World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கைSri Lankan opposition parties protest over election results இலங்கை எதிர்க் கட்சிகள் தேர்தல் முடிவுகள் தொடர்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன By our correspondent ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பி.) மற்றும் மக்கள் விடுதலை முன்னணியும் (ஜே.வி.பி.), தமது தோல்வியடைந்த "பொது வேட்பாளர்" ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் சேர்ந்து, கடந்த ஜனவரி 26 நடந்த ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை இரத்துச் செய்யுமாறு கோரி புதன் கிழமையன்று கொழும்பில் ஆர்ப்பாட்ட கூட்டமொன்றை நடத்தின. யூ.என்.பி. மற்றும் ஜே.வி.பி. யும் முன்னாள் இடதுகளான நவசமசமாஜக் கட்சியின் அரசியல் உதவியுடன், ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் ஜனநாயக உரிமை மீறல்கள் மற்றும் அரசியல் எதிர்ப்புக்கள் மீதான விரிவுபடுத்தும் தாக்குதல்கள் மீதான பரந்த வெகுஜன வெறுப்பையும் சீற்த்தையும் சிடுமூஞ்சித்தனமாக சுரண்டிக்கொள்ள முயற்சிக்கின்றன. ஜே.வி.பி. மற்றும் யூ.என்.பி. யும் கூட அவற்றின் சொந்த ஜனநயாக உரிமை மீறல்களுகுக பேர் போனவை. எல்லாவற்றுக்கும் மேலாக, கடந்த டிசம்பபர் வரை நாட்டின் உயர்மட்ட ஜெனரலாக இருந்த பொன்சேகா வெற்றி பெற்றால், அவரும் வர்த்தக தட்டினரின் நிகழ்ச்சித் திட்டத்தை ஈவிரக்கமின்றி அமுல்படுத்தியிருப்பார். பெருமளவு எதிர்க் கட்சிகளின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களுமாக சுமார் 10,000 பேர் ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்துக்கொண்டனர். "தேர்தல் மோசடியை கண்டனம் செய்", "திரிபுபடுத்தப்பட்ட தேர்தல் முடிவுகளை ஏற்காதே", "மன்னர் [இராஜபக்ஷ] ஊடகங்களின் வாயை அடைப்பதை நாம் அனுமதிக்க முடியாது" உட்பட சுலோகங்கள் அடங்கியிருந்தன. ஒலிபெருக்கிகளை பயன்படுத்த பொலிசார் அனுமதி வழங்க மறுத்துவிட்டனர். உத்தியோகபூர்வ பெறுபேறுகளின்படி, சுமார் 1.7 மில்லியன் வாக்குகள் பெரும்பான்மையால் தேர்தலில் இராஜபக்ஷ வெற்றி பெற்றுள்ளார். பிரச்சாரத்தின் போது, அவரது ஆளும் கூட்டனி நிச்சயமாக அரச வளங்களையும் அரசுக்கு சொந்தமான ஊடகத்தையும் முற்றுமுழுதாகப் பயன்படுத்திக்கொண்டது. சந்தேகத்திற்கிடமின்றி, எதிர்க் கட்சிகள் குறைந்த மட்டத்தில் செய்தது போல், அரசாங்கம் அச்சுறுத்தல்கள், வன்முறைகள் மற்றும் வாக்கு மோசடியை நாடியது. எவ்வாறெனினும், பொன்சேகாவோ அல்லது எதிர்க் கட்சித் தலைவர்களோ தேர்தல் முடிவுகளை திருத்தக் கூடிய மட்டத்துக்கு தேர்தல் மோசடிக்கான ஆதாரங்களை முன்வைக்கவில்லை. பெரும்பாலான வாக்காளர்கள் பொன்சேகாவை அடிப்படையில் ஒரு மாற்றீடாக கருதாமையினால் இராஜபக்ஷ வெற்றிபெற்றார். இரு நபர்களும் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை ஈவிரக்கமின்றி முன்னெடுத்ததோடு கடந்த மே மாதம் புலிகளின் தோல்வியுடன் அதை முடிவுக்குக் கொண்டுவந்தனர். நூற்றுக்கணக்கான மக்களை கொன்ற கொலைப் படைகளின் இயக்கம் உட்பட, இராணுவம் ஆயிரக்கணக்கான பொதுமக்களை கொன்று தள்ளியமைக்கும் மற்றும் அதன் ஜனநாயக உரிமை மீறல்களுக்கும் பொறுப்பாளிகளாவர். தற்போதைய பொருளாதரா நெருக்கடியின் சுமைகளை உழைக்கும் மக்கள் மீது திணிப்பதாக இருவரும் கூட்டுத்தாபனங்களின் தலைவர்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளனர்.புதன் கிழமை காலை, பொன்சேகாவும் அவரது ஆதரவாளர்களும் தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்கவிடம் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு ஒன்றை செய்தனர். எவ்வாறெனினும், சில மோசடிகள் இடம்பெற்றிருந்த போதிலும் தான் தேர்தல் முடிவுகளை அங்கீகரிப்பதாக திசாநாயக்க ஊடகங்களுக்குத் தெரிவித்தார். நீதிமன்றத்தில் சட்டபூர்வமாக சவால் செய்வதாக எதிர்க் கட்சிகள் சுட்டிக் காட்டன. பெருமளவு ஆர்ப்பாட்டக்காரர்களை அழைத்து வந்திருந்த சிங்களப் பேரினவாத ஜே.வி.பி. இந்தக் கூட்டத்தில் செல்வாக்குச் செலுத்தியது. உரையாற்றிய ஒன்பது பேரில் மூன்று பேர் ஜே.வி.பி.தைலவர்கள். அவர்கள் மீண்டும் மீண்டும் தேர்தல் மோசடி நடந்ததாக கூறினர். ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க வாய்வீச்சாக தெரிவித்ததாவது: "இந்த களத்தில் இருக்கும் கட்சிகளுக்கு இடையில் வேறுபாடுகள் இருதந்த போதிலும், இந்த நாட்டில் ஜனநாயகத்தை மீண்டும் நிலைநாட்ட நாங்கள் ஒன்று கூடியுள்ளோம். நாங்கள் கடந்த காலத்தில் செய்தது போல், ஜனநாயகத்துக்காக எங்களது உயிரையும் கொடுக்க தயங்கமாட்டோம்... சிறைக்கூடங்கள் எங்களுக்கு புதியதல்ல... ஒரு மனிதன் ஒரு முறைதான் இறக்க முடியும்." ஜே.வி.பி. யின் கடந்த காலம் பற்றிய அமரசிங்கவின் வாய்வீச்சு, ஒரு பகுதி சரிந்து போகும் ஆதரவை பெருப்பித்துக்கொள்வதை இலக்காகக் கொண்டதாகும். வடக்கு மற்றும் கிழக்கில் இந்திய அமைதிப் படை என சொல்லப்படுவதை நிறுத்திய இந்திய-இலங்கை உடன்படிக்க்கு எதிரான ஒரு இனவாத பிரச்சாரத்தை கட்சி முன்னெடுத்த போது, 1980களின் கடைப் பகுதியில் ஜே.வி.பி. உறுப்பினர்கள் சிறைவைக்கப்பட்டதோடு கொல்லப்பட்டனர். அச்சந்தர்ப்பத்தில், அதனது வேலை நிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் பங்குகொள்ள மறுத்த, யூ.என்.பி. மற்றும் நவசமசமாஜக் கட்சி உறுப்பனிர்கள் உட்பட நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், தொழிற்சங்க வாதிகள் மற்றும் அரசியல் எதிரிகளை ஜே.வி.பி. கொன்றது. புதன் கிழமை அமரசிங்கவின் தெரிவித்த கருத்துக்கள், அதே எதிர்போக்கு தேசப்பற்றுடன் பிணைந்துள்ளது. அவர் "ஜனநாயகத்தையும் தாய்நாட்டையும் காக்க" வீதிக்கு இறங்குமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்தார். ஜெனரல் பொன்சேகா அந்தக் கூட்டத்தில் பிரதான உரையாற்றினார். இலங்கையர்கள் ஜனாதிபதி தேர்தலில் திருடப்பட்டுள்ளதாக அவர் கூறிக்கொண்டதோடு மக்களுடன் தேர்தல் மோசடிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அவர் சபதம் பூண்டார். "இதைச் செய்தவர்கள் அவர்களது வெற்றியை நீண்டகாலம் அனுபவிக்க நான் அனுமதிக்கமாட்டேன்," என அவர் தெரிவித்தார். பொன்சேகா மேலும் தெரிவித்ததாவது: "அத்தகைய பெரிய பெரும்பான்மையுடன் தேர்தலில் வென்றவர் போல் ஜனாதிபதி நடந்துகொள்ளவில்லை. அவரது நடவடிக்கைகளும் மற்றும் எதிரிகள் மீதான அவரது பழிவாங்கல்களும் அவர் அமைதியிழந்துள்ளதை காட்டுகிறது." தேர்தல் தினத்தில் இருந்தே, இராஜபக்ஷவுக்கு எதிராக சதிப் புரட்சியை திட்டமிட முயற்சித்ததாக பொன்சேகா மீது அரசாங்கம் குற்றஞ்சாட்டியது. குறிப்பாக அவர், இராணுவம் முழுவதிலும் பிளவுக்கு வழிவகுக்கும் வகையில் 11 உயர்மட்ட ஜெனரல்களின் பதவி விலக்கல்ளை குறிப்பிட்டார். ஆதரவு கோரி ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் அமெரிக்காவுக்கும் தெளிவாக விடுத்த அழைப்பில், இராஜபக்ஷவின் ஆட்சியின் கீழ் "சர்வதேச சமூகத்துடனான" உறவுகள் கசப்படைவதாக பல தடவை பொன்சேகா சுட்டிக் காட்டினார். இலங்கையர்கள் என்ற வகையில் நாங்கள் ஜனநாயத்தை மதித்ததோடு சர்வதேச சமூகத்தின் மத்தியில் தகமை பெற்றிருந்தோம். அந்த தகைமையை இந்த இராஜபக்ஷ அரசாங்கம் முழுமையாக அவமதித்துள்ளது. இப்போது சர்வதேச சமூக அதன் கவலையை வெளியிட்டுள்ளது," என அவர் கூறினார். இராஜபக்ஷ மீது அழுத்தம் கொடுக்கவும் மற்றும் தமது எதிரிகளை, குறிப்பாக சீனாவை ஓரங்கட்டவும் ஒரு வழிமுறையாக, புலிகளுக்கு எதிரான யுத்த்தின் போது இராணுவத்தால் இழைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றி அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் குரல் எழுப்பின. இன்னமும் முன்னாள் இராணுவத் தளபதி என்ற வகையில், இராஜபக்ஷவைப் போல் பொன்சேகாவும் இந்தக் குற்றங்களில் சம்பந்தப்பட்டுள்ளார். யூ.என்.பி. தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஒரு மட்டுப்படுத்தப்பட்ட வகிபாகத்தை ஆற்றினார். அவர் வெறும் ஐந்து நிமிடங்கள் மட்டுமே பேசினார். இந்த வலதுசாரி கட்சி அதன் சொந்த ஜனநாயக உரிமை மீறல்களுக்கு பேர் போனதாகும். குறிப்பாக அது 1980களின் கடைப் பகுதியில் முதலில் ஜே.வி.பி. யுடன் ஒத்துழைத்து, பின்னர் அதற்கு எதிராகத் திரும்பி, மனிதப் படுகொலையை கட்டவிழ்த்து விட்டதில் 60,000 சிங்கள கிராமப்புற இளைஞர்கள் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. விக்கிரமசிங்க, "மக்களின் சுதந்திரத்தை" காக்க மத தலைவர்களையும் அரசியல் கட்சிகளையும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுத்தார். அது பிரதானமாக மட்டுப்படுத்தப்பட்ட அறிவுரை மற்றும் பார்வையாளர்களை சுலோகங்களால் ஊக்குவிக்கும் பரிதாபமான காட்சியாக இருந்தது. அவர், "எங்களுக்கு சுதந்திரம் தேவை, எங்களுக்கு சுதந்திரம் தேவை" என கோஷமெழுப்பினார். இந்த வலதுசாரி மேடையில் இருந்தவர்களை "ஜனநாயகவாதிகாள" காட்டும் சாத்தியமற்ற பணி, முன்னாள் இடது தீவிரவாதிகளான நவசமசமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்னவுக்கு கிடைத்தது. அவர் சுமார் 15 ஆதரவாளர்களுடன் சிவப்பு சட்டையும் சிவப்பு தொப்பியும் அணிந்து வந்திருந்தார். "வேறுபாடுகள் இருந்தாலும் நான் ஜனநாயகத்துக்காக இந்த மேடையில் ஏறத் தீர்மானித்தேன். நாங்கள் எந்தவொரு நிபந்தனையும் விதிக்காமல் இந்த போராட்டத்தை முன்னெடுப்போம். நாங்கள் ஜனநாயகத்தை வெல்லும் வரை இந்தப் போராட்டத்தை தொடர எங்களுடன் இணைந்துகொள்ளுமாறு நாம் ஏனைய தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம்," என அவர் பிரகடனம் செய்தார். "ஜனநாயகத்தை வெலும்" பேச்சுக்கள் ஒரு புறம் இருக்க, யூ.என்.பி.-ஜே.வி.பி. யின் மேடையில் கருணாரட்ன தோன்றுவது முற்றிலும் மாறாக செயற்படுவதை காட்டுகிறது. அவப்பேறு பெற்ற இந்தக் கட்சிகளுடன் இளைஞர்களையும் தொழிலாளர்களையும் கட்டிப் போடுவதன் மூலம், சோசலிச வேலைத் திட்டத்துக்கான பரந்த போராட்டத்தின் பாகமாக ஜனநாயக உரிமைகளுக்காக போராடக் கூடிய ஒரே சமூக சக்தியான தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் இயக்கமொன்று தோன்றுவதை நவசமசமாஜக் கட்சி தடுக்கின்றது. கருணாரட்ன அத்தகைய சந்தர்ப்பவாத கூட்டணியை அமைப்பதில் நீண்டகால வரலாற்றை கொண்டவர். நவசமசமாஜக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் என்ற வகையில், அவர் புலிகளின் தோல்விகண்ட தமிழ் பிரிவினைவாத முன்நோக்கை முன்னிலைப்படுத்திய, முதலாளித்துவ தமிழ் தேசியக் கூட்டமைபபில் இருந்து பிரிந்து சென்ற வலதுசாரி வேட்பாளரான எம்.கே. சிவாஜிலிங்கத்துடனேயே கூட்டாக பிரச்சாரம் செய்தார். யுத்தக் குற்றங்களுக்கு பொறுப்பாளிகள் என பொன்சேகாவையும் இராஜபக்ஷவையும் கண்டனம் செய்த கருணாரட்ன, தேர்தலின் பின்னர் தலைகீழாக மாறி, "உண்மையான தேர்தல் முடிவை வெளியில் கொண்டுவர" ஜெனரலுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவிக்கின்றார். பிரச்சாரம் முழுவதும் மற்றும் அதன் பின்னரும், ஆளும் கும்பலின் இராஜபக்ஷ மற்றும் பொன்சேகா பிரிவினரை உறுதியாக எதிர்த்த சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), புதிய பொருளாதார சுமைகைள உழைக்கும் மக்கள் மீது திணிப்பதிலும் எந்தவொரு எதிர்ப்பையும் நசுக்குவதிலும் அவர்கள் சமமாக ஈவிரக்கமற்றவர்களாக இருப்பார்கள் என எச்சரித்தது. இராஜபக்ஷ அல்லது பொன்சேகாவுடன் தம்மை இணைத்துக்கொள்வதன் மூலம் தமது உரிமைகளை தொழிலாளர்களும் இளைஞர்களாலும் காத்துக்கொள்ள முடியாது. மாறாக, இலங்கை அரசியல் ஸ்தாபனத்துடனும் அதனுடன் தொங்கும் முன்னாள் இடதுசாரிகளிடம் இருந்தும் முழுமையாக பிரிந்து, சோசலிச கொள்கைகைள அமுல்படுத்த தொழிலாளர்களும் விவசாயிகளதும் அரசாங்கம் ஒன்றுக்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். |