World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The banks and socialism

வங்கிகளும் சோசலிசமும்

Tom Eley
14 January 2010

Use this version to print | Send feedback

பெருமந்த நிலைக்குப் பிந்தைய மிகப்பெரிய பொருளாதார, சமூக நெருக்கடிக்கு இடையே, முக்கிய அமெரிக்க வங்கிகள் தம் உயர் நிர்வாகிகளுக்கும் வணிகர்களுக்கும் ஆண்டு இறுதி மேலதிக கொடுப்பனவுத் தொகையாக பல மில்லியன் டாலர்களை வழங்க உள்ளன. நெருக்கடியைத் தோற்றுவித்த ஊக நடவடிக்கைகளுக்குக் காரணமான "நிதிய மேதைகளை" பிணை எடுக்கும் ஒரே நோக்கத்தினால் கருவூலம் கொள்ளையடிக்கப்பட்டு வங்கியாளர்கள் மீண்டும் தங்கள் சொந்த செல்வக் கொழிப்பை முழுமையாகத் தொடர வகை செய்யப்பட்டுள்ளது.

இது ஒரு உலகந்தழுவிய நிகழ்வாகும். உலக முதலாளித்துவத்தின் முக்கிய மையங்கள் அனைத்திலும், நிதிய உயரடுக்குகள் பொருளாதார அழிவில் இருந்து முன்னைக்காட்டிலும் வலுவாகவும் சக்திவாய்ந்தவையாகவும் வெளிப்பட்டு வந்துள்ளதுடன், தமக்கு அடிபணியும் அரசாங்கங்களுக்கு தங்கள் மேம்பாட்டிற்கான விதிமுறைகளுக்கான ஆணைகளை கொடுத்துள்ளன.

அமெரிக்காவில் கோல்ட்மன் சாஷ்ஸ் $20 பில்லியனுக்கும் மேலான மொத்த மேலதிக கொடுப்பனவு தொகையை அறிவிக்க உள்ளது. இது கலிபோர்னியாவின் மாநில வரவுசெலவுத் திட்ட பற்றாக்குறைக்கு ஒப்பான பணம் ஆகும். சராசரி கோல்ட்மன் மேலதிக கொடுப்பனவு $600,000 என இருக்கும் என்றும் சில நிர்வாகிகள் $10 மில்லியனுக்கும் மேல் மேலதிக கொடுப்பனவு பெறுவர் என்றும் ஒரு பகுப்பாய்வாளர் மதிப்பிட்டுள்ளார். கோல்ட்மன் சாஷ்ஸ், அமெரிக்க வங்கி, சிட்டி வங்கி, ஜே.பி.மோர்கன் சேஸ், மோன்கன் ஸ்ரான்லி ஆகியவை தமது நிர்வாகிகளுக்கு மொத்தத்தில் 2009 ஆண்டிற்கு $90 பில்லியன் ஊதியத் தொகையாகவுத் அதில் பாதிக்கும் மேலாக மேலதிக கொடுப்பனவு என்ற வகையில் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மக்கள் சீற்றத்தைக் குறைத்து முன்கூட்டியே தவிர்க்கும் விதத்திலான வெளிப்படை முயற்சியாக, ஜனாதிபதி ஒபாமா வியாழனன்று ஆபத்திற்குட்பட்ட சொத்து நிவாரணத் திட்டத்தின் (TARP) கீழ் நிதியைப் பெற்ற 20 வங்கிகள் மீது துணைவரி ஒன்றை விதிக்கும் திட்டத்தை அறிவிக்க உள்ளார். நிர்வாகக் கருத்தின்படி, இது அடுத்த பத்து ஆண்டுகளில் $120 பில்லியனை அரசாங்கத்திற்கு சேர்க்கும். இது 2009ல் மட்டும் ஐந்து பெரும் வங்கிகள் தங்கள் நிர்வாகிகளுக்கு கொடுக்கும் மேலதிக கொடுப்பனவுகளை விட இது அதிகம் அல்ல.

இத்துணைவரித் திட்டம் மற்றொரு பொதுமக்கள் உறவு தந்திரத்துடன் வருகிறது. இந்த வாரம் நிதிய நெருக்கடி விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைகள் வெளிவருகின்றன. இந்த வலுவற்ற அமைப்பு வங்கியாளர்களின் குற்றம் சார்ந்த நடவடிக்கைகளை மூடிமறைக்கும் நோக்கத்துடன் அமைக்கப்பட்டது ஆகும்.

வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் "ஒபாமாவின் கெளரவமான வங்கி வரி" என அழைப்பதன் துல்லியமான விவரங்கள் எப்படி இருந்தாலும், வோல் ஸ்ட்ரீட்டிற்கு இது கணிசமான அபராதத்தை எவ்விதத்திலும் விளைவிக்காது. இத்திட்டம் பிரச்சார நன்கொடைகள் மற்றும் பிற லஞ்சங்களுக்கு, தாங்கள் கட்டுப்படுத்துவதாகக் கூறும் அதே வங்கிகளை நம்பியிருக்கும் அரசியல்வாதிகள் நிறைந்த காங்கிரஸினால் தடுக்கப்படும், அல்லது அச்சட்டத்தின் கடுமையான தன்மை குறைக்கப்படும். அவ்விதத்தில்தான் அதிகம் பேசப்பட்ட முன்மொழிவுகளான ஊதியக் கட்டுப்பாடுகள், வங்கி கட்டுப்பாட்டில் முழு மாற்றம், கடன் அட்டை "சீர்திருத்தம்" ஆகிய ஒபாமாவின் மீட்பு முயற்சிகளின் தலைவிதியின் தன்மையும் போயிற்று.

மற்ற சாதாரண மனிதர்களை காட்டிலும் நூறு மடங்குகளுக்கும் மேலாக ஊதியங்களை கொண்டுள்ள தங்கள் உரிமைகள் மீது சிறு ஊடுருவல் வருவது கூட வோல் ஸ்ட்ரீட் இளவரசர்களை பெரும் இகழ்ச்சியுடன் அதை எதிர்கொள்ள வைக்கிறது.

பிரெஞ்சுப் புரட்சிக்கு முன் ஆடை அணிகலங்கள் அணிந்து அலங்காரத் தோற்றம் கொண்டிருந்த பழம்பெரும் ஆட்சியின் பிரபுக்களைப் போலவே, இந்த தற்காலப் பிரபுக்களும் சீமாட்டிகளும் வரம்பற்ற சொந்த சொத்துக் குவிப்பிற்கு தடையற்ற உரிமையை வலியுறுத்துகின்றனர். "இவர்களை இடைவிடாமல் தீய முறையில் காட்டுவது சலிப்படைய செய்துள்ளது" என்று கோபத்துடன் ஜே.பி.மோர்கனின் தலைமை உயர் நிர்வாகியான ஜேமி டைமன் இந்த வாரம் மேலதிக கொடுப்பனவு பற்றிய சீற்ற விளைவுகளைப் பற்றிய தன் கருத்தைக் கூறினார். வங்கியாளர்களின் எதிர்ப்பைக் குறித்த ஒரு பெயரிடாத மற்றொரு நிர்வாகி "அவர்கள் ஒன்றும் புலம்பவில்லை; இதில் அவர்களுக்கு நியானமான பணத்தட்டுப்பாட்டு பிரச்சினைகள் உள்ளன." என கூறினார்.

இந்த நபர்கள் மதிப்புடைய எதையும் உற்பத்தி செய்வதில்லை. முந்தைய காலத்தில் இருந்த தொழில்துறை விற்பன்னர்களைப் போல், பரந்த தொழில்துறை பேரரசுகளைத் தோற்றுவித்த மகத்தான சொந்த சொத்துக்களுடன் இணைந்திருந்தவர்களாகிய ரோக்பெல்லர், எடிசன், போர்ட் போன்றவர்களைப் போல் இல்லாமல் இன்றைய கொள்ளைப் பிரபுக்கள் தங்கள் பெரும் சொந்துக்களை ஒட்டுண்ணித்தன செயல்கள் மூலம் சேகரிக்கின்றனர். அவை தொழில்துறை அழிப்பு, தொழிலாளர் வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்கள் ஆகியவற்றின்மீது இடைவிடாத தாக்குதல்கள் ஆகியவற்றுடன் பிணைந்துள்ளன.

ஏராளமான வீடுகள் ஏலவிற்பனைக்கு வருதல், பட்டினியும் வறுமையும் பெருகியுள்ள நிலை இவற்றிற்கு நடுவே இந்த நிதிய உயரடுக்கு அதன் செல்வத்தைப் பறை சாற்றுகிறது. "ஊதியத்திற்குப் பெரும் ஏற்றம் கிடைக்கும் ஆண்டு என்ற தோற்றத்தின் இறுதிக்கு அருகே வணிகர்களும் முதலீட்டு வங்கியாளர்களும் வந்துள்ள நேரத்தில், சில உயரடுக்கினர் நிதிய நெருக்கடி ஏற்பட்டதே இல்லை என்பது போல் பணத்தைச் செவழித்துக் கொண்டிருக்கின்றனர். என வோல் ஸ்ரீட் ஜேர்னல் குறிப்பிட்டிருந்தது. "ஒரு வாரம் $15,000 செலவில் கரிபியத் தீவுகளுக்கு சுற்றுலா என்பதில் இருந்து கலைப் பொருள் விற்பனையில் இருந்து, $200,000 மதிப்புள்ள கைக்கடியாரங்கள் என்பது வரையிலான சிறந்த வாழ்வின் அடையாளங்கள் அவர்களுக்கு மீண்டும் வந்து கொண்டிருக்கின்றன." நியூ யோர்க்கின் சொத்துக்கள் இடைத்தரகர்களின் உயரடுகினரின் மேலதிக கொடுப்பனவுகள் பற்றி "உண்மையில் கிறுகிறுப்பாக உள்ளனர்"; ஏனெனில் அவை "விற்பனைகளை அதிகரிக்கும், குறிப்பாக $2மில்லியனில் இருந்து $5 மில்லியன் வரையிலான பொருட்களுக்கு."

அமெரிக்க மற்றும் உலகப் பொருளாதாரம் வங்கியாளர்களின் செயல்களில் கிட்டத்தட்ட பெரும் சரிவிற்கு உட்பட்டு ஓராண்டிற்குப் பின்னர், நிதிய முறையைச் சீர்திருத்தம் ஏதும் செய்யப்படவில்லை. எவரும் நெருக்கடிக்குப் பொறுப்பாக்கப்படவில்லை. மாறாக, தங்களால் ஏற்பட்ட நெருக்கடியைப் பயன்படுத்தி வங்கிகள் இன்னும் அதிகமாக நிதியைத் தேடிக் கொண்டுள்ளன. அரசாங்கம், நீதிமன்றங்கள் மற்றும் செய்தி ஊடகங்கள் ஆகியவை நிதியப் பிரபுத்துவம் என்று உரிமையுடன் கூறக்கூடிய அமைப்பிற்கு ஏவலாளர்களாகத்தான் தங்களைக் காட்டிக் கொண்டுள்ளன.

இது செல்வம் ஒரு சிறு உயரடுக்கின் கைகளில் குவிந்திருப்பதும் மற்றும் அந்தச் சிறு உயரடுக்கு சொந்தச் செல்வக் கொழிப்பிற்கு தடையற்ற முறையில் செயல்படுவதும் ஒன்றும் மற்றப்படி பகுத்தறிவு நிறைந்த காத்திரமான முறையில் ஏற்பட்ட மிதமிஞ்சிய அல்லது சிதைவுகளால் ஏற்பட்டது என்று கூறுவதற்கு இல்லை. 21ம் நூற்றாண்டில் அது சிதைவடைகையில், இத்தன்மைகள் முதலாளித்துவத்தின் இயல்பான தன்மையில் உள்ளவைதான்.

அமெரிக்கா, மற்றும் உலக வங்கி அமைப்பு முறையை "சீர்திருத்தும்" பிரச்சினை அல்ல இது. சமூகச் செல்வத்தின் மீது வங்கி உயரடுக்கு கொண்டிருக்கும் மரணப்பிடி உடைக்கப்பட வேண்டும். நிதிய பிரபுத்துவம் சமூகத்தைக் கொள்ளையடிப்பதற்கு விடை வங்கிகளை கையேற்றுக்கொள்ளுதல், வங்கிகள், நிதிய நிறுவனங்களைத் தேசியமயமாக்குதல், அவற்றை பொது அறக்கட்டளை அமைப்புகளாக மாற்றுதல், அனைத்தின் மீதும் தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டை கொண்டுவருதல் என்பதுதான்.

வங்கியாளர்களின் கொடுங்கோன்மைக்கு மாற்றீடு சோசலிசம் ஆகும். அதாவது வங்கிகள் வங்கிகள் மற்றும் பெரும் தொழில்கள் ஆகியவை தனிச்சொத்துடைமையாக இருப்பது அகற்றப்பட வேண்டும். அதற்குப் பதிலாக முதலாளித்துவச் சந்தைமுறை பகுத்தறிவார்ந்த முறையில் திட்டமிடப்பட்டு, ஜனநாயகக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டு, தனியார் இலாபத்திற்கு என்று இல்லாமல் சமூகத் தேவைக்கு இயக்கிவிடப்பட வேண்டும்.

வங்கிகளின் கணக்குகள் பொது கண்காணிப்பிற்கு திறந்துவிடப்பட வேண்டும். அனைத்து கொள்ளைமுறை, சட்டவிரோத நடவடிக்கைகள்மீதும் சட்டநடவடிக்கை எடுகக்கப்பட வேண்டும். தவறான வழியில் சேகரிக்கப்பட்ட நிதிய உயரடுக்கின் செல்வம் பறிமுதல் செய்யப்பட்டு சுகாதாரப் பாதுகாப்பு, கல்வி, வீடுகள், வேலைகள் என்ற அவசிய சமூகத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

இதற்கு அமெரிக்காவிலும் சர்வதேசரீதியாகவும் தொழிலாள வர்க்கம் சுயாதீனமாக அரசியல் ரீதியாக அணிதிரட்டப்பட வேண்டும். ஒபாமா நிர்வாகம், அமெரிக்க பெருவணிகத்தின் இரு கட்சிகள் ஆகியவற்றிற்கு எதிரான போராட்டம் நடத்தப்பட்டு ஒரு தொழிலாளர்கள் அரசாங்கம் நிறுவப்பட வேண்டும்.

இதுதான் உலக சோசலிச வலைத் தளத்தினதும் சோசலிச சமத்துவக் கட்சியினதும் வேலைத் திட்டமாகும்.