World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

The history that "binds" the US and Haiti

அமெரிக்காவையும் ஹைட்டியையும் "பிணைக்கும்" வரலாறு

Bill Van Auken
15 January 2010

Use this version to print | Send feedback

புதனன்று ஹைடிட்டிய நிலநடுக்கத்தைப் பற்றிய தன் அறிக்கையில் ஜனாதிபதி பாரக் ஒபாமா "நம்மைப் பிணைக்கும் நீண்ட வரலாறு" என்பது பற்றிக் குறிப்பிட்டார். ஆனால் அவரோ, அமெரிக்கச் செய்தி ஊடகமோ அமெரிக்க-ஹைட்டி உறவுகளின் வரலாறு மற்றும் ஹைட்டிய மக்களை இப்பொழுது எதிர்கொண்டிருக்கும் பேரழிவின் வரலாற்றை ஆராய எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.

மாறாக, பத்து, நூறு, ஆயிரக்கணக்கில் என்று இறப்பு எண்ணிக்கையில் கணிசமான பங்கைக் கொண்டிருக்கும் பிற்போக்குத்தன்மையும் வறுமையும், ஏதோ இயல்பான நடவடிக்கைகள் போல், ஏன் ஹைட்டியர்களுடைய தவறு என்பது போல் காட்டப்படுகின்றன. அமெரிக்கா ஒரு தன்னலமற்ற கொடைவள்ளல், ஹைட்டிக்கு நன்கொடைகள், மீட்புக் குழுக்கள், போர்க்கப்பல்கள், மரைன்கள் ஆகியவற்றை அனுப்ப தயாரிப்பதுபோல் சித்தரிக்கப்படுகிறது.

ஓர் இழிந்த, நேர்மையற்ற தலையங்கத்தில், நியூ யோர்க் டைம்ஸ் வியாழனன்று பின்வருமாறு தொடங்கியது, "மீண்டும் உலகம் ஹைட்டியுடன் கலங்குகிறது"; பின் கட்டுரை அந்நாட்டை "வறுமை, பெருந்திகைப்பு, செயலற்ற தன்மை ஆகியவற்றைக் கொண்டுள்ளது, மற்ற இடங்களைத் தவிர ஹைட்டியில் இயல்பாகத்தான் இருப்பவை" என்று கூறியுள்ளது.

தலையங்கம் தொடர்கிறது: "ஹைட்டியை கவனியுங்கள்; பல தலமுறைகள் சீர்கேடான ஆட்சி, வறுமை, அரசியல் பூசல்கள் ஒரு நாட்டிற்கு என்ன செய்யும் என்பது தெரியவரும்."

ஹைட்டிய பேரழிவு பற்றிய ஒரு பின்னணிக் கட்டுரையில் டைம்ஸ் அந்நாடு, "பல மனிதனே கொண்டுவந்த சோகங்களுக்கு--அதன் பெரும் வறுமை, அரசியல் உட்பூசல், எழுச்சிக்குத் தயார் என்ற நிலை-- நன்கு அறியப்பட்டுள்ளது, என்று மேலும் குறிப்பிட்டது."

ஒரு குறுகிய, உதறிதள்ளும் வகையிலான தலையங்கத்தில் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் அமெரிக்க இராணுவம் நிலநடுக்கத்தை எதிர்கொள்ளும் விதத்தில் முக்கிய பங்கைக் கொள்ளும் என்பது பற்றி களிப்புறுகிறது, அது "அமெரிக்காவின் வலிமை அது செய்யும் நல்லவற்றுடன் இணைந்து நிற்பது பற்றிய புதிய நினைவுக்குறிப்பு ஆகும்" என்று கூறுகிறது.

1994ல் கலிபோர்னியாவை தாக்கி 72 பேர் இறந்த நிலநடுக்கத்தை ஹைட்டிய நிலநடுக்கத்துடன் இழிந்த முறையில் அது ஒப்பிட்டுள்ளது. "இதில் உள்ள வேறுபாடு செல்வத்தைத் தோற்றுவிக்கும், சட்டப்படி நடக்கும் சமூகம் மற்றவற்றுடன் முறையான கட்டிட நெறிகளையும் கடைபிடிக்கும் செயலைக் கொண்டுள்ளது" என்பதைக் காட்டுவதாகும் என்று ஜேர்னல் குறித்துள்ளது.

இதில் கூறப்படும் தகவல் தெளிவு. நூறாயிரக்கணக்கில் இறப்பு, காயங்களுக்கு ஹைட்டியர்கள் தங்களைத்தான் குறைகூறிக்கொள்ள வேண்டும்; ஏனெனில் அவர்கள் போதுமான செல்வத்தை தோற்றுவிக்கவில்லை, சட்டம் ஒழுங்கிற்கும் மதிப்பு கொடுப்பதில்லை.

இந்த ஒப்புமையால் வேண்டுமென்றே மறைக்கப்படுவது உண்மையான உறவு ஆகும், இது ஒரூ நூறாண்டிற்கும் மேலாக அமெரிக்காவின் "செல்வமுடைய தலைமுறைக்கும்" ஹைட்டியில் உள்ள வறுமைக்கும் இடையே வளர்ச்சியுற்றுள்ளது. இந்த உறவு, வரலாற்றளவில் அடக்கப்பட்ட ஒரு நாட்டில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொள்ளை நலன்கள் தொடர வன்முறை பயன்படுத்தப்பட்டு, கட்டப்பட்டது ஆகும்.

ஒபாமா நிர்வாகமும் பென்டகனும் ஹைட்டியில் மரைன்களின் ஆய்வு சக்தியை செலுத்தும் திட்டத்தை நடத்தினார், அது கடந்த 95 ஆண்டுகளில் நான்காம் முறையாக வறுமையான கரிபிய நாட்டை அமெரிக்க இராணுவம் ஆக்கிரமித்தல் என்பதாகும். கடந்த காலம் போல் இம்முறை, ஹைட்டிய மக்களுக்கு உதவுவதற்கு பதிலாக, அந்தகைய இராணுவ நடவடிக்கையின் அடிப்படை நோக்கம் அமெரிக்க நலன்களைக் காத்து டைம்ஸ் குறிப்பிடும் "எழுச்சி உணர்வை" எதிர்த்து நிற்பதும் ஆகும்.

இந்த உறவின் வேர்கள் ஹைட்டி ஒரு சுதந்திர கறுப்பர் குடியரசு என்று 1804ல் தோன்றியதில் உள்ளது; அது Toussaint Louverture தலைமையில் ஒரு வெற்றிகரமான அடிமைகளின் புரட்சியின் மற்றும் நெப்போலியன் அனுப்பி வைத்த ஒரு பிரெஞ்சுப் படை தோற்கடிக்கப்பட்டிருந்ததின் விளைவு ஆகும்.

உலகின் ஆளும் வர்க்கங்கள் இந்த புரட்சிகர வெற்றிக்காக ஹைட்டியை மன்னித்ததே இல்லை. அமெரிக்க தலைமையில் உலகம் தழுவிய தடைகளுக்கு அது உள்ளாயிற்று; ஹைட்டிய முன்னுதாரணம் இதே போன்ற புரட்சியை தென்பகுதி அடிமை நாடுகளில் நடத்த ஊக்கம் கொடுக்கலாம் என்று அஞ்சப்பட்டது. தெற்குப் பகுதி பிரிந்து உள்நாட்டுப் போர் ஏற்பட்டபின்தான் வடக்கு ஹைட்டியை அங்கீகரித்தது; அதாவது அது சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளுக்கு பின்னர்.

20ம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் இருந்து ஹைட்டி வாஷிங்டன் மற்றும் அமெரிக்க வங்கிகளின் ஆதிக்கத்தின்கீழ் வந்தது: இவற்றின் நலன்கள் அங்கு மரைன்கள் ஆக்கிரமிப்பிற்காக அனுப்பப்பட்ட விதத்தில் காக்கப்பட்டன --அது கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு தொடர்ந்தது, ஹைட்டிய எதிர்ப்பை குருதி கொட்டி அடக்கியது.

"ஹைட்டியமயமாக்கப்பட்டபின்தான்", மரைன்கள் அங்கிருந்து நீங்கினர்--அந்த நேரத்தில் நியூ யோர்க் டைம்ஸ் அப்படித்தான் ஹைட்டிய மக்களுக்கு எதிராக உள்நாட்டு அடக்குமுறைக்காகச் சென்ற இராணுவம் நடாத்திய போரைப் பற்றி குறிப்பிட்டிருந்தது.

இதன் பின்னர், வாஷிங்டன் Duvaliers உடைய 30 ஆண்டு கால சர்வாதிகாரத்திற்கு ஆதரவு கொடுத்தது அது 1957ல் Papa Doc பதவிக்கு வந்ததில் தொடங்கியது. பல்லாயிரக்கணக்கான ஹைட்டியர்கள் இராணுவத்தாலும், அச்சம் கொடுத்த Tontns Mazoute இவற்றாலும் கொலையுண்ட நிலையில், அமெரிக்க ஏகாதிபத்தியம் கம்யூனிசம், கரிபியனில் புரட்சி இவற்றிற்கு எதிரான தடுப்பாகத்தான் கொலைகார சர்வாதிகார ஆட்சியைக் கருதியது.

1986 TM Duvaliers ஐ பதவியில் இருந்து இறக்கிய வெகுஜன எழுச்சிகளில் இருந்து, குடியரசு ஜனநாயகக் கட்சி என்று வேறுபாடு இல்லாமல், தொடர்ச்சியான அமெரிக்க அரசாங்கங்கள், ஒரு நம்பிக்கையான வாடிக்கை அரசாங்கத்தை அங்கு கட்டமைக்க முற்பட்டன: அது அமெரிக்க சந்தைகளை மற்றும் முதலீடுகளை காக்கும் திறனைக் கொண்டிருக்க வேண்டும்; இவையோ அங்குள்ள பெரும் குறைவூதியங்களால் ஈர்க்கப்பட்டதுடன், ஹைட்டிய ஆளும் உயரடுக்கின் சொத்துக்களாலும் ஈர்க்கப்பட்டன. இதையொட்டி மக்களில் 80 சதவிகிதத்திற்கும் மேலானவர்களை வறுமையில் தொடர வைக்கும் சமூகப் பொருளாதார ஒழுங்கிற்கு எந்த சவாலும் தடுக்கப்பட வேண்டும் என்று ஆயிற்று.

இந்த முயற்சி இன்றும் பில் மற்றும் ஹில்லாரி கிளின்டன் வழிநெறிகளால் தொடர்கிறது--முந்தையவர் ஐ.நா.வின் சிறப்பு பிரதிநிதியாக ஹைட்டியில் உள்ளார், பிந்தையவர் அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஆவார். இருவரும் ஹைட்டியில் சிந்தப்படும் ரத்தத்திற்கு பொறுப்பு ஆவர்.

இரண்டு இராணுவ ஆட்சி கவிழ்ப்புகளுக்கு வாஷிங்டன் ஆதரவு கொடுத்து, அமெரிக்கத் துருப்புக்களை கடந்த 20 ஆண்டுகளில் இருமுறை அனுப்பி வைத்துள்ளது. இரு ஆட்சி மாற்றங்களும் Jean-Bertrad Aristide ஐ அகற்ற ஏற்பாடாயிருந்தன; அவர் மக்கள் வாக்குகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஹைட்டிய ஜனாதிபதி ஆவார்; ஆனால் அவருக்கு வாஷிங்டனின் இசைவு இல்லை. 1991, 2004 ஆட்சி மாற்றங்கள் இரண்டும் மொத்தத்தில் குறைந்தது 13,000க்கும் மேற்பட்ட ஹைட்டிய உயிர்களை குடித்தன. 2004 ஆட்சி மாற்றத்தின்போது, Aristide கட்டாயமாக நாட்டை விட்டு அமெரிக்க முகவர்களால் வெளியே அனுப்பப்பட்டார்.

ஈராக்கிற்கு தேவைப்படுகிறது என்பதால் அமெரிக்கா அதன் துருப்புக்களை 2004ல் திரும்பப் பெற்றுக் கொண்டது; அடக்குமுறை வேலையை ஐ.நா.சமாதானப் படை ஒன்றிடம் ஒப்பந்தமாக கொடுத்தது; அது பிரேசில் இராணுவத்தின் தலைமையின் கீழ் உள்ளது.

Aristide சர்வதேச நிதிய நிறுவனத்தின் கோரிக்கைகளுக்கு அடிபணிந்து, வாஷிங்டனுடன் சமரசம் செய்யத் தயாராக இருந்தாலும், அவர் பெற்றிருந்த வெகுஜன ஆதரவு, மற்றும் அவர் கையாண்ட ஏகாதிபத்திய எதிர்ப்பும், வாஷிங்டனிலும் Port-au-Prince லும் அவரை ஆளும் வட்டங்களுக்கு விரும்பத்தகாதவராக ஆக்கிவிட்டன. ஒபாமா நிர்வாகத்தின் உத்தரவுகளில், அவர் ஹைட்டிக்கு வருவது தடுக்கப்பட்டுள்ளது; அவருடைய அரசியல் கட்சி Fanmi Lavalas சட்டத்திற்கு புறம்பானதாக ஆக்கப்பட்டுள்ளது.

இதுதான் ஒபாமா சுட்டிக்காட்டும் ஹைட்டியை அமெரிக்க ஏகாதிபத்தியத்துதுடன் பிணைக்கும், உண்மையாக தொடரும் வரலாறு ஆகும். பெரும் திகைப்பு கொடுக்கும் நிலைமைக்கு இதுதான் பொறுப்பு; அந்த நிலைமை இப்பொழுது நிலநடுக்கம் கொடுத்துள்ள பாதிப்பால் பெரிதும் கூடியுள்ளது.

ஆனால் ஹைட்டியின் பெரும் சோகத்தின் மகத்தான தன்மை வெளிப்படுகையில், மற்ற பிணைப்புக்கள் உள்ளன; அவையும் ஆழ்ந்து உணரப்படுகின்றன. அமெரிக்காவில் ஹைட்டிய அமெரிக்கர்கள் அரை மில்லியனுக்கும் மேல் உள்ளனர்; இதைத்தவிர சந்தேகத்திற்கு இடமின்றி இன்னும் நூறாயிரக்கணக்கான ஆவணமற்றவர்கள் இருக்கக்கூடும். அவர்கள் இருப்பது இங்கு வர்க்க நலன்கள், ஒற்றுமையை, ஹைட்டிய, அமெரிக்க தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தும் முயற்சியை உறுதிப்படுத்தும். அவர்களுடைய பங்கு ஒன்றாய்ச்சேர்ந்து, இரு நாடுகளிலும் இருக்கும் வறுமை, பேரழிவு சூழ்நிலையை அத்துடன் அவற்றைத் தோற்றுவித்த முதலாளித்துவ இலாப முறையையும் அகற்றுவதாகும்.