World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

GM announces closure of Opel plant in Antwerp

The nationalist poison of the trade unions

ஜெனரல் மோட்டர்ஸ் அன்ட்வேர்ப்பில் ஓப்பல் ஆலை மூடலை அறிவிக்கிறது

தொழிற்சங்கங்களின் தேசியவாத விஷம்

Dietmar Henning
25 January 2010

Use this version to print | Send feedback

கடந்த வாரம் வியாழனன்று ஐரோப்பாவில் உள்ள ஜெனரல் மோட்டார்ஸ் பெல்ஜியத்தில் அன்ட்வேர்ப்பில் உள்ள அதன் ஓப்பல் தொழிற்சாலையை மூடுவதாக அறிவித்தது. ஐரோப்பிய ஜெனரல் மோட்டார்ஸின் தலைவர் Nick Reilly இந்த ஆண்டு ஜூன் அல்லது ஜூலையில் உற்பத்தி நிறுத்தப்படும் என்றும் ஆலையில் எஞ்சியுள்ள 2,600 தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை இழப்பர் என்றும் கூறினார்.

சில ஜேர்மனிய ஆலைக்குழுக்களும் தொழிற்சங்கங்களும் இந்த முடிவை குறைகூறியிருக்கையில், அன்ட்வேர்ப் ஆலை மூடப்படல் ஆரம்பத்தில் இருந்தே ஜேர்மனியின் பெரிய தொழிற்சங்கமான IG Metall விரும்பிய மூலோபாயத்தின் ஒரு கூறுபாடுதான் என்ற உண்மை மாற்ற முடியாதாகும்.

ஐரோப்பிய கூட்டு தொழிற்சாலை தொழிலாளர் குழுக்களின் ஜேர்மனிய தலைவரான கிளவுஸ் பிரன்ஸ் ஓப்பலை ஆஸ்திரிய-கனேடிய கார் தயாரிப்பாளர் மாக்னா எடுத்துக் கொள்ளும் திட்டத்தின் ஒரு பகுதியாக அன்ட்வேர்பின் ஆலை முடப்படுதல் இருக்கும் என்பதற்கு ஆதரவு கொடுத்திருந்தார். இப்பொழுது 60 சதவிகிதத்திற்கும் மேலாக அமெரிக்க அரசாங்கத்தின் உடைமையாக இருக்கும் ஜெனரல் மோட்டார்ஸ், தொழிற்சங்கத்தின் வேலைகுறைக்கும் திட்டத்தை ஏற்று பின்னர் மாக்னா வாங்க விரும்பியதை நிராகரித்து, ஐரோப்பிய தொழிற்பாடுகளின்மீது கட்டுப்பாட்டை தக்க வைத்துக் கொள்ள முடிவெடுத்தது.

ஜேர்மனிய மற்றும் ஐரோப்பிய தொழிற்சங்கங்கள் முறையாக கார் தொழிலாளர்களிடையே தேசியவாதம் என்ற விஷத்தை பரப்புவதற்குத்தான் முயன்றுள்ளனர். ஜெனரல் மோட்டார்ஸ் 14 அமெரிக்க ஆலைகளை மூடும் திட்டம், 27,000 வேலைகள் அகற்றப்படல் மற்றும் ஆலையில் எஞ்சியிருப்பவர்களுக்கு ஊதியங்கள், நலன்கள் ஆகியவற்றை குறைக்கப் போவதாக அறிவித்தபோது, ஐரோப்பிய கார் தொழிலாளர்கள் தங்கள் சக அமெரிக்க ஜெனரல் மோட்டார்ஸ் தொழிலாளர்களுக்கு ஆதரவாக எந்த ஒற்றுமையான நடவடிக்கை எடுப்பதையும் சங்கங்கள் ஒடுக்கின. மாறாக, "அமெரிக்கர்கள்தான்" ஓப்பலின் பொருளாதார நிலைக்கு பொறுப்பு என்று IG Metall அறிவித்தது; தவிரவும் ஜெனரல் மோட்டார்ஸிடம் இருந்து ஓப்பல் பிரிக்கப்பட வேண்டும் என்றும் தொழிற்சங்கம் பிரச்சாரம் செய்தது.

பிரன்ஸும் ஜேர்மனிய ஓப்பல் ஆலைகளின் தொழிற்சாலை தொழிலாளர்குழுத் தலைவர்களும் நெருக்கமாக ஜேர்மனிய அரசாங்கத்துடன் ஒத்துழைத்தனர். அரசாங்கம் அதன் பூகோள-மூலோபாயக் காரணங்களுக்காக மாக்னா ஓப்பலை கையேற்றுக் கொள்ளுவதற்கு ஆதரவைக் கொடுத்திருந்தது.

மாக்னா திட்டம் ரஷ்யாவுடன் ஒத்துழைப்பைத் அடித்தளமாகக் கொண்டிருந்தது; அது ரஷ்யாவின் கார்த் தொழிற்துறைக்கு ஜெனரல் மோட்டார்ஸ், ஓப்பல் ஆகியவற்றின் தொழில்நுட்பங்களை அறியும் வாய்ப்பை கொடுத்திருக்கும். இது முக்கிய அமெரிக்க கார் நிறுவனங்களுக்கு எதிரான ஜேர்மனிய அரசாங்கத்திற்கும் வணிக நலன்களுக்கும் பயனுடைய எதிர்க்கனத்தை தோற்றுவித்திருக்கும்.

IG Metall இன் தலைவர் பெர்த்தோல்ட் ஹூபர் மாஸ்கோவிற்குப் பயணித்து ரஷ்ய பிரதம மந்திரி விளாடிமீர் புட்டினை சந்தித்து மாக்னா மற்றும் அதன் பங்காளி ரஷ்ய Sberbank ஆகியவற்றிற்கு தன்னுடைய ஆதரவை ஓப்பல் விற்கப்படுவதற்கு தெரிவித்தார்.

ஜெனரல் மோட்டார்ஸ் (மற்றும் அமெரிக்க அரசாங்கம்) ஓப்பலை மாக்னாவிற்கு விற்பதற்கு எதிராக முடிவெடுத்தனர். மேற்கின் தொழில்நுட்பத்தை ரஷ்ய கார்த் தயாரிப்பாளர்கள்அறிந்து கொள்ளும் முயற்சி வீணடைய வேண்டும் என்பதும் முக்கியக் காரணமாக இருந்தது.

இந்த முழு நிகழ்போக்கின்போதும், ஜேர்மன் ரஷ்ய அரசாங்கங்களுக்கு இடையே பேரம் ஆகியவற்றின்போது, தொழிற்சாலை தொழிலாளர் குழுக்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் முக்கிய பங்கு ஐரோப்பிய தொழிலாளர்கள் எவ்விதமான ஐக்கியப்பட்ட நடவடிக்கையையும் மேற்கொள்ளாமலும் தடுப்பது என்பதாகத்தான் இருந்தது.

ஜேர்மனியிலுள்ள தொழிற்சங்கங்களின் தேசியவாத சந்தர்ப்பவாதம் மற்ற நாடுகளில் உள்ள தொழிற்சங்கங்களாலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அன்ட்வேர்ப்பில், தொழிற்சாலை தொழிலாளர் குழுக்களின் தலைவர் ரூடி கென்னஸ் எந்த ஆலையாவது மூடப்பட்டால், அது ஜேர்மனியில் உள்ள பொஹம் நகரிலுள்ள ஆலைதான் என்று அறிவித்துள்ளார். பொஹம் இல் உள்ள தொழிற்சாலை தொழிலாளர் குழுக்கள் அன்ட்வேர்ப் ஆலை மூடப்பட வேணடும் என்று வாதிட்டுள்ளன.

பிரித்தானியாவில், Unite தொழிற்சங்கம் நாட்டின் வலதுசாரி தொழிற்கட்சி அரசாங்கத்துடன் ஜெனரல் மோட்டார்ஸின் வாக்ஸ்ஸோல் (Vauxhall) துணை நிறுவனத்தில் உள்ள பிரிட்டிஷ் வேலைகளை காப்பாற்ற, ஐரோப்பிய கண்டத்தில் உள்ள ஓப்பல் ஆலைகளின் தொழிலாளர்களுடைய இழப்பில் வருவதற்கு உடன்பாட்டை ஒப்புக் கொண்டுள்ளது.

ஓப்பல்-வாக்ஸோல் ஆலைகள் இருக்கும் ஒவ்வொரு நாட்டில் இருந்தும் தொழிற்சங்கங்கள் கொடுக்கும் தகவல் இதுதான்: "நாங்கள் அதிக உற்பத்தித் திறன் உடையவர்கள்; இன்னும் கூடுதலான சலுகைகளை மற்ற நாடுகளின் ஆலைகளைவிட கொடுக்கத்தயாராக இருக்கிறோம். மற்ற நாடுகளிலுள்ள ஆலைகளை இழுத்து மூடுங்கள்."

ஐரோப்பிய தொழிற்சாலை தொழிலாளர் குழுக்கள் செவ்வாயன்று அன்ட்வேர்ப் ஆலையில் ஒரு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இந்தக் கூட்டத்தை அதற்கு உரிய இகழ்வுடன் தொழிலாளர்கள் நடத்த வேண்டும். தொழிற்சங்க பெரிய அதிகாரிகளும் தொழிற்சாலை தொழிலாளர் குழுத் தலைவர்களும் ஓப்பலில் வேலைநீக்கங்களை கொண்டுவர தாங்கள் செய்துள்ளவற்றை மூடிமறைக்க முற்பட்டுள்ளனர்.

ஜெனரல் மோட்டார்ஸின் முதலாளி Reilly ஐ கிளவுஸ் பிரன்ஸ் இப்போது பகிரங்கமாக குறைகூறினாலும், இருவரும்தான் திரைமறைவில் பலகாலமாக இணைந்து இயங்கிவந்தவர்களாகும். அன்ட்வேர்ப் பனிப்பாறையின் உச்சி மட்டுமே, இன்னும் பல வரவிருக்கின்றன.

ஐரோப்பாவில் இருக்கும் 50,000 ஓபல்-வாக்ஸோல் தொழிலாளர்களில் 8,300 பேரின் வேலைகளை அகற்ற வேண்டும் என்று Reilly கோருகிறார். இதில் பொஹம் இல் 1,800 தொழில் வெட்டுக்களும் அடங்குவர். இந்த ஐரோப்பிய தொழிலாளர்கள் மிக அதிக ஊதியக் குறைப்புக்களுக்கு ஒப்புக் கொள்ளுவர் என்று ஜெனரல் மோட்டார்ஸ் எதிர்பார்க்கிறது--மொத்தத்தில் 265 மில்லியன் யூரோக்கள் சேமிக்கப்பட வேண்டும். அதற்கு மாக்னாவுடன் நடந்த பேச்சுவார்த்தைகளின் போது தொழிற்சாலை தொழிலாளர் குழுக்கள் உத்தரவாதம் அளித்திருந்தன.

இன்றுவரை தொழிற்சாலை தொழிலாளர் குழுக்கள் கொண்டுவந்துள்ள திட்டம், ஜெனரல் மோட்டார்ஸ் ஆல் ஏற்கப்பட்டது, ஒரு கூட்டு நிறுவனம் தேவை என்பதாகும். இதில் தொழிலாளர்கள் ஊதியக் குறைப்புக்கள் என்றவகையில் "முதலீடு செய்வர்"--அதற்கு ஈடாக ஓப்பலின் இயக்கத்திற்கும் ஒரு பங்கு கிடைக்கும். அது ஜேர்மனிய தொழிற்சங்கங்களினால் நிர்வாகம் செய்யப்படும். இந்த திட்டம் வேலைகள், வாழ்க்கைத் தரங்கள் என்று அவர்களுடைய சொந்த தொழிலாளர்களின் இழப்பில் தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு தனிப்பட்ட முறையில் கிடைக்கும் இலாபம்தான்.

அமெரிக்காவில் ஐக்கிய கார் தொழிலாளர் சங்கம் அமெரிக்க அரசாங்கத்திற்கு அடுத்ததாக ஜெனரல் மோட்டார்ஸின் மிகப்பெரிய பங்குகளை கொண்டதாகச் செய்யப்பட்டது. இந்நிறுவனம் திவாலாக வேண்டும் என்று எடுத்த நடவடிக்கைகளுக்கு தொழிற்சங்கம் ஆதரவைக் கொடுத்தது. தொழிற்சங்கம் இப்பொழுது மறுசீரமைக்கப்பட்ட நிறுவனத்தில் 17.5 சதவிகித பங்குகளை கொண்டுள்ளது. நிறுவனம் இன்னும் அதிகமாக ஜெனரல் மோட்டார்ஸ் தொழிலாளர்களை மோசமாக சுரண்டுவதன் அடிப்படையில் அதிக இலாபம் பெறும் போது அதினூடாக செல்வந்தர்களாக போகிறோம் என்ற எதிர்பார்ப்பில் தொழிற்சங்க நிர்வாகிகள் தங்கள் கைகளை தேய்த்து கொண்டிருக்கின்றனர்.

ஓப்பல். வாக்ஸோல் தொழிலாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அன்ட்வேர்ப்பிலுள்ள ஆலை மூடலைத் தடுக்க கூட்டு நடவடிக்கை இல்லை என்றால், இன்னும் வேலைகுறைப்புக்கள், சலுகை பறிப்புக்கள் தொடரும். அடுத்து பாதிப்பிற்கு உட்படக்கூடியவர்கள் ஜேர்மனியில் இருப்பர்.

பெல்ஜிய ஆலை மூடலை அறிவித்தபோது, Reilly ஊழியர்கள் "மறு வளர்ச்சி திட்டத்திற்கு தங்கள் பங்கை" அளிக்கத் தவறினால் இன்னும் மூடுதல்கள் இருக்கும் என்று எச்சரித்தார். செய்தி ஊடகத் தகவல்கள்படி, மிக அண்மையில் மூடப்படக்கூடிய ஜேர்மனிய ஆலைகள் பொஹம், ஐசநாக் நகரங்களில் இருப்பவைதான்.

கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியத்தின் தலைமையில், அங்கேலா மேர்க்கெலின் தலைமையில் உள்ள ஜேர்மனிய அரசாங்கம் மாக்னா திட்டத்திற்கு ஆதரவு கொடுத்திருந்தது; அதே நேரத்தில் கடந்த செப்டம்பர் கூட்டாட்சித் தேர்தல்கள் முடியும் வரை உறுதியான நடவடிக்கைகளை தாமதப்படுத்தியிருந்தது. இப்பொழுது கை உறைகள் கழட்டப்பட்டுவிட்டன.

தாராளவாத ஜனநாயகக் கட்சியுடன் கூட்டணியில் மேர்க்கெலின் தலைமையில் இருக்கும் புதிய அரசாங்கம் கார் தொழிலாளர்கள் உட்பட தொழிலாள வர்க்கத்தின் அனைத்துப் பிரிவுகள் மீதும் முன்னோடியில்லாத வகையில் தாக்குதல்களுக்கு தயாரிப்பை நடத்தி வருகிறது. தொழிற்சங்கங்கள் அதன் வர்க்கப் போராட்ட திட்டத்தை செயல்படுத்த உதவும் என்று அது தொடர்ந்து நம்புகிறது. இன்னும் அதிக ஓப்பல் ஆலைகள் மூடப்படுவதற்குத் தன் ஆதரவு உண்டு என்பதை அரசாங்கம் தெளிவாக்கியுள்ளது; தொழிற்சங்கங்கள் தற்போதைய பொருளாதார நெருக்கடிக் காலத்தில் "பொறுப்பாக", அதாவது தற்போதைய ஒப்பந்த பேரச் சுற்று முடிந்தவுடன் இன்னும் அதிக விட்டுக்கொடுப்புகளை எய்வதாக உறுதியளித்துள்ளன.

இப்பொழுதுள்ள தொழிற்சங்கங்கள் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு பொறி போன்றவை ஆகும். சர்வதேச பொருளாதார நெருக்கடிச் சூழ்நிலையில், தொழிற்சங்கங்கள் மிகவும் வெளிப்படையாகவும், நெருக்கமாகவும் தங்கள் அரசாங்கங்களுடன் இணைந்து செயல்பட்டு, தேசியவாதம் என்னும் விஷத்தைப் பயன்படுத்தி ஒருநாட்டின் தொழிலாளர்களை மற்ற நாட்டுத் தொழிலாளர்களுக்கு எதிராகத் தூண்டிவிடுகின்றன.

எந்த ஒரு நாட்டிலும் தொழிலாளர்களின் வேலைகள் அனைத்து நாடுகளிலும் இருக்கும் தொழிலாளர்களின் வேலைகளைக் காப்பாற்றும் வேலைத்திட்டத்தின் அடிப்படையில்தான் அமைய முடியும். அத்தகைய திட்டத்திற்கான போராட்டத்திற்கு தொழிலாளர்கள் தேசியவாதம் மற்றும் முதலாளித்துவ சார்புடைய தொழிற்சங்கங்கள், தொழிற்சாலை தொழிலாளர் குழுக்கள் ஆகியவற்றின் கொள்கைகளை விட்டுவிட்டு இந்த வலதுசாரிக் கருவிகளிடம் இருந்து முறித்துக் கொள்ள வேண்டும்.

போராட்டத்திற்காக புதிய அமைப்புகள் கட்டமைக்கப்பட வேண்டும். தொழிலாளர் குழுக்கள் ஒவ்வொரு ஆலையிலும் நிறுவப்பட்டு, அவை தொழிற்சங்கங்கள், தொழிற்சாலை தொழிலாளர் குழுக்கள் ஆகியவற்றிடம் இருந்து சுயாதீனமாகச் செயல்பட வேண்டும். அத்தகைய குழுக்களின் முதல் வேலை அனைத்து கார்த் தொழிலாளர்களும் ஒரு சோசலிச முன்னோக்கின் கீழ் சர்வதேச ஐக்கியத்திற்கான போராட்டமாக இருக்க வேண்டும்.

வேலைகள் பாதுகாப்பு என்பதானது முக்கிய கார் நிறுவனங்கள் மற்றும் வங்கிகளை எடுத்துக் கொள்ளும் அரசியல் தாக்குதலின் ஆரம்ப கட்டமாக இருக்க வேண்டும். அவை தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டு, முழு சமுதாயத்தின் நலன்களுக்காக செயல்படுத்தப்பட வேண்டும்.

பார்க்க: ஓப்பல், ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் ஜேர்மனிய-அமெரிக்க உறவுகள்