World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

"Reconstructing Haiti" on starvation wages

பட்டினியில் வாடும் நிலையிலான ஊதியங்களை அடிப்படையாகக் கொண்டு "ஹைட்டி மறுகட்டமைப்பு"

Bill Van Auken
26 January 2010

Back to screen version

திங்களன்று மொன்றியாலில் அரசாங்க மந்திரிகள், சர்வதேச வங்கியாளர்கள் மற்றும் உதவி அமைப்புக்கள் ஹைட்டியில் நிலநடுக்கத்தால் நாசமுற்ற பகுதிகளை மறு கட்டமைக்கும் திட்டங்களைப் பற்றி விவாதித்தனர். அவர்களுடைய திட்டங்களின் இதயத்தானத்தில் ஹைட்டிய தொழிலாளர்களை வறுமைநிலையில் வைத்திருக்கும் ஊதியங்களில் சுரண்டுவது என்பதுதான் இருந்தது.

புதிய உதவி என்ற விதத்தில் மாநாடு எதையும் உருப்படியாக முன்வைக்கவில்லை, மாறாக மார்ச் மாதம் ஐ.நா.வில் நன்கொடையாளர்கள் கூட்டம் ஒன்றிற்கு திட்டமிட்டுள்ளது. கூட்டத்தில் வெளிவந்த பெரும்பாலான அலங்காரச் சொற்கள் ஹைட்டியில் உள்ள நிலைமையுடன் தொடர்பானதாக இருக்கவில்லை; அங்கு 150,000 மக்கள் கொல்லப்பட்டனர் என்று உறுதியாகியுள்ளது; நூறாயிரக்கணக்கான மக்கள் காயமுற்றுள்ளனர் மேலும் 1.5 மில்லியனுக்கும் மேலானவர்கள் வீடிழந்துள்ளனர்.

பிரதம மந்திரி Jean-Max Bellerive, ஹைட்டிய அரசாங்கத்தில் எஞ்சியிருப்பவற்றை பிரதிபலிப்பவரான அவர், ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளின் வெளியுறவு மந்திரிகளுடன் ஹைட்டிய இறையாண்மைக்கு மதிப்பு பற்றி பேசினார்; எப்படி வெளிநாட்டு இராணுவ சக்திகள் மனிதாபிமான முயற்சிகளுக்கு தாழ்ந்து நின்று ஹைட்டியர்கள் தங்கள் மறுகட்டமைப்பு முயற்சிகளை நிர்ணயிக்க அனுமதித்துள்ளன என்றும் கூறினார்.

சர்வதேச நாணய நிதியத்தின் இயக்குனர் டொமினிக் ஸ்ட்ராஸ் கான் உட்பட சில முக்கிய அதிகாரிகள் ஹைட்டிக்கு ஒரு "மார்ஷல் திட்டம்" போல் தேவை என்ற அளவிற்குப் பேசினார்கள்.

உண்மையில் ஹைட்டி இப்பொழுது அமெரிக்க இராணுவத்தால் நடத்தப்படுகிறது; அது 13,000க்கும் மேற்பட்ட துருப்புக்களை அங்கு குவித்து, ஒருதலைப்பட்சமாக நாட்டின் விமான, துறைமுக வசதிகளின் கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்டுள்ளது. உதவி அளிப்பதில் பென்டகன் மேலாதிக்கம் செலுத்துகிறது; ஆனால் போருக்குத் தயாராக இருக்கும் அமெரிக்க தரைப்படை, கடற்படைகளை நிலைநிறுத்த முதலாவது முன்னரிமையாக கொடுக்கிறது; இதுவோ உயிரைக் காப்பாற்றக் கூடிய மருத்துவ அளிப்புக்கள் உணவு என்று காத்திருக்கும் பட்டினியில் உள்ள, காயமுற்ற ஹைட்டியர்களுடைய நலன்களுக்கு தீமையாகும்.

அமெரிக்க வாரந்திர செய்தி ஏடு Times உண்மை நிலையை வெளிப்படுத்தி, அந்நாட்டில் இருக்கும் உயர்மட்ட அமெரிக்க தளபதி அமெரிக்க லெப்டினன்ட் ஜெனரல் கென் கீனை "ஹைய்டியில் அரசர் போல் ஆள்பவர்" என்று குறிப்பிட்டுள்ளது. இதற்கிடையில் ஹைட்டிய மக்கள் ஹைட்டிய ஜனாதிபதி Rene Preval ஐப் பார்க்கவும் இல்லை அவரைப் பற்றிக் கேள்விப்படவும் இல்லை.

ஹைட்டியர்கள் தங்கள் சொந்த வருங்காலம் மற்றும் நாட்டின் அரசாங்கத்தை நடத்துவது பற்றி அவர்களே நிர்ணயிப்பது என்ற பேச்சுக்கு பின்புறத்தில் உண்மையில் விவாதிக்கப்படுவது நிலநடுக்கத்திற்கு பல மாதங்களுக்கு முன்பே விவாதிக்கப்பட்ட ஒரு திட்டம் ஆகும்; அது அமெரிக்க வங்கிகள், பெருநிறுவனங்கள் மற்றும் ஹைட்டியின் செல்வந்தர் தட்டினரும் சேர்ந்து இலாப நலன்களை வலிந்துபெறுதல் ஆகும்.

வாஷிங்டனில் இருந்து மொன்றியாலுக்கு செல்லும் வழியில் நிருபர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவுச் செயலர் கிளின்டன் தன்னுடைய கணவர் முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டன் ஹைட்டிக்கு ஐ.நா. தூதர் என்ற முறையில் செய்யும் பணியைப் புகழ்ந்து இத்திட்டத்தை பற்றிக் குறிப்பிட்டார்.

"இப்பொழுதுதான் அவர் 500 வணிகர்களுடன் ஒரு மாநாட்டை நடத்தினார். அவர்கள் ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகின்றனர், முதலீடுகளைச் செய்ய உள்ளனர்." என்று அவர் கூறினார்.

அவர் தொடர்ந்து கூறியது: "எனவே எங்களிடம் ஒரு திட்டம் உள்ளது. ஒரு நெறியான திட்டம்; இது மற்றய சர்வதேச நன்கொடையாளர்களுடன் இணைந்து, ஐ.நா.வும் சேர்ந்து சமர்பிக்கும் திட்டம் ஆகும். அடித்தளத்தில் இருந்து ஆரம்பிக்க நான் விரும்பவில்லை, ஆனால் இப்பொழுது நாம் எதிர்கொண்டிருக்கும் மாறிவிட்ட அறைகூவல்களை அறிந்து கொள்ள வேண்டும்."

ஐ.நா. வேண்டுகோளின்படி சென்ற ஆண்டு தயாரிக்கப்பட்ட இத்திட்டம் ஹைட்டிய பொருளாதாரத்தை தடையற்ற சுதந்திர வர்த்தக வலயங்களாக பிரித்து வளர்த்து விரிவாக்கும் நோக்கத்தைக் கொண்டது; அவைகள் கடும் உழைப்பை பெறும் ஆடைத் தொழிற்கூடங்களை கொண்டிருக்கும்; ஹைட்டிய தொழிலாளர்கள் கிட்டத்தட்ட பட்டினியால் வாடும் நிலையிலான ஊதியங்களைத்தான் பெறுவர்.

இதற்கான ஆரம்ப முயற்சி கடந்த ஆண்டு ஐ.நா.விற்காக ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பொருளாதார பேராசிரியர் போல் கோலியர் தயாரித்த அறிக்கையை தளமாகக் கொண்டது. இந்த அறிக்கை ஹைட்டியின் வறுமையை இழிந்த முறையில் காட்டியது--மேலைத்தேய உலகிலேயே இது மிக வறியது, ஆனால் உலக முதலாளித்துவ பொருளாதாரத்திற்கு முதல் இடத்தில் இருக்கும் சொத்து என்று கூறியது.

"இதன் வறுமை மற்றும் ஒப்புமையில் கட்டுப்பாடற்ற தொழிலாளர் சந்தை இருப்பதால், ஹைட்டியிடம் சீனாவுடன் முற்றிலும் போட்டிபோடக்கூடிய தொழிலாளருக்கான செலவினங்கள் உள்ளன; இவைதான் உலகின் அடையாளமாக இருப்பது" என்று கோலியர் எழுதினார்.

இந்தச் "சொத்து" வாஷிங்டன் மற்றும் ஹைட்டியின் ஒட்டுண்ணித்தன ஆளும் உயரடுக்கு இரண்டையும் ஆக்கத்துடன் பாதுகாப்பது ஆகும். 1991 மற்றும் 2004ம் ஆண்டுகளில் முன்னாள் ஜனாதிபதி Jean-Bertrand Aristide இருமுறை பதவியில் இருந்து அகற்றப்பட்டார். அதற்கான காரணம் நாட்டின் குறைந்த பட்ச ஊதியம் அதிகரிக்கப்பட வேண்டும் என்று கூறியதற்காக ஹைட்டிய ஆலை முதலாளிகளுடன் சேர்ந்து CIA இயக்கிய குருதி கொட்டிய ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்தியது.

இரண்டாவது பதவிக் காலத்திற்கு 2000ம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டபின், Aristide குறைந்தபட்ச ஊதியத்தை இருமடங்காக ஆக்கி ஆடை ஆலைகளில் சில்லறை வேலைகளுக்கு தடை விதித்தார்; இது இந்த நிறுவனங்களின் முதலாளிகளிடம் இருந்து கடுமையான எதிர்ப்பை தூண்டியது. ஹைட்டியின் தொழிலாளரை பிழியும் நிறுவனங்களின் ஹைட்டிய-அமெரிக்க உரிமையாளரான Andy Apaid, கிளின்டனின் இப்புதிய "வளர்ச்சித் திட்டத்திலுள்ள" முக்கிய நண்பர்களில் ஒருவர் 2004 ஆட்சி மாற்றத்தில் முக்கிய புள்ளியாக இருந்தார்; அப்பொழுது Aristide கடத்தப்பட்டு அமெரிக்க துருப்புக்களால் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். ஆயிரக்கணக்கான ஹைட்டியர்கள் வலதுசாரி கொலைப் படை குழுக்களால் படுகொலை செய்யப்பட்டனர்.

கடந்த ஆண்டு பலர் கொல்லப்பட்டு, காயமுற்ற மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் வெகுஜன ஆர்ப்பாட்டங்களை நடத்தியதை தொடர்ந்து ஜனாதிபதி Prevel ஹைட்டிய சட்டமன்றம் இயற்றிய குறைந்த பட்ச ஊதிய உயர்வை ஏற்கும் கட்டாயத்திற்கு உட்பட்டார். ஆனால் ஆடைகளை ஒன்றிணைப்புத் தொழிலில் நாள் ஒன்றிற்கு 2.98 டாலர் என்ற குறைவூதியத்தை விடக் குறைந்த ஊதியத்திற்கான சட்டத்தை அவர் இயற்றினார்; இது அமெரிக்காவில் இருக்கும் குறைந்தபட்ச ஊதியத்தில் கிட்டத்தட்ட 20ல் ஒரு பங்குதான்.

இத்தகைய முறை ஆடை உற்பத்தியாளர்களுக்கு கொள்ளை இலாபம் ஈட்டி, ஹைட்டியின் உள்ளுர் பிரபுத்துவத்திற்கு இன்னும் செல்வக் கொழிப்பை ஏற்படுத்துகையில், நாட்டின் பெரும் வறுமையைக் குறைக்க இது ஏதும் செய்யாது; மாறாக மேலைத்தேய உலகிலேயே அதிகம் படர்ந்திருக்கும் சமூக சமத்துவமின்மையை தீவிரப்படுத்தும். ஆடைகள் ஒன்றிணைப்பானது துணிகள் இறக்குமதி செய்யப்பட்டு சுதந்திர வர்த்தக வலயங்களில் பொருத்தி ஆடையாக மாற்றப்பட்டு அதன் பின் மீண்டும் ஏற்றுமதியாகும்; உள்ளூர் பொருளாதாரத்திற்கு இதனால் கிட்டத்தட்ட எவ்வித தாக்கமும் இருக்காது.

வெளியுறவுச் செயலர் கிளின்டன் இந்த அடிமைத் தொழிலாளர் முறைக்கான திட்டத்தைத்தான் வாஷிங்டன் ஜனவரி 12 நிலநடுக்கத்திற்கு பின்னர் பரிசீலித்துவருகிறது என்ற குறிப்பைக் காட்டினாலும், பேரழிவை ஒட்டி சில திருத்தங்கள் அதில் தேவைப்படும் என்று ஒப்புக் கொண்டார்.

Bellerive ஐ ஹைட்டிய பொருளாதாரத்தை "மத்தியத்துவப்படுத்தாமல் பிரிப்பதற்காக" கிளின்டன் பாராட்டினார். "ஹைட்டிக்கு உதவும் எமது பன்முக முயற்சிகளில் ஒரு பகுதியாக, பொருளாதார வாய்ப்பை எப்படி மத்தியத்துவப்படுத்தாமல் செய்வது என்று காணவேண்டும்; மீள்குடியேற்றத்திற்கு ஹைட்டிய அரசாங்கம், மக்களுடன் ஒத்துழைக்க வேண்டும்; பெரும்பாலான மக்கள் கிராமப்புறப் பகுதியில் இருந்து Port-au-Prince க்கு வந்தவர்கள் இப்பொழுது திரும்பிச் சென்று கொண்டிருக்கையில், அம்மக்களே திட்டத்திற்கு உருக்கொடுக்கின்றனர்" என்று அவர் கூறினார்.

வாஷிங்டன் மற்றும் ஐ.நா. ஆதரவுடன் ஹைட்டிய அதிகாரிகள் நூறாயிரக்கணக்கான மக்களை, முக்கியமாக ஏழைகளை Port-au-Prince ல் இருந்து வேறு இடங்களுக்கு மீள்குடியேற்ற முகாம்களுக்கு கொண்டு செல்லத் தொடங்கிவிட்டனர். இவர்களுக்கு நிலங்கள் Croix-des-Bouquets என்று தலைநகரத்தில் இருந்து எட்டு மைல் தூரத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது; அங்கு 10,000 பேருக்கு இடம் கொடுக்கப்படும். மற்றய இடங்களும் தேர்ந்தெடுக்கப்படுகின்றன; இதன் நோக்கம் தலைநகரத்தில் இருந்து வெளியேற்றப்படுபவர்கள் நிரந்தரமாக புதிய இடங்களில் வசிக்க வேண்டும் என்பதுதான்.

சமூகப் பிளவுகள் அப்பட்டமாக இருக்கும் ஒரு சமூகத்தில், ஹைட்டிக்கான மீள்குடியேற்றத் திட்டம் என்பது தவிர்க்க முடியாமல் வர்க்க வழியின்படிதான் இருக்கும். புதிய மீள்குடியேற்ற முகாம்கள் சுதந்திர வர்த்தக வலயம் என்று அருகே நிறுவப்பட இருக்கும் பகுதிகளுக்கு சிறைப்பட்ட தொழிலாளர்கள் போல் பயன்படும் நிலை உருவாகலாம்.

இதற்கிடையில் Port-au-Prince ஒரு சிறிய நகரமாக மீண்டும் கட்டமைக்கப்படும்; நாட்டின் செல்வந்தர்களுடைய நலனுக்கு ஏற்ப அது அமையும். இதுதான் வாஷிங்டனுக்கு ஹைட்டியின் தூதராக உள்ள ரேமண்ட் ஜோசப் கொடுத்த அறிக்கையில் குறிப்பாகக் கூறப்பட்டுள்ளது. C-SPAN தொலைக்காட்சியில் ஹைட்டிய மக்கள்மீது ஏற்படுத்தியுள்ள பெரும் சோகத்தைப் பற்றி பேசிய அவர், "ஆனால் ஒரு நல்லதும் புலப்படுகிறது. அரசியலால் முடியாததை நிலநடுக்கம் செய்துவிட்டது. நாங்கள் வேறுவிதமாகக் கட்டமைப்போம்."

இத்தகைய சமூக மறு பொறியியல் முறை, உள்ளூர் ஆளும் வர்க்கம் மற்றும் வெளிநாட்டு மூலதனத்தின் நலன்களுக்காக ஹைட்டிய தொழிலாளர்கள், வறியவர்களின் இழப்பில் நடத்தப்படுவது தவிர்க்க முடியாமல் எழுச்சிகளையும் எதிர்ப்புக்களையும் தோற்றுவிக்கும். எனவேதான் வாஷிங்டன் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உயிர்களைக் காப்பதற்கு முன்பே, "தரையில் பூட்ஸ்களை" பதித்தது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved