World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Iranian scientist assassinated as US steps up war threats

அமெரிக்கா போர் அச்சுறுத்தல்களை அதிகரிக்கையில் ஈரானிய விஞ்ஞானி படுகொலை

By Bill Van Auken
13 January 2010

Use this version to print | Send feedback

ஈரானின் அணுசக்தி நிலையங்கள்மீது குண்டுவீசும் திட்டங்களை பென்டகன் தயாரித்துவருகிறது என்று வட்டார உயர்மட்ட அமெரிக்க தளபதி அறிவித்த இரு நாட்களுக்குள், செவ்வாயன்று தெஹ்ரானில் ஈரானின் முக்கிய அணுசக்தி விஞ்ஞானிகளில் ஒருவரான மசெளத் அலி முகம்மதி படுகொலை செய்யப்பட்டார்.

இப்படுகொலையும், இராணுவத் தாக்குதல் அதிகரிக்கப்பட்டுள்ளதும் ஈரானிய அணுசக்தித் திட்டம் பற்றி சர்வதேச அழுத்தங்கள் தீவிரமாவதின் அடையாளம் ஆகும். அமெரிக்கா, இஸ்ரேல் இன்னும் பிற மேலை சக்திகள் தெஹ்ரான் அணுவாயும் தயாரிக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ள நிலையில், ஈரான் பல முறையும் அதன் அணுசக்தித் திட்டங்கள் சமாதானச் செயல்களுக்கு மட்டும்தான் என்று வலியுறுத்தி வந்துள்ளது.

தெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் பணிக்காக காரில் புறப்படத் தயாராக இருந்தபோது அவருடைய காருக்கு அருகே ஒரு தொலைக் கட்டுப்பாட்டில் இயக்கப்பட்ட சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் 50 வயதான அலி முகம்மதி இறந்து போனார். இந்த வெடிப்பு அலி முகம்மதியின் குடியிருப்பான வடக்கு தெஹ்ரான் பகுதியான Qeytariyeh இற்கு 300 அடிக்கு அப்பாலும் சன்னல்களைச் சிதைத்தது. இந்த வெடிகுண்டு ஒரு மோட்டார் சைக்கிளில் கட்டி வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

பல்கலைக்கழகத்தில் அலி முகம்மதி நியூட்ரோன் அணு இயற்பியலை கற்பித்துவந்தார். ஈரானில் இருந்து வந்துள்ள ஒரு தகவலின்படி அவர் அணுசக்தித் திட்டத்துடன் தொடர்பு கொண்டிருந்ததற்காக சர்வதேச தடைகளுக்கு உட்படுத்தப்பட்ட ஈரானிய குடிமக்களில் ஒருவராவார்.

கொலை செய்யப்பட்ட பேராசிரியரின் சக ஊழியர்கள் அவர் அரசியல் சார்பு அற்று இருந்தவர் என்று விவரித்தனர். ஆனால் அவருடைய பெயர் ஜூன் 12ம் தேதி நடைபெற்ற பிரச்சனைக்குள்ளான ஜனாதிபதி தேர்தலில் முடிவுகளுக்கு சவால் விட்ட எதிர்தரப்பு வேட்பாளரான மீர் ஹெளசைன் மெளசவியை ஆதரித்த 200 மற்ற கல்வியாளர் பட்டியலில் இருந்தது. அந்தத் தேர்தல் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜாட்டிற்கு இரண்டாம் வரைகாலப் பதவியை கொடுத்தது.

ஈரானின் மூத்த அரசாங்க வக்கீல், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல்தான் இந்த தாக்குதலுக்கு பொறுப்பு என்று குற்றம் சாட்டினார். "மசெளத் அலி முகம்மதி ஒரு அணுசக்தி விஞ்ஞானி என்ற நிலையில், CIA, Mossad பிரிவுகளும் முகவர்களும் இதில் தொடர்பு பெற்றிருக்க வேண்டும்" என்று அரசாங்க வக்கீல் அப்பாஸ் ஜபாரி டோலதாபாடி அரசாங்கம் நடத்தும் செய்தி ஊடகத்திடம் கூறினார்.

வெளியுறவு அமைச்சரக செய்தித் தொடர்பாளர் ராமின் மேமென்பார்ஸ்ட் ஆரம்ப விசாரணைகள் "சியோனிச ஆட்சி, அமெரிக்கா, ஈரானில் உள்ள அவற்றின் கூலிப்படைகள் ஆகியவை இந்தப் பயங்கரவாத நிகழ்வில் தொடர்புடையதை சுட்டிக்காட்டுகின்றன" என்றார். "இத்தகைய பயங்கரவாத செய்லகள், நாட்டின் அணுசக்தி விஞ்ஞானியை கொலை செய்தல் என்பவை விஞ்ஞான, தொழில்துறை அபிவிருத்தியை உறுதியாக நிறுத்தாது, மாறாக விரைவுபடுத்தும்" என்றும் கூறினார்.

ஈரானின் Press TV கூறியது: "அமெரிக்காவின் செயற்பட்டியலில் ஈரானிய விஞ்ஞானிகள் கடத்தப்படுதல், படுகொலை செய்யப்படுதல் ஆகியவை உள்ளன போலும்."

இக்குற்றச் சாட்டுக்களை வாஷிங்டன் உதறித்தள்ளியது. "அமெரிக்க தொடர்பு என்ற குற்றச்சாட்டுக்கள் அபத்தமானவை" என்று வெளிவிவகாரத்துறை செய்தித் தொடர்பாளர் மார்க் டோனர் கூறினார்.

ஈரானின் அணுசக்தி திட்டங்கள் பற்றி வாஷிங்டனின் சீற்றமான அச்சுறுத்தல்களுடன் அமெரிக்கா, இஸ்ரேல் ஆகியவை குற்றம்சார்ந்த கொள்கையான இலக்கு வைத்து செய்யப்படும் படுகொலைகளிலும் முக்கியமாக ஈடுபடுபவை ஆதலால், தெஹ்ரானுடைய குற்றச்சாட்டுக்கள் எளிதில் உதறித்தள்ள முடியாதவை ஆகும்.

அரசாங்க வக்கீல் டோலதாபதி, அலி முகம்மாதி கொலை செய்யப்பட்டுள்ளது கடந்த ஜூன் மாதம் ஈரானிய அணுசக்தி ஆராய்ச்சியாளர் ஷஹ்ரம் அமின் சவுதி அரேபியாவில் உள்ள புனித நகரமான மெதினாவிற்கு யாத்திரை மேற்கோண்டபோது காணாமற் போனதை அடுத்து வந்துள்ளது என்று கூறினார். ஈரானிய அரசாங்கம் அவர் சவுதி உளவுத்துறையினரால் கடத்தப்பட்டு அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது.

இஸ்பஹான் என்னும் ஈரானிய அணுசக்தி நிலையத்தில் வேலை பார்த்த ஷிராஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆர்தெஷிர் அஸ்காரி விவகாரத்தையும் லண்டன் பைனான்ஸியல் டைம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது. 2007ம் ஆண்டு அவருடைய 44 வது வயதில் கொலை செய்யப்பட்டதை "வாயுவினால் மூச்சுத் திணறலை அடுத்து" என்று கூறப்பட்டது. ஆனால் அவர் கொலை செய்யப்பட்டார் என்றுதான் வலுவான சந்தேகங்கள் உள்ளன.

அமெரிக்க தளத்தை கொண்ட உளவுத்துறை வலைத்தளம் Stratfor குறிப்பிடுவதாவது: "மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு புகழ்வாய்ந்த ஈரானிய அணுசக்தி விஞ்ஞானி ஆர்தெஷிர் ஹாசன்போர் கொல்லப்பட்டார். அந்த நேரத்தில் இஸ்ரேலிய உளவுத்துறை மொசட் அந்தப் படுகொலைக்கு பின்னணியில் இருந்தது என்று Stratfor அறிந்தது. உண்மையில் இப்பொழுதும்கூட ஈரானிய அதிகாரிகள் யூத அரசாங்கத்தின் மீது சுட்டிக் காட்டியுள்ளனர். ஆனால் இது சரியா என்பது பற்றி உடனே கூறுவது கடினம்.

"தனிப்பட்ட முறையில் விஞ்ஞானிகளைப் படுகொலை செய்தல், மற்றவர்களைக் கடத்தல் என்பது முன்னோடியில்லாத விஷயம் அல்ல. மேலும் சமீப காலத்தில் இலக்கு வைத்து தாக்கப்படும் குண்டுவீச்சுக்கள் நாட்டின் உயரடுக்கு இராணுவப்பிரிவான இஸ்லாமிய புரட்சி பாதுகாப்புப் பிரிவின் மூத்த இராணுவத் தளபதிகள்மீது நடந்துள்ளது."

மற்றொரு கட்டுரையில் Stratfor அலி-முகம்மாதின் படுகொலை மேற்கிற்கும் ஈரானுக்கும் இடையே நாட்டின் அணுத்திட்டம் பற்றி நடக்கும் பேச்சுவார்த்தைகளை சிக்கலாக்கிவிடும். "அது இஸ்ரேலுக்கு ஒரு வாய்ப்பை அளித்துவிடும். அணுசக்தி பேச்சுவார்த்தைகளில் ஈரான் இன்னும் வளைந்து கொடுக்காமல் இருந்தால், இஸ்ரேல் அமெரிக்காவிடம் ஈரானுடன் இராஜதந்திரப்போக்கு முடிந்துவிட்டது என்ற வலுவான வாதத்தை முன்வைக்கும். இராஜதந்திரப்போக்கு பயனற்றது என்று இஸ்ரேலின் உந்துதலால் அமெரிக்க ஒப்புக் கொண்டால், ஈரானுடன் அணுகும் தேர்வுகளும் கணிசமாகக் குறைந்துவிடும்" என்றும் வலைத் தளம் எழுதியுள்ளது.

ஒரு தொலைக்காட்சி பேட்டியில் மூத்த, அதிக அரசியல் சார்புடைய அமெரிக்க இராணுவத் தளபதி டேவிட் பெட்ரீயஸ் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் "உறுதியாகக் குண்டுத் தாக்குதலுக்கு உட்படும்" என்று கூறிய இரு நாட்களுக்குப் பின்னர் தெஹ்ரான் படுகொலை வந்துள்ளது. பெட்ரீயஸ் அமெரிக்க மத்தியக் கட்டுப்பாட்டு நிலையத்தின் தலைவராவார். இது ஆப்கானிஸ்தான், ஈராக் போர்கள் இரண்டையும் மேற்பார்வை இடுகிறது. அவருடைய அறிக்கை ஈரானுக்கு எதிரான அமெரிக்க அச்சுறுத்தல்கள் கணிசமாக விரிவாகும் என்பதை அடையாளம் காட்டுகிறது.

CNN கேபிள் செய்தி இணையத்திற்கு ஞாயிறன்று கொடுத்த பேட்டியில், "ஈரான் மீது இராணுவத் தாக்குதல் திறன் தொடர்புடைய பலவித செயற்பாடுகள் பற்றி முழுமையான திட்டங்களை மத்தியக் கட்டுப்பாடு (CENTCOM) செய்யவில்லை என்றால் அது முற்றிலும் பொறுப்பற்ற தன்மை ஆகிவிடும்" என்று பெட்ரீயஸ் அறிவித்தார்.

ஈரான் அதன் அணுசக்தி நிலையங்களை பரவலாக வைத்துள்ளது, நிலத்தடி நிலவறைகளுக்குள் பாதுகாக்க முற்படுகிறது என்ற தகவல்கள் இருந்தபோதிலும், அவை தாக்கப்பட முடியும் என்று தளபதி கூறினார். "ஆம். அவை உறுதியாகத் தாக்கப்பட முடியும். எவர் இதைச் செய்கிறார் என்பதை பொறுத்தும், எத்தகைய வெடிமருந்துகள் தாக்குபவர்களால் பயன்படுத்தப்படுகின்றன மற்றும் எத்தகைய திறன் இருக்கும் என்பதை பொறுத்தும் விளைவுகள் இருக்கும்" என்று அவர் பேட்டியில் கூறினார்.

இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கை திட்டங்கள் பற்றி பெட்ரீயஸ் கருத்துக் கூற மறுத்தாலும், இந்த அறிக்கை ஈரான் மீது டெல் அவிவ் தாக்குதல் நடத்துமா என்பது பற்றிய மறைமுகக் குறிப்பு என்பது தெளிவாகும். ஈராக் அல்லது அமெரிக்கா பலமுறை அத்தகைய தாக்குதலை நடத்த இருப்பதாக அச்சுறுத்தியுள்ளன. அமெரிக்க இராணுவம் அதன் புதிய Massive Ordnance Penetrator எனப்படும் "நிலவறை தகர்ப்பு" குண்டை தயாரிப்பதை விரைவுபடுத்தி வருகிறது. இந்த 30,000 இறாத்தல் குண்டு வெடிப்பதற்கு முன் நிலத்தில் 200 அடி ஆழம்வரை தோண்டிவிடும் திறனை உடையது என்று கூறப்படுகிறது.

பெட்ரீயஸ் தன்னுடைய பொறுப்பை பரந்த அளவில் காண்பதைத் தெரிவிக்கும் அறிக்கையில் CENTCOM தளபதி, "ஆனால், நீங்கள் விரும்பினால் இவை எல்லாம் நடைபெறுவதற்கு முன் உறுதியாக சில காலம் பிடிக்கும்" என்றார். அதாவது, இவர் பொறுப்பேற்க முன் அரசியல்வாதிகளுக்கும் தூதர்களுக்கும் தெஹ்ரானுடன் பேச்சுவார்த்தை என்பது போல் நடத்துவதற்கு அனுமதிக்கத் தயார் என்பது போல் கூறியுள்ளார்.

தெஹ்ரான் பெட்ரீயஸின் ஆத்திரமூட்டும் கருத்துக்கள் பற்றி நிதானத்துடன் விடையிறுத்துள்ளது. ஒரு வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அவர் கருத்துக்கள் "சிந்தனையற்றவை, பொறுப்பற்றவை" என்றார். தெஹ்ரான் டைம்ஸ் செய்தித்தொடர்பாளர் "முந்தைய நிர்வாகத்தின் தவறுகளை மீண்டும் செய்து அமெரிக்கா பிற்போக்குத்தனமாக நடந்து கொள்கிறது" என்று கூறியதாகத் தெரிவிக்கிறது.

ஈரான் மீது வாஷிங்டன் கொடுக்கும் இராணுவ அழுத்தத்தின் மற்றொரு அடையாளம் ஜனாதிபதி ஒபாமா விமானத்தாங்கி போர்க்கப்பலான USS Eisenhower இன் தலைமையில் தாக்குதல் கப்பல் குழுவை பாரசீக வளைகுடாவிற்கு ஆறுமாத காலத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாகும். இக்கப்பல்கள் மொத்தத்தில் 6,000 கடற்படையினர், மரைன்களைக் கொண்டுள்ளதோடு, நான்கு பிரிவுகள் போர்விமானங்கள், ஏவுகணை தாங்கிகள், அழிக்கும் திறனுடைய கப்பல்களை கொண்டுள்ளது. ஜனவரி 2 அன்று அப்பகுதிக்கு புறப்படும்.

இந்த இராணுவ நடவடிக்கை விரிவாக்கம் ஒபாமா நிர்வாகம் ஈரான்மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்கும் முயற்சிகளுக்கு இணையாக நடந்து வருகின்றது. P5+1 என்று அழைக்கப்படும் அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், ரஷ்யா, சீனா, ஜேர்மனி ஆகிய நாடுகள் நியூயோர்க் நகரத்தில் சனிக்கிழமை கூடி ஈரானுக்கு எதிரான தண்டனை நடவடிக்கைகள் பற்றி விவாதிக்க உள்ளன. இவை ஈரான் அதன் யுரேனிய அடர்த்தித் திட்டத்தை நிறுத்திவைக்க மறுத்ததை ஒட்டி ஐ.நா.பாதுகாப்புக் குழு மூன்று முந்தைய சுற்றுக்களில் சுமத்திய நடவடிக்கைகளைத் தவிர மேலதிகமாக வருபவை ஆகும்.

இந்த ஆறு நாடுகளும் தெஹ்ரான் மீது ஆண்டு இறுதிக்குள் சர்வதேச அணுசக்தி நிறுவனம் (IAEA) என்னும் ஐ.நா. மேற்பார்வை அமைப்பின் திட்டத்தை ஏற்க காலக்கெடு கொடுத்துள்ளன. அதன்படி ஈரான் அதன் பெரும்பாலான குறைந்த அடர்த்தி உடைய யுரேனியத்தை (LEU) ரஷ்யாவிற்கும், பிரான்சிற்கும் அணுசக்தி எரிபொருளாக பயன்படுத்த சுத்திகரிக்க அனுப்ப வேண்டும்.

தெஹ்ரான் இந்தக் காலக்கெடுவை புறக்கணித்து அதன் மாற்றுத் திட்டமான குறைந்த அடர்த்தி யூரேனியத்தொகுப்பை துருக்கியில் இருந்து பெறுவது என்பதை முன்வைத்துள்ளது. துருக்கியுடன் ஈரான் நெருக்கமான பொருளாதாரத் தொடர்புகளை கொண்டுள்ளது. அமெரிக்காவும் மற்ற மேலை சக்திகளும் இத்திட்டத்தை பொருட்படுத்தவில்லை.

இந்த வாரம் வெளிவிகார செயலர் ஹில்லாரி கிளின்டன் "முடிவு எடுப்பவர்களை'' இலக்கு கொள்ளும் "தீவிர தடைகள்" செயல்படுத்தப்பட வேண்டும் என்று வாஷிங்டன் விரும்புவதாகக் கூறியுள்ளார். செய்தி ஊடகத் தகவல்கள் அமெரிக்கா இன்னும் பரந்த புதிய தடைகள் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் பிரிவிற்கு எதிராகச் சுமத்த முற்படுவதாகக் குறிப்பு காட்டியுள்ளன. அது ஈரானின் அணுசக்தி திட்டத்தில் தொடர்புடையதுடன், அதே நேரத்தில் ஈரானிய பொருளாதாரத்தின் பெரும் பகுதியைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுள்ளது. அவற்றுள் தெஹ்ரான் விமான நிலையம், தேசிய தொலைதொடர்புகள் ஆகியவையும் ஆயிரக்கணக்கான அமைப்புக்களில் முதலீடுகளும் அடங்கும்.

ஆனால் ஐ.நா.பாதுகாப்புக்குழுவில் கணிசமான புதிய சுற்றுத் தடைகளுக்கு ஒப்புதல் கிடைக்கும் என்பது சந்தேகம்தான்; இது இம்மாதம் பெய்ஜிங்கின் தலைமையின்கீழ் உள்ளது. ரஷ்யா, சீனா இரண்டுமே வீட்டோ என்னும் தடுப்பதிகாரம் உடைய 5 நாடுகளில் உள்ளன. இரண்டிற்குமே ஈரானுடன் பொருளாதார உறவுகளை நிறுத்தும் அக்கறை கிடையாது.

சீனா ஈரானுடன் விரைவாக அதன் வணிகம் மற்றும் எரிசக்திதுறைப் பிரிவு முதலீட்டையும் விரிவாக்கிக் கொண்டிருக்கிறது. சீனாவிற்கு கச்சா எண்ணெய் அளிப்பதில் ஈரான் மூன்றாம் இடத்தை கொண்டுள்ளது. அதைத்தவிர அதிக அளவிற்கு இயற்கை எரிவாயுவையும் ஏற்றுமதி செய்கிறது. இரு நாடுகளும் இப்பகுதியில் கொண்டுள்ள நலன்கள் வாஷிங்டனுக்கு முரணானவை. ஈரானிய அணுசக்தித் திட்டத்தை அவை உண்மை அச்சுறுத்தலாகக் காணவில்லை.

அவ்வாறு பார்க்கும்போது அமெரிக்க கொள்கையின் உந்துதல் சக்திக்குப் பின் ஈரானிய குண்டு அச்சுறுத்தலும் இல்லை. அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் மேலாதிக்கத்தை எரிசக்தி வளம் படைத்த மத்திய ஆசியா, ம்திதய கிழக்கில் நிறுவ முற்படுகிறது. இதற்காக அங்கு இரு போர்களை ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் நடத்தி வருகிறது. ஈரான் இரண்டிற்கும் நடுவே உள்ளது. ஈரான்மீது அதன் மூலோபாய போட்டியாளர்களின் இழப்பில் அமெரிக்கா தனது மேலாதிக்கத்தை மீண்டும் வலியுறுத்த வாஷிங்டன் விரும்புகிறது. அதையொட்டி பெரும் விளைவுகளை இன்னும் பரந்த அளவில் தூண்டிவிடக்கூடிய மோதலுக்கு எரியூட்டும் அச்சுறுத்தலைக் கொடுக்கிறது.

பாதுகாப்புக் குழு ஒப்புதல் இல்லாத நிலையில், வாஷிங்டன் தன்னுடைய சொந்த ஒருதலைப்பட்ச பொருளாதாரத் தடைகளை பிரிட்டன் மற்ற நட்பு நாடுகளுடன் சேர்ந்து சுமத்தக்கூடும். அமெரிக்க காங்கிரஸில் இப்பொழுது இயற்றப்பட உள்ள சட்டம் ஒபாமா நிர்வாகத்திற்கு ஈரான் சுத்தி செய்யப்பட்ட பெட்ரோலியத்தை இறக்குமதி செய்வதின் மீது தடைவிதிக்கும் அதிகாரத்தைக் கொடுக்கும். தன்னுடைய பெட்ரோலியத் தேவைகளில் 40 சதவிகிதத்திற்கும் மேல் ஈரான் இறக்குமதிகளை நம்பியுள்ள நிலையில், அத்தகைய முடக்கும் தன்மையை கொண்டிருக்கும் நடவடிக்கை ஒரு போரை தொடக்குவதற்கு ஒப்பாகும்.

2008ல் ஒபாமா ஈரானுடன் "ஒரு புதிய பேச்சுவார்த்தை" என்னும் உறுதியைக்காட்டி தேர்தலில் வெற்றி பெற்றார். அவருடைய பதவியில் முதல் ஆண்டு இறுதிக்கு வரும் நேரத்தில், வாஷிங்டனின் வார்த்தை ஜாலங்களும் கொள்கைகளும் மிக அதிகமாக அச்சுறுத்தல்களை கொண்டிருக்கின்றன. ஈரான்மீது தடைகள் பற்றிய இராஜதந்திர நடவடிக்கைகள் புஷ் நிர்வாகம் ஈராக்கில் "பேரழிவு ஆயுதங்கள்" இருந்தது என்று கூறி அங்கு போர் தொடுப்பதற்கு முன் செயல்படுத்திய தந்திரோபாயங்களை ஒத்துத்தான் உள்ளன