World Socialist Web Site www.wsws.org


SWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

US pushes for new sanctions against Iran

ஈரானுக்கு எதிராக புதிய பொருளாதாரத் தடைகளுக்கு அமெரிக்கா வலியுறுத்துகின்றது

By Peter Symonds
10 February 2010

Back to screen version

ஈரான் மீது அதன் அணுசக்தி திட்டங்களுக்கு எதிராக விரைவில் புதிய தண்டனை கொடுக்கும் பொருளாதாரத் தடைகள் சுமத்தப்பட வேண்டும் என்று ஒபாமா நிர்வாகம் அழுத்தம் கொடுக்கிறது. ஈரானின் ஜனாதிபதி மஹ்மத் அஹ்மதிநெஜாட் ஞாயிறன்று தெஹ்ரானில் உள்ள தன் அணு ஆலையின் தேவையான 20 சதவிகிதத்தை தனது நாடு யுரேனிய செறிவை செய்யும் என்ற அறிவிப்பை அடுத்து அமெரிக்கா அதை ஒரு போலிக் காரணமாக பயன்படுத்துகிறது.

அமெரிக்க பாதுகாப்பு மந்திரி ரோபர்ட் கேட்ஸ் திங்களன்று Fox News இடம் வாஷிங்டன் அடுத்த சில "வாரங்களில், மாதங்களில் அல்ல" புதிய தடைகளுக்கு வலியுறுத்தும் என்று கூறினார். இந்தக் காலக்கெடு நேற்று பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜெப் மோரலினால் மீண்டும் கூறப்பட்டது. அவர், "அனைத்துக் கூட்டங்களிலும் அவர் [கேட்ஸ்] அவசரத் தேவை பற்றி விவாதித்துள்ளார்." என்றார்.

திங்களன்று ஒரு கூட்டு செய்தியாளர் கூட்டத்தில் பிரெஞ்சு பாதுகாப்பு மந்திரி Herve Morin பிரான்ஸ் அமெரிக்காவுடன் "முற்றிலும் உடன்பாட்டைக்" கொண்டிருப்பதாகவும், இன்னும் கூடுதலான பொருளாதாரத் தடைகளை தவிர வேறுவழி இல்லை என்றும் கூறினார். பிரெஞ்சு வெளியுறவு மந்திரி பேர்னார்ட் குஷ்நெர் அஹ்மதிநெஜாட்டின் அறிவிப்பை "ஒரு மிரட்டல்" என்று கண்டித்தார். அவர் மேலும் கூறியது: "நாம் செய்யக்கூடியதெல்லாம், பொருளாதாரத் தடைகளை சுமத்துவது ஒன்றுதான், ஏனெனில் பேச்சுவார்த்தைகளால் இது தீரவில்லை." பின்னர் பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி ஈரான் "கடுமையான பொருளாதாரத் தடைகளை" எதிர்கொள்ள வேண்டும் என்று அறிவித்தார்.

புதிய தடைகளுக்கான அமெரிக்க/ஐரோப்பிய உந்துதல் சில காலமாகவே தயாரிப்பில் இருந்து வருகிறது. டிசம்பர் மாத இறுதிதான் சர்வதேச அணுசக்தி அமைப்பு (IAEA) ஏற்பாட்டின்படி ரஷ்யாவிற்கும் பிரான்சிற்கும் தெஹ்ரான் உலைக்கான எரிபொருள் பயன்பாட்டிற்கு தனது குறைந்த அடர்த்தி யுரேனியத்தை மேலதிக அடர்த்தியாக்கலுக்காக அனுப்ப காலக்கெடு என்று ஜனாதிபதி ஒபாமா தொடக்கத்தில் கூறியிருந்தார். இதன்பின் அமெரிக்கா பிரான்ஸுடன் சேர்ந்து நடவடிக்கை எடுப்பதை இந்த மாதம் வரை தாமதப்படுத்தியது. ஏனெனில் சீனாவை சேர்ந்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக்குழுவின் தலைவர் கூடுதல் தடைகளுக்கு எதிர்ப்புக் காட்டியிருந்தார்.

இப்புதுப்பிக்கப்பட்ட உந்துதல் அமெரிக்கா மற்றும் சர்வதேச ஊடகம் ஈரான் அணுவாயுத தயாரிப்புக்களில் இன்னும் ஒரு அடியை எடுக்கிறது என்ற வலுவான பிரச்சாரத்துடன் தொடர்கிறது. தெஹ்ரான் இக்குற்றச்சாட்டை பல முறை மறுத்துள்ளது. ஈரானிடம் கிட்டத்தட்ட 4 சதவிகித அடர்த்தி உள்ள யுரேனியச் செறிவு உள்ளது. ஆனால் அது தெஹ்ரானின் உலைக்குத் தேவையான எரிபொருளுக்காக அதை 20 சதவிகிதம் உயர்த்த தயார் செய்கிறது. ஆயுதங்களின் தரத்திற்கான யுரேனித்திற்கு 90 சதவிகிதம் அல்லது அதற்கும் அதிகமான அடர்த்தி தேவைப்படும்.

தெஹ்ரானின் திட்டங்கள் பற்றி சந்தேகங்களை எழுப்புகையில், அமெரிக்க அதிகாரிகள் அடர்த்தி செய்யப்பட்ட யுரேனியத்தை உலை எரிபொருளாக மாற்றும் ஈரானின் திறமை பற்றி வினா எழுப்பியுள்ளனர். IAEA க்கு அமெரிக்க தூதரான Glyn Davies நியூயோர்க் டைம்ஸிடம் ஈரான் உரிய நேரத்தில் உலை எரிபொருள் மாற்றத்தை செய்து தடையற்ற மருத்துவ அணுக்களை ஐசோடெப்ஸ் (isotopes) விநியோகிக்க தயாரிக்க முடியாது என்று கூறினார். "இதனால்தான் 3.5 சதவிகிதத்தில் இருந்து 20 சதவிகித செறிவிற்கு செல்லும் உண்மையான காரணத்தை பற்றிய வினாவை எழுப்புகிறது." என்றார் அவர்.

ஆனால் அமெரிக்கா வேண்டுமென்றே இந்த நிலையில் ஈரானை நிறுத்தியுள்ளது. இது மிரட்டுவதற்கு ஒப்பானது என்று நியாயமாகக் கூறமுடியும். IAEA இன் எரிபொருள் மாற்ற உடன்பாட்டிற்கு கடந்த ஆண்டு ஒபாமா நிர்வாகம் ஆதரவு கொடுத்தது. அதற்குக் காரணம் அது ஈரானின் தற்போதைய யுரேனிய செறிவு கையிருப்பை அகற்றிவிடும் என்பதுதான். ஆனால் தெஹ்ரானில் பரந்த விமர்சனம் வந்தபின் திட்டமிட்ட மாறுதல்களுக்கு அஹ்மதிநெஜாட் நிர்வாகம் உடன்படவில்லை என்றவுடன் உடன்பாட்டை திருத்த மறுத்துவிட்டது. கடந்த வாரம் வாஷிங்டன் ஈரான் இன்னும் உடன்பாட்டை உறுதிப்படுத்த தயார் என்று கூறிய அறிக்கைகளை உதறித்தள்ளவிட்டது.

வேறுவிதமாகக் கூறினால், அமெரிக்கா ஈரானுக்கு உடன்பாட்டை ஒப்புக்கொண்டு உள்நாட்டில் இன்னும் விமர்சனத்தை எதிர்கொள்ளுவதைவிட வேறுவழியில்லை என செய்கிறது. அல்லது ஈரான் தானே எரிபொருளுக்கு தேவையானவற்றை தயாரிக்க முயலவேண்டும். அது அவ்வாறு செய்யமுடியவில்லை என்றால் பாதிப்பு கடுமையாக இருக்கும். தெஹ்ரான் ஆய்வு உலையின் முக்கிய பங்கு 850.000 சிறுநீரக, இதய, புற்றுநோயாளிகளுக்கு தேவை என்று மதிப்பிடப்பட்டுள்ள மருத்துவ அணுக்களை (ஐசோடெப்ஸை) உற்பத்தி செய்வது ஆகும். உலைக்கு எரிபொருள் இல்லை என்றால் ஐசோடெப்ஸ் இறக்குமதி செய்யப்பட வேண்டும். அதனால் அவை செலவை அதிகமாக்கும், அவற்றின் விநியோகமும் உறுதியற்றது.

அமெரிக்கா ஏற்கனவே P5+1 என்று அழைக்கப்படும் குழுவின் (ஐ.நா.பாதுகாப்புக்குழுவின் ஐந்து நிரந்தர உறுப்பினர்கள் மற்றும் ஜேர்மனி) ஆதரவை இன்னும் அதிக தடைகளுக்கு பெற்றுள்ளது. பிரிட்டன், ஜேர்மனியுடன் ரஷ்யாவும் தன் ஆதரவைக் குறிப்பிட்டுள்ளது. ரஷ்ய வெளியுறவு மந்திரி ஈரானின் நடவடிக்கைகள் அணுசக்தித் திட்டங்கள் பற்றி "சந்தேகங்களை எழுப்புவதாக" அறிக்கை ஒன்றை வெளியிட்டார். ஜனாதிபதியின் பாதுகாப்புக் குழுவின் செயலாளரான Nikolai Patrushev தடைகளுக்கு ஆதரவு கொடுக்கும் விதத்தில், "ஒரு தீர்விற்கு அரசியல்-இராஜதந்திரமுறை வழிவகைகள் முக்கியம், ஆனால் எதற்கும் ஒரு வரம்பு உள்ளது" என்றார்.

ஐ.நா.பாதுகாப்புக்குழுவின் தடுப்பதிகாரத்தை (வீட்டோ) கொண்டுள்ள சீனா, இன்னும் அதிக தண்டனை கொடுக்கும் நடவடிக்கைகளை எதிர்க்கிறது. மூனிச்சில் பாதுகாப்பு மாநாட்டிற்காக ஐரோப்பாவிற்கு வந்திருந்த சீன வெளியுறவு மந்திரி Yang Jiechi செய்தி ஊடகத்திடம் "இப்பொழுது தடைகளைப் பற்றி பேசுவது நிலைமையை சிக்கல் ஆகும்; ஒரு இராஜதந்திர முறையிலான தீர்விற்கு அது குறுக்கே நிற்கும்" என்றார். அனைத்து தரப்பினரும் IAEA உடன்பாட்டை முடிக்க வேண்டும் என்று அறிக்கை ஒன்றை வெளியுறவு மந்திரி வெளியிட்டார்.

சர்வதேச செய்தி ஊடகம் தொடர்ந்து சீனா ஈரானில் கொண்டுள்ள கணிசமான பொருளாதார நலன்களை உயர்த்திக் காட்டியுள்ளது. நேற்று பைனான்ஸியல் டைம்ஸ் ஒரு கட்டுரையில், வளைகுடா நாடுகளின் வழியே வரும் கப்பல்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டால், சீனா ஐரோப்பிய ஒன்றியத்தை தாண்டிய ஈரானின் மிகப் பெரிய வணிகப் பங்காளியாகிவிட்டது என்று அறிவித்துள்ளது. மொத்த ஈரான்-சீன வணிகம் குறைந்தது 36.5 பில்லியன் டாலர் இருக்கும் என்றும் ஈரான் சீனாவின் எரிபொருள் தேவைகளில் 13 சதவிகிதத்தை அளிக்கிறது என்றும் மதிப்பிடப்பட்டுளளது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved