SWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
மத்திய கிழக்கு
Munich Security Conference steps up threats against Iran
ஈரானுக்கு எதிரான அச்சுறுத்தல்களை மூனிச் பாதுகாப்பு மாநாடு அதிகரிக்கிறது
By Ulrich Rippert
12 February 2010
Use this version
to print | Send
feedback
கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலமாக மூனிச் பாதுகாப்பு மாநாடு ஒவ்வொரு
பெப்ருவரியிலும் நடைபெற்று வருகின்றது. ஜனாதிபதிகள், அரசாங்கத் தலைவர்கள், இராணுவத் தலைவர்கள், அரசாங்க
மந்திரிகள் என்று பலரும் பவேரியத் தலைநகரில் இரு நாட்களுக்கு கூடி இராணுவ, பூகோளமூலோபாய பிரச்சினைகளை
விவாதிப்பர்.
சோவியத் ஒன்றியம் மற்றும் வார்சோ ஒப்பந்தம் கலைக்கப்படும் வரை, இக்கூட்டம்
முற்றிலும் ஒரு நேட்டோ நாடுகள் கூட்டமாகத்தான் இருந்தது. அப்பொழுது முதல் ஒரு ரஷ்ய குழுவும் முறையாக
கலந்து கொள்கிறது; இம்முறை சீன வெளியுறவு மந்திரி யாங் ஜூஷியும் பங்கு பெற்றார்.
நிகழ்ச்சியின் உத்தியோகபூர்வமற்ற தன்மை "தடையற்ற முறையில் கருத்துக்கள் பறிமாற்றத்தை"
சாத்தியமாக்கவேண்டும் என்று கடந்த மாநாட்டின் தலைவராக இருந்த உயர்மட்ட தூதர்
Wolfgang Ischinger
தன்னுடைய உரையில் வலியுறுத்திக் காட்டினார்.
கடந்த காலத்தில் இத்தகைய வெளிப்படையான தன்மை, உத்தியோகபூர்வ நிகழ்ச்சிநிரல்
இராஜதந்திர சொற்போருக்குத்தான் பின்னணி என்ற கருத்தைக் கொடுத்தது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அப்பொழுது
ரஷ்ய ஜனாதிபதியாக இருந்த விளாடிமிர் புட்டின் மாநாட்டைப் பயன்படுத்தி அமெரிக்க அரசாங்கத்தின் மீது சொற்தாக்குதலை
நடத்தினார். வாஷிங்டன் பனிப்போரை புதுப்பிக்கும் வகையில் ரஷ்யாவை சுற்றிவளைக்கும் கொள்கையின் ஒரு பகுதியாக
ஏவுகணைப் பாதுகாப்பு திட்டத்தை திட்டமிட்டு பயன்படுத்துகிறது என்றார்.
இதற்கு அடுத்த ஆண்டு அமெரிக்க பாதுகாப்பு மந்திரி ரொபேர்ட் கேட்ஸ் தன்னுடைய
நேட்டோ நட்பு நாடுகளைத் தாக்கி, ஐரோப்பியர்கள் ஆப்கானிஸ்தானில் "போரிட்டு, இறக்கும் அதிக சுமையைக்
எடுத்துக்கொள்ள வேண்டும்" என்று கோரினார். கடந்த ஆண்டு அமெரிக்க துணை ஜனாதிபதி ஜோ பிடன் மூனிச்
தளத்தைக் கொண்ட அரங்கைப் பயன்படுத்தி நட்பு நாடுகளின் மீது "பிரியமான தாக்குதலை" நடத்தினார்; ஆனால்
கேட்ஸ் போலவே நடந்து கொண்டு ஐரோப்பிய நாடுகள் தங்கள் "சமாதான வகை தயக்கத்தை" கைவிட்டு ஆப்கானிஸ்தானிற்கு
அதிக துருப்புக்களை அனுப்ப வேண்டும் என்று கோரினார்.
இந்த ஆண்டு விவாதம் நேட்டோவின் வருங்காலம் மற்றும் ரஷ்யாவின் திட்டமான
"யூரோ-அட்லான்டிக் பாதுகாப்பு உடன்படிக்கை" திட்டம் பற்றி இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால்
அமெரிக்கக்குழு, குறிப்பாக செனட்டர் ஜோசப் லிபர்மன், மற்றும் முன்னாள் குடியரசுக்கட்சி ஜனாதிபதி
வேட்பாளர் ஜோன் மக்கையின் இருவரும் மாநாட்டை ஈரானுக்கு எதிரான வெளிப்படையான போர்
அச்சுறுத்தல்களை கொடுக்க பயன்படுத்தினர்.
ஈரானிய வெளியுறவு மந்திரி மனோஷிக்குர் மொட்டக்கியின் ஈரானிய அணுத் திட்டம்
பற்றிய உரைக்குப்பின், செனட்டர் லிபர்மன் மேடையில் ஏறி உலக சமூகம் ஒரு தீர்மானிக்க வேண்டிய இடத்தில்
உள்ளது என்றார். "எமது இலக்கை அடைவதற்கு கடுமையான பொருளாதார தடைகளை சுமத்த வேண்டும் அல்லது
இராணுவ குறுக்கீடு தவிர்க்க முடியாது என்று ஆகிவிடும்" என்றார். வெளியுறவு மந்திரி மனோஷிக்குர் மொட்டக்கியின்
பேச்சு "நம்மை முடிவிற்கு வருமாறு சவால் விடுகிறது" என்று செனட்டர் மக்கையினும் வலியுறுத்தினார்.
ஜேர்மனியின் பாதுகாப்பு மந்திரி கார்ல் தியோடர் சூ குட்டன்பேர்க், வெளியுறவு
மந்திரி கீடோ வெஸ்டர்வெல்ல இருவரும் இந்த ஆக்கிரோஷப் போக்கிற்கு ஆதரவு கொடுத்தனர். மேற்கு நீட்டும்
நேசக்கரங்களை ஈரான் நிராகரிப்பது மட்டும் இல்லாமல், மேற்கை விரட்டுகிறது என்று பாதுகாப்பு மந்திரி
கூறினார். இப்பொழுது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைதான், "பொருளாதாரத் தடைகள் இன்னும்
அதிகரிக்கப்பட வேண்டுமா" என்று முடிவெடுக்க வேண்டும்." வெஸ்டர்வெல்லவும் "ஒரு கடுமையான
நிலைப்பாட்டிற்கு" வாதிட்டார்.
ஈரானிய வெளியுறவு மந்திரியின் பேச்சுகளில் பங்குபெற்றவர்களை தூண்டிவிட்டது என்று
கூறுவது தவறு. மந்திரி மொட்டக்கி மூனிச்சில் அவர் பல நாளேட்டுகளுக்கான பேட்டிகளில் ஈரான் அதன் அணுசக்தி
சமாதானத் திட்டத்தை எவரும் எதிர்க்க அனுமதிக்காது என்று கூறியதைத்தான் வலியுறுத்தினார்.
Süddeutsche Zeitung
பத்திரிகைக்கு கொடுத்த பேட்டி ஒன்றில், மொட்டக்கி தெஹ்ரானுக்கு
மருத்துவ தேவைகளுக்காக அதன் ஆராய்ச்சி உலை எரிபொருள் தேவைக்கு அடர்த்தி நிறைந்த யுரேனியம் வேண்டும்
என்றார். இது சர்வதேச அணுசக்தி அமைப்பிடம் (IAEA)
தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம்
IAEA உடன் ஒரு
வடிவமைப்பு உடன்பாடு கையெழுத்திடப்பட்டது; அதன்படி ஈரான் குறைந்த தரமுடைய யுரேனியத்தை பிரான்சிற்கும்
ரஷ்யாவிற்கும் அனுப்பும் என்றும் பதிலாக தன் உலைகளுக்கு செறிவாக்கப்பட்ட யுரேனியத்தை பெறும் என்றும்
இருந்தது. அமைப்புடன் கொள்ளப்பட்ட உடன்பாட்டின் விதிகள் இப்பொழுது பேச்சுவார்த்தைகளில் உள்ளன. "இந்த
மாற்றில் மூன்று கூறுபாடுகள் உள்ளன, தேதி, இடம் மற்றும் பரிமாற்றத்திற்கான யுரேனிய அளவு." என்று
செய்தித்தாளிடம் மொட்டக்கி கூறியிருந்தார்.
பாதுகாப்பு மாநாட்டில் ஈரான்மீது தாக்குதல் என்பது மொட்டக்கியின் உரையினால்
விளையவில்லை; அதன் பொருளுரை முன்னரே அறியப்பட்டிருந்தது. இத்தாக்குதல் முன்னதாக தயாரிக்கப்பட்டு
அமெரிக்க அரசாங்கம் தெஹ்ரான் ஆட்சியை மண்டியிட வைக்கக் கட்டாயப்படுத்தும் முறையான பிரச்சாரத்தின் ஒரு
பகுதியாகும். இது மத்திய கிழக்கில் ஒரு வலுவான பிராந்திய சக்தியாக ஈரான் வருவதை அடக்கும் நோக்கம்
கொண்டது.
ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு பெருகிய எதிர்ப்பு
அப்பகுதியில் அமெரிக்க செல்வாக்கை வலுவழிக்க செய்யும், அதையொட்டி ஈரானிய அரசாங்கம் அந்த நிலையை
பயன்படுத்தி தன்னுடைய செல்வாக்கை வலுப்படுத்திக் கொள்ளும் என்பது பற்றி அஞ்சும் அமெரிக்க அரசியல்
நடைமுறையின் பிரதிநிதிகளுக்காக செனட்டர்கள் லிபர்மன்னும், மக்கைனும் பேசினர். இருவரும் இஸ்ரேல்
அரசாங்கத்துடன் நெருக்கமான தொடர்புடையவர்கள். அவர்களுடைய இடைவிடா குற்றச்சாட்டு ஈரான்
தாமதப்படுத்திக் கொண்டிருக்கிறது, விரைவாக அணுகுண்டு தயாரிப்பிற்கு தேவையான முக்கிய கூறுபாடுகளைக்
கொண்டுவிடும் என்பதுதான்; இதையொட்டி ஈரான்மீது இஸ்ரேல் நடாத்தக்கூடிய இராணுவத் தாக்குதலை
நியாயப்படுத்த முயல்கின்றனர்.
ஜேர்மனிய அரசாங்கம் இப்போக்கிற்கு பாதுகாப்பு மாநாட்டிற்கு முன்பே ஒப்புக்
கொண்டுள்ளது. ஜேர்மனிய பெருநிறுவனங்களுக்கு ஏற்படக்கூடிய விளைவுகளைப் பற்றியும் விவாதித்து வருகிறது.
Die Welt
பத்திரிகை வெளியுறவு மந்திரி வெஸ்டர்வெல்ல பெப்ருவரி 7ம் தேதி
பின்வருமாறு கூறியதாக குறிப்பிட்டுள்ளது. "ஜேர்மனிய வணிக, தொழிற்துறையின் பிரதிநிதிகளிடம் பொருளாதாரத்
தடைகள் விரிவுபடுத்தப்படுவதில் இருந்து ஒதுங்க முடியாது என்று தெரிவித்தேன். அதன் இழப்பு எவ்வளவு ஆகும்
தெரியுமா என்று கேட்கப்பட்டேன். ஆம், எனக்குத் தெரியும். ஆனால் அணுசக்தி உடைய ஈரான் இருந்தால்
ஜேர்மன் வணிகத்திற்கும் உலகிற்கும் இதைவிட பெரிய இழப்பு வரும்" என்று கூறியதாக மேற்கோளிட்டுள்ளது.
ஜேர்மனி ஈரானுடனான வணிகத்தில் முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. மத்திய அரசின்
வெளிநாட்டு வணிகத் துறை கருத்துப்படி ஜேர்மனியின் 2008 ம் ஆண்டு ஈரானுடனான வணிக உபரி 3.3 பில்லியன்
யூரோ என்று கணிசமாக இருந்தது.
மூனிச் பாதுகாப்பு மாநாட்டிற்கு ஒரு வாரம் முன்பு இஸ்ரேலிய-ஜேர்மன் கூட்டு
மந்திரிசபைக் கூட்டம் பேர்லினில் நடைபெற்றது. இத்தகைய கூட்டம் இரு நாடுகளிலுமே இப்பொழுதுதான் முதல்
தடவையாக நடைபெறுகிறது. இதிலும் விவாதங்களின் முக்கிய கவனம் ஈரானுக்கு எதிரான பொருளாதாரத்
தடைகளை முடுக்கிவிடுவது என்றுதான் இருந்தது.
இஸ்ரேலிய பிரதம மந்திரி பின்யாமின் நெட்டன்யாஹூ தெஹ்ரானுக்கு எதிராக
கடுமையான, விரைவான சர்வதேச பொருளாதாரத் தடைகளுக்கு அழைப்பு விடுத்தார்; அதிபர் அங்கேலா
மேர்க்கெல், "நாம் பலமுறையும் ஈரானுக்கு நியாயமான ஒத்துழைப்பைக் கொடுக்க முன்வந்தோம்.
துரதிருஷ்டவசமாக ஈரான் விடையிறுக்கவில்லை; எனவே நாம் இன்னும் கடுமையான பொருளாதாரத் தடைகள் பற்றி
ஆலோசிக்க வேண்டும்" என்றார். இருவரும் ஜேர்மனிக்கும் இஸ்ரேலுக்கும் இடையே உள்ள நல்ல உறவுகளை
வலியுறுத்தினர்.
ஈரானுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களும் தாக்குதல்களும் பெருகிய முறையில்
அச்சுறுத்தும் வடிவத்தில் வந்துள்ளன. இது அமெரிக்க அரசாங்கம் 2003ல் ஈராக் போருக்கு முன் நடத்திய பிரச்சாரத்தைத்தான்
வலுவாக நினைவுபடுத்துகிறது. ஈராக்கிய அரசாங்கம் பேரழிவு ஆயுதங்களை கொண்டிருந்ததாக அமெரிக்க அரசாங்கம்
கூறி, அதையொட்டி சட்டவிரோத போர் தொடக்கப்பட இருப்பதை நியாயப்படுத்தியது.
குறிப்பிடத்தக்க வகையில் ஜேர்மனியின் இடதுகட்சி பிரதிநிதி மூனிச் பாதுகாப்பு மாநாட்டில்
முதல் தடவையாக கலந்து கொண்டார். லிபர்மன்னும் மக்கையினும் நிகழ்ச்சியை தங்கள் ஈரானுக்கு எதிரான போர்
வெறிமூலம் ஆதிக்கம் செலுத்துகையில் மாநாட்டிற்கு வெளியே போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்த நேரத்தில்,
இடது கட்சி நிர்வாக உறுப்பினர் Wolfgang
Gehrcke உள்ளே இராணுவ உயர்மட்ட அதிகாரிகள், அரசியல்
தலைவர்களுடன் இருந்தார்.
ஓராண்டிற்கு முன்பு, பேர்லின் இடது கட்சியின் தலைவர்
Klaus Lederer
பகிரங்கமாக ஒரு கூட்டத்தில் காசா மீது இஸ்ரேல் நடத்திய போருக்கு ஆதரவு கொடுத்தார். இப்பொழுது மூனிச்
பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்ளுவதின் மூலம்
Wolfgang Gehrcke ஜேர்மனிய அரசாங்கம் வருங்கால
போர்த் திட்டங்களில் இடது கட்சியை அரசாங்கம் நம்பமுடியும் என்று அடையாளம் காட்டியுள்ளார்.