World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள் ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
Questions mount over attempt to bomb Detroit-bound jetliner டெட்ரோயிட் செல்லும் ஜெட் விமானத்தைத் தகர்க்கும் தோல்வியுற்ற முயற்சி பற்றி வினாக்கள் அதிகரிக்கின்றன By Patrick Martin நோர்த்வெஸ்ட் விமானம் 253 ஐ அது டெட்ரோயிட்டை அடைய இருக்கையில் குண்டு வைத்துத் தகர்த்தல் என்ற முயற்சி தோல்வியுற்று 10 நாட்களில் --முயற்சி வெற்றி பெற்று இருந்தால் கிட்டத்தட்ட 300 பேர் உயிரைக் குடித்திருக்கும்-- அமெரிக்க அரசாங்க நிறுவனங்களின் செயல்கள் பற்றி பல வினாக்கள் பெருகியுள்ளன. ஒபாமா நிர்வாகத்தால் கூறப்பட்டு விமர்சனமற்ற வகையில் கிளிப்பிள்ளை போல் அமெரிக்கச் செய்தி ஊடகம் மீண்டும் கூறும் உத்தியோகபூர்வத் தகவல்படி, அமெரிக்க தேசிய பாதுகாப்புக் கருவியின் பல கூறுபாடுகள் கீழே உள்ள நன்கு அறியப்பட்ட உண்மைகளை ஒன்றாக இணைக்கும் திறனற்றவை போல் தோன்றுகின்றன. * மே மாதத்தில் பிரிட்டிஷ் அரசாங்கம் லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் படித்து வந்த ஒரு இளம் நைஜீரிய மாணவர் உமர் பரூக் அப்துல்முதல்லப்பின் மாணவர் அனுமதியை திரும்பப் பெற்று, நாட்டில் அவர் மீண்டும் வருவதற்கு தடைவிதித்து அவரை கண்காணிப்புப் பட்டியலில் இருத்தியது. * ஆகஸ்ட் மாதம் அமெரிக்க உளவுத்துறைப் பிரிவுகள் யேமனில் இருந்து ஏற்பாடு செய்யப்பட உள்ள அமெரிக்க இலக்கு ஒன்றிற்கு எதிரான நடவடிக்கை அல் குவைதா விவாதங்களில் ஒரு "நைஜீரியனை" பயன்படுத்தி செய்வது பற்றி அறிந்தன.* நவம்பர் 19ம் தேதி அப்துல்முதல்லப்பின் தந்தை, ஒரு முக்கிய நைஜீரிய வங்கியாளர் அபுஜாவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு சென்று வெளிவிவகார அமைச்சகத்திற்கும் CIA அதிகாரிகளுக்கும் தன்னுடைய மகன் தீவிர இஸ்லாமியவாத செல்வாக்கில் அகப்பட்டு விட்டதாகவும், அவர்களோடு சேர்வதற்கு யேமனுக்கு சென்றிருப்பதாகவும் குடும்பத்துடன் தொடர்பை முறித்துக் கொண்டுவிட்டதாகவும் கூறினார்.* தகப்பனாரின் தகவலை அடிப்படையாகக் கொண்டு, தூதரகத்தில் இருந்த வெளிவிவகார அமைச்சகம் மற்றும் CIA அதிகாரிகள் நவம்பர் 20ம் தேதி வாஷங்டனுக்கு தகவல் கொடுத்தனர்; தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தில் அப்துல்முதல்லப் பற்றி ஒரு கோப்பு திறக்கப்பட்டது; அதுதான் பயங்கரவாதத் தகவல் பற்றிய வாஷிங்டனில் உள்ள மைய தகவல் சேகரிப்பு நிலையம் ஆகும்.* டிசம்பர் 16ம் தேதி அப்துல்முதல்லப் கானாவில் உள்ள பயணச் சீட்டு அலுவலகத்திற்கு சென்று 2,831 டாலர் ரொக்கப்பணம் கொடுத்து லாகோஸ்-ஆம்ஸ்டர்டாம்-டெட்ரோயிட்டிற்கு செல்லும் நோர்த்வெஸ்ட் ஏயர்லைன்ஸ் விமானத்தில் ஒரு இடத்திற்கு பதிவு செய்தார். அது டெட்ரோயிட்டில் கிறிஸ்துமஸ் தினத்தன்று வந்து சேரும். * டிசம்பர் 25 அன்று, அப்துல்முதல்லப் ஆம்ஸ்டர்டாமில் ஒரு சிறு கைப்பையுடன் மட்டுமே அட்லான்டிக் கடந்த பயணத்திற்கு விமானத்தில் ஏறினார். வாடிக்கையான விதிகளைப் பின்பற்றி அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை இவர் விமானத்தில் ஒரு பயணி என்று விமானம் புறப்பட ஒரு மணி நேரம் முன்னதாக தகவலைப் பெற்றது. வடமேற்கு விமான 253 எண் பயணத்தின் மீது குண்டுத் தாக்குதலை தடுத்த நிறுத்த முற்பட்டதாக அமெரிக்க அரசாங்கம் கூறும் தொகுப்பை எந்த அறிவுடைய நபரும் நம்புவதற்கில்லை. பல மாதங்களுக்கு முன்னரே எச்சரிக்கைகள் கொடுக்கப்பட்டிருந்த போதிலும் அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் குண்டுச் சதியை கண்டுபிடிக்க முடியவில்லை என்ற கூற்று நம்பகத்தன்மை உடையது அல்ல. உத்தியோகபூர்வ விவாதமும் இதேவித அலங்காரக் கதை செப்டம்பர் 11, 2001 பயங்கரவாதத் தாக்குதல்கள் பற்றி அமெரிக்க உளவுத்துறையின் பங்கை மூடி மறைக்கும் விதத்தில் இருந்ததைப் போல்தான் உள்ளது--அதாவது "புள்ளிகளை அவர்கள் இணைப்பதில் தோற்றனர்" என்ற கதை. இந்த உவமை மிகவும் ஆழ்ந்த வழிவகை இருப்பது போலவும் ஒவ்வொன்றும் நிரபராதித் தன்மையை காட்டினாலும், அறிவார்ந்த பகுப்பாய்வு முறையில் பயங்கரவாத நடைமுறைகளின் வடிவமைப்புக்களை நன்கு அறிந்த வல்லுனர்கள் இணைத்துவிடுவர் என்பது போலவும் காட்டப்படுகிறது. அத்தகைய பெரும் வழிவகை ஒன்றும் வடமேற்கு ஏர்லைன்ஸிற்கு எதிரான சதியைக் கண்டுபிடிக்கத் தேவைப்படவில்லை. மேலே குறிப்பிடப்பட்டுள்ள உண்மைகளே தொடர்ச்சியான நெருப்பு பற்றிய எச்சரிக்கைகள்தான்; ஒவ்வொன்றுமே போதுமான எச்சரிக்கையை அளித்திருக்க வேண்டும். அப்துல்முதல்லப்பை அமெரிக்கா செல்லவிருக்கும் ஜெட் விமானத்தில் ஏறுவதைத் தடுப்பதே சாதாரணமாக எந்த நடுத்தர நாட்டு அரசாங்கத்தாலும் எளிதில் செய்திருக்க முடியும்; உலகிலேயே மிகச் சக்தி வாய்ந்த இராணுவ/உளவுத்துறை கருவியைக் கொண்டிருக்கும் நாட்டினால் முடியாதது எனக் கூறப்பட இயலாது. ஆம்ஸ்டர்டாமில் ஜெட் விமானத்தில் ஏறுவதற்கு நைஜீரியன் அனுமதிக்கபட்டார் என்றால், அமெரிக்க இராணுவ/உளவுத்துறை கருவியின் ஏதோ ஒரு பிரிவு அவரை உள்ள அனுமதிக்கும் முடிவை எடுத்தது என்றுதான் பொருள். "புள்ளிகளை இணைப்பதில்" உண்மையான தோல்வி என்பது அமெரிக்க உளவுத்துறை கருவியின் செயலற்ற தன்மையில் இருந்து முடிவுகளை எடுக்க மறுப்பதுதான். எதுவும் செய்ய வேண்டாம் என்ற முடிவை எவர் எடுத்தது? ஏன் அவர்கள் அந்த முடிவை எடுத்தனர்? குண்டு போட இருந்த நபர் தோல்வியுறுவார் என்ற கருத்து இருந்ததா? ஒபாமா நிர்வாகத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்த வேண்டும் என்று வேண்டுமென்றே நடத்தப்பட்ட முயற்சியா இது? மத்திய கிழக்கில் அமெரிக்க இராணுவ நடவடிக்கை இன்னும் அதிகரிப்பதற்கு போலிக் காரணம் கொடுப்பதற்கான ஒரு முயற்சியா இது? உலகில் முக்கிய உளவுத் துறை அமைப்புக்களில் --ரஷ்ய FSB, பிரிட்டிஷ் MI-5, இஸ்ரேலிய மொசாட், பிரெஞ்சு SGDN, சீனாவில் இரண்டாம் உளவுத்துறை-- இத்தகைய கேள்விகள் கேட்கப்படுகின்றன. இதைத்தவிர மற்றொரு வினாவும் எழுகிறது. தன்னுடைய சொந்த தேசிய பாதுகாப்புக் கருவிமீது ஒபாமா நிர்வாகம் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கிறதா? இக்கருவிகள் உத்தியோகபூர்வமாக கிறிஸ்துமஸ் தின தாக்குதல் பற்றி கூறப்படும் விளக்கத்தை ஐயத்திற்கு இடமின்றி ஒதுக்கிவிட்டுள்ள காரணம் அது அமெரிக்க மக்களை ஏமற்றுவதற்காக கொடுக்கப்பட்ட தவறான தகவல் என்பதுதான். இந்த வினாக்களுக்கெல்லாம் விடைகள் கண்டுவிட்டதாக நாங்கள் கூறவில்லை. ஆனால் ஒரு தீவிர விசாரணைக்கு அவை தொடக்கப் புள்ளி ஆகும். ஏதும் இல்லை என்று முன்னதாகவே, இப்பொழுது அமெரிக்கச் செய்தி ஊடகத்தால் கூறப்படுவது போல் நிராகரிக்கப்பட்டு விட்டால், அதன் விளைவு தவிர்க்க முடியாத வெள்ளைப் பூச்சாகத்தன் இருக்கும்; அப்படித்தான் 9/11 தாக்குதல்கள் பற்றி பல உத்தியோகபூர்வ "விசாரணைகளின்" கதியும் ஆயிற்று. இந்த விதத்தில் நியூ யோர்க் டைம்ஸில், "அவர்கள் ஏன் இதைக் காணவில்லை" என்ற தலைப்பில் வந்த தலைங்கம் சனிக்கிழமை வந்தது ஒரு தேர்ந்த மாதிரியாக உள்ளது. இத்தலையங்கம் உளவுத்துறை, உள்ளநாட்டுப் பாதுகாப்பு அதிகாரத்துவம் இரண்டும் அப்துல்முதல்லப் குறித்த தகவலை, ஒன்றாக இணைக்க முடியவில்லை என்ற கூற்றை, அப்படியே ஏற்றுக் கொள்கிறது. "ஏராளமான தகவல்களைப் பிரித்து எது உடனடியானது, தொடரப்பட வேண்டியது என்று முடிவெடுக்க வேண்டியது சந்தேகத்திற்கு இடமில்லாமல் பெரும் முயற்சிதான். இருந்தபோதிலும், கூகிள் போல் தகவலை அவ்வப்பொழுது நடைமுறைப்படுத்தி இணைக்கும் ஒரு நல்ல வேலையைக்கூட செய்ய முடியவில்லை என்பது நம்பத்தகுந்ததாகவே இல்லை, அச்சுறுத்துவதாகவும் உள்ளது" என்று டைம்ஸ் கூறியுள்ளது. உண்மையில் இது "நம்ப முடியாததுதான் அதாவது நம்பகத்தன்மை உடையது அல்ல. அமெரிக்க முதலாளித்துவ செய்தி ஊடகம் தனக்கு விதித்துக் கொண்டுள்ள முறைசாரா சுய தணிக்கையை ஒட்டி பலவற்றையும் கூறுவதில் தடைகொண்டுள்ளார்கள் என்றாலும், டைம்ஸின் ஆசிரியர்கள்கூட அக்கதையை நம்புகிறார்களா என்பது சந்தேகம்தான். ஞாயிறு காலை தொலைக்காட்சி நிகழ்வுகளில் தொடர்ச்சியாக தோன்றிய ஒபாமாவின் தலைமை வெள்ளை மாளிகை பயங்கரவாத எதிர்ப்பு ஆலோசகர், முன்னாள் CIA அதிகாரி ஜோன் பிரென்னன், அமெரிக்க அரசாங்கத்தின் தகவல்களை கையாளும் முறை கூகிள் மற்றும் அமசான்.காம்மின் திறனுக்கு ஒப்பானவைதான் என்று அறிவித்தார். இது ஒன்றும் வினாவிற்கு விடையிறுக்கவில்லை. அப்துல்முதல்லப்பை நோர்த்வேஸ்ட் விமானத்தில் ஏற அனுமதித்த முடிவை எடுத்தது யார்? செய்தி ஊடகத்தில் இது பற்றி வார இறுதியில் வந்துள்ள கூடுதல் தகவல்கள் இந்த முடிவு கபடமில்லாத விளைவு என ஏற்பதைத்தான் கடினமாக்கும். "ஒரு நெருங்கிய குடும்ப உறவினர்" அப்துல்முத்தலப்பின் தந்தை அமெரிக்க அரசங்கத்திற்கு, "அவன் அனுப்பும் கருத்துக்களை கவனியுங்கள். அவன் பாதுகாப்பிற்கு ஆபத்தானவன்" என்று எச்சரிக்கை கொடுத்தாக வாஷிங்டன் போஸ்ட் மேற்கோளிட்டுள்ளது. அமெரிக்க தேசியப் பாதுகாப்பு பெற்றுள்ள பரந்த அதிகாரங்கள், உலகின் மின்னஞ்சல் முழுவதையும் கண்காணிக்கும் அதிகாரம் உட்பட, அமெரிக்க தேசப் பற்று சட்டத்தில் விரிவாக்கப்பட்டதையும் கருத்தில் கொண்டால், இத்தகைய துப்பு இளம் நைஜிரியன் பற்றி அனைத்து மின்னஞ்சல் தொடர்புகளையும் விரைவில் கண்காணிப்பிற்கு உட்படுத்தியிருக்கும். அமெரிக்க அரசாங்கத்தின் பிரதிநிதிகளுக்கு தந்தை தன்னுடைய மகனின் நைஜீரிய பாஸ்போட் எண்ணைக் கொடுத்ததாகவும் அது தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்திற்கு அனுப்பப்பட்டது என்ற தகவல்களும் வந்துள்ளன. ஆனல் வெளிவிவகார அமைச்சககமோ, தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையமோ ஒரு முறையான அமெரிக்க விசாவை அப்துல்முதல்லப் கொண்டிருந்தாரா என்பது பற்றி ஆராயவில்லை --இந்த உண்மை அமெரிக்க அரசாங்கத் தகவல் தொகுப்புக்களில் இருந்து உடனடியாக சேகரிக்கப்பட்டு இருக்கலாம்-- அல்லது விசாவை இரத்து செய்ய முயற்சி எடுக்கப்பட்டதா என்றும் தெரியவில்லை. "குடும்பத்திற்கு நெருக்கமான ஆதாரத்தை" சுட்டிக்காட்டிய டைம்ஸ் ஏடு, "அமெரிக்க விமானம் ஒன்றை தகர்ப்பதாகக் கூறப்பட்ட அச்சுறுத்தல்தான் பெற்றோர்களுக்கு பெரும் கவலையைக் கொடுத்து, தகப்பனார் அமெரிக்க தூதரகத்திற்கு சென்று எச்சரிக்கை கொடுப்பதில் முடிவுற்றது. குறிப்பிட்ட தாக்குதல் இலக்கு காலத்திற்கு ஒரு மாதம் முன்பே அமெரிக்க அதிகாரிகளுக்கு எச்சரிக்கை கிடைத்திருந்தது என்று ஆகிறது. நியூஸ்வீக் ஏடு செளதி நாட்டின் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவுத் தலைவர் மகம்மத் பின் நயப், வெள்ளை மாளிகையில் கடந்த இலையுதிர்காலத்தில் பிரென்னனுக்கு நோர்த்வெஸ்ட் தாக்குதலில் பயன்படுத்தப்பட இருக்கும் தெளிவான உத்திகளைக் கூறியாகவும், அதாவது PETN வெடிப் பொருட்களை தன்னுடைய உள்ளாடைகளில் மறைத்துவைத்தல் பற்றி கூறினார்; இந்த முறைதான் நயப்பின் மீது அல் குவைதா நடத்திய படுகொலை முயற்சி ஒன்றில் இருந்தது. மேலும், நியூஸ்வீக் கருத்துப்படி, NSA, அப்துல்முதல்லப் மற்றும் அமெரிக்காவில் பிறந்த இஸ்லாமிய மத குரு மகம்மத் அல்-அவலாகிக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல்களை கவனித்தது; பிந்தைய நபர் இப்பொழுது யேமனில் வசிக்கிறார்; அவர் 13 உயிர்களைக் குடித்த டெக்ஸாஸ் Ft.Hood இராணுவ நபர்கள் மீதான தாக்குதலுக்கு சில மாதங்களுக்கு முன்பு மேஜர் நிடல் மாலிக் ஹாசனுடன் தொடர்பு கொண்டிருந்தார். நவம்பர் மாதம் ஒரு கிறிஸ்துமஸ் "வியப்புச் செய்தி" அமெரிக்காவிற்கு எதிரான போராட்ட அரங்கில் யேமனை முக்கியமாக்கும் நிகழ்வு ஒன்று நடக்க இருப்பதாகக் கணித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். 9/11 தாக்குதல்களில் நடந்ததைப் போலவே அமெரிக்க அரசாங்கம் மற்றும் அமெரிக்க செய்தி ஊடகத்தின் எந்தப் பிரிவின் மீதும் என்ன நடந்தது என்பது பற்றி ஒரு நேர்மையான ஆய்வை நடத்தும் என்பதில் நம்பிக்கை வைக்க முடியாது. இந்த உண்மையே அமெரிக்காவில் ஜனநாயக உரிமைகள் தொடர்ந்து அரிக்கப்பட்டுள்ளது என்பதற்கும், அமெரிக்க, உலக மக்கள்பால் இது பிரதிபலிக்கும் மகத்தான ஆபத்திற்கும் நிரூபணம் ஆகும். |