WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பிய ஒன்றியம்
Greek parliament
approves further austerity measures
கிரேக்க பாராளுமன்றம்
கூடுதலான சிக்கன நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கிறது
By
Robert Stevens
24 December 2010
வியாழனன்று, ஐந்து நாட்கள் பாராளுமன்ற விவாதத்திற்கு பின்னர்
இறுதிக் கூட்டத்தில் இரவு 1 மணிக்கு
கிரேக்க பாராளுமன்றம் நாட்டின் 2011க்கான வரவு செலவுத் திட்டத்தை இயற்றியது. ஆளும்
சமூக ஜனநாயக Pan Hellenic Socialist Movement (PASOK) அரசாங்கம் இதை இயற்றுவதற்காக
159 வாக்குகளை ஆதரவாகவும், 142 வாக்குகளை எதிராகவும் பெற்றது; இரு உறுப்பினர்கள்
வாக்களிக்கவில்லை.
இந்த
நடவடிக்கை சர்வதேச நாணய நிதியம் மூன்றாம் தவணையாக €2.5 பில்லியனை வெளியிட்ட சில
நாட்களுக்குள் வந்துள்ளது; இது மே மாதம் ஒப்புக் கொள்ளப்பட்டிருந்த €110 பில்லியன்
கடன் தொகுப்பின் ஒரு பகுதியாகும். இந்த நிதிகளும், பெப்ருவரியில் கொடுக்கப்பட
இருக்கும் இன்னும் ஒரு €15 பில்லியனும் வரவு செலவுத்திட்டம் இயற்றப்பட்டு, இன்னும்
ஆழ்ந்த சிக்கன நடவடிக்கைகளைச் செயல்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில்
கொடுக்கப்பட்டன. வரவு செலவுத் திட்டம் இயற்றப்படுவதற்கு இரு நாட்களுக்கு முன்பு IMF
ன் நிர்வாக இயக்குனர் Dominique Strauss Kahn ஏதென்ஸில் இரு நாட்கள் தங்கி
PASOK ஆட்சியுடன் நெருக்கமான ஆலோசனைகளை நடத்தியிருந்தார்.
2011ம்
ஆண்டு தன் பொதுச் செலவுப் பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7.6
சதவிகிதத்திற்கு மிகாமல் இருக்குமாறு கிரேக்கம் ஒப்புக் கொண்டது. கடந்த மாதம்
யூரோஸ்டாட் 2009க்கான பொதுப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15.4
இருந்தது என்றும் இது அதற்கு முந்தைய ஆண்டின் 13.6% உடன் ஒப்பிடத்தக்கது என்றும்
திருத்தியது. இதன் விளைவாக 2010ம் ஆண்டுப் பொதுப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு
உற்பத்தியில் 9.4 சதவிகிதம் என்று உயர்ந்தது; இது IMF உடன் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ள
8.1 சதவிகித இலக்கை விட அதிகம் ஆகும்.
வரவு
செலவுத் திட்ட பற்றாக்குறையில், “செலவுகளைக் குறைப்பதற்கான சரியான நடவடிக்கைகள்,
வருவாயை அதிகரிக்கும் நடவடிக்கைகள் என்று மொத்தம் €14 பில்லியன் தொகை” அடங்கியுள்ளது.
சுகாதார அமைச்சரகம் அதன் செலவுகளை €700 மில்லியன் குறைக்கும், இதைத் தவிர, அரசாங்கம்
நடத்தும் நிறுவனங்களில் கணிசமான ஊதிய வெட்டுக்கள் இருக்கும். (விற்பனை வரியான)
மதிப்புக்கூட்டு வரி 11ல் இருந்து 13% என உயர்த்தப்படும்; அதன் குறைந்தபட்ச
விகிதத்திலேயே உணவுப் பொருட்கள், புத்தகங்கள் போன்றவை 6.5% அதிகமாக்கப்பட்டதும்
அடங்கும்.
“மூடும்
கடை” தொழில்கள் என்று கூறப்படுபவற்றை முறித்துவிடும் வகையில் சட்டம் இயற்றப்படும்
என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது; இது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடக்கும்.
பாரவாகன சாரதிகள், மருந்தகங்களில் வேலை செய்பவர்கள், பொறியியல் வல்லுனர்கள்,
வக்கீல்கள், பொது உறுதி மொழி எடுத்து வைப்பவர்கள், கணக்காயர்கள், கட்டிடக் கலை
விற்பன்னர்கள் மற்றும் பல் மருத்துவர்கள் ஆகியோர் பாதகமான பாதிப்பிற்கு உட்படுவர்.
இதையொட்டி ஆயிரக்கணக்கான வேலை இழப்புக்களும் ஏற்படும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்
பொருளாதார மதிப்பீட்டில், நிதிய அமைச்சரகம் வேலையின்மை அடுத்த ஆண்டு தற்போதைய 12.1
ல் இருந்து 14.6% உயரும் என்று கணித்துள்ளது.
தொழிலாளர்கள்மீது நடத்தும் தாக்குதலுக்கு முற்றிலும் எதிரிடையாக, வரவு
செலவுத்-திட்டத்தில் பெருநிறுவனங்களுக்கு பெரிய வரம் காத்துள்ளது; இன்னும்
வழங்கப்படாத பெருநிறுவன இலாபங்கள் மீதான வரிவிகிதம் 24ல் இருந்து 20% எனக்
குறைக்கப்பட்டுள்ளது.
இந்த
நடவடிக்கைகள் ஏற்கனவே கடந்த ஆண்டு கிரேக்க மக்கள்மீது சுமத்தப்பட்டுள்ள கடும்
சிக்கன நடவடிக்கைகளுக்கு மேலாக எடுக்கப்பட உள்ளன. கடந்த ஆண்டின் நடவடிக்கைகள்
முன்னோடியில்லாத வகையில் மக்களுடைய வாழ்க்கைத் தரங்களை சரித்தன.
ஏதென்ஸிலும் கிரெக்கம் நெடுகிலும் வேலைநிறுத்தங்கள் தொடர்ந்த நிலையில் பாராளுமன்ற
விவாதம் நடைபெற்றது. தலைநகரில் உள்ள பஸ் மற்றும் நிலத்தடி இரயில் சாரதிகள்
தொடர்ச்சியான வேலைநிறுத்தங்களை இரு வாரங்களாக நடத்திக் கொண்டிருக்கின்றனர். குப்பை
சேகரிப்பவர்கள் நடத்தும் வேலை நிறுத்தத்தின் விளைவாக கடந்த மூன்று வாரங்களாக
சேகரிக்கப்படாத குப்பைக் குவியல்களை எங்கும் காண்பது வாடிக்கையான காட்சியாகிவிட்டது.
புதன் கிழமை அன்று, உள்ளாராட்சி ஊழியர்கள் காலை 11 மணியில் இருந்து தங்கள் பணிநேரம்
முடியும் வரை வெளிநடப்புச் செய்தனர். சில மணி நேரங்கள் நடத்தப்பட்ட
வேலைநிறுத்தங்களில் பங்கு பெற்ற மற்ற தொழிலாளர்களில் ஹெலெனிக் தொலைத்தொடர்பு
ஊழியர்கள், ஆரம்ப மற்றும் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களும் இருந்தனர்.
மில்லியன்
கணக்கான மக்கள் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புக் காட்டியும்கூட, தொழிற்சங்கங்கள்
அராசங்கத்திற்கு எதிரான திறைமையான போராட்டம் எதையும் முறையாய் சிதைப்பதற்குத்தான்
பாடுபடுகின்றன. இது மீண்டும் புதனன்று வெளிப்பட்டது; முன்கூட்டியே ஏற்பாடு
செய்யப்பட்டிருந்த வேலைநிறுத்தங்கள் தொழிற்சங்கங்களால் வாபஸ் பெறப்பட்டன அல்லது
பாதிப்பைச் சிறிதும் ஏற்படுத்தாத வகையில் குறைந்த தன்மையில் இருந்தன.
GSEE
எனப்படும் கிரேக்க தொழிலாளர்கள் பொதுக் கூட்டமைப்பு மற்றும் ADEDY எனப்படும்
பொதுத்துறைக் கூட்டமைப்பு இரண்டும் புதன் அன்று மூன்று மணி நேர வேலைநிறுத்தம்
செய்தன. அவர்களுடைய வழக்கமான 24 மணி நேர வேலைநிறுத்தத்தையும் விடக் குறைவான வகையில்
நடந்த இவற்றில், தொழிற்சங்கங்கள் சிக்கன நடவடிக்கைக்கு எதிராக தாங்கள் கூறும்
வாடிக்கையான எதிர்ப்புக்களை வெளியிட்டனர்; அதே நேரத்தில் திறமையான எதிர்ப்பு என்று
எதையும் முன்வைக்கவில்லை.
முக்கிய
தொழிற்சங்கக் கூட்டமைப்புக்கள் பெயரளவு எதிர்ப்பை நடத்தும்போதே, அவற்றுடன் இணைந்த
அமைப்புக்கள் பொதுப் போக்குவரத்து துறையில் நடக்கும் வேலைநிறுத்தங்களை முடித்தனர்.
பொதுப் போக்குவரத்துக்களை குறைப்பதுடன் அரசாங்கம் கட்டணமும் அடுத்த ஆண்டு 35 முதல்
40% வரை அதிகரிக்கப்படும் என்று கூறியுள்ளது. ஆனால் வேலைநிறுத்தங்கள் வாபஸ்
பெறப்பட்டதற்குக் காரணம் வணிக உயரடுக்கு, வணிகம் நன்கு நடக்கும் விடுமுறைக்காலத்தில்
போக்குவரத்து முழுமையாக இயங்க வேண்டும் என்று வலியுறுத்தியதால்தான்.
ஏதென்ஸின்
வணிக, தொழிற்குழு, “நாட்டின் வணிகங்களும் மக்களும் அரசாங்கத்திற்கும் சொந்த
நலன்களுக்கு போராடுபவர்களுக்கும் இடையே நடக்கும் மோதலில் இணைந்த வகையில்
பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று புகார் கூறியுள்ளது.
ஏதென்ஸ்
நியூஸ்
தகவல்படி பஸ் சாரதிகளைப் பிரதிபலிக்கும் தொழிற்சங்கங்கள் ஒரு வேலைநிறுத்தம் இல்லை
என்று அறிவித்து வியாழன் அன்று காலை 9 முதல் இரவு 9 வரை பணிபுரிய வேண்டும் என்று
அதன் உறுப்பினர்களை உத்தரவிட்டது. அன்றே அரசாங்கம் நடத்தும் மெட்ரோ, மின் இரயில்,
டிராம் போக்குவரத்து ஆகிய பிரிவுகளில் நடத்தப்பட இருந்த ஒரு 24 மணி நேர
வேலைநிறுத்தமும் இல்லை என்று வாபஸ் பெறப்பட்டது. வெள்ளியன்று நடக்க இருக்கும்
போக்குவரத்து தொழிலாளர்களில் தொழில்துறை நடவடிக்கையும் --கிறஸ்துமஸிற்கு முன்பு
கடைசி நாள்— இரத்து செய்யப்பட்டது. பஸ் சாரதிகள் மட்டும் ஒரு நான்கு மணி நேர வேலை
நிறுத்தம் செய்வர்.
அராசாங்கத்திற்கு எதிராக எத்தகைய போராட்டமும் கூடாது என்பதற்கான வகையில்
தொழிற்சங்கங்கள் தயாரிப்புக்களை நடத்துவது இன்னும் அதிக தாக்குதல்களுத்தான்
வழிவகுக்கின்றன. PASOK பெருமளவில் மக்களை திவாலாக்கும் சுமத்தல்களை மேற்கொள்வது
ஜனநாயக முறைமூலம் இயலாது. ஏற்கனவே அரசாங்கம் கன வாகன சாரதிகள் மற்றும் துறைமுகத்
தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்களை முறிக்க அவசர கால சட்டம் மற்றும் இராணுவத்தைப்
பயன்படுத்தியது.
அத்தகைய
அதிகாரங்கள் பரந்த தொழிலாளர்கள் தொகுப்பிற்கும் விரிவாக்கப்படும் என்று எச்சரிக்கை
கொடுக்கும் விதத்தில் அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஜோர்ஜ் பெடலோடிஸ் வரவு
செலவுத்திட்டத்தின்மீது வாக்கு எடுப்பதற்கு முன், “ஒவ்வொருவரும் பொறுப்பைக் காட்ட
வேண்டும்… அரசாங்கத்திடன் பொது நலனை காப்பாற்றுவதற்குத் தேவையான அதிகாரங்கள் உள்ளன”
என்றார்.
போக்குவரத்து அமைச்சரகத்தின் பொதுச் செயலாளர் ஹாரிஸ் சியோகஸ் அரசாங்கம் சாதாரண
மக்கள் திரள வேண்டும் என்ற உத்தரவை பிறப்பிப்பது பற்றி ஆலோசிக்கிறது, அது
போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றவர்களுக்கும் பொருந்தும் என்றார். இந்த ஆணையின்கீழ்
வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள் இராணவத்தில் நடைமுறையில் சேரக்கப்பட்டு,
இராணுவக் கட்டுப்பாட்டின்கீழ்த்தான் நடந்து கொள்ள வேண்டும்.
அரசாங்கத்தின் வர்க்கப் போர் செயற்பட்டியல், பொருளாதார நெருக்கடி ஒவ்வொரு நாளும்
மோசமாகி வருவதை ஒட்டி நடைபெறுகிறது. மொத்தக் கடனின் அளவின் பெரிய தன்மையினால் இந்த
ஆண்டு கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள சிக்கன நடவடிக்கைகள் அரசாங்கத்தின் கருத்துப்படி
மொத்தக் கடனை விண்ணுயர நிற்கும் €348.5 பில்லியனை €330.4 பில்லியன் என்றுதான்
குறைக்கும்.
அடுத்த
ஆண்டு பொருளாதாரம் இன்னும் 3% சுருக்கம் அடையும்; 2010ல் இந்த வீழ்ச்சி 4.2
சதவிகிதம் ஆகும்.
வரவு
செலவுத் திட்டத்தின் மீது வாக்கெடுப்பிற்கு சற்று முன்னதாக Fitch என்னும் கடன் தர
நிர்ணய நிறுவனம் கிரேக்கத்தின் அரசாங்க பத்திரங்களின் கடன் தரத்தை அடுத்தமாதம்
குப்பை எனக்கூறக்கூடிய அளவிற்கு குறைத்து இடக்கூடும் என்று அறிவித்தது. கிரேக்கத்தை
தர விகிதக் கண்ணோட்டம் எதிர்மறையில் உள்ளது என்று தான் இருத்தியுள்ளதாக பிட்ச்
அறிவித்துள்ளது. வரவிருக்கும் ஜனவரி மாதப் பரிசீலனையின்போது, “IMF-EU
திட்டத்தின்கீழ் அரசாங்கம் இந்த ஆண்டு எடுத்துள்ள நடவடிக்கைகளின் நீடித்த தன்மை
பற்றி மதிப்பீட்டின்பேரில் தான் குவிப்புக் காட்டும் என்றும், அத்துடன் கிரேக்க
பொருளாதாரம், மற்றும் அரசியல் உறுதிப்பாடு, ஒரு வெற்றிகரமான முடிவிற்கு IMF-EU
திட்டத்தை கொண்டுவருவதற்கு தேவையான நடவடிக்கைகளை கிரக்க அரசாங்கம் கொண்டுள்ள திறன்
ஆகியவை பற்றிய கண்ணோட்டமும் இருக்கும்” என்று அது கூறியுள்ளது.
பிட்ஸ்
முடிவைப் பற்றிக் கருத்துத் தெரிவித்த வோல் ஸ்ட்ரீட் ஜர்னல் “இன்னும் சில
வாரங்கள்தான் ஹெலனிக் குடியரசு அதன் முதலீட்டுத் தர விகத த்தை இழப்பதற்கு உள்ளன”
என்று குறிப்பிட்டுள்ளது. பிட்ச்சின் எச்சரிக்கையின் விளைவாக கிரேக்க வங்கிப்
பங்குகள் திங்கன்று 5% சரிந்தன.
இது மற்ற
தர நிர்ணய அமைப்புக்களின் செயற்பாட்டை ஒட்டித்தான் உள்ளது; மூடி, ஸ்டாண்டர்ட் & பூர்
போன்றவை ஏற்கனவே பத்திரங்களை முதலீடு செய்யத்தக்க இலாயக்கற்ற தரத்தில் உள்ளவை என்று
வகைப்படுத்தியுள்ளன; அதுவாது “குப்பை” என்று. இரண்டுமே இப்பொழுது “குப்பை”
என்பதையும் விடக் குறைவான தரத்தை நிர்ணயிக்க ஆலோசிக்கின்றன. இந்த மாதம் முன்னதாக
தான் “2010 வருவாயில் கணிசமான குறைப்பு ஏற்படும் என்பதால் கிரேக்கத்திற்குக்
கொடுக்க இருக்கும் மற்ற கடன்கள் பாதிப்பிற்கு உட்படும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம்
நாட்டின் கடன் பற்றிய கணிப்புக்களை நவம்பரில் உயர்த்தியதும் இதைத்தான் சுட்டிக்
காட்டுகிறது” என்று மூடி எச்சரித்தது.
கடந்த
ஆண்டு கிரேக்கத்தின் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஐரோப்பிய ஒன்றியத்திலேயே
மிக அதிகமாக GDFPயின் 127 சதவிகிதம் என்று இருந்தது. ஐரோப்பிய ஒன்றியிம் இது
2012க்குள் 156% என அதிகரிக்கும் என்று கணித்துள்ளது. |