WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
மத்திய கிழக்கு
The US puts "regime change" in Iran on agenda
ஈரானில் "ஆட்சி மாற்றத்தை" தன் செயற்பட்டியலில் அமெரிக்கா கொண்டுள்ளது
By Peter Symonds
17 February 2010
Use this version to
print | Send
feedback
ஈரானின் அணுசக்தி திட்டங்களுக்கு தண்டனையாக புதிய பொருளாதாரத் தடைகளின்
தீவிர நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஒபாமா நிர்வாகம் இந்த வாரம் மத்திய கிழக்கில் ஒரு பெரும் இராஐதந்திர
முறைத் தாக்குதலை, அப்பகுதியில் உள்ள அதன் நட்பு நாடுகளின் ஆதரவைப் பெறுவதற்காக தொடங்கியது. அமெரிக்க
அரச செயலர் ஹிலாரி கிளின்டன், கூட்டுப் படைகளின் தலைவர் அட்மிரல் மைக் முல்லன், மத்திய கட்டுப்பாட்டின்
தலைவர் தளபதி டேவிட் பெட்ரீயஸ் மற்றும் உயர்மட்ட அரச நிர்வாக அதிகாரிகள் இந்த நடவடிக்கையில் பங்கு பெறுகின்றனர்.
திங்களன்று கட்டார் டோஹாவில்
Carnegie Mellon University
இன் துணை வளாகத்தில் மாணவர் பார்வையாளர்களிடையே கிளின்டன் அமெரிக்க பிரச்சாரத்தின் மையக் கருத்தை
விளக்கினார். சிறிதும் மறைக்கப்படாத தெஹ்ரான் ஆளும் வட்டாரங்களின் எதிர்த்தரப்பிற்கு முறையீடு செய்யும்
வகையில், அவர் ஈரானிய புரட்சிகர பாதுகாப்பு படைப்பிரிவு (IRGC)
நாட்டை இராணுவக்கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் ஆபத்து உள்ளது என்று அறிவித்தார்.
"ஈரானிய அரசாங்கம், அதிஉயர் தலைவர், ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றம்
ஆகியவற்றிற்கு பதிலாக வெறொரு மாற்றம் வந்துகொண்டிருக்கிறது, ஈரான் ஒரு இராணுவ சர்வாதிகாரத்தை நோக்கிச்
செல்லுகிறது என்பதை நாம் காண்கிறோம்." என்று கிளின்டன் கூட்டத்தில் கூறினார். கட்டாரில் இருந்து செளதி
அரேபியாவிற்கு விமானத்தில் செல்லுகையிலும் இந்தக் கருத்தை செய்தியாளர்களிடம் அவர் கூறினார்: "இந்தக்
கூடுதலான, மிகக் கூடுதலான தலைமை முடிவுகளில் இராணுவக் கட்டுப்பாடு என்னும் போக்கு ஈரானியர்களுக்கு தொந்திரவு
கொடுக்கும் என்று நினைக்கிறேன், வெளியே இருக்கும் நமக்கும்தான்."
இதே கருத்தை செளதி அரேபியாவிலும் கிளின்டன் வலியுறுத்தினார். செய்தி ஊடகத்திடம்,
ஈரானின் முக்கிய மத குருமார்களும், அரசியல் தலைவர்களும் "மக்கள் சார்பாகத் தாங்கள் செலுத்த வேண்டிய
அதிகாரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்" என்றார். கிளின்டனுடைய கருத்துக்கள், ஈரானிய ஆட்சியில் அரசியல்
பிளவை ஏற்படுத்தும் நோக்கத்தை வெளிப்படையாகக் கொண்டவை, வாஷிங்டனின் திட்டமான புரட்சிப் படைப்பிரிவிற்கு
எதிரான புதிய பொருளாதாரத் தடைகளை குறிப்பாகக் கொள்ள வேண்டும் என்ற திட்டத்துடன் இணைந்துள்ளன. முன்னதாக
ஒபாமா நிர்வாகம் கடும் முடக்கம் தரும் பொருளாதார நடவடிக்கைகளான, சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய
பொருட்கள் உட்பட தடை செய்யப்பட வேண்டும் என்று விரும்பியிருந்தது. இப்பொழுது அத்தகைய தடைகள்
IRGC
க்கு எதிராக ஆதரவை நாட முற்படும் மக்களை விரோதப்படுத்திவிடும் என்ற முடிவிற்கு வந்துள்ளது.
கிளின்டன் "ஆட்சி மாற்றம்" என்னும் சொற்றொடரைப் பயன்படுத்தவில்லை என்றாலும்,
ஒபாமாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர், ஓய்வுபெற்ற தளபதி ஜேம்ஸ் ஜோன்ஸ் அவ்வளவு தயக்கத்தை காட்டவில்லை.
"[ஈரானில்] உள்நாட்டில் தீவிரப் பிரச்சினை உள்ளது என்று நாம் அறிவோம்" என்று
Fox News இடம்
அவர் ஞாயிறன்று கூறினார். "அந்த ஆட்சிக்கு கஷ்டங்களை அதிகரிக்கும் வகையில், நாம் ஆதரிக்கும் கடுமையான
பொருளாதார நடவடிக்கைகளை அளிக்கும் விதத்தில், வழி செய்யும் விதத்தில் பங்கு பெற உள்ளோம். எளிய
தடைகள் அல்ல. இவை மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகள் ஆகும். இவற்றின் மொத்தப் பாதிப்பு ஆட்சி
மாற்றத்தை ஏற்படுத்தலாம்--அது நடக்கக்கூடியதே."
தன்னுடைய மூலோபாயத்தை மாற்றிக் கொள்ளுவது என்று ஒபாமா நிர்வாகம் தெளிவாக
முடிவெடுத்துள்ளது. இந்த வழிவகையில், அமெரிக்கா தன்னுடைய முன்னைய பிரச்சாரத்தில் மாற்றங்களை கொண்டு
வருகிறது. கடந்த ஜூன் மாதம் ஈரான் ஜனாதிபதித் தேர்தல்களை அடுத்து அது "பச்சை வண்ண" புரட்சி என்ற பெயரில்
தோல்வியுற்ற எதிர்த்தரப்பு வேட்பாளர் மீர் ஹொசைன் மெளசவிக்கு ஆதரவைக் கொடுத்தது. புரட்சிகர
படைப்பிரிவின் மீது குவிப்பு காட்டுவதின் மூலம், வாஷிங்டன் ஆட்சியின் மிக உயர்ந்த பிரிவுகளில் உள்ள அதிருப்தி
தளத்தையும் குறிவைக்கிறது. இதில் உயர் தலைவர் அயோதுல்லா அலி கொமெனீக்கு நெருக்கமானவர்களும் உள்ளனர்.
கிளின்டன் காட்டும் ஈடுபாட்டில் சாதாரண ஈரானியர்களின் ஜனநாயக உரிமைகளைப்
பாதுகாப்பது என்ற கருத்துடன் எத்தொடர்பும் கிடையாது. மாறாக, இதன் நோக்கமானது வணிகர்கள்,
அதிகாரத்துவத்தினர் மற்றும் புரட்சிகரப் படைப்பிரிவிற்கு எதிராக குறைகளைக் கொண்டிருக்கும் இராணுவ
அதிகாரிகள் ஆகியோரின் எதிர்ப்பை ஒருங்கிணைத்தல் என்பதாகும். புரட்சிகர படைப்பிரிவு தன் பொருளாதார,
அரசியல் செல்வாக்கை ஜனாதிபதி அஹ்மதி நெஜாட்டின் கீழ் விரிவாக்கியுள்ளது என்பது உறுதிதான். ஆனால் அது
ஒன்றும் அரசாங்கத்தை கட்டுப்படுத்தவில்லை. மெளசவியைப் போல், கிளின்டன் முறையிடும் "முக்கிய மத
குருமார்கள், அரசியல் தலைவர்கள்" என்பது இஸ்லாமிய ஆட்சியை ஆதரித்து அதன் அடக்குமுறை செயல்களை முன்பு
ஆதரவு கொடுத்தவர்களுக்குத்தான்.
தெஹ்ரான் பகிரங்கமாக கிளின்டனின் கருத்துக்களை நிராகரித்ததில் வியப்பு ஏதும்
இல்லை. வெளியுறவு மந்திரி Manouchehr Mottaki,
"இப்பகுதியில் அமெரிக்க இராணுவத்தின் இராணுவ சர்வாதிகாரம் பற்றிய வினாக்களை" எழுப்பியதாக
கூறப்படுகிறது. இது ஈராக், ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து அமெரிக்கத் தலைமையிலான ஆக்கிரமிப்பைக்
குறிக்கிறது. "கடந்த தசாப்தங்களில், வியட்நாம் போர் முதல் தற்போது வரை, இராணுவ சர்வாதிகாரங்களின்
அடையாளமாகவே இருந்தவர்கள், தங்களை போலவே மற்றவர்களையும் கருதுகின்றனர்" என்று அவர் கூறினார்.
செவ்வாயன்று இன்னும் கூடுதலான பொருளாதார தடைகளுக்கு எதிராக ஜனாதிபதி
அஹ்மதிநெஜாட் எச்சரிக்கும் வகையில் கூறினார்: "அவர்களை [தொடர்புடைய நாடுகள்] இது பற்றி வருந்தும்
அளவிற்கு விடையிறுப்பு கொடுக்கப்படும்." அதே நேரத்தில் ஈரான்
IAEA உடன் கடந்த
ஆண்டு கொண்ட உடன்பாடான குறைந்த செறிவுடைய யுரேனியத்திற்கு எரிபொருள் பரிமாற்றுதலுக்கு, அதன் தெஹ்ரானில்
உள்ள ஆய்வு உலைக்கூடத்திற்கு பெறுவதற்கு ஈரானின் ஒப்புதல் இன்னமும் உள்ளது என்று அவர் வலியுறுத்தினார். ஆனால்
இந்தப் பறிமாற்றம் ஒரே நேரத்தில் நடைபெற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். சமீபத்தில் தான் யுரேனியத்தை
20 சதவிகித செறிவு செய்ய இருப்பதாக தெஹ்ரான் எச்சரித்தது. அந்த உடன்பாடு செயலுக்கு வரவில்லை என்றால்
தானே தன் எரிபொருளை உற்பத்தி செய்யும் என்றும் கூறினார்.
IAEA
ஒப்பந்தத்தில் எந்த
மாற்றத்தையும் அமெரிக்கா முன்பு நிராகரித்திருந்தது. தன்னுடைய கருத்துக்களில், கிளின்டன் இன்னும்
பேச்சுவார்த்தைகளுக்கு இடமில்லை என்றும் கூறியிருந்தார். கட்டாரில் பேசிய அவர் ஈரான் ஒரு அணுவாயுதத்தை
கட்டமைப்பதாகவும், "தங்கள் குண்டை அவர்கள் தயாரிக்கும்போது [தெஹ்ரானுடன்] பேச்சுவார்த்தைகளை
விரும்பவில்லை" என்றார். தன்னுடைய கூற்றிற்கு புதிய ஆதாரம் எதையும் அவர் கொடுக்கவில்லை. ஆனால் ஈரான்
பலமுறையும் தான் ஆயுதம் தயாரிக்கவில்லை என்று கூறிவிட்டது.
ஈரானுக்கு எதிரான வாஷிங்டன் போர்த்திட்டத்தை கொண்டுள்ளது என்பதை மறுத்து
கிளின்டன் அறிவித்தார்: "ஈரானிடம் இருந்து உடனடியாக பெரும் அச்சுறுத்தலை எதிர்நோக்கும் வளைகுடா நாடுகளை
நாங்கள் உறுதியாகக் பாதுகாப்போம்." நான்கு வளைகுடா நாடுகள்--கட்டார், குவைத், பஹ்ரைன் மற்றும் ஐக்கிய
அரபு எமிரேட்டுக்கள்--சமீபத்தில் கூடுதல் ஏவுகணை-எதிர்ப்பு பாதுகாப்பு தொகுதிகளை அமெரிக்காவிடம் இருந்து
பெற்றுள்ளன.
அமெரிக்காவிற்குப்பின் வளைகுடா நாடுகளின் ஆதரவை ஒருங்கிணைக்கும் வகையில்
கிளின்டன் ஒரு அணுவாயுதப் போட்டி மற்றும் பிராந்திய உறுதிக் குலைவு ஆகியவைகள் ஈரான் அணுவாயுதம் வைத்திருந்தால்
வரும் என்று எச்சரித்தார். மத்திய கிழக்கு அணுவாயுதங்கள் இல்லாமல் உள்ளது என்ற அவருடைய இழிந்த அறிவிப்பை
பார்வையாளர்களில் இருந்த மாணவர்கள் சவால்விட்டனர். இஸ்ரேல் தன்னுடைய ஆயுதக்கிடங்கை அகற்ற வேண்டும்
என்று அமெரிக்கா கோருமா என்றும் கேட்டார்கள்.
மத்திய கிழக்கில் கிளின்டன் இருந்தபோது, செளதி அரேபியாவில் தளபதி பெட்ரீயஸ்
இராணுவ ஒத்துழைப்பு பற்றி பேச்சுக்களுக்கு சென்றிருந்தார். படைகளின் கூட்டுத் தலைவர் அட்மிரல் முல்லனும்
இஸ்ரேலுடன் ஜோர்டான், செளதி அரேபியாவிற்கு செல்லுமுன் இஸ்ரேலிய இராணுவத்துடன் பேச்சுக்களை
நடத்தினார். முல்லனுடைய பணி ஈரானின் அணுசக்தி நிலையங்களை இஸ்ரேல் தாக்குவதைத் தடுப்பதாகத்
தோன்றியது. குறைந்த பட்சம் அமெரிக்கா இராஐதந்திர, அரசியல் தாக்குதல்களை முடிக்கும் வரையிலேனும்.
ஒருதலைப்பட்சமாக இஸ்ரேல் தாக்குதல் நடத்துவது தோல்விக்குத்தான் வகை செய்யும் என்றும் அவர்
எச்சரித்தார்.
அமெரிக்க அரச நிர்வாக அதிகாரிகள்
James Steinberg
மற்றும் Jacob
Lew ஆகியோருக்கு ஆதரவை கூட்டும் பணி கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வார இறுதியில் எகிப்து, இஸ்ரேல், ஜோர்டான் ஆகிய நாடுகளுக்கு
Lew சென்றார்.
ஸ்டீன்பேக் இஸ்ரேலுக்கு அடுத்த வாரம் பேச்சுக்களுக்காக செல்ல இருக்கிறார். அவை ஈரான் பற்றிய
கவனக்குவிப்புக் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் விவகாரங்களில் துணை செயலரான
William Burns
லெபனானுக்கும் சிரியாவிற்கும் அடுத்த வாரம் பயணிப்பார். ஈரானிடம் இருந்து சிரியாவின் நெருக்கத்தை தளர்த்தும்
நோக்கத்தை அவர் கொண்டுள்ளார். ஐ.நா.பாதுகாப்புக்குழுவில் பொருளாதா தடைகளுக்கு லெபனானின்
ஆதரவையும் பெற விரும்புகிறார்.
கடுமையான ஐ.நா. தடைகளுக்கு அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்சின்
ஆதரவைக் கொண்டிருக்கையில், ரஷ்யாவும் ஆதரவு கொடுக்கும் என்பதற்கான குறிப்புக்கள் உள்ளன. ஐ.நா.பாதுகாப்புக்
குழுவின் எஞ்சிய ஒரே உறுப்பு நாடான சீனாவும் ஒத்துழைக்க வேண்டும் என்பதற்கு ஆழ்ந்த அமெரிக்க அழுத்தங்கள்
கொடுக்கப்படுகின்றன. ஈரானுக்கு எதிரான தன்னுடைய ஒருதலைப்பட்ச தடைகளையும் வாஷிங்டன் முடுக்கியுள்ளது.
கடந்த வாரம் அமெரிக்க நிதித்துறை தன்னுடைய அதிகார வரம்பில் உள்ள புரட்சிகரப் படைப்பிரிவின் நான்கு
நிறுவனங்களின் சொத்துக்களை முடக்கிவிட்டது. அதேபோல் அதன் தளபதி
Rostam Qasemi,
IRGC உடைய கட்டமைப்பு, ஆயுத பொறியியல் பிரிவான
Khatam al-Anbiya
வின் சொத்துக்களையும் முடக்கியுள்ளது.
ஒரு அடையாளமாக இதை ஏற்றுக் கொண்டது போல், அமெரிக்கச் செய்தி ஊடகம்,
கிளின்டனின் புதிய பிரச்சார வழியின் பின் உள்ளது. நேற்றைய வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலின் கட்டுரை ஒன்று, "ஈரானின்
எழுச்சி பெறும் இராணுவ சர்வாதிகாரம்" என்று தலைப்பில் அது, "ஆட்சி மாற்றத்தை சிந்திப்பது ஒரு தேவையான
செயலே." "நடைமுறைவாதிகள் என்று சொல்லிக் கொள்ளுபவர்கள்கூட
IRGC யின் எழுச்சி
பெற்று வரும் தலைமையின்கீழ் கொமெனீயின் ஆட்சி ஈரானிய நிலையில் ஒரே சக்தி இல்லை என்பதை ஒப்புக் கொள்ளவேண்டும்.
மற்றொரு முக்கிய சக்தி உண்டு. பொதுமக்கள் இயக்கம் ஆட்சி மாற்றத்திற்காக வருவது என்பதே அது."
ஒபாமா நிர்வாகத்தின் மிரட்டும் நிலைப்பாடு அமெரிக்க அரசியல் நடைமுறையில் வெளிப்படையாக
இராணுவவாதப் பிரிவுகளுக்கு இன்னும் கடுமையான நடவடிக்கைகள் வேண்டும் என்று கோர ஊக்கம் அளித்துள்ளது.
வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலில் கடந்த வாரம் "The Case
for striking Iran grows" என்ற தலைப்பில் புஷ்
நிர்வாகத்தின் முன்னாள் ஐ.நா.தூதர் ஜோன் போல்டன், "அமெரிக்காவின் மத்திய குவிப்பு ஈரான் முதலில் அணுவாயுதம்
பெறாமல் தடுத்தல் என்று இருக்க வேண்டும். அவ்வாறு செய்வதற்கு உறுதியான, ஒருவேளை இராணுவ நடவடிக்கை
கூட தேவைப்படும். ஏனெனில் ஒபாமா ஊக்கம் கொடுக்கும் "ஆட்சி மாற்ற விருப்பம்" என்பது அந்த இலக்கை
அடையும் வாய்ப்பை அடிப்படையில் கொண்டிருக்கவில்லை."
ஒபாமா நிர்வாகம் தற்பொழுது தெஹ்ரானில் "ஆட்சி மாற்றத்தை" தொடர்வதில்
ஆர்வம் காட்டுகையில், மற்றய விருப்புரிமைகளையும் விட்டுவிடவில்லை. அவற்றில் இராணுவத் தாக்குதல்களும் அடங்கும்.
ஈரானிய ஆட்சியை அரசியல் அளவில் உறுதி குலைக்கும் வாஷிங்டனின் பொறுப்பற்ற முயற்சிகள் அந்த ஆட்சி முழுவதிலும்
அழுத்தங்களை அதிகரித்து போர் ஆபத்தையும் அதிகரிக்கும்.