WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா :
பிரான்ஸ்
French government backs US occupation of
earthquake-stricken Haiti
பிரெஞ்சு அரசாங்கம் நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஹைய்ட்டியில் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு
ஆதரவு கொடுக்கிறது
By Antoine Lerougetel
4 February 2010
Use this version
to print | Send
feedback
ஜனவரி 12ம் தேதி ஹைய்ட்டியில் பேரழிவை ஏற்படுத்திய நிலநடுக்கத்திற்கு பின்னர் ஹைய்ட்டியில்
அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பிற்கு ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள அரசியல் ரீதியான எதிர்ப்பை அடக்குவதற்கு பிரெஞ்சு
அரசாங்கம் செயற்படுகிறது.
வாஷிங்டன் அதன் ஹைட்டியின் மீதான பிடியை இறுக்கும் குவிப்பைக் காட்டுகையில்,
அமெரிக்கத் தலையீடானது எல்லைகள் அற்ற மருத்துவர்கள் போன்ற அமைப்பில் இருந்து வந்த முக்கிய மருந்துகள்,
உணவு விநியோகங்களை தடுத்திருந்தது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் இப்பொழுது 200,000க்கும் மேலாக
உள்ளது; 250,000 பேருக்கு மேல் காயமுற்றுள்ளனர்; மில்லியன் கணக்கானவர்கள் வீடுழந்துள்ள நிலை ஏற்பட்டுள்ளது.
இது ஹைய்ட்டியை ஒரு குறைவூதிய தொழிலாளர் இருப்பாக மாற்றி, ஊதிய அடிமைகள் என்ற பட்டினியால் வருந்துகின்ற
தரத்திலான ஊதியங்களை ஆடை தயாரிக்கும் தொழிலில் கொண்டுவரும் ஏகாதிபத்திய திட்டங்களுக்கும் ஏற்றம்
கொடுத்துள்ளது.
பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி, ஐ.நா.வின் ஈராக் போரை
எதிர்த்த அவருக்கு முன்னர் ஜனாதிபதியாக இருந்த ஜாக் சிராக் காலத்தில் ஐ.நாவின் ஈராக் போரை
எதிர்த்ததனால் சீர்குலைந்த பிரெஞ்சு அமெரிக்க உறவுகளை சீர்செய்யும் விதத்தில் தன்னுடைய வெளியுறவுக் கொள்கையை
கட்டமைத்தார். ஒத்துழைப்பு மற்றும் கடல் கடந்த பிரதேசங்களின் மந்திரி
Alain Joyandet
ஹைய்ட்டியில் அமெரிக்க நடவடிக்கைகளைக் கண்டனம் செய்து இப்பொழுது புகழ் பெற்றுள்ளவர் "இது ஹைய்ட்டிக்கு
உதவுவதற்கு, அதை ஆக்கிரமிக்க அல்ல" என்று கூறி முன்னர் வெளியிட்ட கருத்தை விரைவிலேயே நிராகரித்தார்.
இத்தாலியின் மக்கள் பாதுகாப்பு அமைப்பின் தலைவர்
Guido Bertolaso
வும் Joyandet
உடைய கருத்துக்களை எதிரொலித்துத்தான் பேசினார். அமெரிக்கா ஹைய்ட்டியில் நடத்தும் செயல்கள் "வலிமையை
உண்மையாக காட்டுபவை, ஆனால் நடப்பு நிகழ்வுகளுக்கு முற்றிலும் பொருந்தாதவை. இந்தப் பகுதியுடன் அவர்களுக்கு
ஒன்றும் நெருக்கமான பிணைப்பு இல்லை, சர்வதேச அமைப்புக்கள், உதவிக்குழுக்களுடனும் உறுதியாக இணைந்து நடக்கவில்லை"
என்று அவர் கூறினார். "குழப்பமான நிலையை எதிர்கொள்ளும்போது, [அமெரிக்கா]
ஒரு நெருக்கடி நடவடிக்கையுடன் இராணுவச் செயலை போட்டுக்
குழப்புகிறது. இது ஒன்றும் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டிய செயல் அல்ல. நமக்கு ஒரு தலைவர்
இல்லை, இராணுவக் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட ஒரு ஒருங்கிணைக்கும் திறன் இல்லை" என்று அவர் மேலும் கூறினார்.
ஆனால் உத்தியோகபூர்வ பிரெஞ்சு நிலை ஒரு ஜனாதிபதி அறிக்கையில் வெளிவந்தது;
அது கூறியதாவது: "பிரெஞ்சு அதிகாரிகள் வாஷிங்டனுடன் கொண்டுள்ள ஒத்துழைப்பு பற்றி முழுத் திருப்தி அடைந்துள்ளனர்."
அறிக்கை மேலும் கூறியது: "ஹைய்ட்டிக்கு ஆதரவாக அமெரிக்கா அசாதாரணமுறையில் ஒன்று திரட்டலைச் செய்ததையும்
நடைமுறையில் அவர்கள் கொண்டிருக்கும் அடிப்படைப் பங்கு பற்றியும் நாங்கள் ஆர்வத்தோடு ஏற்றுக்
கொண்டுள்ளோம்."
அதே நேரத்தில் பிரெஞ்சு அரசாங்கம் ஹைய்ட்டிய குடியேறுபவர்களை மீண்டும் தங்கள்
பேரழிவிற்கு உட்பட்ட ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தாயகத்திற்கு திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுகளையும் செய்து
வருகிறது. ஜனவரி 13ம் தேதி குடியேற்றத்துறை மந்திரி எரிக் பெசோன் ஹைய்ட்டிய ஆவணமற்ற தொழிலாளர்களை
நாடுகடத்தும் நடவடிக்கையை நிறுத்தி வைத்தார்--ஆனால் மூன்று மாதங்களுக்கு மட்டும்தான்; அமெரிக்க அரசாங்கம்
கூட கொடுக்கும் 18 மாத காலத்திற்கும் குறைவானதாகும் இது. பல குடியேறியவர்களுக்கு பஞ்சம் மற்றும் இடிந்து
விழுந்துவிட்ட வீடுகளுக்கு திரும்பிச் செல்லுதல் தவிர்க்கமுடியாததாகி விடுகின்றது. பிரான்சில் அனைத்து ஹைய்ட்டியர்களுக்கும்
வசிக்கும் உரிமை கொடுக்கப்பட வேண்டும் என்று உதவி அமைப்புக்கள் முறையிட்டதை பெசோன் நிராகரித்து விட்டார்.
இத்தகைய முற்றிலும் போதாமையான உதவி பற்றிய அறிவிப்புக்கள்கூட முழுமையாகப்
பின்பற்றப்படவில்லை என்பதை தகவல்கள் குறிப்புக் காட்டுகின்றன. ஜனவரி 22ம் தேதி பாரிஸுக்கு அருகில்
இருக்கும் Val-de-Marne
என்ற இடத்தின் அரசாங்க
நிர்வாக அலுவலகம் (préfecture)
வழக்கம் போல் அதன் செயல்களில் ஈடுபட்டது. பாஸ்போர்ட் ஒழுங்காக இல்லாத இரண்டு ஹைய்ட்டியர்களை அரசாங்க
அலுவலகம் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்தது. அரசாங்க வக்கீலின் அலுவலகம், "பிரான்சை
விட்டு ஒரு மாத காலத்திற்குள் ஹைய்ட்டியர்கள் வெளியேற வேண்டும்." என்று கூறியுள்ளது.
அமெரிக்கா ஹைய்ட்டியை இராணுவரீதியில் ஆக்கிரமிக்க நியாயப்படுத்தும் அடிப்படை
பொய்யை சார்க்கோசி அரசாங்கம் முழுமையாக ஆதரிக்கிறது:
அதாவது ஹைய்ட்டியின்
முக்கிய பிரச்சனை பாதுகாப்பு. ஜனவரி 23ம் தேதி ஹைய்ட்டி பற்றி மொன்றியலில் நடக்க இருக்கும் தயாரிப்புக்கள்
பற்றி பேசிய அவர் ஐரோப்பிய பாதுகாப்பு படைகளை கட்டமைக்க பேரழிவை பயன்படுத்திக் கொள்ள முற்பட்டார்.
"ஒரு நெருக்கடிக் காலத்தில் பாதுகாப்பு என்பதும் ஒரு எதிர் செயலாற்றுவதற்கான தகுதிதான்...ஹைட்டிய
பெரும் துன்பம் போன்ற நேரங்களில்", "எனவேதான் பிரான்ஸ் ஒரு ஐரோப்பிய சிவில் பாதுகாப்பு படை தேவை
என்று வாதிடுகிறது.... இது விரைவில் செயல்பாட்டிற்கு வரும்" என்றும் கூறினார்.
சார்க்கோசி, பிரதம மந்திரி பிரான்சுவா பியோன் மற்றும் பெசோன் ஆகியோர்
பிரான்சிற்கும் அதன் முன்னாள் காலனித்துவ கையகப்படுத்தலுக்கும் இடையே உள்ள "பழைய நட்பு", "ஆழ்ந்த வரலாற்று,
பண்பாட்டு உறவுகள்" ஆகியவைகள் பாசாங்குத்தனமானவை, தீயவை.
பிரான்ஸ் இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில், ஹைய்ட்டியில் ஏகாதிபத்திய சக்தியின்
முதன்மையிடத்தை அமெரிக்காவிற்கு கொடுத்துவிட்ட பின்னர், வரலாற்றளவில் அது நாட்டை வறுமையில்
வைத்திருப்பதில் முக்கிய பங்கைக் கொண்டிருந்தது. 1794ல் ஹைய்ட்டியின் சுதந்திரத்தை ஏற்று அதன் அடிமை
மக்களை விடுவிக்க அங்கீகாரம் கொடுத்த பிரெஞ்சு புரட்சி அரசாங்கம், அதற்கு ஆதரவு கொடுத்திருந்த அரசியல்
வாழ்வில் மக்களின் செல்வாக்கில் அதிகாரத்திற்கு வந்திருந்த நெப்போலியன் மீண்டும் அடிமைத்தனத்தை சுமத்த
படைகளை அனுப்பினார். அப்படைகள் Toussaint
L'Ouverture மற்றும்
Jean-Jacques Dessalines ஆகியோர் தலைமையில்
இருந்த ஹைய்ட்டிய அடிமைகளால் தோற்கடிக்கப்பட்டன. ஆனால் 1825ல் 14 பிரெஞ்சு போர்க் கப்பல்கள்
Port-au-Prince
ஐ அச்சுறுத்தி, மீண்டும் ஆட்சியை தன்னகப்படுத்திய பத்தாவது சார்ல்ஸின்
அரசாங்கமானது ஹைய்ட்டி தனது சுதந்திரத்திற்கு 150 மில்லியன் பிராங்குகளைத் திருப்பிக் கொடுக்க வேண்டும்
என்று கோரியது; பின்னர் இது 90 மில்லியனாக குறைக்கப்பட்டது. இந்த இழப்பீட்டுத் தொகை ஹைட்டிக்கு பெரும்
சுமையாயிற்று. 1947 வரை அது இப்பணத்தைத் திருப்பிக் கொடுக்க முடியவில்லை.
ஹைய்ட்டியை 1915ல் இருந்து 1934 வரை ஆட்சிபுரிந்த அமெரிக்க மரைன் பிரிவுகள்
இந்த ஏற்பாட்டை குலைக்கவில்லை; ஹைய்ட்டியின் வரலாற்றில் பிரான்ஸ் முக்கிய கட்டங்களில் அமெரிக்காவிற்கு
ஆதரவு கொடுத்தவிதத்தில்தான் இருந்தது. அமெரிக்க ஆதரவு பெற்ற சர்வாதிகாரங்கள் ஹைய்ட்டியில் இருந்ததற்கு
பிரான்சின் ஆதரவு, 1986ல் அதிகாரத்தை இழந்த பின் பிரான்சிற்கு
"Baby Doc" Duvalier
ஓடிவந்தமையானது அடையாளமாக இருக்கிறது. 2004-ல்
அமெரிக்கா ஆதரவு பெற்ற ஆட்சி மாற்றத்திற்கு தேர்ந்தெடுத்த ஜனாதிபதி
Jean Bertrand Aristide
க்கு எதிராக நடந்த போதும் பிரெஞ்சுத் துருப்புக்கள் அமெரிக்காவின் ஹைய்ட்டிய ஆக்கிரமிப்பிற்கு ஆதரவு
கொடுத்தன.
தற்பொழுது பிரெஞ்சு அரசாங்கம் அமெரிக்க கடற்படை மற்றும் கடலோரப்
பாதுகாப்பு படையினர் ஹைய்ட்டியின் நீர்ப்பகுதியை தடைக்கு உட்படுத்தியுள்ளது பற்றி எவ்வித குறையையும்
கூறவில்லை--இச்செயல் "Vigilant Sentry"
விழிப்பான காவல் என்று அழைக்கப்படுகிறது--ஹைய்ட்டியர்கள் தப்பிச் செல்லும் முயற்சியை இது தடுத்து அவர்களை
நாட்டிற்கு மீண்டும் அனுப்பிவிடும். அதே போல் கியூபாவில் குவாண்டநாமோ குடாவில் ஒரு தடுப்பு முகாமை அதன்
கடற்படைத் தளத்தில் அமெரிக்கா நிறுவியிருப்பதற்கும் பிரான்ஸ் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை; இந்தத் தடுப்பு
முகாம் முற்றுகையை மீறி தப்பியோடும் ஹைய்ட்டியர்கள் 1,000 பேரை அடைக்க முடியும்.
உண்மையில் பிரெஞ்சு முதலாளித்துவம் இதை வரவேற்றுள்ளது என நம்புவதற்கு காரணம்
உள்ளது. ஹைய்ட்டிய மற்றும் பிற ஆவணமற்ற நிலநடுக்கத்திற்கு முன் குடியேறியவர்கள் நடத்தப்படும் முறையை
பார்க்கும்போது, பிரெஞ்சு அதிகாரிகள் கடற்படை முற்றுகை அலையென அகதிகள் ஹைய்ட்டியில் இருந்து தப்பி
பிரான்சினுடைய கரிபிய பிரதேசங்களுக்கு அருகில் உள்ள அதாவது
Guadeloupe
மற்றும் Martinique
ஆகியவற்றிற்கு வராமல் தடுத்துவிடும் என்பதில் நிம்மதி அடைந்துள்ளனர்.
இத்தீவுகளின் சமூக நிலைமை ஏற்கனவே அழுத்தம் கொண்டது. ஓராண்டிற்கு முன்பு
Guadeloupe
இல் ஒரு 44 நாள் பொது வேலைநிறுத்தம் நடந்தது. அப்பொழுது பிரெஞ்சு நாளேடு
Le Monde,
Guadeloupe
பொது வேலைநிறுத்தமானது "அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் மிக அதிகம் உணரப்பட்ட கவலையை ஏற்படுத்தியது"
என்று எழுதியது. "வாங்கும் சக்திக்கு ஆதரவாக நடவடிக்கை எடுப்பது [அதாவது கூடுதல் ஊதியங்களுக்காக
Guadeloupean
பொது வேலைநிறுத்தத்தின்போது எழுந்த கோரிக்கை], தீவுகளில் ஏற்றுக் கொள்ளப்பட்டால், பெருநகர பிரான்சிலும்
ஏற்றுக் கொள்ள வேண்டிய கருத்தாகிவிடும்" என்று விளக்கியது.
பிரான்சின் கரிபிய பிரதேசங்களில் உள்ள ஹைய்ட்டிய சமூகம் மிக மோசமாக
அடக்கப்பட்டுள்ளது. Migrants Outre-Mer ( பிரான்சின்
கடல் கடந்த பிரதேசங்களில் குடியேறியவர்கள்) என்னும் அமைப்பு
Collectif Haiti de France
என்பதுடன் இணைந்து 2006ல் கொடுத்த அறிக்கையின்படி, வெளிநாட்டில் வாழும் 1.5 மில்லியன் ஹைய்ட்டிய
மக்களில் 100,000 பேர் பிரெஞ்சு பகுதியில் உள்ளனர், 40,000 பேர் பிரான்சின் பெரு நகரில் உள்ளனர்,
30,000 கயானாவிலும், 20,000 Guadeloupe
லும் உள்ளனர்.
Guadeloupe ல் உள்ள
ஹைய்ட்டியர்களில் 5,000 பேர் ஆவணமற்றவர்கள். தீவிலிருந்து வெளியேற்றப்படுபவர்கள், "மிக அதிகம், சராசரி
ஒவ்வொரு ஆண்டும் 2,000 என்று உள்ளது. ஒரு சட்டவிரோத குடியேறுபவர் கைதுசெய்யப்பட்டால், அவர்
OQTF
எனப்படும் பிரெஞ்சுப் பகுதியில் இருந்து ஒரு மாதத்திற்குள் வெளியேறும் கட்டாயம் உண்டு" இந்த
OQTF தான்
பிரான்சில் மேல்முறையீட்டின்படி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது; ஆனால்
Guadeloupe TM
ÜTMô.
மொத்தத்தில்
Guadeloupe ல் உள்ள ஹைய்ட்டியர்கள் மிகக் குறைந்த
ஊதியங்களை பெறுகின்றனர்; பாகுபாட்டையும் எதிர்கொள்ளுகின்றனர். அறிக்கை கூறுவதாவது: "குழந்தைகளை
பள்ளியில் சேர்ப்பதற்கு, சில பள்ளிகள் பெற்றோர்களின் அடையாள ஆவணங்களைக் கேட்கின்றன; இது வசிக்கும்
உரிமை அற்ற பெற்றோர்களை பெரிதும் அச்சப்படுத்துகிறது."
பிரான்சிற்கும் ஹைய்ட்டிக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தைக்குப்பின் உடன்பாடு
ஒன்று வந்துள்ளது என்றும், அதன்படி பிரெஞ்சு அரசாங்கம் பிரான்சிலும், பிரெஞ்சு கரிபியனிலும் இருக்கும்
ஹைய்ட்டியர்களை எளிதில் வெளியேற்ற வகை செய்கிறது என்று அறிக்கை தெரிவிக்கிறது. இத்தகைய உடன்பாடுகள்
முன்னாள் பிரெஞ்சு ஆபிரிக்க குடியேற்றங்களுடனும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
2006-TM
GARR (Support Group for Refugees and
Repariated People) 2005 ஜனவரியிலிருந்து நவம்பர்
வரை பிரான்சிலும், அதன் கடல் கடந்த பிரதேசங்களிலும் ஹைய்ட்டிய அரசியல் தஞ்சம் கோருவோர் நடத்தப்பட்ட
விதம் பற்றி அதிர்ச்சி தரும் புள்ளிவிவரங்களைக் கொடுக்கிறது. கடல் கடந்த பகுதிகளில் இருந்து வந்த 4,718
விண்ணப்பங்களில் 2.3 சதவிகிதம்தான் ஏற்கப்பட்டன. "பெரும்பாலான ஹைய்ட்டியர்கள் படகுகள் மூலம்
வருகின்றனர். அவர்கள் Gudeloupe
க்கு தெற்கே 80 கி.மீ.தொலைவில் உள்ள தீவான
Dominica மூலம் செல்கின்றனர்."2004-ல்
ஹைய்ட்டியில் இருந்து Guadeloup
க்கு செல்ல ஒரு குடியேறுபவர் $2,000த்தில் இருந்து $5,000 வரை கொண்டு செல்பவர்களுக்கு கொடுக்க
வேண்டும்; அதைத்தவிர $300 ல் இருந்து $400 வரை இறங்கியவுடன் கொடுக்க வேண்டும். நிலநடுக்கத்திற்கு
பின்னர் இந்தத் தொகைகள் இன்னும் பெரிதாக உயர்ந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
தன்னுடைய ஆய்வு அறிக்கையில் "Guadeloupe
இல் ஹைய்ட்டிய சட்டவிரோத குடியேறுபவர்கள்" என்ற தலைப்பில் அக்டோபர் 2005-ல்
வெளிவந்ததில், கல்வியாளர் Louis-Auguste
Joint ஹைய்ட்டிய குடியேறுபவர்கள் எதிர்கொள்ளும் அடக்குமுறையை
குறிப்பிடுகிறார்; பல நேரமும் இவர்கள்தான் சமூகப் பிரச்சினைகளுக்கு பலிகடா ஆகின்றனர். 2004-ல்,
தேர்ந்தெடுக்கப்பட்ட ஹைய்ட்டிய ஜனாதிபதி
Jean-Bertrand Ariste பதவியில் இருந்து வெளியேற்றப்பட்ட
நேரத்தில் நடந்த இறப்பு எண்ணிக்கை 10,000 என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2,005 பேரில் 10 பேருக்குத்தான்
அரசியல் புகலிடம் நாடியவர்களுக்கு தஞ்சம் கொடுக்கப்பட்டது.
பிரான்சின் OFPRA (அகதிகள்,
நாடற்றவர்கள் பாதுகாப்பிற்கான பிரெஞ்சு அலுவலகம்), புகலிடம் கோருபவர்களுக்கு அவர்கள் விண்ணப்பத்தைக்
கொடுத்துவிட்டு விடையை எதிர்பார்க்கும் வரை ஒரு ஆவணம்
(récipissé)
கொடுக்கின்றனர். பாரிசில்தான் முடிவு எடுக்கப்படுகிறது. தொழிலாளர்கள் வசிக்கலாம், ஆனால் விண்ணப்பத்தின்
முடிவு தெரியும் வரை சட்டபூர்வமாக வேலை செய்ய முடியாது. அதன் பின் அவர்கள் சுரண்டும் முதலாளிகளின் கீழ்
வருகின்றனர்; நாள் ஒன்றிற்கு 20 அல்லது 30 யூரோக்களை வாழைப்பழத் தோட்டங்கள், கரும்புத் தோட்டங்களில்
சம்பாதிக்கின்றனர். |