World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை Sri Lankan SEP establishes trilingual web siteஇலங்கை சோசலிச சமத்துவக் கட்சி மும்மொழி வலைத் தளத்தை ஸ்தாபித்துள்ளது5 February 2010இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி, ஜனாதிபதி தேர்தலுக்காக அது ஸ்தாபித்த வலைத் தளத்தை கட்சியின் நிரந்தர வலைத்தளமாக மாற்றியுள்ளது. நாட்டில் பயன்படும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் வெளியாகும் இந்த வலைத் தளத்தை http://www.socialequality.lk/ என்ற முகவரியில் காணமுடியும். இலங்கை மற்றும் தெற்காசியா பற்றிய கட்டுரைகளையும், அதே போல் சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் அதன் பிரச்சாரங்கள் பற்றிய தகவல்களையும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் பேசுபவர்கள் தமது சொந்த மொழியில் ஒரே முகவரியினுள் நுழைந்து வாசிக்க முடியும். இந்த வலைத் தளத்துக்கும் உலக சோசலிச வலைத் தளத்தின் (WSWS) சிங்கள மற்றும் தமிழ் பக்கங்களுக்கும் இடையில் இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது, இலங்கை மற்றும் அனைத்துலக வாசகர்களில் பரந்தளவிலானவர்களுக்கு கட்சியின் அறிக்கைகள் மற்றும் கருத்துரைகளை கொண்டு செல்வதில் இந்த தேர்தல் வலைத் தளம் ஒரு முக்கிய வகிபாகத்தை ஆற்றியுள்ளது. வலைத் தளத்துக்குள் நுழைந்து, எமக்கு கடிதங்கள் எழுதி மற்றும் எமது பிரச்சாரத்தின் மூலம் நிதியுதவி வழங்கிய வாசகர்கள், ஆதரவாளர்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவருக்கும் சோ.ச.க. இந்த சந்தர்ப்பத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கின்றது. இந்த மும்மொழி தளத்துக்கு ஒரு குறிப்பிடத்தக்க அரசியல் முக்கியத்துவம் உள்ளது. 1956ல் "சிங்களம் மட்டும்", அதாவது சிங்களம் மட்டுமே தீவின் ஒரே உத்தியோபூர்வ மொழி என்ற கொள்கையை பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க கொண்டுவந்ததில் இருந்தே, இந்த மொழிப் பிரச்சினையானது இலங்கையில் ஒரு சச்சரவான பிரச்சினையாக இருந்து வருகின்றது. ஒரேயடியாக தமிழ் பேசுபவர்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக தரம் குறைக்கப்பட்டதோடு, 1948ல் சுதந்திரம் அடைந்ததில் இருந்தே தீவை பற்றிக்கொண்டிருந்த இனவாத பதட்ட நிலைமைகளை மேலும் எரியச்செய்தது. சோசலிச சமத்துவக் கட்சி சகல வடிவிலான இனவாதத்தை சமசரசமற்று எதிர்ப்பதோடு தொழிலாள வர்க்கத்தின் பொது வர்க்க நலன்களுக்காக போராடுவதற்காக ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை சூழ அவர்களை அணிதிரட்ட நனவுபூர்வமாக முயற்சிக்கின்றது. சோசலிச சமத்துவக் கட்சியின் பொதுக் கூட்டங்கள் சிங்களம், தமிழிலும் தேவையெனில் ஆங்கிலத்திலும் நடத்தப்படுகின்றன. இப்போது அதன் வலைத் தளம், WSWS இன் ஒரு பாகமாக, ஒரே இடத்தில் முக்கியமான அறிவித்தல்கள், ஆவணங்கள் மற்றும் கட்டுரைகளை ஒரே இடத்தில் பெற வழியமைத்துள்ளது. இலங்கையில் ஒரு சில வலைத் தளங்களே அவ்வாறு செய்கின்றன. ஏப்பிரலில் நடக்கவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் இந்த புதிய வலைத் தளம் ஒரு முக்கிய கருவியாக விளங்கும். சோசலிச சமத்துவக் கட்சி பல மாவட்டங்களில் அதன் வேட்பாளர்களை நிறுத்தவுள்ளது. இந்த வலைத் தளத்தில் யுனிகோட் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. பின்வரும் இணையங்களில் உள்ள ஆலோசனைகளை பின்பற்றி சிங்களத்தையும் தமிழையும் பார்க்க தமது பிரெளசர்களை இற்றைப்படுத்திக்கொள்ள முடியும். சிங்களம்: http://www.siyabas.lk/sinhala_how_to_install.html தமிழ்: http://www.siyabas.lk/tamil_how_to_install_in_english.htm |