WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா :
பிரித்தானியா
British fire service faces downsizing and
privatisation
பிரிட்டிஷ் தீயணைப்பு சேவை எண்ணிக்கைக்
குறைப்பு மற்றும் தனியார்மயமாக்குதலை எதிர்கொள்ளுகிறது
By Ajantha Silva and Tony Robson
4 January 2010
Use this
version to print | Send
feedback
பிரிட்டனில் உள்ள தொழிற்கட்சி அரசாங்கம்
Fire and Rescue Service (FRS)
என்னும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பிரிவின் மீது கடுமையான வரவு-செலவுத் திட்ட குறைப்புக்களை சுமத்துகிறது;
இது நூற்றுக்கணக்கான வேலை இழப்புக்களை ஏற்படுத்துவதோடு பொதுப் பாதுகாப்பிற்கும் ஊறு விளைவிக்கும்.
பொதுச் செலவை சந்தைக் கட்டுப்பாட்டின் அடிப்படையில் குறைப்பதற்கு மத்திய
அரசாங்கத்தால் பயன்படுத்தப்படும் தேர்ந்தெடுக்கப்படாத தணிக்கைக்குழு (Audit
Commission) பொது மக்களுக்கு ஆபத்து இல்லாமல் உள்ளூர்
மட்டத்தில் திறமையை அதிகரிக்கும் விதத்தில் 200 மில்லியன் பவுண்டுகளை சேமிக்க முடியும் என்று கூறுகிறது. ஆனால்
ஏற்கனவே 2004 இருந்து 2008 வரையிலான காலத்தில் 200 மில்லியன் பவுண்டுகள் பெறுமான குறைப்புக்கள் செய்யப்பட்டுவிட்டன.
எனவே இன்னும் குறைப்புக்கள் என்றால் தீயணைக்கும் பிரிவில் உள்ளவர்களுக்கு பெரும் வேலை இழப்புக்கள் என்ற
பொருளைத்தான் தரும்.
இது பொதுவாக வணிகநிலையங்களில், வீடுகளில் நெருப்பு ஏற்படல் அதிகரித்துள்ளது
என்ற நேரத்தில் வந்துள்ளது. தணிக்கைக் குழு கருத்துப்படி, "குறைந்த வருமானம் உடைய, தனியாக வசிக்கும் மக்கள்
தீயின் பாதிப்பிற்கு உட்பட்டு இறக்கக்கூடும் அல்லது காயங்களைப் பெறக்கூடும். புகைபிடித்தல், சுகாதாரக்
குறைவு, இயலாமை, தரமற்ற வீடுகள் அமைப்பு ஆகியவை ஆபத்தை அதிகரிக்கின்றன. அதிகம் நகர முடியாத மக்கள்தான்
தீவிபத்துக்களில் 30 சதவிகிதத்திற்கும் மேல் உயிரிழக்கினறனர் என்று அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது."
உள்ளூர் தீயணைப்பு அதிகாரிகள் ஆட்குறைப்பு, கருவிகள் குறைப்பு மற்றும் தீயணைப்பு
நிலையங்கள் குறைப்பு ஆகியவற்றை பெரிதும் மேற்கொள்ளும் வழிவகையில் உள்ளனர்.
* வார்விக்ஷயரில் உள்ள
FRS தீயணைப்புத்
துறையிலேயே மிக அதிகமான குறைப்புக்கள், மூடல்கள் திட்டங்களை சுமத்த உள்ளது. அனைத்துவித தீயணைப்பு பயன்படுத்தல்களில்
மூன்றில் ஒரு பகுதி குறைக்கப்பட்டு, ஏழு தீயணைப்பு நிலையங்கள் மூடப்பட உள்ளன. கிட்டத்தட்ட 100 ஒப்பந்த
தீயணைப்புப் பிரிவினரும் (பகுதி நேர தீயணைப்பாளர்கள்) வேலையில் இருந்து அகறறப்பட்டு அவர்கள் கையாண்ட
கருவிகளும் அகற்றப்பட உள்ளன.
* லங்காஷயரில் எட்டு தீயணைப்பு
படையினர்களில் ஒருவர் வேலை இழக்கும் ஆபத்தில் உள்ளார்.
*
எசெக்ஸில் 10 தீயணைப்பு படையினர்களில் ஒருவர் குறிப்பிட்ட மீட்பு நடவடிக்கைகளுக்கு
முற்றுப் புள்ளி வைத்தல், அதன் கருவிகள் அகற்றப்படுதல் ஆகியவற்றினால் வேலையிழக்கும் அபாயத்தில் உள்ளார்;
இதையொட்டி 24 மணி நேரமும் உயிர்காக்கும் கருவிகள் கிடைக்க வாய்ப்பில்லை.
* க்ளீவ்லாந்தில் ஐரோப்பாவின் மிகப் பெரிய பெட்ரோகெமிக்கல் தொழிற்சாலைகள்
உள்ள பகுதியின் மையத்தில் உள்ள பில்லிங்காம் தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு படையினர்களின் எண்ணிக்கையை
குறைக்கும் திட்டங்கள் வந்துள்ளன. தீயணைக்கும் துறை அதிகாரிகள் ஒரு தீயணைப்பு வாகனக் குறைப்பிற்கு ஏற்பாடு
செய்வதுடன், நிலையத்தில் ஒரு பம்ப் மட்டும்தான் இருக்கும், 22 முன்னணி ஊழியர்கள் நீக்கப்படுவர் என்றும்
முடிவெடுத்துள்ளது. இந்தப் பகுதியில் பன்ஸ்பீல்ட் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இருக்கும் பெரிய சேமிப்பு
தொட்டிகளின் திறனைப் போல் 100 மடங்கு திறன் உண்டு; அந்த சுத்திகரிப்போ 2005ம் ஆண்டில் ஐரோப்பாவிலேயே
மிகப் பெரிய சமாதான கால வெடிப்பிற்கு உட்பட்டு புகைந்து போயிற்று.
பொதுத்துறைகள் முழுவதிலும் நடப்பதைப்போல், "நவீனப்படுத்துதல்" என்ற பெயரில்
சமூக அளவில் பிற்போக்குத்தன மாறுதல்கள் அளிக்கப்படுகின்றன. அதிக வேலைக்கு உட்படும் தொழிலாளர்
தொகுப்பு நீடித்த பணி நேரத்தில் ஈடுபட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தீயணைப்பிரிவு அதிகாரிகள் ஷிப்ட்
வடிவமைப்பில் மாறுதல் கொண்டுவந்து இரவுநேரப் பணி நேரத்தைக் குறைத்து, வேலைகளை அகற்ற முற்படுகின்றனர்.
லங்காஷயரின் FRS
வாரத்திற்கு 84 மணிப் பணிநேரத்தை அறிமுகப்படுத்த விரும்புகிறது. தெற்கு யோர்க்ஷயரில் தீயணைப்பு அதிகாரிகள்
ஷிப்ட் வடிவமைப்பில் கையெழுத்திடாத அனைத்து முதல்வரிசை தீயணைப்பு படையினர்களையும் அகற்ற உள்ளதாக
அச்சுறுத்தியுள்ளது.
அவசரத் தீ கட்டுப்பாட்டு அறைகளில் உதவி ஊழியர்களை அதிகம் குறைப்பதும்
அரசாங்கத்தின் (Fire Control Project)
தீ கட்டுப்படுத்தல் செயற்திட்டத்தில் உள்ளது. இங்கிலாந்தில்
கட்டுப்பாட்டு அறைகளின் எண்ணிக்கை இப்பொழுது 46 என்று உள்ளது. ஆனால் இது உள்ளூர் நிலையங்கள் என்பதைவிட
ஒன்பது வட்டார நிலையங்கள் என்று குறைக்கப்படும் 2008 ல் தென்மேற்குப் பகுதியில் வெளியிடப்பட்ட
எண்ணிக்கையை தொடர்ந்து வேலை இழப்புக்களின் தன்மை தெரிய வரும்; அதில் ஊழியர் எண்ணிக்கை 175ல் இருந்து
63 எனக் குறைக்கப்பட்டது.
தீக் கட்டுப்படுத்தல் ஊழியர்கள் பொதுமக்களிடம் இருந்து 999 அழைப்புக்களைப்
பெற்று தீயணைக்கும் குழுவினரின் விடையிறுப்பை ஒருங்கிணைக்கின்றனர். அவை இப்பொழுது உள்ளூர் தீயணைப்பு பிரிவுடன்
ஒருங்கிணைக்கப்படுகின்றன; அவர்களுக்கு அப்பகுதி, ஊழியர்கள், நிலையத்தில் இருக்கும் கருவிகள் ஆகியவை பற்றித்
தெரியும்; இது திறமையான எதிர்கொள்ளலுக்கு உதவும். தீ கட்டுப்படுத்தல் செயற்திட்டம் (Fire
Control Project) அறிமுகப்படுத்தும் புதிய தொழில்நுட்பம்
நன்கு பயிற்சி பெற்ற, முறையான ஊழியர்களைக் கொண்ட கட்டுப்பாட்டு அறைகளுக்கு சமமாக இயங்க முடியாது.
அழைப்புக்களை ஏற்கும் திறன் குறையாது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்; ஆனால் 2008ல் அரசாங்கம்
ஏற்படுத்திய மாறுதல்கள் இதை குறைமதிபபிற்கு உட்படுத்துகின்றன; 999 தொலைபேசி செயலர்களுக்கு முக்கிய
நேரங்களில் தீயணைப்பிற்கான அழைப்புக்களை வரிசைப் படுத்துவதிலும் முன்னுரிமை கொடுப்பதிலும் உரிமை இருக்கும்.
தீக்கட்டுப்பாட்டுத் திட்டம் 2004ல் தொடங்கி 2007ல் 100 மில்லியன் பவுண்டுகள்
செலவில் முடிக்கப்பட்டிருக்கும். ஆனால் இப்பொழுது திருத்தி அமைக்கப்பட்ட அட்டவணையின்படி இதை 2012ல் தான்
முடிப்பார்கள். சமீபத்திய மதிப்பீடு ஒன்று இதன் மொத்த செலவு 1.4 பில்லியன் ஆக இருக்கும் என்று கூறுகிறது.
எப்படி இச்செலவு பகிர்ந்து கொள்ளப்படும் என்பது பற்றி இன்னும் உடன்பாடு ஏற்படவில்லை. ஆனால் பெருகிய
செலவுகள் மக்கள் மீதான நகரவை வரிவிதிப்புக்களில் பாதிப்பை ஏற்படுத்த தீயணைப்புப் பணிக்கான நிதிகளில்
இன்னும் குறைப்பை ஏற்படுத்தும். இதற்கிடையில் ஆலோசகர்கள் கட்டணத்தை 40 மில்லியன் என்று உயர்த்தியுள்ளனர்.
தீயணைப்பு படையினர்களுக்கும் பொது மக்களுக்கும் குறைப்புக்கள் வாடிக்கையாகிவிட்ட
நிலையில், அரசாங்கம் தனியார் துறைக்கு அதிக இலாபம் கொடுக்கும் ஒப்பந்தங்களை தொடர்ந்து அளிக்கிறது.
தீயணைப்புப் பிரிவு கட்டமைப்பு மற்றும் கருவிகளை நிறுவுதல், பராமரித்தல் ஆகியவை தனியார்துறை நிதிய
முன்முயற்சியின் கீழ் நடக்கிறது. இது பின் அரசாங்கத்தால் வாடகைக்கு எடுக்கப்படும். 1998ல்
FRS பற்றிய
கன்சர்வேட்டிவ் கொள்கையை தொழிற்கட்சி அரசாங்கம் விரிவாக்கியுள்ளது.
இத்தகைய ஒப்பந்தத்தில் முதல் முறையாக --கடந்த ஜூலையில் ஒப்புக்
கொள்ளப்பட்டது-- ஒரு தனியார் நிறுவனத்திற்கு இப்பொழுது முன்னணி தீயணைக்கும் படையினர்களை அளிப்பதற்கான
ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது. LFEPA
எனப்படும் லண்டன் தீ, நெருக்கடிக்கால திட்ட அதிகாரம் ஒரு ஐந்து ஆண்டு
கால ஒப்பந்தத்தை AssetCo.
க்கு 700 பின்னனி ஆதரவு தீயணைப்பு படையினர்களை கொடுக்குமாறு
கொண்டுள்ளது. ஏற்கனவே AssetCo.
லண்டன் மற்றும் லிங்கன்ஷயரில் பயன்படுத்தப்பட்ட முன்னிலை தீத் தடுப்பு, மீட்பு வாகனங்கள், செயல்பாட்டுக்
கருவிகளின்மீது உரிமை கொண்டாடுவதுடன் அவற்றைப் பராமரிக்கவும் செய்கிறது.
இந்த ஒப்பந்தம் மற்ற
LRA க்களாலும் தேசிய அளவில் பின்பற்றக்கூடிய முன்னோடியாகக்
கருதப் படுகிறது. லங்காஷயரின் FRS
இந்த இடைப்பட்ட சக்திக்கு அடிப்படைப் பயிற்சியைத்தான் தரும்; அது
AssetCo விற்கு
ஒரு தனியார் பாதுகாப்பு நிறுவனமான Reliance
ஆல் வழிமொழியப்படும், இது ஒரு தற்காலிகமான தளம்தான் என்று பைனான்சியல் டைம்ஸ் கூறியுள்ளது.
இந்த நடவடிக்கையின் நோக்கம் நன்கு தெளிவானது. லண்டன் ஈவினிங் ஸ்டான்டர்ட், "9 மில்லியன்
பவுண்டுகள் 700 வேலைநிறுத்தத்தை முறிக்கும் தீயணைப்புப் படையினருக்காக ஒதுக்கப்படும்." என்று கூறியுள்ளது.
நிறுவனமே கூறியதாவது: "ஒரு இங்கிலாந்தின் தீயணைப்பு மீட்புப் பணிக்கு
கொடுக்கப்படும் அதன் தன்மையிலான முதல் ஒப்பந்தமாகும் இது. பாதுகாப்பு அமைச்சரகத்தின் உதவியை
நம்பியிருக்காமல் தன் வணிகத் தொடர்பு முறைகளைக் காக்க தீயணைப்பு மீட்பு அதிகாரிகள் பெருகிய முறையில்
பங்கு கொண்டிருப்பதை இது பிரதிபலிக்கிறது."
2004ல் இருந்து உள்ளூர் தீயணைப்பு அதிகாரிகள் இராணுவத்தின் உதவி தேவைப்படாத
நெருக்கடி காலத் திட்டங்களை கொடுக்குமாறு கோரப்பட்டனர். 2003-04 இராணுவம் தேசிய தீயணைப்பு
படையினரின் வேலை நிறுத்தத்தை முறியடிக்க பயன்படுத்தப்பட்டது.
PFI குறித்துள்ள
நேரம் லண்டனில் உள்ள தீயணைப்பு படையினர்கள் வேலைநிறுத்தத்திற்கு வாக்களித்து, தொழில்துறை நடவடிக்கை
நாடு முழுவதும் வந்துள்ள நிலையில் இணைந்துள்ளது. ஆகஸ்ட்டில் இருந்து அக்டோபருக்குள் தீயணைப்புத் தொழிலாளர்
சங்கத்தில் ஐந்தில் ஒருவர் ஏதேனும் தொழில்துறை நடவடிக்கையில் தொடர்பு கொண்டிருந்தனர்.
AssetCo. உடன்பாடு என்பது
வேலைநிறுத்தத்தை முறிக்கும் தனியார்மயப் பிரிவை தோற்றுவிப்பதில் முதல் கட்டம் ஆகும்.
LFEPA உடைய
தலைவரான Brian Coleman,
Assetco
27 கருவிகளைக் கொடுக்கும் என்றும், "இவை முழு பயிற்சி பெற்று, திறனுடைய ஊழியர்களை கொண்டிருக்கும்
என்றும், வேலைநிறுத்தம் அல்லது காய்ச்சல் தொற்றுநோய் இருந்தாலோ, மற்ற காரணத்தாலோ தீயணைப்பு
படையினர்கள் பணிக்கு வர மறுத்தாலோ, வரமுடியாவிட்டாலோ செயல்படும்" என்று கூறுகிறார்.
பிரிட்டிஷ் காப்பீட்டுச் சங்கத்தினர் கடந்த ஆண்டு வணிகப் பகுதிகள், வீடுகளில் மிக
அதிக தரமான 1.3 பில்லியன் இழப்பை தீவிபத்துக்கள் ஏற்படுத்தின என்று மதிப்பிட்டுள்ள சூழலில் தீயணைப்புத்
துறையில் இத்தகைய குறைப்புககள் வந்துள்ளன. FBU
கருத்தின்படி (தீவிபத்து சாலைப் போக்குவரத்து மோதல்களில்) மீட்பு வேலைகள் கிட்டத்தட்ட ஆண்டு ஒன்றிற்கு
11,000 என்று இருப்பதாக கூறுகிறது. இந்த எண்ணிக்கையில் வெள்ளம் மற்ற நிகழ்வுகளின் பொழுதான மீட்பு
பற்றிய எண்ணிக்கை ஒதுக்கப்பட்டுவிட்டது.
முந்தைய வேலை இழப்புக்களினால் தீயணைப்புத் துறை சமாளிப்பதற்கு தடுமாறுகிறது.
1999ல் இருந்து 2008 வரை இங்கிலாந்தில் இருந்த தீயணைப்பு படையினரின் எண்ணிக்கை 1,100 குறைக்கப்பட்டு
30.284 என ஆயிற்று. ஒன்பது நிலையங்கள் மூடப்பட்டன; மூன்று மட்டுமே புதிதாக நிறுவப்பட்டுள்ளன. 2002 ல்
இருந்து கிரேட்டர் மான்செஸ்டரில் நான்கு தீயணைக்கும் படையினர்களில் ஒருவரை இழந்துவிட்டதாக
FBU தகவல்
கொடுத்துள்ளது.
தீயணைப்பு படையினர்களின் இறப்புக்கள் அதிகமாகியுள்ளதற்கும் குறைப்புக்கள் வழிவகுத்துள்ளன.
FBU
2007ல் பணியின்போது எட்டு பேர் இறந்ததாகவும், இது 30 ஆண்டுகளில் மிக உயர்ந்த எண்ணிக்கை என்றும் கூறியுள்ளது.
இறந்தவர்களில் நான்கு பேர் வார்விக்ஷயரில் உள்ள
Atherstone-On-Stour ல் ஒரு கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தை
அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். 2003-2006 காலத்தில் மற்றும் ஒரு 13 தீயணைப்பு படையினர்கள்
கொல்லப்பட்டனர். 2007 க்கு கிட்டத்தட்ட முன்னதாக ஏழு ஆண்டுகள் வரை பணியாற்றும்போது தீயணைப்பு படையினர்கள்
இறக்கவில்லை. தீயணைப்பு படையினர்கள் இறப்புக்கள் பற்றிய
FBU அறிக்கை
அவசரகால எதிர்கொள்ளல் பயிற்சி போதாத்தன்மை மற்றும் போதுமான படையினர்கள் இல்லாதது என்று செலவுக்
குறைப்பை ஒட்டிய விளைவுகளை இதற்குக் காரணமாககூறியுள்ளது.
FBU கொள்கை அளவில் வேலைக்
குறைப்புக்கள் அனைத்தையும் எதிர்க்கவில்லை; ஆனால் அதன் எதிர்ப்பை செலவுத் திறனுக்கு ஒவ்வாதவை எனக்கூறும்
அரசாங்கத் திட்டத்தின் சில கூறுபாடுகளுக்கு எதிர்ப்பு என்பதுடன் நிறுத்திக் கொள்ளுகிறது. கடந்த ஆண்டு முழுவதும்,
தேசிய அளவில் பணிவிதிகள், நிலைமைகள், வேலை இழப்புக்கள், ஷிப்ட் மாற்றங்கள் ஆகியவை
FBU வினால்
தனித்தனி உள்ளூர் பூசல்களுடன் நிறுத்தப்பட்டுள்ளன. தெற்கு யோர்க்ஷயரில் புதிய ஷிப்ட் முறை வடிவமைப்பு
சுமத்தப்படுவதற்கு விடுக்கப்பட்டிருந்த வேலைநிறுத்தத்தை திரும்பப் பெற்றுக் கொண்டது; அதன் உறுப்பினர்கள்
அதையொட்டி வேலை போகும் அபாயத்தில் தள்ளப்பட்டனர். இத்தகைய அப்பட்டமான மிரட்டலை
எதிர்கொள்ளுகையில், FBU
ஷிப்ட் மாற்றங்களை விட்டுக் கொடுத்து அதற்குப் பதிலாக கட்டுப்படுத்தும் நடுவர் தீர்ப்பிற்கு இணங்கத் தயார்
என்று கூறியுள்ளது. இப்படிப் பணிந்து போவது LRA
வினால் நாடெங்கிலும் கருத்தில் கொள்ளப்படும்; அவை இதே போன்ற தாக்குதல்களைச் சுமத்த முன்வரும். |