World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : சீனா

China's credit tightening exacerbates global financial instability

கடன் கொடுத்தலை சீனா இறுக்கிப் பிடித்துள்ளமை உலக நிதிய உறுதியற்ற தன்மையை அதிகரித்துள்ளது

By John Chan
28 January 2010

Use this version to print | Send feedback

கடந்த வாரம் சீன வங்கிக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் தலைவரான Liu Mingkang தற்காலிகமாக முக்கிய அரசாங்க வங்கிகளுக்கு கொடுக்கும் கடனை நிறுத்தி வைத்தல் என்ற அறிவிப்பு உலகப் பங்கு மற்றும் பொருட்கள் சந்தைகள் முழுவும் அதிர்ச்சி அலைகளைக் கொடுத்துள்ளது.

இந்த ஆண்டு வங்கி கடன்களின் உத்தியோகபூர்வ இலக்கு 7.5 டிரில்லியன் யுவன் என்று வரம்பைக் கொண்டிருக்கும் (அமெரிக்க 1.2 டிரில்லியன் டாலர்) என்று ஹாங்காங்கில் லியு அறிவித்தார். இது கடந்த ஆண்டின் 9.6 டிரில்லியன் யுவானில் இருந்து தீவிர சரிவு ஆகும். இருந்தும் 2008ல் இருந்த 4 டிரில்லியனை விட அதிகம்தான். முந்தைய வாரம் People's Bank of China வங்கிகள் மூலதன இருப்பு விகிதத் தேவைகளை 50 சதவிகித புள்ளிகள் உயர்த்தி அதிகமாகும் கடன்கொடுக்கும் தரங்களைக் குறைத்தது. இது 2008ல் வெடித்த உலக நிதிய நெருக்கடிக்கு பின்னர் முதல்தடவையாக அதிகரிப்பாகும்.

நிதியக் கொள்கை கடுமையாக இருக்க வேண்டும் என்பது கடந்த ஆண்டு கடைசியில் பெய்ஜிங்கின் ஆண்டு பொருளாதாரக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. ஆயினும்கூட, கடந்த வாரம் வந்துள்ள அறிவிப்பு முதலீட்டாளர்களிடையே 2009ல் உயர் வளர்ச்சி விகிதத்திற்கு முக்கியமாக இருந்த சீனாவின் பாரிய வங்கிகளுக்கு கொடுக்கும் கடன்கள் முடிவிற்கு வருவது போல் தோன்றுகிறது.

செவ்வாயன்று ஹாங்காங்கின் ஹாங் செங் குறியீடு 2.4 சதவிகிதம் குறைந்த ஐந்தாம் நாள் இழப்பை அடைந்து. அதே நேரத்தில் ஜப்பானின் நிக்கேய் 1.8 சதவிகிதம் குறைந்தது. ஷாங்காயின் கூட்டுக் குறியீடு 2.4 சதவிகிதம் குறைந்த மூன்று மாதங்களில் அதன் மிகக் குறைவான இடத்தை காட்டியது. தைவானின் Taiex 3.5 சதவிகிதம் சரிந்தது. FTSE ஆசிய பசிபிக் குறியீடு 1.8 சதவிகிதம் குறைந்தது; இது கடந்த நவம்பரில் துபாய் உலகக் கடன் நெருக்கடி உலக சந்தைகளை அதிர்ச்சிக்கு உட்படுத்தியதற்கு அடுத்த பெரிய வீழ்ச்சி ஆகும்.

பெரும்பாலான ஆசிய பங்குச் சந்தைகளுக்கு இது ஏழாம் நாள் தொடர்ந்த சரிவும், கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிக காலமும் ஆகும். அமெரிக்க, ஐரோப்பிய சந்தைகளும் சரிவுற்றன. இதற்கு ஓரளவு காரணம் Standard & Poor's ஜப்பானின் நீண்டகால ''AA" இறைமை கடன்மதிப்புத் தர ("AA" sovereign credit rating) உறுதியை "எதிர்மறையாக காட்டியதும்", டோக்கியோவின் பெருகும் பொதுக் கடனும் அதற்குக் காரணம் ஆகும்.

சீனாவில் நிறுவனங்கள் வருங்கால வாய்ப்பு குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கிய சீன வங்கிகளை Goldman Sachs தரக்குறைவிற்கு உட்படுத்தியமை Industrial & Commercial Bank of China, Bank of China என்பவற்றை மூலதன அளவில் உலகின் மிகப் பெரிய வங்கியாக உயர்த்தியுள்ளது. அது ஹாங்காங் பங்குச் சந்தையில் 3.4 சதவிகிதக் குறைப்பை ஏற்படுத்தியது. உலகின் மிகப்பெரிய ஒப்பந்த மின்னணு பொருட்கள் உற்பத்தி நிறுவனம் 8.7 சதவிகிதம் குறைந்தது. இதற்குக் காரணம் 2010ல் கணிசமாக இலாப வீழ்ச்சி இருக்கும் என்று கணிக்கப்பட்டதாலாகும்.

புதனன்று பைனான்ஸியல் டைம்ஸ் எச்சரித்தது: "கவலையின் அச்சு ஆசியாவிற்கு மாறியுள்ளது. உலகச் சந்தைகளை 2008 இறுதியின் சரிவில் இருந்து மீட்க பசிபிக் பகுதி உதவியது போல், இப்பொழுது அவை மீட்பு முயற்சிகள் உறுதியானதில் இருந்து உண்மையான நிதியதிருத்தங்களில் முன்னணியில் உள்ளது."

ஆசியாவில் நிதிய உறுதியற்ற தன்மை உலகப் பொருளாதார நெருக்கடியின் "மீட்பு" பற்றிய தன்மையின் தற்காலிக, உறுதியற்ற தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது. பாரிய ஊக்க நடவடிக்கைகளை எடுத்து அதன் மூலம் ஊகப்பரபரப்பை ஏற்படுத்தியதின் மூலம் வளர்ச்சி இயந்திரம் என்று சீனா செயல்பட முடிந்தது. ஆனால் இவை உலகப் பொருளாதாரத்தின் முரண்பாடுகளைத்தான் அதிகரித்துள்ளன.

கடன் கொடுப்பதை கட்டுப்படுத்தியதின் மூலம், சீனக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் பாரிய 1.1 டிரில்லயின் யுவான் என்று ஜனவரி முதல் இரு வாரங்களில் கொடுக்கப்பட்ட புதிய கடன்களை எதிர்கொள்கின்றனர். திங்களன்று பைனான்ஸியல் டைம்ஸ் கடன்கள் ஆண்டு முழுவதும் இந்த விகிதத்தில் தொடரப்பட்டால், மொத்தம் 30 டிரில்லியனை 2010 இறுதிக்குள் அடையும் என்றும் அது பெரும் பணவீக்கத்திற்கு தூண்டுதல் கொடுக்கும் என்றும் கூறியுள்ளது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி (CCP) ஆட்சி பணவீக்கம் மற்றும் வேலை இழப்புக்கள் சமூக அமைதியின்மையை மிகப் பெரிய அளவில் தூண்டும் என்றும் அது மே-ஜூன் 1989ல் ஏற்பட்ட பெரும் எதிர்ப்பு அலைகளைக் காட்டிலும் அதிகமாக இருக்கும் என்றும் அஞ்சுகிறது. அந்த எதிர்ப்புக்கள் இராணுவத்தால் மூர்க்கமாக அடக்கப்பட்டன.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நவம்பர் 2008ல் அதன் மகத்தான ஊக்கப் பொதியின் ஒரு பகுதியாக வங்கி கடனை விரிவாக்கியது. அப்பொழுது பொருளாதாரத்தின் முக்கிய தூண்களான ஏற்றுமதி மற்றும் கட்டிட தொழில்கள் பெரும் சரிந்து பல மில்லியன் தொழிலாளர்கள் வேலைகளை இழந்தனர். 590 பில்லியன் டாலர் பொதியில் மூன்றில் ஒரு பங்கு நேரடியாக தேசிய வரவு-செலவுத் திட்டத்தில் இருந்து நிதி பெற்றது. மற்ற பணம் அரசாங்க நிறுவனங்கள், வங்கிகளில் இருந்து வந்தது; இதையொட்டி உள்கட்டுமானம், கனரகத் தொழில்களுக்கு விரிவாக்கத்திற்கு கடன் அதிகம் கொடுக்கப்பட்டது.

ஊக்கப் பொதிகள் சீனப் பொருளாதாரத்தின் சமசீரற்ற தன்மைக்கு அதிகம் உதவியுள்ளன. தொழில்துறையில் கூடுதலான திறன் வளர்ச்சிதான் அடைந்து கொண்டிருக்கிறது. உள்நாட்டு நுகர்வு மூலதன முதலீட்டு வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் குறைவாகத்தான் உள்ளது. இந்த சமசீரற்ற நிலைமைகள் சீனா உலக உழைப்பு பிரிவினை முறையில் கொண்டுள்ள பங்கில் இருந்து விளைகின்றன. இதுதான் உலகத்தின் முக்கிய குறைவூதிய தொழிலாளர் அரங்கு ஆகும். ஏற்றுமதிக்காகத்தான் முக்கியமாக உற்பத்தி செய்கிறது, உள்நாட்டுச் சந்தைகளுக்கு அல்ல.

கடந்த இரு ஆண்டுகளில் வங்கிகள் கடன் கொடுத்ததின் பெரும்பகுதி சொத்துக்களில் ஊகம் மற்றும் பங்குகளில் ஊகத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. பெய்ஜிங், ஷாங்காய் போன்ற முக்கிய நகரங்களில் வீடுகள் விலைகள் கடந்த ஆண்டு 50 சதவிகிதத்தையும் விட உயர்ந்தன. இது சந்தையை தணிய வைக்கும் விதத்தில் அரசாங்கத்தை நடவடிக்கைகளை அறிவிக்கச் செய்தது. அதே நேரத்தில் ஆட்சியும் பொருளாதாரத்தின் முக்கிய உந்துதல் சக்திகளில் ஒன்றான கட்டிட தொழில்துறையையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தக்கூடாது என்ற கவலையையும் கொண்டுள்ளது.

இந்தப் பொருளாதாரச் சங்கடங்களைச் சுட்டிக்காட்டி, உலக வங்கியின் ஆண்டு அறிக்கை கடந்த வாரம் எச்சரித்தது: "ஆசியப் பகுதியில் நிதியச் சந்தை குமிழ் "புதிதாக" தோன்றுவதற்கான சாத்தியம் பெருகிய முறையில் கவலை அளிப்பதாக உள்ளது." இதற்கு மாறாக சர்வதேச நாணய நிதிய (IMF) தலைவர் டொமினிக் ஸ்ட்ராஸ் கான் செவ்வாயன்று "ஆசியாவிற்கு இது ஒரு வரலாற்றுத் தருணம்" என்று மகிழ்ந்து, சீனா இப்பொழுது "தொடர்ச்சியான வளர்ச்சியைக் கொடுக்கும் ஒரு புதிய மாதிரியை" பிரதிபலிக்கிறது என்றார். 2010ல் சீனாவில் 10 சதவிகித வளர்ச்சி இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. இந்த முரண்பாடான மதிப்பீடுகள் இந்த சர்வதேச நிறுவனங்கள் வரவிருக்கும் பொருளாதாரக் கொந்தளிப்பிற்கு தயார் செய்கையில் கொண்டுள்ள அச்சங்களையும் நம்பிக்கைகளையும் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இருந்து அழுத்தம் இருந்தாலும், சீனா டாலருக்கு எதிராக யுவானின் மதிப்பை உயர்த்திவிடவில்லை. ஊக வளர்ச்சிக்கு இது உதவியுள்ளது. யுவானை மறுமதிப்பீடு செய்தல் என்றால் சீன ஏற்றுமதிகள் குறைமதிப்பிற்கு உட்படும், இன்னும் வேலை இழப்புக்களுக்கு வகை செய்யும். நடைமுறையில் உள்ள நாணய மாற்று விகிதத்தை தக்க வைத்துக் கொள்ள, சீனா பாரியளவில் யுவானை அச்சடித்து வெளிநாட்டு நாணய மாற்றுச் சந்தைகளில் இருந்து டாலர்களை வாங்குகிறது. வாங்குதலின் அளவு சீனாவின் வெளிநாட்டு நாணய இருப்புக்கள் 2.4 டிரில்லியன் டாலர் என்பதாக, கடந்த ஆண்டை விட 23 சதவிகிதம் அதிகமாக இருந்ததில் எடுத்துக்காட்டப்படுகின்றது.

2009 இரண்டாம் அரையாண்டில் சீனாவின் இருப்புக்கள் 268 பில்லியன் டாலர்கள் அதிகமாயின. இப்பெருக்கத்தில் பாதிக்கும் மேலானவை "உடனடிப்பண உந்துதலால்" விளைந்தது, வலுவற்ற டாலருக்கு எதிராக யுவான் ஏற்றம் பெறக்கடும் என்ற ஊகத்தால் வந்தது. ஆனால் ஊகத்தைக் கட்டுப்படுத்தும் விதத்தில் சீனா கடனைக் குறைத்துள்ளதும் அதே போன்ற உறுதியற்ற தன்மையை கொடுக்கக்கூடும். அமெரிக்க பொருளாதாரப் பேராசிரியர் Peter Morici இது "பசிபிக்கின் இரு புறங்களிலும் இரண்டாம் நெருக்கடியை" தோற்றுவிக்கக்கூடும் என்று எச்சரித்தார்.

சீனாவின் ஊக சொத்துக் குமிழ்கள் சரிவு உள்நாட்டில் நிதிய உறுதியற்ற தன்மையை தூண்டும் என்பதுடன் அமெரிக்க கருவூலப் பத்திரங்கள் மற்றும் பிற டாலர் முதலீடுகளை பெய்ஜிங் வாங்குவதை குறைக்கும் அல்லது மாற்றிவிடக்கூடும். அதன் விளைவு அமெரிக்காவிற்குள் புதிய சுற்று நிதிய நெருக்கடி என்று ஆகும். அது பண உள்வரவை, குறிப்பாக ஆசியாவில் இருந்து வருவதை நம்பித்தான் உள்ளது.

சீனா ஒரு புதிய முதலாளித்துவ "மாதிரியை" பிரதிபலிக்கிறது என்ற பேச்சுக்கள் இருந்தாலும், அதன் நிதிய உறுதியற்ற தன்மை இன்னும் ஆழ்ந்த உலகப் பொருளாதார நெருக்கடிக்கு உந்துசக்தியாக இருக்கக்கூடும்.