WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
Pentagon chief condemns European "pacifism"
ஐரோப்பிய "அமைதி வழியை" பென்டகன் தலைவர் கண்டிக்கிறார்
By Bill Van Auken
26 February 2010
Use this
version to print | Send
feedback
அமெரிக்கா போரை விரிவாக்கம் செய்து கொண்டிருக்கும் நேரத்தில், ஐரோப்பிய
சக்திகள் தங்கள் துருப்புக்களை ஆப்கானிஸ்தானில் இருந்து திரும்பப்பெறலாம் என்ற அச்சங்கள் வாஷிங்டனில் இருக்கும்
நிலையில், பாதுகாப்பு செயலர் ரோபேட் கேட்ஸ் போதுமான இராணுவமயம் ஆக்காததற்காக ஐரோப்பாவைப்
பெரிதும் கண்டித்து ஒரு உரை நிகழ்த்தி, நேட்டோ கூட்டில் ஓர் ஆழ்ந்த நெருக்கடி ஏற்பட்டுவிடும் என்றும் எச்சரித்தார்.
வாஷிங்டனின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் பெப்ருவரி 23-ம்
தேதி கேட்ஸ் உரை நிகழ்த்தினார். இது நடுத்தர மற்றும் மூத்த அமெரிக்க அதிகாரிகளுக்கான பயிற்சி மையம்
ஆகும். இவருடைய உரையைக் கேட்டவர்கள் வடக்கு அட்லான்டிக் உடன்படிக்கை அமைப்பின் "மூலோபாயத்
திட்டத்தை" மறு கட்டமைக்கும் அரங்கம் ஆகும் அதாவது இதை அடிப்படையில் நோக்கத்தின் அறிவிப்பு எனலாம்.
அறிவிப்பை திருத்துதல் என்பது முன்னாள் அமெரிக்க வெளிவிவகார செயலர் மாடலீன்
ஆல்பிரைட் தலைமையில் உள்ள ஒரு குழுவால் நடத்தப்படுகிறது. ஒரு அறிவிப்பு வரைவு நவம்பர் மாதம் போர்த்துகலில்
உள்ள லிஸ்பனில் நடக்க இருக்கும் நேட்டோ உச்சிமாநாட்டிற்கு கொடுக்கப்பட உள்ளது.
ஆப்கானிஸ்தானில் கிட்டத்தட்ட 2,000 டச்சுத் துருப்புக்களை நிலைநிறுத்தியதற்கு எதிர்ப்பானது
எதிர்க்கட்சியிடம் இருந்து வந்து டச்சு அரசாங்கம் கவிழ்ந்து மூன்று நாட்களுக்குள் கேட்ஸின் கருத்துக்கள் வந்துள்ளன.
அரசாங்கத்தின் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான தொழிற் கட்சி, மற்றொரு ஆண்டிற்கு துருப்புக்களை நிறுத்துவதற்கு
ஆதரவை மறுத்தது. இது 2010 இறுதிக்குள் படைகள் திரும்பப் பெறுவற்கு அரங்கு அமைத்துள்ளது.
நெதர்லாந்தில், ஐரோப்பா முழுவதும் இருப்பது போலவே, ஆப்கானிஸ்தானில்
நடக்கும் போருக்கு மக்கள் எதிர்ப்பு வலுவாக உள்ளது. டச்சுப் படைகள் திரும்பப் பெறப்படுவது பல நேட்டோ
உறுப்பு நாடுகள் தங்கள் படைகளையும் திரும்பப் பெற முன்னோடியாகப் போகக்கூடும் என்று அமெரிக்க ஆளும்
வட்டாரங்களில் கவலை உள்ளது.
"Operation Enduring Freedom"
என்று ஆப்கானிஸ்தானில் மையமாக இருக்கும் நடவடிக்கையில் மொத்த அமெரிக்க
துருப்புக்களின் இறப்பு எண்ணிக்கை 1,000-ஐ
கடந்த நிலையிலும் அமெரிக்க தளபதிகள் இன்னும் கூடுதலான குருதி கொட்டும் மாதங்கள் வரவிருக்கின்றன என்று கணித்துள்ள
நிலையிலும் வாஷிங்டன் உள்நாட்டில் போருக்கு உள்ள எதிர்ப்பைக் குறைக்கும் வகையில் கூடுதலாக ஐரோப்பிய சிப்பாய்களை
பீரங்கிக்கு இரையாக்க விழைகிறது.
இந்த நோக்கத்தை அடைவதற்கு ஐரோப்பிய சக்திகள் அடித்தளத்தில் உள்ள "கலாச்சார,
அரசியல்" போக்குகளை எதிர்கொள்ள வேண்டும் என்று கேட்ஸ் வலியுறுத்தியுள்ளார்.
"பல நூற்றாண்டுகள் நீடித்த அழிவு தந்த போர் முறைக்குப் பின் ஐரோப்பா அமைதி
வழியைக் கைக்கொண்டது கடந்த நூற்றாண்டின் வெற்றிகளில் ஒன்றாகும்" என்றார் அவர். "ஆனால், நான் முன்பே
கூறியதுபோல், ஒரு திருப்புமுனையை அடைந்துள்ளோம், கண்டமானது வேறு திசையில் மிக அதிகமாக வந்துவிட்டதே
அது என்று நான் நம்புகிறேன்."
கேட்ஸ் தொடர்ந்தார்: "பொது மக்கள் மற்றும் அரசியல் வர்க்கத்தில் ஏராளமான
பிரிவுகளானது இராணுவ சக்தியுடன் இருக்கும் ஆபத்துக்கள் பற்றி வெறுப்புற்ற நிலையில், ஐரோப்பா
இராணுவமயமற்றதாக இருத்தலானது 20-ம்
நூற்றாண்டில் ஒரு பெரும் நன்மை நிலையில் 21-ம்
நூற்றாண்டில் உண்மையான பாதுகாப்பு, நீடித்த சமாதானத்தை அடைவதற்கு ஒரு தடையாகிவிட்டது."
"உண்மையான அல்லது உணரப்பட்ட வலுவற்ற தன்மை தவறான கணக்கீட்டிற்கும்
ஆக்கிரோஷத்திற்கும் இடம் கொடுக்கலாம், ஆனால் உண்மையான அடிப்படைத் தரத்தில், அதையொட்டி வரும் நிதிய
அளிப்பு மற்றும் திறன்களின் குறைப்பு, செயல்களை புரிவதை கடினமாக்கும், பொதுவாக உள்ள அச்சுறுத்தல்களை
ஒன்றாக இணைந்து போராடுவதை கடினமாக்கும்."
இந்த நூற்றாண்டில் "நீடித்த சமாதானம்" என்னும் கருத்துரு போரைப் பற்றியும் கண்டத்தின்
தேசிய அரசுகளில் ஆயுதப் படைகள் கட்டமைக்கப்படுவது பற்றியும் கொண்டிருக்கும் வெகுஜன வெறுப்பை எதிர்க்கும்
முறையில்தான் சாதிக்கப்பட முடியும். இது தீயது என்று ஐரோப்பாவிலேயே ஐயத்திற்கு இடமின்றி காணப்படுகிறது.
கடந்த நூற்றாண்டின் முதல் பகுதியில் ஐரோப்பா இராணுவ மயமாக்கப்பட்டது இரு உலகப் போர்களையும் பல மில்லியன்
மக்கள் இறப்புக்களையும் ஏற்படுத்தியது.
கேட்ஸின் கருத்துக்களின் அடித்தளத்தில் ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே
உள்ள ஆழ்ந்த அழுத்தங்கள், 60 ஆண்டுகளாக இருக்கும் அட்லான்டிக் கடந்த கூட்டை குறைமதிப்பிற்கு உட்படுத்தும்
அச்சுறுத்தல்கள் தெரியவருகின்றன.
"பனிப்போருக்கும், 9/11 உலகிற்கு பிந்தைய காலத்தில்" நேட்டோ "ஒரு
அசையாத, பாதுகாப்பு படையில் இருந்து முன்னேறும் சக்தியாக மாறவேண்டும், ஒரு தற்காப்பு கூட்டில் இருந்து
பாதுகாப்புக் கூட்டாக" என்று கேட்ஸ் வாதிட்டார்.
உண்மையில் இந்த தற்காப்பில் இருந்து "முன்னேறும் "தலையீடுகளுக்கு எனக்
கூறப்படுவதற்கு மாற்றம் என்பது அமெரிக்க இராணுவவாதத்தின் வெடிப்புத் தன்மை நிறைந்த மற்றும் இரு
ஆக்கிரோஷப் போர்களை--ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் கடந்த தசாப்தத்தின்போது நடத்தியதின்
வளர்ச்சியினால் உந்தப்படுகிறது.
நேட்டோவின் ஐரோப்பிய உறுப்பு நாடுகள் அமெரிக்க போர்களின் செலவில் கூடுதல்
பங்கை நிதி மற்றும் அவற்றின் துருப்புக்கள் உயிர்கள் என்ற விதத்தில் கொடுக்க வேண்டும் என்று வாஷிங்டன் அழுத்தம்
கொடுக்க முற்படுகிறது.
ஐரோப்பியர்கள் இயன்றதை செய்யவில்லை என்று கேட்ஸ் புகார் கூறினார். ஒபாமா
நிர்வாகம் மிக அதிக அளவு இராணுவ வரவு-செலவு
திட்டத்தில் 2011-ல்
700 பில்லியன் டாலருக்கும் மேல்--அமெரிக்க மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவிகிதம்--கொண்டிருக்கையில்
நேட்டோவிலுள்ள 26 ஐரோப்பிய நாடுகளில் 4 நாடுகள்தான் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவிகிதத்தை
இராணுவத்திற்கு செலவிடுகின்றன.
இதன் விளைவாக நேட்டோ "மிகத் தீவிர, நீண்ட கால முறையான பிரச்சினைகளை"
எதிர்கொள்கிறது என்று கேட்ஸ் கூறினார். குறிப்பாக ஐரோப்பிய நேட்டோ நாடுகள் இன்னும் அதிக சரக்கு விமானங்கள்,
ஹெலிகாப்டர்களை கட்டமைக்கும் திட்டங்களை செயல்படுத்தவில்லை என்று சுட்டிக்காட்டி, "இவை இல்லாதது ஆப்கானிஸ்தானில்
செயற்பாடுகளுக்கு நேரடிப் பாதிப்பை கொடுக்கின்றன" என்று எச்சரித்தார்.
பெயரிடப்படாத நேட்டோ உறுப்பினர்களை தீவிரமாக சாடுகிறார் என்று தோன்றிய
விதத்தில், அமெரிக்க பாதுகாப்பு மந்திரி ஆப்கானிஸ்தானில் துருப்புக்கள் எதிர்கொண்டுள்ள நிலைமை பற்றிப்
பேசினார்: "அவை சிக்கன நிலையில் உள்ளன...அன்றாடம் எதிரியின் வெடிமருந்துகளை சந்திக்கின்றன."
"நேட்டோ இப்பொழுது, எப்பொழுதுமே வெறும் பேசும் அமைப்பாக, ஸ்டிராய்டுகள்
பற்றி மறுமலர்ச்சியை கொண்டுள்ள அமைப்பாக இருக்கக்கூடாது என்பதற்கு அப்பட்டமான நினைவுறுத்தல். இது ஒரு
இராணுவக் கூட்டமைப்பு, உண்மை உலகத்தின் கடமைகள், சாவா அல்லது வாழ்வா விளைவுகளை கொண்டுள்ளது"
என்று அவர் தொடர்ந்தார்.
நேட்டோவிற்குள் இருக்கும் பிளவுகள் ஏராளமான பிரச்சினைகளை எழுப்பியுள்ளன.
ஆப்கானிஸ்தானை பொறுத்தவரை, ஒபாமா நிர்வாகம் மற்றய நேட்டோ நாடுகள் அதன் "விரிவாக்கத்தில்"
இன்னும் அதிகமாக 10.000 துருப்புக்களை கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளது. ஆனால் 7,000
துருப்புக்களுக்குத்தான் உறுதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த குறைந்த எண்ணிக்கைகூட அங்கு ஏற்கனவே இருக்கும்
துருப்புக்களையும் அடக்கியுள்ளது. மேலும் நேட்டோவின் ஐரோப்பிய உறுப்பு நாடுகள் சில போரில் தங்கள்
பங்கைக் குறைக்கும் வகையில் தங்கள் படைகளின் பணிமீது தடைகளை விதித்துள்ளன.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் போருக்கு ஆதரவு கொடுத்த ஐரோப்பிய
சக்திகளானது ஆதரவு கொடுக்காவிட்டால் நேட்டோ கூட்டு தகர்ந்துவிடும், அதன்பின் அதற்குப் பதிலாக வேறு
அமைப்பு இல்லை என்ற கவலையில் செய்தன. மேலும் ஐரோப்பிய ஆளும் வட்டாரங்கள் கொள்ளைமுறைப் போரின்
இறுதி ஆதாயங்கள் சிலவற்றை அடையலாம் என்றும் நம்பியிருந்தன. அதாவது எரிபொருள் கொழிக்கும் காஸ்பியன்
பகுதி மற்றும் அதன் எண்ணெய், எரிவாயு இருப்புக்களை குழாய்த்திட்டங்கள் மூலம் பயன்படுத்துவது என்ற விதத்தில்.
பாரக் ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டால் ஐரோப்பிய அரசாங்கங்கள்
அமெரிக்காவில் ஒருதலைப்பட்ச கொள்கை மாற்றப்படும், வாஷிங்டனின் பங்காளிகள் போல் தாம் நடத்தப்படும்
என்று நம்பின. ஆனால் சில பூச்சு மாற்றங்கள், தந்திரோபாய மாற்றங்களை தவிர அமெரிக்கா தொடர்ந்து
அதன் நலன்களை ஒருதலைப்பட்சமாக தொடர்கிறது, ஐரோப்பா அதன் முடிவுகளை ஏற்று ஆதரவு தரவேண்டும்
என்றும் கோருகிறது.
உதாரணமாக, ஆப்கானிய போரை விரிவாக்கம் செய்ய உத்தரவிடுகையில், இன்னும்
30,000 அமெரிக்க துருப்புக்களை அனுப்பிவைத்துள்ள நிலையில், ஒபாமா நிர்வாகம் ஐரோப்பிய நாடுகளுடன்
எந்த கலந்து ஆலோசிப்பும் இல்லாமல் செயல்பட்டுள்ளது. போரும் ஆக்கிரமிப்பும் பெயரளவிற்கு நேட்டோ பதாகையில்
நடக்கிறது என்றாலும் இந்த நிலைதான் உள்ளது.
நேட்டோ விரிவாக்கம் பற்றியும் தீவிர வேறுபாடுகள் வெளிப்பட்டுள்ளன. ஜேர்மனியும்
பிரான்ஸும், வாஷிங்டனின் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள வாடிக்கையாளர் நாடுகளை கூட்டில் சேர்த்தல், அதையொட்டி
நேட்டோவை ரஷ்யாவின் எல்லைகள் வரை நகர்த்துதல் ரஷ்யாவை ஆத்திரமூட்டுதல் பற்றி தயங்குவதுடன் எச்சரிக்கையாகவும்
உள்ளன.
இதற்கிடையில் Der
Spigel, "அமெரிக்கா அதன் அணுவாயுதங்களை ஜேர்மனிய
மண்ணில் இருந்து அகற்ற வேண்டும்" என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. அது நோர்வே,
மற்றும் பெனெலக்ஸ் நாடுகளுடன் கூட்டுச்சேர்ந்து எஸ்டோனியாவின் டாலினில் ஏப்ரலில் நடக்க உள்ள ஒரு நேட்டோ
மாநாட்டில் இப்பிரச்சினை பற்றி விவாதம் வேண்டும் என்று கோரியுள்ளது.
அமெரிக்க வெளிவிவகார செயலர் ஹில்லாரி கிளின்டன் திங்களன்று கேட்ஸின் கருத்துக்களுக்கு
முன்னால் தன்னுடைய உரையை நிகழ்த்தி நேட்டோ உறுப்பினர்களுக்கு இடையே இருக்கும் அழுத்தங்களை அதிகப்படுத்தினார்.
ஜேர்மனி அணுவாயுதங்கள் பற்றிய நிலைப்பாட்டைப் பற்றி நேரடியாகவே குறிப்பிட்டு, அவை இருக்க வேண்டும் என்று
வலியுறுத்தினார்.
"இந்த ஆபத்தான நிலையில் உள்ள உலகிற்கு தடுக்கும் சக்தி இன்னும் தேவை,
ஐரோப்பாவில், நம்மிடையே சில முக்கிய உறுப்பு நாடுகளிடையேயும் அதன் பொருள் என்ன என்பது பற்றிய
விவாதம் நடைபெறுகிறது" "அவசரப்பட்ட செயல் ஏதேனும் தடுக்கும் திறனைக் குறைமதிப்பிற்கு உட்படுத்திவிடக்கூடிய
வகையில் இராது என்று நாம் நம்புகிறோம்" என்றார் அவர். |