World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

US-China trade tensions escalate

அமெரிக்க-சீன வணிக அழுத்தங்கள் அதிகரிக்கின்றன

By John Chan
13 February 2010

Use this version to print | Send feedback

ஐ.நாவின் ஈரானின் அணுசக்தித் திட்டங்களுக்கான எதிர்ப்பு, இணைய தள தணிக்கை, காலநிலை மாற்றங்கள் அத்தோடு பொருளாதாரக் கொள்கை உட்பட பல பிரச்சினைகளில் பெய்ஜிங் மீது ஒபாமா நிர்வாகம் தொடர்ந்து அழுத்தும் கொடுக்கும் பிரச்சாரத்தின் பின்னணியில், அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே உள்ள வணிக அழுத்தங்கள் தொடர்ந்து உயர்கின்றன. அமெரிக்க கோரிக்கைகளுக்கு எதிராக சீனா கடும் எதிர்ப்பைக் காட்டியுள்ளது. ஆண்டின் தொடக்கத்தில் இருந்து குறிப்பிடத்தக்க வகையில் உறவுகள் படுமோசம் அடைய வகை செய்துள்ளது.

பெப்ருவரி 5ம் தேதி பெய்ஜிங்கும் வாஷிங்டனும் வணிகப் பிரச்சினைகள் பற்றி பெருகிய சூடான சொற் போர்களுக்கு இடையே பதிலடி கொடுக்கும் பாதுகாப்புவரிகளை சுமத்தியுள்ளன. அமெரிக்க கோழிக்குஞ்சு பொருட்கள் மீது அமெரிக்கா தேவைக்கு அதிகமான பொருட்களை குறைந்த விலையில் அனுப்புவது "சீனாவின் உள்நாட்டுத் தொழிலுக்கு கணிசமான சேதத்தை ஏற்படுத்துகிறது" என்ற அதன் கண்டுபிடிப்பைத் தொடர்ந்து சீனாவின் வணிக அமைச்சரகம் அவற்றின்மீது 105.4 சதவிகித இறக்குமதி வரிகளை அறிவித்தது. பின்னர் அன்றே வாஷங்டன் பதிலடி கொடுக்கும் விதத்தில் தேவைக்கு அதிகமான பொருட்களை குறைந்த விலையில் அனுப்புவதற்கு எதிராக சுங்கவரிகளை 231.4 சதவிகிதம் சீனாவில் உற்பத்தியாகும் பரிசுப் பெட்டிகள், ரிப்பன்கள் ஆகியற்றின் மீது "நியாயமற்ற விலை" என்று காரணம் காட்டி சுமத்தியது.

சீன ஆய்வு விசாரணையானது, மற்றொரு அமெரிக்க கார் பாகங்களைப் பற்றியதுடனும் இணைந்த விடயமாக, இறக்குமதி செய்யப்பட்ட சீனாவின் டயர்கள் மற்றும் எஃகு குழாய்கள் மீது அமெரிக்கா காப்பு வரிகளைச் சுமத்தியற்கு பதில் நடவடிக்கை ஆகும். சீன வணிக அமைச்சரக மதிப்பீடுகளின்படி, அமெரிக்க வணிக நடவடிக்கை எடுப்புகளுக்கு $7 பில்லியன் மதிப்புடைய சீன ஏற்றுமதிகள் உட்பட்டிருந்தன. அமெரிக்க கார் உதிரி பாகங்கள்மீது சீன வணிக அபராதங்கள் கூட சாத்தியங்களாக உள்ளது. ஏனென்றால் வாஷிங்டனுடைய GM மற்றும் Chrysler ஐ அரசாங்க உதவித் தொகைகள் மூலம் பிணைஎடுப்பு செய்தது நியாயமற்றது என்று பெய்ஜிங் வாதிடுகிறது.

சமீப காலம் வரை, சீனாவானது அமெரிக்க பொருட்களின் மீது காப்புவரிகளை சுமத்த தயங்கியது. அமெரிக்கா பதிலடி கொடுக்குமோ என்ற அச்சம்தான் அதற்குக் காரணம். அமெரிக்க கோழிக்குஞ்சுப் பொருட்கள்மீது இறக்குமதி வரிகளை விதிக்கும் பெய்ஜிங்கின் முடிவு பொதுவாக வாஷிங்டன் மீது கொண்டிருக்கும் கடின நிலைப்பாட்டின் ஒரு பகுதி ஆகும். கடந்த மாதக் கடைசியில், தைவானுக்கு $6.4 பில்லியன் மதிப்புள்ள அமெரிக்க ஆயுத விற்பனை அறிவிக்கப்பட்டதற்கு தன்னுடைய எதிர்ப்புப் போக்கை காட்டும் வகையில் சீனா மிகப்பெரிய போயிங் நிறுவனம் உட்பட இதில் தொடர்புடைய நான்கு அமெரிக்க நிறுவனங்கள் மீது தடைகள் விதிக்கப்போவதாக அச்சுறுத்தியது.

சீனா மீது வணிக, பொருளாதார பிரச்சினைகளை ஒட்டி தான் இன்னும் அதிக நடவடிக்கை எடுக்கப் போவதாக ஏற்கனவே ஜனாதிபதி ஒபாமா தன் விருப்பத்தை தெளிவுபடுத்தியுள்ளார். பெப்ருவரி 3ம் தேதி செனட் ஜனநாயக கட்சி உறுப்பினர்களோடு நடத்திய கூட்டத்தில் அவர் மீண்டும் அமெரிக்க டொலருக்கு எதிராக சீன யுவான் மறுமதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். "நம்முடைய பொருட்கள் செயற்கையாக விலை உயர்த்தப்படாமலும், அவர்களுடைய பொருள்கள் செயற்கையாக விலை குறைக்கப்படாமலும் இருக்க உறுதி கொண்டுள்ளதாக" ஒபாமா கூறினார். இதை எதிர்கொள்ளும் விதத்தில் பெய்ஜிங் யுவான் "நியாயமான, சமச்சீர் தரத்தில்" இருப்பதாகவும் ஒபாமா "தவறான குற்றச்சாட்டுக்களை" முன்வைக்கிறார் என்றும் குறைகூறியது.

கடந்த மாதம் நாட்டு நிலை பற்றிய தன்னுடைய உரையில் ஒபாமா அடுத்து ஐந்து ஆண்டுகளில் அமெரிக்க ஏற்றுமதிகள் இருமடங்காக்கப்பட்டு $3 டிரில்லியனுக்கும் மேலாக இருக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். உலக வர்த்தகம் குறைவாகி சுருங்கிய நிலையில் உள்ளபோது அமெரிக்காவின் ஏற்றுமதிக்கான உந்துதல் அதை உலகின் தற்போதைய மிகப் பெரிய ஏற்றுமதி நாடாக இருக்கும் சீனாவுடன் தவிர்க்க முடியாமல் மோதலில் ஈடுபடுத்தும்.

சர்வதேச பொருளாதார விளைவுகள் பற்றிக்கவலை கொண்ட பைனான்ஸியல் டைம்ஸ் கடந்த வாரம் தலையங்கம் ஒன்றில் சீனாவைப் பின்வாங்குமாறு கேட்டுக் கொண்டது. "பெரிய அமெரிக்க ஏற்றுமதியாளர்களான போயிங் போன்றோர் மீது பொருளாதாரத் தடைகளை சீனா மேற்கோண்டால், பதிலடி வரக்கூடிய பல வணிகத் தடைகளை அது எதிர்கொள்ளும். அவை அமெரிக்காவை விட சீனாவை அதிகம் பாதிக்கும்.... ஒரு வணிப் போரை தீவிரமாக தொடக்கும் முயற்சியில் சீனா ஈடுபடுவது போல் தோன்றினால், "வரட்டும்" என்பதுதான் அமெரிக்காவின் விளைவாக இருக்கும்." என்று செய்தித்தாள் எச்சரித்தது.

உயரும் வணிக அழுத்தங்கள் சீனப் பொருளாதாரத்தில் வலுவற்ற தன்மையை உயர்த்திக் காட்டுகின்றன. ஜூலை 2008-ல் இருந்து சீனா டொலருக்கு எதிரான யுவான் மதிப்பை 6.83 என்ற விகிதத்தில் திறமையுடன் நிறுத்தி வருகிறது. இதையும் விட மறுமதிப்பு ஏற்படுத்தினால் அது அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் சீனச் சந்தைகளைப் பாதிக்கும். ஏற்கனவே உலகப் பொருளாதார நடவடிக்கைகளினால் பாதிக்கப்பட்டுள்ள சீன ஏற்றுமதியாளர்கள் இன்னும் பாதிப்பிற்கு உட்படுவர். இதன் விளைவாக பல மில்லியன் வேலைகள் இழக்கப்பட்டுள்ளன, இன்னும் பெரும் பாதிப்பும் ஏற்படும்.

சீனப் பொருளாதாரம் கடந்த ஆண்டு 8.7 சதவிகிதம் மிகப் பெரிய அரசாங்க ஊக்கப் பொதி மற்றும் வங்கிகளுக்கு மகத்தான கடன் கொடுத்தல் ஆகியவற்றால் 8.7 சதவிகித வளர்ச்சியைக் கண்டது. ஆனால் அத்தகைய கொள்கைகள் நிரந்தரமாக இருக்க முடியாது. பெய்ஜிங் பங்குச் சந்தைகள் மற்றும் சொத்துக்களில் பெருத்துள்ள ஊகத்தை கட்டுப்படுத்துவதற்காக ஏற்கனவே கடன் கொடுத்தலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது.

கடுமையான அமெரிக்க அழுத்தத்தின் பேரில், சீனாவானது அமெரிக்க பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும் வழிவகைளில் பதிலடி கொடுக்க முடியும். கருவூலப் பத்திரங்கள் இன்னும் மற்றய அமெரிக்க முதலீடுகளை வாங்குவதை குறைத்தல் அல்லது விற்றலில் பெய்ஜிங் ஈடுபட்டால் அது அமெரிக்க நிதி முறையில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி தன்னுடைய பெரும் கடனுக்கு நிதியளிக்கும் அமெரிக்க அரசாங்கத்தின் திறனையும் பாதிக்கும். தற்பொழுது அமெரிக்க சொத்துக்கள் ஒரு டிரில்லியன் டொலரை சீனா கொண்டுள்ளது.

இந்த ஆபத்தை முன்னாள் அமெரிக்க நிதி மந்திரி ஹென்ரி போன்சன் "விளிம்பில்" என்ற தன் புதிய நினைவுக் குறிப்பில் அடிக்கோடிட்டுள்ளார். 2008-ல் அமெரிக்க ஆதரவு பெற்ற ஜோர்ஜியா, ரஷ்யாவுடன் போரைத் தொடக்கிய போது, மொஸ்கோ பெய்ஜிங்கை அதன் அமெரிக்க வீடுகள் முதலீட்டு பெரும் நிறுவனங்களான Fannie Mae, Freddie Mac ல் இருந்த பங்குகளை விற்று "திடீரென நம்பிக்கை இழப்பை தோற்றுவிக்குமாறும்", "மூலதனச் சந்தைகள் அதிர்விற்கு உட்படுத்துமாறும்" வலியுறுத்தியது என்பதை அவர் நினைவுகூர்ந்தார். இரு நிறுவனங்களிலும் $400 பில்லியன் மதிப்புடைய பங்குகளைக் கொண்டிருந்த சீனா அதை மறுத்தது. ஏனெனில் அத்தகைய நடவடிக்கை தன் அமெரிக்கச் சொத்துக்களின் மொத்த மதிப்பில் மிகப் பெரிய சரிவை ஏற்படுத்திவிடும் என்பதால்.

ஆனால் மொஸ்கோ, பெய்ஜிங் இரண்டுமே போல்சன் எழுதியதை மறுத்துள்ளன. ஆனால் ரஷ்யா அதன் $65.6 பில்லியன் மதிப்புடைய Fannie, Freddie பங்குகளை அந்த ஆண்டு விற்றுவிட்டது. ரஷ்யாவுடன் சீனா சேர்ந்திருந்தால், 2008 செப்டம்பரில் லெஹ்மன் பிரதர்ஸ் சரிவில் தொடங்கிய நிதியக் கரைப்பு ஒரு மாதம் முன்னதாகவே வந்திருக்கும். தன்னுடைய புத்தகத்தில் போல்சன் பெய்ஜிங்கின் ஒத்துழைப்பு அணுகுமுறையை, உலக நிதியச் சரிவின் போது அமெரிக்க சொத்துக்களை விற்காமல் வைத்திருந்ததற்கு பாராட்டைத் தெரிவித்துள்ளார்.

ஆனால் வருங்காலத்தில் அந்த அளவு ஒத்துழைப்பை சீனா காட்டாமல் போகலாம். இந்த வாரம் மூன்று சீனத் தளபதிகள் Outlook Weekly க்குக் கொடுத்த பேட்டி ஒன்றில் ஒரு தளபதி வெளிப்படையாக தைவானுக்கு அமெரிக்கா ஆயுதங்கள் விற்பனை செய்ததற்கு ஈடாக "அமெரிக்க அரசாங்க பத்திரங்களை" விற்பனை செய்து பதிலடி கொடுக்க வேண்டும் என்று வெளிப்படையாக கோரியுள்ளார். "இருவர் படகைச் செலுத்துவது போல் இது உள்ளது, அமெரிக்கா முதலில் துடுப்பை குழப்பிப் போட்டால், நாமும் அப்படித்தான் செய்யவேண்டும்" என்று தளபதி Luo Yuan விளக்கினார்.

ஒபாமா பதவிக்கு வந்த பின் அவர் ஆழமான நிதிய நெருக்கடியை எதிர்கொண்டார். ஆரம்பத்தில் சீனாவுடன் நெருக்கமான உறவுகளை தக்க வைத்துக் கொள்ள முயன்றார். ஆனால் அதே நேத்தில் ஏற்கனவே இருந்த வேறுபாடுகளையும் அடிக்கோடிட்டுக்காட்டினார். ஆப்கானிஸ்தானில் ஒபாமாவின் ஆக்கிரமிப்புத் தலையீடு, எரிபொருள் வளம் உடைய மத்திய ஆசியாவில் அமெரிக்க செல்வாக்கிற்கு முன் கூட்டி எச்சரிக்கை காட்டுவது அதன் கொல்லைப்புறப் பகுதி என்று கருதப்படுவதில் சீனாவின் நலன்களை அச்சுறுத்துகிறது. ஈரானுக்கு எதிராக புதிய ஐ.நா. பொருளாதாரத் தடைகளை இந்த ஆண்டு அமெரிக்கா கோரியுள்ளதும் அந்நாட்டுடன் வளர்ந்து வரும் சீனப் பொருளாதார பிணைப்புக்களுக்கு குறுக்கீடாக உள்ளது.

பெப்ருவரி 5ம் தேதி மூனிச் பாதுகாப்பு மாநாட்டில் இன்னும் அதிக உறுதியான சர்வதேச நிலைப்பாட்டை தான் எடுத்துக் கொள்ளும் உறுதியை சீனா அடையாளம் காட்டியது. முதல் தடவையாக இக்கூட்டத்திற்கு வந்த சீன வெளியுறவு மந்திரி யாங் ஜீச்சி தன் நாடு "உலகில் ஐந்தில் ஒரு பகுதியை" பிரதிநிதித்துவப்படுத்துகிறது, "உலகத்தில் எப்படி பலவும் நடக்க வேண்டும் என்பது பற்றி எங்கள் கருத்துக்கைளக் கூறும் வாய்ப்பை" பெற்றுள்ளது என்றார்..."ஒன்று, இரண்டு, அல்லது மூன்று நான்கு நாடுகள் மட்டும் உலகின் வருங்காலத்தை உறுதியாக முடிவெடுக்கக்கூடாது."

தைவானுக்கு ஆயுதங்களை விற்பனை செய்ததற்காக யாங் அமெரிக்காவைக் குறைகூறி, சீனாவில் தடைகள் பற்றிய அச்சுறுத்தலை பாதுகாக்கும் வகையில், "பல நேரமும் அமெரிக்காவை தீவிரமாக அணுகினோம். ஆயினும்கூட அமெரிக்கா தன் விருப்பப்படி தொடர்ந்து சீன அரசாங்கத்தையும் மக்களையும் விடையிறுக்குமாறு கட்டாயப்படுத்துகிறது. தேவையானதை செய்வது எங்களுடைய முழு இறைமை உரிமையாகும்."

ஈரானைப் பொறுத்தவரை, ஐ.நா.பாதுகாப்பு குழுவில் சீனாவுடன் கடந்த காலம் அணி சேர்ந்திருந்த ரஷ்யா இப்பொழுது புதிய தடைகளுக்கு ஆதரவு கொடுத்தாலும், சீனா தன்னுடைய ஈரான் எரிபொருள் நலன்களை பாதுகாக்க தாம் தயார் என்று யாங் கூறினார். பெய்ஜிங்கின் இணைய தளத் தடைகள் மற்றும் கோபன்ஹேகனில் காலநிலை உச்சிமாநாட்டில் அவர்களுடைய திட்டங்களை எதிர்த்ததில் சீனாவின் பங்கு பற்றிய அமெரிக்க மற்றும் ஐரோப்பிய குறைகூறல்களையும் அவர் நிராகரித்தார்.

அமெரிக்க-சீனப் போட்டியின் தீவிரத்திற்கு பின்னணியில் புவிசார் அரசியல் உறவுகளின் அடிப்படை மாற்றங்கள் உள்ளன. ஒரு வெளிப்பட்டு வரும் பொருளாதார சக்தி என்னும் முறையில் சீனா கிட்டத்தட்ட உலகின் ஒவ்வொரு மூலையில் இருந்தும் மூலப் பொருட்களையும் சந்தைகளையும் தேடும் கட்டாயத்தில் உள்ளது. இது இருக்கும் சக்திகளுடன் அதைத் தீவிர மோதலுக்கு உட்படுத்துகிறது. பொருளாதாரச் சரிவில் இருக்கும் அமெரிக்கா தன்னுடைய உலக மேலாதிக்கத்தை அதிகரிக்கும் வகையில் இராணுவ வலிமையை முக்கிய மூலோபாய பகுதிகளில் பயன்படுத்துகிறது. இதில் மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியா ஆகியவையும் அடங்கும். இந்தப் பெரிய அதிகார போட்டிதான் இப்பொழுது உலக பொருளாதார நெருக்கடியினால் அதிகமாகியுள்ளது.

வியாழனன்று திபெத்தின் தலாய் லாமாவை ஒபாமா சந்திக்கும்போது அழுத்தங்கள் இன்னும் உயரக்கூடும். கடந்த ஆண்டு அமெரிக்கா சீனாவின் பொருளாதார உதவியை நாடியபோது, ஒபாமா அத்தகைய (தலாய் லாமாவுடன்) பேச்சு நடக்காது என்றார். இப்பொழுது பெய்ஜிங்கிற்கு விரோதம் கொடுக்கும் என்பதை நன்கு அறிந்து அவர் திபெத்தியத் தலைவரோடு பேச உள்ளார். சீனா தன்னுடைய வலுவான எதிர்ப்புக்களை தெரிவித்துள்ளது, அமெரிக்காவிற்கு எதிராக தன்னுடைய பதிலடி நடவடிக்கைகளை அறிவிக்கக்கூடும்.