WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
அவுஸ்திரேலியா &
தென்பசுபிக்
Australia: Prime Minister Gillard unveils harsh new measures against refugees
ஆஸ்திரேலியா: அகதிகளுக்கு எதிராகக் கடுமையான புதிய விதிகளானது பிரதம மந்திரி கிலர்ட்டின் முகத்திரையை விலக்குகின்றது
By Patrick O’Connor
8 July 2010
Use
this version to print | Send
feedback
கடந்த மாதக் கடைசியில், கெவின் ரூட்டிற்கு எதிரான அரசியல் ஆட்சி மாற்றத்தில் தொழிற் கட்சி பிரதம மந்திரியாக இருத்தப்பட்டுள்ள ஜூலியா கில்லர்ட், ஆஸ்திரேலியாவில் புகலிடம் கோருவதற்கான அகதிகளின் உரிமைகளை இன்னும் குறைக்கும் விதத்தில் புதிய, கடுமையான, தொடர்ச்சியான நடவடிக்கைகளை அறிவித்துள்ளார்.
செவ்வாயன்று Lowy Institute for Internaional Policy க்கு ஆற்றிய உரை ஒன்றில், கிலர்ட் அவருடைய அரசாங்கம் ஆஸ்திரேலியாவை அடைவதற்கு படகுகளில் வரும் அகதிகளை தடுக்கும் விதத்தில் அவர்களை கிழக்கு திமோரில் நிறுத்த முற்படும் என்று அறிவித்தார். இக்கொள்கை முன்னாள் ஹோவர்ட் அரசாங்கத்தின் இழிந்த “பசிபிக் தீர்வு” எனப்பட்டதைத் திறமையுடன் புதுப்பிக்கிறது. இதன்படி போரில் அல்லலுறும் நாடுகளில் இருந்து வரும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆகியோர் பல ஆண்டுகள் சர்வதேச சட்டத்தை அப்பட்டமாக மீறி பாப்புவா நியூ கினியின் மனுஸ் மற்றும் நௌருத் தீவுகளின் காவல் மையங்களில் பல ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
செய்தி ஊடகம் எதிர்பார்த்தவிதத்தில் “திமோர் தீர்வு” என்று முத்திரையிட்ட கிலர்டின் உரை இழிந்த “வெள்ளை ஆஸ்திரேலியா” கொள்கையின் மிக மட்டமான மரபுகள் அனைத்தையும் கொண்டுள்ளது. அவர் அறிவித்தார்: “கடினமாக உழைக்கும் ஆஸ்திரேலியர்கள், அவர்களே இப்பொழுது இடரில் உள்ளவர்கள் இங்கு குடியேற அனுமதிக்கப்படும் அகதிகள் சிறப்புச் சலுகைகளுக்கு தேர்ந்தெடுக்கப்படக்கூடாது என்று விரும்புகின்றனர்… என்னுடைய பெற்றோர்களைப் போலத்தான் அவர்கள் வாழ்நாள் முழுவதும் கடினமாக உழைத்தனர், ஆனால் பிறர் சிறப்புச் சலுகைகளை எளிதில் பெற முடியும் என்ற கருத்தை ஏற்கவில்லை.”
அவர் மேலும் கூறினார்: “உண்மையான அகதிகளாக இருந்தால் ஆஸ்திரேலியர்கள் வரவேற்கத் தயாராக உள்ளனர், ஆனால் அவர்கள் நாம் வாழும் விதிகளை அறிந்து அவற்றிற்குக்கீழ்ப்பட்டு வாழவேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். இதன்பொருள் புதிதாக வருபவர்கள் நம் சமூகத்தில் நிலைபெறும்போது அவர்கள் தங்கள் பொறுப்புக்களை சமூகத்தின் உறுப்பினர்கள் என்று ஏற்க வேண்டும்—ஆங்கிலம் கற்க வேண்டும், உழைப்பு தொகுப்பில் நுழைய வேண்டும், தங்கள் குழந்தைகளை மற்றவர்களைப் போல் பள்ளிக்கு அனுப்ப வேண்டும்…. விதிகள் விதிகள்தாம். பொதுவாக ஆஸ்திரேலியர்கள் கொண்டுள்ள அதே கடைமைகளை அகதிகளும் ஏற்க வேண்டும் என்பதை நாம் உறுதிபடுத்துவோம்.”
கிலர்ட் தெளிவாகக் குற்றம் சாட்ட விரும்புவது அகதிகள் “விதிகளுக்கு கீழ்ப்படுவதில்லை”, தங்கள் பொறுப்புக்களை ஏற்பதில்லை என்பதாகும்; மாறாக “சிறப்பாக நடத்தப்படுகின்றனர்”, “சிறப்புச் சலுகைகளைப்” பெறுகின்றனர்” என்பதாகும். ஆனால் உண்மையோ தஞ்சம் கோருபவர்கள் சமூகத்தில் மிகவும் பாதிப்பை எதிர்கொள்ளும் தட்டுக்களில் தான் உள்ளனர். நாட்டில் இருந்து வெளியேற்றப்படுவதற்கு போலிக்காரணம் கொடுக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ வழிவகைகள் மூலம் இயல்பு நிலையை அடைவதில் அவர்கள் வெற்றிகண்டாலும், புதிய சூழ்நிலைக்கேற்ப வாழ்க்கையைச் சரி செய்துகொள்ள அவர்களுக்குப் போதுமான உதவி அளிக்கப்படுவதில்லை. இதில் தங்குவதற்கு இடம், வேலை, கல்வி, பிற பணிகளுக்கான வாய்ப்பு, அவர்களுடைய சிக்கல் நிறைந்த உளரீதியான, பிற அதிர்ச்சி கொடுக்கும் சுகாதாரப் பிரச்சினைகளும் அடங்கும்.
ஆனால் கிலர்ட் கொள்கையின் நோக்கம், அவருடைய Lowy உரையின் நோக்கம், வெளிநாட்டவர் மீதான வெறி, தேசிய தீவிரப்பற்று ஆகியவற்றை தூண்டும் விதத்தில் அகதிகளையும் குடியேறுபவர்களையும் சமூகக் கட்டுமானமத்தில் உள்ள நெருக்கடிக்கு, வீடுகள், சாலைகள், பொதுப் போக்குவரத்து உட்பட, பலிகடாக்கள் ஆக்குவது ஆகும். இவ்விதத்தில் அவர் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரச் சரிவுகள் விரைவில் ஏற்பட்டதால் எழுந்துள்ள நெறியான கோபத்தை பிரச்சினையின் உண்மை ஆதாரத்தில் இருந்து திசைதிருப்ப முயல்கிறார்—அதாவது இலாப முறையில் இருந்தும், கூட்டாட்சி அதன் லிபரல், தொழிற் கட்சி முந்தைய அரசாங்கங்களின் கொள்கைகளிடம் இருந்தும்.
மிக நனவான முறையிலும், திட்டமிட்ட முறையிலும் கிலர்ட் முன்செல்கிறார். ஏற்கனவே சர்வதேச நிதியச் சந்தைகள் அரசாங்கத்திற்கு “அறிவிப்பு கொடுத்துவிட்டது”, “சர்வதேச பொருளாதார நலிந்த நிலைமைகள், உறுதியற்ற தன்மைகள் பற்றி” என்று அவர் ஒப்புக் கொண்டுள்ளார். இதன் பொருள் தொழிற் கட்சி அரசாங்கம் பொதுநலன், சுகாதாரம், கல்வி, பொதுத்துறை ஊழியங்கள், ஊதியங்கள் ஆகியவற்றிற்காக மேற்கொள்ளப்படும் செலவினங்கள் கூட்டாட்சித் தேர்தல் முடிவடைந்த பின்னர் கடுமையாகக் குறைக்கப்படும் என்பதுதான்.
பிரதம மந்திரியின் அறிவிப்புக்கள் பொதுவாக மிக வலதுசாரி வர்ணனையாளர்களால் வரவேற்கப்பட்டுள்ளன. உதாரணமாக, தீவிர வலதுசாரி முன்னாள் பாராளுன்ற உறுப்பினர் Pauline Hanson, கிலர்டின் அறிவிப்பான “தன்னைத்தானே தணிக்கை செய்து கொள்தல், அரசியல் சரியான தன்மை…. இவற்றை அகதிகள் கொள்கையைப் பொறுத்தவரை அகற்றுவது” என்பது பற்றித் தன்னுடைய “முழு உடன்பாட்டையும்” வெளிப்படுத்தியுள்ளார்.
அகதிகளுக்காக வாதிடும், மற்ற மனித உரிமைகள் அமைப்புக்கள் இத்தகைய திட்டமிடப்பட்டுள்ள நடவடிக்கைகளைக் கண்டித்துள்ளன. Refugee and Immigration Legal Centre உடைய நிர்வாக இயக்குனர் David Manne, Australian இடம் கூறினார்: “இது பசிபிக் தீர்வை விட மோசமாகப் போகலாம்—இது அனைத்து ஆஸ்திரேலியாவையும் தாக்கக்கூடிய விதத்தில் போகலாம். பார்த்தால் இது அனைத்து தஞ்சம் கோருவோரும் …மற்றொரு நாடு, திமோருக்கு அனுப்பப்படுவர் போல் தோன்றும். அங்கோ ஏற்கனவே ஒரு பெரிய மனிதக் கிடங்கு உள்ளது, மக்கள் காலவரையற்ற, செயலற்ற தன்மையில் தங்கள் வருங்காலம் பற்றித் தெரியாமல், நியாயமான காலத்திற்குள் பாதுகாப்பாக மறு குடியேற்றத்திற்கான உத்தரவாதம் இன்றி உள்ளனர்.”
மனித கடத்தல்காரர்கள் எனப்படுபவர்கள் மீது உள்ள இருக்கும் அபராதங்களையும் அதிகப்படுத்த கிலர்ட் விழைகிறார். தற்பொழுது 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும்/அல்லது 110,000 டொலர் அபராதம் என்று அது உள்ளது. இந்த நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுபவர்கள் பொதுவாக வறிய இந்தோனேசிய மீன்பிடிப்பவர்கள் ஆவர். அவர்கள் பொருளாதாரக் கடின நிலை காரணமாக தஞ்சம் கோருவோரை ஆஸ்திரேலிய நீர்நிலைக்கு கொண்டுவந்துவிட ஒப்புக் கொள்கின்றனர். கிலர்ட் இந்தோனிசியா, மலேசியா, தாய்லாந்து, பாக்கிஸ்தான் மற்றும் இலங்கையில் உள்ள பொலிஸ் அமைப்புக்களுக்கு கூடுலான 25 மில்லியன் டாலரை அகதிகளை ஆஸ்திரேலியாவை அடையாவண்ணம் இலக்குவைத்துப் பிடிப்பதற்காக அறிவித்துள்ளார். அதே நேரத்தில் அவருடைய அரசாங்கம் ஆப்கானிய, இலங்கை தஞ்சம் கோருவோரை ஏராளமாக நாடுகடத்தும் அச்சுறுத்தலையும் கொடுத்துள்ளது.
தொழிற் கட்சி அரசாங்கத்தின் புதிய நடவடிக்கைகளின் மையத் தளம் “திமோர் தீர்வு” ஆகும். இது ஏற்கனவே பெரும் சந்தேகத்திற்கு உரியது. இத்திட்டத்தை கிலர்ட் நியூசிலாந்து அரசாங்கம், ஐ.நா.வுடன் பெயரளவு விவாதம் நடத்திய பின்னர் அறிவித்தார் —இவை இரண்டும் இந்த வழிவகையில் தொடர்பு பெற்றிருக்கும்— அப்பொழுதுதான் அபராதம் விதிக்கும் ஆட்சிக்கு ஒரு சர்வதேசப் பூச்சு கிடைக்கும். கிழக்கு திமோரின் ஜனாதிபதி ஜோஸ் ராமோஸ் ஹோர்ட்டாவும் இதில் சேர்க்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி இத்திட்டத்தைப் “பரிசீலிப்பதாக” ஒப்புக்கொண்டுள்ளாலும், அவருக்கு அதைச் செயல்படுத்த அரசியலமைப்பின்படி எந்த அதிகாரமும் இல்லை.
ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் நவ காலனித்துவ தன்மை டிலியுடன் இருப்பதை ஒத்த விதத்தில், அறிவிப்பிற்கு முன்னதாக எவரும் அங்குள்ள பிரதம மந்திரி ஜனனா குஸ்மாவோ அரசாங்கத்தை கலந்து பேச முனையவில்லை. 1999ல் இராணுவத் தலையீடு செய்தபின் மீண்டும் 2006ல் ஆஸ்திரேலியாவின் கணிசமான பொருளாதார, மூலோபாய நலன்களை காப்பதற்கு குறுக்கிட்டபின், கான்பெர்ரா இச் “சுதந்திர நாட்டை” அதன் பிராந்திய ஆட்சி என்பதுபோல்தான் கருதுகிறது— இப்பொழுது தேவையில்லாத அகதிகளை ஒதுக்கும் இடமாகக் கருதுகிறது.
எதிர்க்கட்சியான Fretilin, அடுத்த திமோரிய 2012 தேசியத் தேர்தலில் அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றலாம் என்று நினைப்பது, திட்டமிடப்படள்ள பிராந்திய வழி மையத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. அந்நாட்டின் குடியேற்றச் சட்டம் திருத்தப்பட்டால்தான் ஆஸ்திரேலிய கோரிக்கைகள் செயல்படுத்தப்பட முடியும் என்று கூறியுள்ளது. பெயரிடப்படாத அரசாங்க ஆதாரங்களை மேற்கோளிட்டு Australian அவர்களும் இதற்கு விரோதப் போக்கைக் கொண்டுள்ளனர் என்று தெvரிவித்துள்ளது. ஒருவர் கூறினார்: “இந்த அளவிற்கு குருட்டுத்தனமாக ஒருதலைப்பட்சமாக இருப்பதா? எவருக்கும் இதில் திருப்தி இல்லை.” ஒரு மூத்த அரசாங்க அதிகாரி கிலர்டின் திட்டத்திற்கு தாங்கள் “முற்றிலும் உடன்படவில்லை” என்று சேர்த்துக் கொண்டார்.
இதுவரை குஸ்மோ மௌனம் சாதித்துள்ளார். ஆஸ்திரேலிய அரசாங்கத்துடன் தந்திர உத்திகளை கையாளுவதில் அவருக்கு நீண்ட கால வரலாறு உள்ளது. கான்பெர்ராவின் சமீபத்திய ஆணையைத் திருப்தி செய்ய சந்தேகத்திற்கு இடமின்றி முற்படுவார்—ஆனால் இதற்கு அவர் ஈடாக எதிர்பார்ப்பது பல பில்லியன் டாலர் செலவாகக் கூடிய Greater Sunrise எரிசக்தி இருப்புக்களுக்கான திட்டமிடப்பட்டுள்ள இயற்கை எரிவாயுவைத் திரவமாக்கும் ஆலைக்கு இடம் பற்றிய சரியான உடன்பாடாக இருக்கும். திமோரியத் தலைவர் சமீபத்தில் ஆஸ்திரேலிய அரசாங்கத்தையும் Woodside Petroleum ஐயும் ஆலை கிழக்குத் திமோரில் நிறுவ அனுமதிக்காததற்காக கண்டித்துள்ளார். (See “Australia-East Timor conflict intensifies over Greater Sunrise gas project)
எதிர்க்கட்சித் தலைவர் டோனி ஆப்போட், கிலர்டின் உரையை முன்கூட்டியே தவிர்க்கும் விதத்தில் இந்த வாரம் முன்னதாக இன்னும் கடுமையாக அகதிகள் எதிர்ப்பு நடவடிக்கைகளை அறிவித்தார். அவர் லிபரல்-நேஷனல் கூட்டணி தஞ்சம் நாடுவோரில் அடையாள ஆவணங்களை அழித்தவர்கள் என்று சந்தேகத்திற்கு உரியவர்கள் நாடு கடத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் என்றும், படகுகளில் வருபவர்கள் ஆஸ்திரேலியாவில் தஞ்சக் கோரிக்கை கொடுக்க அனுமதிக்கப்படுவதற்கு முன் வேறு நாட்டில் நிரந்த வசிக்கும் உரிமைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியும் உள்ளார். இது கூட்டாட்சி குடியேற்றத்துறை மந்திரிக்கு சொந்த முறையில் தடுப்பாதிகாரத்தைப் பயன்படுத்தி தஞ்சம் பெற்றோரின் வெற்றி பெற்ற விண்ணப்பத்தை நிராகரிக்க உதவும். அதற்கு எந்த வித மேல் முறையீடும் கிடையாது.
தொழிற் கட்சியோ, லிபரலோ தங்கள் கொள்கைகள் சர்வதேசச் சட்டத்துடன் பொருந்தியவை என்று வாதிடக்கூட முயலவில்லை. நேற்று இப்பிரச்சினை பற்றி வெளிவந்த தலையங்கத்தில், இதை உட்குறிப்பாக ஒப்புக் கொண்ட விதத்தில், Australian “தொழிற் கட்சிக்கும் கூட்டணிக்கும் முன்வைக்கப்பட்டுள்ள கருத்துக்கள் பற்றி அதிக வேறுபாடுகள் இல்லை, இப்பிரச்சினையில் இரு கட்சிகளும் இணைந்த விதத்தில் ஒற்றுமையாக உள்ளன” என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால் 1951 ஐ.நா.அகதிகள் அந்தஸ்த்தைப் பொறுத்த உடன்படிக்கை “பெருகிய முறையில் காலம் கடந்துவிட்ட” என்றும் “அவை பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உகந்த வடிவமைப்பைக் கொடுக்கவில்லை” என்றும் அறிவித்துள்ளது.
உத்தியோகபூர்வ அகதிகள் கொள்கை பற்றிய “விவாதம்” ஆஸ்திரேலிய அரசியல் ஸ்தாபனத்தில் எந்தக் கட்சிக்கும் சர்வதேசச் சட்டம் அல்லது ஜனநாயக உரிமைகள் பற்றி உறுதிப்பாடு கிடையாது என்பதைத்தான் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. |