WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா :
பிரான்ஸ்
French air traffic controllers' strike strengthens on
second day
பிரெஞ்சு விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளின் வேலைநிறுத்தம்
இரண்டாம் நாளாக வலுப்பெறுகிறது
By Antoine Lerougetel and Alex Lantier
25 February 2010
Use this version
to print | Send
feedback
அவர்களுடைய இழப்பில் தொழிற்துறையை மறுசீரமைப்பதற்கு, ஐரோப்பிய விமானப்
போக்குவரத்து முறை முழுவதும் மிகப்பெரிய எதிர்ப்பு தொழிலாளர்களிடையே ஏற்பட்டிருக்கையில், பிரான்சில்
விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகளின் வேலைநிறுத்தம் நேற்று பரவியது.
ஜனவரி மாதம் இரு நாட்கள் கட்டுப்பாட்டு அதிகாரிகள் வேலைநிறுத்தம்
செய்திருந்தனர். இதைத்தொடர்ந்து தற்போதைய நான்கு நாள் வேலைநிறுத்தமானது செவ்வாயன்று
தொடக்கப்பட்டது, குளிர்கால விடுமுறை உச்ச நிலையில் இருக்கும்போது இது வந்துள்ளது. ஜனவரி மாதம் இருநாள்
வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து இது வந்துள்ளது. முதல்நாள், செவ்வாயன்று, இது பாரிஸ் விமான நிலையங்களைப்
பாதித்தது. 50 சதவிகித விமானங்கள் ஓர்லியிலும் 25 சதவிகித விமானங்கள் சார்ல்ஸ் டு கோல் விமான
நிலையத்திலும் தரையிறங்கியன. பிராந்தியங்களில் Pau,
Grenoble, La Rochelle-ல் இருக்கும் விமான
நிலையங்கள் மூடப்பட்டன. Lyon-Saint Exupery-
ல் 345 பயணங்களில் 43 இரத்து செய்யப்பட்டன.
இந்த வேலைநிறுத்தம் மற்றய முக்கிய இடங்களில் இருந்து பிரெஞ்சு வான் பகுதி
வழியே செல்லும் பயணங்களையும் தடைக்கு உட்படுத்தியது. அதில் ஆம்ஸ்டர்டாம், பிரஸ்ஸல்ஸ், ஜெனீவா ஆகியவற்றில்
இருந்து வந்த விமானங்களும் அடங்கும், லுப்ட்தான்சாவும் பிரான்ஸிற்கு மேலால் பறக்கும் விமானங்கள் தாமதித்தன
என்று கூறியுள்ளது.
புதனன்று காலை பாரிசிலும் இதே போன்ற நிலைதான் இருந்தது.
Rennes, Lille, Le Rochelle,
மற்றும்
Biarritz விமான நிலையங்களில் இருந்து விமானங்கள்
புறப்படவில்லை. லியோனில் 44 பயணங்கள் இரத்து செய்யப்பட்டன, மார்சேயில் 25, நீஸில் 34. கிரேக்கத்தில்
உள்ள விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளும் அன்று வேலைநிறுத்தம் செய்திருந்தனர். கிரேக்கத்தின்
கடனைக் குறைத்தும் அரசாங்கம் கடன்கொடுப்பதில் தவறும் வரக்கூடாது என்பதற்காக கிரேக்க சமூக ஜனநாயக
அரசாங்கத்தை கடுமையான சிக்கன நடவடிக்கைகள் எடுக்கச் சொன்னதின் விளைவின் ஒரு பகுதியாக அது நடந்தது.
விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளுடன் ஏயர் பிரான்ஸின்
விமானிகளும் வெள்ளியன்று நிறுவன மறுசீரமைப்பு மற்றும் ஓய்வூதிய வயதை உயர்த்தும் திட்டங்களுக்கு எதிராக
மேற்கொள்ளும் நான்கு நாட்கள் வேலைநிறுத்தத்தில் இணைந்து கொள்வார்கள். இந்த விடுமுறை வார இறுதியில்
கடுமையான தடைகள் விமானப் பயணங்களில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
SNCM மற்றும்
CMN நிறுவனங்களில், பிரான்சை குறிப்பாக மார்சேய்
துறைமுகத்தை மத்தியதரைக்கடல் தீவான கோர்சிகாவுடன் இணைப்பவற்றில், தொழிற்சங்க மாலுமிகள் நடத்தும்
வேலைநிறுத்தமும் உள்ளது. 2009-ல்
நிதிகள் 10 சதவிகிதத்தால் குறைக்கப்பட்டன. இதையொட்டி ஆண்டு ஒன்றிற்கு 400 பயணங்கள் என்பதிலிருந்து 108
அகற்றப்பட்டு விட்டன.
விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் தொழிற்சங்கக் குழு புதனன்று
அரசாங்கத்தால் வேலைநிறுத்தத்தை முடிக்குமாறு கோரப்பட்டது. "தேவையான உத்தரவாதங்கள் வரும் வரை"
வேலைநிறுத்தம் தொடரும் என்று குழு கூறிவிட்டது.
தொழிற்சங்கங்கள் நேற்று எரிபொருள் நிறுவனமான டோட்டலுக்கு எதிரான
வேலைநிறுத்தத்தை முடித்துவிட்டதாக அறிவித்ததை அடுத்து வந்துள்ளது. அதில் அரசாங்கமும் நிர்வாகமும்
வேலைநிறுத்தத்தின் மையக் கோரிக்கையை ஒப்புக் கொள்ளவில்லை என்றாலும் அதாவது அனைத்து ஆறு டோட்டல்
சுத்திகரிப்பு ஆலைகளும் தொடர்ந்து பிரான்சில் மூடப்படக்கூடாது என்பதாகும்.
ஐரோப்பிய வான் பகுதிக் கட்டுப்பாட்டை மறுசீரமைக்கும் திட்டத்திற்கு எதிராக
தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்கின்றனர். அதாவது
"The Functional Airspace Block: Europe
Central (FABEC) திட்டம்" என்பதற்கு எதிராக.
இத்திட்டம் அதிக வேலை இழப்புக்களுக்கு வழிவகை செய்யும், பணி நிலைமைகளைப் பெரிதும் பாதிக்கும் என்று
அஞ்சப்படுகிறது.
பிரான்சில் வான் பாதுகாப்பானது பொது சிவில் விமானப் போக்குவரத்து
ஆணையகத்தின் பொறுப்பு ஆகும். இத்திட்டம் DGAC-ஐ
தகர்த்து, வேலைகளை அச்சுறுத்தி, சிவில் பணி அந்தஸ்த்தையும் அதன் 12,000 ஊழியர்களுக்கு மறுத்துவிட வகை
செய்யும் என்று தொழிலாளர்கள் அச்சப்படுகின்றனர். 12,000 பேரில் 4,400 பேர் கட்டுப்பாட்டு அதிகாரிகள்
ஆவர். 2010 மற்றும் 2011 ஆண்டுகளில் RGPP
எனப்படும் பொதுக் கொள்கை திருத்தத்தின் ஒரு பகுதியாக பல வேலைகள் குறைப்பு ஏற்படக்கூடியதையும் அவர்கள்
எதிர்க்கின்றனர். இக்கொள்கையின்படி ஓய்வுபெறும் அரசாங்கத் தொழிலாளர்களுக்குப் பதிலாக பாதி
எண்ணிக்கையில்தான் புதிதாக நியமிக்கப்படுவர்.
FABEC திட்டம் ஐரோப்பிய சிவில்
விமானப் போக்குவரத்து உச்சிமாநாடு ஒன்று நவம்பர் 18, 2008-ல்
நடந்தபின் அறிவிக்கப்பட்டது. உச்சிமாநாட்டின் செயற்பாடுகள் பற்றிய குறிப்பானது "தற்பொழுதைய
பொருளாதார நெருக்கடி, பொருளாதார சரிவு என்ற பின்னணியில், ஜேர்மனி, பிரான்ஸ், பெல்ஜியம், ஹாலந்து,
லக்சம்பெர்க் மற்றும் ஸ்விட்சர்லாந்து என்னும் ஆறு நாடுகளின் வான்பகுதிகள் இணைக்கப்பட வேண்டும்" என்று
குறிப்பிடுகிறது.
FABEC உடன் இராணுவம்
நெருக்கமான தொடர்பு உடையது. DAG-
யின் குறிப்புப்படி, "சிவில் மற்றும் இராணுவ அரசாங்க அதிகாரிகள்,
வான்வழி, விமானப் போக்குவரத்து நிர்வாகத்திற்குப் பொறுப்பு உடையவர்கள் மற்றும் விமானப் படை முக்கிய
தளபதிகள் [விமானப் போக்குவரத்து நிர்வாகமும்] பாரிசில் ஜனவரி 21, 2001-ல்
இராணுவ-சிவில் பிரச்சினைகள் FABEC
திட்டத்தால் ஏற்படக்கூடிய முக்கியமானவற்றைப் பற்றி ஆராயக் கூடினர்."
தற்பொழுது ஐரோப்பிய வான் பகுதி பரந்த வகையில் 27 தேசிய வான்
பகுதிகளாக தேசிய அரசாங்கங்களின் கீழ் பிரிக்கப்பட்டுள்ளது. "இத்தகைய பிரிவு விமானங்களை 27 வெவ்வேறு
வான் பகுதிகளுக்குள் குறுக்கும் நெடுக்கும் செல்லுமாறு வலியுறுத்துகிறது--ஒவ்வொன்றும் மாறுபட்ட வான் வழிநடத்தும்
பணி செய்பவர்கள், வேறு விதிகள், தேவைகள் ஆகியவற்றைக் கொண்டவர்களால் இயக்கப்படுகிறது. இதையொட்டி
கூடுதலாகப் பறக்க வேண்டியுள்ளது, வெளியேறுதல்கள், இயக்குபவர்களுக்கு கூடுதல் செலவு ஆகியவை
வருகின்றன.....[FABEC
திட்டத்தில்] வான் போக்குவரத்துப் பணி கொடுப்பவை செயல்திறன்
இலக்குகளைக் கொள்ள வேண்டும் மற்றும் 2012-க்குள்
உறுப்பு நாடுகள் எல்லை கடந்த ஒத்துழைப்பைத் தங்களுக்குள் "functional
airspace blocks FABs எனப்படும் செயல்திறனுடைய
வான்வழி முறையை" ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்."
FABEC திட்டம் அதிக அளவு
வெட்டுக்கள் வரும் என்று அச்சுறுத்துகின்றன. வான்வழிப் போக்குவரத்தில் விரிவாக்கம் இருந்தாலும் அந்த நிலை
வரும். FABEC
பகுதி 2018-க்குள்
விமானப் போக்குவரத்தில் 50 சதவிகித அதிகரிப்பை எதிர்பார்க்கிறது.
DGAC உடைய
ஜூன் 2008 செயல்முறை ஆய்வின் படி இத்தட்டம் "2025-க்குள்
7 பில்லியன் யூரோக்களைச் சேமிக்கும், வான் போக்குவரத்துக் கட்டுப்பாட்டை பாதியாக்க வேண்டும்,
பாதுகாப்புக் காரணியை 10 சதவிகிதம் அதிகமாக்கும், சுற்றுச் சூழலில் ஒரு பயணத்திற்கு 10 சதவிகிதம்
பாதிப்பைக் குறைக்கும்."
DGAC இணைப்பு முறை எப்படி
நடக்கிறது என்பதைப் பொறுத்து வேலை இழப்புக்கள் இருக்கும் என்று கூறுகிறது. "ஒப்பந்த ஒத்துழைப்பை
மாதிரியாகக் கொண்டால், பணி நிலைமைகள், ஊழியர்கள் மீது பாதிப்பு குறைவாக இருக்கும். இணைப்பு என்பது
கூட்டு என்று வந்தால், சில செயற்பாடுகள் மையமாக்கப்படும், தனிப்பட்ட நிறுவனங்கள் மீது அவற்றின் பாதிப்பு
இனிமேல்தான் ஆராயப்படவேண்டும். "சமூகப் பங்காளிகள் சமூக உரையாடல் வழிவகையில் தொடர்பு கொள்ள
வேண்டும் என்றும் "DGAC
கூறியுள்ளது. அதாவது, தொழிற்சங்கங்கள் நிர்வாகத்துடன் வெட்டுக்களை செயல்படுத்துவது பற்றிப்
பேச்சுவார்த்தைகள் நடத்த வேண்டும்.
FABEC திட்டத்தால் வரும்
வேலைக்குறைப்புக்கள் பற்றிய ஆபத்தை அரசாங்க மந்திரிகள் குறைமதிப்பிற்கு உட்படுத்தி வேலைநிறுத்தம் சீக்கிரம்
முடியவேண்டும் என்று அழைப்பு கொடுத்துள்ளனர்.
விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளின் வேலைநிறுத்தத்தில் அரசியல்
பின்னணி கிரேக்கத்தை மையம் கொண்டுள்ள ஐரோப்பிய கடன் நெருக்கடி ஆகும். ஜேர்மனியும் பிரான்ஸும்
கடுமையான சிக்கன நடவடிக்கைகள் கிரேக்கத்திற்கு எதிராக பிணை எடுப்பிற்கு பதிலாக வேண்டும் என்று
கோருகையில், நேரடியாக எழுந்துள்ள வினா இதுதான்: "ஐரோப்பிய நிறுவனங்கள் நிதியப் பிரபுத்துவத்தின்
கைகளில் விட்டுவிடப்பட வேண்டுமா, அல்லது அவை தொழிலாள வர்க்கத்தின் சமூகத் தேவைகளுக்குத் தாழ்த்தப்பட
வேண்டுமா?'
தொழிலாளர்களின் சமீபத்திய டோட்டல் அனுபவம் நிரூபிப்பது போல்,
தொழிற்சங்கங்களின் அரசியல் துரோகத்தால் தொழிலாள வர்க்கம் அதன் வாழ்க்கைத் தரங்களை காப்பதற்கு
திணறுகிது, பெரும் தடையை எதிர்கொள்ளுகிறது. எப்படியும் பல தொழிலிட போராட்டங்களை தனிமைப்படுத்தி
அழித்துவிட வேண்டும் என்றுதான் தொழிற்சங்கங்கள் முயல்கின்றன. அரசாங்கம், தொழிற்சங்கங்களுக்கு எதிராக
ஐரோப்பியத் தொழிலாளர்கள் ஒரு சோசலிச முன்னோக்கின்கீழ் ஐக்கியப்பட வேண்டும் என்ற முக்கியத்துவத்தை இது
அடிக்கோடிடுகிறது.
பிரெஞ்சு அரசாங்கமானது தொழிற்சங்கங்கள், விமானப் போக்குவரத்து
கட்டுப்பாட்டு அதிகாரிகளின் வேலைநிறுத்தத்தை தனிமைப்படுத்தி விற்றுவிடும் என்று இன்னமும் நம்புகிறது.
தொழிற்சங்கங்களை சந்தித்தபின், சுற்றுச்சூழல் மந்திரி
Jean-Louis Borloo, "வேலைபார்ப்பவர்களுக்கு
அவர்களுடைய பொதுப் பணித்துறை அந்தஸ்து தக்க வைக்கப்படும் என்று உத்தரவாதம் கொடுக்க வேண்டும்,
அவர்களுக்கு ஐரோப்பிய அமைப்பின் வருங்கால அந்தஸ்து பற்றி விவாதிக்கப்படும், பிரெஞ்சு விமானத்துறையில்
உள்ளவர்கள் அனைவருடைய கருத்துக்களும் கேட்கப்படும், அவர்கள் என்ன கூறுகிறார்கள் என்று அறியப்படும்"
என்றார்.
அன்று முன்னதாக Borloo
"வரவிருக்கும் பணிகளில் இந்தப் பூசல்...தீர்க்கப்படும் என்று நம்புகிறேன், இன்றைக்குள் என்று நான்
நம்புகிறேன்." என்றார்.
பெப்ருவரி 23-ம்
தேதி கட்டுரை ஒன்று, பழமைவாத நாளேடு பிகாரோவில் வந்தது, விமானப் போக்குவரத்துக்
கட்டுப்பாட்டு அதிகாரிகள் சட்டவிரோத பணி அட்டவணைகளை ஏற்படுத்தி, தங்கள் வேலைச்சுமையைக் குறைத்து,
விமானப் பயணப் பாதுகாப்பை ஆபத்திற்கு உட்படுத்துகின்றனர் என்று குற்றம் சாட்டியுள்ளது. இந்தக்கட்டுரை
அரசாங்க நிதியை கண்காணிக்கும் அமைப்பான Cour
des comptes இடம் இருந்து வந்த விரோதப் போக்கு
உடைய அறிக்கையை ஆதாரமாகக் கொண்டது.
குறிப்பிடத்தக்க வகையில் அரசாங்க அதிகாரிகள் வெளிப்படையாக வேலைநிறுத்தத்தில்
ஈடுபட்டுள்ளவர்களை குறைகூறவில்லை. பிகாரோ கட்டுரைக்கு விடையிறுக்கும் விதத்தில்,
போக்குவரத்துத்துறை செயலர் Dominique
Bussereau கூறினார்: "கட்டுப்பாட்டு அதிகாரிகள் உயர்மட்ட
அரசாங்கத் தொழிலாளிகள், மிகவும் தேர்ந்த முறையில் செயல்படுபவர்கள்." அவர் மேலும் கூறியது: "1973-ல்
இருந்து பிரான்ஸில் விமானக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் தொடர்புடைய விபத்து ஏதும் நடக்கவில்லை."
ஆனால் அரசாங்கமும் விமான நிலைய நிர்வாகமும் வேலைநிறுத்தம் முடிந்தவுடன்
வெட்டுக்களைச் செயல்படுத்த முடியும் என்று நம்புகின்றன. பெப்ருவரி 22 அன்று
Union des Aeroports Francais
எச்சரிக்கை கொடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது: "பயணிகள், விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும்
விமான நிலையங்களுக்கு அதிக விளைவுகளை வேலைநிறுத்தம் கொடுக்கும்." பின்னர், "பிரான்சின் விமானப்
போக்குவரத்து ஏற்கனவே போட்டியின்மை இல்லாததால் இடர்பாட்டில் உள்ளது." "விமானப் போக்குவரத்து
எண்ணிக்கையைப் பொறுத்தவரை ஐரோப்பாவில் பிரான்ஸ் நான்காவது இடத்தில் உள்ளது." என்றும்
குறிப்பிடப்பட்டுள்ளது.
அது திமிர்த்தனமாக முடிவிற்கு வந்தது: "சிவில் விமானப் போக்குவரத்து ஊழியர்கள்
"முற்றுகை மனநிலைப்" போக்கைக் கைவிட்டு யதார்த்தத்தை பின்பற்ற வேண்டும்." |