World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

Cold snap in Europe takes hundreds of lives

கடும் குளிர் ஐரோப்பாவில் நூற்றுக்கணக்கான உயிர்களை பலி வாங்குகிறது

By Robert Stevens
11 January 2010

Use this version to print | Send feedback

ஐரோப்பாவின் பெரும்பகுதியில் நீடித்த குளிர் அலையின் விளைவாக நூற்றுக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர். வீடுகள் இல்லாதவர்கள், மனநோய்ப்பட்டவர்கள், இயலாதவர்கள் ஆகியோர் பலர் பாதிக்கப்பட்டனர்; இவர்கள் வறுமையில் வாழும் கட்டாயத்தில் தள்ளப்பட்டிருந்தனர்.

உறைய வைக்கும் தட்ப நிலை ஐரோப்பாவில் உள்ள சமூக நிலைமைகளின் தீவிரச் சரிவை உயர்த்திக் காட்ட உதவியுள்ளது.

ஐரோப்பாவின் பெரும் பகுதி பனி, பனிப்பொழிவு ஆகியவற்றால் மூடப்பட்டிருந்த நிலையில், தட்ப நிலை சரிந்து, சில நாடுகளும் பகுதிகளும் பூஜ்யத்திற்கும் குறைவான தட்பவெப்ப நிலையை 1940 களுக்குப் பின்னர் காணப்படாத நிலையை கண்டன. நோர்வேயில் ஜனவரி 7ம் தேதி -45.6 செல்சியஸ் பதிவாயிற்று. இங்கிலாந்தில்கூட தட்பவெப்ப நிலை -20 செல்சியஸ் என்று சில இடங்களில் தாழ்ந்த்து. கடுமையான பனிப்பொழிவு தெற்கே ஸ்பெயின் வரைகூட பதிவாயிற்று.

இந்தக் கடுமையான தட்பவெப்ப நிலை கட்டமைப்பு சேவைகளில் மிகக் குறைவான முதலீட்டை வெளிப்படுத்தியுள்ளதுடன், கண்டம் முழுவதும் ஒவ்வொரு அரசாங்கமும் சமூகச் செலவுகளின் மீதான தாக்குதலின் பகுதியாக அரைகுறைத் திட்டம் இயற்றியுள்ளதையும்தான் காட்டுகிறது.

தட்பவெப்பநிலை தொடர்புடைய பல இறப்புக்களும் போலந்தில் ஏற்பட்டுள்ளன; அங்கு, கடந்த வாரம் வரை 139 பேர் இறந்துள்ளனர். தட்பவெப்பநிலை -20 செல்சியஸைத் தொட்டபோது, பாதிக்கப்பட்டவர்களில் ஓய்வுதியம் பெறுவோர், பல வீடுகள் இல்லாதவர்கள் என்று இருந்தனர். ஒரு தகவலின்படி டிசம்பர் 18-19 வார இறுதியில் குறைந்தது 42 பேர், பெரும்பாலான வீடற்றவர்கள் இறந்தனர் எனத் தெரிய வருகிறது.

டிசம்பர் 22 ஐ ஒட்டி, கிட்டத்தட்ட 27 பேர் உக்ரைனில் குறைவெப்ப உடல்நிலையால் இறந்துள்ளனர். அதே தேதியை ஒட்டி ருமேனியாவில் குளிரால் 11 பேரும், செக் குடியரசில் 12 பேரும் இறந்துள்ளனர்.

சைலீசியப் பகுதியான போலந்து, செக், ஜேர்மனி ஆகியவற்றில் இந்த வாரம் இன்னமும் 14,000 மக்கள் மின்வசதி இல்லாமல் இருப்பதாகத் தகவல் வந்துள்ளது.

முன்னாள் கிழக்கு ஐரோப்பிய ஸ்ராலினிச நாடுகளில் மிக அதிகமான இறப்புக்கள், முதலாளித்துவ சந்தை உறவுகள் மறு அறிமுகப்படுத்தப்பட்டு இரு தசாப்தங்களுக்கு பின்னும் சமூகப் பேரழிவு தொடர்ந்து இப்பகுதியை பாதித்திருப்பதின் உறைய வைக்கும் வர்ணனையாகும்.

பிரான்ஸில், பனித் தட்பவெப்ப நிலை பொதுவாக தெற்கே மத்தியதரைக்கடல் பகுதிகளில் உஷ்ணமாக இருக்கும் பகுதிகளைக்கூட பாதித்துள்ளது. இதுவரை வீடில்லாத இருவர் அந்நாட்டில் இறந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 2 மில்லியன் மக்கள் கடந்த திங்களன்று பிரெஞ்சு தேசிய விசை நிறுவனங்கள் பணியை நிறுத்தி, தேவையை ஈடு செய்ய முடியவில்லை என்று கூறியபின், மின்வசதியற்று அவதியுற்றனர். இதைத்தவிர, தெற்கு நகரமான Arles ல் 15,000 வீடுகள் மின் ஒயர்கள் பொரிவை ஒட்டி மின் அளிப்பை இழந்தன.

ஜேர்மனியில் புத்தாண்டு தினத்திற்கு முந்தைய வாரத்தில் குறைந்தது 7 பேராவது இறந்து போயினர். இவர்களுள் ஒருவர் 77 வயது மனநோயாளிப் பெண் ஆவார்; இவர் குளிரில் உறைந்து போனார்.

ஐரோப்பாவில் குளிர்காலத் தொடர்புடைய இறப்புக்கள் அதிகம் என்று உள்ள பிரிட்டனில், குறிப்பாக முதியோரிடையே, குளிர் நிலை கிட்டத்தட்ட 40,000 மக்களைக் கொல்லக்கூடும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அறக்கட்டளையான Age Concern அரசாங்கத்தை முதியோருக்கு வழங்கும் தட்பவெப்ப நிலை உதவியை அதிகரிக்குமாறு கோரியுள்ளது; ஏனெனில் அது கொடுக்கப்பட்டு வரும் பணம் மிக அதிகம் தேவைப்படும் சூடுபடுத்தும் கட்டணத்தைவிட மிகக்குறைவாக உள்ளது எனக் கருதுகிறது.

அதைப் பெறக்கூடிய பொதுநல உதவி வாய்ப்பு உடையவர்களில், ஒரு சிறிய குளிர் காலக் கட்டணமான 25 பவுண்டுகள் பெறப்படமுடியும்; ஆனால் தொடர்ச்சியாக ஏழு நாட்களுக்கு தட்பம் 0 செல்சியஸுக்கு கிழே சென்றால்தான் பெறமுடியும். இந்தப் பணத்தைப் பெறுவதற்கும் பொதுநல உதவி பெறுவோரில் பலருக்கும் அனுமதி இல்லை.

சமீபத்திய வாரங்களில் ஆயிரக்கணக்கான ஐரோப்பிய விமானப் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுவிட்டன; அல்லது தாமதிக்கப்பட்டன; பல விமான நிலைங்கள் மூடப்பட்டுள்ளன. இரயில் வலைப்பின்னல்களும் முக்கிய சாலைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன; பலவற்றில் கடக்க இயலாது. ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே இரவில் தங்கள் கார்களுடன் கார் நெடுஞ்சாலைகளில் பனிப்பொழிவில் அகப்பட்டுக் கொண்டுள்ளனர்; ஆங்காங்கு அப்படியே நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸுக்கு முன்பு ஐந்து யூரோஸ்டார் இரயில்கள் நின்றுபோய் ஆயிரக்கணக்கான மக்கள் Channel Tunnel ல் பிரான்சிற்கும் இங்கிலாந்திற்கும் இடையே அகப்பட்டுத் தத்தளித்த சில வாரங்களுக்கு பின்னர், 256 பயணிகளைக் கொண்ட மற்றொரு இரயில் வண்டி ஜனவரி 7ம் தேதி சீர்குலைந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெரும் தாமதங்களை ஏற்டுத்தியது.

குளிர் நிலை எந்த அளவிற்கு இங்கிலாந்தில் அடிப்படைக் கட்டமைப்புவசதிகள் பராமரிப்பு சரிவுற்றுள்ளது என்பதின் தீவிரத் தன்மையை வெளிப்படுத்தியுள்ளது. கடந்த வாரம், பிரதம மந்திரி கோர்டன் பிரெளன், கோப்ரா தேசிய நெருக்கடிக்குழு கூட்டத்தை நடத்தும் கட்டாயத்திற்கு உட்பட்டார். தோல்வியுற்ற போக்குவரத்து வழிகளினால் ஏற்பட்ட பாதிப்பை ஒட்டி தேசிய வேலைத் தொகுப்பில் பாதிக்கும் மேலான மில்லியன் கணக்கான மக்கள் சில நாட்கள் வேலைக்கு செல்ல முடியாமல் போய்விட்டது.

கடந்த வாரம் திங்கள் முதல் வெள்ளி வரை பிரிட்டனில் 14,000 க்கும் மேற்பட்ட இரயில்கள் ரத்து செய்யப்பட்டன. எட்டு முக்கிய A சாலைகள் மற்றும் மோட்டார் தடங்களில் இரண்டும் உத்தியோகபூர்வமாக கடந்த வாரத்தில் ஒரு முறை மூடப்பட்டன. நூற்றுக்கணக்கான சிறிய சாலைகள் தடைகளுக்கு உட்பட்டு செல்ல முடியாமல் போய்விட்டன. அதே போல் வீடுகளுக்கு செல்லும் பெரும்பாலான துணைச் சாலைகளும், நடைபாதைகளும் உபயோகிக்க முடியாமல் போயின.

சசெக்ஸில், கென்ட், சர்ரே பகுதிகளில் கிட்டத்தட்ட 5,000 வீடுகள் பல நாட்கள் மின்வசதி இல்லாமல் இருந்தன; தெற்கு இங்கிலாந்தில் பல இடங்களிலும் ஜனவரி 6ம் தேதி 20,000 வீடுகளில் விசை வெட்டுக்கள் ஏற்பட்டன.

கிட்டத்தட்ட 10,000 பள்ளிகள் தேசிய அளவில் சில நாட்கள் மூடப்பட வேண்டியதாயிற்று. மருத்துவமனைகளில் ஏராளமான நோயாளிகள் வந்துள்ளனர்; இவர்கள் தக்க பராமரிப்பு இல்லாத சாலைகள், நடைபாதைகளில் சறுக்கி கீழே விழுந்து காயமுற்றவர்கள் ஆவர். பல மருத்துவமனைகளும் அவசரமில்லாத பணிகள் சிலவற்றை இரத்து செய்ய வேண்டியதாயிற்று; அவற்றுள் வெளி இதிய நோயாளிகள், குழந்தை பிறப்பிற்கு பின் வரும் தாய்மார்களும் அடங்குவர்.

கடந்த வார பனிப்பொழிவிற்கு சில நாட்களுக்குள்ளாக, பல உள்ளூர் அதிகாரிகள் ஐஸ் படர்ந்த சாலைகளை செப்பனிட உரிய பொருட்களை பெற இயலவில்லை. இங்கிலாந்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் Scarborough நகராட்சி கடற்கரையில் இருந்து மணலை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது.

சாலைகள் நன்கு கல் தளமாக பராமரிக்கத் தேவையான கல் உப்பைத் தயாரிப்பதற்குத் தேவையான 90 சதவிகித அளிப்பிற்கு இங்கிலாந்து இரு முக்கிய நிறுவனங்களை, Salt Union, Cleveland Potash ஐ நம்பியுள்ளது. வாரம் ஏழு நாட்களும் 24 மணி நேரமும் உழைத்தாலும் சுரங்கங்கள் வாரத்திற்கு 30,000 டன்கள்தான் தயாரிக்க முடியும்; அது தற்போதைய தேவையின் ஒரு சிறு பகுதிதான். நகராட்சிக் குழுக்கள் நாள் ஒன்றிற்கு 60,000 டன்களை பயன்படுத்துகின்றன.

குளிர்காலத்தில் உப்பை வாங்குவதும் பொருளின் விலையை பெரிதும் அதிகரித்துவிட்டது; இதற்கு வரி செலுத்துபவர்கள் பணம் கொடுக்கின்றனர். Independent கருத்தின்படி, "டன் உப்பின் விலைகடந்த பெப்ருவரி குளிரின்போது சென்ற 150 முதல் 200 பவுண்டுகள் ஒரு டன்னிற்கு என்ற அளவிற்கு மீண்டும் செல்லக்கூடும்; சாதாரணமாக இதன் விலையோ டன்னிற்கு 30ல் இருந்து 40 பவுண்டுதான்."

ஆகஸ்ட் மாதம் தேசிய மற்றும் உள்ளூர் அரசாங்கம் நடத்தும் Roads Liaison Group ன் அறிக்கையில் இருந்த கண்டுபிடிப்புக்களை அரசாங்கம் புறக்கணித்தது என்பதற்கு சான்றுகள் உள்ளன; அந்த அறிக்கை போதிய உப்புக் கற்களை நகராட்சிகள் கொள்ளாவிட்டால் வரக்கூடிய ஆபத்துக்கள் பற்றி எச்சரித்திருந்தன; 19 பரிந்துரைகளையும் செய்திருந்தன. இந்த அறிக்கைக்கு டிசம்பர் மாதம்தான் அரசாங்கம் விடையிறுத்து, உள்ளூராட்சிகள் 6 நாட்களுக்கு தேவையான உப்புக் கற்களை வைத்திருக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.

வளர்ந்த நெருக்கடியை எதிர்கொள்ளுகையில் அரசாங்கம் ஒரு இடைக்கால அமைப்பானன Salt Cell ஐ நிறுவ நேர்ந்தது. உப்பிற்கு ஏற்பட்ட தட்டுப்பாட்டினால் அது Highway Agency ஐ சாலைச் செப்பனிடலுக்கு தேவையான உப்பை 25 சதவிகிதம் குறைக்குமாறு கூறியது.மற்றொரு முடிவின்படி மோட்டார் பாதைகளில் கடினப்பகுதியை செப்பனிடாமல் விட்டுவிடுவதாகும்.

பொதுப்பாதுகாப்பை அதிக ஆபத்திற்கு உட்படுத்தும் இந்த நடவடிக்கைகள் சாலை பயன்படுத்தும் குழுக்களால் எதிர்க்கப்பட்டன. AA எனப்படும் Automobile Association உடைய செய்தித் தொடர்பாளர் பால் வாட்டர்ஸ், முடிவைப்பற்றி, "முந்தைய "பாதுகாப்பான" சாலைகள் உறுதிப்படுத்தப்படாத ஒரு கட்டத்தை அடைகிறோம். இதில் அச்சம் என்னவென்றால் இந்தத் தேக்கம் மற்ற முக்கிய சாலைகளுக்கும் பரவக்கூடும்; குளிர் நிலைமை தொடர்ந்தால் அவற்றில் நெடுஞ்சாலைகள், மோட்டார் பாதைகள் என்று அடங்கும்."

உள்ளூர் நகரவைகள் உப்பு இருப்புக்களை 250,000 டன்கள் அளவில் கடந்த 10 ஆண்டுகளில் குறைத்துவிட்டன என்பதையும் வாட்டர்ஸ் வெளிப்படுத்தினார்; தங்கள் கவலைகளை AA, உள்ளூராட்சி அமைப்புக்களிடம் கிறிஸ்துமஸுக்கு முன் குறைந்த இருப்புக்கள் பற்றி கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.

கடும் குளிர் இங்கிலந்தின் எரிவாயு தேவைகளின் ஆபத்தான நிலை பற்றியும் புலப்படுத்தியுள்ளது. தேசிய இணையம் மூன்று "எரிவாயு சமசீர் எச்சரிக்கைகளை" கடந்த வாரம் வெளியிட்டு, எரிபொருளுக்கான தேவை அளிப்பை விட மிக அதிகமாகிவிட்டது என்று எச்சரித்தது. கடைசி எச்சரிக்கை பிரதம மந்திரி "ஏராளமான எரிவாயு உள்ளது என்று கூறிய சில மணி நேரத்திற்குள் வந்தது.

ஜனவரி 7ம் தேதி தேசிய இணையம் கிட்டத்தட்ட 100 ஆலைகளுக்கு அளிப்பைக் குறைத்தது; அவற்றுள் வாக்ஸ்ஹாலின் Merseyside ல் உள்ள Ellesmere Port கார் ஆலை மற்றும் பிரிட்டிஷ் சுகரின் Newar, Bury St.Edmunds சுத்திகரிப்பு ஆலைகளும் அடங்கும். இந்த ஆலைகள் "தடைக்கு உட்படக்கூடிய அளிப்பு" ஒப்பந்தக்கட்டத்தை அடைந்து விட்டன; இதன் பொருள் குறைந்த காப்புவரிக்காக இவை தேவைப்பட்டால் அளிப்பு நிறுத்தத்திற்கு உட்படுத்தப்படும். குறைப்புக்களை ஒட்டி, இவை சுமத்தப்பட்டன, அதையொட்டி வீடுகளின் அளிப்புக்கள் நிறுத்தப்பட மாட்டாது என்று கூறப்பட்டது.

இத்தகைய ஆபத்தான நிலைமை உள்ளது என்பதே தொழிற்கட்சி அரசாங்கத்தின்மீதும், அது முற்றிலும் தடையற்ற சந்தை முறைத் தழுவியுள்ளதின் மீதும் பெரும் குற்றச் சாட்டு ஆகும். இங்கிலாந்தில் விசை அளிப்புக்கள் (Energy supplies) நீண்ட காலத்திற்கு முன்பே தனியார் மயமாக்கப்பட்டு, கட்டுப்பாடுகளில் இருந்து அகற்றப்பட்டுவிட்டன இதையொட்டி தற்போதைய எரிபொருள் அளிப்பு நெருக்கடிக்கு தளம் அமைந்தது. மதிப்புக்களின்படி இங்கிலாந்தில் இருப்புத் திறன் 16 நாட்களுக்கான எரிபொருளுக்குத்தான் உள்ளது; ஜேர்மனியில் 100 நட்கள், பிரான்சில் 120 நாட்கள் ஆகியவற்றுடன் இது ஒப்பிடத்தக்கது.