World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Greece under European Union diktat

ஐரோப்பிய ஒன்றிய கட்டளையின் கீழ் கிரேக்கம்

Peter Schwarz
11 February 2010

Use this version to print | Send feedback

பொது நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டபின் முதல் தடவையாக ஐரோப்பிய ஒன்றியம் தன் கட்டளைக்கு கீழ்ப்படியுமாறு ஒரு நாட்டை செய்துள்ளது. ஐரோப்பிய ஆணைக்குழு கிரேக்க அரசாங்கம் அதன் வரவு-செலவு பற்றாக்குறையை அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13 ல் இருந்து 3 சதவிகிதத்திற்கு இரு ஆண்டுகளுக்குள் குறைப்பதற்கு மேற்கொள்ள இருக்கும் மிருகத்தனமான சிக்கன நடவடிக்கைகளை கடுமையான முறையில் மேற்பார்வையிட உள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய அதிகாரத்துவத்தின் வெளிப்படையான சர்வாதிகாரப் போக்கின் அடிப்படை ஜனவரி மாதம் கிரேக்க அரசாங்கம் ஐரோப்பிய ஆணைக்குழுவிற்கு கொடுத்த திட்டம் ஆகும். இத்திட்டம் பொதுச் செலவுகளில் 10 சதவிகித மொத்தக் குறைப்பு, பொதுப்பணித் துறையில் ஊதிய மற்றும் வேலை வெட்டுக்கள், ஒரு இரண்டாண்டு ஓய்வூதியத் தகுதி பெறும் வயதை உயர்த்துதல், சுகாதாரச் சேவைச் செலவுகள் வெட்டு, அதிக வரிகள் மற்றும் எரிபொருள் துணைவரியில் கூடுதல் உட்பட ஆகியவைகளைக் கொண்டுள்ளன.

ஐரோப்பிய ஒன்றியமானது திட்டத்தை மூன்று வாரங்கள் ஆராய்ந்து அது செயல்படுத்தப்படும் முறையை ஒவ்வொரு ஒன்று அல்லது மூன்று மாதங்களில் பரிசீலிக்க உள்ளது. திட்டத்தில் இருந்து கிரேக்க அரசாங்கம் எவ்விதத்திலும் பிறழ்ந்தால், பிரஸ்ஸல்ஸ் இன்னும் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை சுமத்தப்படு வேண்டியிருக்கும் என்று அச்சுறுத்தியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார மற்றும் நாணய ஆணையாளர் Joaquin Almunia கடந்த வாரம், "எங்களால் முடிந்த வரை கிரேக்கத்திற்கு ஆதரவு கொடுப்போம், கண்காணிப்போம்" என்றார். சுகாதாரச் சேவை "சீர்திருத்தங்கள்", ஓய்வூதிய நலன்கள் மற்றும் வேலைச் சந்தை ஆகியவைகள் "அவசரமாக" செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் சேர்த்துக் கொண்டார். இவற்றில் இருந்து ஏதேனும் மாற்றம் இருந்தால் அவற்றை ஒட்டி "உடனடியாக கூடுதல் செலவினக் குறைப்புத் தேவைகள் ஏற்படும்."

நடைமுறையில் இதன் பொருள் கிரேக்க பாராளுமன்றத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் கிரேக்க அரசாங்கம் மில்லியன் கணக்கான குடிமக்கள் வாழ்வை பாதிக்கும் செலவுகள் பற்றி சுதந்திரமாக முடிவு எடுக்க முடியாது. கிரேக்க வரவு-செலவு பற்றாக்குறை மீது இறையாண்மை என்பது பிரஸ்ஸல்ஸில் உள்ள தேர்ந்தெடுக்கப்படாத அதிகாரத்துவத்தினரிடம் உள்ளது. அவர்களுக்கு எவ்வித ஜனநாயகத்திற்கு உட்பட்டதன்மை கிடையாது.

"கிரேக்கப் பாராளுமன்றம் ஐரோப்பியர்களின் கவனத்தை கருத்தில் கொள்ளாமல் அதன் செலவு பற்றி இனி முடிவெடுக்க முடியாது என்று The Süddeutsche Zeitung கருத்துத் தெரிவித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்கள் பொதுத்துறைப் பணிகளில் ஊதிய வெட்டுக்கள், ஓய்வுதிய நலன் உரிமைகளில் சேமிப்புக்கள், வரி மற்றும் சமூகப் பாதுகாப்பு முறையில் சீர்திருத்தங்கள் மற்றும் அனைத்து பொதுச் செலவுகளில் 10 சதவிகிதக் வெட்டுக்கள் ஆகிய அரசாங்க திட்டத்திற்கு வெறுமனே ஒப்புதலாக தலைகளை அசைக்கத்தான் முடியும். பிரஸ்ஸல்ஸின் அனைத்து கட்டுப்பாடு செய்பவர்களும் இவர்களின் தோள்களில் உட்காருவர். அவர்கள் "ஒவ்வொரு புள்ளிவிவர ஓட்டையையும்" சரிபார்ப்பர்.

கிரேக்கத்திற்கு அப்பால் செல்லும் விதத்தில் இத்தகைய நடவடிக்கைக்கு முக்கியத்துவம் உண்டு. மத்தியதரைக்கடல் நாடு முழு ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் ஒரு பரிசோதனைக் களம் போல் பயன்படும். இது பனிப்பாறையின் உச்சியைத்தான் தொடுகிறது.

ஸ்பெயின், போர்த்துகல், இத்தாலி, அயர்லாந்து மற்றும் பெல்ஜியம் அனைத்தும் அதிக அளவு கடன்களைக் கொண்டுள்ளன. ஆஸ்திரியாவும் இந்தப் பெரும் சரிவில் அகப்பட்டுக்கொள்ளும் ஆபத்தில் அதனுடைய தற்போதைய வங்கி நெருக்கடியினால் உள்ளது. யூரோப்பகுதி நாடுகளில் "வலுவானவை" எனக் கருதப்படும் ஜேர்மனியும் பிரான்ஸும் கூட மிக அதிகப் பற்றாக்குறையை கொண்டுள்ளன.

இந்தக் கடன்கள் ஐரோப்பிய அரசாங்கங்களானது வங்கிகளின் ஊக நடவடிக்கைகள் இழப்பை மறைப்பதற்கும், அவை மீண்டும் புதிய இலாபங்களை பெறுவதற்கும் அவற்றிற்கு நூறாயிரக்கணக்கான பில்லியன்களை உட்செலுத்தியதின் மூலம் விளைந்தவைகள். இப்பொழுது இந்த பெரும் பிளவு ஓட்டைகள் உடைய வரவு-செலவுப் பற்றாக்குறையானது தொழிலாள வர்க்கத்தின் இழப்பில் அடைக்கப்படும். ஐரோப்பிய ஆணைக்குழு, வங்கிகளுக்காக கடன் வசூலிக்கும் தலைவராக செயல்படும்.

கிரேக்கம் குறிப்பிடத்தக்க வகையில் நிதிக் கொள்ளை கூட்டத்தினருக்கு பெரும் இலாபம் கொடுக்கும் களமாக உள்ளது. ஜேர்மனியை விட அது தன் கடனுக்கு 3.5 சதவிகிதப் புள்ளிகள் அதிகம் கொடுக்க வேண்டும். அது அதே நாணயத்தை பகிர்ந்து கொண்டாலும் இதே நிலைமைதான். ஐரோப்பிய மத்திய வங்கியில் இருந்து கிட்டத்தட்ட பூஜ்ய வட்டி விகிதத்திற்கு கடன் வாங்கும் வங்கிகள் பெரிய இலாபத்தை கிரேக்கத்திற்கு அதிக வட்டிக்கு கடன் கொடுப்பதின்மூலம் பெறும். ஒரு நாட்டின் திவால் என்ற ஆபத்தின் அடிப்படையில் கடன் கொடுப்பதால் அத்தகைய அதிக வட்டிகள் நியாயப்படுத்தப்படுகின்றன.

இதற்கிடையில் கிரேக்கம் சர்வதேச ஊக உச்சிக்கு இழுக்கப்படுகிறது. அதையொட்டி அதன் வரவு-செலவு திட்ட பற்றாக்குறை நெருக்கடியும் தீவிரமாகிறது. பைனான்ஸியல் டைம்ஸ் கருத்துப்படி, கெட்ச் நிதிகளும் (hedge funds) ஊகக்காரர்களும் கிட்டத்தட்ட 8 பில்லியன் டாலரை கடந்த திங்களன்று யூரோவிற்கு எதிராகப் பந்தயமாக முதலீடு செய்துள்ளனர். ஒரு நாணயத்தின் சரிவு ஏற்படும் என்ற எதிர்பார்ப்பில் முதலீடு செய்யப்பட்டுள்ள மிக அதிக பணம் ஆகும் இது. பல செய்தி ஊடகப் பிரிவுகளானது பிரிட்டிஷ் பவுண்டிற்கு எதிராக 1992ல் George Soros நடத்திய ஊக முறையுடன் இதை ஒப்பிட்டுள்ளன. அது பிரிட்டிஷ் மத்திய வங்கி பவுண்டின் மதிப்பைக் குறைக்க செய்து Soros க்கு பில்லியன் கணக்கில் இலாபத்தைக் கொடுத்தது.

கிரேக்கத்தின் நெருக்கடி நிதிய முதலாளித்துவத்தின் அதிக ஒட்டுண்ணித்தன பிரதிநிதிகளை ஈர்க்கிறது. அவர்களுடைய வழிவகைகள் மாபியா வகையை ஒத்துள்ளன. ஐரோப்பிய ஆணைக்குழு நிதியக் காப்பாளர்களுக்கு பெரும் ஒத்துழைப்பைக் கொடுப்பது போல் உள்ளது.

இத்தகைய இலக்குகள், ஜனநாயக முறைகள் மூலம் சாதிக்கப்பட முடியாதவை. ஜோர்ஜ் பாப்பாண்ட்ரூவின் தலைமையில்கீழ் உள்ள PASOK கிரேக்க அரசாங்கமானது ஐரோப்பிய ஒன்றியத்துடன் முழுமையாக ஒத்துழைத்து தீவிர பொருளாதார வெட்டுக்களை செயல்படுத்த தன் திறனை நிரூபிக்கத் தயார். கிரேக்க மக்களைப் பொறுத்தவரையில், ஜனநாயக வழிவகைகள் மூலம் நாட்டின் கொள்கையை செல்வாக்கிற்கு உட்படுத்தும் வாய்ப்பை ஐரோப்பிய பிரபுக்களால் இழந்துவிட்டனர்.

ஏழு ஆண்டுகள் குருதி கொட்டப்பட்ட ஆட்சியை தொடர்ந்து கிரேக்கத்தில் இராணுவ சர்வாதிகார ஆட்சி அகற்றப்பட்டு 36 ஆண்டுகள்தான் ஆகின்றன. அதேபோன்ற நிலைக்கு மீண்டும் திரும்புவது தவிர்க்க முடியாதது அல்ல. ஐரோப்பிய ஒன்றியக் கொள்கையின் தர்க்கம் இந்த திசையைத்தான் காட்டுகிறது.

தற்பொழுது ஐரோப்பிய ஒன்றியமும் அதன் பின் உள்ள நிதிய நலன்களும் சமூக ஜனநாயக PASOK ஐ தான் நம்பியுள்ளன. இது கடந்த அக்டோபர் மாதம் தேர்தலில் வெற்றியை வலதுசாரி கரமனலிஸ் அரசாங்கத்திற்கு வெகுஜன எதிர்ப்பின் மூலம் அடைந்தது. PASOK ஐ பொறுத்தவரையில் தொழிற்சங்கங்களை நம்பியுள்ளது. அவை பெருகிவரும் மக்கள் எதிர்ப்பை ஒன்றுபடுத்தாமல், குறைந்த நடவடிக்கைகள் மூலம் மற்றும் கோபத்தை வெறுமனே வெளிப்படுத்தும் செயல்களை செய்யும் விதத்தில் திசை திருப்பி கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும்.

தொழிற்சங்கங்களை பொறுத்தவரையில் சந்தர்ப்பவாத, போலி இடது கட்சிகளை அதாவது ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் SYRIZA கூட்டமைப்பு ஆகியவைகளை தங்களுக்கு அரசியல் மறைப்பு கொடுப்பதற்கும் தங்கள் மக்கள் சீற்றத்தை தேசியவாத வழியில் திசை திருப்பும் முயற்சிகளுக்கு ஊக்கம் கொடுப்பதற்கும் மற்றும் ஒரு சோசலிச சர்வதேச முன்னோக்கு தொழிலாள வர்க்கத்தில் வளராமல் தடுப்பதற்கும் நம்பியுள்ளன.

ஆனால் இந்த அமைப்புக்கள் பெருகிய முறையில் அவநம்பிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. தொழிலாளர்கள் சனத்தொகை மீதான கட்டுப்பாட்டை இழக்கக்கூடும். ஒரு வெளிப்படையான மோதல் வரும் வாய்ப்பு உள்ளது. தொழிலாளர்கள் அத்தகைய நிலைக்கு தக்க அரசியல் முடிவுகளை எடுக்கும் வகையில் தயாரிப்புக்களை மேற்க் கொள்ள வேண்டும்.

கிரேக்கக் கொள்கைகள் பற்றிய பொருத்தமான முடிவுகள் அனைத்தும் பிரஸ்ஸல்ஸில் எடுக்கப்படும் என்ற உண்மை நெருக்கடிக்கு தேசியத் தீர்வு ஏதும் இல்லை என்பதை நிரூபிக்கிறது. அந்த சக்திகள் அதாவது அரசியலில் வலது அல்லது இடது எப்படி வந்தாலும் தொழிலாளர்களை தேசியத் தீர்வு பேச்சு மூலம் ஏமாற்ற முற்படுபவர்கள் மேலே செல்ல முடியாத பாதையில்தான் இட்டுச்செல்ல முற்படுகின்றன. பூகோளமாயக்கப்பட்ட உற்பத்தி மற்றும் நிதிய சந்தைகளானது நீண்ட காலத்திற்கு முன்னரே அனைத்து தேசியத் திட்டங்களின் அடிப்படையையும் அகற்றிவிட்டது.

கிரேக்கத் தொழிலாளர்கள், ஐரோப்பிய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை நோக்கித் திரும்பி பெரும் நிதிய நிறுவனங்கள் மற்றும் பெரு நிறுவனங்களின் உடைமைகளை பறிமுதல் செய்து அவற்றை ஜனநாயக சமூகக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரும் ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்காக போராட வேண்டும்.

ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் மற்றும் பிற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தொழிலாளர்களை பொறுத்தவரையில் கிரேக்க தொழிலாளர்களின் இந்த சோசலிச வேலைத் திட்டத்திற்காக தோள்கொடுத்து போராட வேண்டும். ஐரோப்பிய ஆணைக்குழு கிரேக்கத்தில் அதிக வெட்டுக்களால் வரும் திட்டத்தை செயல்படுத்துவதில் வெற்றி பெற்றால், பிற ஐரோப்பிய நாட்டுத் தொழிலாளர்கள் தான் அடுத்து இருப்பார்கள்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பிரெஞ்சு மற்றும் டச்சு வாக்காளர்கள் ஐரோப்பிய வரைவு அரசியலமைப்பை நிராகரித்தனர். உலக சோசலிச வலைத் தளம் அரசியலமைப்பை எதிர்த்து எழுதியதாவது: "அரசியலமைப்பின் ஆதரவாளர்கள் கூறுவது போல் "வேண்டும்" வாக்கு அளிப்பவர்கள் "ஐரோப்பாவிற்காக" வாக்களிக்கவில்லை. அத்தகைய வாக்கு ஒரு அதிகாரத்துவ அரசாங்கம், முதலாளித்துவ தனியார் சொத்துரிமை, இராணுவவாதம் மற்றும் ஏகாதிபத்திய வெளிநாட்டுக் கொள்கை ஆகியவற்றைத்தான் நெறிப்படுத்தும். மக்களின் அடிப்படை நலன்கள் பெரும் நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் இலாப நலன்களுக்கு கீழ்ப்படுத்தப்படும் ஐரோப்பாவைத்தான் அது நெறிப்படுத்தும்."

லிஸ்பன் உடன்பாடு என்ற வடிவில் அப்பொழுதிலிருந்து ஐரோப்பிய அரசியலமைப்பு பின்புற வழி மூலமே சுமத்தப்படுகிறது. WSWS கொடுத்த எச்சரிக்கை முற்றிலும் சரி என இது நிரூபிக்கப்பட்டுள்ளது. "ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதன் அரசியலமைப்பிற்கு ஒரே மாற்றீடு, தொழிலாள வர்க்கத்தின் நலன்களை உண்மையில் அடையக்கூடிய ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகள் என்பதுதான்" என்று அந்த நேரத்தில் நாம் எழுதியது இன்றும் முற்றிலும் பொருத்தமானதே.