World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஆசியா
:
ஆப்கானிஸ்தான்
German army given green light to kill civilians in Afghanistan ஆப்கானிஸ்தானில் சாதாரண குடிமக்களை கொல்ல ஜேர்மன் இராணுவத்திற்கு அனுமதிவழங்கப்படுகின்றது By Peter Schwarz ஆப்கானிஸ்தானில் தன்னுடைய இராணுவத் தலையீட்டை ஜேர்மனிய அரசாங்கம் இப்பொழுது உள்நாட்டுப்போரில் குறுக்கிடுதல், அல்லது சட்ட மொழியில் "சர்வதேசத் தன்மை இல்லாத ஆயுதமோதல்" என்று புதிதாக மறுவகைப்படுத்தியுள்ளது. இது வெளியுறவு மந்திரி கீடோ வெஸ்டவெல்ல (FDP) ஆல் புதனன்று பாராளுமன்றத்திற்கு அரசாங்கம் கொடுத்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக அரசாங்கம் ஆப்கானிய தலையீட்டை சமாதானத்தை பாதுகாக்க உதவும் உறுதியளிக்கும் நடவடிக்கை என்று விளக்கியிருந்தது. தலையீட்டை இப்படி வேறுவிதமாக வகைப்படுத்தியுள்ளது சட்டபூர்வமான நீண்டதூரவிளைவுகளை கொண்டதாகும். ஒரு உள்நாட்டுப்போரில் சர்வதேச குற்றச்சட்டத்திற்கு பொருந்தும், ஆனால் ஜேர்மனிய குற்றவியல் சட்டத் தொகுப்பிற்கோ அல்லது போலீஸ் சட்டத்திற்கோ பொருந்தாதது. போரை மறுவகைப்படுத்தும் முன், ஜேர்மன் படையினர் ஏட்டளவில் வெடிமருந்துகளை அசாதாரண சூழ்நிலையில், சுயபாதுகாப்பு போன்றவற்றில்தான் பயன்படுத்தமுடியும். சர்வதேச குற்றவியல் சட்டம் அதிக கருணை காட்டுவதுடன், விகிதாசாரரீதியில் அதிகமாக "இராணுவ நலன்களை" கொடுக்கும் என்றால் தாக்குதலில் தொடர்பற்ற சாதாரணக் குடிமக்கள் கொல்லப்படுவது கூட பொறுத்துக் கொள்ளும். இப்பொழுது ஆப்கான் குடிமக்களை சுடும் ஜேர்மன் படையினர் உடனடியாக அரசாங்க வக்கீலின் விசாரணையை எதிர்கொள்ளவேண்டும் என்று கவலைப்பட வேண்டியதில்லை. கொலை விகிதத்திற்கு அதிகமாகப் போனால்தான் அரச வக்கீல் நடவடிக்கைக்கு வருவார். இந்த "சொற்றொடரும்" தெளிவற்ற முறையில் வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த மறு வகைப்படுத்துதல் ஜேர்மன் இராணுவம் (Bundeswehr) தனது விருப்பப்படி பொறுப்பற்ற முறையில் சாதாரண மக்களைக் கொல்ல அனுமதி கொடுக்கவில்லை என்றாலும், தடைகளை தாண்டுதல் கணிசமாகக் குறைக்கப்பட்டுவிட்டது. ஒரு நிரபராதியாக தாக்குதலில் பங்குகொள்ளாதவரை கொன்றதற்கு குற்றவியல் நடவடிக்கையை ஒரு படையினர் இப்பொழுது எதிர்கொள்ளும் நிலை மிகக் குறைந்துவிட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் 4ம் தேதியில் பல சாதாரண குடிமக்கள் உட்பட குண்டுஸில் இராணுவ தளபதி ஜோர்ஜ் கிளைன் விமானம் மூலம் தாக்குதலுக்கு உத்தரவிட்டதில் 142 ஆப்கானியர்கள் கொல்லப்பட்டதில் இருந்து இராணுவத் தலைவர்கள் முறையாக ஆப்கானிய தலையீடு அத்தகைய மறுவகைப்படுத்தப்பட வேண்டும் என்று வாதிட்டு வந்துள்ளனர். இப்பிரச்சாரத்தின் முன்னணியில் பாதுகாப்பு மந்திரி கார்ல் தியோடர் சூ குட்டன்பேர்க் (CSU) உள்ளார். இவர் குண்டுஸ் படுகொலையை தொடர்ந்து "சர்வதேச தன்மையற்ற ஆயுதமேந்திய மோதல்" என்று பேசத்தலைப்பட்டிருந்தார். இப்பொழுது ஜேர்மனிய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக இந்த நிலைப்பாட்டை ஏற்றுள்ளது. இந்த மறுமதிப்பீட்டிற்கான அழைப்பு படையினருக்கு "தேவையான சட்டபூர்வ உறுதிப்பாடு" வேண்டும் என்ற வாதத்தை தளமாக கொண்டதாகும். வெளியுறவு மந்திரி வெஸ்டர்வெல்லே கூட பாராளுமன்றத்தில், "களத்தில் ஆபத்துக்கள் எதிர்கொள்ளுபவர்கள் அவற்றை தக்க பெயரில் எதிர்கொள்வதற்கு நாம் பொறுப்பு கொண்டுள்ளோம்." உண்மையில் இப்படி மறு வகைப்படுத்தப்பட்டுள்ளது போர் மிகப்பெரியளவில் அதிகமாவதுடன் பிணைந்துள்ளது. அதுவோ முன்பு இருந்ததைவிட ஆப்கானிஸ்தானில் உள்ள ஜேர்மன் படையினரை இன்னும் அதிக ஆபத்துக்களை எதிர்கொள்ள வைக்கும். சமீபத்திய மாதங்களில் ஜேர்மனிய துருப்புகளுக்கும் எழுச்சியாளர்களுக்கும் இடையே மோதல்கள் அதிகமாகி வருகின்றன. இராணுவம் பொறுப்புக் கொண்டிருக்கும் நாட்டின் வடபகுதியில் ஒப்புமையில் சமாதானமாக இருந்த காலம் முடிந்துவிட்டது. அமெரிக்க அரசாங்கம் துருப்புக்களின் எண்ணிக்கையை அதிகமாக்குவதில் ஒரு பகுதியாக, 5,000 படையினர் வடக்கே அனுப்பப்படுகின்றனர். அதன் பின் ஜேர்மன் படையினருடன் கூட்டாக நடவடிக்கைகளை எடுப்பர். குண்டுஸ் படுகொலை பற்றிய விசாரணைகள் மூலம் ஜேர்மனிய விஷேட துருப்புக்கள் எழுச்சித் தலைவர்களை முறையாக வேட்டையாடிப் பிடிக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது தெரியவந்துள்ளது. செப்டம்பர் 4 தளபதி கிளைன் கொடூர விமானத் தாக்குதலுக்கு கொடுத்த அழைப்பு "Task Force 47" என்னும் கட்டுப்பாட்டுத் தளத்தில் இருந்து வந்தது என்பதும் தெளிவாகியுள்ளது. 200 பேர் கொண்ட வலுவான பிரிவின் செயற்பாடுகள் கடுமையாக இரகசியத்திற்கு உட்பட்டவை. அதன் உறுப்பினர்களில் பாதிப்பேர் ஜேர்மனியின் சிறப்புப் படைகள் கட்டுப்பாட்டில் (KSK) இருந்து வருபவர்கள். இதற்கு தனி சுயாதீன அமைப்பு உண்டு. அதன் பணி நேட்டோ "கூட்டு விளைவுகள் முன்னுரிமை பட்டியல்" என்று கூறப்படுவதில் இருக்கும் முக்கிய எழுச்சியாளர்களை அடையாளம் கண்டு தொடர்வது ஆகும். பட்டியலில் உள்ள எவரும் கைது செய்யப்பட்டு வெளிநாட்டு படையினரால் எப்பொழுது வேண்டுமானாலும் கொல்லப்படலாம் என்பது முறையான போராக கருதப்படுகிறது. குண்டுஸ்மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல் இரவன்று, தளபதி கிளைன் Task Force 47 உறுப்பினர்கள் சிலரால் ஆலோசனை கூறப்பட்டார். சமீபத்திய தகவல்படி, கட்டுப்பாட்டு அறையில் ஜேர்மனியின் வெளியுறவு உளவுத்துறையின் (BND) இரு உறுப்பினர்களும் சாதாரண உடைகளில் இருந்தனர். இவை கிளைன் தாக்குதல் உத்தரவை கடத்தப்பட்ட டாங்கர்களுக்கு அருகே இருந்த முக்கிய நபர்களை அகற்றுவதற்காக உத்தரவிட்டிருக்கலாம் என்பதற்கான வலுவான குறிப்புக்கள் ஆகும். அதன் பின் அவை அமெரிக்க விமானங்களின் தாக்குதலுக்கு உட்பட்டன. டஜன் கணக்கான சாதாரண மக்கள் இந்த நடவடிக்கையினால் இறக்கக்கூடும் என்று முழுமையாகத் தெரிந்தே இது நடைபெற்றது. சமீபத்தில் Spigel Online இல் வந்த அறிக்கை ஒன்றின்படி, இரகசிய நேட்டோ ஆவணங்கள் தளத்தில், இதே Task Force 47 குண்டுஸ் பகுதியில் தலிபான் தளபதிகளில் முக்கியமானவர்களில் ஒருவர் என்று கருதப்பட்டிருந்த முல்லா ஷம்சுதினை கைது செய்யத் திட்டமிட்டிருந்தது. ஆனால் அந்த நடவடிக்கை கடத்தப்பட்டிருந்த டைம்ஸ் நிருபர் Stephen Farrell ஐ, ஷம்சுதின் மறைந்திருந்த பகுதியில் இருந்து 50 மீட்டர் தூரத்தில் விடுவிப்பதில் தொடர்பு கொண்டிருந்த பிரிட்டிஷ் விஷேட பிரிவின் வேண்டுகோளின் பேரில் நிறுத்தப்பட்டது. இப்போது "சிக்கலான வினா" வந்துள்ளது, இரு பெட்ரோல் டாங்கர்கள் கடத்தப்பட்டதை "KSK சிறப்புப் படையினர் உடனடியாக தளபதி கிளைன் கொடுத்த இசைவை வாய்ப்பாகப் பயன்படுத்தி டாங்கர்களுக்கு அருகே இருந்த தலிபான் தலைவர்களை கொல்ல முடியுமா என்று கருதியதுதான்" என்று Spiegel Online முடிவுரையாகக் கூறுகிறது. ஆப்கானிய தலையீட்டை ஜேர்மன் அரசாங்கம் மறுவகைப்படுத்தியுள்ளது இத்தகைய நடவடிக்கைகளை பொதுமக்கள் பார்வையில் இருந்து மறைக்கவும், சட்டபூர்வ மறைப்பை இன்னும் திறமையாக கொடுக்கவும் பயன்படும். இந்த மறுவகைப்படுத்தலின் மூலம் தளபதி கிளைன் நேரடியாக நலன் அடைவார் என்று வல்லுனர்கள் கருதுகின்றனர். கூட்டாட்சி வக்கீல் இப்பொழுது குண்டுஸ் படுகொலை தொடர்புடைய எந்த குற்றங்களிலும் கிளைன் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா என ஆராய்கிறார். ஒரு ஆயுத மோதல், சர்வதேச குற்றவியல் சட்டத்தின்கீழ் வருகிறது என்று நடவடிக்கைபற்றி கருதப்பட்டால், தண்டனை ஏதும் இன்றி கிளைன் தப்புவார். நேட்டோ போர்விதிகளை மீறியதற்கு கட்டுப்பாட்டு தண்டனையை மட்டும் எதிர்கொள்ளுவார். தன் அரசாங்கத்தின் அறிக்கையை வெளியுறவு மந்திரி வெஸ்டர்வெல்ல அறிவித்த அன்றே, கிளைன் பாராளுமன்ற பாதுகாப்புக் குழுவின் முன் ஐந்து மணி நேரம் சாட்சியம் கொடுத்தார். அது குண்டுஸ் படுகொலை பற்றி விசாரித்துக் கொண்டிருக்கிறது. முதலில் தான் மெளனமாக இருக்கும் உரிமையை தளபதி பயன்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் தாக்குதலில் இறங்க முடிவெடுத்தார். அவருடைய வக்கீல் கூற்றுப்படி ஒரு இராணுவத் தேவை, சட்ட பூர்வ நடவடிக்கை என்று அவர் குண்டுவீச்சை நியாயப்படுத்துகின்றார். விசாரணைக்குழு இரகசியமாக கூடுவதால் அதிக விவரங்கள் வெளியிடப்படவில்லை. ஆப்கானிஸ்தான் தலையீடு மறு வகைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை, ஜேர்மனிய அரசாங்கம் இராணுவத்தை ஒரு ஏகாதிபத்திய இராணுவ தலையீட்டு சக்தியாக மாற்றுவதில் இன்னும் ஒரு படி எடுத்து வைத்துள்ளது என்றே அர்த்தப்படுகின்றது. உயர்நீதிமன்றம் ஜூலை 12, 1994 வியக்கத்தக்க முறையில் கொடுத்த தீர்ப்பில் ஆயுதமேந்திய இராணுவப் படைகள், ஐக்கிய நாடுகள் சார்பிலோ, நேட்டோவின் சார்பிலோ ஈடுபடுத்தப்படலாம் என்று குறிப்பிட்டதால் பொதுவாக பாராளுமன்றம், மக்கள் கருத்து ஆகியவற்றிற்கு பொறுப்பு கூறா விதத்தில் இந்த மாற்றம் படிப்படியாக மாற்றப்பட்டுவருகிறது. இப்பொழுதும்கூட, பாராளுமன்றம் ஒரு பகிரங்க விவாதம் இல்லாமல், அதுவும் பரந்த பெரும்பான்மையான மக்களால் நிராகரிக்கப்படும் செயல்களை செய்வதற்கு அரசாங்கம் எடுக்கும் முடிவிற்கு மறைப்பாக உதவுகிறது. ஒரு சமீபத்திய கருத்துக்கணிப்பின்படி, விடையிறுத்த 76 சதவிகிதத்தினர் ஆப்கானிஸ்தானில் இராணுவத்தின் பணியின் வெற்றி பற்றி சந்தேகப்பட்டுள்ளனர், 65 சதவிகிதத்தினர் சமீபத்திய முடிவான படைகள் எண்ணிக்கை அதிகரிப்பை எதிர்த்துள்ளனர். |