WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
மத்திய கிழக்கு
Israel's crisis deepens over Gaza war crimes report
காசா போர்க் குற்றங்கள் பற்றிய அறிக்கையினால் இஸ்ரேலில் நெருக்கடி தீவிரமாகிறது
By Chris Marsden
6 February 2010
Use this version
to print | Send
feedback
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கி-மூன் இஸ்ரேலோ பாலஸ்தீனமோ
காசாவின் மீது 22 நாள் நடத்தப்பட்ட இஸ்ரேலிய தாக்குதல் பற்றி கூறப்படும் போர்க் குற்றங்களை விசாரிக்க
ஐ.நா. கோருபவற்றை இன்னும் கொடுக்கவில்லை என்பதால் போதிய சாட்சியங்கள் இல்லை என்று கூறிய விதத்தில்
இஸ்ரேலுக்கு ஒரு பாதுகாப்பு வழியை நேற்று அளித்துள்ளார்.
இஸ்ரேலும் ஃபத்தா தலைமையிலான பாலஸ்தீனிய அதிகாரமும் கொடுத்துள்ள அறிக்கைகள்
முற்றுப்பெறா நிலையில் இருப்பதாகவும், இரண்டுமே கடந்த ஆண்டு இஸ்ரேலும் ஹமாஸும் போர்க் குற்றங்களில்
ஈடுபட்டது என்று கூறிய கோல்ட்ஸ்டோன் அறிக்கைக்கு விடை கொடுக்கவில்லை என்றும் அவர் கூறினார். கோல்ட்ஸ்டோன்
அறிக்கையை தொடர்ந்து, ஐ.நா. பொதுச் சபை இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இரண்டும் 2008-09
Operation Cast
Lead இன் போது தாங்கள்
நடந்துகொண்ட விதம் பற்றிய சுயாதீன விசாரணைகளை நடத்த வேண்டும் என்று கோரியிருந்தது.
இரு தரப்பினருமே தென் ஆபிரிக்க நீதிபதியான ரிச்சர்ட் கோல்ட்ஸ்டோனின் அறிக்கையில்
குறிக்கப்பட்டிருந்தாலும், இஸ்ரேல் இதைவிட தீவிர குற்றங்களை எதிர்கொள்கிறது. இந்த மோதலில் வேண்டுமென்றே
சாதாரணக் குடிமக்கள், உள்கட்டுமானங்கள் இலக்கு கொள்ளப்பட்தாக குற்றம் சாட்டியுள்ளன: இம் மோதலில்
1,400 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்--இஸ்ரேலியர்கள் 13 என்பது ஒப்பிடத்தக்கது--இதைத்தவிர
21,000 கட்டிடங்களும் அடக்குமாடி வீடுகளுக்கும் மேலாக முழுமையாக அல்லது பகுதியாக தகர்க்கப்பட்டன;
இவற்றுள் 200 முக்கிய ஆலைகளும் அடங்கும்.
பான் கி-மூன் ஹாக்கில் உள்ள சிறப்பு நீதிமன்றம் கூட்டப்பட வேண்டும் என்று
வலியுறுத்தியிருக்கலாம். அவருடைய அறிக்கை நடைமுறையில் தன் போர்க்குற்றங்களுக்கு பொறுப்பு கூறுவதாக
இஸ்ரேல் காட்டிய தொகுப்பை நிராகரிப்பது ஆகும்; ஆயினும்கூட அவர், தனக்கு எதிராக கூறப்பட்டுள்ள
குற்றங்களை முறையாக விசாரித்துள்ளது என்று கருதி இஸ்ரேலைப் புகழ்ந்துள்ளார். இந்த அறிக்கை
அசாதாரணமனது: ஏனெனில் வெளியிடப்பட்டுள்ள இஸ்ரேலின் தொகுப்பில் குறைந்தது ஒரு போர்க் குற்றமாவது
ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. இஸ்ரேல் பலமுறையும் ஒரு குற்றமும் நடக்கவில்லை என்றுதான் கூறிவந்துள்ளது; இந்த
அறிக்கை வெளியிடப்படுவதற்கு சிலநாட்கள்முன்புதான் மற்றொரு குற்றத்திற்கான சான்றுகளும் வந்துள்ளன.
ஜனவரி 20 அன்று தாமதமாக இஸ்ரேல் தன் தொகுப்பை வெளியிட்டு, அதற்கு
எதிராகக் கூறப்பட்ட அனைத்துக் குற்றங்களும் விசாரிக்கப்பட்டன அல்லது விசாரணையில் உள்ளன என்று கூறியது.
இத்தொகுப்பு கோல்ட்ஸ்டோன் அறிக்கைக்கு எதிரான அதன் தற்போதைய தாக்குதலில் ஒரு பகுதியாகும்.
இஸ்ரேலிய இராணுவம் மோதலின் போது நடந்த 150 நிகழ்வுகள் பற்றி விசாரித்ததாகவும், வெள்ளை பாஸ்பரஸ்
குண்டுகளை அது பயன்படுத்தியது "சர்வதேச சட்டத்தின் கீழ் இஸ்ரேலின் கடமையுடன் இணைந்திருந்தது" என்றும்
வலியுறுத்தியது.
ஆனால், இரு மூத்த அதிகாரிகள் காசா நகரத்தில் ஐ.நா. வளாகத்தில் தீ பரவக்
காரணமாக இருந்த பாஸ்பரஸ் குண்டுகளைப் பயன்படுத்தித் தாக்கியதற்கு இசைவு கொடுத்த நடவடிக்கைக்கு
உட்பட்டனர் என்று அறிக்கை கூறியுள்ளது. பிரிகேடியர் ஜெனரல்
Eyal Eisenberg,
கேணல்
Ilan Malka இருவருடைய
பெயர்களும் அறிக்கையில் குறிக்கப்படவில்லை. இவர்கள் இருவரும் தங்கள் பதவி அந்தஸ்து மற்றும் ஊதியத்தை
தொடர்ந்து பெறுவதுடன் எவ்வித விசாரணையையும் எதிர்கொள்ள மாட்டார்கள்.
இந்த நிகழ்வைப் பற்றி ஒப்புக் கொண்டுள்ளதே 48 பக்க கோப்புத் தொகுப்பில்
108 வது பத்தியில்தான் குறிப்படிப்பட்டுள்ளது. ஜெனிவா மரபுகளைமீறி சிவிலிய பகுதிகளில் தீவிர பாஸ்பரஸ் நிறைந்த
குண்டுகளை இஸ்ரேல் பயன்படுத்திய பல நிகழ்வுகளில் இது ஒன்றுதான். குறிப்பிடப்பட்ட நிகழ்வு ஜனவரி 15,
2009ல் நடந்தது. தன் படைகள் "மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தடைக்குட்பட்ட அத்தகைய குண்டுகளை
பீரங்கி மூலம் போர் விதிகளுக்குமீறி போட்டதாவும்" அறிக்கை ஒப்புக் கொண்டுள்ளது. ஆனால் இரு அதிகாரிகள்
வரம்பு மீறி நடந்து கொண்டனர் என்று கூறிவிட்டது.
கடந்த ஆண்டு வந்த அறிக்கை ஒன்று இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் வெள்ளை
பாஸ்பரஸ் அடங்கிய குண்டுகளை போட்டதாகவும், ஆனால் ஆயுதங்கள் தவறாகப் பயன்படுத்தப்படவில்லை என்றும்
ஒப்புக் கொண்டது. சமீபத்திய கோப்புத் தொகுப்பில் பாஸ்பரஸ் ஆயுதங்கள் தொடர்புடைய ஒரே நிகழ்வு இது
ஒன்றுதான். இது இரு பெயர்கூறப்பட்ட அதிகாரிகளின் பிழை என்று கூறுவது அப்பட்டமான பொய் ஆகும்; ஏனெனில்
காசாப்பகுதியில் இஸ்ரேலிய படைகளின் தளபதியாக ஐசன்பேர்க் இருக்கிறார், இருந்தார்.
கோல்ட்ஸ்டோனால் குறிப்பிடப்பட்ட கோப்புத் தொகுப்பில் விளக்கம் கூறப்பட்டுள்ள
மற்றொரு நிகழ்வு எல் படர் மாவு ஆலை தாக்கப்பட்டது ஆகும்; இது "வேண்டுமென்றே, துல்லியமாக" நடத்தப்பட்டது,
"மக்களின் வாழ்வைப் பறிப்பதற்காகவே செயல்படுத்தப்பட்டது" ஜெனிவா மரபுகளை மீறியது என்று ஐ.நா. அறிக்கை
கூறியுள்ளது. இராணுவத்தின் தலைமை வக்கீல் இந்த மாவு ஆலை தரைத்தாக்குதலின்கீழ் நடக்கவில்லை, "துல்லிய வெடிபொருட்களைகளை
வைத்து விமானத்தில் இருந்து போடப்பட்டதற்கான" சான்றுகளும் இல்லை என்று கூறிவிட்டார். இது தொடர்பாக குற்ற
விசாரணைக்கு உத்தரவிட "தக்க காரணம் இல்லை" என்றும் அவர் கூறிவிட்டார்.
ஆனால், ஞாயிறன்று ஜனவரி 31ம் தேதி, பிரிட்டனின்
Independent
நாளேடு ஐ.நா. வின் தொழில்நுட்ப ஆதாரம்
ஒன்று ஆலையின் சொந்தக்காரர்கள் ஒரு சர்வதேச சுரங்க நடவடிக்கைக்குழு மாவு ஆலைக்கு பெப்ருவரி 11,
2009ல் சென்றதாகவும் பொதுவாக இஸ்ரேலிய விமானம்
F16
போட்ட குண்டின் வெடிக்காத ஒன்று ஆலைப்பகுதியில் இருந்து வெடிக்கும் சக்தியை செயலிழக்கச் செய்ததாகவும்
கூறியுள்ளது. பெப்ருவரி 1 அன்று காசாவில் வெடிமருந்துகளை கையாளும் ஐ.நா. சுரங்க நடவடிக்கைக் குழுவானது
விமானத்தில் இருந்து போடப்பட்ட 500 பவுண்ட்
Mk82
குண்டின் எஞ்சிய பகுதிகள் ஆலையில் கடந்த ஜனவரியில் கண்டுபிடிக்கப்பட்டது என்று
கார்டியனிடம் கூறியது.
கார்டியன் கூறியது: "ஐ.நா. சுரங்க
நடவடிக்கைக்குழு கடந்த ஆண்டு ஜனவரி 25 அன்று ஆலையின் மீது விமானம் மூலம் போடப்பட்ட குண்டை அது
அடையாளம் கண்டு பெப்ருவரி 11 அன்று அகற்றியதாகக் கூறியது. "கண்டுபிடிக்கப்பட்ட பொருள்
Mk82
விமானக் குண்டு, 273M
Fuse ஐ க்
கொண்டிருந்தது" என்று குழு கூறியுள்ளது. ஐ.நா.வால் குண்டின் முன் பாதிப் புகைப்படங்கள் இரண்டு அதனிடம்
கொடுக்கப்பட்டிருந்தது.
இஸ்ரேலின் கோப்புத் தொகுப்பு குறைகூறலின்கீழ் இவ்வளவு விரைவில் பின்னடைவைக்
கண்டது பிரதம மந்திரி பின்யமின் நேடன்யாஹுவின் லிகுட் தலைமையிலான கூட்டணி அரசாங்கத்திற்கு ஒரு பெரிய
பின்னடைவு ஆகும். ஆளும் வட்டாரங்களுள் சிலரை இது நேடன்யாஹு குறிப்பிட்டுள்ள "கோல்ட்ஸ்டோன் விளைவு"
பற்றி எதிர்க்கக்கூடிய எந்த நம்பிக்கை பற்றி விவாதிக்கவும் ஒரு நீதித்துறை விசாரணை தேவை என்னும் கருத்தை
ஏற்க வைத்துள்ளது.
ஓய்வு பெற இருக்கும் இஸ்ரேலின் தலைமை அரசாங்க வக்கீல்,
Menachem Mazuz,
Ha'arets
இடம் கோல்ட்ஸ்டோன் அறிக்கை "இஸ்ரேலின் நெறித்தன்மையை அகற்றுவதாகவும்", "அறிக்கை பற்றி ஒரு தீவிர
வல்லுனர் ஆய்வை நடத்தி, அறிக்கையை எதிர்க்கும் நோக்கத்தை இஸ்ரேல் கொண்டிருப்பதாகவும்" கூறினார்.
இஸ்ரேலின் இராணுவத் தலைமை வக்கீலின் சர்வதேச சட்டப் பிரிவின் தலைவரான கேணல்
Prina Sharvit-Baruch,
"நம்முடைய நண்பர்களுக்கு--அவர்கள் நீதிமன்றங்களிலேயே நமக்கு எதிராக
வழக்குகளைப் பதிவு செய்ய விரும்பாதவர்களுக்கு-- நமக்கு எதிராக மற்றய குற்றச்சாட்டுக்களையும் முன்வைக்கும்,
அத்தகைய கூற்றுக்களை அகற்றும் கருவிகளைக் கொடுக்க வேண்டிய நிலைமையில் உள்ளோம். அவர்கள் ஒரு விசாரணைக்
குழு தேவை என்று கருதினால், நாம் அதை அவர்களுக்குக் கொடுப்போம்" என்றார்.
இஸ்ரேலிய அதிகாரிகள் வெளிநாட்டிற்கு சென்றால் போர்க் குற்ற விசாரணைகளை
எதிர்கொள்ளும் உண்மை ஆபத்தை எதிர்கொள்ள வேண்டும் என்ற உண்மையை அறிந்துள்ளனர் என்பதைக் காட்டுகிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் 13ம் தேதி, ஒரு பிரிட்டிஷ் நீதிபதி முன்னாள் இஸ்ரேலிய வெளியுறவு மந்திரியும் தற்பொழுது
எதிர்க்கட்சித் தலைவருமன
Tzipi Livni
க்கு எதிராகப் போர்க் குற்றங்களுக்கு கொடுக்கப்பட்ட கைது உத்தரவை திரும்பப் பெற்றுக் கொண்டார்; அது
அவ்வம்மையார்
Operation Cast Lead
ன் போது போர் மந்திரிசபையில் இருந்தபோது அவர் பங்கு பற்றியது. இரகசிய கைது பிடி ஆணை பற்றி லிவினிக்கு
துப்புத் தகவல் கிடைத்து அவர் பிரிட்டனை விட்டு அகன்று போனார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் 1988
Criminial Justice
Act ன் கீழ், காசா
போரில் அவரின் தொடர்பை ஒட்டி,
இஸ்ரேலின் பாதுகாப்பு மந்திரி எகுட் பாரக்கிற்கு எதிராக பிடி ஆணை
பிறப்பிக்கக் கேட்டுக் கொள்ளப்பட்டது. வெளியுறவு அலுவலகம் அவர் ஒரு பணிபுரியும் மந்திரி, பிரிட்டிஷ்
அதிகாரிகளை காண இருக்கிறார், 1978 அரசாங்க விலக்குச் சட்டத்தின் கீழ் பாதுகாப்பு பெற்றுள்ளார் என்று
வெற்றிகரமாக வாதிட்டு விட்டது.
பிரதம மந்திரி கோர்டன் பிரெளன் மற்றும் பல கபினெட் மந்திரிகளும் லிவினியிடம்
மன்னிப்புக் கோரி "அனைத்தையும் அடக்கும் அதிகார வரம்பின்கீழ்" போர்க்குற்றங்களுக்கு விசாரணை நடத்தும்
வாய்ப்பு உள்ள சட்டத்தை மாற்றுவதற்கு விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.
சர்வதேச சட்டத்தின் மையக் கோட்பாடு அனைத்தையும் அடக்கும் அதிகார வரம்பு
என்பதானது ஜெனிவா ஒப்பந்தத்தால் தடையுத்தரவை கொண்டுள்ளவைகளை கையெழுத்திடும் நாடுகள்
"போர்க்குற்றங்களை செய்ததாகக் கூறப்படுபவர்கள் அல்லது செய்யுமாறு உத்தரவிட்டவர்களை தேடிக்
கண்டுபிடிக்கும் கட்டாயத்தைக் கொண்டவை. அத்தகைய நபர்களை அவர்கள் எந்த நாட்டைச் சேர்நதவர்களாயினும்
அவற்றின் நீதிமன்றங்கள் முன் கொண்டுவர வேண்டும்" என்பது அதில் அடங்கியுள்ளது.
தன் சட்டப்பிரிவுகளை அகற்றும் பிரெளன் அரசாங்கத்தின் உறுதிமொழி அனைத்து
பெரும் சக்திகளின் குற்றம் சார்ந்த நடவடிக்கைகளும் முன்னர் ஏற்கப்பட்டிருந்த சட்டபூர்வ வழிவகைகளுடன் இயைந்திரா
என்பதை நிரூபிக்கிறது. ஆனால்
Crime and Security Bill
ன் பகுதியாக சட்டத்தை திருத்துவது என்பது, பாராளுமன்றத்தில் பெப்ருவரி 23 அன்று வரவுள்ளது, குழு கட்டத்திலேயே
பல இடர்பாடுகளைக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
எந்த தாமதமும் தீவிர இராஜதந்திர நிகழ்விற்கு வகை செய்துவிடும். இந்த வாரம்
லிவினி Jewish
Chronicle டம் தான்
இங்கிலாந்திற்குத் திரும்பிச் சென்று இங்கிலாந்தின் கைது பிடி ஆணைகளுக்கு சவால் விட்டு, "ஒவ்வொரு இஸ்ரேலியரின்
உரிமை தடையின்றி பயணிப்பது" என்பதை நிரூபிக்க உள்ளதாக கூறினார். பெப்ருவரி 23ம் தேதிக்கு பின்னர் அங்கு
செல்வதற்கான பல அழைப்புக்களை தான் பரிசீலிக்க இருப்பதாகவும் அவர் கூறினார்.
லிவ்னியின் அச்சுறுத்தல்கள் கோல்ட்ஸ்டானுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள பொதுவான
கடினப் போக்கை ஒட்டித்தான் உள்ளன. பாதுகாப்பு மந்திரி எகுட் பாரக் பெப்ருவரி 1ம் தேதி கோல்ட்ஸ்டோன்
அறிக்கை "ஒருதலைப்பட்சமானது, ஏமாற்றுத்தனமானது" என்று கூறினார்.
Operation Cast Lead
பற்றி ஒரு விசாரணைக்குழு நிறுவப்படுவது பற்றி அவர் எதிர்ப்புத் தெரிவித்து, அதற்குப் பதிலாக "ஒரு நீதிபதிகள்
குழு அடுத்த முறை நாங்கள் எப்படித் தாக்குதல் நடத்துவது என்பது பற்றி முடிவு செய்யலாம்" என்று வலியுறுத்தியுள்ளார்.
IDF
யின் தலைமைப்படைத் தலைவர் லெப்டினென்ட் ஜெனரல் கபி ஆஷ்கெனசி கூறினார்: "நாம் கோல்டன் அறிக்கை எமக்கு
ஏற்படுத்தியுள்ள மாறுதல்களைப்பற்றி கவனிக்க வேண்டும், ஆனால் ஒரு விசாரணைக் குழு நிறுவப்பட்டிருப்பதுடன்
அல்ல."
அவருடைய துணைப் படைத்தலைவர் மேஜர் ஜெனரல் பென்னி காண்ட்ஸ், கோல்ட்ஸ்டோன்
அறிக்கை "ஒரு டிராஜன் குதிரைபோல், இறுதியில் சட்ட ஊகத்தில் எம்மை தள்ளிவிடும் ஆபத்தைக் கொண்டுள்ளது. மேற்குடன்
நாம் நிறைய மதிப்புக்களை பகிர்ந்து கொள்கிறோம் என்றாலும் அடிப்படை வேறுபாடு உள்ளது என்பதை இஸ்ரேல்
தெளிவாக்க வேண்டும். ஒரு போர்ப்பகுதியில் மதிப்பீடுகளுடன் நாம் வாழ்கிறோம். இத்தகைய தாக்குதல் வேறுவிதத்தில்
விடையிறுக்க அனுமதிக்கவில்லை. இந்த அச்சுறுத்தலை நாம் அகற்ற வேண்டும்." |