World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan Tamil political prisoners stage hunger strike to demand their release

இலங்கைத் தமிழ் அரசியல் கைதிகள் அவர்களின் விடுதலைக்காக உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகின்றனர்

By Saman Gunadasa
23 January 2010

Use this version to print | Send feedback

இலங்கையில் நூற்றுக்கணக்கான தமிழ் அரசியல் கைதிகள் ஜனவரி 14ம் திகதி அரசாங்கம் அவர்களின் கோரிக்கையை கவனிப்பதாக "உறுதியளித்ததை" அடுத்து எட்டு நாட்களாக நடத்தி வந்த உண்ணாவிரதப் போராட்டத்தை இடைநிறுத்தியுள்ளார்கள்.

உண்ணாவிரதப் போராட்டக்காரர்கள் தம்மை விடுதலை செய்ய வேண்டும் அல்லது நியாயமான முறையில் விரைவாக விசாரணை நடத்தப்பட்டு அவர்கள் மீது ஏதேனும் குற்றச்சாட்டுக்கள் இருந்தால் அதற்கு விடையளிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என அரசாங்கத்தை கோரியுள்ளனர். கொழும்பு, அனுராதபுரம், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் 774 கைதிகள் இந்த எதிர்ப்பில் கலந்து கொண்டனர்.

இரு மாதங்களுக்குள் கைதிகளின் கோரிக்கைகளை கவனிப்பதாக ஜனாதிபதி மகிந்த இராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். ஆளும் கட்சியின் வேட்பாளராக ஜனவரி 26 தேர்தலில் நிற்கும் இராஜபக்ஷ தமிழ் மக்களின் எதிர்ப்பிற்கும் கோபத்திற்கு ஒரு குவிப்பு கவனம் கொடுக்கக்கூடும் என்ற அச்சத்தில் எதிர்ப்பின் தன்மையை குறைக்க ஆர்வத்துடன் இருந்தார்; தமிழ் மக்களோ கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்கள் நீடித்த போர், தொடர்ந்த வகுப்புவாத அடக்குமுறையின் கொடூரத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இராஜபக்ஷவின் உறுதிமொழி அவரையும் அவருடைய அரசாங்கத்தையும் எதற்கும் கட்டுப்படுத்தவில்லை; கைதிகளை விடுவிக்கவோ, அவர்கள் பயங்கரவாதிகள் என்று அரசாங்கத்தின் கூற்றை மறுப்பதற்கு ஒரு வாய்ப்பைக் கொடுக்கவோ இல்லை.

தடுப்புக்காவலில் இருக்கும் இக்கைதிகளை தவிர, இலங்கை அரசாங்கம் பல்லாயிரக்கணக்கான தமிழர்களை நாடெங்கிலும் இருக்கும் தடுப்பு காவல் நிலையங்களில் சிறை வைத்துள்ளது. ஜூலை 2006ல் நாட்டை முழுப் போரில் இராஜபக்ஷ அரசாங்கம் ஈடுபடுத்தியபின் இத் தடுப்பு நிலையங்கள் தீவிரமாயின.

கைதிகள் நாட்டின் கடுமையான பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் (PTA) பிடித்து வைக்கப்பட்டுள்ளனர்.

இச்சட்டம் பாதுகாப்பு அமைச்சரகத்தின் செயலாளரை பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர் எனச் சந்தேகிக்கப்படும் நபரை குற்றம் சாட்டாமல் 18 மாதங்களுக்கு காவலில் வைக்க உத்தரவிடும் அதிகாரத்தைக் கொடுத்துள்ளது. அதன்பின், காவலில் இருப்பவர்கள் ஒரு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட வேண்டும்; ஆனால் நீதித்துறையுடன் இணைந்து போலீஸ் விசாரணைக்கு முந்தைய நடவடிக்கைகளை கிட்டத்தட்ட முடிவில்லாமல் இழுத்தடிக்கலாம்; இதன் பொருள் பல ஆண்டுகள் நிரூபணம் ஆகாத குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் எந்தவித சட்டப் பரிகாரத்திற்கும் இடமின்றி ஒரு நபர் காவலில் வைக்கப்பட முடியும். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் அரசாங்க வக்கீல்களை சந்தேகத்திற்கு உரியவர்களின் "ஒப்புதல் வாக்குமூலம்" பெற அனுமதிக்கிறது. இது இலங்கை பாதுகாப்புப் பிரிவுகளுக்கு ஒரு தூண்டுதல் என்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை--அவையோ சித்திரவதையை பயன்படுத்துவதில் இகழ்வு பெற்றவைகள்; இதையொட்டி பொய் ஒப்புதல் வாக்குமூலங்கள், திட்டமிட்டு தயாரிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் ஆகியவை நடத்தப்பெறும்.

இலங்கையின் சிங்கள உயர்தட்டினரின் வன்முறையுடன் கூடிய வகுப்புவாத பாகுபாடானது ஏராளமான தமிழ் இளைஞர்களை அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதமேந்தத் தூண்டியது. இதை எதிர்கொள்ளும் விதத்தில் உயர்தட்டினர் போராட்டத்தை முறியடிக்க இன்னும் திட்டமிட்ட வகைகளில் தமிழ் மக்களின் உரிமைகளை மீறியது; அதாவது விசாரணையின்றி, காலவரையறையின்றி ஏராளமான மக்கள் காவலில் வைக்கப்பட்டதும் அடங்கும்.

அரசாங்கம் காவலில் உள்ளவர்களை அரசியல் கைதிகள் என்று பெயரிடாமல் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய எவரையும் "பயங்கரவாதிகள்" என்று குற்றஞ்சாட்டி முத்திரையிட்டது. ஆனால் இத்தடுப்புக் காவலில் உள்ளவர்கள்மீது விசாரணை நடத்துவதில் அரசாங்கம் தோல்வி அடைவது அவர்களுக்கு எதிராக நம்பிக்கையான சான்றுகள் போலீஸிடம் இல்லை என்பதைத்தான் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய கைதிகள் தங்கள் முந்தைய முறையீடுகள் புறக்கணிக்கப்பட்டுவிட்டன, இல்லாவிடில் பேச்சளவில் ஒப்புக் கொள்ளப்பட்டாலும், செயல்படுத்தப்படவில்லை என்றும் கூறியுள்ளனர். கடந்த ஆண்டு கைதிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நான்கு முறை உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தினார்கள்.

சமீபத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு முன் செய்தி ஊடகத்திற்கு 35 கைதிகள் எழுதிய கடிதத்தில், "எந்தவித விசாரணை அல்லது சட்டபூர்வ நடவடிக்கையும் இல்லாமல் ரிமாண்ட் சிறையில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளாகிய நாங்கள் ஜனவரி 6ம் தேதி காலை 6 மணியில் இருந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளோம். PTA மற்றும் அவசரகால விதிகளின்கீழ் போலீசாரால் தவறான குற்றச்சாட்டுக்களின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள நாங்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் அல்லது பிணையில் விடுவிக்கப்பட வேண்டும் அல்லது பொது மன்னிப்பு கொடுக்கப்பட வேண்டும் என்று கோருகிறோம்.

உண்மையில் போராளிக் குழுக்களுக்கு தலைமை தாங்கியிருந்த நபர்களுக்கு அரசாங்கத்தில் உயர்ந்த பதவிகள் கொடுக்கப்பட்டிருக்கையில், போராட்டத்துடன் எவ்விதத் தொடர்பும் அற்ற நாங்கள் ஏன் தவறான குற்றச்சாட்டுக்களுக்கு உட்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்? எங்கள் குடும்பங்களை இழந்துவிட்டோம், எங்களுக்கு கல்வி இல்லாமல் போய்விட்டது, இப்பொழுது தனிமையில் எவரும் இல்லாமல் வாடுகிறோம்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அவர்கள் குறிப்பிடும் இரு தமிழ் தலைவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் கிழக்கு மாகாண தலைவர்களான வி. முரளிதரன் (கருணா அம்மான் என்றும் அறியப்பட்டவர்), மற்றும் சிவநேசதுரை சந்திரகாந்தன் அல்லது பிள்ளையான் ஆவார். இருவரும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து விலகி அதை அழிப்பதற்கு எதிரான போரில் இலங்கை இராணுவத்தை ஆதரித்தனர். அதற்கு வெகுமதியாக கருணாவிற்கு கபினெட் மந்திரி பதவி கிடைத்தது, பிள்ளையான் கிழக்கு மாகாணத்தின் முதல் அமைச்சராக வருவதற்கான உதவியைப் பெற்றார்.

கைதிகளில் ஒருவர் 52 வயதான கே.தேவதாசன் ஆவார். முன்னாள் அரசாங்க திரைப்பட நிறுவனத்தின் இயக்குனரான இவர் ஏப்ரல் 2008ல் கொழும்பிற்கு அருகில் உள்ள Kotahena வில் ஒரு வெள்ளை வானில் வந்த அடையாளம் தெரியாத நபர்களாலோ அல்லது பாதுகாப்புப் பிரிவினராலோ கடத்தப்பட்டார்.

கொழும்பில் New Magazine Prison ல் காவலில் வைக்கப்பட்டிருந்த அவர், அதிகாரிகள் அவரை விடுவிக்க வேண்டும் அல்லது விரைவில் அவர்மீது விசாரணை நடத்த வேண்டும் என்னும் அவரது கோரிக்கையை வலியுறுத்துவதற்காக தன்னுடைய உண்ணாவிரதப் போராட்டத்தை ஜனவரி 1ம் தேதி மற்றவர்களைக்காட்டிலும் சில நாட்கள் முன்னதாகவே ஆரம்பித்தார்.

தமிழர்களை, குறிப்பாக கொழும்பில் கடத்துதல் என்பது கடந்த நான்கு ஆண்டுகளில் மிக அதிகமாகிவிட்டது.

தமிழர்கள் இராணுவத்தினரால் கைது செய்யப்படுகின்றனர், அல்லது பிற அரசாங்க படைகளாலோ அல்லது அரசாங்க சார்பு துணைப் படைகளாலோ மிருகத்தனமாக நடத்தப்பட்டபின் போலீசாரிடம் தடுப்புக்காவலுக்கு ஒப்படைக்கப்படுகின்றனர். இந்த அச்சுறுத்தும் நடவடிக்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளை குறைகூறும் செய்தி ஊடக நபர்கள்மீதும் விரிவாக்கப்படுகிறது. சில சிங்கள தொழிற்சங்க தலைவர்களும் கடத்தப்பட்டுள்ளனர்; அரசாங்கம் சந்தேகத்திற்குரிய குற்றச்சாட்டாக அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்தனர் என்று கூறுகிறது.

இராஜபக்ஷ தமிழ் தடுப்புக்காவல் கைதிகள் பிரச்சினையை கவனிப்பதாக உறுதிகூறுவதற்கு சற்று முன் சட்ட அமைச்சர் மிலிந்தா மோரகோடா விரைவில் ஒரு தீர்வு காணப்படும் என்றார். ஆனால் அரசாங்கமானது அவர்கள் அரசியல் கைதிகள் அல்ல, பயங்கரவாதிகள் என்று தொடர்ந்து வலியுறுத்துகிறது.

ஒரு கபினெட் அமைச்சரும், பல தமிழ் தோட்டத் தொழிலாளர்களை பிரதிநிதித்துபடுத்தும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (CWC) இன் தலைவருமான ஆறுமுகம் தொண்டமான் ஜனவரி 20ம் தேதி நுவரெலியாவில் நடந்த செய்தியாளர் மாநாட்டில் தோட்டத்தில் வேலை செய்யும் இளைஞர்கள் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவலில் இருப்பவர்கள் முன்பு விடுதலை செய்யப்பட்டுவிட்டனர் என்றும், மற்றும் 50 பேர் அன்று விடுதலை செய்யப்படுவர் என்றும் 28 மற்றய கைதிகள் புனர்வாழ்வு நிலையங்கள் என்று அழைக்கப்படுவதற்கு அனுப்பப்படுவார்கள் என்றும் கூறினார். (இந்தக் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனரா என்பது பற்றி உடனடியாகத் தெளிவாகத் தெரியவில்லை.) போர் முடிந்த நிலையில், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் விற்றுவிடும் ஒப்பந்தத்திற்கு பெருகிய எதிர்ப்பு வந்துள்ள நிலையில், தொண்டமான் காவலில் இருப்பவர்கள் சார்பாக தலையீடு செய்ய, புதிய அழுத்தத்தைப் பெற்றுள்ளார்.

தோட்டங்களில் இருந்த பல இளைஞர்கள் போர் தசாப்தங்களில் கைது செய்யப்பட்டிருந்தனர். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர்கள் இந்த இளைஞர்களை போலீசார் கைது செய்ய உதவினார்கள், தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்கள் பட்டியலைக் கொடுத்தனர் என்றும் தொழிலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். உண்மையில் இந்த இளைஞர்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. தங்கள் உரிமைகளுக்காக போராடிய, தொழிற்சங்கங்களின் காட்டிக் கொடுப்புக்களை எதிர்த்த தோட்டத் தொழிலாளர்களையும் அவர்கள் குடும்பங்களையும் மிரட்டுவதற்காக இவர்கள் காவலில் வைக்கப்பட்டனர்.

ஆயிரக்கணக்கான தமிழ் கைதிகள் தெற்கு இலங்கையில் பூசாவில் பல காலமாக அவர்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கு அறிவிக்கப்படாமலும் காவல் நிலையங்களில் வைக்கப்பட்டிருகின்றனர். கொழும்பில் உள்ள மனித உரிமைகள் குழு தயாரித்து யாழ்ப்பாணத்திலுள்ள மனித உரிமைகள் குழுவிற்கு அனுப்பப்பட்ட அறிக்கை ஒன்றின்படி, 50 பெண்கள் உட்பட 800 இளைஞர்கள் வெள்ளை வான்களில் கடத்தப்பட்டனர் அல்லது வன்னியில் உள்ள இராணுவத்தினரால் பூசாவில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். சில நாட்களுக்கு முன்பு வெள்ளை வான் கும்பலால் கடத்தப்பட்ட ஒரு பெண்ணான பட்டப்படிப்பு படிக்கும் இராசையா துவாரகாவின் பெற்றோர் அப்பெண்ணை பூசாவில் இருந்ததைக் கண்டுபிடித்தனர்.

இத்தடுப்புக் காவல்களை தவிர, ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் போர் முடிந்தபின் வவுனியாவில் நிறுவப்பட்டுள்ள வெகுஜன தடுப்புக் காவல் முகாம்களில் நீண்ட காலம் காவலில் வைப்பதற்கு ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். Amnesty International கருத்தின்படி கிட்டத்தட்ட 12,000 இளைஞர்கள் --அரசாங்கத்தின் பார்வையில் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள்-- நீண்டகால காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் செஞ்சிலுவை சங்கம் அத்தகைய இளைஞர்கள் 2,000 பேருடன்தான் தான் தொடர்பு கொள்ள முடிந்தது என்று புகார் கூறியுள்ளது. அவர்களை நடத்துவது பற்றி தமிழர்களிடையே உள்ள பெரும் சீற்றத்தைத் தணிக்கும் விதத்தில் அரசாங்கம் இந்த இளைஞர்களில் சில டஜன் பேரை சமீபத்திய வாரங்களில் விடுவித்தனர்.

ஒரு 10-அம்ச மனித உரிமைகள் செயற்பட்டியலையும் Amnesty International வெளியிட்டுள்ளது; இதில் ஆளும் உயரடுக்கின் இரு முக்கிய ஜனாதிபதி வேட்பாளர்களும் --இராஜபக்ஷ மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும்-- செயற்பட்டியலைப் பின்பற்றுமாறு கோரப்பட்டுள்ளனர். இதில் "ஒருதலைப்பட்சமான கைது மற்றும் நெருக்கடிச் சட்டத்தின்கீழ் தடுப்புக் காவல் ஆகியவற்றிற்கு" முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

இத்தகைய முறையீடுகளினால் எந்தப் பயனும் இருக்காது. போர் முடிந்த ஒவ்வொரு மாதமும் பிரதம மந்திரி ரத்னசிறி விக்கிரமநாயக்க "பயங்கரவாத அச்சுறுத்தல்" தொடர்கிறது என்று அறிவிக்கிறார்; பின்னர் பாராளுமன்றம் அவசரகால விதிகளை நீடிக்க வேண்டும் என்று கோருகிறார். அரசாங்கமும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் திரும்பப்பெறமாட்டாது என்று வலியுறுத்தியுள்ளது. இந்த ஜனநாயக எதிர்ப்பு நடவடிக்கைள் தொடர்ந்து அமுலில் இருக்க வேண்டும் என்று அரசாங்கம் பிடிவாதமாக இருப்பதற்குக் காரணம் அது உள்நாட்டுப் போரின் செலவையும் உலகப் பொருளாதார நெருக்கடியின் இழப்பையும் தொழிலாள வர்க்கத்தின்மீது கடுமையான சமூகச் செலவினக் குறைப்புக்கள் மூலம் சுமத்துவதால் வரக்கூடிய வெகுஜன சமூக எதிர்ப்பை அது எதிர்பார்க்கிறது.

தளபதி பொன்சேகா தன்னுடைய தேர்தல் அறிக்கையில் நெருக்கடிக்கால சட்டங்களை "திருத்தியபின்" தக்க வைத்துக் கொள்ள இருப்பதாகக் கூறியுள்ளார். காவலில் இருப்பவர்கள் பிரச்சினை பற்றி, "பயங்கரவாதத் தொடர்புடையவர்கள் அனைவரும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவர், புனர்வாழ்வு அளிக்கப்படும் அல்லது விடுவிக்கப்படுவர்" என்று வலியுறுத்தினார்.

சிங்கள பேரினவாத ஜனதா விமுக்தி பெரமுனா (JVP) மற்றும் வலதுசாரி ஐக்கிய தேசிய கட்சி (UNP) இரண்டும் பொன்சேகாவின் நிலைப்பாட்டிற்கு முழு ஆதரவு கொடுக்கின்றன. ஜனவரி 10ம் தேதி நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் JVP பாராளுமன்ற உறுப்பினர் அனுரா குமார திசநாயகே கூறினார்: "அரசாங்கம் இவர்கள் மீது குற்ற வழக்கை தொடர வேண்டும் (தமிழ் அரசியல் கைதிகள் மீது) அல்லது புனர்வாழ்வு அளித்து விடுவிக்க வேண்டும்."

JVP அதன் ஆதரவை மொத்த கைதுகள், இளம் தமிழர்களை காலவரையறையற்று காவலில் வைப்பது ஆகியவற்றிற்கு கொடுத்தது. இப்பொழுது அது தளபதி பொன்சேகாவிற்கு ஆதரவு கொடுத்து அவரை ஒரு ஜனநாயகவாதி என்று சித்தரிக்கும்போது தன் நிலைப்பாட்டைச் சற்று மாற்றிக் கொண்டுள்ளது. ஆனால் அது தொடர்ந்து அரசாங்கம் ஒருதலைப்பட்சமாக கைது செய்தல், நினைப்பவரை பயங்கரவாதி என முத்திரையிட்டு நீண்ட காலக் காவலில் வைப்பதற்கான "உரிமைக்கு" ஆதரவு கொடுக்கிறது.

தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் தீவின் தமிழ் மக்கள், நெருக்கடி உட்பட்ட இலங்கை ஆளும் தட்டினர் அல்லது அதன் பிரிவுகளின் ஜனநாயக தொடர்புடைய வனப்பு சொற்றொடர்களை பற்றி பிரமை ஏதும் கொண்டிருக்கவில்லை. அவை அனைத்தும் வகுப்புவாதப் போருக்கு ஆதரவு கொடுக்கின்றன, பெரும் இராணுவ நிலைப்பாட்டை விரும்புகின்றன, அதிகம் போனால் அரசாங்க அடக்குமுறைக் கருவியில் சில பூச்சு மாற்றங்களைத்தான் கோருகின்றன.

சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் அதன் ஜனாதிபதி வேட்பாளர் விஜே டயஸ் அனைத்து அரசியல் கைதிகளும் உடனடியாக, நிபந்தனையற்ற முறையில் விடுவிக்கப்பட வேண்டும் என்று கோருகின்றனர்.

ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின்மூலம் சோசலிச சமத்துவக் கட்சி ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டம், பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் அவசர கால சட்டங்கள் என்பதை அகற்றுதல் என்பது தற்போதைய சர்வாதிகார, இனப் பாகுபாடு காட்டும் அரசியல் அமைப்பை அகற்றுவதுடன் பிணைந்துள்ளது என்றும், தெற்கு ஆசியா மற்றும் சர்வதேச அளவில் சோசலிசத்திற்கான போராட்டத்திற்கான ஒரு பகுதியாக தொழிலாளர், விவசாயிகள் அரசாங்கம் அமைப்பதற்கான போராட்டத்துடன் பிணைந்ததாக இருக்கிறது.