WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா :
பிரித்தானியா
Britain’s Housing Benefit changes will increase social miserytd
பிரிட்டனின் வீட்டு வாடகை நலன்களில் மாற்றங்கள் சமூக ஏழ்மையை அதிகரிக்கும்
By Dennis Moore
6 July 2010
Use
this version to print | Send
feedback
கன்சர்வேட்டிவ்-லிபரல் டெமக்ராட் கூட்டணி அரசாங்கத்தின் வீட்டு வாடகை நலச் சீர்திருத்தங்கள் பலருக்கு வீடுகள் இல்லாத நிலையை அதிகரிக்க வகை செய்யும். கோடிடப்பட்டுள்ள திட்டங்கள் இப்பொழுது உள்ளூர் வீட்டு வாடகை உதவித் தொகையை பெறும் ஒரு மில்லியனுக்கும் மேலான இல்லங்களை இங்கிலாந்தில் பாதிக்கக்கூடிய திறனைக் கொண்டுள்ளன. உள்ளூர் வீட்டு வாடகை உதவி (LHA) என்பது ஒரு தனிப்பட்ட வீட்டுச் சொந்தக்காரர்களிடம் இருந்து வாடகைக்கு வசிக்கும் இல்லத்தாரர்களுக்கு கணக்கிட்டுக் கொடுக்கப்படும் வீட்டு நல உதவியாகும்.
தற்பொழுது உள்ளூர் வீட்டு வாடகை உதவி சராசரி (50 சதவிகிதம்) ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ளூர் வாடகையின் அடிப்படையில் கணக்கிடப்படுகின்றது. அக்டோபர் 2011 ல் இருந்து இக்கணக்கீடு உள்ளூர் வாடகைகளில் 30 வது சதப் பிரிவை அடிப்படையாகக் கொள்ளும். இது உள்ளூர் வீட்டு வாடகை உதவி கொடுக்கப்படுவதில் கணிசமான சரிவைக் கொடுக்கும்.
கிரேட்டர் கிளாஸ்கோ பிராட் ரென்டல் மார்க்கட் ஏரியா (BRMA) வில் மூன்று படுக்கை அறையை வாடகைக்கு கொண்டுள்ள ஒரு குடும்பம் இப்பொழுது வாரத்திற்கு 160.38 பவுண்டுகள் LHA பெறுவது, புதிய திட்ட மாற்றங்களை அடுத்து 138.46 பவுண்டுகள் தான் பெறும், இது வாரத்திற்கு 21.92 பவுண்டுகள் குறைப்பை ஏற்படுத்தும்.
மேற்கண்ட நடவடிக்கைகள் ஏப்ரல் 2011ல் இருந்து LHA உதவியில் அதிகபட்சத்தையும் அடக்கியிருக்கும். அது வாரத்திற்கு 400 பவுண்டுகள் என்று ஒரு நான்கு படுக்கையறை வீட்டிற்கு அதிகபட்சமாகவும், குறைந்த அறைகள் வசதி வீடுகளுக்க குறைந்த உச்ச வரம்பையும் கொண்டிருக்கும்.
பணி மற்றும் ஓய்வூதியங்கள் துறை தற்பொழுது கிட்டத்தட்ட 5,170 குடும்பங்கள் இங்கிலாந்தில் 400 பவுண்டுகளுக்கும் மேல் வாரத்திற்கு வீட்டு வாடகை நலன்களை தனி உடைமையாளருக்குக் கொடுக்கும் வாடகையில் ஒரு பகுதியாகப் பெறுகின்றனர் என்று கணக்கிட்டுள்ளது. Chartered Institute of Housing உடைய தலைவர் ஹோவர்ட் பாரண்ட் இந்த மாற்றங்கள் “மோசமான குடும்பங்கள் நல்ல இடங்களில் வசிக்கும் திறனில் பாதிப்பை ஏற்படுத்தும், ஒருவேளை பல ஆண்டுகளாக அவர்கள் வசித்து வந்த சமூகங்களை விட்டு நீங்கும் கட்டாயத்தையும் அவர்களுக்கு ஏற்படுத்தும்” என்று கூறியுள்ளார்.
இது வீட்டுச் சொந்தக்காரர்களை வீட்டு வாடகை நலன் பெறுவோருக்கு வாடகைக்கு விடுவதையும் தவிர்க்க வைக்கும். ஏனெனில் வீட்டு வாடகை உதவிகள் குறைக்கப்படுகின்றன.
இந்த மாற்றங்கள் லண்டனில் வசதியான இடப்பகுதிகளில் வசிக்கும் மக்களை மட்டும் அல்ல இங்கிலாந்து எங்கும் பல குடும்பங்களையும் பாதிக்கும். Yorkshire Evening Post ல் நேற்று வந்துள்ள ஒரு தகவல் உள்ளூர் வீட்டு வாடகை உதவியில் வரும் மாற்றங்கள் லீட்ஸில் பல குடும்பங்களை அழிக்கும், “லீட்ஸின் தொழிற் கட்சிக் குழுத் தலைவர் இன்று ஆயிரக்கணக்கானவர்கள் இதையொட்டி வீடிழக்கும் நிலை ஏற்படும் என்றும் நலிந்த, இழிந்த சேரிகள் நகரத்தில் தோன்றக்கூடும் என்றும் கூறினார்” எனக் கூறுகிறது.
இங்கிலாந்தின் வீடற்றோர் அறக்கட்டளையான Shelter கருத்துப்படி, கிட்டத்தட்ட உதவிகளைப் பெறுவோரில் பாதி பேர் வாடகையில் ஏற்படும் வித்தியாசத்தை (வீட்டு வாடகை உதவி நலன்கள் கொடுத்தது போக) கிட்டத்தட்ட 100 பவுண்டுகள் மாதத்திற்கு பற்றாக்குறையை எழுப்புகின்றது. ஷெல்டரின் தலைமை நிர்வாகி, “இந்த ஆதரவு திடீரென அவர்களிடம் இருந்து அகற்றப்பட்டால், பல ஆயிரக்கணக்கானவர்கள், விளிம்பின் முனையில் தள்ளப்பட்டு, கடன் ஏற்றங்கள் தூண்டிவிடப்பட்டு, வீடுகளில் இருந்து வெளியற்றப்பட்டு, வீடில்லா நிலை ஏற்படும்.” என்று கூறியுள்ளார்.
Joseph Rowntree Foundation சில குடும்பங்கள் “வறிய தரம், நெருக்கடி நிறைந்த வீட்டுப் பகுதிகளுக்கு” செல்லும் கட்டாயம் ஏற்படும், அங்கு, லண்டன், தென்கிழக்கு போன்ற இடங்களில் தனியார் வாடகைகள் உயர்ந்தவை” என்று எச்சரித்துள்ளது.
நகரங்களில் மக்கள் எண்ணிக்கை நிலை மாறும். மக்களிடையே ஒரு பொது மாற்றத்தின் பகுதியாக இது இருக்கும். வரவு-செலவுத் திட்டத்திற்கு விடையிறுக்கும் வகையில் Building and Social Housing Foundation (BSHF) கூறியிருப்பது: “ஒரு நீண்ட கால அளவில், பாரிஸ் புற நகரைப் போன்று தோற்றிவிக்கப்படும் திறன் பற்றி அக்கறைகள் குவியும். அதாவது நகருக்கு வெளியே வசதிகள் குறைந்த பகுதிகளின் குவிப்பு காணப்படும், நகர மையம் மிக வசதியுடையவர்களுக்கு மட்டும் தான் என்று போகும். கூடுதல் பகுப்பாய்வுகள் இங்கிலாந்தின் இட-பொருளாதாரப் பின்ணயில் என்ன நடக்கும் என்பது பற்றி அறியத் தேவைப்படும். ஆனால் வறியவர்கள் நகரின் பெரும் பகுதிகளில் இருந்து முற்றிலும் ஒதுக்கப்படும் திறன் வரவு-செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளில் இருப்பது தெளிவு.”
கோடிட்டக் காட்டப்பட்டுள்ள மற்ற நடவடிக்கைகளில் வீட்டு வாடகை நலன் உதவிகள் 10 சதவிகிதம் JSA எனப்படும் வேலைதேடுவோர் நலன் உதவியை ஓராண்டிற்கும் மேலாகப் பெறுபவர்களுக்கு குறைக்கப்படுவதும் அடங்கியுள்ளது. இது 700.000 என மதிப்பிடப்பட்டுள்ள மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்.
JSA உதவிபெறுவோர் வாரத்திற்கு 65 பவுண்டுகள் பெறுகின்றனர். பலரும் ஏற்கனவே மற்றய தேவைகளுக்கான பணத்தைக் கொடுக்க முழு வறுமை நிலையில் இருப்பதால் தத்தளிக்கின்றனர்.
The Chartered Institute of Housing and the National Housing Federation, JSA வில் இருக்கும் பல மக்கள் சமூக வீடுகளில் உள்ளனர், அவர்களுடைய நலன்களைக் குறைத்தல் வாடகை பாக்கியை அதிகரிக்கும், இடர்களை அதிகரிக்கும் என்று எச்சரித்துள்ளது.
இத்திட்டங்கள் வீடுகளில்லா நிலையில், அறக்கட்டளைகளானது அறக் கட்டளைகளுக்கு வரும் நன்கொடைகள் குறைதல், உள்ளூர் அதிகாரிகள் வீடுகள் அற்றவர்களுக்கு மக்கள் வரவு-செலவுத் திட்டத்திற்கு ஆதரவு நிதியைக் குறைத்தல் போன்றவற்றைச் செய்யும் நேரத்தில் வந்துள்ளன.
வீட்டு வாடகை உதவி நலன்களுக்கான சட்டவரைவு ஏற்கமுடியாத அளவிற்கு உயர்ந்துள்ளது, மக்கள் கௌரவமான இடத்தில் வசிக்க விரும்பினால், அதற்காக அவர்கள் உழைத்து தாங்களே பணம் கொடுக்க வேண்டும் என்று அரசாங்கம் கூறுகிறது. இந்த விளக்கம், வீட்டு வாடகை உதவி நலன் சட்டத்தில் பெரும் பகுதி பற்றியது பலரைப் பாதிக்கும் வீடுகள் நெருக்கடியின் மையத்தானத்தில் உள்ள ஆழ்ந்த பிரச்சினைகளைக் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. கடந்த 30 ஆண்டுகளாக பலரும் தனியார் வீட்டு வாடகைப் பகுதிகளில் வசிக்கும் கட்டாயத்தில் உள்ளனர். அங்கு வாடகைகள் சமூக வீடுகள் பிரிவில் இருப்பதை விட கணிசமாக அதிகம் ஆகும். இதற்குக் காரணம் சமூக வீடுகள் கட்டிடத்தில் உள்ள முக்கிய குறைப்புக்களுடன் வாங்கும் உரிமை என்பது உள்ளூர் வீடுகளின் வாடகைக்கு இருப்பவர்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதும், பெற்றுக் கொள்ளும் உரிமை வீடுகள் சங்கங்களில்வாடகைக்கு இருப்பவர்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளதும் ஆகும்.
உள்ளூர் அதிகாரிகள் குழுமம் புதிய வீடுகள் கட்ட அனுமதிக்கப்பட்ட காலத்தில் இருந்தது. இது சில விற்கப்பட்ட வீடுகளுக்குப் பதிலாக வந்திருக்கலாம். இது இயலக்கூடிய பாதுகாப்பான உறைவிடத்தில் பெரும் குறைப்பிற்கு வழிவகுத்தது. பலரும் உள்ளூர் அதிகாரத்துவத்திற்கு வீடுகளுக்குக் காத்திருக்கும் பட்டியலில் பல ஆண்டுகள் இருந்தனர். பல நேரமும் வறிய தற்காலிக உறைவிடங்களில் இருக்க நேர்ந்தது.
இந்த நிலைமை இப்பொழுது பணிகள் மீது தாக்குதல்கள், மற்றும் மில்லியன் கணக்கான மக்கள் மீது சுமத்தப்படும் கடும் சிக்கன நடவடிக்கைகள் ஆகியவற்றால் அதிகம் ஆகும். இதில் வேலை இழப்புக்கள், ஊதியக் குறைப்புக்கள், முடக்கங்களும் காரணிகளாக இருக்கும்.
|