SWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா :
பிரித்தானியா
Anti-Islamic measures in Britain threaten democratic
rights
பிரிட்டனில் இஸ்லாமிய-எதிர்ப்பு நடவடிக்கைகள் ஜனநாயக உரிமைகளை அச்சுறுத்துகின்றன
By Paul Mitchell
19 January 2010
Use this version
to print | Send
feedback
இந்த வாரம் Islam4UK
எனப்படும் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பின் ஐந்து ஆதரவாளர்கள், மார்ச் 2009ல்
Luton ல் இராணுவ
எதிர்ப்பு கோஷங்களை முழக்கியவர்களுக்கு, திட்டும் சொற்களை பயன்படுத்தியதற்காக தண்டனை வழங்கப்பட்டது.
கூறப்பட்ட கோஷங்களில் "பிரிட்டிஷ் படையினரே நரகத்திற்கு செல்லுங்கள்", "பிரிட்டிஷ் படையினர் கொலைகாரர்கள்",
"பிரிட்டிஷ் படையினர் குழந்தைகளை கொல்லுபவர்கள்" என்பவையும் அடங்கியிருந்தன.
ஆர்ப்பாட்டக்காரர்கள் பொது ஒழுங்குச் சட்டத்தின் கீழ் அச்சுறுத்தும், திட்டும்
அல்லது அவமதிப்பு கொடுக்கும் சொற்களைப் பயன்படுத்தியதற்காகவும், துன்புறுத்தல், எச்சரிக்கை அல்லது ஆபத்து
கொடுக்கக்கூடிய வகையில் நடந்து கொண்டதற்காகவும் குற்றம் சாட்டப்பட்டு இரு ஆண்டுகள் நிபந்தனையின் பேரில்
விடுவிக்கப்பட்டு, ஒவ்வொருவரும் 500 பவுண்டுகள் அபராதம் கட்ட வேண்டும் என்றும் கூறப்பட்டது. இவர்களுக்கு
கொடுக்கப்பட்டுள்ள தண்டனைகள் தடையற்ற பேச்சுரிமை மற்றும் ஆப்கானிஸ்தான், ஈராக் ஆகியவற்றில் நடக்கும்
போர்களை எதிர்க்கும் ஜனநாயக உரிமைகளை தாக்குவதைப் பிரதிபலிக்கின்றன.
அதே நேரத்தில் உள்துறை செயலர் அலன் ஜோன்ஸன்
Islam4UK ஐயும்
அதன் "மூல" அமைப்பான அல்-முஹாஜிரெளனையும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின்கீழ் தடைசெய்து அதில்
உறுப்பினராக இருப்பது ஒரு குற்றம் என்றும் 10 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்படலாம் என்றும் கூறிவிட்டார்.
அல்-முஹாஜிரெளனின் கீழ் வந்த மற்றய இரு அமைப்புக்கள், அல்-குரபா மற்றும்
The Saved Sect
இரண்டும் ஏற்கனவே தடை செய்யப்பட்டுவிட்டன.
Islam4UK கடந்த
வாரம் வூட்டன் பாசெட் கிராமம் வழியே நடக்க இருந்த போர் எதிர்ப்பு அணியை இரத்து செய்தது; அந்த
இடத்தில் தான் கிட்டத்தட்ட ஒவ்வொரு வாரமும் "தாய் நாட்டிற்கு திரும்பும் நிகழ்வுகளாக" ஆப்கானிஸ்தானில்
கொல்லப்பட்ட சிப்பாய்களின் சடலங்களை கொண்டு செல்லும் பெட்டிகள் உள்ளூர் விமானத் தளத்தில் இருந்து பிரதான
சாலை வழியே அருகில் இருக்கும் சவக்கிடங்கிற்கு எடுத்துச் செல்லப்படும்.
ஐந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் விசாரணையின்போது, அவர்களுக்காக வாதிட்ட
வக்கீல்கள் அவர்களுடைய நடவடிக்கை "முக்கியமான பொது விவாதத்தில் முறையான எதிர்ப்பு என்றும்,
போலீஸாருக்குத் தெரிந்து நடத்தப்பட்டது என்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் அடிப்படை பேச்சுரிமையை
வெளிப்படுத்தும் உரிமை பெற்றவர்கள் என்றும்" சரியான முறையில் வாதிட்டனர்.
ஐரோப்பிய மனித உரிமைகள் உடன்படிக்கை ஆர்ப்பாட்டக்காரர்களின் உரிமைக்
காக்கிறது என்றும் "அவர்கள் கூற விரும்புவதை கூறலாம் என்றும் அத்தகைய உரிமையில் விகித முறைப்படி தலையிட்டு
குற்ற நடவடிக்கை எடுப்பது நியாயமில்லை" என்றும் அவர்கள் கூறினர்.
நீதிமன்ற நடவடிக்கைகளின்போது, குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர்,
Shajjadar Choudhury
கூறியது: "உண்மையை தெருவில் உரக்கக் கூறுவது ஒன்றும் அவமதிப்பு அல்ல. நாங்கள் உண்மையை உயர்த்திக்
காட்டினோம்."
"நாங்கள் பயன்படுத்திய சொற்கள் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தன.
எவரையும் தொந்திரவிற்கு உட்படுத்தவோ எச்சரிக்கவோ நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் எடுத்துச் சென்ற
கோஷ அட்டைகள் அவர்களை கொலைகாரர்கள் என்று கூறின. நாங்கள் பிரிட்டிஷ் படைகள் என்ற தொகுப்பு
கொலைசெய்யும் அமைப்பு என்று பொருள் கொண்டோம். நியாயப்படுத்த முடியாத விதத்தில் அவர்கள் மக்களைக்
கொல்கின்றனர் என்ற பொருளில் கூறினோம். போரே சட்ட விரோதமானது. கொலை செய்பவர் எவரும்
கொலையாளியே." என்று முனிம் அப்துல் கூறினார்.
சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு (Amnesty
International) பல திட்டுதல் பற்றிய வழக்குகளை பதிவு
செய்துள்ளது என்றும் படையினர் "குழந்தைகளை கொல்லுபவர்கள்" என்று அழைக்கப்பட்டதற்கு காரணம்
பொறுப்பற்ற முறையில் சிறுநகரங்களும், கிராமங்களும் குண்டு வீச்சிற்கு உட்பட்டதுதான் என்று அப்துல் கூறினார்.
லூட்டன் மாவட்ட நீதிபதி
Carolyn Mellanby இந்த வாதங்களை நிராகரித்து,
வெற்றுத்தனமாக " 'நரகத்திற்கு செல்' என்று படையினரை கூறுவது திட்டுதல்கள், அவமதிப்புக்கள் என்றுதான்
சந்தேகத்திற்கு இடமில்லாமல் நான் நினைக்கிறேன்--படையினரை கொலைகாரர்கள், கற்பழிப்பவர்கள்,
குழந்தைகளை கொல்லுபவர்கள் என்று கூறுவதும் அப்படித்தான். படையினரை மட்டும் அவமதிப்பது அல்ல, அன்றைய
தினம் படையினரை தாயகத்திற்கு வரவேற்று பெருமைப்படுத்த தெருக்களில் கூடியிருந்த லூட்டன் மக்களுக்கும்
அவமதிப்புத்தான்."
இந்தத் தீர்ப்பில் தீவிர உட்குறிப்புக்கள் உள்ளன. சுதந்திரமான கருத்துக்கள் சிலருக்கு
ஏற்கவில்லை என்பதாக இருந்தால் சட்டவிரோதம் என்று அறிவிக்கப்படலாம் போலும். தீர்ப்பை அடுத்து, குற்றம்
சாட்டப்பட்டவர்களின் வக்கீல் Sonal Dashani
வோல்டயரின் கருத்தான, "நீங்கள் கூறுவதில் எனக்கு உடன்பாடு இல்லை, ஆனால் நீங்கள் அதைச் சொல்லும்
உரிமை உள்ளது என்பதை உயிரைக் கொடுத்தேனும் காப்பேன்.....தடையற்ற பேச்சுரிமையில் நம்பிக்கை
இருந்தால் நீங்கள் விரும்பும் விஷயங்களை சில நேரம் கேட்பீர்கள், விரும்பாதவற்றையும் சில நேரம்
கேட்கவேண்டியிருக்கும் என்பதை ஏற்க வேண்டும்."
இத்தகைய அடிப்படை ஜனநாயகக் கொள்கைகள் இப்போது தொடர்ந்த
தாக்குதலின்கீழ் வந்துள்ளன. சோசலிஸ்ட்டுக்கள்,
Islam4UK போன்ற வகுப்புவாதக் குழுக்களுக்கு ஆதரவு
கொடுப்பதில்லை. ஆனால் Mellanby
உடைய தீர்ப்பு இன்னும் பரந்த முறையில் மேலைத்தேச சக்திகள் நடத்தும் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பிற்கு எதிர்ப்பை
தணிக்கை செய்தல், குற்றமாக்குதல் போன்ற முயற்சிகளின் ஒரு பகுதியாகும். ஈராக், ஆப்கனிஸ்தான் இன்னும் பிற
இடங்களில் பிரிட்டனின் படைகள் பங்கு பற்றியது பற்றி குறைகூறல் இனி பொறுத்துக் கொள்ளப்பட மாட்டாது.
Wootton Basset
ல் நடந்த
அணிவகுப்புக்கள் இறந்த படையினரின் பிரியத்திற்கு உட்பட்டவர்களுக்கு வருந்துவது, "எம்முடைய பையன்களுக்கு"
ஆதரவு என்ற போர்வையில் அதிக மறைப்பு இல்லாமல் ஒரு போர் ஆதரவு செயற்பட்டியல்தான். இவை பொதுவாகப்
போரைக் குறைகூறுவதை மெளனப்படுத்துவதாக மட்டும் இல்லாமல், நவ காலனித்துவ முறையினால் முக்கியமாக
பாதிக்கப்படும் ஒடுக்கப்பட்ட, வெகுஜன, வறுமை நிறைந்த மக்களுக்கு காட்டப்படும் பரிவுணர்வையும் குறைமதிப்பிற்கு
உட்படுத்துகின்றன. இவற்றின் முக்கியத்துவம், பெரும்பாலான மக்கள் ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் பிரிட்டிஷ் செயற்பாட்டை
எதிர்ப்பதுடன், பிரிட்டிஷ் படையினரின் இறப்பு எண்ணிக்கை அதிகமாவதையும் எதிர்க்கும் நிலையின் கூடிய வெளிப்பாடாகும்.
அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் வன்முறையினால் அடக்குமுறை செய்யப்படுவதை
சுட்டிக்காட்டுவது ஆளும் வர்க்கத்தை பொறுத்தவரை ஏற்கமுடியாததாக உள்ளது; ஏனெனில் ஆப்கானிஸ்தானில்
ஏற்கனவே இருக்கும் பிரிட்டிஷ் துருப்புக்களை பாதுகாக்க கூடுதலான இராணுவ நிலைப்பாட்டிற்கு தேவையான
ஆதரவைத் திரட்ட இது எதிராக உள்ளது. எனவேதான்
Islam4UK அடக்கப்பட்டு, ஐந்து இஸ்லாமியவாதிகள் தண்டனை
பெற்றனர். மத்திய கிழக்கு மற்றும், ஆபிரிக்க நாடுகளில் சட்டவிரோத ஆக்கிரமிப்புக்களினாலும் அவற்றை ஒட்டிய
இறப்பு அழிவு ஆகியவற்றால் நியாமான முறையில் கோபமுற்று சீற்றமடைந்தவர்கள் மெளனமாக இருக்க வேண்டும்
அல்லது குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ள வேண்டும் என்ற எச்சரிக்கையைப் பெறுகின்றனர்.
முஸ்லிம்களில் ஒரு பிரிவினர் இஸ்லாமிய அடிப்படைவாதத்தினால் ஈர்க்கப்படுகின்றனர்
என்பது ஒரு அரசியல் பிரச்சினையே அன்றி, குற்றவியல் பிரச்சினை அல்ல. ஏகாதிபத்திய சக்திகளின் செயல்களுக்கு
அரசியல் முறையில் குழப்பமான எதிர்கொள்ளலை இது வெளிப்படுத்துகிறது; அது இளவயது ஆசிய நாட்டவர்கள்
எதிர்கொள்ளும் சமூக இடர்பாடுகள், இனவெறி ஆகியவற்றால் அதிகமாகின்றது. போர், சமூக சமத்துவமின்மை,
இனவெறி ஆகியவற்றிற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் சோசலிச அரசியல் இயக்கம் இல்லாத நிலையில்,
இத்தாக்குதல்கள் அனைத்திற்கும் ஒரு பெயரளவு தொழிற்கட்சி அரசாங்கம் பொறுப்பாக இருக்கையில், இஸ்லாமிய
பிற்போக்குவாதிகள் தங்களை உண்மையான ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்தி என்று சித்திரித்துக் கொள்ள முடிகிறது.
இவ்விதத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக நடத்தப்படும் காழ்ப்புணர்வு பிரச்சாரம்,
எதிர்க்கட்சிகளும் செய்தி ஊடகமும் முஸ்லிம்கள் உணரும் ஒதுக்கப்பட்ட தன்மையை அதிகரிக்கத்தான் உதவும், இது
பெருகிய ஏமாற்றத்திற்கு வகை செய்யும். இந்த நிலைமை தாராளவாத செய்தி ஊடகமும் பல சிவில் உரிமைகள்
குழுக்களும் முஸ்லிம்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கத் தவறுவதில் இன்னும் மோசமாகும். கார்டியனின் துணை
ஆசிரியர் Michael
White,
"முற்றிலும் தேவை என்றால் அன்றி தடைகள் கூடாது என்பதுதான் என்னுடைய
கருத்து; ஆனால் சில நேரங்களில் ஒரு எல்லைக் கோடு தேவையாகிறது; அதுவும் கோடு இங்கே உள்ளது
என்பதைக் காட்டுவதற்கு" என்றார்.
இதே போல்தான், மனித உரிமைகள் குழு
Liberty யின் இயக்குனர்
Shami Chakrabarti
மிகத் தாழ்ந்த முறையில் அரசாங்கம் பயங்கரவாதிகள் தொடர்பில் "வலுவான சான்றுகளைக் கொண்டிருக்க
வேண்டும்" இத்தகைய தடையை நியாயப்படுத்த, என்று கூறினார்.
உண்மையில் இந்த பெயரளவு தாராளவாதிகள் எதிர்ப்பது "தகவல் கொடுப்பவர்களை"
அல்ல, ஆப்கானிஸ்தானில் பிரிட்டனின் ஏகாதிபத்திய முயற்சிக்கு தங்கள் ஆதரவுடன் முரணாக இருக்கும் "தகவல்"
பற்றித்தான். எனவேதான் வியட்நாம் போர் உச்சக்கட்டத்தில் ஜனாதிபதி லிண்டன் பி. ஜோன்சனை ஒருகாலத்தில்
"திட்டியவர்களில்" சிலர் (அல்லது அத்தகைய "திட்டுதலுக்கு" ஆதரவு கொடுத்தவர்கள்) "ஹே, ஹே,
LBJ, இன்று
எத்தனை குழந்தைகளை கொன்றீர்கள்?' என்று கேட்டவர்கள் இப்பொழுது ஆப்கானிஸ்தானில் அதேபோல் கிட்டத்தட்ட
உண்மையாக நடப்பது பற்றிய கருத்துக்கள் வருவது பற்றிச் சீற்றம் வருவது போல் காட்டிக் கொள்ளுகின்றனர்.
அதேபோல் தாராளவாத செய்தி ஊடகம் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிரான
சீற்றத்தை தூண்டிவிடும் தீவிர வலதுசாரி சக்திகளின் பங்கு பற்றியும் ஏதும் குறிப்பிடவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்களின்
வக்கீல்கள் "இந்த நிகழ்ச்சியில் மற்றய எதிர்ப்பாளர்களும் இருந்தனர்; அவர்கள்
BNP (பிரிட்டின் தேசியக்
கட்சி என்னும் நவ பாசிசக்கட்சி) உறுப்பினர்கள் என்று கருதப்படுகிறது, அவர்கள் தனியே விசாரிக்கப்படுகின்றனர்."
BNP
உடைய வலைத் தளம் கூறுகிறது: "அப்படியானால் முஸ்லிம்கள் போலீசாரால் படையினருக்கு ஆதரவு கொடுப்பவர்கள்
என்று பாதுகாக்கப்பட வேண்டும், சிலர் யூனியன் மற்றும் சென்ட் ஜோர்ஜ் கொடிகளை எடுத்துசென்று, இவர்களை
நோக்கி "இழிந்தவர்கள்", "தாலிபனுக்கு அடிபணிய மாட்டோம்" என்று கூச்சலிட்டனர்."
உத்தியோகபூர்வ நாட்டுவெறியின் பரப்பானது பண்பாட்டு, சமூக வாழ்வில் அது குறுக்கிடுவது
மற்றும் கண்காணிப்புக்கள் மற்றும் அடக்குமுறைகள் என்று இங்கிலாந்தின் மூன்று சதவிகித மக்களான முஸ்லிம்களுக்கு
எதிராக நடத்தப்படுவது இணையற்ற முறையில் உள்ளதோடு சீற்றத்தையும் அளிப்பது ஆகும்.
தொழிலாள வர்க்கமும் ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்படுவதில் கவனம்
உடையவர்களும் அரசியல் அளவில் முன்வந்து பிரிட்டனிலும் ஐரோப்பா முழுவதும் முஸ்லிம்களுக்கு எதிராக இழைக்கப்படும்
தாக்குதல்களை எதிர்த்து போராடுதல் முக்கியமாகும். அரசாங்கம் மற்றும் செய்தி ஊடகமானது மத, இனவழி
சிறுபான்மையினரை துன்புறுத்துதல் என்பது எதிர்ப்பில்லாமல் போகக் கூடாது என்பது ஒரு கொள்கையாக இருக்க
வேண்டும். அத்தகைய எதிர்த்தாக்குதல் ஒரு சோசலிச அடிப்படையில் நடத்தப்படாவிட்டால், இராணுவவாதம் மற்றும்
போர், அடிப்படை சிவில் உரிமைகைளுக்கு எதிராக நடக்கும் அத்துமீறல்கள்மீது உண்மையான சக்திவாய்ந்த
போராட்டம் நடத்தப்பட முடியாது.