World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

A dangerous rise in US-China tensions

அமெரிக்க-சீன அழுத்தங்களில் ஆபத்து மிகுந்த அதிகரிப்பு

John Chan
5 February 2010

Back to screen version

கடந்த வெள்ளியன்று தைவானுக்கு 6.4 பில்லியன் டாலர் ஆயுத விற்பனையை அமெரிக்கா அறிவித்துள்ளது தீவிர எதிர்ப்பை சீனாவிடம் தூண்டியுள்ளதுடன், இரு பெரிய சக்திகளுக்கு இடையே அழுத்தங்களை குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்துள்ளது. விளைவுகளை பற்றிக் கவலைப்படாமல் இரு புறத்திலும் கடுமையான நிலைப்பாட்டை எடுக்கும் உறுதி இராஜதந்திர, அரசியல் உறவுகளில் வெளிப்படையான பிளவு என்னும் தோற்றத்தை எழுப்புகிறது.

அமெரிக்காவை பொறுத்த வரையில், சீனாவிடம் எதிர்ப்பு இருக்கும் என்பதை நன்கு அறிந்தும் ஆயுத விற்பனை பற்றிய முடிவை அறிவித்திருப்பது, பெய்ஜிங்கின் பெருகும் உலகப் பொருளாதார, அரசியல் செல்வாக்கை எதிர்கொள்ளும் திட்டமிட்ட நடவடிக்கையாகும். நியூ யோர்க் டைம்ஸில் திங்களன்று வந்த கட்டுரை ஒபாமா நிர்வாகம் "எதிரியை பின்வாங்க செய்ய" தொடங்கிவிட்டது என்று அறிவித்துள்ளது. ஆயுத விற்பனைத் தொகுப்பை அறிவித்த அளவில், அமெரிக்கா " சீனா, தாய்வான், மஞ்சூரியா தாய்வான் ஆகியவற்றின் சட்டபூர்வமான அரசு சீனாதான் என்ற ஒரு சீனா என்ற கொள்கையை 1972ல் அமெரிக்கா உறுதிப்படுத்திய பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே இருக்கும் இராஜதந்திர பிரச்சினையில் மிகுந்த உணர்வு பூர்வ இதயத்தானத்தை நேரடியாக தாக்கும் விதத்தில் உள்ளது." என்றும் அது எழுதியுள்ளது.

"பெய்ஜிங்கும் தைவானும் தங்கள் உறவுகளில் ஓரளவு சமாதானப்படுத்துகையில், 2008ல் ஜனாதிபதி புஷ் இதே போன்ற தைவானுக்கான ஆயுத விற்பனை கொடுத்ததை விரைவில் தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளமை பெய்ஜிங்கை இருமடங்கு சீற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது" என்று நியூ யோர்க் டைம்ஸ் விளக்கியுள்ளது. அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஹில்லாரி கிளின்டன், அணுவாயுத திட்டங்கள் பற்றி ஈரானுக்கு எதிராக புதிய அபராதங்களுக்கு பெய்ஜிங் ஒப்புக் கொள்ளாததற்கு பகிரங்கமாக குறைகூறிய அன்றே அறிவிப்பு வெளிவந்துள்ளது. வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல், ஒபாமாவிற்கும் திபெத்திய தலாய் லாமாவிற்கும் இடையே சீனாவின் எதிர்ப்புக்களையும் மீறி பேச்சுக்கள் நடக்கும் என்று வலியுறுத்திய வகையில் வாஷிங்டன் நடந்து கொண்டுள்ளது.

ஈரானுக்கு எதிராக ஒரு கடுமையான நிலைப்பாட்டை எடுக்க ஏற்க மறுக்கும் சீனாவின் நிலைப்பாடும் வாஷிங்டனின் திகைப்பை தூண்டும் பிரச்சினைகளில் ஒன்றாகும். சென்ற ஆண்டு பெய்ஜிங்கிற்கு சென்றிருக்கையில் ஒபாமா சீனத் தலைவர்களிடம் டாலருக்கு எதிராக யுவான் மறுமதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்றும், கார்பனீரொட்சைட்டு (CO2) வெளியேற்றம் பற்றி உறுதியான வரம்புகள் இருக்கவேண்டும் என்று அழுத்தம் கொடுத்தார். நாணய மறு மதிப்பீடு பற்றி அமெரிக்க ஜனாதிபதிக்கு மூக்குடைப்பு இருந்தது மட்டும் இல்லாமல் நேர்த்தியான பொருளாதார நிர்வாகம் பற்றி அவருக்கும் உபதசேமும் கொடுக்கப்பட்டது. கொபன்ஹாகன் சுற்றுச் சூழல் உச்சிமாநாட்டில் சீனப் பிரதமர் சுட்டிக்காட்டிய வகையில் ஒபாமாவிற்கு மூக்குடைப்பு கொடுத்து, முக்கிய, கடைசி நிமிட பேச்சுக்களுக்கு குறைந்த தர அதிகாரிகளை அனுப்பினார்.

சீனாவிற்கு குறிப்பிடத்தக்க வகையில் உணர்வைத் தூண்டும் விதத்தில் வாஷிங்டன் "திருப்பித்தாக்க" விரும்புகிறது. New America Foundtion ன் வெளியுறவு கொள்கை இயக்குனர் Steve Clemonjs நியூ யோர்க் டைம்ஸிடம், "இப்பொழுதெல்லாம் சீனா பெரும் நம்பிக்கையுடன் உள்ளது; ஆனால் இறைமை பிரச்சினைகளில் தொடர்ச்சியாக சீனா மாறுபட்ட கருத்துக்களை கொண்டுள்ளது.... தைவான் அல்லது திபெத் தொடர்புடைய எதுவுமே அவர்களுக்கு கடும் கோபத்தைக் கொடுக்கும்."

தைவானை, பெய்ஜிங் எதிர்த்து பிரிந்த மாநிலம் என்றுதான் கருதுகிறது; தைப்பை முறையாகச் சுதந்திரப் பிரகடனம் செய்தால் அதன்மீது படையெடுப்பதாகவும் அச்சுறுத்தியுள்ளது. 1949 சீனப் புரட்சிக்கு பின்னர் கோமின்டாங் தீவில் சர்வாதிகாரத்தை நிறுவியதற்கு வாஷிங்டன் ஆதரவு கொடுத்தது. ஆனால் 1972ல் சீனாவுடன் சமரசத்தைக் கொண்டது. இந்த ஏற்பாடு எப்பொழுதும் முரண்பாடுகளை கொண்டிருந்தது. தைவான் உட்பட ஒரு சீனா என்பதின் மீது பெய்ஜிங்கின் கட்டுபாட்டை அமெரிக்கா அங்கீகரித்தது, ஆனால் பலவந்த மறு இணைப்பு என்பதை தொடர்ந்து எதிர்ப்பதுடன், சீனாவின் எதிர்ப்புக்களையும் மீறி தைப்பையிற்கு ஆயுதங்களையும் விற்கிறது.

தைவான் மீது குறிப்பிடத்தக்க வகையில் சீனா உணர்ச்சி வசப்படுகிறது. ஏனெனில் சுதந்திரத்திற்காக அது எடுக்கும் எந்த நடவடிக்கையும் திபெத் மற்றும் ஜிங்கியாங் மாநிலத்தில் உய்குர் மக்கள் உட்பட சீனாவின் மற்ற பகுதிகளில் பிரிவினை இயக்கங்களுக்கு ஊக்கம் கொடுக்கும். அமெரிக்கா முதலில் கடந்த மாதம் தைவானுக்கு ஆயுத விற்பனை பற்றி குறிப்பு காட்டியவுடன், பெய்ஜிங் தன்னுடைய மகிழ்ச்சியின்மையை விண்வெளியில் இயக்கப்பட்ட ஏவுகணையை, ஏவுகணை எதிர்ப்பு முறை மூலம் அழித்துச் சோதித்த வகையில் வெளிப்படுத்தியது.

கடந்த வார அறிவிப்பைத் தொடர்ந்து, சீன ஆட்சி ஆயுத விற்பனையில் தொடர்பு கொண்டுள்ள அமெரிக்க நிறுவனங்களுக்கு எதிராக பொருளாதாரத் தடைகள் என்ற முன்னோடியில்லாத நடவடிக்கையை எடுத்தது. இந்த நடவடிக்கை முக்கிய அமெரிக்கப் பெருநிறுவனங்களான Boing, United Technologies, Lockhueed Martin, Raytheon ஆகியவற்றின்மீது பாதிப்பைக் காட்டும். தன் போட்டி நிறுவனமான Airbus க்கு 2028 ஐ ஒட்டி 400 பில்லியன் டாலர் மதிப்புடைய 3,700 புதிய விமானங்கள் விற்பனையை இழக்கக்கூடும் என்று போயிங் கவலைப்படுகிறது. அமெரிக்காவுடன் இராணுவ பரிமாற்றங்களுக்கு உடனடி முடக்கத்தையும் சீனா அறிவித்ததோடு பெய்ஜிங்கில் அமெரிக்க தூதரை அழைத்து ஒரு முறையான எதிர்ப்பையும் வெளியிட்டது.

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கு இடையே உள்ள வணிக அழுத்தங்கள் ஏற்கனவே அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. சீன எஃகு பொருட்கள், டயர்கள் மீது வாஷிங்டன் சுமத்தியுள்ள காப்புவரிகள் தொடர்பாக பெய்ஜிங் சீற்றம் கொண்டுள்ளது; தானும் பதிலடி கொடுப்பேன் என்று அச்சுறுத்தியுள்ளது. ஆனால் ஜனாதிபதி ஒபாமா செனட்டின் ஜனநாயகக் கட்சியினரிடம் இந்த வாரம் அவருடைய நிர்வாகம் "இருக்கும் வணிக விதிகளை செயல்படுத்துவதில் கூடுதல் கடினப் போக்கு காட்டும் என்றும், சீனாவின் மீதும் மற்றைய நாடுகள் மீது அவர்கள் சந்தைகளை இருபுறவர்த்தகத்திற்கு திறந்துவிட தொடர்ந்த அழுத்தம் கொடுக்கும்" என்றும் கூறினார். இந்த சூடான சூழ்நிலையில் போயிங் மீது சீனத் தடைகள் ஒரு முழு வணிகப் போரை தூண்டக்கூடும்.

இப்படி அழுத்தங்கள் பெருகுவது பூகோளஅரசியலில் உள்ள ஆழ்ந்த மாற்றங்களின் வெளிப்பாடு ஆகும். சரிந்து கொண்டிருக்கும், ஆனால் இன்னும் மேலாதிக்க சக்தி என்னும் முறையில் அமெரிக்கா பெருகிய பொருளாதார, மூலோபாய அறைகூவல்களை எழுச்சி பெற்று வரும் சீனாவிடம் இருந்து உலகின் ஒவ்வொரு மூலையிலும் காண்கிறது. ஏனெனில் பெய்ஜிங்கும் மூலப்பொருட்களையும் சந்தைகளையும் தீவிரமாக நாடுகிறது. ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் அதன் புதிய காலனித்துவ வகை ஆக்கிரமிப்புக்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் அமெரிக்கா ஆக்கிரோஷமாக ஈடுபட்டுள்ளது. மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவில் உள்ள முக்கிய எரிபொருள் (Energy) செழிப்பு உள்ள பகுதிகளில் தன் மேலாதிக்கத்தை நிறுவும் முயற்சிதான் இது. சீனா தன் சொந்த கூட்டுகளை ஒருங்கிணைத்து, மத்திய ஆசியாவின் "கொல்லைப்புறம்" எனக் கருதப்படும் இடங்களில் தனக்கு முக்கிய எண்ணெய், எரிவாயு தேவையை உறுதி செய்ய அமெரிக்காவை ஒதுக்க முற்படுகிறது.

உலக நிதிய நெருக்கடிக்கு நடுவே, ஓராண்டிற்கு முன் அதிகாரத்தை எடுத்துக் கொண்ட பின் ஓபாமா சீனாவின் உதவியை நாடினார். பெரும் பற்றாக்குறைகளை எதிர்கொண்ட நிலையில் ஒபாமாவின் அதிகாரிகள் பெய்ஜிங்கை அமெரிக்கப் பத்திரங்களை தொடர்ந்து வாங்குமாறு முறையிட்டு G20 குழுவில் பெய்ஜிங்கையும் விவாதங்களுக்கு அழைத்து வந்தனர். சில நம்பிக்கையாளர்கள் ஒரு G2 (அமெரிக்க, சீனா) உலகின் பொருளாதார மற்ற பிரச்சனைகளை ஒத்துழைப்பு உணர்வில் தீர்க்க அமைக்கப்படலாம் என்றும் ஊகித்தனர்.

இப்பொழுது அமெரிக்கா கொண்டிருக்கும் மோதல் அணுகுமுறை, சீனாவின் உறுதியான விடையிறுப்பு ஆகியவை இரு நாடுகளிலும் முதலாளித்துவ வர்க்கம் எதிர்கொள்ளும் தீர்க்க முடியாத பொருளாதார, அரசியல், சமூக முரண்பாடுகளை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. இரட்டை இலக்க விகித வேலையின்மை உள்நாட்டிலும், பெரும் வரவு-செலவுத் திட்ட குறைப்புக்களை செய்ய வேண்டிய தேவை இருக்கும் நிலையில், ஒபாமா சீனாவின் இழப்பில் அமெரிக்க பொருளாதாரத்திற்கு நலன் கொடுக்கும் வகையில் சீனத் துருப்பை பயன்படுத்துவதுடன் அரசியல்ரீதியாக அவரது நிர்வாகம் அமெரிக்காவின் ஆழ்ந்த சமூக நெருக்கடிக்குக் கொண்டுள்ள பொறுப்பையும் திசை திருப்ப முயல்கிறார்.

சீனாவைப் பொறுத்த வரையில் வளர்ச்சி விகிதத்தில்"ஏற்றம்" இருந்தாலும், பெய்ஜிங் உயர்ந்த வேலையின்மை மற்றும் சமூக அமைதியின்மை அதிகரிப்பு ஆகியவற்றை எதிர்கொண்டுள்ளது. அதன் முக்கிய ஏற்றுமதித் தொழில்கள் பொருளாதார பாதுகாப்புவாத நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டால் அவை கூடுதல் தீய விளைவுகளைக் கொடுக்கும். ஆட்சியின் மிகப் பெரிய ஊக்கப் பொதி நடவடிக்கைகள் சொத்துத்துறையிலும், பங்கு வியாபாரத்திலும் ஊகக் களிப்புக்களுக்கு இட்டுச் சென்று, ஒரு நிதியச் சரிவு ஏற்படுமோ என்ற அச்சத்தை உயர்த்தியுள்ளன. ஒபாமாவைப்போலவே சீனத் தலைவர்கள் தீவிர தேசியவெறி என்னும் துருப்பைப் பயன்படுத்தி உலகின் மிக அதிக சமூக சமத்துவமற்ற நிலையைத் தோற்றுவிப்பதில் அவர்களுக்கு இருக்கும் பங்கை மறைத்துக்கொண்டு சீனாவின் நலன்களை பாதுகாப்போம் என அறிவிக்கின்றனர்.

உண்மையான ஆபத்து, தைவான், திபெத் அல்லது மற்றைய பிரச்சினைகள் உறவுகள் விரைவில் உடைவதற்கான முக்கியபுள்ளியாகி, 1930 களில் கடைசி மிகப்பெரிய முதலாளித்துவ நெருக்கடிக் காலத்தில் நடைபெற்றது போல் வணிகப் போருக்கும் இறுதியில் இராணுவ மோதலாக வெடிக்கக்கூடும் என்பதுதான்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved