World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்France: trade unions call to end strike at Total பிரான்ஸ்: தொழிற்சங்கங்கள் டோட்டலில் வேலைநிறுத்தத்தை முடிவிற்கு கொண்டுவரக் கோருகின்றன By Antoine Lerougetel நேற்று மாலை, பொதுத் தொழிலாளர் கூட்டமைப்பு (CGT) என்னும் ஸ்ராலினிச தொழிற்சங்க கூட்டமைப்பானது டோட்டல் எண்ணெய் சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் டன்கிர்க்கில் இருக்கும் Les Flandres ஆலை மூடப்படுவதற்கு எதிராக தங்கள் நாடுதழுவிய வேலைநிறுத்தத்தை நிறுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்தது. தொழிலாளர்களுடைய கோரிக்கை நிறைவேற்றப்படும் என்ற உத்தரவாதம் டோட்டல் நிர்வாகத்தில் இருந்து பெறப்படவில்லை என்றாலும், தொழிற்சங்கம் டோட்டல் போராட்டத்தை விற்க முயல்கிறது. பிரான்சிலும் ஐரோப்பா முழுவதும் அலையெனப் பெருகும் வேலை நிறுத்தங்களை உடைக்க முயல்கிறது. டோட்டல் எண்ணெய் சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் இன்று மாலை வேலைநிறுத்தத்தை தொடரலாமா என்பது பற்றி அவர்களுடைய பணியிடங்களிலுள்ள பொது மன்றங்களில் வாக்களிப்பர். நேற்று காலவரையறையற்ற வேலைநிறுத்தத்தின் ஏழாம் நாளன்று, தொழிலாளர்கள் பெட்ரோல் நிறுவனத்தின் பிரான்சில் உள்ள ஆறு சுத்திகரிப்பு ஆலைகளையும் மூடினார்கள். செவ்வாயன்று பிரான்சின் இரு Exxon Mobil ஆலைகளும் இதில் சேர்ந்தன. இது நாட்டில் நான்கு சுத்திகரிப்பு ஆலைகளைத்தான் செயலில் வைத்துள்ளது. டோட்டலின் ஆலைகள் மட்டும் பிரான்சின் பெட்ரோல் உற்பத்தியில் 53 சதவிகிதத்தைக் கொண்டுள்ளன. இந்த வேலைநிறுத்தமானது வேலையின்மை, பணிநீக்கங்கள், ஆலைகள் மூடல்கள், கடும் சிக்கன நடவடிக்கைகள் என்று ஐரோப்பா முழுவதும் நடைபெறும் பின்னணியில் வந்துள்ளது: அதாவது பிரான்சில் அருங்காட்சியக ஊழியர்கள், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள், பிரிட்டிஷ் ஏயர்வேஸ் விமான ஓட்டி அறைக்குழுவினர் வேலைநிறுத்தம், லுப்ட்தான்சா விமானிகள், புதனன்று திட்டமிடப்பட்டுள்ள கிரேக்கப் பொது வேலை வேலைநிறுத்தம் மற்றும் அடுத்த மாதம் போர்த்துக்கலில் பொது வேலைநிறுத்தம் என்று தொடர்ந்து உள்ளன. CGT அதிகாரி Charles Foulard அறிவித்தார்: "தொழிலாளர்கள் அணிதிரண்டதினால் ஏற்பட்டுள்ள கணிசமான முன்னேற்றங்கள் வேலைநிறுத்தத்தை நிறுத்திவைக்கும் சூழ்நிலையை தோற்றுவித்துள்ளது என்று CGT கருதுகிறது." டன்கிர்க் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை பற்றிப் பேசுகையில் Foulard, "இப்பிரச்சினையை மறுபரிசீலனை செய்யத் தயார் என்று டோட்டல் கூறியுள்ளது." என்றார். டோட்டல் நிர்வாகமானது முதலீட்டு திட்டங்களைத் தயாரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்: இதன் உட்குறிப்பு, "கொள் திறன் குறைப்பு இருக்காது, சுத்திகரிப்பு ஆலைகளை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மூடப்படுவதோ அல்லது விற்பனை செய்வதோ இருக்காது" என்பதாகும்.உண்மையில் டோட்டலின் நிர்வாகம் டன்கிர்க் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை தொடர்வது பற்றி உறுதியாக ஏதும் கூறவில்லை. அதேபோல் அந்த ஆலையில் தொழிலாளர்களின் வேலைகள் பாதுகாப்பது பற்றியும் கூறவில்லை. நேற்று டோட்டல் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையானது "பிளாண்டர்ஸ் அமைப்பின் வளர்ச்சித் திட்டங்களுக்கு அப்பால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் பிரெஞ்சு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மூடலோ விற்பனையோ இராது." என்று தெரிவிக்கிறது. ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி வேலைநிறுத்தம் இன்னும் பரவக்கூடும், தொழிலாளர்களின் உறுதியான நடடிக்கையானது விநியோக அளிப்புக்களை தடைசெய்தல் என்பது பொருளாதாரத்தை நிறுத்தி அரசாங்கத்தின் செயல்தன்மையையே அச்சுறுத்தக்கூடும் என்பதை நன்கு அறிவார். Le Monde நாளேடு திங்களன்று, "பிரான்ஸ் அதன் மூலோபாய தேசிய இருப்புக்களை [120 நாட்கள் அளிப்பிற்கு] பயன்படுத்த வேண்டிய அவசியத்திற்கு உட்பட்டதில்லை, ஆனால் இப்பொழுது நெருக்கடியை சமாளிக்க ஏழு நாட்கள் இருப்பைத்தான் கொண்டுள்ளது" என்று எழுதியது. ஏற்கனவே திங்கள் மாலை 5 மணிக்கு, டோட்டலின் நிர்வாகத் தலைவர் Christophe de Margerie தட்டுப்பாட்டை தவிர்க்க டோட்டல் " தீர்வு ஒன்றைக் காணும்" என்று உத்தரவாதங்கள் கொடுத்தபோதிலும், எல்ப் மற்றும் டோட்டலின் 2,600 பணி நிலையங்கள் இருப்புக்கள் இல்லாமல் போய்விட்டன என்று கூறியுள்ளன. நேற்று AFP எழுதியதாவது: "ஜனாதிபதியின் அழுத்தத்தின் கீழும் எரிபொருள் தட்டுப்பாடு என்னும் ஆவியுருவை எதிர்கொண்ட நிலையில், டோட்டல் இந்த செவ்வாயன்று தொழிற்சங்கங்களை சந்திக்கவுள்ளது. டன்கிர்க் ஆலை பற்றிய முக்கிய கூட்டத் திட்டம் எண்ணெய் சுத்திகரிப்பு பூசலை முடிவிற்குக் கொண்டுவரவில்லை என்பதால் இந்த முடிவு." வேலைநிறுத்தம் பரவக்கூடும், மார்ச் பிராந்தியத் தேர்தல்களில் சரிவு ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில் அரசாங்கம் டோட்டல் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு கொடுப்பதாக பாசாங்கு செய்கிறது. அதே நேரத்தில் டோட்டல் நிர்வாகத்தின் நிலைப்பாட்டிற்கு அது இறுதியில் ஆதரவு கொடுக்கும் என்ற குறிப்பையும் காட்டியுள்ளது. பெப்ருவரி 22-ம் தேதி Le Monde, ஞாயிறு நண்பகல் தொழில்துறை மந்திரி கிறிஸ்டியன் எஸ்ட்ரோசி, "சுத்திகரிப்பு ஆலை மூடப்படக்கூடாது என்று கோரினார்" என்று தகவல் கொடுத்தது. France Inter Radio- வில் அவர் "டோட்டல் தொழிலாளர்கள் வேலைகள், ஆலையைத் தொடர்தல்" ஆகியவை உறுதி என்றார். ஆனால் Le Monde, "மாலைக்குள் உரை திருத்தப்பட்டது. பிரச்சினை வேலைகள் உறுதி செய்யப்படுதல், ஆலையைத் தொடர்தல் மற்றும் டன்கிர்க் துறைமுகம் தொடர்தல். ஆனால் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் விதியானது நிர்வாகத்தால் இரண்டாம் பட்சமாகக் கருதப்படுகிறது." என்று எழுதியது. "திருவாளர் Estrosi எண்ணெய் சுத்திகரிப்பு நடவடிக்கை தொடரும் என்று கொடுத்த நம்பிக்கை ஏற்கனவே அழுத்தம் கொடுத்துள்ள நிலைமையைச் சிக்கலாக்கியுள்ளது." என்று Le Monde எழுதியுள்ளது. AFP திங்களன்று, "வலதுசாரி UMP (ஆளும் Union for a Poular Movement கட்சியின்) செய்தித் தொடர்பாளர் Frederic Lefebvre, டோட்டல் "வரவிருக்கும் மணித்தியாலயங்களில் சரியான நடவடிக்கை எடுக்கவேண்டும், டோட்டல், CGT- யில் உள்ள பெரும்பாலான தொழிற்சங்கங்கள் வேலைகளுக்கு போராடுவதற்கு உறுதி கொண்டுள்ளன." என்று கூறியது.வலதுசாரி MoDem (ஜனநாயக இயக்கத்தின்) ன் பிரான்சுவா பேய்ரூ கூட வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களுடன் ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்தியுள்ளார். பேய்ரூவின் ஆதரவாளர்கள் டோட்டலின் பணி மனைகளை புறக்கணிக்குமாறு கார்ச் சொந்தக்காரர்களை வலியுறுத்தியுள்ளனர்--இது வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் பொது மக்கள் ஆதரவுடன் தங்கள் இருப்புக்களை நிரப்பி டோட்டலின் மொத்த எரிபொருள் இருப்பைக் குறைக்க வேண்டும் என்பதற்கு எதிரானது. Estrosi- யின் உண்மை அணுகுமுறை ஞாயிறன்று வந்த மற்றொரு அறிக்கையில் வெளிப்படுகிறது. அது அரசாங்கம் தொழிலாள வர்க்கத்தின் மீது மிருதுவாகப் போகவில்லை என்பதை பெருவணிகத்திற்கு உறுதி கொடுக்கும் விதத்தில் உள்ளது. "மந்திரிகள் தொலைக்காட்சி காமெராக்கள் முன் நின்று தங்கள் பெரிய கைக்குட்டைகளை ஒவ்வொருமுறையும் பொது அல்லது தனியார் நிறுவனம் பணிநீக்கம் செய்தபோது ஆட்டிய காலம் போய்விட்டது. இரத்தம் கசியும் இதயங்களுக்கு பதிலாக நாங்கள் போரிடுபவற்றைக் கொண்டுள்ளோம்."வேலைநிறுத்தத்தை விற்றுவிடுவதற்கு அரசாங்கத்துடன் ஒத்துழைத்தாலும், CGT போராட்டத்தை ஒரு தேசிய அடிப்படையில் காட்ட முற்படுகிறது. இதையொட்டி பிரெஞ்சு ஆளும் வர்க்கத்தின் புவிசார் அரசியல் நலன்களுக்கு முறையீடு செய்கிறது. CGT- யின் தலைவரான பேர்னார்ட் தீபோ ஞாயிறு கூட்டத்தில் உறுதிபடக் கூறினார்: "எரிபொருளை ஒரு நாடு பெறுவது என்பது உலகளவில் அரசியல் பிரச்சினை ஆகிவிட்டது, பிரான்ஸ் நிதிய இலாபக் காரணங்களை ஒட்டி சுத்திகரிப்புத் திறனில் சரிவைக் கொண்டுள்ள நிலை உள்ளது... டோட்டல் தொழிலாளர்கள் எழுப்பும் பிரச்சினை அவர்களுடைய வருங்கால நலன்களைப் பொறுத்தது என்பது உண்மை, ஆனால் நாட்டின் பொருளாதார, மூலோபாய நலன்களும் தொடர்புடையவை."வேலைகள், தொழில்துறை நடவடிக்கைகள், தொழிலாளர்கள் வாழ்க்கைத் தரங்கள் ஆகியவற்றை பாதுகாக்கும் சர்வதேசப் போராட்டத்தில் இருந்து இது ஒரு பிற்போக்குத்தன திசைதிருப்பல் ஆகும். உலகப் பொருளாதார நெருக்கடியை வணிக வட்டாரங்கள் எதிர்கொள்ளும் முறை இரக்கமற்ற முறையில் உற்பத்தி அளவைக் குறைப்பதாகும். French Petroleum Industry Body (UFIP) யின் தலைவர் Jean-Louis Schilansky சமீபத்தில் செய்தி ஊடகத்திடம் கூறினார்: "எண்ணெய் சுத்தகரிப்பு துறையில் நிலைமை மோசமாக உள்ளது. ஐரோப்பாவில் உள்ள 114 நிலையங்களில் 10 முதல் 15 சதவிகிதத்தை நாம் மூடினால்தான் தேவை-அளிப்பு முறையை சமச்சீர் செய்யமுடியும்." CGT இன் தேசியவாதப் போக்கானது நெருக்கடியின் பாதிப்பை மற்றொரு நாட்டுத் தொழிலாளர்கள் ஏற்க வேண்டும் என்பதாகும். நெருக்கடிக்கு தொழிலாள வர்க்க எதிர்ப்பு விடையளிப்பு CGT உடைய மிகப் பெரியளவில் இந்த வழிமுறையில் இருக்கிறது. அவர்களுடைய பெப்ருவரி 15 கூட்டத்திற்கு பின்னர் தொழிற்சங்கங்கள் அரசாங்கத்துடன் எப்படி பிரான்சின் வரவு-செலவு பற்றாக்குறை மற்றும் தேசியக் கடன்களை ஓய்வூதியங்கள் மற்றும் சமூகப்பணிச் செலவுகளைக் குறைப்பதன் மூலம் சரிசெய்யப்படலாம் என்று விவாதிக்கின்றன. அதே நேரத்தில் கிரேக்க அரசாங்கம் தேசிய ரீதியான திவாலைத் தவிர்க்க அதன் கடன்களைத் திருப்பிக் கொடுக்க வேண்டும், அதற்காக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுடைய வாழ்க்கைத்தரங்களை துடைத்தெறிய வேண்டும் என்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் கோரிக்கைகளுக்கு பிரான்ஸும் ஜேர்மனியும் முன்னணியில் நிற்கின்றன. தொழிலாளர்கள் இப்பொழுது CGT உடன் ஒரு அரசியில் முறிவு மூலம்தான் தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும்; வேலைநிறுத்தம் தொடரப்பட வேண்டும், சார்க்கோசி அரசாங்கத்தை அகற்ற தொழிலாள வர்க்கம் பரந்த போராட்டத்தை தொடக்க வேண்டும்; அதற்கு ஐரோப்பா முழுவதும் தொழிலாளர்களின் இதே போன்ற போராட்டங்களுடன் ஒற்றுமை உணர்வு தேவை. |