World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Britain lines up behind US aggression in Yemen

யேமனில் அமெரிக்க ஆக்கிரமிப்புக்குப் பின்னே பிரிட்டன் அணிவகுப்பு

Ann Talbot
6 January 2010

Use this version to print | Send feedback

வாஷிங்டனால் தயாரிக்கப்பட்டு வரும் சமீபத்திய இராணுவ ஆத்திரமூட்டலுக்குப் பின்னே முழு வீச்சாய் அணிவகுத்து நிற்பதில் முதலாவதாக பிரிட்டீஷ் ஆளும் வர்க்கமானது மீண்டும் ஒருமுறை ஆகியுள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கிற்கு எதிராக ஆக்கிரமிப்புப் போரில் அதன் பங்கேற்புக்குப் பின்னர், அதேபோல பாக்கிஸ்தானுக்குள்ளே தாக்குதலுக்கான அதன் ஆதரவிற்குப் பின்னர், ஏமனை அடுத்த இலக்காக ஆக்குவதில் அமெரிக்காவுடன் பிரிட்டன் சேர்ந்துள்ளது.

வாஷிங்டனானது கிறிஸ்துமஸ் தினத்தன்று டிட்ரோயிட் செல்லவிருந்த நோர்த் வெஸ்ட் விமானம் 253-ல் ஒரு வெடிகுண்டை வைத்து வெடிக்கச்செய்த முயற்சி தோல்வியுற்றதை இந்த ஏழ்மை பீடித்த நாட்டில் மேற்கொண்டு தலையிடுவதற்காக ஒரு போலிக்காரணமாகப் பயன்படுத்தும் நோக்கத்தைக் கொண்டிருக்கிறது. நைஜீரிய மாணவர் உமர் பாருக் அப்துல் முத்தாலப்புக்கும் யேமனில் உள்ள அல்கெய்டா கூறுகளுக்கும் இடையிலான தொடர்பு என்று அறிவிக்கப்பட்டுள்ளதன் அடிப்படையில், இராணுவ இலக்குகள் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன என்ற செய்திகளுக்கு மத்தியில், "அமெரிக்க சக்தியின் அனைத்துக் கூறுகளையும்" அந்நாட்டிற்கு எதிராக கொண்டு வந்து நிறுத்தப்போவதாக ஜனாதிபதி பாரக் ஒபாமா உறுதி அளித்திருக்கிறார்.

இங்கிலாந்து பிரதமர் கோர்டோன் பிரெளன் இந்த அமெரிக்க போர்வெறிக்கு மிகவும் ஆவலுடன் பதிலளித்திருக்கிறார். அவர் உடனடியாக முழு உடம்பையும் ஸ்கேன் செய்ய இங்கிலாந்து விமான நிலையங்களுக்கு ஆணை பிறப்பித்திருக்கிறார், இக்கருவிகள் மனித உரிமைகளை மீறுவனவாக இருக்கும் என்று ஐரோப்பா அறிவித்திருக்கின்றது என்ற உண்மை இருப்பினும் அவ்வாறு ஆணையிட்டிருக்கிறார்.

யேமனுடன் விவாதிப்பதற்கு இந்த மாத இறுதியில் லண்டனில் ஒரு சர்வதேச கூட்டத்தையும் பிரெளன் அறிவித்துள்ளார் மற்றும் இந்த நாட்டில் அமெரிக்க-இங்கிலாந்து இணைந்த ஒரு பயங்கரவாத எதிர்ப்பு திட்டத்தில் பிரிட்டன் பங்கேற்கும் என்றும் கூறினார். இந்த கூட்டமானது, அதிகரித்த அளவில் இரத்தம் தோய்ந்த அமெரிக்க தலைமையிலான ஆக்கிரமிப்பில் ஐரோப்பிய நாடுகளின் இராணுவத் தலையீட்டை ஆழப்படுத்தும் நோக்குடைய, ஆப்கானிஸ்தான் மீதான ஒரு திட்டமிட்ட மாநாட்டுடன் ஒன்று சேர்ந்த வகையில் நடைபெறவிருக்கிறது.

விமானத்தைக் குண்டுவைத்து தகர்க்கும் முயற்சி பற்றி முக்கிய கேள்விகள் இருப்பினும் யேமனுக்கு எதிரான வாஷிங்டனின் அச்சுறுத்தல்களை ஆதரிக்க பிரதமரின் தயார்நிலை வெளிவருகிறது. இவற்றுள் குறைந்த பட்சம், அப்துல் முத்தாலப் பாதுகாப்பு கண்காணிப்புப் பட்டியலில் இருந்ததை மற்றும் அவரது அப்பா அவர் நைஜீரிய மற்றும் அமெரிக்கப் பொறுப்புக்களுக்கு பயங்கரவாத அச்சுறுத்தலாக இருப்பார் என்று அறிவித்திருந்தபோதிலும், அவரால் விமானத்தில் ஏறுவதற்கு எவ்வாறு முடிந்தது என்ற கேள்வி எழுகிறது.

பிரெளனின் பதிலானது, டோனி பிளேரிடமிருந்து அவருக்கு அதிகாரம் மாறிய விஷயத்தில் கொள்கையில் உண்மையில் மாற்றம் ஏதும் சம்பந்தப்பட்டிருக்கவில்லை என்பதை உறுதி செய்கிறது. இங்கிலாந்தானது லாங்லி, வெர்ஜீனியா மற்றும் வெள்ளை மாளிகையின் ஐரோப்பிய பதிலாளாக ஒத்த பண்புள்ள ஒன்றாக செயல்படுவதைத் தொடர்கிறது.

தேசிய தேர்தலை முன்னெடுப்பதில் அல்லது பிரிட்டனின் மிகவும் சக்திவாய்ந்த கூட்டாளியின் கோரிக்கைகளுக்கு வெறுமனே தலைவணங்கிப் போனதில், பிரெளனின் பங்கில் சம்பந்தப்பட்டிருப்பது வெறுமனே தேர்தல் என்பதையும் விட அதிகமான ஒன்றாகும். பிரெளனின் பரபரப்பான அறிவிப்புக்களில் அம்பலப்படுத்தப்பட்டிருப்பது எந்த அளவுக்கு பிரிட்டனும் அமெரிக்காவும் ஏமனில் ஏற்கனவே சம்பந்தப்பட்டிருக்கின்றன என்பதாகும்.

ஒபாமாவுடனான தனது தனிப்பட்ட தொலைபேசி உரையாடலுக்கு பின்னர் வாஷிங்டனுடன் ஒரு கூட்டு பயங்கரவாத திட்டத்தில் பங்கேற்க தான் தீர்மானித்ததாக பிரதமர் தொடக்கத்தில் கூறினார். ஞாயிறன்று பிபிசி-ன் ஆண்ட்ரூ மார்-ஆல் பேட்டி காண்கையில், நடவடிக்கை ஏற்கனவே நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை ஒத்துக் கொண்டார். "இதனை சில காலமாகவே செய்து கொண்டிருக்கிறோம் என்பதுதான் உண்மை" என்று அவர் ஒப்புக் கொண்டார்.

கூட்டுத் திட்டம் பற்றி கேட்டபொழுது, பெயர் குறிப்பிடப்படாத வாஷிங்டன் அதிகாரி அசோசியேட் பிரஸ்ஸிடம், புதிய முன்முயற்சி ஏதும் அங்கு இல்லை என்றார். அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் படைகள் ஏற்கனவே யேமன் பாதுகாப்புப் படைகளுக்கு "பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் உதவி செய்து வருகின்றன. செனெட் உள்நாட்டு பாதுகாப்புக் குழுவின் தலைவரான ஜோசப் லிபர்மான், பிரிட்டனைத் தளமாகக் கொண்ட டெலிகிராஃப்-இடம் ,"அங்கு நாம் இடம்பெறும் எண்ணிக்கை வளர்ந்துவருகிறது - மற்றும் கிரீன் பேரட்ஸ், உளவுத்தகவல், சிறப்பு நடவடிக்கைகளை கொள்ளவிருக்கிறோம்" என்றார்.

பிரெளன் ஒப்புக் கொண்டதின் உட்குறிப்பு யேமனில் அமெரிக்காவுடன் சேர்ந்ததாக அங்கு பிரிட்டிஷ் படைகளும் இருக்கின்றன என்பதாகும்.

விமானக் குண்டுவெடிப்பு தவறியதற்கு முந்தைய நாட்களில், ஏமனில் அல் மஜாலாவின் அப்யன் கிராமத்தின் மீது அமெரிக்க விமானத்தாக்குதலுக்காக ஒபாமா தனிப்பட்ட ரீதியில் ஆணையிட்டிருந்ததாக வெளியானது. சுமார் 120 பேரைக் கொன்ற டிசம்பர் 17 தாக்குதல்கள், வெளிப்படையாகவே அமெரிக்க ஆதரவு யேமன் ஜனாதிபதி அலி அப்தல்லா சலே சர்வாதிகாரத்துடன் இணைந்து செயல்படுத்தப்பட்டதாக இருந்தது.

பிளேயர் போலவே பிரெளனும் "நாளைய போரில்" இருந்து தனித்து விடப்படுவதை நோக்கங்கொண்டிருக்கவில்லை. வேறு எந்த வளர்ச்சியடைந்த நாட்டையும் விட, கடனில் அதிகமாய் சிக்கிக் கொண்டுள்ள பிரிட்டன், ஏற்கனவே இராணுவரீதியாக அளவுக்கதிகமாக நீட்டிக்கப்பட்டநிலையில், இன்னொரு போரில் சச்சரவில் சிக்கிக்கொள்வது என்பது, ஆளும் தட்டைப் பொறுத்தவரை அமெரிக்க தலைமையை பின்தொடருவதைத் தவிர வேறு வழிஇல்லை என்பதாகும். உண்மையில் பிரிட்டனின் ஆற்றொணா பொருளாதார மற்றும் நிதி நிலைமைகள் புதிய இராணுவ சாகசங்களுக்குள் உந்தித் தள்ளுகிறது.

பிரிட்டன் யேமனில் மிகவும் பொருத்தமான அனுபவத்தை நம்பத்தகுந்த வகையில் கொண்டுவரக்கூடும். 1960களில் ஹரோல்ட் வில்சனின் தொழிற்கட்சி அரசாங்கத்தின் கீழ், அதன் கடைசி காலனித்துவ யுத்தங்களில் யேமன் என்று ஆன எல்லைப் பகுதியில் அது சண்டையிட்டது. மேலும் அது காட்டுமிராண்டித்தனமான யுத்தம் ஆகும்.

பிபிசி செய்தித்தொடர்பாளர் பிரையன் பரோன் "ஏடன் அவசரகால நிலை" என்று அறியப்பட்டதில், பின்வருமாறு நினைவு கூருகிறார்: "கிராட்டர் மாவட்டத்தில் (ஏடன் துறைமுகத்தின் அரபு மாவட்டம்) நீராவி சூழ்ந்த ஒரு காலையில் நான் கர்னல் கொலின் மிட்செலை - அவரது ஹங்கோ பாணியில் - இறைச்சி வெட்டுபவன் கொடுப்பது போல, பாதையில் ஆறு அரபு பிணங்களைக் குவித்துப் போட்டு வைத்திருந்த, அணிகள் கொண்ட குழுவைத் தலைமை தாங்கி நடத்திச் சென்றதன் காரணமாக பத்திரிகைகளுக்கு பைத்தியக்கார (விசரன்) மிட்ச் என்று அறியப்பட்டிருந்த அவரைக் காண்பதற்கு வந்து சேர்ந்தேன். ஒரு ரோந்துப் பிரிவை பதுங்கி இருந்து தாக்கியதற்காக அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர். " 'காட்டுக் கோழியை சுட்டுத்தள்ளுவதைப் போல இருந்தது. ஒரு விலங்கு இங்கே ஒரு விலங்கு அங்கே. சில நொடிகளில் முடிந்துவிட்டது." என்றார் கர்னல்.

காலனித்துவ கொடூரத்திற்கான இந்த அலட்சிய மனப்பாங்கு பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பை பண்பிட்டுக்காட்டுகிறது. பிரெளனும் ஒபாமாவும் இப்பொழுது "தோல்வியுற்ற அரசு" என்று விவரிப்பது பெரும் அளவில் அந்த காலனித்துவ அனுபவத்தை உருவாக்குவதாகும்.

பிரிட்டனின் தலையீடும் யேமனின் புவிசார் மூலோபாய முக்கியத்துவத்தால் தூண்டப்பட்டுள்ளது. மதிப்பு வாய்ந்த ஆழ் கடல் துறைமுகமான ஏடன், தூர கிழக்கை ஐரோப்பாவுடனும் அமெரிக்காவுடனும் இணைக்கும் முக்கிய உலக கடல் வழியில் நேரடியாக அமைந்துள்ளது. அது செங்கடல் மற்றும் சூயஸ் கால்வாயை அடையும் வழியைக் கட்டுப்படுத்துகிறது. அதனால்தான் அது பிரிட்டனுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது, 1967ல் பிரிட்டன் இறுதியில் வாபஸ்பெறுமாறு நிர்பந்திக்கப்பட்டபொழுது, அமெரிக்கா அந்தப் பகுதியில் உள்ள தனது பதிலாளான செளதி அரேபியா மூலம் ஏமனைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டது.

1962க்கும் 1970க்கும் இடையில், வடக்கு ஏமன் உள்நாட்டு யுத்தத்தில் சோவியத் ஒன்றியம் மற்றும் எகிப்தின் ஆதரவைப் பெற்றிருந்த ஏமன் குடியரசிற்கு எதிராக அரச படைகளை செளதி அரேபியா ஆதரித்தது. பிரிட்டன் வாபஸ் பெற்ற பின்னர், தெற்கு யேமன் சோவியத் ஒன்றியத்துடன் கூட்டு சேர்ந்தது. 1990 வரை ஐக்கிய யேமன் என்ற ஒன்று இருக்கவில்லை.

1991 ஆரம்பத்தில் முதலாவது வளைகுடா யுத்தத்திற்கு யேமன் ஆதரவைத் தர மறுத்தபொழுது, செளதி அரேபியா ஒரு மில்லியன் யேமனிய தொழிலாளர்களை வெளியேற்றி பதிலடி கொடுத்தது, நாட்டின் ஸ்திரமின்மையையும் ஏழ்மையையும் கூட்டியது. உலகில் அருமையான துறைமுகங்களில் ஒன்றை யேமன் கொண்டிருந்தபோதிலும், காலனித்துவ மரபு மற்றும் குளிர்யுத்த மோதல்கள் யேமனை இன்னும் ஏழ்மை பீடித்த அரபு அரசாக் தொடர்ந்து இருத்தி வருகிறது. அந்நாட்டின் 25 மில்லியன் மக்ட்தொகையில் பெரும்பான்மையினர் நாளொன்றுக்கு 2 டாலர்களுக்கு குறைவானதில் வாழ்கின்றனர்.

அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் உண்மையான இலக்கு அல்கெய்டா அல்ல, மாறாக யேமனிய குடிமக்கள்தான். குடிமக்களுக்கு எதிராக விமான தாக்குதலைப் பயன்படுத்துவது ஆதிவாசி கிளர்ச்சியாளர்களின் கிராமங்களில் குண்டு வீசும் பிரிட்டனின் தந்திரத்தின் ஒரு நவீன பாணியாகும். இந்த அரசு பயங்கரவாதம் ஒரு புதிய மட்டத்திலான அழிவுகளை எடுத்துதிருக்கிறது, ஆனால் நோக்கம் தெளிவாகவே ஒரேமாதிரியானதுதான். அமெரிக்காவின் நோக்கம் இந்த மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பிராந்தியத்தில் அதன் காலனித்துவ கட்டுப்பாட்டை விஸ்தரிப்பதுதான். முந்தைய காலனித்துவ அரசான பிரிட்டன், கொள்ளைப் பொருளில் அதன் பங்கை உத்தரவாதம் செய்வதை நோக்கங்கொண்டதாகும்.

"பயங்கரவாதத்தின் மீதான போர்" என்று அழைக்கப்படுவதில் அதன் புதிய முன் அரங்கை திறப்பது கணக்கிடமுடியா விளைவுகளைக் கொண்டிருக்கும். யேமன் அதன் கடலோர காவற்படையை அபிவிருத்தி செய்வதில் யேமனுக்கு பிரிட்டன் உதவி செய்யும் என்று பிரெளன் குறிப்பாகக் கூறினார். கடந்த அக்டோபர் அன்று, யேமனிய கடலோர காவற்படை வட யேமனில் உள்ள ஹெளத்தி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்களை சுமந்து சென்றதாகக் கூறப்படும் ஈரானிய கப்பலைக் கைப்பற்றியது. ஏடன் வளைகுடாவின் வழியாக உலகின் கப்பல் போக்குவரத்து இருக்கையில், அத்தகைய கடற் கொள்கை வெடிக்கும் தன்மையை பூகோள விளைபயன்களைக் கொண்டிருக்கிறது. பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க ஆதரவுடன் யேமன் வணிக்க் கப்பல்களை சிறைப் பிடிப்பது பல சர்வதேச மோதல்களை பற்றவைக்கும் அச்சுறுத்தலைக் கொண்டிருக்கிறது.