World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள் ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
America, the land of inequality சமத்துவமற்ற நாடான அமெரிக்கா Tom Eley அமெரிக்காவில் செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையேயான சமூகப்பிளவு தற்போதைய பொருளாதார நெருக்கடியில் அதிகமாகிவிட்டது. இந்த நெருக்கடி தாக்கும் முன்னரே, மிக முன்னேறிய நாடுகளுள் இது மிக அதிகமாக இருந்ததுடன், பெரும் செல்வமும், தீவிர வறுமையும் கிட்டத்தட்ட பரம்பரை நிலைகளாகிவிட்டன என்பதையும் புதிய ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. ஜனாதிபதி பாரக் ஒபாமா பல தசாப்தங்களாக இருக்கும் ஊதிய தேக்கம், பெருகும் வறுமை, சமூகநல முறையில் தாக்குதல்கள் ஆகியவற்றை மாற்றுவதற்கு ஏதும் செய்யவில்லை. மாறாக, ஜோர்ஜ் புஷ்ஷை பின்பற்றி, நெருக்கடியை பயன்படுத்தி நிதியத்துறையின் தற்போதைய பிணையெடுப்பை ஒரு சிறிய நிதிய உயரடுக்கிற்கு செல்வத்தை மறுபங்கீடு செய்வதற்கு பயன்படுத்தியுள்ளார். இது ஒரு அடிப்படை அரசியல் உண்மையை நிரூபணம் செய்கிறது. வோல் ஸ்ட்ரீட்டின் பிடியில் வெளிப்படையாக சிக்கியுள்ள அரசாங்கத்திடமும், இருகட்சி முறையிடமும் இருந்து பரந்த மக்களுக்கு எந்தவித நலன்களையும் கொடுக்கும் சீர்திருத்தம் வராது என்பதே அது. நிதிய பிரபுத்துவம் அரசாங்க அதிகாரத்தின் அனைத்து நெம்புகோல்கள் மீதும் கொண்டிருக்கும் பிடி ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் சுயாதீனமாக திரட்டப்படும் ஒரு தொழிலாள வர்க்கத்தினால் உடைக்கப்பட வேண்டும். தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு இடையே தொழிலாளர்கள் வறிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது சமீபத்திய வடகிழக்கு பல்கலைக்கழகத்தின் 2009 வேலையின்மை பற்றிய ஆய்வில், முந்தைய ஆண்டின் வருமான தகவலை அடித்தளமாக கொண்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. 2009ல் வேலையற்றுள்ள அடிமட்ட 10 சதவிகிதமாக இருக்கும் குடும்பங்களின் வருமானம் நான்காம் காலாண்டில் பெருமந்தநிலையில் இருந்த அளவான 31 சதவிகிதமாக இருந்தது. வேலையின்மை பற்றிய ஒரு பரந்த அளவீடான வேலையின்மை, தகுதிக்கு குறைந்த வேலை, வேலையை நாடுவதை தீவிரமாக விட்டதால் தொழிலாளர் பிரிவில் இருந்து விலகிவிட்டவர்கள் அனைவரையும் கணக்கில் எடுத்துக் கொள்ளும் தொழிலாளர் சந்தையின் குறைந்த பயன்பாட்டு விகிதம் (underutilization rate) அடிமட்ட 10 சதவிகிதம் சம்பாதிப்பவர்களில் 50 சதவிகிதம் என்றும், இரண்டாம் 10 சதவிகிதத்தில் 37.6 என்றும், மூன்று, நான்காம் நிலைகளில் இருப்பவர்கள் முறையே 17.1, 25 சதவிகிதம் என்றும் இருந்தன. உயர்மட்ட 10 சதவிகித வருமானம் பெறுபவர்களைப் பொறுத்தவரை, குறைந்த பயன்பாட்டு விகிதம் 5.1 சதவிகிதமாக இருந்தது. அறிக்கையின்படி, இத்தகவல் "ஒரு உண்மை பெரு மந்த நிலையைக் காட்டுகிறது"; இருந்தாலும் "அமெரிக்காவின் செல்வம் படைத்தவர்களின் தொழிலாளர் சந்தையில் மந்த நிலை இல்லை." தீவிர துருவமுனைப்படுத்தலை காட்டும் ஒருபுறத்தில் பெரும் செல்வம், மறுபுறம் வேலையின்மை, ஊதியக் குறைப்புக்கள், வீடுகளற்ற நிலை, பட்டினியும் தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவினரிடையே இருப்பதும் நீண்டகால போக்குகளின் தீவிரப்படுத்தலைத்தான் காட்டுகின்றன. Economic Policy Institute (EPI) பொருளதாரக் கொள்கை கூடத்தின் கருத்துப்படி, "பல நடுத்தர வருமானமுடைய குடும்பங்கள் வேலைகள், வீடுகள், ஓய்வூதிய சேமிப்புக்கள் ஆகியவற்றை சமீபத்திய மந்த நிலையில் இழந்துவிட்டனர், அவர்களுடைய பொருளாதார இடர்பாடுகள் இன்னும் முந்தைய காலத்தில் இருந்தே வந்துவிட்டன." தற்போதைய நெருக்கடி தோன்றிய 2008க்கு, 30 ஆண்டுகள் முன்னதாக அமெரிக்காவின் மொத்தப் பொருளாதார வளர்ச்சியில் கிட்டத்தட்ட 35 சதவிகிதம் உயர்மட்ட ஒரு சதவிகிதத்தில் பத்தில் ஒரு பங்கினரால் தமக்கென ஒதுக்கப்பட்டிருந்தது. கீழே இருந்த 90 சதவிகிதம் இதே காலத்தில் 15.9 வருமான அதிகரிப்பை பங்கு போட்டுக் கொண்டனர்.குடும்ப வருமானம் தேசிய முறையில் எப்படி பங்கிடப்படுகிறது என்பதை அளக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் Gini அளவின்படி, 2008ல் கிடைத்துள்ள தகவல்கள்படி, உயர்ந்த தொழில்துறை முன்னேற்றம் அடைந்துள்ள நாடுகளிடையே அமெரிக்கா மிக அதிக சமத்துவமற்ற நிலையை கொண்டிருக்கிறது. இது இலங்கையை விட சற்றே கூடுதலான சமத்துவமற்ற நிலையில்தான் உள்ளது என்று மதிப்பிடப்பட்டது. கானா மற்றும் துர்க்மேனிஸ்தானுக்கு ஒப்பாக உள்ளது. CIA இன் உலக தகவல் புத்தகத்தின் படி(World Fact Book) 2008 ற்கான Gini தரத்தின்படி, அமெரிக்கா காமரூனுக்கு சற்றே பிந்தைய நிலையில் உள்ளது. அமெரிக்க முதலாளித்துவத்திற்கு வக்காலத்து வாங்குபவர்கள் நீண்டகாலமாக சமத்துவமின்மை அதிகமாக இருந்தாலும் அமெரிக்கா என்பது "வறிய நிலையில் இருந்து பெரும் செல்வந்தராக" எவரும் "உழைத்து முன்னுக்கு வரக்கூடிய நாடு" என்று கூறிவந்துள்ளனர். ஆனால் நிலைமை அப்படி இல்லை என்று பொருளாதார ஒத்துழைப்பிற்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின்(OECD) புதிய அறிக்கை கூறுகிறது. அமெரிக்காவில் "வருமானங்கள், ஊதியங்கள், கல்வி போன்றவற்றில் இயக்கம் பல தலைமுறைகளிலும் முன்னேற்றம் அடைந்துள்ள நாடுகளில் மிகக் குறைவு அல்லது அதற்கு அருகில்தான் உள்ளது" என்ற முடிவிற்கு அது வந்துள்ளது. ஒரு தொழிலாளரின் தந்தையின் வருமானம்தான் தொழிலாளியுடைய வருமானத்தையும் நிர்ணயிக்கும் முக்கிய கருவியாக உள்ளது என்னும் இத்தாலி, பிரிட்டன் நாடுகளுடன் அமெரிக்காவும் உள்ளது. மேலும் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவில் பெற்றோர்களுடைய கல்வித் தரம், குழந்தைகள் கல்விச்சாதனையில் குறிப்பிடத்தக்க பங்குவகிக்கின்றது என்றும் அறிக்கை கூறியுள்ளது. அமெரிக்காவில் இப்படி செல்வத்தைப் பொறுத்தவரையில் பாரிய துருவமுனைப்படுத்தல் இருப்பது இன்னும் தீவிரமடையும். ஒபாமா நிர்வாகம் தீட்டியுள்ள செழிப்பான மதிப்புக்கள்படி, வேலையின்மை தசாப்தத்தின் முடிவிற்குள் சரிவிற்கு முந்தைய தரத்திற்கு வேலையின்மை திரும்பப்போவது இல்லை. ஆனால் இன்னும் யதார்த்தமான அவதானிகள் பாரிய வேலையின்மை என்பது இனி அமெரிக்க வாழ்வில் நிலைத்திருக்கும் என்றும், அதிக ஊதியம் கொடுக்கும் வேலைகள் மற்றும் மந்த நிலையின்போது அழிக்கப்பட்டவை இனித் திரும்ப வராது என்றும் ஒப்புக் கொள்ளுகின்றனர். வீடுகள் மதிப்பு சரிந்ததுடன் இணைந்த நிலையில், சுகாதாரப் பாதுகாப்பு, உயர்கல்விச் செலவுகள் பெரிதும் உயர்ந்த நிலையில், நீண்டகால கூடிய வேலையின்மை விகிதம் உறுதியாக பெருகும் வறிய நிலையில்தான் சென்றுமுடியும். ஆனால் தலைமை நிர்வாக அதிகாரிகளும் வங்கியாளர்களும், அமெரிக்க சமூகத்தின் உச்சியில் இருப்பவர்கள், பொருளாதார நெருக்கடி தங்களுக்கு முற்றிலும் பெரும் ஆதாயத்தை கொடுத்துவிட்டது என்பதை நிரூபித்துள்ளனர் என்று சமீபத்திய நியூயோர்க் டைம்ஸ் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. Wells Fargo வங்கியின் தலைவர் John G. Stumph 2009ல் வீட்டிற்கு $18.7 மில்லியனை எடுத்துச் சென்றார். JP Morgan நிறுவனத்தின் JamieDimon, வங்கியாளர் உயர் ஊதியத்தில் இரண்டாம் இடத்தில் $17.6 மில்லியன் பெற்று நிலைத்துள்ளார். நிதியச்சரிவில் பெரும் ஆதாயங்களைப் பெற்ற Goldman Sachs ன் Lloyd Blankfein "10 மில்லியன்கள் மட்டுமே" வெகுமதி பெற்றார். இப்படி பெரிய வங்கிகளின் பெயர்கள் பனிப்பாறையின் உச்சியைத்தான் காட்டுகின்றன. "மில்லியனர் குழுவில் ஆயிரக்கணக்கானவர்கள் இருக்கக்கூடும்--ஏன் பத்து மில்லியன் குழுவில்கூட--இது ஒன்றும் பெரிதல்ல" என்று வோல் ஸ்ட்ரீட்டின் ஊதியப் பிரிவு வல்லுனர் Alan Johnson டைம்ஸிடம் கூறினார். இந்த இழிந்து ஊதியத் கொடுப்பனவுகளுக்கு ஒபாமா, "பெரும்பாலான அமெரிக்க மக்களைப்போல் நானும் இவர்கள் வெற்றி அல்லது செல்வத்தைக் குறைகூறவில்லை" என்று வரிப்பணத்தின் ஆதரவில் கிடைத்த டிரில்லியன்களில் பயனடைந்த நிறுவனங்களின் அதே நிதிய நிர்வாகிகள் எட்டு இலக்க வெகுமதி பெற்றுள்ளதைப் பற்றி இது சுதந்திர சந்தை அமைப்பின் ஒரு பகுதியாகும்'' என கூறினார். உண்மையில் "பெரும்பாலான அமெரிக்க மக்கள்" இந்த நெறி தவறிப்பெறப்பட்டுள்ள ஆதாயங்களை ஏற்கவில்லை. வங்கியாளர்களும் வணிகர்களும் அவர்களுடைய ஆடம்பர அலுவலகங்களில் இருந்து கைதுசெய்யப்பட்டு சிறைக்கு அழைத்துச் செல்லப்படும் செய்திக் காட்சிகளை இன்னும் காணவில்லை என்றுதான் வியக்கின்றனர். இப்பொழுது தொழிலாளர் வர்க்கத்தின் சீற்றம் பெருகிய முறையில் அரசியல் அமைப்புமுறையின்மீது பாய்ந்துள்ளது. ஒபாமா நிர்வாகத்தின் ஓராண்டு அனுபவம் காட்டியுள்ளதுபோல், இந்த முறை வெள்ளை மாளிகையிலும் காங்கிரஸிலும் எந்தக்கட்சி கட்டுப்படுத்தினாலும், அது வோல் ஸ்ட்ரீட் கட்டளைகளைத்தான் நிறைவேற்றுகிறது. பல தசாப்தங்களாக தடையின்றி நடந்து கொண்டிருக்கும் சமூகத்தை கொள்ளை அடிப்பதற்கு மாற்று வங்கிகளை தேசியமயமாக்கி அவற்றை பொது நிறுவனமாக மாற்ற வேண்டும். அவை தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட வேண்டும். நிதியப் பிரபுக்களின் நெறியற்ற முறையில் சேர்த்த ஆதாயங்கள் அபகரிக்கப்பட்டு முழு வேலை, இலவசமாக அனைவருக்கும் சுகாதாரப் பாதுகாப்பு, சுதந்திர உயர் கல்வி, உள்கட்டுமான வளர்ச்சி ஆகியவை செயல்படுத்தப்பட வேண்டும். இந்த வேலைத்திட்டத்திற்காக போராட அமெரிக்காவிலும் சர்வதேசரீதியாகவும் ஜனநாயக, குடியரசுக்கட்சிகள் மற்றும் முதலாளித்துவ முறையைக் பாதுகாக்கும் அனைத்து அரசியல் அமைப்புக்களிடம் இருந்து சுதந்திரமான முறையில் தொழிலாளர் வர்க்கம் அணிதிரட்டப்பட வேண்டும். |