World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France: CGT congress confirms orientation to Sarkozy

பிரான்ஸ்: CGT மாநாடு சார்க்கோசிக்கு ஆதரவை உறுதிப்படுத்துகிறது

By Anthony Torres and Alex Lantier
9 January 2010

Use this version to print | Send feedback

தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு (CGT) டிசம்பர் 7 முதல் 11 வரை தன்னுடைய 49 வது மாநாட்டை நடத்தியது. CGT பிரான்சின் மிகப் பெரிய தொழிற்சங்கம் ஆகும்; வரலாற்றுரீதியில் ஸ்ராலினிச பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் (PCF) பிணைந்தது. 1999ல் இருந்து பொதுச் செயலாளர் பதவியை வகித்து வரும் Bernard Thibault, ஒரு மூன்றாண்டு காலத்திற்கு CGT யின் பொதுச் செயலாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மாநாட்டின் பொது அரசியல் நோக்கம் CGT க்கும் பிரான்சின் வலதுசாரி ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசிக்கும் இடையே உள்ள நெருக்கமான ஒத்துழைப்பு என்ற கொள்கையை உறுதிப்படுத்துவது ஆகும்; இது 2007ல் பிந்தையவர் தேர்தெடுக்கப்பட்டதில் இருந்து நடைமுறையில் உள்ளது.

மாநாட்டைப் பொறுத்தவரையில், முக்கிய தொழிற்சங்க அதிகாரிகள் எதிர்கொண்ட பெரும் சவால், கன்சர்வேடிவ்களுடன் CGT கொண்டுள்ள உறவுகளைப் பாதிக்காமல் எதிர்த்தரப்பு தோற்றத்தை தக்க வைத்துக் கொள்ளுவது என்பதேயாகும். இக்காரணத்தை ஒட்டி, தொழிற்சங்க கூட்டமைப்பு வலது சாரி பிரெஞ்சு ஜனநாயக தொழிலாளர் கூட்டமைப்பு (CFDT) யின் பொதுச் செயலாளர் François Chérèque க்கு கொடுத்திருந்த அழைப்பிதழை திரும்பப் பெற்றுக் கொண்டது. அந்த அமைப்போ முற்றிலும் செல்வாக்கிழந்து போயுள்ள சோசலிஸ்ட் கட்சிக்கு நெருக்கமாள உள்ளது. திபோ விளக்கினார்: "ஒரு பேராளர்களின் சிறிய சிறுபான்மையினருக்கு அவமதிப்பு நிறைந்த எதிர்ப்புக்களை வெளிப்படுத்த அவர் வருகை உதவியிருக்கக்கூடும் என்பதில் ஐயமில்லை."

தன்னுடைய பங்கிற்கு CFDT கூறியது: "இந்த துரதிருஷ்டமான தடங்கல் இரு பொதுச் செயலாளர்களுக்கும் இடையே உள்ள உறவை மாற்றக்கூடாது; இதேபோல் 2009ல் தொடங்கிய தொழிற்சங்கங்களுக்கு இடையேயான உரையாடல் என்ற வழிவகையையும் பாதிக்கக்கூடாது."

1947 ல் இருந்து முதல் தடவவையாக பொதுச் செயலாளர் பதவிக்கு ஒரு மாற்று வேட்பாளர் இருந்தார்: முன்னாள் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரும், Nord Pas-de-Calais பொறியியல் தொழிலாளர்கள் சங்க CGT யின் முக்கிய உறுப்பினருமான Jean-Pierre Delannoy ஆவார். இவர் அப்பதவிக்கு Ou va la CGT? (CGT எங்கு செல்லுகிறது?) என்னும் அமைப்பினால் முன்மொழியப் பெற்றார். இந்தக் கூட்டில் "இடது" அரசியல் போக்குகளின் இணைப்பு உள்ளது. "என்னைச் சுற்றி NPA [ஒலிவியே பெசன்ஸநோவின் புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சி உறுப்பினர்கள், Lutte Ouvriere உறுப்பினர்கள், மாவோவிஸ்ட்டுக்கள், [கம்யூனிஸ்ட்] கட்சியில் இருந்த தோழர்கள், ஏன், சோசலிசக் கட்சியின் ஆதரவாளர்கள் என்று நிறைய பேர் இருப்பதைக் காண்கிறேன்."

ஆனால் CGT விதிகள் தாமதமாக அவர் அளித்திருந்த வேட்பு மனுவை அனுமதிக்கவில்லை.

Delannoy உடைய முக்கிய பங்கு தீபோவுடன் தொழிலாளர்கள் கொண்டுள்ள அதிருப்தியை திசை திருப்புதல் ஆகும்; அதே நேரத்தில் CGT க்கும் சார்க்கோசிக்கும் இடைய இருக்கும் நல்லுறவுகள் பற்றி கணிசமான குறைகூறல்களைத் தவிர்ப்பதும் ஆகும். "அரசாங்கம், ஜனாதிபதியுடன் தொழிற்சங்கப் பொதுச் செயலாளர் உறவு கொண்டிருப்பார் என்பது ஒரு புறம்; ஆனால் ஓராண்டில் 400,000 வேலைகள் இழக்கப்பட்டுள்ள நிலையில், Freescale, Caterpillar, Continental இன்னும் பிற நிறுவனங்களின் தொழிலாளர்கள் மாபெரும் வேலைநிறுத்தத்தை எதிர்கொண்டிருக்கையில், கஷ்டப்பட்டு கொண்டு இருப்பவர்கள் அருகில் ஒருவர் சில நேரங்களில் இருப்பது முக்கியமாகும். இந்த விதத்தில் ஏதும் செய்யப்படவில்லை."

Delannoy உடைய எதிர்ப்பு, மாநாட்டில் அதிக பாதிப்பை ஏற்படுத்தவில்லை. வெளியேறும் தலைமை கொடுத்துள்ள கொள்கை பற்றி ஆவணங்கள் 70 முதல் 80 சதவிகித பெரும்பான்மையைப் பெற்றன; புதிய நிர்வாகக் குழு 90 சதவிகித ஆதரவில் தேர்ந்தெடுக்கப்பட்டது.

இந்த முடிவுகள் CGT கருவியின் முக்கிய பிரிவுகள் திபோவின் கொள்கைகளுக்கு பின் உறுதியாக அணிவகுத்து நிற்கின்றன என்பதைக் காட்டுகின்றன; அவரோ ஐரோப்பாவில் முதலாளித்துவ அரசியல் ஆட்சியின் முக்கிய தூண்களில் ஒருவராக உள்ளார்.

CGT முதலாளித்துவத்திற்கு விசுவாசமாக இருப்பதில் புதிது ஏதும் இல்லை; 1936, 1968 பொது வேலைநிறுத்தங்களை கம்யூனிஸ்ட் கட்சி காட்டிக் கொடுத்தபோது இதுதான் அதன் முக்கிய கருவியாக இயங்கியது. சோவியத் ஒன்றியத்தின் பொறிவிற்குப் பின்னர், CGT ஸ்ராலினிஸ்ட்டுக்கள் நடத்தும் தொழிற்சங்க அமைப்பான World Federtion of TradeUnions ஐ விட்டு நீங்கி, ஐரோப்பிய தொழிற்சங்க கூட்டமைப்பான ETUC உடன் சேர்ந்தது; இது வெளிப்படையாக முதலாளித்துவ சார்புடைய CFDT போன்ற அமைப்புக்களின் ஆதிக்கத்தில் உள்ளது.

ஆனால் மே 2007ல் சார்க்கோசி தேர்ந்தெடுக்கப்பட்டது பிரெஞ்சு அரசாங்க மூலோபாயத்தில் CGT இணைந்ததில் ஒரு புதிய கட்டத்தை தொடக்கியது.

ஒருபுறத்தில் தொழிற்சங்கங்களைத் தளமாகக் கொண்டவற்றையும், மறுபுறத்தில் தீவிர வலது சாரித் தேசியவாதத்தின் ஆதரவைப் பெற்றுள்ளதில்தான் அதிகாரத்தில் நிலைத்திருக்கும் சார்க்கோசியின்திறன் உள்ளது. புதிய பாசிச தேசிய முன்னணித் தளத்தின் ஆதரவைத் திரட்டும் சார்க்கோசியின் முயற்சியைவிட, இந்த தேசியவாத ஆதரவு கம்யூனிஸ்கட்சி, NPA மற்றும் "இடது" என அழைக்கப்படும் பிற சக்திகளினால் உந்துதல் பெறுகிறது; இவை ஆப்கானிஸ்தான் போருக்கு ஆதரவு கொடுப்பதுடன் பிரான்சில் முஸ்லிம் பர்க்காவிற்கு எதிரான ஒரு சட்டத்திற்கும் ஆதரவைக் கொடுக்கின்றன. CGT யின் மத்திய பங்கு எதிர்ப்பு போன்ற ஒரு தோற்றத்தைக் காட்டுவது, அரசாங்கத்துடன் உடன்பாட்டிற்கு தயார் செய்வது, அதையொட்டி அரசியல் எதிர்ப்பு அச்சுறுத்தும் இயக்கமாக வளர்வதைத் தடுப்பது.

இந்த ஒத்துழைப்பின் இரகசியப் பக்கம் செய்தி ஊடகத்தில் வெளியிடப்பட்டது, குறிப்பாக வாராந்திர Marianne யில். "பேர்னார்ட் தீபோவின் CGT ஐ சார்க்கோசி ஏன் காப்பாற்ற விரும்புகிறார்" என்னும் 2007 மார்ச் கட்டுரையில், Marianne 2004ல் சார்க்கோசிக்கும் (அப்பொழுது நிதி மந்திரியாக இருந்தார்), அரசாங்க மின்துறை, எரிபொருள் துறை EDF-GDF இவற்றின் "சீர்திருத்தத்திற்கு", அதாவது தனியார் மயமாக்கப்படுதலுக்கு உதவியாக இருந்த திபோவிற்கும் இடையே வளர்ந்த உறவு என்று கூறியுள்ளது.

"ED-GDF [தொழிற்சங்கங்களின்] பணிக் குழு சமூக நிதியை நிர்வகிக்கும் விதம் பற்றி", திறமையுடன் ஒரு CGT நிதியாக அது இருப்பது பற்றி வெளிப்படுத்தும் அச்சுறுத்தலைக்கூறி, சார்க்கோசி தீபோ "குறைந்த அளவு சலுகையைக் கொடுக்க" முன்வருவதை அறிந்தார். "பல மாதங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருந்த தொழிற்துறை நடவடிக்கைகளுக்கு பின்னர், ஒரு செயல் முறை கண்டுபிடிக்கப்பட்டது: நிறுவனத்தில் சட்டபூர்வ அந்தஸ்து மாற்றப்படும்; ஆனால் அரசாங்கம் எப்பொழுதும் EDF-GDF மூலதனத்தில் பெரும்பான்மைப் பங்கு கொண்டிருக்கும் என்ற உறுதி கொடுக்கப்பட்டது (பின்னால் காட்டிக் கொடுக்கப்பட்டுவிட்டது.).

தான் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் சார்க்கோசி தீபோவுடனான இந்த விலைமதிப்பற்ற ஒத்துழைப்பை நினைவில் கொண்டார்--குறிப்பாக 2007 இலையுதிர்காலத்தின் இரயில் தொழிலாளர் வேலை நிறுத்தம் அவர்களுடைய ஓய்வூதிய வருமானத்திற்கு சீர்திருத்தத்திற்கு எதிராக நடந்தபோது; அப்பொழுது சார்க்கோசியின் ஆலோசகர் Claude Guent 40 ஆண்டுகள் முடிந்திருக்க வேண்டும் என்ற கொள்கையை ஒப்புக் கொண்ட விதத்திலும், அது முடியாவிட்டால் உள்ள அபராதத்தை ஏற்ற விதத்திலும், "தீபோ முதல் நாளில் இருந்தே நெருக்கடி தீர்க்கப்பட உதவினார். CGT பொதுச் செயலாளர் இரயில் நிலையங்கள் முற்றுகையிட விரும்பிய மாணவர்களை சாடியதுடன் இப்பொழுது NPA என்று உள்ள LCR ன் செய்தித் தொடர்பாளர் ஒலீவியே பெசன்ஸநோவிற்கு தொலை பேசி அழைப்பு கொடுத்து, தொழில்துறை பூசலை அரசியல் மயமாக்க வேண்டாம் என்று கூறினார். பெசன்ஸநோ LCR ம் இதை ஏற்றதில் வியப்பில்லை.

CGT உடைய "போர்க்குண" புகழில் மிச்சம் இருப்பது, தான் செய்வதைத் தொழிலாளர்களிடம் இருந்து மறைக்கும் திறனை நம்பித்தான் உள்ளது. தீபோ-ஐ "எந்த உடன்பாட்டிலும் பொறுப்பற்ற தன்மையில் கையெழுத்திடாமல் தப்பும் அரசியல் வாதி" என்று Marinne புகழ்ந்துள்ளது.

Marianne ல் வெளிவந்த மற்றொரு கட்டுரையில், "CGT உடன் சார்க்கோசி சேரும்போது" அரசாங்கம் அதன் நன்றியறிதலை வெளிப்படுத்துகிறது....தொழிலாளர் துறை மந்திரி சேவியர் டார்க்கோ தீபோ " ஒரு மிகப் பொறுப்பான, நம்பகத்தன்மை உடைய, அறிவாளி" என இருப்பதைக் கண்டறிந்துள்ளதாகக் கூறியது. அவருடைய சக ஊழியரும் முன்னாள் தொழிலாளர் துறை மந்திரியும் சேர்த்துக்கொண்டார்: CGT உடன் இணைந்து வேலை செய்வது வெளிப்படுத்த முடியாத களிப்பு ஆகும்--அது நேர்மையாக உள்ளது, நமக்கு நாம் எங்கு உள்ளோம் என்பது தெரியும்." பொருளாதாரப் பகுப்பாய்வாளரும் ஆலோசகருமான Anain Minc, "எந்தத் தயக்கமும் இல்லாமல் சார்க்கோசிக்கும் CGT க்கும் இடையே உள்ள "கூட்டு அதிகார செயற்பாடு பற்றி பேசியுள்ளார்."

தொழிலாளர்களின் எதிர்ப்பை தற்பொழுதைய பொருளாதார நெருக்கடியின்போது நெரித்துவிடுவதில் CGT யின் பங்கு விலைமதிப்பற்றதாகும். நூறாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைகளில் இருந்து அகற்றப்படும் நிலையில், சார்க்கோசியின் ஆலோசகர் ஒருவர், "இது ஒரு அற்புத இலையுதிர்காலம்...ஒரு முதலாளி கூட கடத்தப்படவில்லை, ஒரு மாணவர்கூட தெருவிற்கு வரவில்லை, ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லை...சார்க்கோசியும் தீபோவும் அதிருப்தியைக் ஒன்றாகக் கட்டுப்பாட்டின்கீழ் வைத்துள்ளனர்; தீயை அணைத்துவிட்டனர்; எனவே நாம் ஒரு கடுமையான நேரத்தை அமைதியாகக் கடந்து விட்டோம்" என்றார்.

ஸ்ராலினிசம் தவறாக தான் கொண்டிருப்பதகக் கூறும் சோசலிசம் மற்றும் மார்க்சிசத்துடன் எந்தத் தொடர்பையும் இத்தகைய கொள்கை கொண்டிருக்கவில்லை என்பதைத் தவிர, CGT பற்றிய சித்திரத்தில் சேர்ப்பதற்கு ஒன்றும் இல்லை. சில நேரம் "போர்க்குணம் உடையது" என்று பண்பிடப்படும் இந்த தொழிற்சங்கம் உண்மையில் பிரான்சின் நடைமுறை ஒழுங்கின் முக்கிய தூண்களில் ஒன்றாகும்.