World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

European bankers demand unprecedented austerity measures

ஐரோப்பிய வங்கியாளர்கள் முன்னோடியில்லாத கடும் சிக்கன நடவடிக்கைகளைக் கோருகின்றனர்

Stefan Steinberg
19 January 2010

Back to screen version

தேசிய திவால்தன்மையின் விளிம்பில் இருக்கும் தங்கள் நாடுகள் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை மக்கள்மீது சுமத்த வேண்டும் என்று ஐரோப்பிய வங்கியாளர்கள் கோருகின்றனர்.

செப்டம்பர் 2008 உலக நிதிய கரைப்பை எதிர்கொள்ளும் விதத்தில், முதலாளித்துவ அரசாங்கங்கள் உலகம் முழுவதும் தம் வங்கி உயரடுக்குகளின் கடன்களை ஏற்றன; அவையோ ஊக, ஆபத்து முறை மற்றும் மோசடியை மகத்தான முறையில் கொண்டு அடையப்பட்டவை.

எல்லா இடங்களிலும் பெரிய வங்கிகள், "மிகப் பெரியவை, தோல்வி அடையாது" என்று கருதப்பட்டன. இவ்விதத்தில் தேசியக் கருவூலங்கள் கொள்ளையடிக்கப்பட்டதை அடுத்து பங்குச் சந்தை மதிப்புக்களில் எழுச்சி ஏற்பட்டதுடன் முக்கிய வங்கிகளுக்கு மகத்தான இலாபங்கள் ஒரு புறம் ஏற்பட்டதுடன், வேலைகள், ஊதியங்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்கள் மறுபுறம் இரக்கமின்றி தாக்குதலுக்கு உட்பட்டன.

அரசாங்கக் கடன்கள் வங்கிகள் பிணை எடுப்புத் தொகுப்புக்களை ஒட்டி பெருகியதைப் பற்றி சமீபத்தில் பிரிட்டிஷ் பைனான்ஸியல் டைம்ஸில் ஒரு கட்டுரை குறிப்பிட்டதாவது: "சமாதான காலத்தில் தற்போதைய வேகம் மற்றும் பொதுக்கடன் கூடியிருப்பதற்கு முன்னோடி ஏதும் இல்லை.... உயர்ந்த கடன் தரங்களையொட்டி சமூக சகித்துக் கொள்ளும் தன்மையை மதிப்பிடுவது கடினம், மேலும்..... நிதியத் தட்டுப்பாட்டின் நீடித்த வேதனையும் உள்ளது. பல ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின், நுழைவாயில் ஏற்கனவே தகர்க்கப்பட்டுள்ளது. தேசிய இறைமை தாமதமாக பணம் கொடுக்கும் என்னும் பேய் உரு, மீண்டும் செல்வம் படைத்த உலகுக்கு வந்துவிட்டது."

அதிக அளவு கடன்கள் உடைய நலிந்த பொருளாதாரங்கள் என்று வரும்போது, ஐரோப்பிய வணிகர்களும் அரசியல் தலைவர்களும் பிணை எடுப்பிற்கு எதிர்ப்பு என்பனதை தெளிவுபடுத்தியுள்ளனர். மாறாக இந்நாடுகள் உடையக்கூடிய அளவிற்கு "சமூக சகித்துக் கொள்ளும் தன்மையை" அதிகப்படுத்தும் விதத்தில் "வேதனையை" சுமத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த வாரம் ஐரோப்பிய மத்திய வங்கி (ECB) யின் தலைவர் Jean-Claude Trichet நோய்வாய்பட்டிருக்கும் கிரேக்கப் பொருளாதாரம் "எந்த சிறப்பு வசதியையும்" அதன் முடக்கும் தர கடன்களை சமாளிக்க உதவப்பட மாட்டாது என்று கூறினார். மேலும் யூரோப்பகுதியில் உள்ள மற்ற அதிக கடன்பட்ட நாடுகளையும் "சந்தை உணர்வில் விரைவான மாறுதல்கள்" வரும் என்றும் அச்சுறுத்தினார்; இதன் பொருள் அவற்றின் கடன்களுடைய மதிப்புக்கள் குறைக்கப்படும், அதையொட்டி அவை மூலதனச் சந்தையில் கடன் பெறும்போது மிகஅதிக வட்டி கொடுக்க வேண்டும் என்பதாகும்.

ECB யின் சமரசத்திற்கு இடமில்லாத நிலைப்பாடு கிரேக்கத்திற்கு எதிராக எடுக்கப்பட்டிருப்பது ஐரோப்பாவின் மிகப் பெரிய பொருளாதாரமான ஜேர்மனியின் ஆதரவைப் பெற்றுள்ளது; அதுதான் அரசாங்கப் பற்றாக்குறைகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவிகிதத்திற்கு மேல் இருக்கக்கூடாது யூரோப்பகுதியில் உறுப்பினராகும் நிபந்தனை என்று கொண்டு வந்ததற்கு உந்துதல் சக்தியாகும்.

Trichet உடைய கருத்துக்கள் சில நாட்களுக்கு பின்னர் யூரோப்பகுதியின் தலைவர் Jean-Claude Juncker ஆல் ஆதரிக்கப்பட்டன; ஐரோப்பிய நிதி மந்திரிகளுக்கு எழுதிய கடிதத்தில் அவர், "ஐரோப்பியக் குழு, தரங்களையும் உறுதிப்பாடுகளையும் மதிக்காத உறுப்பு நாடுகளுக்கு எச்சரிக்கை அளிக்கத் தயங்காது" என்று கூறியுள்ளார்.

கிரேக்கம் தற்பொழுது அயர்லாந்துடன் யூரோப்பகுதியிலேயே மிக அதிக வரவு-செலவு திட்ட பற்றாக்குறை இருக்கக்கூடிய நாடு என்று இணைக்கப்பட்டுள்ளது--12.5% மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (அதாவது யூரோப்பகுதி உறுப்பு நாடுகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள உச்ச வரம்பைப்போல் நான்கு மடங்கிற்கும் மேல்). கடந்த காலத்தில் கிரேக்க பொருளாதார தகவல்கள் மிகவும் நம்பிக்கையற்று இருந்தன; சில ஆதாரங்கள் நாட்டுக் கடன்களின் உண்மைத் தரம் 2009 ல் 14.5 சதவிகிதத்தை ஒட்டி இருக்குமென்று அறிவித்தன. ஸ்பெயின் மூன்றாம் இடத்தில் உள்ளது; அதன் வரவு-செலவு திட்ட பற்றாக்குறை 11.2% இருக்கக்கூடும் என்ற கருதப்படுகிறது; இதைத் தொடர்ந்து பிரான்ஸ் (8.3 சதவிகிதம்), போர்த்துக்கல் (8.0 சதவிகிதம்) ஆகியவை உள்ளன.

ஐரோப்பாவில் "இத்தகைய தொகுப்புமுறை", எல்லா நாடுகளுக்கும் மேலாக கடன் விகிதங்கள் அதிகமாயுள்ள நாடு ஐஸ்லாந்து ஆகும். இது யூரோப்பகுதியில் ஒரு பிரிவு ஆகாது; ஆனால் அதன் பொருளாதாரம் பெரும் ஒதுக்கு நிதியாக (Hedge Fund) ஐரோப்பிய பொருளாதார பகுதியின் நிதியச் சந்தைகளுக்கு மாற்றப்பட்டது. கடந்த ஆண்டு ஐஸ்லாந்துக் குமிழச் சரிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து இரு கடன் கொடுத்த நாடுகள் கிரேட் பிரிட்டனும், ஹாலந்தும் தாங்கள் இழந்த முதலீடுகளான 4 பில்லியன் யூரோக்கள் திருப்பித் தரப்பட வேண்டும் என்று கோரியுள்ளன. இந்தத் தொகை சிறிய ஐஸ்லாந்தின் பொருளாதாரத்தின் தற்போதைய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50 சதவிகிதத்தை பிரதிபலிக்கிறது.

கிரேக்கத்தில் PASOK சமூக ஜனநாயக அரசாங்கம் ஏற்கனவே நாட்டின் பற்றாக்குறையை 2012க்குள் ஐரோப்பிய ஒன்றிய வரம்பிற்குள் குறைக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது (அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவிகிதத்திற்குள் என). இத்திட்டத்தில் நாட்டின் சுகாதாரப் பாதுகாப்பு முறையில் வெட்டுக்கள் மற்றும் அதன் வரி முறையில் திருத்தம் ஆகியவை அடங்கும்; அதில் அடிப்படைப் பொருட்களான புகையிலை, மது ஆகியவற்றின் மீதும் அதிக வரிகள் போடப்படுதல் அடங்கும். இவைதான் பதவிக்கு வந்த பின் பிரதம மந்திரி Geoorge Papandreou உறுதியளித்த "வேதனை கொடுக்கும் " நடவடிக்கைகள் ஆகும்; இவை சாதாரண கிரேக்க மக்களுடைய வாழ்க்கைத் தரங்களில் முக்கிய தாக்கங்களைக் கொடுக்கும்.

ஜனவரி 14 அன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் அரசாங்க திட்டத்தைக் கோடிட்டுக் காட்டிய நிதி மந்திரி George Papaconstantinou அறிவித்தார்: "எமது இலக்கை எவ்விதத்திலும் அடைவோம்." கிரேக்கத் திட்டங்களுக்கு ECB மற்றும் நிதியச் சந்தைகள் கடந்த வாரம் காட்டிய எதிர்மறை விளைவைத் தொடர்ந்து, Papaconstantinou தான் "ஒரு துணை வரவு-செலவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தத்தயார் என்றும் அதில் கூடுதல் நடவடிக்கைகளை முன்வைக்கத் தயார்" என்றும் கூறினார்.

ஐரோப்பிய கமிஷன் மற்றும் சர்வதேச வங்கிகளின் ஆணைகளுக்கு இத்தகைய தாழ்ந்து போகும் தன்மையில் இருந்தாலும், இவை போதாது என கருதப்படுகின்றன. ஐரோப்பிய வங்கியாளர்களும் அரசியல் தலைவர்களும் இன்னும் கடுமையான சிக்கன நடவடிக்கைகள் கடன்பட்டுள்ள நாடுகளால் எடுக்கப்பட வேண்டும் என்று கோருகின்றனர் --அவை சம்பந்தப்பட்ட நாடுகளில் சமூக ஸ்திரப்பாட்டை அச்சுறுத்தினாலும் அவை சரி என்கின்றனர். அரசாங்கங்கள் நிதிய உதவியை சர்வதேச அல்லது ஐரோப்பிய வங்கிகளிடம் இருந்து பெறுதல் என்பது முன்னோடியில்லாத வகையில் அவை சிக்கன நடவடிக்கைகளை கடைபிடிக்கத் தயார் என்ற உறுதிப்பாட்டை ஒட்டியும், அதையொட்டிய அரசியல் விளைவுகளை எதிர்கொள்ளுவதிலும்தான் இருக்கும்.

இதே அடிப்படை நெறிகள், உயர்ந்த கடன்கள் தரத்தைக் கொண்ட அரசாங்கங்களுக்கு மட்டும் அல்ல அனைத்து மேலை அரசாங்கங்களுக்கும் பொருந்தும்.

சமீபத்தில் பைனான்சியல் டைம்ஸில் "நிதியம் அளித்தல், தேசப்பற்று சோதனை" என்ற தலைப்பில் வந்த கட்டுரை ஒன்றில் இது தெளிவாக்கப்பட்டுள்ளது. பைனான்ஸியல் டைம்ஸின் கட்டுரையாளர் Gillian Tett தனி நாடுகளுக்கு உண்மையான சவால் வங்கியாளர்கள் கோரும் வரவு-செலவுத் திட்ட குறைப்புக்களை செயல்படுத்துதல் என்றும் "சமூக ஒப்பந்தத்தையே மாற்றி எழுதுவதுபோல்" என்றும் இது புரட்சியைத் தூண்டாமல் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

டெட் எழுதுகிறார்: "வரும் ஆண்டுகளில் சம அளவில் முக்கியமானது கடன்களின் அளவு மட்டும் இல்லை, அரசாங்கங்கள் பகுத்தறிவார்ந்த, திறைமையான வழிவகைகளில் அதைக் குறைக்க முடியுமா என்பதும் ஆகும்-- மோசமான முறையில் முழுப் புரட்சி ஏற்படாமல் இருக்க வேண்டும் என்ற விதத்தில், வேதனையை திறனான முறையில் ஒதுக்குதல், அரசியல் ஸ்திரமற்ற தன்மையை அதிக அளவில் கட்டவிழ்த்து விடாமல் இருக்க வேண்டும்."

டெட், ஐஸ்லாந்து வாக்களார்கள் தங்கள் அரசாங்கத்தின் திட்டங்களாக கடனை வரி செலுத்துபவர்கள் இழப்பில் திருப்பிக் கொடுப்பதை தகர்க்க வாக்களிப்பர் என்றும் பிரிட்டிஷ் அரசாங்கம் புதிய பெரும் வரவு-செலவுத் திட்ட குறைப்புக்களை தேர்தல் ஆண்டில் கொண்டுவரும் தைரியத்தை உடையதா என்றும் ஊக வினா எழுப்புகிறார். "சமூக ஐக்கியப்பட்ட தன்மை மற்றும் தேசப்பற்று இங்கிலாந்தில் சிதைந்துவருகிறது", இதன் பொருள் "விடை தெரியவில்லை என்பதுதான்" என்று அவர் எச்சரித்துள்ளார். முடிவுரையாக, "ஆனால் முக்கிய விஷயம் இதுதான்: கடந்த இரு ஆண்டுகள் உலக நிதியச் சந்தைகளுக்கு நெருக்கடிச் சோதனைக்காலம் என்றால், அடுத்த இரண்டு ஆண்டுகளும் மேற்கு அரசாங்கங்களின் அமைப்பு முறைக்கு சோதனையாக அமையும்."

Trichet, Juncker மற்றும் பலரும் கோரும் சமூகத் தாக்குதல்கள் தவிர்க்க முடியாமல் வர்க்க அழுத்தங்களை பெருக்கி தீவிர அரசியல் உறுதியற்ற தன்மைக்கு கண்டம் முழுவதையும் இழுத்துச் செல்லும். மேற்கூறிய குறிப்புக்கள் தெளிவாக்குவது போல் அவை ஜனநாயக உரிமைகள் மீது தாக்குதல்களை தீவிரமாக்குவதுடன், அரசாங்க அடக்குமுறையையும் அதிகமாக்கும்.

அதே வேளை, ஐரோப்பிய ஒன்றியத்தையே சிதைக்கும் அச்சுறுத்தல் கொண்ட பிரிவினை அழுத்தங்களுக்கு அவை எரியூட்டும். எந்த நாடாவது வரவு-செலவு திட்ட நடவடிக்கைகள் தரத்தை செயல்படுத்த வங்கிகள் கோருவதைப் போல் இயலாமல் போனால், கடன்களை கட்டுவதில் தேக்கம் ஏற்பட்டால், அதற்கு சங்கிலித் தொடர்போன்ற பின்விளைவும் பாதிப்பும் மற்ற நலிந்துள்ள பொருளாதாரங்களின் மீது உருவாகும்; அது யூரோ நாணயத்தின் நிலைத்திருக்கக்கூடிய தன்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும்.

ஐரோப்பிய தொழிலாள வர்க்கம் ஒரு புதிய புரட்சிகரப் போராட்ட கட்டத்திற்குள் நுழைந்து கொண்டிருக்கிறது. வங்கிகளின் வர்க்கப் போர் திட்டத்தை இது தன்னுடைய வேலைத்திட்டத்தின் மூலம் எதிர்க்க வேண்டும்; அது ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளை நிறுவும் முன்னோக்கினை அடித்தளமாகக் கொண்டிருக்க வேண்டும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved