World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

Belgium: Opel plant to close in Antwerp

பெல்ஜியம்: அன்ட்வேர்ப்பில் ஓப்பல் தொழிற்சாலை மூடப்படுகிறது

By our correspondents
28 January 2010

Use this version to print | Send feedback


அன்ட்வேர்ப் துறைமுகப்பகுதியில் நூர்டெர்லான் ஓப்பல் தொழிற்சாலை

அன்ட்வேர்ப்பில் இருந்து செவ்வாய்க்கிழமை: ஓப்பலின் ஐரோப்பிய தொழிற்சாலை தொழிலாளர் குழுக் கூட்டத்தில் தாய்நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் ஐரோப்பா பற்றி கொண்டிருக்கும் சமீபத்திய திட்டங்கள் பற்றி விவாதிக்க அவசர காலகூட்டம் ஒன்றை நடக்கிறது. சில நாட்களுக்கு முன்புதான் ஓப்பலின் நிர்வாக இயக்குனர் Nick Reilly ஐரோப்பாவில் குறைந்த்து 8,300 வேலைகளாவது இழக்கப்படும் என்று அறிவித்திருந்தார். தற்பொழுது கிட்டத்தட்ட 2,600 தொழிலாளர்களை கொண்டிருக்கும், Astra காரை கட்டமைக்கும் பெல்ஜிய ஓப்பல் தொழிற்சாலை இந்தக் கோடையில் மூடப்பட இருக்கிறது.


ஓப்பல்-வாக்ஸோல் தொழிற்சாலை தொழிலாளர் குழுவின் தலைவர் கிளாவு பிரன்ஸ்

ருஸ்ஸல்ஸ்ஹெய்மில் உள்ள தொழிற்சாலை தொழிலாளர் குழுத் தலைவர் கிளவுஸ் பிரன்ஸ் இன்று "ஐரோப்பிய ஒற்றுமையை வெளிப்படுத்தும் எதிர்ப்பு நடவடிக்கைக்கு" அழைப்புவிட்டார். உண்மையில் பெல்ஜியம், ஜேர்மனி, ஸ்பெயின், பிரிட்டன், போலந்து, ஹங்கரி, ஆஸ்திரியா ஆகிய நாடுகளிலுள்ள முக்கிய தொழிற்சாலை தொழிலாளர் குழுக்களின் பிரதிநிதிகள் கலந்துகொள்வது ஒரு அடிப்படை நோக்கத்திற்குத்தான் உதவும். அதாவது அன்ட்வேர்ப் ஓப்பல் ஆலை மூடப்படுவதற்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கும் திறன் எதையும் தடுத்து நிறுத்துவதும், ஐரோப்பா முழுவதும் இருக்கும் ஓப்பல் தொழிலாளர்கள் ஒன்றுபட்டுவிடுவதை தடுப்பதும்தான்.

"இன்னும் அப்பட்டமாகக் கூறவேண்டும் என்றால், நாங்கள் ஒரு வேலைநிறுத்தத்தை விரும்பவில்லை" என்று கிளவுஸ் பிரன்ஸ் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். "எங்கிருந்து தூண்டுதல் வந்தாலும் போராட்ட நடவடிக்கை எடுக்க நாங்கள் ஆத்திரமூட்டப்படமாட்டோம்." எந்தவித உறுதியான நடவடிக்கைகளும் இல்லை என்று பிரன்ஸ் கூறினார். அவருடைய கோரிக்கை: "நிர்வாகத்துடன் நாங்கள் பேச விரும்புகிறோம்." அவருடைய இலக்கு, நிறுவன நிர்வாகத்துடன் ஒத்துழைப்பை தீவிரமாக்கி வேலைக்குறைப்புக்களை இயன்ற அளவிற்கு சுமுகமாக செயல்படுத்துவதாகும். தற்போதைய பணிநீக்கங்கள் திட்டத்தை பற்றி ஓப்பல்-வாக்ஸோல் தொழிற்சாலை தொழிலாளர் குழுவுடன் போதியமுறையில் கலந்து ஆலோசிக்கப்படவில்லை என்பதுதான் பிரன்ஸின் குறைகூறல் ஆகும்.


அன்ட்வேர்ப்பில் உள்ள ஓப்பல் தொழிற்சாலை தொழிலாளர் குழுவின் தலைவர் ரூடி கென்ஸ்

ஒரு செய்தி ஊடகத்திற்கான அறிக்கையில், முன்பு ஒப்புக்கொள்ளப்பட்டு கட்டமைப்பதாக இருந்து ஜெனரல் மோட்டர்ஸால் தற்பொழுது தென்கொரியாவில் திட்டமிடப்பட்டுள்ள சிறிய SUV வாகனங்கள் அன்ட்வேர்ப்பில் கட்டப்பட வேண்டும் என்று தொழிற்சாலை தொழிலாளர் குழு கோரியுள்ளது. 2007ல் ஜெனரல் மோட்டர்ஸ் ஒரு ஒப்பந்தத்தில் அன்ட்வேர்ப் ஆலை செயற்பாடுகள் தொடரும் என்று ஒப்புக் கொண்டிருந்தது. ஆண்டு ஒன்றிற்கு பெல்ஜியத் தொழிலாளர்கள் 20 மில்லியன் யூரோக்களை இரண்டு ஆண்டுகள் (!) தங்கள் ஆலை மூடாமல் இருப்பதற்காக இழந்துள்ளதாகவும் தொழிற்சாலை தொழிலாளர் குழு கூறுகிறது.

இன்று நடந்த ஒரே உறுதியான நடவடிக்கை அன்ட்வேர்ப் தொழிற்சாலை தொழிலாளர் குழுவின் தலைவர் ரூடி கென்ஸ் மற்றும் கிளவுஸ் பிரன்ஸும் ஜெனரல் மோட்டார்ஸின் பிரதிநிதிகளை திங்களன்று நடக்க உள்ள ஒரு சிறப்புக் கூட்டத்திற்கு ஐரோப்பாவில் ஓப்பல் பற்றிய புதிய முழுத் திட்டத்தைப் பற்றி முடிவெடுக்க அழைத்திருப்பதுதான். தொழிற்சாலை தொழிலாளர் குழுக்களுடன் ஒப்புக் கொள்ளப்பட்டிருந்த முந்தைய "முழுத் திட்டங்கள்" அனைத்தும் தொலைதூர விளைவுகளையுடைய விட்டுக்கொடுப்புகளை செய்திருந்தன. அவற்றுள் ஊதியக் குறைப்புக்கள் மற்றும் மோசமான பணி நிலைகளும் அடங்கியிருந்தன. இந்த விட்டுக்கொடுப்புகளின் முடிவு ஒரேதன்மையானதாகத்தான் இருந்தது. அதாவது ஊதியக் குறைப்புக்களை கொடுத்தும் வேலை இழப்புக்களும் ஏற்பட்டன.

தொழிற்சாலை தொழிலாளர் குழுக்களின் பிரதிநிதிகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரிகளுடைய முக்கிய கவலை, தாங்கள் நிர்வாகத்தின் உயர்ந்த ஊதியம் பெறும் இளைய பங்காளிகள் என்ற அந்தஸ்தை இழந்துவிடுவோமோ என்பதுதான்.

கடந்த ஆண்டு ஜேர்மனிய தொழிற்சாலை தொழிலாளர் குழுக்களும் IG Metall தொழிற்சங்கமும் கனேடிய உதிரிபாகங்கள் விநியோக்கிக்கும் மக்னா நிறுவனம் ஓப்பலை எடுத்துக் கொள்ளும் பின்னணியில் பாரிய தாக்குதல்களுக்கு திட்டமிட்டிருந்தன. அன்ட்வேர்ப்பில் ஆலை மூடல் மற்றும் 10,500 வேலை இழப்புக்கள் ஆகியவை வரும் என்று அவர்கள் கணக்கிட்டிருந்தனர். இதில் வேறுபாடு என்னவென்றால் மக்னா ஒப்பந்தத்தில் "ஊழியர்கள் பங்கு நிதி" ஒன்று சேர்க்கப்பட்டிருந்ததுதான். இந்த நிதியை தொழிற்சாலை தொழிலாளர் குழுவும் IG Metall தொழிற்சங்கமும் கட்டுப்படுத்தும். அதனால் இவர்கள் நிர்வாகத்தின் நடைமுறை மூலதனத்தின் 10 சதவிகிதத்திற்கு உரிமையாளர்கள் ஆவர் என்று இருந்தது.

ஆனால், ஜெனரல் மோட்டார்ஸ் நியமித்திருந்த ஐரோப்பாவின் ஓப்பல் நிர்வாக இயக்குனரான Nick Reilly தொழிற்சாலை தொழிலாளர் குழுவிற்கு நடந்து முடிந்த செயலைத்தான் முன்வைத்தார். அவர் "எங்களை கலந்து ஆலோசிக்கவில்லை" என்ற கிளவுஸ் பிரன்ஸின் குறைகூறலுக்கு மாறாக அவர் அன்ட்வேர்ப் ஆலை மூடலை அறிவித்துவிட்டார். அதே நேரத்தில் Reilly ஆண்டு ஒன்றிற்கு ஊதியக்குறைப்பாக 265 மில்லியனைக் கோருகிறார். இல்லாவிட்டால் மற்ற ஆலைகளும் மூடப்படும் என்கிறார்.

செவ்வாய்க்கிழமை "எதிர்ப்பு நடவடிக்கை" ஓப்பலில் வேலைநிறுத்தத்தை சேர்த்துக் கொள்ளவில்லை. அன்ட்வேர்ப்பிலோ, வேறு எந்த ஆலையிலோ ஒருநாள் வேலைநிறுத்தம் கூடக் கிடையாது. "அனைத்து ஓப்பல் ஆலைகளில் இருந்தும் இரு பஸ்களில் வந்த ஒற்றுமைக்கான பிரதிநிதிகளில்" முக்கியமான தொழிற்சங்க அதிகாரிகள் என்று ஜேர்மனியில் உள்ள ஹெசியில் இருந்து வந்தவர்களும் மற்றும் ருஸ்ஸல்ஸ்ஹெய்மிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட "Opelaner" என்ற சிறு குழுவையும்தான் கொண்டிருந்தது.

ருஸ்ஸல்ஸ்ஹெய்மிலிலோ அல்லது பொஹும், ஐசனாக், லூட்டன், ஹிலிவைஸ் ஆகிய இடங்களிலோ, தொழிற்சங்கம் "எதிர்ப்பு நடவடிக்கை" திட்டம் பற்றி ஏதும் தெரிவிக்கவில்லை. இத்தகயை "ஒற்றுமை" என்பது அன்ட்வேர்ப்பில் உள்ள தொழிலாளர்களுக்கு வெறுப்பை கொடுத்து, ஏமாற்றத்தைத்தான் அளிக்கும்.

அன்ட்வேர்ப்பில் காலை நேர வேலை பார்த்த தொழிலாளர்கள் நண்பகலுக்கு முன் உணவு விடுதியில் ஒன்றாகக்கூடுவர். மாலை நேர வேலை பார்ப்பவர்கள் 2 மணிக்குப் பின் கூடுவர். அங்குத்தான் கிளவுஸ் பிரன்ஸ், பெல்ஜிய தொழிற்சாலை தொழிலாளர் குழுத் தலைவர் ரூடி கென்ஸ் இருவரும் சில நிமிஷங்கள் அவர்களிடம் பேசுவர். இதன்பின் இணைப்புப் பிரிவுகள் செயல்படத் தொடங்கிவிடும்.

இந்த வேலைநேர மாற்றத்தின்போது, உலக சோசலிச வலைத் தளத்தின் பிரதிநிதிகள் ஆலைக்கு முன்பு தொழிலாளர்களிடம் சோசலிச சமத்துவக் கட்சி ஒரு சுயாதீன ஆலைக் குழுக்களை கட்டமைப்பது பற்றி வெளியிட்ட அறிக்கையை வழங்கி அதுபற்றிய கருத்துக்களையும் கேட்டனர்.

"என்னுடைய சக ஊழியர்களில் முக்கால்வாசிப் பேர் ஆலைகள் மூடப்படும் என்று கருதிகின்றனர்" என்று 47 வயதாக தொழிலாளி, ஆலையில் 22 ஆண்டுகளாக வேலைபார்ப்பவர் கூறினார். "1989ல் நாங்கள் 12,000 தொழிலாளர்கள் இருந்த பிரிவாக இருந்தோம், இப்பொழுது 3,000 பேர்கூட இல்லை. இன்னும் கடுமையாக நாங்கள் குறைந்த தொழிலாளிகளுடன் உழைக்க் வேண்டும். பின் எங்கள் ஊதியங்களின் ஒரு பகுதியை இழந்தோம். எங்கள் முன்னுதாரணம் ஊதியக் குறைப்புக்கள் வேலைகளை காப்பாற்ற முடிவதில்லை என்பதைக் காட்டுகிறது" என்றார்.

அனா, ஜூர்கன் மற்றும் ரொபி ஆகியோரும் ஆலை மூடல் முடிந்துவிட்ட செயல் என்றுதான் கருதுகின்றனர். ஆலையில் பல சக ஊழியர்களும் சீற்றமும் வெறுப்பும் கொண்டுள்ளனர் என்று அவர்கள் கூறிகின்றனர். "நீண்ட காலமாகவே வேலைக்குறைப்பு இருக்கும் என்று அவர்கள் எதிர்நோக்கினர், இரண்டு மூன்று ஆண்டுகளாக இதே பேச்சுத்தான் இருந்தது" என்றார் அனா. பல தொழிலாளர்களுக்கும் தொழிற்சங்கத்தில் நம்பிக்கை போய்விட்டது என்று மூவரும் கூறினர். ஜூர்கன் கூறியது: "எங்களுக்காக நாமேதான் போராடவேண்டும். நீங்கள் கூறியிருப்பது சரிதான். நாங்கள் இப்பொழுது 2,600 பேர்தான் இருக்கிறோம்; ஆனால் மற்ற ஆலைகளில் உள்ள தொழிலாளர்களுக்கும் எங்களுடையதை போன்ற பிரச்சினைகள்தான் உள்ளன."


அனா, ஜூர்கன் மற்றும் ரொபி

ஓப்பல் மூடப்படுதல் அன்ட்வேர்ப் பகுதியில் தொழில்துறையில் பேரழிவுப் பாதிப்பைக் கொடுக்கும் உத்தியோகபூர்வ வேலையின்மை பிளாண்டர்ஸில் இப்பொழுது கிட்டத்தட்ட 17 சதவிகிதம் என்று உள்ள நிலையில், ஒவ்வொரு ஓப்பல் வேலையிலும் மூன்று உதிரி பாகங்கள் விநியோக்கிக்கும் வேலை தங்கியிருக்கின்றது.

ஆலை மூடப்பட உள்ளது என்பது தெரிந்துவிட்டதால், தொழிலாளர்கள் ஒவ்வொரு நாளும் நூர்டெர்லானில் இருக்கும் சுற்றுப் புற ஆலைகளில் இருந்து அன்ட்வேர்ப் துறைமுகத்திற்கு வந்து, ஓப்பல் ஆலையின் கிழக்கு வாயிலில் காவல் காக்கின்றனர். இங்கு சக ஊழியர்கள் பணி முடிந்தவுடன் துணை ஒப்பந்தக்காரர்கள், பாகங்கள் விநியோகிக்கும் தொழிற்சாலை மற்றும் ஏனைய ஆலைகளில் இருந்து வரும் தொழிலாளர்களுடன் பேசுகின்றனர். இங்குள்ள தொழிலாளர்கள் அன்ட்வேர்ப் ஆலை மூடப்பட்டால் அவர்களுக்கு என்ன ஆகும் என்று கூறுகின்றனர்.


சாரா

சாரா பத்து ஆண்டுகளாக ஓபல் நிறுவனத்தின் ஊதியப் பட்டியலின் பொறுப்பை ஏற்றுள்ள நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். ஓப்பல் மூடப்பட்டால், இவர்களும் வேலைகளை இழப்பர். "நாங்களும் போராட வேண்டும் என்பது தெளிவு" என்கிறார் சாரா. விரைவில் ஒரு குழந்தைக்கு தாயாராகவும் போகிறார். "ஆனால் நாங்கள் என்ன செய்ய முடியும்?" தொழிலாளர்கள் எல்லை கடந்து தங்கள் உரிமைகளுக்காக இணைந்து போராடுவது முற்றிலும் சரியே என்று அவர் கூறுகிறார். "இது நம் வருங்காலத்தைப் பற்றியது."


இப்ராகிம்

அடாமா இப்ராகிமும் அவருடைய சக ஊழியரும் ஓபல் ஆலையில் சுத்திகரிக்கும் குழுவில் பணி செய்கின்றனர். "நான் 13 ஆண்டுகளாக ஓப்பலில் இருக்கிறேன். ஆனால் சமீபத்திய காலம் மிகவும் விரும்பத்தகாதாகப் போய்விட்டது. ஒவ்வொரு நாளும் மறுநாள் வேலை இருக்குமா என்பது தெரியவில்லை." கடந்த ஆறு ஆண்டுகளாக ஆலையில் சுத்திகரிப்பு தொழிலாளராக இருக்கும் இப்ராகிம் கூறுவது: "இப்பொழுது நிலைமை மிக மோசமாக உள்ளது. ஏனெனில் மறுநாள் என்ன நடக்கும் என்று எவரும் கூறமுடியாது. ஆலை மூடினால் குடும்பம் என்ன ஆவது என்று என்னுடைய சக ஊழியர்கள் பெரும் கவலை கொண்டுள்ளனர்."


அப்துல்

அப்துல் ஓப்பல் தொழிலாளர்களுக்கு ஆதரவு கொடுப்பதற்காக சக ஊழியர்களுடன் பிரஸ்ஸல்ஸில் இருந்து வந்துள்ளார். இவர் 10 ஆண்டுகள் பாரம்தூக்கி இயக்குபவராக VW-Audi இல் உள்ளார். "சமீபத்திய ஆண்டுகளில், ஆலைகள் மூடல், வேலைக் குறைப்புக்கள் பற்றி நிறைய அனுபவங்கள் உண்டு." என்றார் அப்துல். "முதலில் Renault-Vilvoorde மூடப்பட்டது, பின்னர் Ghent நகரில் போர்ட் மூடப்பட்டது. ஏராளமான வேலைகள் Volkswage-Forest (Brussels) ல் இழக்கப்பட்டன. உண்மையிலேயே தெருக்களில் இறங்கி எங்கள் வேலைகளுக்குப் போராடும் உரிமை எங்களுக்கு உண்டு."