World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Banks demand austerity measures against "profligate" countries

"ஊதாரித்தனமாக" செலவு செய்யும் நாடுகளுக்கு எதிராக வங்கிகள் கடும் சிக்கன நடவடிக்கைகளை கோருகின்றன

Barry Grey
25 February 2010

Use this version to print | Send feedback

ஐரோப்பிய அரசாங்க கடன்கள் நெருக்கடி வெடித்துள்ள நிலையில், முதலாளித்துவ செய்தி ஊடகத்தில் ஒரு புதிய சொற்றொடரான "ஊதாரித்தனமாக செலவு செய்யும் நாடுகள்" என்பது வெளிப்பட்டுள்ளது. வர்ணனையாளர்கள் கிரேக்கத்தில் ஆரம்பித்து பெரிதும் அப்பாலும் உள்ள முழுமக்கள் பிரிவினரையும் தங்கள் வருமானத்திற்கு மிகவும் அதிகமாக செலவு செய்பவர்கள் என்று வாடிக்கையாக முத்திரையிடுகின்றனர். ஆகவே அம்மக்கள் விளைவுகளை அனுபவிக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

தாராளவாத, பழைமைவாத அரசியல்வாதிகள் மற்றும் வர்ணனையாளர்கள் இந்த நிலையை மாற்றுவதற்கு கொடுக்கும் தீர்வு முன்னோடியில்லாத வகையில் வேலைகள், ஊதியங்கள், தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத்தரங்கள் ஆகியவற்றின்மீது தாக்குதலும், ஓய்வூதியங்கள், சுகாதாரப் பாதுகாப்பு, கல்வி மற்றும் பிற அடிப்படை சமூகப் பணிகளை அகற்ற வேண்டும் என்பதும் ஆகும்.

இவ்விதத்தில் உலகம் முழுவதும் ஊதாரித்தனம் பரவியுள்ளது என்ற கண்டுபிடிப்பு சர்வதேச நிதிய மூலதனத்தின் கோரிக்கைகளுக்கு நேரடியான பிரதிபலிப்பாகும். உலகத்தை தங்கள் கொள்ளைமுறையில் சொந்த செல்வக் கொழிப்பிற்கு உட்படுத்தி, அந்தந்த நாடுகளை இவர்களை பிணை எடுப்பதற்கு திவால்தன்மையில் தள்ளியபின், நிதியப் பிரபுக்கள் அரசாங்கத்தில் இருக்கும் தங்களுக்கு உதவுபவர்களை தங்கள் முதலீடுகளைக் காப்பதற்காக நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள் நம்பியிருக்கும் சமூகநலத்திட்ட செலவுகளைக் குறைக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

ஊதாரித்தனம் எனக் கருதுவதற்கு எதிராக பிரச்சாரம் செய்யும் செய்தி ஊடக அயோக்கியர்கள் அனைத்து தொழில்துறை வளர்ச்சியுற்ற நாடுகளிலும் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்கள் பல தசாப்தங்களாக சரிந்து வருகின்றன, அதே நேரத்தில் நிதிய உயரடுக்கின் செல்வம் பெரிதும் வளர்ந்துவிட்டது என்பதைப் புறக்கணிக்கின்றனர்.

இத்தகைய பண்டித போக்கிரிப் போக்கின் குறிப்பிடத்தக்க உதாரணம் நியூயோர்க் டைம்ஸின் வெளியுறவுக் கட்டுரையாளர் தோமஸ் ப்ரீட்மன் ஆல் ஞாயிறன்று தலையங்கப் பக்கத்திற்கு எதிர்ப்புறக் கட்டுரை ஒன்றில் கொடுக்கப்பட்டுள்ளது. வசதியாக எப்பொழுதும் இருக்கும் அமெரிக்கத் தராளாவாத செய்தித்தொடர்பாளர்களின் உணர்வை எப்பொழுதும் சரியாக அளந்து காட்டும் ப்ரீட்மன் எழுதுகிறார்: "ஆம், அமெரிக்காவில் 70 கொழுத்த ஆண்டுகளைப் பெற்றிருந்தோம்.... இந்தக் கடந்த 70 ஆண்டுகளில் தலைமை.... பெரும்பாலும் இருப்பவற்றை அள்ளிக் கொடுத்துக் கொண்டிருந்தது...."

அவர் தொடர்ந்து எழுதுவது: "ஆனால் இப்பொழுது நாம் ஒரு புதிய சகாப்தத்தில் நுழைவது போன்ற உணர்வு உள்ளது; இங்கு அரசாங்கமும் தலைமையும் மக்களிடம் இருந்து பலவற்றை எடுத்துக் கொள்ள வேண்டிய பணியில் உள்ளது என்று ஜோன்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழக வெளியுறவுக் கொள்கை வல்லுனர் மைக்கேல் மண்டல்பெம் கூறியுள்ளார். உண்மையில், இப்பொழுது தலைமை தாங்குவது என்பது, பணிகள், திட்டங்கள், பணியாளர்களை அகற்றுவது அல்லது பெரிதும் குறைப்பது என்பதுதான்."

அமெரிக்க மக்களை "நமக்கு விட்டுச் செல்லப்பட்ட வளங்களை" தின்று அழித்திவிட்ட வெட்டுக்கிளிகள் என்று ப்ரீட்மன் ஒப்புமை கூறியுள்ளார்.

ஜனாதிபதி ஒபாமாவிற்கு அவர் கீழ்க்கண்ட ஆலோசனையைக் கொடுக்கிறார் (நிதிய கடும் சிக்கன நடவடிக்கைகளுக்கான அவருடடைய செயற்பாட்டில், இது ஒன்றும் அவருக்குத் தேவையில்லை): "ஜனாதிபதி நாட்டு மக்களை வருங்காலத்தில் முதலீடு செய்யவேண்டும், கடந்த காலத்திற்கு --ஊதாரித்தனத்திற்கு--விலையையும் அதே நேரத்தில் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும். முன்னைவிட அதிகமாக புதிய பள்ளிகள், கட்டுமானங்களுக்கு நாம் பணம் கொடுக்க வேண்டும். அதுவும் அரசாங்கத்திடம் மக்களுடைய நம்பிக்கை முன்னைவிட குறைவாக இருக்கும் நேரத்தில் உரியவை குறைக்கப்படுவதையயும் எப்போதும் இல்லாத அளவிற்கு ஏற்க வேண்டும்; "

ப்ரீட்மன் கட்டுரை வந்த இரு நாட்களுக்குப் பின்னர், நியூயோர்க் மாநிலத்தில் தலைமைக் கணக்காயர் ஒரு அறிக்கையை வெளியிட்டார். இது உண்மையான ஊதாரிகள் யார் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. வோல் ஸ்ட்ரீட் மேலதிக கொடுப்பனவுகள் 2009ல் 17 சதவிகிதம் உயர்ந்து 20.3 பில்லியன் டாலராக இருந்ததாக அறிக்கை மதிப்பிட்டுள்ளது. மேலும் நியூயோர்க் பங்குச் சந்தை தரகர்-செயலர் நிறுவனங்கள் 2009ன் முதல் மூன்று காலாண்டுகளில் மிக அதிக தொகையான 49.9 பில்லியன் டாலரை எடுத்துக் கொண்டது என்றும் முழு ஆண்டிற்கு இதுவரை இல்லாத அளவிற்கு 55 பில்லியன் டாலர் இலாபத்தைக் காணும் வழியில் உள்ளது என்றும், முந்தைய உயர்ந்த பட்சத்தைவிட இது மூன்று பங்கு அதிகம் என்றும் அறிவித்துள்ளது.

கோல்ட்மன் சாஷ்ஸ், ஜே.பி. மோர்கன் சேஸ் போன்ற மிகப் பெரிய வோல் ஸ்ட்ரீட் வங்கிகளில் மொத்த சராசரி ஊதியம் கடந்த ஆண்டு 31 சதவிகிதம் உயர்ந்தது. அதே நேரத்தில் மொத்த சராசரி வருமானம் 27 சதவிகிதத்திற்கும் மேலாக $340,000 என்று உயர்ந்தது.

இந்தப் புள்ளி விவரங்கள் அமெரிக்க நிதிய உயரடுக்கு, ஒபாமா நிர்வாகத்தின் நற்செயல்களால், தான் ஏற்படுத்திய நெருக்கடியையே பயன்படுத்தி அதன் நீண்டகால செயல்திட்டமான வர்க்க உறவுகளை மறுகட்டமைப்பதற்கு கடுமையாக, நிரந்தரமாக தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்களை குறைப்பதை செயல்படுத்துகிறது.

பல தசாப்தங்களாக ஆளும் வர்க்கம் நடத்தும் தாக்குதல்கள் இதனால் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. பெருநிறுவனங்கள், செல்வந்தர்களுக்கு வரிக் குறைப்பு, வணிகத்தின் மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்துதல், நாட்டின் உற்பத்தித் தளத்தை கிட்டத்தட்ட அகற்றுதல், தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் உடந்தையுடன் அரசாங்க அடக்குமுறையை மேற்கொள்ளல் என்ற விதங்களில் அமெரிக்க ஆளும் உயரடுக்கு ஏற்கனவே தேசிய சொத்தில் அதன் பங்கை மகத்தான அளவில் அதிகரித்துக் கொண்டு விட்டது.

சில உண்மைகளை உதராணம் காட்டலாம்:

The Economic Policty Institute. 2008 ற்கு 30 ஆண்டுகள் முன்பு, அமெரிக்காவில் மொத்த வருமான வளர்ச்சியில் கிட்டத்தட்ட 35 சதவிகிதம் உயர்மட்ட 1 சதவிகிதத்தில் பத்தில் ஒரு பங்கு வருமானம் பெறுபவர்களுக்குச் சென்றது என்று தகவல் கொடுத்துள்ளது. கீழ் 90 சதவிகிதத்தினர் இதே காலத்தில் வருமான வளர்ச்சியில் 15.9 சதவிகிதத்தைத்தான் பங்கிட்டுக்கொண்டனர்.

வருமான சமத்துவமின்மை வளர்ச்சி 2008 நிதிய நெருக்கடியின் தாக்குதல் வருவதற்கு முன்பே விரைவாக இருந்தது. ஒரு ஆய்வின்படி, 2002ல் இருந்ந 2007 வரை வருமான அதிகரிப்புக்களில் மூன்றில் இரு பகுதி சமூகத்தின் மிக அதிக செல்வமுடைய 1 சதவிகிதத்திற்கு சென்றது. உயர்மட்ட 1 சதவிகிதத்தின் வருமானம் கீழ் 90 சதவிகிதத்தைவிட 10 மடங்கு வேகமாக வளர்ந்தது. உயர்மட்ட 1 சதவிகித வருமானம் சம்பாதிப்பவர்கள் 1928ல் இருந்து எந்த ஆண்டை காட்டிலும் 2007ல் வருமானத்தில் அதிக பங்கைக் கொண்டனர்.

உள்நாட்டு வருவாய்த்துறை வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளி விவரங்கள் அதிகம் சம்பாதிக்கும் 400 அமெரிக்க குடும்பங்களின் வருமானம் 16 மில்லியன் டாலரில் இருந்து 87 மில்லியன் டாலருக்கு 1992ல் இருந்து 2007 க்குள்ளாக வளர்ச்சியுற்றது என்பதைக் காட்டுகின்றன. இது ஒரு ஐந்து மடங்கு அதிகரிப்பு ஆகும். உயர்மட்ட 1 சதவிகித வருமானம் பெறுபவர்கள் மொத்த வருமானத்தில் 1928க்கு பின்னர் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு அதிகப் பங்கைக் கொண்டனர்.

இதற்கிடையில் சராசரி அமெரிக்கரின் நிகர மதிப்பு இந்த நூற்றாண்டின் முதல் தசாப்தத்தில் 13 சதவிகிதம் சரிந்தது.

இதன் விளைவு அமெரிக்காவிடம் அனைத்துத் தொழில்துறை நாடுகளிலும் மிக உயர்ந்தளவு வருமான சமத்துவமின்மை உள்ளது என்பதாகும். இலங்கையை விட சமத்துவமற்ற தன்மையும், கானா, துர்க்மேனிஸ்தானுக்கு ஒப்பான சமத்துவமற்ற தன்மையும் இங்கு நிலவுகின்றன.

நிதிய நெருக்கடி வெடிப்பதற்கு முன் அமெரிக்க மக்களுக்கு முதலாளித்துவம் கொடுத்தது இதுதான். 2008 சரிவில் இருந்து, இன்னும் மில்லியன் கணக்கான மக்கள் வேலையின்மை, வறுமை, வீடுகளற்ற நிலை, பட்டினி ஆகியவற்றில் தள்ளப்பட்டுள்ளனர். இன்று 40 மில்லியன் அமெரிக்கர்கள் வறுமையில் வாழ்கின்றனர்; 6 மில்லியன் பேர் (மக்கட்தொகையில் 2 சதவிகிதம்) வருமானமின்றி, உணவு நன்கொடையில்தான் உயிர் வாழ்கின்றனர்.

ப்ரீட்மன் மற்றும் அவர் பிரதிபலிக்கும் பெருநிறுவன, அரசியல் நடைமுறையின்படி, இந்த நிலைகள்தான் கடுமையாக செயல்படுத்தப்பட வேண்டும்.

தற்போதைய நெருக்கடி அனைத்து ஜனநாயக பாசாங்குத்தனத்தையும் அகற்றிவிட்டு, தனியார் உரிமையாக உள்ள உற்பத்தி சாதனங்கள் தளத்தின் வர்க்க உண்மைகளை அம்பலப்படுத்தி ஒரு ஒட்டுண்ணித்தன உயரடுக்கின் சொந்த செல்வக்கொழிப்பிற்கு சமூகத் தேவைகளை தாழ்த்துகிறது. இந்த முறை சீர்திருத்தப்பட வேண்டும் என்பதல்ல பிரச்சினை. மாறாக சோசலிசத்திற்காக போராட்டும் அமெரிக்க, சர்வதேச தொழிலாள வர்க்கம் அரசியல்ரீதியாக அணிதிரட்டப்பட்டு தற்கால பிரபுத்துவத்தின் இந்த இடுக்கிப்பிடியை உடைக்க வேண்டும் என்பதே இன்றைய பிரச்சினையாகும்.