WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
Bankers defiant at Davos World Economic Forum
டாவோஸ் உலகப் பொருளாதார அரங்கில் வங்கியாளர்களின் எதிர்ப்பு
Stefan Steinberg
4 February 2010
Use this version
to print | Send
feedback
1930களில் இருந்து உலக முதலாளித்துவத்தை தாக்கிய மிகப்பெரிய நிதிய
நெருக்கடிக்கு இரு ஆண்டுகளுக்கு பின்னரும் கடந்தவாரம் ஸ்விட்சர்லாந்தின் டாவோஸில் உலகப் பொருளாதார
அரங்கில் சர்வதேச வங்கியாளர்கள் பல மில்லியன் கணக்கான வேலை இழப்புக்கள், முன்னோடியில்லாத அளவிற்கு
அரசாங்கங்களின் கடன் தரத்தை உயர்த்திய ஊக நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் எந்த முயற்சியையும் தாங்கள்
எதிர்பபோம் என்று தெளிவுபடுத்தியுள்ளனர்.
"ஒரு இரட்டை" மந்தநிலை பற்றிய எச்சரிக்கை அடையாளங்கள், வணிகப் போர்,
முழு நாடுகளும் திவாலாகுதல் ஆகியவை ஆண்டுதோறும் நடக்கும் டாவோஸ் நடவடிக்கைகளின் பின்னணியாயின. உலகின்
முக்கிய வங்கியாளர்களும் உயர் நிர்வாக அதிகாரிகளும் தங்கள் வணிக மூலோபாயங்கள் உயர்மட்ட அரசியல்வாதிகளுடனும்
பொருளாதார வல்லுனர்களுடனும் கடந்த 40 ஆண்டுகளாக விவாதித்து வருகின்றனர்.
அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே நடக்கக்கூடிய வணிகப்போர் பற்றிய அச்சம்
ஜனாதிபதி ஒபாமாவின் தலைமைப் பொருளாதார வல்லுனர் லாரி சம்மர்ஸ் டாவோஸில் கூறிய கருத்துக்களால்
தூண்டுதல் பெற்றது. சீன மத்திய வங்கியின் துணை மந்திரியான
Sbu Min உடன்
ஒரு குழு விவாதத்தில் சம்மர்ஸ் சீனாவின் வணிகம், நிதியக்கொள்கைகள் பற்றித் தாக்கி இதற்குப் பதிலிறுக்கும்
வகையில் அமெரிக்கா பொருளாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்கத் தயார் என்று எச்சரித்தார்.
உலகெங்கிலும் அரசாங்கங்கள் பொருளாதாரத்திற்குள் மிகப்பெரிய நிதியை
உட்செலுத்துவதின் விளைவுகளை சுட்டிக்காட்டிய ஹார்வர்ட் பல்கலைக்கழக பொருளாதாரப் பேராசிரியர்
Kenneth Rogoff
தங்கள் 30 வயதுகளில் இருப்பவர்களுக்கு "இது மிக மோசமான விளைவுகளை உங்களுக்குத் தரும்" என்று
அப்பட்டமாக அறிவித்தார். ஜேர்மனியப் பொருளாதாரத்தின் பெரும்கடன் தன்மையைக் குறித்துப் பேசிய
Rogoff
அரங்கிலிருந்த ஒரு இளம் ஜேர்மானியரிடம் ஜேர்மனியின் கடன் வெடிக்கும் என்றும் மிகக் கடுமையான சிக்கன
நடவடிக்கைகளுக்கு மாற்றீடு ஏதும் இல்லை என்றும் கணிசமாக வரிவிதிப்பு அதிகம் தேவை என்றும் கூறினார். "இது
மிக, மிக வேதனை கொடுக்கும்" என்று Rogoff
கூறினார்.
தங்கள் நடவடிக்கைகளால் ஏற்பட்டுள்ள பேரழிவு விளைவுகளை குறித்து வங்கியாளர்கள்
மாநாட்டில் கொடுத்த விடையிறுப்பு தங்கள் இலாப முறைகள், பல மில்லியன் டாலர்கள் மேலதிக
கொடுப்பனவுகளை கொடுத்தல் ஆகியவற்றை ஒன்றாக ஆதரித்தது ஆகும். சர்வதேச நிதியத்தின் பிரபுக்கள் கடந்த
இரு ஆண்டுகளின் நிகழ்வில் இருந்து எடுத்துக் கொண்ட படிப்பினை தங்களை பிணை எடுக்க தத்தம் அரசாங்கங்கள்
நிபந்தனையற்ற ஆதரவை கொடுக்கும் என்பதை நம்ப முடியும் என்பதுதான்.
Carlyle Group LP இணை
நிறுவனர் David Rubenstein
மற்றும் நியூயோர்க் பல்கலைக்கழகப் பேராசிரியர்
Nouriel Roubini க்கும் இடையே நடந்த விவாதம் இதைச்
சுருக்கமாகக் கூறியது. Rubenstein
கூறினார்: "நாங்கள் பல இதயத் தாக்குதல் மற்றும் மோசமான இதயத்தாக்குதல்களை கடந்துள்ளோம், ஆனால்
இன்னும் பலவற்றிலும் மடிந்துவிட மாட்டோம், எனவே நாங்கள் நிறைய கற்றுக் கொண்டுள்ளோம்."
அரசாங்கத்தின் ஆதரவின் விளைவினால் ஊக வாய்ப்புக்கள் இதுகாறும் இருந்ததைவிடச்
சிறந்தைவை என்பதுதான் Rubenstein
கற்ற படிப்பினை ஆகும். இப்பொழுது முதலீடு செய்வதற்கு "மிகச் சிறந்த நேரம்" என்றும் தன்னுடைய முதலீட்டுக்
குழு 2009 ஆண்டு "இந்த தசாப்தத்திலேயே நாங்கள் மேற்கொண்ட மிகச் சிறந்த நடவடிக்கைகள் ஆண்டாக
நிரூபணம் ஆகும்" என்று பெருமை பேசிக் கொண்டார்.
டாவோஸ் கூட்டத்தில் முக்கிய விவாதங்களில் ஒன்று வங்கித்துறையில் சில
நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் திட்டங்கள் ஆகும். சமீபத்தில் ஒபாமா முன்வைத்துள்ளதைப் போல். இத்தகைய
திட்டங்கள் பெரும்பாலான ஊக வணிகத்தை பாதிக்காது என்பதை வங்கியாளர்கள் நன்கு அறிவர். இவை
பொதுமக்களை திருப்தி செய்ய கூறப்படுவது என்றும் அறிவர். ஒரு அமெரிக்க வர்ணனையாளர் குறிப்பிட்டபடி,
வங்கிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் எந்த திட்டமும் "அரசியல்வாதிகள் சுவர்க்கத்திற்கு செல்வதில் என்ன
வாய்ப்பு கொண்டுள்ளனரோ, அந்த அளவு வெற்றிவாய்பபைத்தான் கொண்டுள்ளன."
டாவோஸ் மாநாடு பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி வழங்கிய
உரையுடன் தொடங்கியது. அவர் வங்கிகள்மீது சர்வதேசக் கட்டுப்பாட்டு பிரச்சினையை எழுப்பினார்.
வங்கியாளர்களின் பேராசையை குறைகூறிய சார்க்கோசி வங்கிகள் உரிமையாளர் முறையில் நடத்தும் வணிகத்திற்கு
தடை வேண்டும் என்னும் ஒபாமா நிர்வாகத்தின் திட்டத்திற்கு முழு ஆதரவைத் தெரிவித்தார். மேலும் இரண்டாம்
உலகப் போர் முடிவில் அமெரிக்க பொருளாதார மேலாதிக்கத்தை நிலைநிறுத்திய சர்வதேச உடன்பாடுகளைக்
குறிப்பிட்ட வகையில் ஒரு புதிய பிரெட்டன் வூட்ஸ் முறை தேவை என்றும் அழைப்பு விடுத்தார். தன்னுடைய
முன்னுரிமை, முதலாளித்துவத்தை காத்தல், அதைப் புதைத்தல் அல்ல என்பதை வலியுறுத்தவும் அவர் முயன்றார்.
பிரெஞ்சு ஜனாதிபதியின் வலுவான உரை, நிதிய நபர்களால் அதிக உவப்புடன்
ஏற்கப்படவில்லை. சார்க்கோசி கருத்துக்களுக்கு விடையிறுக்கமாறு கோரப்பட்டதற்கு அமெரிக்கத் தளத்தை
கொண்ட Standard Bank
ன் தலைமை நிர்வாக அதிகாரி Jacko Maree
"இத்தகைய திட்டங்கள் பல அரசியல் ரீதியாக சுவையுடயவை,
நடைமுறையில் ஒவ்வாதது" என்றார்.
டாவோஸில் வங்கியாளர்கள் கொண்ட பிடிவாத நிலைப்பாட்டை ஜேர்மனியின் மிகப் பெரிய
வங்கியான Deutsche Bank
ன் தலைமை நிர்வாகி Josef Ackerman
வழிநடத்தினார். அவரைத் தொடர்ந்து பிரிட்டனின் பெரிய வங்கிகளில் ஒன்றான
Standard Chartered
ன் தலைமை நிர்வாகி
Peter Sands
இருந்தார்.
ஒரு குழு விவாதத்தின் பார்வையாளர்களிடம்
Ackermann
"குறைகூறும் விளையாட்டை" நிறுத்தும் நேரம் வந்துவிட்டது என்றார். பெரிய வங்கிகள் கடன் கொடுப்பதை இன்னும்
குறைக்கும் என்று அதிகம் மறைக்கப்படாத அச்சுறுத்தலைக் கொடுத்த அவர், "ஒரு வலுவான நிதியப் பிரிவு இல்லை
என்றால், நீங்கள் பெரும் தவறு செய்வீர்கள், அதைப்பற்றிப் பின்னர் வருத்தம் அடைவீர்கள்" என்று எச்சரித்தார்.
Ackermann இன்
கருத்துக்களைத்தான் Sands
இன் கருத்துக்களும் எதிரொலித்தன. அரசாங்கங்களால் தற்பொழுது
"மிகப்பெரியவை, தோல்வியுறாது" எனக் கருதப்படும் வங்கிகளை பிரிக்கும் முயற்சிக்கு ஆதரவு கொடுக்கிறாரா
என்று கேட்கப்பட்டதற்கு, "ஐயத்திற்கு இடமின்றி விடை 'இல்லை'" என்பதுதான் என்றார்.
மாநாட்டிலேயே
Ackermann வங்கி உயர் நிர்வாக அதிகாரிகள் கூட்டம் ஒன்றில்
தங்கள் நடவடிக்கைகள் மீது எவ்வித வரம்பையும் எதிர்க்கும் பொது மூலோபாயம் பற்றி விவாதிக்க பங்கு கொண்டார்.
சனிக்கிழமை அன்று அவரும் மற்ற முக்கிய வங்கியாளர்களும் பிரான்ஸ், பிரிட்டன் வெளியுறவு மந்திரிகள், ஐரோப்பிய
மத்திய வங்கி தலைவர் Jean-Claude Trichet,
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF)
நிர்வாக இயக்குனர் Dominique Strauss-Kahn
ஆகியோருடம் இரகசிய விவாதங்களுக்கு கூடினார். அதில் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரும் மன்ற நிதியப்பணிக்குழுவின்
தலைவருமான Barney Frank
ம் கலந்து கொண்டார்.
பேச்சுக்கள் பற்றி விவரங்களை வெளியிட மறுத்த
Ackermann,
இருக்கும் ஒற்றுமை உணர்வைப் பாராட்டிய விதத்தில் "வணிகத் தலைவர்கள், அரசியல் மற்றும் கட்டுப்பாட்டுத்
தலைவர்கள் இடையே இதைவிடச் சிறந்த உரையாடல் நடந்ததில்லை" என்று அறிவித்தார்.
டாவோஸ் அரங்கிற்கு இரு நாட்கள் முன்பு ஜேர்மனிய மத்திய நிதிய கண்காணிப்பு
அலுவலகம் கடன்வாங்கிய பத்திரங்களின் விற்பனைக்கு (short
selling) ஜேர்மனியில் இருந்த தடையை அகற்றியது. இந்த
வகை ஊகம் ஜேர்மனிய கட்டுப்பாட்டு அதிகாரத்தால் செப்டம்பர் 2008ல் சர்வதேச நிதிய நெருக்கடி வந்தபின்
தடை செய்யப்பட்டிருந்தது.
டாவோஸில் வங்கியாளர்கள் காட்டிய திமிர்த்தன்மையின் அளவு அவர்களுடைய
கோரிக்கைகளுக்கு முற்றிலும் அடிபணிந்த ஒரு அரசியல் பிரிவிற்கு அவர்கள் காட்டிய இகழ்வுக்கு சமமாக இருந்தது.
டாவோஸில் நடந்த தனி விவாதங்கள் முதலாளித்துவ அரசாங்கங்கள் வங்கி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் எந்தத்
திட்டங்களும் வெறும் வெளிவேசமாகத்தான் இருக்கும் என்பதைத் தெளிவாக்கியுள்ளன.
கடந்த இரு ஆண்டுகள் வங்கிகள் மற்ற பெரிய நிதிய நிறுவனங்கள் கொண்டுள்ள
மகத்தான அரசியல் செல்வாக்கையும் அவற்றின் சமூகரீதியான அழிப்புத் தன்மையையும் வெளிப்படுத்தியுள்ளன. நிதியத்
தன்னலக்குழுக்களின் அபகரிப்புத் தன்மையை தடுத்து, வங்கிகளை பொது நிறுவனங்களாக தொழிலாள வர்க்கத்தின்
ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் சோசலிச அஸ்திவாரங்களில் உலகப் பொருளாதாரத்தை மாற்றுவதின் ஒரு
பகுதியாக கொண்டுவருவதின் மூலம்தான் ஆழ்ந்த சமூகப் பேரழிவு தடுக்கப்படும். |