World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : சீனா

China and ASEAN create free trade bloc

சீனாவும் ASEAN ம் தடையற்ற வணிக முகாமைத் தோற்றுவிக்கின்றன

By John Roberts
12 January 2010

Use this version to print | Send feedback

ஒரு தடையற்ற வணிக உடன்பாட்டிற்கான ஒப்பந்தம் (FTA) தென்கிழக்கு ஆசிய நாடுகள் சங்கத்திற்கும் (ASEAN) சீனாவிற்கும் இடையே புத்தாண்டு தினத்தில் இருந்து நடைமுறைக்கு வந்தது; இது ஐரோப்பிய ஒன்றியம் (EU) மற்றும் NAFTA (வட அமெரிக்க தடையற்ற வணிகச் சங்கம்) ஆகியவற்றிற்கு அடுத்து உலகின் மூன்றாம் பெரிய தடையற்ற சந்தை முகாம் ஆகும். பரப்பில் குறைவானது என்றாலும், உடன்பாடானது ஆசியாவிலும் சர்வதேச அளவிலும் அதன் போட்டி நாடுகள் குறிப்பாக அமெரிக்காவின் இழப்பில், சீனச் செல்வாக்கின் விரிவாக்கத்திற்கு மற்றொரு சான்று ஆகும்.

சீனாவால் முதலில் முன்வைக்கப்பட்ட இந்த FTA திட்டம் எட்டு ஆண்டுகள் பேச்சு வார்த்தைகளின் விளைவு ஆகும்; ஆனால் முதலீடு பற்றிய விதிகள் தெளிவாக்கப்பட்ட பொழுது கடந்த ஆண்டில்தான் முழு விவரங்களும் முடிவு செய்யப்பட்டன. சீனாவிலும் --இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, ப்ரூனே என பொருளாதார வளர்ச்சியுற்ற மற்ற ஆறு நாடுகளிலும்-- 7,000 பொருட்கள் அல்லது கிட்டத்தட்ட 90 சதவிகிதப் பொருட்கள் மீது ஜனவரி 1 முதல் காப்பு வரிகள் அகற்றப்படுகின்றன. நான்கு எஞ்சியுள்ள ASEAN நாடுகளான வியட்நாம், லாவோஸ், கம்போடியா, பர்மா ஆகியவை 2015 வரை காப்புவரிகளை நிறுத்த அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளன.

கடந்த தசாப்தத்தில் வளர்ச்சியுற்ற வழிவகையின் தொடர்ச்சிதான் FTA ஆகும். சீனாவுடன் வணிகம் என்பது பல ASEAN நாடுகளுக்கு 1997-98 ஆசிய நிதிய நெருக்கடியின் பேரழிவு பாதிப்பில் இருந்து மீள்வதற்கு கணிசமான பங்கைக் கொண்டுள்ளது. ASEAN மற்றும் சீனாவிற்கு இடையே இருவழி வணிகம் என்பது 1995ல் 19.5 பில்லியன் என்பதில் இருந்து 2003ல் $57.6 பில்லியனாக உயர்ந்து, 2008ல் $231 பில்லியனை எட்டியது. ASEAN உடைய மூன்றாம் மிகப் பெரிய வணிகப் பங்காளி, ஜப்பானுக்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் அடுத்து என்று சீனா அமெரிக்காவை ஒதுக்கி வந்துள்ளது.

தடையற்ற வணிக முகாமின் மொத்த மக்கட்தொகை 1.9 பில்லியன், அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி $6 டிரில்லியன் ஆகும். ஆனால் உடன்பாடு NAFTA வை விட வரம்பு குறைந்தது, ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார இணைப்பைவிட குறைந்த தன்மை உடையது. சீனாவைப் பொறுத்தவரையில் இந்த உடன்பாடு மூலப் பொருட்கள் மற்றும் உதிரிபாகங்கள் உற்பத்திக்கு கூடுதல் வாய்ப்பை அளிக்கிறது தவிர தென்கிழக்கு ஆசியச் சந்தைகளிலும் இடம் கிடைக்கும். ஆனால் ASEAN நாடுகள் சீனாவினால் பெரும் பாதிப்பிற்கு உட்பட்டுவிடுவோமோ என்ற கவலையில் உள்ளன; அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி மொத்த ASEAN ஐயும் விட மூன்று மடங்கு அதிகம் ஆகும்.

FTA உடைய வரம்புகள் இந்தக் கவலைகளைப் பிரதிபலிக்கின்றன. உடன்பாட்டின்படி, ஒவ்வொரு நாடும் ஒரு சில முக்கிய பொருட்களில் காப்பு வரியைத் தொடர அனுமதிக்கப்படும்; இது 2020 வரை கூட நீடிக்கும். இந்தப் பட்டியலில் இராசயனப் பொருட்கள், சில மின்னஞ்சல் கருவிகள், மோட்டார் வண்டிகள், கார் உதிரிபாகங்கள் ஆகியவை அடங்கும். இந்த காப்பு இருந்தும், இந்தோனசியா சில விதிகள் மீது கடைசி நேர தாமதத்தைக் கோரியது அதன் எஃகு, பெட்ரோ கெமிக்கல், ஜவுளி, விவசாய மற்ற பிரிவுகள் குறைந்த சீன இறக்குமதிகளுடன் போட்டியிட முடியாதோ என்று கவலைப்பட்டது. ஆனால் ஜாகர்த்தா மற்ற ASEAN உறுப்பு நாடுகளின் உடன்பாட்டைப் பெற முடியவில்லை.

ஜனவரி 7ம் தேதி Asia Times ல் வந்த கட்டுரை ஒன்று சீனா அந்நாட்டில் கொள்ளும் பொருளாதாரத் தொடர்பு பற்றிய வியட்நாமில் கவலையை உயர்த்திக் காட்டுகிறது. குறிப்பாக சீன பெருநிறுவனமான Chinalco பாக்சைட் சுரங்க வழிவகைகளில் பெரும் முதலீடு செய்வது பற்றி. தன்னுடைய மிக அதிக பாக்சைட் இருப்புக்களைப் பயன்படுத்த வியட்நாம் முதலீட்டை நாடுகிறது; இது உலகில் மூன்றாம் பெரிய இருப்பு ஆகும். ஆனால் சீனாவின் செல்வாக்கு பற்றி கவலைப்படுகிறது. அதே போல் சீனா முன்வைத்துள்ள திட்டமான சீனாவில் நான்னிங்கில் இருந்து வியட்நாம் வழியே சிங்கப்பூருக்கான இரயில்பாதை நிறுவுதல் பற்றியும் கவலை கொண்டுள்ளது. வியட்நாம் ஏற்கனவே சீனாவுடன் $11.2 பில்லியன் வணிகப் பற்றாக்குறையைக் கொண்டுள்ளது.

ஆனால் ASEAN ஏற்கனவே சீனாவை மையமாகக் கொண்டிருக்கும் உலகளாவிய உற்பத்தி வழிவகையில் இணைந்துள்ளது ASEAN நாடுகள் மூலப் பொருட்கள், பாகங்களை கொடுக்கிறது; முக்கிய இணைப்பிடமாக சீனா உள்ளது; முக்கிய சந்தைகள் அமெரிக்கா, ஐரோப்பா, மற்றும் ஜப்பான் என்று உள்ளன. ஆசிய வளர்ச்சி வங்கி ஆய்வு ஒன்றின்படி, சீன-ஆசியன் உற்பத்திப் பொருட்கள் மேலைச் சந்தைகளை அடைகின்றன. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் ஆகியவற்றின் சரிவு, ஆசியாவிற்குள் கூடுதல் வணிக வளர்ச்சி முயற்சிகளுக்கு உரம் இட்டுள்ளது.

ASEAN நாடுகளுக்குள் இருக்கும் பெருநிறுவன உயரடுக்கில் பெரும்பாலானவற்றிற்கு சீனாவுடன் வணிகத்தை தழுவதலுக்கு மாற்றீடு ஏதும் இல்லை. இந்தோனேசிய ஆளும் உயரடுக்கின் அணுகுமுறையை Jakarta Post சுருக்கிக் கூறுகையில், கடந்த மாதம் நாட்டின் பாதிப்பிற்கு உட்படக்கூடிய தொழில்களைப் பற்றிய கவலைகளை உதறித்தள்ளும் விதத்தில் இந்தோனேசியா "கடின நிலையை எதிர்கொள்ள வேண்டும்" என்றும் பொருளாதாரத்தை மறுகட்டமைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

கடந்த ஆகஸ்ட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதம மந்திரி யுகியோ ஹடோயமாவின் ஜப்பானிய அரசாங்கமும் சீனா உட்பட ஆசியாவுடன் நெருக்கமான பொருளாதார இணைப்புக்களுக்கு வலியுறுத்தி வருகிறது. பதவியை எடுத்துக் கொண்ட பின், ஹடோயமா ஐரோப்பிய ஒன்றியம் போல் ஆசிய சமூகம் ஒன்று பற்றி தன்னுடைய கண்ணோட்டத்தை எடுத்துரைத்தார்; அது பொது நாணயத்தையும் கொள்ள வேண்டும் என்றார். இத்தகைய திட்டத்தில் கடினங்கள் இருந்தாலும், ஜப்பான், சீனா மற்றும் தென்கொரியா ஆகியவை ஒரூ கூட்டு நாணய பரிமாற்ற முறை உடன்பாட்டை ASEAN நாடுகளுடன் கொண்டு வட்டார நாணயங்களின் உறுதியை வலுப்படுத்தியுள்ளன. ஹடோயமாவின் முயற்சிகள் விரைவில் உலகில் இரண்டாம் மிகப் பெரிய பொருளாதாரம் என்ற ஜப்பானின் இடத்தை எடுத்துக் கொள்ள இருக்கும் சீனாவினால் தான் பெரும் பாதிப்பிற்கு உட்பட்டுவிடக்கூடாது என்பதுதான்.

FTA பற்றி ஒபாமா நிர்வாகம் உத்தியோகபூர்வமாக ஏதும் கூறவில்லை; ஆனால் பொருளாதாரத்தில் அமெரிக்கா சீனாவைவிட பின்வாங்கியுள்ளது என்ற கவலைகள் வாஷிங்டனில் அடிக்கோடிட்டுக் காட்டப்படுகின்றன. அமெரிக்கா ASEAN உடன் FTA வைத்திருக்கவில்லை. ஆனால் ஜப்பான், தென்கொரியா, இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து, சீனாவுடன் உடன்பாடுகளில் கையெழுத்திட்டுள்ளது. ஆசியாவிற்குள் வாஷிங்டன் சிங்கப்பூர் ஒன்றுடன்தான் சுதந்திர வணிக உடன்பாடு கொண்டுள்ளது. தென்கொரியாவுடனான பேச்சுக்கள் தேக்கமடைந்துள்ளன; தாய்லாந்துடனான பேச்சுக்கள் அங்கு இராணுவம் பிரதம மந்திரி Thaksin Shinawatra வை 2006ல் அகற்றியபின், சரிந்துவிட்டன.

ASEAN நாடுகள் அமெரிக்காவுடன் வணிகத்திற்கு ஆர்வமாக உள்ளன; பெரும் அமெரிக்க சந்தைக்கான வாய்ப்பை பெறுவதற்கு மட்டும் இல்லாமல் சீனாவின் பொருளாதார, அரசியல் கனத்திற்கு ஒரு மாற்று என்றும் அமெரிக்காவை நினைக்கின்றன. ஜனாதிபதி ஒபாமா கடந்த நவம்பர் மாதம் ஆசியப் பயணத்தை மேற்கொள்ளுவதற்கு முன்னதாக சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ அப்பட்டமாக ஆசியாவில் அமெரிக்கா கூடுதல் தொடர்பை கொள்ள வேண்டும் என்று எச்சரித்தார். "21ம் நூற்றாண்டு பசிபிக்கில் மேலாதிக்கத்திற்கு போட்டியாக இருக்கும்; ஏனெனில் அங்குதான் வளர்ச்சி உள்ளது. பசிபிக்கில் நிலைப்பாட்டைக் கொள்ளவில்லை என்றால், ஒரு நாடு உலகத் தலைமையைப் பெற முடியாது" என்று அமெரிக்க தொலைக்காட்சியில் அவர் பேசினார்.

தன்னுடைய பயணத்தின் ஒரு பகுதியாக ஒபாமா ASEAN உச்சிமாநாடு சிங்கப்பூரில் நடந்தபோது அதில் கலந்து கொண்டு, அப்பொழுது பல ASEAN தலைவர்களையும் சந்தித்தார்; முதல் தடவையாக அமெரிக்க ஜனாதிபதியால் இது செய்யப்பட்டது; அதையொட்டி அப்பகுதியில் அமெரிக்க நிலைப்பாடு வலுவாகத் தக்க வைக்கப்படும் என்ற தன் நோக்கத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார். ஆனால் இரு தரப்பிற்கும் இடையே பொருளாதர பிரசசினைகளில் இருந்த இடைவெளி வெளிப்படையாகும். ASEAN தலைவர்கள் ஒபாமாவை பொருளாதார பாதுகாப்பு வாதத்திற்கு செல்லாமல் இருக்குமாறு வலியுறுத்தினர். ஆனால் அமெரிக்க ஜனாதிபதி ஆசியா அமெரிக்க சந்தையை நம்பியிருக்க இனி முடியாது என்ற விதத்தில் அதை நிராகரித்தார். ஒபாமா ASEAN உச்சிமாநாடு சீனா தன் நாணயத்தை மறு மதிப்பீடு செய்ய அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று பாடுபட்டார், ஆனால் ASEAN அறிக்கையின் இறுதி வடிவில் நாணயங்கள் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை.

மொத்தத்தில், ஆசியாவிற்கு ஒபாமா மேற்கொண்ட பயணம் வாஷிங்டனின் நோக்கங்கள் எவற்றையும் சாதிக்க இயலவில்லை. ASEAN உச்சி மாநாட்டிற்குப் பின்னர், ஒபாமா சீனாவில் மூன்று நாட்கள் இருந்தார்; ஆனால் நாணய மறுமதிப்பீட்டில் அமெரிக்க நோக்கங்களைப் பெறுவதில் வெற்றி பெற முடியவில்லை; அதே போல் ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளிலும் சீனாவின் ஆதரவைப் பெற முடியவில்லை; பிற பிரச்சினைகளிலும் இதே நிலைதான். கடந்த இரு மாதங்களில் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே உள்ள பதட்டங்கள் தீவிரமாகியுள்ளன; சீனப் பொருட்களுக்கு எதிராக வாஷிங்டன் பொருளாதார பாதுகாப்பு வாதத்தை அறிவித்துள்ளது; தைவானுக்கு ஆயுத விற்பனையையும் செய்ய உள்ளது.

2009ல் ஆசிய வணிக பங்காளிகளிடம் இருந்து எந்தப் பொருளாதார சலுகைகளையும் பெற முடியாமல் வாஷிங்டன் இருந்த நிலையில், சீன-ASEAN FTA உடன்பாடு வாஷிங்டனை பொறுத்தவரை வரவேற்கத்தக்க செய்தி அல்ல. ASEA நாடுகளுக்கும் சீனாவிற்கும் இடையே மோதல் இருக்கும் பொருளாதார நலன்களை முடுக்கிவிடக்கூடிய ஆபத்து உள்ளது; ஆசியாவில் உள்ள அமெரிக்க இராணுவ நிலைப்பாடு ஒன்றுதான் சீன மேலாதிக்கத்திற்கு எதிரான உறுதிப்பாடு என்று அளிக்கும் முயற்சியும் இருக்கும். பொருளாதார முன்னணியில், மிகப் பெரிய அமெரிக்கச் சந்தை என்னும் தொடர்ந்த முக்கியத்துவம் இருந்தாலும், ASEAN நாடுகள் அமெரிக்க முதலாளித்துவத்தின் ஒப்புமைச் சரிவில் தங்கள் காலில் நின்று முடிவெடுக்க விரும்புகின்றன.