World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்குGovernment debt: a new stage in the global financial crisis அரசாங்கக் கடன்கள்: பூகோள நிதிய நெருக்கடியில் ஒரு புதிய கட்டம் Nick Beams கடந்த வாரம் நிதியச் சந்தைகளை கடந்து சென்ற அதிர்வுகள் பூகோள நிதிய நெருக்கடியில் ஒரு புதிய கட்டம் வருவதை அடையாளம் காட்டுகின்றன. இதற்குக் காரணம் ஆளும் வட்டாரங்களில் முன்னோடியில்லாதவகையில் வேலைகள், ஊதியங்கள் மற்றும் சமூக சேவைகள் மீது நடத்தும் வெட்டுக்கள் மூலம் பெரியளவிலான வங்கி பிணை எடுப்புச் செலவுகளுக்கு கொடுத்துவிடும் அரசாங்கங்களின் முயற்சிகளுக்கு மிகப் பெரிய சமூகப் போராட்டங்களின் தாக்குதலின் அச்சத்தால் இது வந்துள்ளது. பிரான்சில் வர்க்கப் போராட்டம் என்னும் தன்னுடைய புத்தகத்தில் கார்ல் மார்க்ஸ் "பொதுக் கடன்கள் தங்கியிருக்கும் நம்பிக்கைகளானது நிதிய ஓநாய்களால் அரசாங்கம் சுரண்ட அனுமதிக்கப்படும் என்பதனாலாகும்" என்று குறிப்பிட்டார். கடந்த 18 மாதங்களில், ஓநாய்கள் முக்கிய முதலாளித்துவ நாடுகளில் அரசாங்கங்களின் பிணை எடுப்புக்களால் கொழுத்துத் தின்றன. இது மொத்த உள்நாட்டு உற்பத்தி, மீட்கப்பட்ட வங்கிகள், அதிகரிக்கப்பட்ட இலாபங்கள் மற்றும் ஏற்றம் காணப்பட்ட நிதியச் சந்தைகள் இவைகள் அனைத்திலும் கிட்டத்தட்ட 30 சதவிகிதம் என்று ஆயிற்று. பாங்க் ஆப் இங்கிலாந்தின் கவர்னர் Mervyn King கடந்த ஆண்டு ஒரு உரையில் ஒப்புக் கொண்டதைப் போல், அதாவது "நிதிய முயற்சிகளில் ஒருபோதும் இவ்வளவு பெரிய தொகை ஒரு சிலரால் பலருக்கு கொடுக்கப்பட வேண்டும் என்று இருந்ததில்லை." பல பிணை எடுப்புத் திட்டங்களும் தலையீடுகளும் சிக்கல் வாய்ந்த செயற்பாடுகளை கொண்டிருந்தாலும், அவற்றின் சாராம்சம் வெகு எளிதுதான்: அதாவது டிரில்லியன் கணக்கான டொலர்கள் கடன்களானது வங்கிகள் மற்றும் நிதிய நிறுவனங்களின் கணக்குப் புத்தகங்களில் இருந்து இலகுவாக எடுக்கப்பட்டதோடு அரசாங்கத்திற்கும் மாற்றப்பட்டன. இப்பொழுது அடுத்த கட்டம் வருகிறது அதாவது இக்கடன்களை சமூகச் செலவினங்களை கடுமையாக வெட்டுதல் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்கள் மீது கடுமையான குறைப்பைக் கொண்டுவருதல் ஆகியவற்றின் மூலம் திரும்ப அடைத்தலால் ஆகும். இந்த வழிவகை கிரேக்க அரசாங்கமானது அதன் வரவு-செலவு திட்ட பற்றாக்குறையை தற்போதைய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13 சதவிகிதம் என்பதில் இருந்து அடுத்த இரு ஆண்டுகளில் 3 சதவிகிதம் எனக் குறைப்பதாக அறிவித்ததில் இருந்து இது தொடங்கியுள்ளது. இந்த முடிவிற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒப்புதல் கிடைத்ததன்பின் சந்தைகள் தொந்தரவிற்கு உட்படாமல் இருந்தன. ஒரு நிதிய கருத்து தெரிவிப்பாளரின் கூற்றின்படி, "பிரஸ்ஸல்ஸில் இருந்து வந்த முடிவை ஒட்டி ஏற்பட்ட களிப்பான மனநிலை" அடுத்த மாதம் கிரேக்கத்தில் வெட்டுகளுக்கு எதிராக பொது வேலைநிறுத்தம் நடத்தப்படும் என்று அறிவித்தவுடன் மாறிவிட்டது. இதன் பின் வந்த அதிர்ச்சி அலைகள் பூகோள நிதியச் சந்தைகள் மூலம் கடந்து சென்று, அரசாங்கம் மற்றும் நிதிய வட்டாரங்களில் இரண்டு இடைத்தொடர்புடைய அச்சங்களைப் பிரதிபலித்தன. முதல் கவலை கிரேக்க நிகழ்வுகளானது ஐரோப்பா முழுவதும் இன்னும் பரந்த முறையில் விரிவடையும் ஒரு கடன் நெருக்கடியின் ஆரம்ப வெளிப்பாடு என்பதாகும். இரண்டாவது கடந்த 18 மாதங்களாக, வங்கிகள் மற்றும் நிதியச் சந்தைகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப உலகெங்கிலும் அரசாங்கங்கள் செயல்படுத்திவரும் முயற்சிகளானது தொழிலாள வர்க்கத்தின் தலையீடு இல்லாமல் நடத்தப்படும் நிலைமையானது முடிவிற்கு வரவுள்ளது என்பதே ஆகும். கிரேக்க நெருக்கடி வெளிவந்தவுடன், ஐரோப்பிய ஒன்றியத்தின் மற்றய உறுப்பு நாடுகளான அயர்லாந்து, போர்த்துகல், இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளின் மீதும் கவனம் திரும்பியது. கடந்த வாரம் போர்த்துகீசிய credit default swaps ஆனது திருப்பி செலுத்த முடியாத பேரிடர் மதிப்பிடுதலானது அரசாங்கம் திட்டமிட்ட கடும் சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்த முடியாது என்ற அச்சங்களை உயர்த்தியது. நாடு ஆளமுடியாத நிலைக்கு வரக்கூடும் என்று ஒரு மந்திரி அச்சங்களை எழுப்பினார், அதாவது "போர்த்துக்கல் அரசாங்கத்தின் நம்பகத்தன்மையே ஆபத்தில் உள்ளது" என்பதுதான் நிலை என்றார். நியூயோர்க் டைம்ஸின் பொருளாதாரக் கட்டுரையாளர் போல் க்ருக்மன், "கிரேக்கம் ஒன்றும் பெரும் தொந்திரவில் இல்லை, ஸ்பெயின் தான்" என்றவுடன் கடன் செலுத்த முடியாததற்கான (Default) காப்பீட்டுக் கட்டணம் ஸ்பெயினில் உயர்ந்தது. பார்க்கிலேஸ் மூலதன நிறுவனத்தின்படி, நிகர வெளிநாட்டுக் கடன்கள் இப்பொழுது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிரேக்கத்தில் 87 சதவிகிதம், ஸ்பெயினில் 91 சதவிகிதம், போர்த்துக்கலில் 108 சதவிகிதம் என்று உள்ளது. இந்த நெருக்கடி கிரேக்கம் அல்லது மத்தியதரைக்கடல் நாடுகள் என்று அழைக்கப்படுபவைகளுடன் மட்டுப்படுத்தப்பட்டிருந்தால், அது அடக்கப்பட்டிருக்கக் கூடும். ஆனால் பெரும் வரவு-செலவு திட்ட பற்றாக்குறை அதிகரிப்பானது எல்லா இடங்களிற்கும் உரிய நிகழ்முறை ஆகும். சர்வதேச நாணய நிதியம் (IMF) அபிவிருத்தி அடைந்துள்ள பொருளாதாரங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு கடனின் விகிதம் 2014-க்குள் 115 விகிதம் என்று உயரும் எனவும் இது 2007-ல் 75 சதவிகிதம்தான் இருந்தது என்றும் கணித்துள்ளது. இந்த முன்னோடியில்லாத எழுச்சி சமாதான காலத்தில் அமெரிக்காவும் பிரிட்டனும் பாதிக்கப்பட்டவற்றில் மோசமான நிலையில் உள்ளன. இதுவரை ஐரோப்பிய ஒன்றியம் கிரேக்கத்திற்கு உதவி எதையும் அளிக்க முடிவெடுக்கவில்லை--அது அயர்லாந்து, போர்த்துக்கல் மற்றும் இத்தாலியைக் கூட பிணை எடுப்பு கொடுக்க முன்னோடி நிலையை ஏற்படுத்தும் என்ற அச்சத்தால் ஆகும். அதே நேரத்தில் ஐரோப்பிய ஒன்றியமானது IMF தலையீட்டையும் எதிர்க்கிறது; ஏனெனில், ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் தனி நாடுகள் சர்வதேச அளவில் பிணை எடுக்கப்படுதல் ஐரோப்பிய நிதிய முறையை வினாவிற்கு உட்படுத்தி யூரோவின் உறுதித்தன்மையையும் வினாவிற்கு உட்படுத்தும். ஐரோப்பிய ஒன்றியத்தின் அழுத்தத்தை பிரதிபலிக்கும் வகையில் கடந்த வாரம் நடந்த G7 நிதி மந்திரிகள் கூட்டம் ஐரோப்பிய அதிகாரிகள் கிரேக்க நெருக்கடியை "சமாளிப்பர்" என்று தெளிவாக்கி விட்டது. ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தின் அணுகுமுறை அது இன்னும் அதிகப் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது என்ற குறைகூறலைத் தூண்டியுள்ளது. "ஐரோப்பா மற்றொரு உலக மந்த நிலை ஆபத்தைக் கொண்டுள்ளது" என்ற தலைப்பில் முன்னாள் IMF தலைமைப் பொருளாதார வல்லுனர் Simon Johnson எழுதியது: அதாவது "ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் போன்ற குறிப்பான ஐரோப்பிய பொருளாதாரங்கள் வலுவற்ற யூரோப்பகுதி நாடுகள் கடன்களை கொடுக்க முடியாமல் போகலாம் என்ற அச்சத்தை குறைப்பதற்கு என்ன செய்கின்றன? இந்தப் பீதிதான் வட்டி விகிதங்களை உயர்த்தி, பாதிக்கப்பட்டுள்ள அரசாங்கங்களுக்கு திருப்பி கொடுப்பதையும் இடருக்கு உட்படுத்துகிறது. நிறைய பணம் உடைய ஐரோப்பியர்கள் ஒன்றும் செய்யவில்லை--அழுத்தத்தில் இருக்கும் எல்லா நாடுகளும் தங்கள் வரவு-செலவு திட்டத்தை விரைவில் சரி செய்யவேண்டும் என்று கூறுவதைத் தவிர; அதுவோ அரசியல் அளவில் கடினமானது. இத்தகைய நிதிய கடும்சிக்கனம்தான் 1930-களின் பெரும் மந்த நிலை ஏற்படுவதற்கு நேரடியான ஆரம்பத்தைக் கொடுத்தது." பூகோள நிதிய நெருக்கடியில் இந்தப் புதிய கட்டம் வந்துள்ளதானது தொழிலாள வர்க்கத்தின் மீது முக்கியமான அரசியல் பிரச்சினைகளை எழுப்புகிறது. ஆளும் உயரடுக்குகளுக்கு தாங்கள் எந்த அளவிற்கு தொழிலாள வர்க்கத்தை தனிமைப்படுத்தியும் பிரித்தும் அடக்கலாம் என்பதைப் பொறுத்துத்தான் அனைத்தும் உள்ளது. அதற்காக அவர்கள் சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் தொழிற்சங்கங்களின் தலைமைகள் ஆகியவைகளை வெட்டுகளுக்கு எதிராக மக்களின் எதிர்ப்புக்களை அணைக்க வைத்து அவற்றை தேசியவாத திசையில் திருப்பிவிட வேண்டும் என்று எதிர்பார்ப்பதுடன், எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு சோசலிச முன்னோக்கு வராமல் தடுக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றனர். ஆனால் நெருக்கடியின் தன்மையே ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவது என்ற புற நிலைத் தேவையை வலியுறுத்துவதைத்தான் கொண்டுள்ளது. பூகோள நிதியத்தின் சிக்கல் வாய்ந்த இடைத் தொடர்புகளின் பொருள் ஒரு பகுதியில் ஏற்படும் நெருக்கடி அநேகமாக உடனடியாக இந்த அமைப்பு முறை முழுவதற்கும் கடத்தப்பட்டுவிடுகிறது என்பதுதான். அமெரிக்காவின் sub-prime நெருக்கடி பூகோள நிதிய நெருக்கடிக்கு ஊக்கம் கொடுத்தது; இப்பொழுது ஐரோப்பாவில் கடன்களை கொடுக்க முடியாதநிலை மீண்டும் அதை ஆழமாக்கும் அச்சத்தை கொடுக்கிறது. எனவே ஒவ்வொரு நாட்டிலும் இந்த நெருக்கடியை தீர்க்க, தொழிலாள வர்க்கம் மற்றும் சமூகம் ஆகியவற்றின் நலன்களின் முழுத் தேவைக்காக அனைத்து வங்கியல் மற்றும் நிதிய முறையையும் பறிமுதல் செய்து, அதனுடைய வளங்களானது பொது மற்றும் சர்வதேச ஜனநாயக் கட்டுப்பாட்டிற்குள் வைக்கப்பட ஒரு அரசியல் போராட்டம் ஆரம்பிக்கப்பட வேண்டும். அப்பொழுது மட்டும் தான் நிதியத் தன்னலக் குழுவின் பிடியை முறியடிக்க முடியும் என்பதோடு வங்கிகளின் இலாபத்திற்கு என்று இல்லாமல் மனிதத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு என்ற முறையில் சமூகம் மீள்கட்டமைக்கப்படும். |