World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The Northwest Flight 253 intelligence failure: Negligence or conspiracy?

நோர்த்வெஸ்ட் விமானம்-253 உளவுத்தறைத் தோல்வி: கவனமின்மையா அல்லது சதியா?

Bill Van Auken
31 December 2009

Use this version to print | Send feedback

23 வயதான நைஜீரிய மாணவர் உமர் பரூக் அப்துல்முதல்லப் நோர்த்வெஸ்ட் விமான எண்-253 விமானத்தை தகர்க்க அதில் இருந்தே மேற்கொண்ட வெடிவைத்து தகர்க்கும் முயற்சியில் தோல்வி அடைந்த ஐந்து நாட்களில், அமெரிக்காவின் உளவுத்துறை மற்றும் பாதுகாப்புமுறைகள் ஆகியவற்றின் பண்பு மற்றும் அளவு இரண்டிலும் வியக்கத்தக்க ஒரு உண்மையை மறைக்கும் நிலைகுலைவை சுட்டிக்காட்டும் தகவல் வெளிவந்துள்ளது.

இப்பொழுது நன்கு அறியப்பட்டுள்ள உண்மைகளில் கீழ்க்கண்டவையும் உள்ளன:

ஒரு பிரபல ஓய்வுபெற்ற வங்கியாளர், முன்னாள் அரசாங்க மந்திரியுமான அப்துல்முதல்லப்பின் தகப்பனார் வெடித்தகர்ப்பு முயற்சிக்கு ஒரு மாதத்திற்கு முன்பே அபுஜாவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு சென்று CIA அதிகாரிகளிடம் தன்னுடைய மகன் யேமனில் உள்ள அல் கெய்டா பிரிவுடன் தொடர்பு கொண்டது பற்றி எச்சரிக்க முயன்றார். எங்கு அந்த இளைஞர் இருக்கக்கூடும் என்றும் மேலும் குறைந்தது இரு முறையேனும் தொலைபேசித் தொடர்பு கொண்டு அவருடைய பயணத்தைப் பற்றி தொடர்ந்து கவனித்து அவர் அவர்களுக்கு தகவல் கொடுத்தார்.

குறைந்தது நான்கு மாதங்களுக்கு முன்னரே அமெரிக்க உளவுத்தறை யேமனிலிருந்து அல் கெய்டா முகவர்கள் "ஒரு நைஜீரியனை" பயங்கரவாதத் தாக்குதல் நடத்த தயாரித்து வருவதாக தகவலைப் பெற்றது.

யேமனில் இருந்து வந்த தகவலை தேசியப் பாதுகாப்பு அமைப்பு "நைஜீரியன்" பயன்படுத்தப்படுவது பற்றி, நடக்கவிருக்கும் தாக்குதலுக்கான தயாரிப்புக்கள் பற்றிய தொடர்பாடல் உரையாடலை இடைமறித்து அறிந்து கொண்டதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.

மேலும் பயணக் கட்டணமாக அப்துல்முதல்லப் கொடுத்த 2,800 டாலர் பணம் ரொக்கமாக கொடுக்கப்பட்டது, அநேகமாக அது கடைசி நேரத்தில் வாங்கப்பட்டிருக்க வேண்டும், மற்றும் இந்த அட்லான்டிக் கடந்த பயணத்திற்கு விமானம் ஏறும்போது அவர் அதிக பொருட்களை கொண்டு செல்லவில்லை, ஒரு சிறிய பை மட்டுமே வைத்திருந்தார்.

இதைத்தவிர விமானத்திலிருந்த ஒரு பயணி, மிச்சிகன் வக்கீல் ஒருவர், Kurt Haskell தான் அம்ஸ்டர்டாமில் விமான டிக்கட் கொடுக்குமிடத்திற்கு நன்கு உடையுடுத்திய தெற்கு ஆசிய நபர் ஒருவருடன் சேர்த்துப் பார்த்ததாகவும், பிந்தையவர் நோர்த்வெஸ்ட் டிக்கட் கொடுக்கும் முகவரிடம் நைஜீரிய இளைஞர் பாஸ்போர்ட் இல்லாமல் பயணிக்க வேண்டும் என்று கூறியதாகவும் தெரிவித்திருக்கிறார்.

"இவர் சூடானில் இருந்து வருகிறார், எப்பொழுதும் நாங்கள் இப்படித்தான் செய்வோம்" என்று அந்த மூத்த நபர் டிக்கட் முகவரிடம் கூறியதாக ஹாஸ்கெல் நினைவு கூர்ந்தார். இதன் பின் முகவர், அவர்களை ஏயர்லைனின் உள்ளக மேலாளரிடம் அனுப்பி வைத்தார்.

பொதுவாக இவற்றில் ஏதேனும் ஒன்றுகூட விமானத்தினுள் அப்துல்முதல்லப் அனுமதிக்கப்படும் முன் தீவிரக் கண்காணிப்பை அவர்மேல் தூண்டியிருக்கும்.

செப்டம்பர் 11, 2001 க்கு பின்னர், மீண்டும் அரசாங்கமும் செய்தி ஊடகமும் இந்த அசாதாரண தவறுகள் வெறும் கவனமின்மை அல்லது "புள்ளிகளை இணைக்காததால்" வந்தவை என்ற விளக்கத்தை ஊக்கப்படுத்தி கூறிக்கொண்டிருக்கின்றன.

9/11 நடந்து எட்டு ஆண்டுகளுக்கு பின்னர், அமெரிக்க இராணுவவாதத்தை வெடிப்புத் தன்மைக்கு கொண்டுவந்துள்ளதை நியாப்படுத்தும் விதத்தில் தாக்குதல்கள் பற்றி விடை காணப்படாத வினாக்கள் இன்னும் இருக்கையில், கிட்டத்தட்ட 300 மக்களின் உயிர்களைக் காவுகொண்டிருக்க வேண்டிய ஒரு நிகழ்வை இத்தகைய பயனற்ற சொற்றொடர்கள் மூலம் மூடி மறைக்கும் முயற்சி சிறிதும் எடுபடாது.

நோர்த்வெஸ்ட் குண்டுத் தாக்குதல் முயற்சி மற்றும் 9/11 தாக்குதல்களை சூழ்ந்துள்ள பொது நிலைப்பாட்டின் தன்மை வியக்கத்தக்க வகையில் ஒரே மாதிரியாக உள்ளன. இன்னும் சொல்லப்போனால், நடத்தப்பட்ட விதத்தில் ஒரே சீர்த்தன்மை உள்ளது. இரு நிகழ்வுகளிலும் செயல்களை நடத்தியதாகக் கூறப்படுபவர்கள் அமெரிக்க உளவுத்துறை விசாரணை, கண்காணிப்பில் தொடர்பு கொண்டிருந்தனர், நாட்டிற்குள் பல பாதுகாப்பு எச்சரிக்கைகளை பொதுவாக காட்டியிருக்கும் நிலைமகளை மீறி விமானங்களை அனுமதித்து நாட்டிற்குள் வருவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அப்பொழுதும் சரி, இப்பொழுதும் சரி அரசாங்கமும் செய்தி ஊடகமும் இதில் ஏற்பட்டது தவறுகள்தான் என்று மக்கள் ஏற்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றன. அப்துல்முதல்லப் தொடர்புடைய நிகழ்வுகளுக்கு இட்டுச்சென்ற பரந்த உளவுத்துறைத் தகவல்கள் "நிரபராதித் தன்மை உடைய" தவறுகள் என்று ஏன் ஒருவர் முன்கருத்தைக் கொள்ள வேண்டும்--இதைவிட அபாயகரமானது என்று ஏன் கொள்ளக்கூடாது?

இந்த நிகழ்ச்சி தீவீரமாக ஆராயப்பட வேண்டுமென்றால், இந்த வினா எழுப்பப்பட வேண்டும்: நோர்த்வெஸ்ட் விமானம் 253 அழிக்கப்பட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும்?

அத்தகைய பேரழிவு சர்வதேச அளவிலும் அமெரிக்காவிற்குள்ளும் மகத்தான எதிரொலிகளை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஒபாமா நிர்வாகத்தின் உறுதிப்பாட்டை அது தீவிரமாக குலைத்து, ஆளும் வர்க்கத்தின் தீவிர வலதுசாரிப் பிரிவுகளை அரசியல் அளவில் வலுப்படுத்தி, இன்னும் மகத்தான முறையில் இராணுவ-உளவுத்துறை நடவடிக்கைகளை வெளிநாட்டிலும், உள்நாட்டில் பெரும் ஜனநாயக உரிமைகள் குறைப்புக்களுக்கும் வகை செய்திருக்கும்.

தோல்வியுற்ற முயற்சியானது குடியரசு வலதிலிருந்து மிகத்தீரமான குறைகூறல்களை ஒபாமா நிர்வாகம் பயங்கரவாதத்திற்கு எதிராக மிருதுவாக இருந்ததாகக் கூறும் கருத்துக்களை வெளிக் கொண்டுவந்துள்ளது.

புதனன்று முன்னாள் துணை ஜனாதிபதி டிக் ஷெனி கூறிய கருத்துக்களில் இது திண்மையான வெளிப்பாட்டைக் கண்டது:

"நாம் போரில் ஈடுபட்டிருக்கிறோம்; ஜனாதிபதி ஒபாமா நாம் இல்லை என்று பாசாங்கு செய்கையில், அது நமக்கு குறைந்த பாதுகாப்பைக் கொடுக்கிறது" என்றார் ஷெனி. புஷ் நிர்வாகத்தின் "பயங்கரவாதத்தின் மீதான போருக்கு" நடைமுறைத் தலைவராக இருந்த முன்னாள் துணை ஜனாதிபதி, குவாண்டிநாமோ சிறை முகாம் மூடும் கருத்தை முன்வைத்ததற்காவும், அவற்றில் சில வழக்குகள் சாதாரண கூட்டாட்சி நீதிமன்றங்களில் நடத்தப்படலாம் என்று ஒபாமா கூறியதற்கு ஒபாமாவைக் கண்டித்தார். வாஷிங்டன் தொடர்ந்து வரும் வெளிநாட்டுப் போர்கள் மற்றும் உள்நாட்டின் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலை "பயங்கரவாதத்தின் மீதான போர்" என்ற சொற்களை அகற்றியதற்கும் அமெரிக்க ஜனாதிபதியைக் கண்டித்தார்.

ஷெனியிடம் இருந்து வரும் அறிக்கைகள்--எட்டு ஆண்டுகள் ஒரு இரகசிய அரசாங்கத்தின் மையத்தில் இருந்தவர், இராணுவ-உளவுத்துறைக் கருவிகளுடன் மிக நெருக்க உறவுகளைக் கொண்டவர், சித்தரவதை, படுகொலைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் பெரிதும் குறைக்கப்பட வேண்டும் என்பதற்காக இரக்கமற்ற முறையில் வாதிடுபவர்--CIA, மற்றும் தொடர்புடைய அமைப்புக்களுக்கள் இருக்கும் சில பிரிவுகளை "புள்ளியாக" தனியாகவே வைத்திருந்து, ஒரு பயங்கரவாத தாக்குதலுக்கு உதவும் வகையில் ஊக்குவித்திருக்கலாம் என்ற அரசியல் கணக்கீடுகள் மீது குவிப்பைக் காட்டுகின்றன.

அப்துல்முதலப்பை அடையாளம் காண்பதில் தோல்வி, பிற அரசாங்க அமைப்புக்களை நைஜீரியா, யேமனில் வெளிவந்த அச்சுறுத்தல் பற்றிய எச்சரிக்கை கொடுக்காதது CIA வின் தவறு என்று கூறப்படுகிறது. இந்த அமைப்பின் முக்கிய நபர்கள் எத்தனை பேர் ஷெனியிடம் நெருக்கமானவர்களாக இருந்தனர்?

இந்த நிகழ்வின் திறவுகோல் ஆளும் அமைப்புமுறை மற்றும் அரசாங்கத்திற்குள் கொள்கை இயற்றுதல் பற்றிய கடுமையான போராட்டங்கள் நடப்பதில் இருக்கக்கூடும். புஷ் நிர்வாகத்தின் கொள்கைகளை தொடர்வதற்கு இயன்றதை ஒபாமா செய்துள்ள போதிலும், வெளிநாடுகளில் போர், உள்நாட்டில் அரசாங்க போலீஸ் அதிகாரங்களை கட்டமைத்தல் என்று, சில கூறுபாடுகள் இன்னும் அதிகம் செய்யப்பட வேண்டும் என்று விரும்புகின்றன.

செவ்வாயன்று, தொடர்ந்து இரண்டாம் நாளாக ஒபாமா தோல்வியுற்ற விமானத்தின் மீதான குண்டுத் தாக்குதல் பற்றிய பொது அறிக்கையை வெளியிட்டார்.

"ஒரு அடையாளம் காணப்பட்ட ஒரு தீவிரவாதியைப் பற்றிய தகவல்களை எமது அரசாங்கம் வைத்திருக்கும் போதும் அந்த தகவல்கள் பரிமாறப்படாமலும் இருக்கும் போதும் நாம் அதையிட்டு செயற்பட்டிருக்க வேண்டும் அதன் விளைவாகத்தான் இந்த தீவிரவாதி ஆபத்தான வெடிகுண்டுடன் ஒரு விமானத்தில் ஏறமுடிவதோடு இது கிட்டதட்ட 300 உயிர்களை விலையாக கொடுத்திருக்க முடிந்திருக்கும் ஆனால் அது ஒரு முழுத் தோல்வியை அடைந்துள்ளது." என்று கவாயிலிருந்து அந்த அறிக்கையில் ஒபாமா தெரிவித்தார்.

இந்த இரண்டாவது அறிக்கை--உளவுத்துறை வழிவகைகள் "முற்றிலும் பரிசீலிக்கப்பட வேண்டும்" என்று தான் உத்தரவிட்டுள்ளதாக ஒபாமா அறிவித்த ஒரு நாளைக்கு பின் வந்தது--வாஷிங்டனின் அரசியல் அமைப்பு முறைக்குள் மற்றும் அமெரிக்க உளவுத்துறை அமைப்புக்களுக்குள்ளேயும் பிரிவுகளும் எதிர்க்குற்றஞ்சாட்டல்களும் இருப்பதைத்தான் பிரதிபலிக்கிறது. இவருடைய நிர்வாகத்தின்மீது கொண்டுவரப்படும் பெரும் அழுத்தத்தையும் இது குறிக்கிறது; தன்னுடைய ஜனாதிபதி காலத்தின்போது ஒரு வெற்றிகரமான பயங்கரவாதத் தாக்குதல் ஏற்படுத்தியிருக்கக்கூடிய ஆழ்ந்த விளைவு பற்றிய அவரது கவலையையும் இது பிரதிபலிக்கிறது.

நோர்த்வெஸ்ட் விமான குண்டுத்தாக்குதல் சதி இந்த அளவிற்கு அது நடக்க வேண்டும் என்று விரும்பிய அமெரிக்க அரசாங்கத்திற்குள் சில பிரிவுகள் இருந்தனவா, எனவே உளவுத்துறைத் தகவலை அடக்கி வைத்து, அதை நிறுத்தக் கூடிய வழிவகைகளையும் கடந்து செல்லும் விதத்தில் நடக்க விட்டது எப்படி என்று கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்ற தீவிர விசாரணை இல்லாமலிருக்கிறது.

இந்த வினாக்களின் அடித்தளத்திற்கு செல்லுதல் என்பது அப்துல்முதல்லப் பற்றிய தகவலை யார் பார்த்தது மேலும் கவனமான கண்காணிப்பு மற்றும் நடவடிக்கை ஆகியவற்றை தடுத்துவிட்டிருக்கக்கூடிய முக்கிய முடிவுகளை மேற்கொண்ட நபர்களைக் குறிப்பாக அடையாளம் காணமல் இது சாத்தியமில்லை.

நியூயோர்க் டைம்ஸ் புதனன்று ஒரு தலையங்கத்தில் "இந்த அமைப்பு தோல்வியுற்றது" என்ற தலைப்பின்கீழ் அப்துல்முதல்லப் பற்றிய நிறைய உளவுத்துறைத் தகவல்கள் இருப்பது பற்றிக் குறிப்பிட்டு கூறுவதாவது: "எச்சரிக்கை போதுமானதாக இல்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்." அது மேலும் கூறுவது: "இன்னும் கூடுதலான விமான நிலையைச் சோதனைகளில் உள்ள 14,000 பேர் உள்ள பட்டியலில் இவரையும் சேர்க்கப் போதுமான எச்சரிக்கை வரவில்லை என்று அதிகாரிகள் முடிவெடுத்தனர்."

இந்த முடிவுகளை டைம்ஸ் "மோசமான கணிப்பீட்டால் எழுந்தவை" என்று கூறுகிறது. எப்பொழுதும் போல் இந்த பழைய அமெரிக்க தாராளவாத அமைப்புமுறை மிகத் தீவிர விஷயம் பற்றி அற்பமான, பொருத்தமற்ற விளக்கத்தை அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த "அதிகாரிகள்" யார்? அவர்கள் பெயர்கள் வெளியிடப்பட வேண்டும். மேலும் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சத்தியப்பிரமாணத்தின் கீழ் அவர்கள் முடிவுகளைப் பற்றிய விளக்கத்தை விவரிக்குமாறு வினாக்களுக்கு பதிலளிக்க வேண்டும்.

அமெரிக்க மண்ணில் ஒரு பெரிய பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றால் அரசியல் அளவில் யாரெல்லாம் இலாபம் அடைவார்கள் என்ற வினாவை எழுப்புதல், வாஷிங்டனின் உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு முறைகளில் அதிர்ச்சி தரும் மற்றும் விளக்க முடியாத "சீர்குலைவு" ஏற்பட்டுள்ளது என்று நம்பமுடியாத வகையில் அளிக்கப்படும் கருத்து பற்றி அதிகம் அறிவதற்கு சிறந்த உறுதி மொழியைக் கொண்டுள்ளது.