WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
G20 summit exposes deep trans-Atlantic differences
அட்லான்டிக் இடையிலான ஆழ்ந்த வேறுபாடுகளை G20 உச்சிமாநாடு அம்பலப்படுத்துகிறது
Stefan Steinberg
1 July 2010
Use
this version to print | Send
feedback
கடந்த வார இறுதியில் டொரோன்டோவில் நடைபெற்ற G20 உச்சிமாநாடு பற்றி சர்வதேச தலைவர்கள் சிறப்பாக எடுத்துக்காட்ட முற்பட்டாலும், முக்கிய உலக சக்திகளுடையே உள்ள பிளவுகளின் பரந்த தன்மையை, குறிப்பாக அமெரிக்காவிற்கும் ஜேர்மனிக்கும் இடையே இருப்பதை, மறைக்க முடியவில்லை.
எவ்விதமான உறுதியான கட்டுப்படுத்தும் முடிவுகளை அடைவதிலும் தோல்வி அடைந்த உச்சிமாநாட்டை பொதுவாக ஐரோப்பிய செய்தி ஊடகங்கள் உதறித்தள்ளிவிட்டன. பிரெஞ்சு செய்தித்தாளான Le Figaro ஐ பொறுத்தவரை, “G20 உச்சிமாநாடு ‘ஒவ்வொரு மனிதனும் தனக்காகவே என்ற நிலைக்கு மீண்டும் வந்ததைத்தான் “காட்டுகிறது என்ற கருத்து உள்ளது. நெருக்கடியில் இருந்து வெளியேற ஒருமித்த உணர்வு கொண்ட பொருளாதார கொள்கையை வரையறை செய்யும் முயற்சி குறைப்பிரசவம் போல்தான் ஆயிற்று. பற்றாக்குறைகளை குறைக்க வேண்டும் என்று தீவிரமாக உள்ள ஜேர்மனிக்கும் [….], கடும் சிக்கன நடவடிக்கைகளால் வளர்ச்சி பாதிக்கப்படும் என்று கொந்தளித்த அமெரிக்கா மற்றும் இவை இரண்டிற்கு இடையே நின்ற பிரான்ஸ் ஆகியவற்றால் ஒரு பொது வழிகாட்டும் நிலைப்பாட்டு கண்ணுக்கு புலப்படுவது கடினமாயிற்று.”
உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, அட்லான்டிக்கின் இரு பக்கங்களிலும் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் பொருளாதார வல்லுனர்களின் சொற்போரும் மற்றும் போட்டியிடும் பொருளாதார மூலோபாயங்களுக்கு சாதகமாக ஆதரவளிக்கும் தன்மைதான் நிலவியது.
ஒரு அசாதாரண நடவடிக்கையாக, அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா அனைத்த G20 நாட்டு அரசாங்கத் தலைவர்களுக்கும் அரசாங்க கடன்களை சமாளிப்பதற்காக மிக அதிக, விரைவான சிக்கன நடவடிக்கைகள் எடுப்பது உலக மீட்பிற்கு தடையாக இருக்கக்கூடும் என்ற எச்சரிக்கையைக் கொடுத்த ஒரு கடிதத்தை எழுதினார். ஜேர்மனி, சீனா மீது தெளிவான தாக்குதலையும் ஒபாமா நடத்திய விதத்தில், அதிக ஏற்றுமதி உபரிகள் கொண்ட அந்நாடுகள் தங்கள் உள்நாட்டுத் தேவைக்கு ஊக்கம் கொடுக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
ஜேர்மனி இதற்கு விரைவாக பதிலளித்தது. ஜூன் 23ம் திகதி ஜேர்மனிய நிதி மந்திரி வொல்ப்காங் ஷௌய்பிள பைனான்சியல் டைம்ஸில் ஜேர்மனிய அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகள் திட்டத்திற்கு பாதுகாப்புக் கொடுக்கும் விதத்தில் அடுத்த நான்கு ஆண்டுகளில் 80 பில்லியன் யூரோ செலவுக் குறைப்புடைய திட்டம் பற்றி கருத்துத் தெரிவித்தார்.
முக்கிய அரசியல்வாதிகளின் கருத்துப் பரிமாற்றம் அட்லான்டிக்கின் இருபுறமும் உள்ள முக்கிய பொருளாதார வல்லுனர்களின் சொற்போரில் எதிரொலித்தது. “இது 30களின் உணர்வுகள்” என்ற தலைப்பில் நியூயோர்க் டைம்ஸில் வெளிவந்த கட்டுரை ஒன்றில், கட்டுரையாளர் போல் க்ருக்மன் ஜேர்மனியின் தற்போதைய சிக்கன நடவடிக்கைகள் “ஹென்றிஷ் புரூனிங் உடைய கொள்கைகளை நினைவுபடுத்துவதாகவும்”, அவைதான் “வைமார் குடியரசின் அழிவிற்கு” முத்திரையிட்டதாகவும், அதையொட்டி தேசிய சோசலிஸ்ட்டுக்கள் (நாஜிக்கள்) பதவிக்கு வர வழிவகுக்கப்பட்டது” என்றும் எச்சரித்துள்ளார். பேர்லினிக்கு சென்றிருந்தபோது க்ருக்மன் தன்னுடைய நச்சு சீற்றத்தை ஜேர்மனிய அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு உறுதியாக ஆதரவு கொடுக்கும் ஒரு அமைப்பான ஜேர்மனிய மத்திய வங்கித் தலைவரான அக்ஸல் வேபர் மீது காட்டினார். “யூரோவிற்கு வேபர் ஒரு ஆபத்து” என்று க்ருக்மன் கூறினார்.
முக்கிய அரசியல்வாதிகளின் கருத்துப் பரிமாற்றம் அட்லான்டிக்கின் இருபுறமும் உள்ள முக்கிய பொருளாதார வல்லுனர்களின் சொற்போரில் எதிரொலித்தது. “இது 30களின் உணர்வுகள்” என்ற தலைப்பில் நியூயோர்க் டைம்ஸில் வெளிவந்த கட்டுரை ஒன்றில், கட்டுரையாளர் போல் க்ருக்மன் ஜேர்மனியின் தற்போதைய சிக்கன நடவடிக்கைகள் “ஹென்றிஷ் புரூனிங் உடைய கொள்கைகளை நினைவுபடுத்துவதாகவும்”, அவைதான் “வைமார் குடியரசின் அழிவிற்கு” முத்திரையிட்டதாகவும், அதையொட்டி தேசிய சோசலிஸ்ட்டுக்கள் (நாஜிக்கள்) பதவிக்கு வர வழிவகுக்கப்பட்டது” என்றும் எச்சரித்துள்ளார். பேர்லினிக்கு சென்றிருந்தபோது க்ருக்மன் தன்னுடைய நச்சு சீற்றத்தை ஜேர்மனிய அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு உறுதியாக ஆதரவு கொடுக்கும் ஒரு அமைப்பான ஜேர்மனிய மத்திய வங்கித் தலைவரான அக்ஸல் வேபர் மீது காட்டினார். “யூரோவிற்கு வேபர் ஒரு ஆபத்து” என்று க்ருக்மன் கூறினார்.
இதன்பின் க்ருக்மன்னுடைய எச்சரிக்கைகள் பைனான்சியல் டைம்ஸில் அமெரிக்க முதலீட்டாளர் ஜோர்ஜ் சோரஸின் ஆதரவிற்கு உட்பட்டன. அவரும் ஜேர்மனிய கொள்கைகள் ஐரோப்பா முழுவதும் பின்பற்றப்பட்டால் முப்பதுகளுக்கு மீண்டும் திரும்பும் அபாயம் உள்ளது என்று எச்சரித்தார்.
நாட்டின் முக்கிய பொருளாதார செய்தித்தாள் Handelsblatt இல் எழுதிய முக்கிய ஜேர்மனிய பொருளாதார வல்லுனர் வொல்ப்காங் பிரன்ஸ், க்ருக்மானின் வாதங்களை கசப்புடன் சவாலிட்டு எல்லாவற்றிற்கும் மேலாக அமெரிக்கா மற்றும் அதன் மத்திய வங்கிக் கூட்டமைப்புதான் பேரழிவு விளைவித்த நிதிய நெருக்கடிக்குப் பொறுப்பு என்று அறிவித்தார்.
பிரன்ஸின் கட்டுரையை தொடர்ந்து மற்றும் ஒரு கட்டுரை, “ஒபாமா பற்றி 10 உவப்பற்ற உண்மைகள்” என்ற தலைப்பு வெளிவந்தது; இதில் அமெரிக்க 2010ல் 45 சதவிகிதம் கூடுதலாக கடன்களை சேர்த்துள்ளது என்றும் (ஜேர்மனியின் 5 சதவிகிதத்துடன் ஒப்பிடத்தக்க), அமெரிக்காவில் 40 மில்லியன் மக்கள் உணவு உதவியை நாடி நிற்கின்றனர் என்றும், வளர்ச்சியுற்ற உலகிலேயே மிகஅதிக சமத்துவமற்ற பொருளாதாரத்தை அது கொண்டுள்ளது என்றும் கூறப்பட்டது. மேலும் அமெரிக்க முதலாளித்துவம் பற்றி ஏழு குற்றச்சாட்டுகளையும் கட்டுரை தொடர்ந்து முன்வைத்தது.
“ஆங்கிலோ-அமெரிக்க முதலாளித்துவத்தை”’ நன்கு தாக்குவதற்கும் அமெரிக்காவில் உள்ள வறுமை பற்றி குறைகூறவும் Handelsblatt தயாராக இருந்தாலும், செய்தித்தாள் நாட்டின் வறுமைத் தரங்களை பெரிதும் உயர்த்தும் ஜேர்மனிய அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு உறுதியான ஆதரவைக் கொடுக்கிறது.
இந்த வேறுபாடுகளை அடிக்கோடிடும் வகையில் அமெரிக்க, ஜேர்மனிய வங்கி, வணிக நலன்களின் விரைவில் முரண்படும் வேறுபாடுகளும் உள்ளன.
அமெரிக்க முதலாளித்துவம் தெளிவான பொருளாதாரச் சரிவைக் கொண்ட அதே காலத்தில், ஜேர்மனிய முதலாளித்துவம் உலகின் வணிகத்தில் அதன் பங்கைக் கணிசமாக உயர்த்திக் கொள்ள முடிந்தது. கடந்த 20 ஆண்டுகளில், ஜேர்மனிய முதலாளித்துவம் அதன் ஏற்றுமதி அளவுகளை பாரியளவில் அதிகரிக்க முடிந்தது. அது இப்பொழுது வரலாற்றில் முன்னோடியில்லாத வகையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 47 சதவிகிதம் என்று உள்ளது. ஒப்புமையில் உலகின் மற்ற முக்கிய ஏற்றமதி நாடான சீனா அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏற்றுமதி 30 சதவிகிதத்தைதான் கொண்டுள்ளது.
ஜேர்மனிய ஏற்றுமதிகளில் இந்த வளர்ச்சி ஐரோப்பா முழுவதும் யூரோ அறிமுகப்படுத்தப்பட்டதின் விளைவாகும். அத்துடன் ஜேர்மனிய சமூகநல அரசுச் செலவுகளில் தாக்குதல்களும் இணைந்து நடத்தப்பட்டன. இவை 1998-2005ல் ஆட்சியில் இருந்த சமூக ஜனநாயக-பசுமைக் கட்சி கூட்டினால் நடத்தப்பட்டது. இதனால் மாபெரும் குறைவூதியத் தொழிலாளர் பிரிவு ஏற்பட்டது. கிழக்கு ஐரோப்பா மற்றும் ரஷ்யாவில் ஸ்ராலினிச முகாம் நாடுகள் இரு தசாப்தங்களுக்கு முன்பு சரிந்ததை அடுத்து புதிய சந்தைகள் திறக்கப்பட்டதில் இருந்தும் ஜேர்மனி பலன்களை அடைந்தது. ஜேர்மனிய ஏற்றுமதிகளில் கிட்டத்தட்ட மூன்றில் இரு பகுதி (64 சதவிகிதம்) இப்பொழுது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு செல்கிறது. அமெரிக்கா இப்பொழுது ஜேர்மனிய ஏற்றுமதிகளில் 7 சதவிகிதத்தைத்தான் கொண்டுள்ளது.
சமூக ஜனநாயக-பசுமைக் கட்சி அரசாங்கம் பல முக்கிய உள்நாட்டு நிதியக் கட்டுப்பாடுகளையும் தளர்த்தியதால், ஜேர்மனிய வங்கிகள் ஜேர்மன் தொழில்துறையில் ஈட்டிய பெரும் இலாபங்களை ஊகப்பிரிவு செயல்களில் உலகம் முழுவதும் அதிகமாக ஈடுபடும் விதத்தில் ஈடுபட்டன. ஜேர்மனிய ஏற்றுமதிகளின் வியத்தகு அதிகரிப்பை பிரதிபலிக்கும் விதத்தில் ஜேர்மனியுடைய சர்வதேச நிதியச் சந்தைகளின் பங்கில் ஏற்பட்ட அதிகரிப்பும் இருந்தது.
ஒரு சமீபத்திய ஆய்வின்படி, ஜேர்மனிய வங்கிகள் ஜூன் 2008ல் (அதாவது சர்வதேச நிதிய நெருக்கடிக்கு சற்று முன்னதாக) உலகிலேயே மிகப்பெரிய சர்வதேச கடன் வளங்கும் நிலையில் இருந்தது -கிட்டத்தட்ட $4.6 டிரில்லியன்; இதைத் தொடர்ந்து பிரெஞ்சு ($4.2 டிரில்லியன்) மற்றும் பிரிட்டிஷ் வங்கிகள் ($4.1 டிரில்லியன்) இருந்தன.
இந்த பெரும் மூலதன வளங்கள் பல ஐரோப்பிய நாடுகளுக்கு கடன் என்ற விதத்தில் முதலீடு செய்யப்பட்டன. இதனால் அந்நாடுகள் ஜேர்மனிய ஏற்றுமதிகளை வாங்க முடிந்தது. ஜேர்மனிய வங்கிகளிடம் இருந்து கடன் வாங்க முதல் வரிசையில் இக்காலக்கட்டத்தில் நின்ற கிரேக்கம், ஸ்பெயின், போர்த்துக்கல் போன்ற நாடுகள் இப்பொழுது திவால்தன்மைக்கு முகம் கொடுக்கின்றன. ஒரு கணிசமான நிதி ஜேர்மனி மற்றும் பிற ஐரோப்பிய வங்கிகளால் அமெரிக்க நிதியச் சந்தையிலும் முதலீடு செய்யப்பட்டது. அதையொட்டி அமெரிக்க “குப்பை” (junk) பங்குப் பத்திரங்கள் அதிகம் வாங்கப்பட்டன.
அமெரிக்க நிதியச் சந்தையில் விரல்களை சுட்டுக் கொண்டபின், ஜேர்மனியும் மற்ற ஐரோப்பிய வங்கிகளும் இப்பொழுது அமெரிக்காவில் தங்கள் முதலீடுகளை குறைத்துக் கொண்டு வருகின்றன. ஐரோப்பாவில் ஏற்கனவே கணிசமாக உள்ள முதலீடுகளை அதிகரிக்கவும் முற்பட்டுள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளில் ஜேர்மனிய முதலீடு ஐரோப்பிய நாடுகளில் (முக்கியமாக கிழக்கே) 100 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
ஓராண்டிற்கு முன் அமெரிக்க சமூக மாதிரியை அமெரிக்க காங்கிரசில் தான் ஆற்றிய உரையில் பெரிதும் பாராட்டிய ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெலின் விருப்பங்கள் ஒருபுறம் இருக்க, இரு நாடுகளின் முரண்பட்ட பொருளாதார நலன்கள்ளும் இந்தப் போருக்கு பிந்தைய நட்பு நாடுகளைப் பிரிக்கும் உந்துதலைக் கொண்டுள்ளன.
அதே நேரத்தில் ஜேர்மனிய தன் பொருளாதார, நிதிய சக்தியை ஐரோப்பாவில் அரசியல் ஆதிக்கமாக மாற்ற விரும்பும் பெருகிய முயற்சி புதிய சமசீரற்ற தன்மைகளையும், விரிசல்களையும் அதன் முக்கிய ஐரோப்பிய பங்காளிகளுடன், குறிப்பாக பிரான்ஸுடன், ஏற்படுத்தி வருகிறது. இது பிரெஞ்சு-ஜேர்மனிய உறவுகள் பற்றிய பிரெஞ்சு வல்லுனர் ஒருவரை, “ஜேர்மன் கேள்வி மீண்டும் வந்துவிட்டது, நீங்கள் இதில் இருந்து தப்ப முடியாது” என்று எச்சரிக்க வைத்தது.
இரண்டாம் உலகப் போர் முடிவிற்கு பின்னர், மிகத்தீவிர பிளவுகள் அமெரிக்காவிற்கும் ஜேர்மனிக்கும் இடையேயும் மற்றும் ஐரோப்பாவிற்குள்ளேயேயும் வந்துள்ளன. இந்த அழுத்தங்கள் நீண்டகால உறவுகளில் சிதைவு ஏற்பட்டுள்ளதின் ஒரு அடையாளம்தான். இது மீண்டும் உலக மோதல் என்ற அச்சுறுத்தலை முன்வைத்துள்ளது. இந்த ஆபத்து ஐரோப்பிய, அமெரிக்கத் தொழிலாளர் வர்க்கம் இரண்டும் முதலாளித்துவ அமைப்புமுறையை ஒரு சோசலிச வேலைத்திட்டத்தால் மாற்றீடு செய்வதன் மூலம்தான் எதிர்க்கப்பட முடியும்.
|