவே சிறிதும் மதிப்பற்றவை. கடந்த வாரம் Trichet இனால் இது வங்கிகளை அவற்றின் “கணக்குகளைக் காண்பிக்க வைக்கும்” என்று கூறப்பட்டாலும், ஐரோப்பிய அழுத்தச் சோதனைகள் முற்றிலும் வலியைக் குறைப்பவை தான்.
“வெற்றுக் கண்டுபிடிப்புக்கள்” என்ற தலைப்பில Financial Times Deutschland ஆனது நிதிய உலகத்தின் கருத்தைச் சுருக்கமாகக் கூறி சாடும் விதத்தில் எழுதியது: “எவ்வளவு காலத்திற்கு முதலீட்டாளர்கள் தங்களை முட்டாள்கள் என அனுமதித்து பிறர் நடத்துவதை பொறுப்பர்? …இந்த விசாரணை ஒன்றும் ஏற்கனவே தெரியாதது ஒன்றையும் கண்டுபிடிக்கப் போவதில்லை…. இக்கேலிக்கூத்திற்கான காரணம் வெளிப்படையானதுதான்….. ஐரோப்பிய அரசாங்கங்கள் சந்தைகளை அமைதிப்படுத்தும் முறையில் முடிவுகளை வெளியிட முடிவெடுக்க வேண்டும்…. வங்கிகள் நிலைமை பற்றி மிக தொந்திரவு கொடுக்கும் தன்மை வெளிவந்தால், அவற்றிடம் திட்டம் ஏதும் இல்லை. எப்படியும் இச்சோதனைகள் இறுதியில் எந்த வங்கியும் அவற்றில் தோற்காது என்ற வடிவமைப்பைக் கொண்டவை.”
ஆம்ஸ்டர்டாம் VU பல்கலைக் கழகத்தில் நிறுவனக் கொள்கைப் பகுப்பாய்வாளராக உள்ள Anton Hemerijck சமீபத்தில் எச்சரித்தார்: “ஒரு பீதிதரும் விதத்தில் வடக்கு ஐரோப்பா வளர்ச்சிக்கான வாய்ப்பை உதறிவிடும் கடும் சிக்கன நடவடிக்கைகளை ஏற்கலாம். தெற்கு ஐரோப்பிய நாடுகள் தங்கள் வடக்கு ஐரோப்பிய அண்டை நாடுகளைத்தான் தங்கள் பொருளாதார மீட்பிற்கு ஊக்கம் கொடுக்க நம்பியுள்ளன. இது நடைபெறாவிட்டால், புயலுக்கு முந்தைய அமைதி போன்ற தன்மையில் தான் நாம் அனைவரும் இருப்போம்.”