WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
Haitian president says 170,000 bodies recovered
170,000 சடலங்கள் மீட்கப்பட்டதாக ஹைட்டி ஜனாதிபதி கூறுகிறார்
By Bill Van Auken
29 January 2010
Use this
version to print | Send
feedback
ஹைட்டிய ஜனாதிபதி Réne
Préval புதனன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் ஜனவரி 12
நிலநடுக்கத்திற்கு பின்னர் கிட்டத்தட்ட 170,000 சடலங்கள் மீட்கப்பட்டதாக கூறினார். இன்னும் பல சடலங்கள்
இடிபாடுகளுக்கு இடையே இருப்பதுடன், பல அரசாங்கத்தால் எண்ணப்படாமலேயே புதைக்கப்படுகின்றன. மொத்தம்
இறந்தவர்கள் 300,000 என்று இருக்கக்கூடும் என்று மதிப்பீடுகள் கூறுகின்றன.
பேரழிவு நடந்து இரு வாரங்களுக்கு பின்னர் பாதிப்பில் தப்பித்தவர்களில்
பெரும்பாலானவர்கள் குறிப்பிடத்தக்க உதவியை இன்னும் பெற வேண்டியுள்ளது.
ஹைட்டிய மக்களை பொறுத்தவரையில் நிலநடுக்கம் ஏற்பட்டு முதல் இரு வாரங்கள்
Préval
கிட்டத்தட்ட கண்ணுக்கு புலனாகாமல் போனதுடன், மக்களுடைய இழிவுணர்விற்கு ஆட்பட்டுள்ளார். ஏனெனில் அவருடைய
வெளிப்படையான செயலற்ற தன்மை மற்றும் முக்கியத்துவமற்றதன்மையும் நாட்டை அமெரிக்க இராணுவம் கட்டுப்பாட்டிற்குள்
எடுத்துக் கொள்ள வைத்துவிட்டன.
புதனன்று நடந்த செய்தியாளர் கூட்டம் அத்தகைய தோற்றத்தை மாறுபடுத்த அமைக்கப்பட்டது.
ஹைட்டியின் மீது ஆதிக்கநாடு போன்ற நிலையை வாஷிங்டன் சுமத்திவிட்டதா என்ற வினாவை அவர் உதறித்தள்ளினார்.
ஹைட்டியின் இறைமைமீது நாட்டின் விமான நிலையங்கள், துறைமுகங்கள் ஆகியவற்றின்மீது ஒருதலைப்பட்சமாக
15,000க்கும் மேற்பட்ட அமெரிக்க இராணுவத்தினர் கைப்பற்றியது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்று
நம்ப முடியாத அளவிற்கு கூறினார்.
முன்பு அமெரிக்க ஆக்கிரமிப்பிலுள்ள விமான நிலையத்திற்கு அருகே இருந்த காவல் நிலையத்தில்
இருந்த தன்னுடைய அலுவலகங்களை மாற்றிக் கொண்டிருப்பதாகவும், சரிந்துவிட்ட தேசிய அரண்மனைக்கு மீண்டும் மாற்றப்பட
உள்ளன என்றார். பிந்தைய இடமும் அமெரிக்க 82வது பிரிவு விமானப் பிரிவின் துணைத்துருப்புக்களின் பாதுகாப்பிற்கு
உட்பட்டது. ஆனால் வீடுகளை இழந்த
Port-au-Prince மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள பெரும்
தற்காலிக முகாம்களுக்கு அருகே உள்ளது.
பெப்ருவரி 28ம் தேதி நடக்க இருந்த, தேசிய சட்டமன்றத் தேர்தல்களை
அரசாங்கம் காலவரையின்றி ஒத்தி வைப்பதாகவும் ஜனாதிபதி அறிவித்தார். நிலநடுக்கத்திற்கு முன்பு அரசாங்கம்
Fanmi Lavalas
கட்சியை தேர்தலில் பங்கு பெறக்கூடாது என்று தடை செய்திருந்தது. அது
முன்னாள் ஜனாதிபதி Jean-Bertrand Aristide
க்கு ஆதரவு கொடுத்திருந்தது. அவர் CIA
ஆதரவைக் கொண்டிருந்த 2004 ஆட்சி சதியில் அகற்றப்பட்டு கட்டாயமாக நாட்டை விட்டு
வெளியேற்றப்பட்டிருந்தார்.
மிகவேதனை தரும் தாமதத்தில் உணவு, நீர், மருத்துவ வசதிகள் கொடுப்பது பற்றி
ஹைட்டிய மக்கள் பெருகிய முறையில் கொண்டுள்ள ஏமாற்றத் திகைப்பிற்கு ஓரளவு சமாதான விதத்தில்
Préval விடை
கொடுத்தார். அமெரிக்க கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் விமான நிலையத்தில் டன்கணக்கான உதவி சரக்குகள்
இருக்கையில், ஹைட்டிக்கு செல்ல இருக்கும் உதவிப் பொருட்கள் பல இடங்களிலும் தற்பொழுதைய பொருட்களே
வினியோகிக்கப்படாததால் தேங்கி நிற்கின்றன.
"நான் யாரையும் குறைகூறும் நிலையில் இல்லை; அதுவும் நமக்கு உதவி செய்ய
வந்துள்ளவர்கள் பற்றி. நான் கூறுவது, அனைவரும் கூறுவது நம்மிடையே இன்னும் சிறந்த ஒருங்கிணைப்பு வேண்டும்
என்பதுதான்" என்று Préval
கூறினார்.
உதவி முயற்சியின் குறைந்த தன்மை
Port-au-Princeல்
அழுத்தங்களை அதிகரித்துள்ளது. ஐ.நா.துருப்புக்கள் சமீபத்திய விநியோகங்களுக்கு விடையிறுத்தனர். அங்குள்ள
விநியோகங்கள் கூடிய ஏராளமான மக்களின் தேவைக்கு போதுமானதாக இல்லை. இதையொட்டி கூடியிருந்த
பட்டினியால் வாடும் வீடிழந்த மக்கள் மீது கூட்டத்தை கலைப்பதற்காக கண்ணீர்ப்புகை, மற்றும் மிளகு வாயு
தூவப்பட்டன.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களில் கால் வாசிக்குத்தான் இதுவரை உணவை
அளித்துள்ளதாக ஐ.நா. ஒப்புக் கொண்டுள்ளது. உணவை பகிர்ந்து கொடுக்கும் வேலை கொடுக்கப்பட்ட
ஐ.நா.துருப்புக்கள் முறையாக செய்வதில்லை, பாதுகாப்பு கருதி விநியோக்கிக்கும் இடங்களை
தேர்ந்தெடுக்கின்றனர். பின்னர் அந்த இடங்களில் முன்னறிவிப்பு கொடுப்பதும் இல்லை. ஏனெனில் கலகம் வரக்கூடிய
அளவிற்கு அதிக மக்கள் கூடுவர் என்று அது கருதுகிறது. இதையொட்டி எதிர்பாரா விநியோக முறைகளினால் பல
மக்கள் ஏதும் பெறாமல் திரும்பிச் செல்லுகின்றனர்.
இதற்கிடையில் நன்கொடை என்று குறிப்பிட்டு வரும் உணவுப் பொருட்கள் நகரத்தின்
சந்தைகளில் உயர்ந்த விலைக்கு விற்கப்படுவதாகவும் தகவல்கள் வந்துள்ளன.
"நகரத்தின் வறிய மக்கள் வாழும் பகுதிகளில், மக்கள் இன்னும் உறைவிடம், உணவு,
சுகாதாரப் பாதுகாப்பு, சுத்தம் இன்றி வாழ்கின்றனர்" என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஹைட்டி குழுவின்
தலைவர் ரிக்கார்டோ கோன்டி Port-au-Prince
TM Radio Metropole
இடம் கூறினார்.
நூறாயிரக்கணக்கான மக்கள் தற்காலிக முகாம்களில் எதிர்கொண்டிருக்கும் அவல
நிலைகள் பற்றி ஹைட்டிய வானொலி விவரித்துள்ளது. "ஆண்கள், பெண்கள், சிறுவர் என மக்கள் நினைத்த இடத்தில்
குளிக்கிறார்கள், கழிப்பறையாக மாற்றுகின்றனர். பலரும் தரையில் உறங்குகினறனர்;. மற்ற "அதிருஷ்டம்"
உடையவர்களுக்கு ஒரு பாய் அல்லது மெத்தை கிடைக்கிறது, தரை முழுவதும் குப்பைதான் உள்ளது. தப்பிப்
பிழைத்தவர்களுடைய நாட்கள் உணவு, நீருக்கு அலைவதில் போகிறது. பலருக்கும் போதுமான உணவு
கிடைப்பதில்லை. சில முகாம்கள் மற்றவற்றை விட நன்றாக உள்ளன. நடமாடும் கழிப்பறைகள் இருக்கின்றன."
சுகாதார வல்லுனர்களும் ஹைட்டிய அதிகாரிகளும் இந்த நிலைமை மற்றொரு தொற்றுநோய்
பரவுதல் என்னும் அழிவிற்கு இடம் வகுக்கும், குறிப்பாக அதக மழை பெய்தால், என்று கூறியுள்ளனர். காலரா,
மலேரியா, டைபாய்ட், டெங்கு போன்ற நோய்கள் இன்னும் பல ஆயிரக்கணக்கான மக்கள் உயிரைக் குடிக்கும்.
Préval லும் மற்ற அதிகாரிகளும்
200,000 கூடாரங்கள் ஹைட்டிக்கு அனுப்பப்பட்டால் இந்த பேரழிவு தவிர்க்கப்படும் என்று வாதிட்டுள்ளனர். ஆனல்
புதன்கிழமை இரவு வரை ஹைட்டியில் உள்ள ஐ.நா. அமைப்புக்கள் 3,500 கூடாரங்களைத்தான் பெற்றுள்ளனர்
என்று Radio Metropole
கூறியுள்ளது. 10,000 கூடாரங்கள்தான் வந்து கொண்டிருக்கின்றன.
இவ்விதத்தில் ஹைட்டிய குழந்தைகள் விதி பற்றி பெருகிய கவலை உள்ளது. ஐ.நா.
மதிப்பீடு ஒன்றின்படி குறைந்தது ஒரு மில்லியன் குழந்தைகள் இப்பொழுது அனாதைகளாக உள்ளன அல்லது ஒரு
பெற்றோரையாவது நிலநடுக்கத்தில் இழந்துள்ளன.
வியாழனன்று Andrew
Young Foundtion என்ற அமைப்பின் ஹைட்டிய அமெரிக்க
ஆலோசனையாளர் Mia Pean
இனது அறிக்கை ஒன்றை
Time இதழ்
வெளியிட்டுள்ளது. அவர் வீடுகள் இல்லாத பகுதிகளில் இருந்து குழந்தைகளை டிரக்கில் ஏற்றிச் சென்றதை அவர்
கண்டதாக கூறியுள்ளார்.
"ஒவ்வொரு முறையும் டிரைவர் ஒரு குழந்தையைக் காணும்போது--குறிப்பாக
இளவயது--அவர் சன்னலுக்கு வெளியே தலையை நீட்டி "மாஞ்சே, மாஞ்சே", "சாப்பாடு" என்று அவர்களது
மொழியில் கூவுவார். பட்டினியில் உள்ள குழந்தைகள், சில நேரம் நான்கு அல்லது ஐந்து டிரக்குகளில் ஏறும்,
பின்னர் வண்டி மறைந்துவிடும்" என்று Pean
கூறியுள்ளார்.
இப்படி எடுத்துச் செல்லப்படும் குழந்தைகளில் பெரும்பாலானவை விற்பதற்கு
செல்கின்றன என்று Pean
கூறினார். இது பாலியல் தொழிலில் ஈடுபடுத்த அல்லது செல்வம் படைத்த
ஹைட்டியர்களுக்கு அடிமைகளாக அல்லது சட்டவிரோத தத்துக் குழந்தைகளாக கொடுப்பதற்காக இருக்கலாம்.
ஹைட்டியின் பிரதம மந்திரி
Jean-Max Bellerive புதனன்று குழந்தைகள் இவ்வாறு
கடத்தப்படுவது இன்னும் கொடூரமான நோக்கமான மனித உறுப்புக்களை எடுத்துக் கொள்ளுவதற்காக என்றார்.
"பல அமைப்புக்கள், இங்கு வந்து குழந்தைகள் தெருக்களில் இருப்பதாகக்
கூறுகின்றன. அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்வதாகக் கூறுகின்றன. ஏற்கனவே பல விற்பனைகள் பற்றிய தகவல்கள்
வந்துள்ளன. உடலுறுப்புக்கள் விற்பனையும் நடக்கிறது." என்று
CNN இடம்
Bellerive
கூறினார். "குழந்தைகளும் பெரியவர்களும் விற்பனைக்காக கடத்தப்படுகின்றனர்; அவர்களுக்கு அனைத்துவித
உறுப்புக்களும் தேவைப்படுகின்றன."என்றார்.
Los Angeles Children's Hospital ,
University of Southern California
இரண்டும் நடத்திய புள்ளிவிவர ஆய்வின்படி நிலநடுக்கத்தில் காயமுற்றவர்களில் பாதிக்கும் மேலானவர்கள்
குழந்தைகள், 18 வயதிற்குட்பட்ட இளவயதினர் என்று தெரிவிக்கிறது.
மெல்லிய ஊசிகள், சிறுவர்களுக்கு தேவையான எதிர்ப்பு சக்தி மருந்துகள் மற்ற
மருந்துகள் குழந்தை பாதுகாப்பிற்கு தேவை என்ற நிலையில் ஆய்வின் விளைவுகள் உதவி விநியோகங்களின் பெரும்
தாக்கங்களை கொடுக்கும். ஹைட்டியில் உள்ள அவசரக்கால மருத்துவக் குழுக்களிடம் அத்தகைய கருவிகள் இல்லை.
இதனால் தற்காலிகமாக சாதாரண ஊசிகள் பயன்படுத்தப்படுகின்றன, மருந்துகள் வயதானவர்களுக்குக்
கொடுக்கப்படுவதில் பாதி அளவாக என கொடுக்கப்படுகின்றன.
ஜனவரி 12 அழிவில் காயமுற்றவர்களில் "அசாதாரண எண்ணிக்கையில் குழந்தைகள்
அதிகமாக இருக்கும், 110,000க்கும் மேலாக, மொத்தத்தில் பாதிக்கும் மேல் என்று இது இருக்கும்" என்று
ஆய்வு கூறுகிறது.
குறைந்தது 1,000 குழந்தைகள் 6ல் இருந்து 8 வயது வரை இருப்பவை
நசுக்கப்பட்ட காயங்களைக் கொண்டுள்ளன. போதுமான, உரிய மருத்துவப் பாதுகாப்பு இல்லாத நிலையில்
உறுப்புக்கள் அகற்றப்படும் நிலை ஏற்பட்டுவிட்டது.
ஹைட்டியின் மக்கள் தொகையின் தன்மையை ஒட்டி இப்படி குழந்தை பாதிப்பாளர்களின்
எண்ணிக்கை அதிகமாக உள்ளது. நாட்டு மக்களின் மொத்தத்தில் 25 சதவிகிதம் 15 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள்
என்று உள்ளது.
வாஷிங்டனில் புதனன்று செய்தியாளர் மாநாட்டில் பென்டகன் செய்தி தொடர்பு செயலர்
ஜெப் மொரெல் அமெரிக்க இராணுவம் ஹைட்டியில் நீடித்தகாலம் இருக்கும் திட்டத்தை பரிசீலிப்பதாகவும்
பாதுகாப்புதான் அதன் முக்கிய அக்கறை என்றும் கூறினார்.
ஹைட்டியில் பாதுகாப்பு நிலைமை "உறுதியானது, ஆனால் பலமற்றது" என்றார்
மொரெல். இந்தச் சொற்றொடர்கள் பொதுவாக ஈராக் நிலைமையைச் சித்தரிக்கப் பயன்படுத்தப்படுவது
வழக்கம்.
"அங்குள்ள பாதுகாப்புச் சூழலை நினைவிற்கொள்ள வேண்டும். ஒரு பாதுகாப்பான,
முறையில் உணவு, நீர், மருந்துகள் என்று மக்களுக்குத் தேவையானவை எதுவாக இருந்தாலும், அவை
அளிக்கப்படுவதற்கு வசதிகள் எங்களால் கொடுக்கப்பட வேண்டும்" என்றார் அவர்.
பல பொது உதவி அமைப்புக்கள் பாதுகாப்பு பற்றி அமெரிக்காவின் தீவிர நிலைப்பாடு,
உதவி நடவடிக்கைகளை இராணுவமயமாக்கியுள்ளமை நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதை அவை
தடுக்கின்றன, இதனால் உயிர்கள் இழப்பு ஏற்படுகிறது என்று குறை கூறியுள்ளன. விமான நிலையத்தை அமெரிக்க இராணுவம்
ஒருதலைப்பட்சமாக கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக் கொண்டதில் இருந்து இராணுவத்தினரை கொண்டுவர முன்னுரிமை
கொடுப்பது வரை இந்நிலை உள்ளது. மீட்பு உதவி நடவிடக்கைகள் நகரத்தின் வறிய பகுதிகளில் "சிவப்பு பகுதிகள்"
என்று அழைக்கப்படுபற்றில் இராணுவ பாதுகாப்பு இல்லாமல் செயல்படுத்தபடலாம் என்று வலியுறுத்தப்படுகிறது.
"அமெரிக்க அரசாங்கத்திற்கு ஹைட்டியில் இன்னும் சில காலத்திற்கு பங்கு இருக்கும்
என்று நினைக்கிறோம்" என்று பென்டகனின் செய்தித் தொடர்பு செயலாளர் கூறினார்; அந்நாட்டில் அமெரிக்கத்
துருப்புக்கள் இருப்பது இராணுவம் "ஒரு நல்ல சக்தி"; "உலகில் தேவைப்படுபவர்களுக்கு உதவி அளிக்கும் விதத்தில்
செயல்படுகிறது" என்பதை நிரூபிக்கிறது என்றார்.
ஹைட்டிய பேரழிவில் அமெரிக்க இராணுவத்தின் ஆக்கிரோஷத் தலையீடு சர்வதேச
குறைகூறலை தொடர்ந்து ஏற்படுத்தியுள்ளது. வாடிக்கையாக வாஷிங்டனை எதிர்க்கும் இராணுவ ஆக்கிரமிப்புக்
குறுக்கீட்டை கண்டித்துள்ள பொலிவியா, வெனிசூலா, நிகரகுவா போன்ற அரசாங்கங்களை தவிர, அமெரிக்காவுடன்
நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ள சிலியின் ஹைட்டிய தூதரும் அமெரிக்க இராணுவ செயற்பாட்டைக்
கண்டித்துள்ளார்.
சிலியத் தூதர் Marcel
Young நாளேடு
El Mercurio
விடம் அமெரிக்க இராணுவம் "தேவையில்லாமல் ஆக்கிரோஷமாக" ஹைட்டியில் தலையிட்டு உள்ளது என்றார்.
"இது ஒரு முழு உரிமை பெற்ற நாடு என்பதை மறந்து, தேவையில்லாமல்
ஆக்கிரோஷமாக உள்ளனர்" என்று தூதர் கூறினார்.
Port-au-Prince விமான
நிலையத்தின் கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்ட பின்னர் அமெரிக்கப் படைகள் "தங்கள் தேவைகளுக்கு ஏற்ப
விதிமுறைகளை கொண்டுள்ளனர்--முதலில் அவர்களுடைய விமானங்கள் இறங்க வேண்டும், பின்னர்தான் மற்றவை"
என்றார்.
அவர் தொடர்ந்தார்: "இத் துருப்புக்கள் வந்துள்ளது பெரும் அச்சத்தைக்
கொடுக்கத்தான். விமானப் போக்குவரத்தை அவை மீட்டன என்றாலும், இங்கு இருக்கும் இராணுவ நிலைப்பாட்டின்
அளவை வைத்துப் பார்ககும்போது, அவர்கள் காட்டும் வலிமை அதிகப்படியானது." |