WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
GM to close Antwerp Opel plant
அன்ட்வேர்ப் ஓப்பல் ஆலையை ஜெனரல் மோட்டார்ஸ் மூடுகிறது
By our correspondent
25 January 2010
Use this
version to print | Send
feedback
அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனம் ஜெனரல் மோட்டார்ஸ் பெல்ஜியத்தில் உள்ள
அன்ட்வேர்ப் நகர ஓப்பல் தொழிற்சாலையை மூடுகிறது. வியாழனன்று ஓப்பல் தலைவர்
Nick Reilly ஒரு சில
மாநங்களில் 2,600 தொழிலாளர்கள் வேலையிழப்பர் என்று பிரஸ்ஸல்ஸில் அறிவித்தார். "கோடையில் உற்பத்தியை
நிறுத்துவது என்று முடிவெடுத்துள்ளோம், ஜூனா, ஜூலையா என்பது இன்னும் முடிவாகவில்லை" என்று
Nick Reilly
கூறினார்.
பெல்ஜியத்தில் உள்ள ஆலையை மூடுதல் என்பது அனைத்து ஐரோப்பிய உற்பத்தி
ஆலைகளிலும் தொழிலாளர் பிரிவை பெரிதும் குறைக்க இருக்கும் நடவடிக்கைக்கு முன்னோடி ஆகும். மொத்தத்தில்
குறைந்தது 8,800 வேலைகள் தகர்க்கப்படும், இவற்றில் பாதி ஜேர்மனியில் உள்ள நான்கு ஓப்பல் ஆலைகளில் நடக்கவுள்ளது.
அதே நேரத்தில் பெல்ஜியம் ஆலை மூடலை பயன்படுத்தி எஞ்சிய ஜெனரல்
மோட்டார்ஸ் தொழிலாளர் பிரிவிற்கு அதிக அழுத்தத்தை கொடுக்க
Reilly
முயல்கிறார். அவர்கள் ஆண்டு ஒன்றிற்கு 265 மில்லியன்
யூரோக்கள் ஊதியக் குறைப்பிற்கு ஒப்புக் கொள்ள வேண்டும் என்று அவர் இறுதி எச்சரிக்கை கொடுத்துள்ளார். "மறுசீரமைக்கும்
செயற்பாடுகளில் தங்கள் பங்கை" எஞ்சியிருக்கும் தொழிலாளர்கள கொடுக்கத் தயாராக இல்லை என்றால், தவிர்க்க
முடியாமல் இன்னும் பல ஆலைகள் மூடப்பட வேண்டியிருக்கும் என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.
பெல்ஜியத்தில் தொழிற்சாலை மூடல்கள் நாட்டின் தொழில்துறைப் பொருளாதாரத்தில்
பேரழிவுப் பாதிப்பைக் கொடுக்கும். அரை மில்லியன் மக்கள் வாழும் பிளாண்டர்ஸில் அன்ட்வேர்ப் மிகப் பெரிய
நகரம் ஆகும். அங்கு உத்தியோகபூர்வ வட்டார வேலையின்மை ஏற்கனவே 16.7 சதவிகிதமாக உள்ளது. ஓப்பல்
நிறுவனம் மிகப் பெரிய கடைசி தொழில்துறை ஆலை ஆகும். இதனுடன் தொடர்புடைய விநியோகத்துறை தொழிற்துறையில்
சராசரியாக மூன்று வேலையிடம் ஒரு ஓப்பல் தொழிலாளியை நம்பியிருக்கும். இதன் பொருள் இதன் விளைவாக
ஏற்படும் வேலை இழப்புக்கள் 10,000க்கும் மேல் போகும் என்பதாகும். பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஓப்பல்
ஆலையில் 6,600 ஆண்களும் பெண்களும் பணி புரிந்து வந்தனர். 1980 களில் அது இன்னும் அதிகம்--கிட்டத்தட்ட
12,000 ஆகும்.
ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் ஓப்பலின் இணைப்புப் பிரிவுகள் (assembly
lines) 1925ல் இருந்து
பெல்ஜியத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. முதலில் அங்கு
Chevrolet
வாகனங்களை இணைத்து வந்தன. இதன் பின் பல மாதிரிகள்
Manta, Ascona, Kadett, Vectra
போன்றவை இணைக்கப்பட்டன. கடந்த சில ஆண்டுகளில் கட்டமைக்கப்பட்ட ஒரே கார் ஓப்பல் அஸ்ட்ராவின் பல
மாதிரிகள் ஆகும்.
அவர்களுடைய வேலை குறைக்கும் தாக்குதலை நடத்துவதற்கு, ஜெனரல்
மோட்டார்ஸின் இயக்குனர்கள்
IG Metall
தொழிற்சங்கம் மற்றும் பிற ஐரோப்பிய தொழிற்சங்கங்கள், தொழிற்சாலை தொழிலாளர் குழுத் தலைவர்களுடைய
நெருக்கமான ஒத்துழைப்பை நம்பியுள்ளனர். கடைசி நேரம் வரையில், இந்த தொழிற்சங்கங்களும் தொழிற்சாலை
தொழிலாளர் குழு தலைவர்களும் தொழிலாளர்களிடம் ஆலைகள் முன்வந்து ஊதியக் குறைப்புக்கள், அரசாங்க உதவித்
தொகைகள் பெறுதல் இவற்றின் மூலம் மூடாமல் பாதுகாக்கமுடியும் என்ற போலித் தோற்றங்களை வளர்த்து வந்தனர்.
வேலைநிறுத்த நடவடிக்கை எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் அவர்கள் அடக்கி அது வேலைகள் காப்பாற்றப்படுவதை
தடுத்துவிடும் என்று வாதிட்டனர்.
ஓப்பல் தலைவர்
Reilly
வியாழனற்று மூடுதல் அறிவிப்பை செய்ததை அடுத்து,
IG Metall
பாசாங்குத்தனமாக இம்முடிவு பற்றிய அதன் வியப்பை தெரிவித்தது. ஓப்பல்/வாக்ஸோல் ஐரோப்பிய கூட்டு தொழிற்சாலை
தொழிலாளர் குழுக்களின் தலைவரான கிளவுஸ் பிரன்ஸ் மற்றும் பிராங்பேர்ட் நகர
IG Metall
உத்தியோகபூர்வ பிரதிநிதியான ஆர்மின் ஷில்ட்
"தொழிலாளர்கள் மீது போர் தொடுக்கப்பட்டுள்ளது" என்று கூறி, வரும் ஜனவரி 26 செவ்வாயன்று எதிர்ப்பு
நடவடிக்கை ஒன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
உண்மையில், தொழிற்சங்கங்களும், தொழிற்சாலை தொழிலாளர் குழுத் தலைவர்களும்
ஜெனரல் மோட்டார்ஸ் ஐரோப்பிய செயற்பாடுகளை மூடும் நடவடிக்கையில் உள்ள அவர்களின் தொடர்பினால் நம்பகத்தன்மையை
இழந்துவிட்டனர். அவர்களுடைய சமீபத்திய வியப்புக் காட்டும் அக்கறைகள் ஜெனரல் மோட்டார்ஸ் வணிகத் தலைவர்களுடன்
அவர்கள் கொண்டிருந்த நெருக்கமான ஒத்துழைப்பு, உடந்தை ஆகியவற்றை மூடிமறைக்கும் நோக்கத்தைத்தான்
கொண்டுள்ளன.
Viability Plan VI
(சாத்தியப்பாடான திட்டம்
VI)
என்று அழைக்கப்படுவது, பாரிய வேலை குறைப்புக்கள் மற்றும் மோசமான நிலைமைகளை எதிர்பார்க்கிறது என்பது
நீண்ட காலமாகவே தொழிற்சாலை தொழிலாளர் குழுவிற்கு தெரியும். இது ஓரளவிற்கு நேரடியாக தொழிற்சாலை
தொழிலாளர் குழு அலுவலகத்தில் கிளவுஸ் பிரன்ஸ் இனாலேயே எழுதப்பட்டதாகும்.
அன்ட்வேர்ப்பில் ஓப்பல் ஆலை மூடப்படுவது ஜேர்மனியிலும் மற்ற ஐரோப்பிய
நாடுகளிலும் ஓப்பல்-வாக்ஸோல் இல் உள்ள தொழிற்சங்கங்களின் தீய பங்கைப் பற்றி பலமுறை
WSWS
கொடுத்த எச்சரிக்கைகளைத்தான் உறுதிபடுத்துகிறது.
கட்டுரையாளர் கீழ்க்கண்டவற்றையும் பரிந்துரைக்கிறார்:
ெஜனரல்
மோட்டர்ஸ் அன்ட்வேர்ப்பில் ஓப்பல் ஆலை மூடலை அறிவிக்கிறது
தொழிற்சங்கங்களின்
தேசியவாத விஷம் |