World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Afghanistan: Obama's escalation begins

ஆப்கானிஸ்தான்: ஒபாமாவின் போர் விரிவாக்கம் தொடங்குகிறது

Joe Kishore
17 February 2010

Use this version to print | Send feedback

மர்ஜா நகரத்திற்கு எதிராக பெப்ருவரி 13 அன்று தொடங்கிய தாக்குதல் ஜனாதிபதி பாரக் ஒபாமா அமெரிக்கப் போர் முயற்சி தீவிரமாக்கப்பட வேண்டும், மற்றும் ஒரு 30,000 கூடுதல் அமெரிக்கப் படைகள் அனுப்பப்பட வேண்டும் என்று உத்திரவிட்டதற்கு பின்னர் ஆப்கானிஸ்தானத்தில் அமெரிக்க இராணுவம் மேற்கொள்ளும் முதல் பெரிய போர் முயற்சி ஆகும். ஜோர்ஜ் டபுள்யூ புஷ் 2001 ஆரம்ப படையெடுப்பு நடத்த உத்தரவிட்டதற்கு பின்னர் மர்ஜா மீதான தாக்குதல் அமெரிக்க இராணுவ நடவடிக்கையில் மிகப் பெரியதாகும்.

அமெரிக்க ஆக்கிரமிப்பு ஆட்சிக்கு கெரில்லா எதிர்ப்புமுறையில் முக்கியமாக இருக்கும் அதிக மக்கள் தொகை உள்ள தெற்கு ஆப்கானிஸ்தானத்தின் ஹெல்மாண்ட், காந்தகார் மாநிலங்களில் மர்ஜாவிற்கு பின்னர் தொடர்ந்த விரிவான தங்குதல்கள் நடத்தப்பட உள்ளன. கடந்த மாதம் வெளியிடப்பட்டுள்ள விவரங்கள்படி, இந்த இரு மாநிலங்களில் மட்டும் ஆப்கானியப் போரில் இறந்த 1,6000 அமெரிக்க நேட்டோ துருப்புக்களில் மொத்த 600 பேர் மடிந்தனர்.

மர்ஜாவில் பயன்படுத்தப்படும் முறைகள் ஒபாமா நிர்வாகம் மற்றும் பென்டகன் போர் முழுவதும், குறிப்பாக வசந்த காலத்தில் இன்னும் ஆக்கிரோஷமாக அமெரிக்க சக்தி பயன்படுத்தப்படும் வரை, ஆப்கான் மக்களுக்கு ஆண்டு முழுவதையும் கொடுக்க இருப்பதின் காட்சியை காட்டுகின்றன. குளிர்காலத்தில் போர்விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர் தாக்குதல்கள் பொதுவாகத் தடைக்கு உட்படுகின்றன.

செய்தி ஊடகத்தால் மீண்டும் மீண்டும் கூறப்படும் அமெரிக்க அதிகாரிகளின் கூற்றான தாக்குதல் மிகக் குறைந்த பொதுமக்கள் இறப்புக்களுடன் நடத்தப்படும் என்பது, ஞாயிறன்று தவிடுபொடி ஆயிற்று. அன்று 80,000 மக்கள் இருக்கும் சிறு நகரத்தில் ஒரு இராணுவத் தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர். இறந்தவர்களுள் 6 குழந்தைகளும் இருந்தன. மொத்தத்தில் 20 சாதாரணக் குடிமக்கள் கொல்லப்பட்டனர் என்று செய்தி ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதைத்தவிர, அமெரிக்க இராணுவம் 400 எதிர்ப்பாளர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளவர்களில் கிட்டத்தட்ட 100 பேரை ரைபிள்கள், ராக்கட் உந்துதுல் வெடிகுண்டுகள் மூலம் கொன்றதாக கூறியுள்ளது. எதிர்ப்பாளர்கள் 15,000 மிக அதிக ஆயுதங்கள் உடைய அமெரிக்க, பிரிட்டிஷ், கனேடிய, ஆப்கானிய கைப்பாவை துருப்புக்களை, போர் விமானங்கள், ஆளில்லா விமானங்கள், பீரங்கி ஆகியற்றின் ஆதரவை கொண்டவர்களை எதிர்க்கின்றனர். ஆக்கிரமிப்பை எவர் எதிர்த்தாலும் வாடிக்கையாக அமெரிக்கா தலிபான் என்று அவர்களை அழைக்கிறது. இறந்தவர்களில் எத்தனை பேர் உண்மையான போராளிகள் என்று நிர்ணயிப்பது கடினம்.

ஒரு இத்தாலிய மருத்துவ நிறுவனமும் நேட்டோ படைகள் காயமுற்ற ஆப்கானியர்கள் மாநிலத் தலைநகரான Lashkar Gah வில் உள்ள மருத்துவமனைகளுக்கு எடுத்துச் செல்லப்படுவதற்கு தடை செய்வதாக குற்றம்சாட்டியுள்ளது. மர்ஜாவிற்கு கிழக்கே உள்ள காந்தகார் மாநிலத்தில் ஐந்து குடிமக்கள் ஒரு விமான தாக்குதலில் கொல்லப்பட்டனர்--மற்றொரு "தவறு" என்று அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.

நகரத்தின்மீது கட்டுப்பாட்டை நிறுவியபின், ஆக்கிரமிப்பு படைகள் வீடுவீடாக சோதனை செய்து ஆக்கிரமிப்பிற்கு எதிராக உள்ளவர்களை தேடும் திட்டத்தை கொண்டுள்ளனர். மர்ஜா பகுதியில் ஐந்து பொதுமக்களுக்கு ஒரு படையெடுப்பு இராணுவம் என்ற நிலையில், இன்னும் பல பொதுமக்கள் இறப்புக்கள் வரும் என்பதில் சந்தேகம் இல்லை.

மர்ஜா நடவடிக்கை ஆரம்பத்தில் இருந்தே ஒரு பிரச்சாரத் தாக்குதலாகவும் இருந்து வருகிறது. இதன் நோக்கம் அமெரிக்க மற்றும் ஆப்கானிய மக்களை கவர்வது ஆகும். மர்ஜாவில் "ஒரு வெற்றி" என்பது ஆப்கானிஸ்தானத்தில் ஒபாமாவின் விரிவாக்கமும் மற்றும் அங்குள்ள உயர்மட்ட அமெரிக்க தளபதி ஸ்டான்லி மக்கிரிஸ்டலின் கிளர்ச்சி எதிர்ப்பு மூலோபாயம் ஒரு நிலைத்த வெற்றியைத் தர முடியும் என்பதை நிரூபிக்கும் நோக்கம் உடையது.

அமெரிக்க செய்தி ஊடகம், பெரும்பாலும் பல இராணுவப் பிரிவுகளுடன் "இயைந்த" நிருபர்களை கொண்டது, தங்கள் தகவல்களை இராணுவத் தணிக்கைக்கு அளிக்கின்றனர். செய்தி ஊடகம் வாடிக்கையாக அரசாங்கத்தின் கூற்றை கிளிப்பிள்ளை போல் கூறுகிறது--அதாவது அரசாங்கம் பொதுமக்கள் இறப்புக்களை குறைக்க இயன்றதை செய்வதாகவும் ஆப்கானிய மக்களின் "இதயங்களையும், மனங்களையும்" வெற்றி கொள்ள முற்படுவதாகவும் எழுதுகிறது. நேட்டோப் படைகள் "ஒரு பெட்டியில் அரசாங்கத்தை" கொண்டுவரும், அது சமாதானத்தையும் செழிப்பையும் மர்ஜாவிற்கு அளிக்கும், அவ்வரசாங்கம் பொறுப்பு எடுத்துக் கொள்ளத் தயாராக உள்ளது என்று மக்கிரிஸ்டல் பெருமை பேசியுள்ளார்.

பொதுமக்கள் இறப்புக்கள் தவிர்க்க முடியாதவை, துரதிருஷ்டமானவை என்று கூறப்படுகின்றன. இதைத் தொடர்ந்து எப்படி பொதுமக்கள் இறப்புக்களை தவிர்ப்பதில் அமெரிக்க நடவடிக்கைகளுக்கு இருப்பதாக கூறப்படும் தடைகளும் படையினர் எதிர்கொள்ளும் பெருகிய ஆபத்துக்களும் விவாதிக்கப்படுகின்றன. இந்தப்போக்கின் துணை விளைவு எதிர்பார்க்கக்கூடியதுதான்: இராணுவ வன்முறை மற்றும் கொடுமைகளை பரந்த அளவில் கொடுத்தல். ஏனெனில் ஆக்கிரமிப்பிற்கு மக்கள் காட்டும் எதிர்ப்பினால் விரக்தியடைந்த படையினர் நிலைமையை அவ்வாறு எதிர்கொள்கின்றனர் எனக்கூறப்படும்.

மர்ஜாவைக் கட்டுப்பாட்டிற்குள் எடுக்கும் தாக்குதல் ஹெல்மாண்ட் மற்றும் காந்தகார் ஆகியவற்றின் தென்பகுதித் தாக்குதல்களில் முதல் கட்டமாகும். இப்பகுதிதான் வெளி ஆக்கிரமிப்பிற்கும், ஊழல் மிகுந்த கைக்கூலி ஜனாதிபதி ஹமித் கர்சாய் ஆட்சிக்கும் கெரில்லா எதிர்ப்பு முறையில் இதயத்தானம் ஆகும். இது பரந்த அளவில் கொல்லுதல், முறையான, மிருகத்தனமாக அடக்குமுறையை ஆப்கானிஸ்தானை அமெரிக்கா ஆக்கிரமிப்பதற்கான உரிமையை எவர் எதிர்த்தாலும் செலுத்துதல் இவற்றுடன் தொடரும்.

மர்ஜா, மத்திய ஹெல்மாண்ட் மாநிலத்தின்மீது அமெரிக்க கட்டுப்பாடு நிறுவப்பட்டவுடன், இன்னும் கூடுதலான அமெரிக்கப் படைகள் வசந்தகாலத்தில் வரும்போது, மிகப் பெரிய, கூடுதல் இரத்தம்தோய்ந்த தாக்குதல்கள் வரவுள்ளன. இவை ஆப்கானிஸ்தானின் இரண்டாம் மிகப் பெரிய நகரத்தின்மீது தாக்குதலில் உச்சக்கட்டத்தை அடையும். அதுதான் தலிபானின் பிறப்பிடம்; இப்பொழுது ஜனாதிபதியின் தம்பி, போதைமருந்து விற்பன்னர் அஹமத் வாலி கர்சாயால் பகல் நேரத்திலும், தலிபானால் இரவிலும் ஆளப்படுகிறது.

கிட்டத்தட்ட அரை மில்லியன் மக்களைக் கொண்ட காந்தகார் நவம்பர் 2004ல் அமெரிக்க துருப்புக்களால் பெரிதும் அழிக்கப்பட்ட ஈராக்கிய நகரம் பல்லுஜாவிற்கு அளவில் ஒப்பானது. இராணுவ அதிகாரிகள் அதைத்தான் தற்போதைய பிரச்சாரத்திற்கு முன்மாதிரி என்று மேற்கோளிட்டுள்ளனர்.

ஒபாமா நிர்வாகத்தின் இயக்கத்தின்கீழ் நடத்தப்படும் குற்றம்சார்ந்த நடவடிக்கை அமெரிக்காவில் உள்ள "போர் எதிர்ப்பு" மத்தியதர வகுப்பு அமைப்புக்களின் மெளனத்துடன் இணைந்துள்ளது. இக்குழுக்கள் அவற்றின் ஒபாமாவிற்கு ஆதரவு என்பதால் முற்றிலும் சமரசத்திற்கு உட்பட்டுள்ளதுடன், உண்மையில் போரில் அமெரிக்காவின் அடிப்படை நோக்கங்களையும் பாதுகாக்கின்றன.

இந்த அமைப்புக்களின் முக்கியமானது The Nation ஏடு மர்ஜாவில் நடந்துள்ள தாக்குதல் பற்றி அதன் வலைத்தளத்தில் ஒரு கட்டுரையைக் கூட பிரசுரிக்கவில்லை. ஆப்கானிஸ்தானை பற்றி கொடுக்கப்படும் தகவல் ஆளும் வர்க்கத்தை எதிர்கொள்ளும் தந்திரோபாய பிரச்சினைகளான அமெரிக்கப்படைகள் தலிபான் பிரிவுகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தலாமா, கூடாதா என்பது பற்றியே உள்ளன.

தெற்கு ஆப்கானிஸ்தானத்தில் உள்ள தாக்குதல் பாரக் ஒபாமா மற்றும் ஜனநாயகக் கட்சி பதவிக்கு வந்துள்ளமை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இராணுவவாத விரிவாக்கத்தை நிறுத்த ஏதும் செய்யவில்லை என்பதைத்தான் நிரூபிக்கிறது. ஆப்கானிய எழுச்சி பாக்கிஸ்தானில் அமெரிக்க ஆளில்லாத விமான ஏவுகணைத் தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன் இணைந்துள்ளது. ஜனவரி மாதம் அதில் 123 மக்கள் கொல்லப்பட்டனர். யேமனில் "பயங்கரவாதத்திற்கு எதிரான போரில்" ஒரு புதிய முன்னணி துவக்கப்பட்டுள்ளது. ஈரானுக்கு எதிராக பெருகிய அச்சுறுத்தல்கள் வந்துள்ளன; சீனாவிற்கு எதிரான ஆத்திரமூட்டல் நடவடிக்கைகள் பெருகிய முறையில் உள்ளன.

போர் விரிவாக்கம் என்பது அமெரிக்க முதலாளித்துவத்தின் அடிப்படை நலன்களால் தீர்மானம் செய்யப்படுகிறது. இதில் மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவின் நடுப் பகுதிகளில், பூகோள-மூலோபாயப் பகுதிகளில் கட்டுப்பாடு நிறுவதல் ஏற்படுத்தப்படுகிறது. அமெரிக்க நிதிய உயரடுக்கின் கொள்ளை முறை நலன்களில் வெளிப்புற வெளிப்பாடுதான் இந்தப் போர். மிகப் பெரிய முறையில் வந்துள்ள இராணுவ வரவு செலவுத்திட்டத்திற்கு பாரிய வங்கி பிணை எடுப்புக்களைப் போல், சமூகநலத் திட்டங்கள் செலவுக் குறைப்பு, தொழிலாள வர்க்கத்தின் மீதான சுரண்டல் தீவிரப்படுத்தப்படுதல் ஆகியவற்றின்மூலம் விலை கொடுக்கப்படும்.

போருக்கு எதிராக ஒரு புதுப்பிக்கப்பட்ட போராட்டத்தை தொடக்குவது தேவையாகும். அதில் அமெரிக்க மற்றும் பிற வெளிநாட்டு துருப்புக்கள் ஆப்கானிஸ்தானில் இருந்த உடனடியாக, நிபந்தனையற்ற வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையும் இருக்க வேண்டும். அத்தகைய போராட்டம் போருக்கு எதிரான போராட்டம் முதலாளித்துவம், ஒபாமா நிர்வாகம், பெருவணிகத்தின் இரு கட்சிகள் ஆகியவற்றிற்கு எதிரான போராட்டமாகவும் இருக்க வேண்டும். அதற்கு ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன அரசியல் அணிதிரளல் தேவையாகும்.