சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : வரலாறு

Class and Art

Culture Under the Dictatorship

வர்க்கமும் கலையும்

சர்வாதிகாரத்தின் கீழ் கலாச்சாரம்

லியோன் ட்ரொட்ஸ்கி
May 1924

Use this version to print | Send feedback

இது மே 9, 1924இல் கற்பனை இலக்கியத்துறையை (Imaginative Literature) பற்றிய கட்சியின் கொள்கை மீது RCP (B) இன் மத்திய குழு அதன் செய்தித்துறையில் நடத்திய விவாதத்தின் போது அளிக்கப்பட்ட உரை.

Na Postu குழுவின் கருத்திற்கு மிகச் சிறந்த வெளிப்பாட்டை தோழர் ரஸ்கோலினிகோவ் இங்கே கொடுத்துள்ளார் என எனக்குத் தோன்றுகிறது -Na Postu தோழர்களே! அதிலிருந்து நீங்கள் தப்ப முடியாது. நீண்ட நாட்களுக்குப் பின்னர், ஆப்கானிஸ்தானின் அனைத்துப் புத்துணர்வுடனும் ரஸ்கோலினிகோவ் பேசினார்; எவ்வாறிருப்பினும், தாம் பிறந்த அதே வழியில் வாழும் தோழர் வார்டினைத் தவிர, ஏனைய Na Postu குழுவினரோ, அறிவுச்சுவையைச் சற்றே பருகிய நிலையில் தங்களின் நிர்வாணத்தை மூடிமறைக்க முற்பட்டனர். (வார்டின்: நான் இங்கே பேசியதை நீங்கள் கேட்கவில்லை, ஏன்!"). உண்மைதான், நான் தாமதமாக வந்தேன். ஆனால், Na Postus இன் கடந்த இதழில் உங்களுடையக் கட்டுரையைப் படித்தேன். இரண்டாவதாக, உங்கள் உரையின் பேச்சுவடிவ ஆவணத்தை நான் ஒரு முறை மேலோட்டமாக பார்த்தேன்; மேலும் மூன்றாவதாக, உங்கள் உரையைக் கேட்காமலேயே கூட, நீங்கள் என்ன கூறப்போகிறீர்கள் என்பதை ஒருவரால் முன்கூட்டியே சொல்ல முடியும். (சிரிப்பு)

தோழர் ரஸ்கோலினிகோவிற்குத் திரும்புவோமாயின், அவர் கூறுகிறார்: அவர்கள்உடன் பயணிகளை" (fellow-travellers) நமக்குப் பரிந்துரைக்கிறார்கள். ஆனால் "உடன்-பயணிப்பவர்கள்" என்று அவர்கள் நிச்சயமாக இப்போது கூறிக்கொள்ளக் கூடிய அர்ட்ஸிபஷேவ், லியோனிட் ஆண்ட்ரியேவ், மற்றும் ஏனையவர்களின் கருத்துக்களை யுத்தத்திற்கு முந்தைய பழைய Pravda அல்லது Zvezda வெளியிட்டனவா? இந்த கேள்விக்கு, எந்தவிதமான பிரதிபலிப்புகளாலும் பாதிக்கப்படாத ஒரு புதிய அணுகுமுறையின் ஓர் உதாரணம் உள்ளது. அர்ட்ஸிபஷேவும் ஆண்ட்ரியேவும் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? எனக்குத் தெரிந்தவரை, எவரும் அவர்களைஉடன்-பயணிகள்என்று கூறியதில்லை. லியோனிட் ஆண்ட்ரியேவ் சோவியத் ரஷ்யாவின் மீது வெறுப்பு கொண்டிருந்த நிலையில் ஒருவித மூளை-நரம்பு வியாதியால் (A state of epileptic) இறந்தார். அர்ட்ஸிபஷேவை நாட்டைவிட்டு வெளியேற்றி நீண்ட காலமாகவில்லை. இத்தகைய வெட்கங்கெட்டதனமான முறையில் எவரும் விஷயங்களைக் குழப்ப முடியாது! “உடன் பயணிப்பாளர்என்றால் என்ன? அரசியலில் போலவே இலக்கியத்திலும், நாம் முன்னேறிச் செல்ல வேண்டிய அதே பாதையில், ஒரு குறிப்பிட்ட தூரம் வரை தட்டுத்தடுமாறி தத்தளித்துச் செல்லும் ஒருவரை நாம் இந்த பெயர் கொண்டு அழைக்கிறோம். யார் நமக்கு எதிராக இருந்தாலும் அவர் ஓர் உடன்-பயணி ஆகமாட்டார்; மாறாக அவர் ஓர் எதிரியாகிறார். புரட்சியின் நலனுக்காக தேவையானால் அவரை  நாடு கடத்துவதென்பது நம்முடைய அதிகபட்ச சட்டமாக உள்ளது. உடன்-பயணிப்பவர்குறித்த இந்த பிரச்சினையில் நாம் எப்படி லியோனிட் ஆண்ட்ரியேவைப் பிணைக்க முடியும்? (ரஸ்கோலினிகோவ்: சரி, ஆனால் பில்நயக் பற்றி என்ன கூறுவது?)  பில்நயக்கைச் சிந்தனையில் வைத்துகொண்டு, நீங்கள் அர்ட்ஸ்பஷேவ் பற்றி பேசவீர்களானால், உங்களோடு விவாதம் செய்து எந்த பயனுமில்லை. (சிரிப்பு. உரக்க ஒரு குரல்: ஆனால் அவர்கள் இருவரைப் பற்றியதும் ஒரே விஷயமில்லையா?)  அவர்கள் இருவரைப் பற்றியதும் ஒரே விஷயம் என்றா கூறுகிறீர்கள்? நீங்கள் பெயர்களைக் குறிப்பிடுகிறீர்கள் என்றால், நீங்கள் அவர்களைச் சுற்றியே தான் உறுதியாக இருக்க வேண்டும். பில்நயக் சரியாகவும் இருக்கலாம்; இல்லாமலும் போகலாம். இவ்விதத்திலோ அல்லது அவ்விதத்திலோ அவர் சரியாகவோ அல்லது தவறாகவோ இருக்கலாம் - ஆனால் பில்நயக் பில்நயக்தான். நீங்கள் அவரை பில்நயக் என்று கருதி தான் பேச வேண்டும். லியோனிட் ஆண்ட்ரியேவ் என்றல்ல. பொதுவாக அறிவு (knowledge) என்பது பொருட்களுக்கும் (Things), தோற்றங்களுக்கும் (Appearances) இடையே உள்ள வேறுபாடுகளிலிருந்து தொடங்குகிறது; பெரும் குழப்பத்திலிருந்து அல்ல. ரஸ்கோலினிகோவ் கூறுகிறார்: “Pravda, Zvezda பக்கங்களுக்காகஉடன்-பயணிகளை" நாம் அழைக்கவில்லை. ஆனால் பாட்டாளி வர்க்கத்திற்காக ஆழமாக எழுதக்கூடிய கவிஞர்களும், எழுத்தாளர்களும் நமக்குத் தேவைப்பட்டார்கள்; அதனால் கண்டறிந்தோம்." ஆம், பாட்டாளிகளுக்காக ஆழமாக எழுதக்கூடியவர்கள் தேவைப்பட்டார்கள் - கண்டறிந்தோம்! ஆனால் அவர்களைக் கொண்டு நீங்கள் என்ன செய்தீர்கள்? எங்களிடமிருந்து அவர்களை நீங்கள் ஏன் மறைத்துள்ளீர்கள்? (ரஸ்கோலினிகோவ்: உதாரணத்திற்கு, டெம்யன் பெட்னி உள்ளார்.”) , இப்போது புரிகிறது. பாட்டாளி வர்க்கத்திற்காக ஆழமாக எழுதக்கூடிய டெம்யன் பெட்னியை நாம் கண்டுபிடித்துள்ளோம் என்பதை நான் அறியவில்லை என்பதை நான் ஒத்துக்கொண்டு தான் ஆக வேண்டும். (பொதுவான சிரிப்பு) இலக்கியத்தின் பிரச்சினையை நாம் எந்த முறைகளில் அணுகி வருகிறோம் என்பதை நீங்கள் பாருங்கள்: நாம் பில்நயக்கை நினைத்துக் கொண்டே, லியோனிட் ஆண்ட்ரியேவ் பற்றி பேசுகிறோம். பாட்டாளி வர்க்கத்திற்காக ஆழமாக எழுதக்கூடிய எழுத்தாளர்களையும், கவிஞர்களையும் நாம் கண்டுபிடித்திருப்பதாக கூறிக் கொள்கிறோம். பின்னர் இந்த "ஆழமானவர்களின்" பாத்திரத்தைக் குறித்து கேட்கும் போது, அவற்றின் பதில்களில் டெம்யன் பெட்னி மட்டும் தான் இருக்கிறார். (சிரிப்பு) இது போதாது. இது மிகவும் அற்பத்தனமாக இருக்கிறது. இந்த விஷயத்தில் இன்னும் ஆழமான கவனிப்புத் தேவைப்படுகிறது.

இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் புரட்சிக்கு-முந்தைய தொழிலாளர் பிரசுரங்கள், செய்தித்தாள்கள், இதழ்களை இன்னும் தீவிரமாக ஆராய்வதற்கு முயலுவோம். அவை போராட்டத்தைக் குறித்தும், மே தினம், மற்றும் அதை போன்றவற்றைக் குறித்தும், சில கவிதைகளைக் கொண்டிருந்தன என்பது நம் எல்லோருக்கும் நினைவிருக்கும். இக்கவிதைகள் அனைத்தும், அவற்றின் தன்மையில், மிகவும் முக்கியமாக இருந்தன. மேலும் கலாச்சாரத்தின் வரலாற்றிலும் முக்கியத்துவமிக்க ஆவணங்களாக இருந்தன. அவை தொழிலாளர் வர்க்கத்தின் புரட்சிகர விழிப்பையும், அரசியல் வளர்ச்சியையும் வெளிப்படுத்தின. இத்தகைய கலாச்சார-வரலாற்று உணர்வில், அவற்றின் முக்கியத்துவமானது உலகின் அனைத்து ஷேக்ஸ்பியர்கள், மோலியர்கள் (Molières) மற்றும் புஷ்கின்களுக்குச் சற்றும் குறைந்தவை அல்ல. விழிப்புணர்ச்சி பெற்ற வெகுஜனங்கள் பழைய கலாச்சாரத்தின் கூறுபாடுகளில் முதிர்ச்சிபெறும் போது, அவர்களால் தோற்றுவிக்கப்படும் ஒரு புதிய, உயர்ந்த மனித கலாச்சாரத்தின் உறுதிப்பாடு அந்த சாதாரணக் கவிதைகளில் இருக்கிறது. ஆனால், அதே நேரத்தில், Zvezda மற்றும் Pravdaஇல் வெளியான தொழிலாளர்களைப் பற்றிய கவிதைகள், புதிய பாட்டாளி வர்க்க இலக்கியத்தின் எழுச்சிக்கு சிறிதும் முக்கியத்துவம் அளிக்கவில்லை. அந்த கவிதைகளில் வெளிப்பட்ட முற்போக்கான  சிந்தனைகளும், உணர்வுகளும் தொழிலாளர் வர்க்க கூட்டத்திலிருந்து எழும்பி கொண்டிருக்கும் ஓர் எழுத்தாளரது என்றாலும் கூட, டெர்ஷாவின் பாணியிலிருக்கும் (அல்லது டெர்ஷாவிற்கு முந்தைய பாணியிலிருக்கும்) அந்த கலையழகற்ற கேலிப் பாடல்களை ஒரு புதிய இலக்கியமாக கருத முடியாது. இலக்கியத்தின் அபிவிருத்தி சங்கிலித்தொடரைப் போன்றது என்றும், அதில் இடம்பெற்றிருக்கும் இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்த இளம் தொழிலாளர்களின் கபடமற்ற கேலிப் பாடல்கள் தான் - அது நேர்மையாக இருந்தாலும் கூட - வரவிருக்கும் "பாட்டாளி வர்க்க இலக்கியத்திற்கான" முதல்படி என்றும் கருதுவது தவறு. உண்மையில், இப்புரட்சிக் கவிதைகள் ஓர் அரசியல் நிகழ்வேயொழிய, ஓர் இலக்கியம் அல்ல. இவை இலக்கியத்தின் வளர்ச்சிக்கு பங்களிப்பளிக்கவில்லை; மாறாக, புரட்சியின் வளர்ச்சிக்குப் பங்களிப்பளித்தன. புரட்சியானது, பாட்டாளி வர்க்கத்தின் வெற்றிக்கு வழிவகுத்தது; பாட்டாளி வர்க்கத்தின் வெற்றி பொருளாதார மாற்றத்திற்கு வகை செய்து கொண்டு வருகிறது. பொருளாதார மாற்றமானது, உழைக்கும் வெகுஜனங்களின் கலாச்சார நிலையை மாற்றும் நிகழ்முறையில் உள்ளது. அதன்மூலம், உழைக்கும் மக்களின் கலாச்சார வளர்ச்சியானது ஒரு புதிய கலைக்கான உண்மையான அடித்தளத்தை தோற்றுவிக்கும்.ஆனால் இரட்டைத்தனத்தை (Duality) அனுமதிக்க இயலாதுஎன்றும், “நம்முடைய வெளியீடுகளில் அரசியல் படைப்பும், கவிதையும் ஒரேதன்மையை அடைய வேண்டியது அவசியமாகும்; போல்ஷிவிசம் அதன் பிரமாண்ட ஒருமுகப்படுத்தப்பட்டதன்மையால் (Monolithicity) தனிச்சிறப்பு பெற்றுள்ளது" என்றும், இன்னும் இது போன்றவற்றையும் தோழர் ரஸ்கோலினிகோ நமக்குக் கூறுகிறார். முதல்பார்வையில், இந்த வாதம் மறுக்க முடியாதது போல் தோன்றும். உண்மையில், இதுவொரு வெற்றுத்தனமான கருத்து. அதிகபட்சமாக, இதுவொரு விசுவாசமாக, ஏதோவொருவகை நன்மைக்காக யதார்த்தத்திற்குப் பொருந்தாத விருப்பமாக உள்ளது. நம்முடைய கம்யூனிச அரசியல் எழுத்துக்களுக்குத் துணைநிற்கும் விதத்தில் போல்ஷிவிக்கின் உலக-கண்ணோட்டம் கலைவடிவில் வெளிப்படுத்தப்பட்டால், சிறப்பாகத் தான் இருக்கும். ஆனால் இது நம்வசம் இல்லை. மேலும் அது தற்செயலான நிகழ்வும் அல்ல. கலைத்துவ படைப்பானது, ஒரு மனிதனின் உணர்வில் வெளிப்படும் ஏனைய வெளிப்பாடுகளில் பின்தங்கி உள்ளது என்பது தான் விஷயத்தின் மையமாக இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் அது வர்க்க உணர்விற்குப் பின்னால் இருக்கிறது. ஏதோவொன்றை புரிந்துகொண்டு அதை தர்க்கரீதியாக வெளிப்படுத்துவது ஒரு விதம்; மற்றொருவிதம், அதை உள்ளவாறே உள்வாங்கி, ஒருவருடைய உணர்வுகளின் ஒட்டுமொத்த அமைப்புமுறையையும் மறுகட்டமைத்து, இந்தப் புதிய தன்மைக்கேற்ப ஒரு புதிய வகை கலை வடிவத்தைக் கொடுப்பது. இரண்டாவதாக உள்ள வழிவகை மிகவும் ஒழுங்குமுறைப்பட்டது; மெதுவானது; நனவின் கீழ் கொண்டு வருவது மிகவும் கடினமானது-அது எப்பொழுதும் சற்று பின்தங்கியே நிற்கும். ஒரு வர்க்கத்தின் அரசியல் எழுத்துக்கள் விரைவாக தாவித்தாவி செல்லும்; ஆனால் அதன் கலைத்துவ படைப்புத்திறன் எப்பொழுதும் ஊன்றுகோலுடன் பின்னால் நொண்டியடித்து கொண்டு தான் வரும். பாட்டாளிவர்க்கம் உண்மையாக விழிப்புப் பெற்றிருக்காத ஒரு காலக்கட்டத்தில், மார்க்ஸூம் ஏங்கெல்ஸூம் அந்த வர்க்கத்தின் தலைச்சிறந்த அரசியல் எழுத்தாளர்களாக இருந்தார்கள். (கூட்டத்திலிருந்து: ஆம், நீங்கள் கூறுவது சரி தான்.”) உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி (சிரிப்பு). ஆனால் இதிலிருந்து தேவையான முடிவுகளை எடுக்க முயலுங்கள். மேலும் அரசியல் எழுத்திற்கும் கவிதைக்கும் இடையே ஏன் ஒரு சிறந்த ஒருமுகப்படுத்தப்பட்டதன்மை இல்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். பழைய உத்தியோகபூர்வ மார்க்சிச இதழ்களில் சில நேரங்களில் தெளிவில்லாமலும் அல்லது அப்பட்டமாக தவறாகவும் இருந்த கலைத்துறைச் சேர்ந்த "உடன்-பயணிகளுடன்" நாம் ஏன் நம்மைநாமே நிலைநிறுத்தி கொண்டிருந்தோம் என்பதை புரிந்துகொள்ள அது உதவும். பழைய உத்தியோகபூர்வ மார்க்சிச இதழ்களில் சிறந்து விளங்கிய Novoye Slovo ல், விளாடிமீர் இலியிச் உட்பட பழைய தலைமுறையைச் சேர்ந்த பல மார்க்சிசவாதிகள் இடம் பெற்றிருந்தார்கள் என்பது நிச்சயமாக உங்களுக்கு நினைவிருக்கும். அனைவரும் அறிந்துள்ளபடி, இந்த இதழ்கள் இலக்கியத்தரங்குறைந்தவர்களுடன் நெருக்கமாக இருந்தன. அதற்கான காரணம் என்ன? ஏனென்றால் அப்பொழுது அந்த இலக்கியத்தரங்குறைந்தவர்கள் இளையவர்களாகவும் முதலாளித்துவ இலக்கியத்தில் இடர்ப்படுத்தப்பட்ட போக்கினராகவும் இருந்தார்கள். அவர்களுடைய இந்த துக்ககரமான நிலைமையும், மேலும் முதலாளித்துவ இலக்கியம் அதன் தன்மையில் மிகவும் வித்தியாசமாக இருந்ததாலும், நம்முடைய எதிர்தரப்பு நிலைப்பாட்டின் பக்கம் அவர்களை அது ஒதுங்க செய்தது. இவற்றால் அவர்கள் தற்காலிகமாக நம்முடைய உடன்-பயணிகளாக ஆனார்கள். பின்னர் வந்த  மார்க்சிச இதழ்கள் (அரைகுறை மார்க்சிச இதழ்களும் இதில் சேரும் என்பதைக் கூற வேண்டியதே இல்லை), Prosveshcheniye வரை, "ஒருமைப்பாட்டைக்" கொண்டிருக்கவில்லை. ஆனால் "உடன்-பயணிகளுக்காக" இவற்றில் கணிசமான இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. இத்தன்மையில், சில இதழ்கள் மிகவும் கடுமையாகவோ அல்லது மிகவும் பரிவுடனோ இருந்தன. ஆனால் கலைத்துவ கூறுபாடுகளுக்குத் தேவையான  இதுபோன்றதோர் "ஒருமுகப்படுத்தப்பட்ட" கொள்கை இல்லாததால், கலைத்துறையில் ஓர் "ஒருமுகப்படுத்தப்பட்ட" கொள்கையைக் கொண்டு செல்வது சாத்தியமில்லாமல் இருந்தது.

ஆனால் அடிஆழத்தில், ரஸ்கோலினிகோவ் இதை விரும்பவில்லை. கலை பணிகளில் எது அவற்றை கலையின் படைப்புகளாக உருவாக்குகின்றனவோ அதை அவர் நிராகரிக்கிறார். டான்டேயின் Divine Comedy பற்றிய அவருடைய குறிப்பிடத்தக்க முடிவில் இது மிகத் தெளிவாக வெளிப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தின் உளவியலைப் புரிந்து கொள்ள அது நமக்கு உதவுவதால், அது நமக்கு மதிப்புடையதாக இருக்கும் என்பது அவருடைய கருத்தாக இருக்கிறது. விஷயத்தை இவ்விதத்தில் குறிப்பிடுவது, Divine Comedyயைக் கலைத் துறையிலிருந்தே அகற்றுவது போலாகும். ஒருவேளை அதற்கான நேரம் வந்து விட்டது போலும். ஆனால், அவ்வாறிருப்பின், பிரச்சினையின் சாராம்சத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்; மேலும், முடிவுகள் எடுப்பதற்கும் தயக்கம் காட்டக்கூடாது. ஒரு குறிப்பிட்ட சகாப்தத்தின் குறிப்பிட்ட வர்க்கங்களின் மனநிலையைப் பற்றிய புரிதலை அது அளிக்கிறது என்ற உண்மையில் தான் Divine Comedyஇன் முக்கியத்துவம் தங்கியுள்ளது என்று நான் கூறினால், அதன் அர்த்தம் நான் அதை வெறும் வரலாற்று ஆவணமாக மாற்றுகிறேன் என்று தான் ஆகும்; ஏனெனில் ஒரு கலைப்படைப்பு என்ற முறையில், Divine Comedy ஏதோவொருவகையில் என்னுடைய உணர்வுகளையும், போக்குகளையும் குறித்து பேச வேண்டும். டான்டேயின் படைப்பு எனக்குள்ளே ஒரு தளர்ச்சியை ஏற்படுத்தும் விதத்தில் இருக்கலாம். அவநம்பிக்கையையும், பெரும் சோகத்தையும் கொடுக்கலாம். அல்லது, மாறாக அது எனக்கு எழுச்சியையும், உந்துதலையும் அல்லது ஊக்கத்தையும் அளிக்கலாம். இதுதான் ஒரு வாசகருக்கும் ஒரு கலைப்படைப்பிற்கும் இடையிலிருக்கும் அடிப்படை உறவாக உள்ளது. Divine Comedyயை வாசகர் ஒரு வெறும் வரலாற்று ஆவணம் என்னும் முறையில் ஓர் ஆய்வாளராக அணுகுவதை எவரும் தடுக்க வில்லை என்பது உண்மையே. இந்த இரண்டு அணுகுமுறைகளும் இரண்டு வெவ்வேறு தரங்களில் உள்ளன என்பது தெளிவாக இருக்கின்ற என்ற போதினும், அவற்றிற்கு இடையே தொடர்பு இருந்தாலும் கூட, அவை ஒன்றில்ஒன்று குறுக்கிடுவதில்லை. நமக்கும் ஓர் இடைக்கால இத்தாலிய புத்தகத்திற்கும் இடையே ஒரு வரலாற்றுரீதியான உறவு இருக்க வேண்டியதில்லை என்றும், ஆனால் ஒரு நேரடியான அழகுணர்ச்சி சார்ந்த உறவு மட்டும் இருக்க வேண்டும் என்றும் எவ்வாறு நினைக்க முடியும்? ஒரு வர்க்கச் சமுதாயத்தில், அதன் அனைத்து மாறுதல்களினூடாக, சில பொதுக் கூறுபாடுகளும் உள்ளன என்ற உண்மைதான் இதை விளக்குகிறது. ஓர் இடைக்காலத்தின் இத்தாலிய நகரத்தில் அபிவிருத்தி செய்யப்பட்ட கலைப்படைப்புகளும் நம்மிடையே தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதை நாம் காண்கிறோம். இதற்கு என்ன தேவைப்படுகிறது? இந்த உணர்வுகளும், மனநிலைகளும் அக்காலத்திய வாழ்வின் வரம்புகளையும் கடந்து எழுந்திருந்த அத்தகைய பரந்த, தீவிர, சக்திவாய்ந்த வெளிப்பாடுகளிலிருந்து பெற்றிருக்கக்கூடும் என்ற ஒரு சிறுவிஷயமே தேவைப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட சமுதாய கூட்டத்தின் விளைபொருளாக தான்  டான்டே இருந்தார். ஆனால் டான்டே ஒரு மேதை. அவர் தன்னுடைய சகாப்தத்தின் அனுபவத்தை ஒரு மாபெரும் கலைத்துவ உயரத்திற்கு எழுப்பினார். இடைக்கால இலக்கியத்தின் ஏனைய படைப்புகளை வெறும் ஆய்வுப்பொருளாகவும், Divine Comedyஐ கலைத்துவ உணர்வுகளின் ஓர் ஆதாரமாக மட்டுமே இன்று நாம் அணுகும் போது, டான்டே 13ஆம் நூற்றாண்டின் குட்டி முதலாளித்துவ பிளோரன்ஸ்வாசி என்பதற்காக இது நடக்கவில்லை. மாறாக ஒரு கணிசமான அளவிற்கு, அங்கிருந்த சூழ்நிலைகளின் காரணமாக நடந்தது. உதாரணமாக மரண பயம் பற்றிய ஓர் அடிப்படை உளவியல் உணர்வை எடுத்துக் கொள்ளுவோம். இந்த உணர்வு மனிதனுக்கு மட்டுமல்ல, விலங்குகளுக்கும் உண்டு. மனிதனிடம் தான் அது முதலில் வார்த்தைகளில் வெளிப்பட்டது; பின்னர் கலைத்துவ வெளிப்பாடாக வெளிப்பட்டது. வெவ்வேறு காலக்கட்டங்களில், வெவ்வேறு சமூக கூட்டங்களில், இந்த வெளிப்பாடு மாறுபட்டிருந்திருக்கிறது; அதாவது மனிதர்கள் பல்வேறு விதங்களில் இறப்பைக் கண்டு அஞ்சியுள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும். ஆயினும்கூட இதைப்பற்றி ஷேக்ஸ்பியர், பைரன், கோத்தே ஆகியோரால் சொல்லப்பட்டது மட்டுமின்றி, மாறாக தாவீதுகளின் வார்த்தைகள் கூட நம்மை நகர்த்தி செல்லக்கூடும். (தோழர் லிபிட்ன்ஸ்கியிடமிருந்து ஆச்சரியம் வெளிப்படுகிறது) ஆம்... ஆம்... தோழர் லிபிட்ன்ஸ்கி அவர்களே, வெவ்வேறு வர்க்கங்களில் நிலவும் மனநிலையைக் குறித்தும், உணர்வு மாற்றங்களைக் குறித்தும் நீங்கள் தோழர் வோரோன்ஸ்கிக்கு அடிப்படை அரசியல் கருத்துக்களினூடாக (நீங்களே உங்கள் வார்த்தைகளில் இவ்வாறு கூறிக்கொண்டீர்கள்) விளக்கிக் கொண்டிருக்கும் நேரத்தில், நான் வந்தேன். பொதுவான அதன் வடிவத்தில், அதை மறுக்கமுடியாது. எவ்வாறிருப்பினும், அவற்றிற்காக, ஷேக்ஸ்பியரும், பைரனும் உங்கள் ஆன்மாவுடனும், என்னுடனும் ஏதோவொருவகையில் பேசுகின்றனர் என்பதை நீங்கள் மறுக்க மாட்டீர்கள். (லிபிட்ன்ஸ்கி: "அவர்கள் விரைவிலேயே பேசுவதை நிறுத்திவிடுவார்கள்.") அது விரைவிலேயே நடக்குமா என்பது எனக்குத் தெரியாது; ஆனால், சந்தேகத்திற்கு இடமின்றி, பிரத்யேகமாக மத்தியகாலங்களின் பெரும்பாலான கவிஞர்களை நாம் அணுகும் விஞ்ஞானபூர்வ-வரலாற்று பகுப்பாய்வின் நிலைப்புள்ளியிலிருந்து, அதே வழியில் ஷேக்ஸ்பியரையும், பைரனையும் மக்கள் அணுகும் காலம் வரும். எவ்வாறிருப்பினும், மக்கள் தங்களின் அன்றாட நடவடிக்கைகளுக்கான கருத்துக்களை மார்க்ஸின் மூலதனத்தில் தேடுவதை நிறுத்தும் காலமும்; நம்முடைய கட்சியின் வேலைத்திட்டத்துடன் சேர்த்து மூலதனம் வெறுமனே ஒரு வரலாற்று ஆவணமாக மாறிவிடும் காலமும் அதற்கும் முன்னதாகவே வரும். ஆனால் தற்போது ஷேக்ஸ்பியர், பைரன், புஷ்கின் ஆகியோரை ஆவணக்காப்பகங்களில் வைத்துவிட இன்னும் நாம் விரும்பவில்லை; தொழிலாளர்களுக்கு அவற்றைத் தொடர்ந்து பரிந்துரை செய்வோம். உதாரணமாக, சந்தேகத்திற்கிடமின்றி இன்னும் ஐம்பது ஆண்டுகளில் புஷ்கின் காணாமல் போனாலும் போய்விடுவார் என்று கூறி, தோழர் சொஸ்னோவ்ஸ்கி புஷ்கினை வலுவாக பரிந்துரைக்கிறார். நாம் காலக்கட்டங்களைப் பற்றி பேச வேண்டாம். ஆனால் எந்த உணர்வில் நாம் புஷ்கினை ஒரு தொழிலாளருக்குப் பரிந்துரைப்பது? புஷ்கினிடத்தில் ஒரு பாட்டாளி வர்க்கப் பார்வை இல்லை கம்யூனிச உணர்வுகளோடு ஐக்கியப்பட்ட வெளிப்பாடும் இல்லை. ஆனால் புஷ்கினின் மொழிவளம் மகத்தானது-அதை மறுப்பதற்கில்லை; ஆனால் பிரபுக்களின் உலக கண்ணோட்டத்தை வெளிப்படுத்தவே இந்த மொழிவளம் அவரால் பயன்படுத்துட்டுள்ளது. வசந்தகாலத்தையும், இலையுதிர் காலத்தையும் அனுபவித்த ஒரு பிரபு, ஒரு பண்ணையாளர், ஒரு படுக்கையறை கனவான் எவ்வாறு இருப்பார் என்பதைப் புரிந்து கொள்வதற்காக புஷ்கினைப் படியுங்கள் என்று நாம் தொழிலாளர்களிடம் கூறமுடியுமா? புஷ்கின் ஒரு குறிப்பிட்ட சமூகத்தளத்தில் வளர்ந்தவர் என்பதால், அவரிடம் இந்த கூறுபாடுகள் உண்டு என்பது உண்மைதான். ஆனால் தன்னுடைய உணர்வுகளுக்குக் கலைநயத்துடன், பொதுவாக உளவியல்ரீதியாக, நூற்றாண்டுகளின் அனுபவத்துடன், புஷ்கின் அளித்த வெளிப்பாடு அற்புதமானது. அது படிமமாகி நிற்கிறது; அவை நம் காலம் வரை நீடித்துள்ளது; தோழர் சொஸ்னோவ்ஸ்கியின் கருத்துப்படி இன்னும் ஐம்பது ஆண்டுகள் நீடிக்கலாம். நமக்கான டான்டேயின் கலைத்துவ முக்கியத்துவம் அவருடைய வெளிப்பாடுகளில் ஒரு குறிப்பிட்ட சகாப்தத்தின் வாழ்க்கை முறையைக் கொண்டிருக்கிறது என்று மக்கள் என்னிடம் கூறும் போது, அது நம்மை இயலாமையால் கைகளை விரிய வைக்கிறது. டான்டேயைப் படித்த பின்னர், என்னைப் போலவே பலரும், அவர் எங்கே, எப்பொழுது பிறந்தார் என்பதை நினைவில் கொண்டு வர சிரமப்படத்தான் வேண்டியதிருக்கும்; ஆயினும்கூட அது கலைக்களிப்பைப் பெறுவதிலிருந்து நம்மை தடுக்காது எனலாம்; Divine Comedy முழுவதும் அவ்வாறு இல்லாவிட்டாலும் கூட, ஒரு சில பகுதிகளேனும் அத்தகைய உணர்வை அளிக்கும். நான்  ஓர் இடைக்கால வரலாற்றாளன் இல்லை என்பதால், டான்டே பற்றிய என்னுடைய அணுகுமுறை முற்றிலும் கலையைச் சார்ந்திருக்கிறது. (ரையஜநோவ்: “இது ஒரு மிகையான கூற்று. வரலாற்றுக்கு எதிராக இருக்கும் ஷெவ்ரியேவ் பைலின்ஸ்கிக்குப் பதில் கூறுகையில், ‘டான்டேயைப் படிப்பது கடலில் குளிப்பது போல்’ என்று கூறினார்.”) தோழர் ரையஜநோவ் குறிப்பிடுவது போல் ஷெவ்ரியேவ் அவருடைய கருத்தை வெளிப்படுத்தினார் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. ஆனால் நான் வரலாற்றிற்கு எதிரானவன் அல்ல - அது அர்த்தமற்றது. டான்டே பற்றிய வரலாற்று அணுகுமுறை நியாயமானது; தேவையானதும் கூட. அது அவரைப் பற்றிய நம்முடைய எழிலார்ந்த அணுகுமுறையைப் பாதிக்கிறது. ஆனால் ஒன்றிற்காக மற்றொன்றை ஒருவர் மாற்றீடு செய்வதற்கில்லை. மார்க்சிஸ்டுகளுடனான விவாதத்தில் இக்கருத்து குறித்து கரியேவ் என்ன எழுதினார் என்பதை இங்கே நினைவுகூர்ந்து பார்க்க விரும்புகிறேன்: உதாரணமாக Divine Comedy என்னமாதிரியான வர்க்க நலன்களைக் குறிப்பிடுகிறது என்று அவர்கள் - மார்க்சைடுகள் (அப்படித்தான் அவர்கள் அந்நாட்களில் மார்க்சிஸ்டுகளைப் பேச்சுவழக்கில் குறிப்பிட்டார்கள்) நமக்கு கூறுகிறார்கள். மறுபுறத்தில், இத்தாலிய மார்க்சிஸ்டான முதிய அன்டோனியோ லப்ரியோலா  கீழே குறிப்பிட்டிருப்பதைப் போல ஏதோவொன்றை எழுதினார்: “தங்கள் வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பதற்கு ப்ளோரன்ஸின் வணிகர்கள் தயாரித்த ஆடையைப் போல அது இருந்தாலும் கூட, முட்டாள்கள் மட்டும் தான் Divine Comedyஇன் எழுத்துக்களுக்கு அர்த்தம் அளிக்க முயற்சிப்பார்கள்." அகநிலைவாதிகளுடனான விவாதத்தில் இந்த வார்த்தைகளை மேற்கோளிட்டுக் காட்ட வேண்டிய நிலைமை பலதடவை ஏற்பட்டிருக்கிறது என்பதால், இந்த வெளிப்பாடு வார்த்தைக்கு வார்த்தை என்னுடைய நினைவில் உள்ளது. தோழர் ரஸ்கோலினிகோவின் அணுகுமுறை டான்டே பற்றி மட்டுமல்ல, மாறாக பொதுவாக கலையைப் பற்றியே மார்க்சிய அளவுகோலில் அடிப்படையில் அமையவில்லை. மாறாக மறைந்த ஷூல்யடிகோவ்விலிருந்து செல்கிறது என்று நான் நினைக்கிறேன். ஷூல்யடிகோவ் தான் இந்த தொடர்பில் ஒரு மார்க்சியத்தின் கேலிச்சித்திரத்தை அளித்தார். இத்தகைய கேலிச்சித்திரம் குறித்து அன்டோனியோ லப்ரியோலாவும் அவருடைய கடுமையான கருத்துக்களை அளித்துள்ளார்.

“இலக்கியத்தை நான் புரிந்து கொண்டிருக்கும் வரையில், மேற்தட்டிலிருப்பவர்களின் கண்களில் தெரியும் உலகமே பாட்டாளி வர்க்க இலக்கியமாக இருக்கிறது", இன்னும் இது போல எவ்வளவோ. இதுதான் தோழர் லெலிவிச்சின் கருத்தாக இருக்கிறது. நல்லது, இந்த விளக்கத்தை ஏற்கத் தயாராக உள்ளோம். ஆனால் விளக்கத்தை மட்டுமல்ல, இலக்கியத்தையும் கொடுங்கள். அது எங்கே இருக்கிறது? எங்களுக்கு அதைக் காட்டுங்கள் பார்ப்போம்! (லெலிவிச்: “கோம்சோமோலியா - சமீப காலத்தின் மிகச் சிறந்த படைப்பு”.) எந்த காலத்தின்? (ஒரு குரல்: “கடந்த ஆண்டின்”) சரி, நல்லது, கடந்த ஆண்டினது. நான் வாதம் செய்யவிரும்பவில்லை. பெஜிமென்ஸ்கி பற்றிய என்னுடைய அணுகுமுறையில் எதிர்மறை என்று கூறத்தக்கது ஏதும் இல்லை என்று நான் நம்புகிறேன். கோம்சோமோலியாவை (Komsomolia) நான் கையெழுத்துப் பிரதியில் படித்தபோது, அதை மிகவும் பாராட்டினேன். ஆனால் இதையொட்டி பாட்டாளி வர்க்க இலக்கியம் வந்துவிட்டது என்று அறிவிக்க முடியுமா என்றால், மாயாகோவ்ஸ்கி, பாஸ்டெர்மாக், பில்நயக்கும் கூட நமக்கு இல்லையென்றால், பெஜிமென்ஸ்கியை ஒரு கலைஞராக கூட கணக்கில் எடுக்கமுடியாது என்று தான் நான் கூறுவேன். (ஒரு குரல்: “அது எதையும் நிரூபிக்கவில்லை.”) இது நிரூபிக்கிறது, குறைந்தபட்சம் - இது ஒரு குறிப்பிட்ட சகாப்தத்தின் கலைத்துவ படைப்புத்திறன் மிகவும் சிக்கல்வாய்ந்த ஒரு வலைப்பின்னலாக இருக்கிறது; அது கருத்தரங்குகள் மற்றும் குழு விவாதங்களால் தானாக நெய்யப்படவில்லை; மாறாக, ஒன்றுடன்ஒன்று கொண்டுள்ள சிக்கலான உறவுகள் மூலமாக, குறிப்பாக வெவ்வேறு உடன்-பயணிகளின் குழுக்களை முதலிடத்தில் கொண்டு, அது அதன் இருப்பிற்குள் வருகிறது என்பதை நிரூபிக்கிறது. அந்த உண்மையிலிருந்து நீங்கள் தப்ப முடியாது; பெஜிமென்ஸ்கி முயற்சிக்கவே இல்லை, அவ்வாறு முயலாததும் நல்லதுதான். அவருடைய சில படைப்புக்களில், “உடன் பயணிப்பவர்களின்" தாக்கம் இருப்பதைக் கூட கவனிக்கலாம். ஆனால், இது இளமையின் மற்றும் வளர்ச்சியின் போக்கில் தவிர்க்க முடியாத ஒரு நிகழ்வாகும். மேலும் "உடன்-பயணிப்பவர்களுக்கு" எதிரான தோழர் லிபிட்ன்ஸ்கியும் இங்கே நம்மிடையே இருக்கிறார். அவரே கூட பில்நயக்கின், பெய்லியின் ஒரு நகலாகவும் இருக்கிறார். ஆம், ஆம், தோழர் அவெர்பாஹ் என்னை மன்னிக்க வேண்டும். அவர் தலையசைப்பதை நான் பார்க்கிறேன். ஆனால் அதிக நம்பிக்கையில்லாமல் தலையசைக்கிறார். லிபிட்ன்ஸ்கியின் கடைசிக் கதை,  Zavtra [நாளை] ஒரு இணைகரத்தின் குறுக்கு விட்டம் போல இருக்கிறது. ஒருபுறத்தில் பில்நயக்கும், மற்றொருபுறத்தில் ஆண்ட்ரி பெய்லியும் இருக்கிறார்கள். அதுமட்டுமே துரதிருஷ்டமல்ல; Na Postu இருக்கும் நாட்டில் முன்கூட்டிய தயாரிக்கப்பட்ட ஓர் எழுத்தாளராக லிபிட்ன்ஸ்கி பிறக்க முடியாது. (ஒரு குரல்: “அது ஒரு மலட்டு நாடு.”) அவருடைய Nedelya [அந்த வாரம்-The Week] முதன்முதலில் வெளிவந்த பின்னர், நான் ஏற்கனவே லிபிட்ன்ஸ்கி குறித்து பேசியுள்ளேன். நீங்கள் நினைத்துப் பார்ப்பது போல், அப்பொழுது புக்ஹாரின் அவருடைய இயல்பான பரந்த மனப்பான்மையுடனும், பரிவுடனும் அதைப் பெரிதும் பாராட்டினார். இப்பாராட்டு என்னை எச்சரிக்கை செய்தது. இதற்கிடையில் தோழர் லிபிட்ன்ஸ்கி அந்த எழுத்தாளர்களை-அதாவது, “உடன்-பயணிப்பவர்களையும்” மற்றும் ஓரளவிற்கு உடன்-பயணிப்பவர்களையும்-மிக அதிகமாக சார்ந்திருந்ததை என்னால் காண முடிந்தது. இவர்களைத் தான் அவரும் அவரின் சக-சிந்தனையாளர்கள் அனைவரும் Na Postuஇல் சபித்தார்கள். கலையும், அரசியல் எழுத்துக்களும் எப்போதும் ஒருமைப்படுவதில்லை என்பதை நீங்கள் மீண்டுமொருமுறை காணலாம். அதற்காக, ஒரு தரமற்ற வேலை என்று தோழர் லிபிட்ன்ஸ்கியை விட்டுவிட எனக்கு விருப்பம் இல்லை. சித்தாந்தரீதியாக நம்முடன் நெருக்கமாக இருக்கும் ஒவ்வொரு இளம் கலைத்துறை திறமையாளருக்கும், அதுவும் நம்முடன் ஆயுதமேந்திய சகோதரராக இருக்கும் ஒருவருக்கு, பெரும் அக்கறை காட்ட வேண்டும் என்பது நம்முடைய பொதுக்கடமையாக இருக்கிறது என்பதில் நாம் அனைவரும் தெளிவாக இருக்கிறோம் என்று நான் நினைக்கிறேன். அத்தகைய ஒரு கவனிப்பின், அக்கறைக் காட்டும் மனோபாவத்தின் முதல் நிபந்தனையானது, பக்குவமில்லாத பாராட்டை அளிப்பதற்காக அல்ல, அது அந்த இளம் எழுத்தாளரின் சுய-விமர்சனத்தைக் கொல்வதற்காக செய்வது. இரண்டாவது நிபந்தனை, ஒருவர் தடுமாறும் போது உடனேயே அவரை கைக்கழுவி விடுவதல்ல. தோழர் லிபிட்ன்ஸ்கி இப்போதும் மிகவும் இளையவர். அவர் கற்று வளர வேண்டியுள்ளது. மேலும், இந்த முறையில் பில்நயக் ஒரு தேவையைப் பூர்த்தி செய்வதாக உள்ளது. (ஒரு குரல்: “லிபிட்ன்ஸ்கிக்கா, நமக்கா?”). முதலில் லிபிட்ன்ஸ்கிக்கு. (லிபிடின்ஸ்கி: “ஆனால் பில்நயக்கினால் எனக்குள் விஷமேற்றப்பட்டிருக்கிறது என்பதைத் தான் இது குறிக்கிறது.") அந்தோ, விஷத்தை உட்கொள்வதன் மூலமாகவும்,   அதை எதிர்க்கும் உள் ஆதாரங்களை உருவாக்குதன் மூலமாகவும் மட்டும் தான் மனித உடல் ஊட்டம் பெறுகிறது. அது தான் வாழ்க்கை. ஒரு காஸ்பியன் குடுமி போல, உங்களை நீங்களே வறண்டு போக விட்டுவிட்டால், அது நீங்கள் விஷமேற்றப்பட்டிருக்கிறீர்கள் என்பதைக் குறிக்காது. மாறாக  நீங்கள் ஊட்டம் பெற மாட்டீர்கள்; உண்மையில், எதுவும் நடக்காது என்பதைத் தான் அது குறிக்கும். (சிரிப்பு)

பாட்டாளி வர்க்கக் கலாச்சாரம் மற்றும் அதன் உட்கூறுபாட்டுப் பகுதி குறித்தும், பாட்டாளி வர்க்க இலக்கியம் குறித்தும் தம்முடைய கருத்துக்களை ஆதரித்து இங்கே பேசிய தோழர் ப்ளெட்னெவ், எனக்கு எதிராக விளாடிமிர் இலியிச்சை மேற்கோளிட்டார். உண்மையிலேயே அதில் சில விஷயங்கள் இப்போது வாதத்திற்குப் பொருத்தமானது! அதற்கு நாம் உரிய பரிசீலனையை அளித்தே ஆக வேண்டும். சிறிது காலத்திற்கு முன்னர் ப்ளெட்னெவ், ட்ரெடியகோவ் மற்றும் சிஜோவ் எழுதிய ஒரு குறுநூல் வெளியானது. அதில் ட்ரொட்ஸ்கிக்கு எதிராக லெனின் மேற்கோள்கள் மூலமாக, பாட்டாளி வர்க்க இலக்கியத்திற்கு ஆதரவு காட்டப்பட்டிருந்தது. இப்போதெல்லாம் இந்த முறை தான் மிகவும் நாகரீகமாக இருக்கிறது. அந்த விஷயத்தைக் குறித்து விளாடீரினால் ஒரு முழு ஆய்வுக்கட்டுரையையே எழுத முடியும். ஆனால் தோழர் ப்ளெட்னவ் அவர்களே, உண்மை என்னவென்றால், விஷயங்கள் எப்படி இருந்தன என்று உங்களுக்கு மிக நன்றாகவே தெரியும். ஏனென்றால், மரண தருவாயிலிருந்த விளாடிமிர் இலியெச்சின் இடிமுழக்கத்திலிருந்து உங்களைக் காப்பாற்றக் கூறி நீங்களே என்னிடம் முறையிட்டிருக்கிறீர்கள். உங்களின் இந்த "பாட்டாளி வர்க்க கலாச்சாரத்தின்" மூலமாக Proletkultஐ (பாட்டாளி வர்க்க கலாச்சாரம்) ஒட்டுமொத்தமாக மூடிவிடலாம் என்று நீங்கள் நினைத்தீர்கள். ஆனால் ஒரு சில காரணங்களை ஒட்டி Proletkult தொடர்ந்து இருக்க நான் ஆதரவு அளிப்பேன் என்று உங்களிடம் நான் உறுதியளித்தேன். ஆனால் பாட்டாளி வர்க்கக் கலாச்சாரம் பற்றிய பொக்டனோவின் கருத்துக்கள் மீது, விளாடிமீர் இலியெச்சுடன் முழுவதும் உடன்பட்ட நிலையில் நான் உங்களையும் உங்கள் பாதுகாவலர் புக்ஹாரினையும் முற்றிலும் எதிர்த்தேன்.

கட்சி பாரம்பரியத்தின் உயிர்வாழும் உள்ளடக்கத்திற்கு சிறிதும் குறைவில்லாமல் பேசும் தோழர் வார்டின், பாட்டாளி வர்க்க கலாச்சாரம் குறித்து லெனின் என்ன எழுதினாரோ அதைக் கொடூரமாக மிதிப்பதிலிருந்து பின்வாங்கவில்லை. நாம் அறிந்துள்ளபடி, இங்கே சுற்றிலும் நிறைய வெற்று விசுவாசிகள் இருக்கிறார்கள்: மக்கள் லெனினுடன் உறுதியாக உடன்படுகின்றனர். ஆனால் பின்னர் அவருடைய கண்ணோட்டங்களுக்கு முற்றிலும் எதிராக உபதேசிக்கின்றனர். வேறு விளக்கத்திற்கு வழிவிடாத வகையில், "பாட்டாளி வர்க்க கலாச்சாரம் குறித்த உளறல்கள்" என்று லெனின் இரக்கமின்றி கண்டித்தார். ஆனால் இச்சான்றில் இருந்து வெளியே வருவதற்கு வேறு எளிய வழி ஏதும் இல்லை: லெனின் பாட்டாளி வர்க்க கலாச்சாரம் பற்றிய உளறல்களை ஏன் கண்டித்தார், ஆனால் உங்களுக்குப் புரியவில்லையா, அவர் உளறல்களை மட்டும் தான் கண்டித்தார். ஆனால் நாம் உளறிக் கொண்டிருக்கவில்லை. மாறாக தீவிரமாக வேலையில் இறங்குகிறோம் என்பதுடன், நம்முடைய கரங்களை இடுப்பில் வைத்து கம்பீரத்தோடு தயாராக இருக்கிறோம். லெனின் கடுமையான கண்டனம் அவரைப்பற்றி இப்போது குறிப்பிடுபவர்களைத் தான் முக்கியமாக கவனத்தில் கொண்டிருந்தது என்பதை தான் அவர்கள் மறந்து விடுகிறார்கள். வெற்றுத்தனமான விசுவாசம், நிறைய கிடைக்கிறது என்பதை மீண்டும் நான் கூறுகிறேன்: லெனினை சுட்டிக்காட்டிக் கொண்டே, அவருக்கு எதிர்மாறான செயல்பாடுகள் உள்ளன.

பாட்டாளி வர்க்க கலாச்சாரம் என்ற அடையாளத்தின் கீழ் இங்கே பேசியிருக்கும் தோழர்கள், அந்த கருத்துக்களை எழுதியவர்களின் மனோபாவத்திற்கு ஏற்றபடி, தங்களின் Proletkult குழுக்களை வெவ்வேறு கருத்துக்களுடன் அணுகினார்கள். இதை நான் சோதித்து பார்த்திருக்கிறேன்; என்னுடைய சொந்த விஷயத்திலும் கூட அது உண்மையாக இருந்திருக்கிறது. சில தோழர்களிடையே அபாய உணர்வை ஏற்படுத்திய, இலக்கியம் பற்றிய என்னுடைய நூல், Pravdaஇல் கட்டுரைகள் வடிவில் முதலில் வந்தன என்பது உங்களில் சிலருக்கு நினைவிருக்கும். ஓரிரு ஆண்டுகளில் இப்புத்தகத்தை நான் எழுதினேன், இரு கோடை விடுமுறைக் காலங்களில். நம்மை ஈர்க்கும் பிரச்சினைகளின் தொடர்பாக இன்று இது முக்கியத்துவம் பெறுகிறது என்பதைக் கருத்திற் கொள்ள வேண்டும். முதலில் செய்தித்தாள் கட்டுரைகள் வடிவில் அது தோன்றியபோது, “அக்டோபர்-அல்லாத” இலக்கியம் குறித்தும், “உடன் பயணிப்பவர்கள்”, “கிராமியப் பாடகர்கள்” (peasant-singers) குறித்தும் இருந்த புத்தகத்தின் முதல் பகுதி, உடன்-பயணிப்பாளர்களின் சிந்தனைப்போக்கு-கலை பற்றிய நிலைப்பாட்டில் இருக்கும் முரண்பாடுகளையும், மட்டுப்படுத்தப்பட்ட தன்மையையும் அம்பலப்படுத்தியது: அதற்காக Na Postu தோழர்கள் என்னை ஆர்வத்துடன் பாராட்டினார்கள்-எங்கு பார்த்தாலும் உடன்-பயணிப்பவர்கள் பற்றிய என்னுடைய கட்டுரைகளிலிருந்து மேற்கோள்கள் வெளிவந்தன. ஒரு கட்டத்தில் அது எனக்கு பெரும் தளர்ச்சியையே ஏற்படுத்திவிட்டது. (சிரிப்பு) “உடன்-பயணிப்போர்” பற்றிய என்னுடைய மதிப்பீடு அநேகமாகப் பிழையற்றது என்றே கருதப்பட்டது. வார்டின்கூட அதற்கு எதிர்ப்புக்கள் எதையும் தெரிவிக்கவில்லை. (வார்டின்: “இப்பொழுதும் நான் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.” அதைத்தான் நானும் கூறுகிறேன். அப்படியானால் இப்பொழுது ஏன் நீங்கள் மறைமுகமாக, குறைகூறும் விதத்தில் எனக்கு எதிராக “உடன்பயணிப்போர்” பற்றி வாதிடுகிறீர்கள்? இங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது? முதல் பார்வையில் இது புரிந்து கொள்ள முடியாததாக இருக்கும். ஆனால் இதற்குத் தீர்வு மிக எளிதானது: அதாவது, உடன்-பயணிப்போரின் சமூக இயல்பை அல்லது அவர்களின் கலைத்துவ முக்கியத்துவத்தை நான் தவறாக வரையறுத்தேன் என்பது என்னுடைய குற்றமல்ல-நிச்சயமாக இல்லை, நாம் செவியுற்றபடி, இப்போதும் கூட தோழர் வார்டின் "அதை மறுக்க மாட்டார்"-நான் Oktyabror Kuznista அறிக்கைகளுக்கு அடிபணியவில்லை என்பதும், இந்த குழுக்கள் பாட்டாளி வர்க்க கலைத்துவ நலன்களின் ஏகபோக பிரதிநிதிகள் என்று நான் ஒப்புக் கொள்ளவில்லை என்பதும் தான் என்னுடைய குற்றமாக இருக்கிறது-சுருக்கமாகக் கூறினால், சில இலக்கியக் குழுக்களின் நோக்கங்களோடு, திட்டங்களோடு, பாசாங்குத்தனங்களோடு வர்க்கத்தின் கலாச்சார-வரலாற்று நலன்களையும், பணிகளையும் நான் அடையாளம் காணவில்லை. அங்கே தான் நான் தவறிழைத்தேன். எதிர்பாராதவிதமாக இது காலங்கடந்து தெளிவான போது, அங்கே அப்போது பெரும் கூச்சல் எழுந்தது: அதாவது, ட்ரொட்ஸ்கி குட்டி முதலாளித்துவ “உடன்-பயணிப்பாளர்களின்” பக்கம் இருக்கிறார்! என்று. நான் “உடன்-பயணிப்பாளர்களுக்காகவா” இருக்கிறேன், அல்லது அவர்களுக்கு எதிராகவா இருக்கிறேன்? எந்தவிதத்தில் நான் அவர்களுக்கு எதிராக இருக்கிறேன்? சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, “உடன்-பயணிப்பாளர்கள்” குறித்த என்னுடைய கட்டுரைகளிலிருந்து நீங்கள் அறிவீர்கள். ஆனால் அப்போது நீங்கள் உடன்பட்டீர்கள்; பாராட்டினீர்கள்; மேற்கோளிட்டுக் காட்டினீர்கள்; உங்களின் ஒப்புதலை அளித்தீர்கள். ஆனால் ஓராண்டிற்குப் பின்னர், “உடன் பயணிப்போர்” பற்றிய என்னுடைய விமர்சனம் சில நயமற்ற இலக்கிய குழுவை அல்லது ஏனைய அப்போதிருந்த எழுத்தாளர்கள் மற்றும் இந்த குழுக்களின் ஆதரவாளர்களைப் பெருமைப்படுத்தும் வெறும் அணுகுமுறையல்ல என்று கூறியதும், இக்குழுக்களைச் சேர்ந்தவர்களும், அல்லது இந்த குழுக்களைச் சேராதவர்களும் கூட தலைகீழாக திரும்பிவிட்டார்கள். அவர்கள் “உடன்-பயணிப்பவர்கள்” குறித்து என்னுடைய தவறான போக்கிற்கு எதிராக அவர்களின் தத்துவார்த்த வாதங்களைக் கொண்டு வந்தார்கள். ஓ, மூலோபாயவாதிகளே! நான் பில்நயக்கையோ அல்லது மாயகோவ்ஸ்கியையோ தவறாக மதிப்பிட்டேன் என்பது என்னுடைய வருத்தமில்லை - நான் கூறியது எதையுமே Na Postu குழு சேர்க்கவில்லை. மாறாக அது வெறுமனே அவற்றை கீழ்தரமான வடிவத்தில் மீண்டும் எடுத்துரைத்தது - நான் அவர்களின் இலக்கிய கூடத்தைப் போய் தட்டினேன் என்பது தான் என்னுடைய வருத்தம்! அவர்களின் ஒட்டுமொத்த சிறுபிள்ளைத்தனமான விமர்சனமானது, ஒரு வர்க்க அணுகுமுறையின் நிழல் அல்ல. ஓர் இலக்கியக் குழுவின் போக்கு மற்றவைகளுடன் போட்டியிடுவதில் ஈடுபட்டிருந்தது என்பதைத் தான் அதில் நாம் காண்கிறோம், வேறெதையும் அல்ல.

நான்கிராமியப் பாடகர்கள்குறித்து குறிப்பிட்டேன். மேலும் Na Postu குழு பிரத்யேகமாக அந்த அத்தியாயத்தை அங்கீகரித்தது என்பதையும் நாம் இங்கே செவிமடுத்தோம். இதை நீங்கள் ஒப்புக் கொண்டால் மட்டும் போதாது, நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். கிராமியப் பாடல்கள் பாடும் உடன்-பயணிகளை இங்கே குறிப்பது எதற்காக? இந்த நிகழ்வு ஒன்றும் ஒரு தற்செயல் நிகழ்வல்ல; இது குறைந்த முக்கியத்துவம் கொண்டதுமல்ல, தற்காலிகமானதுமல்ல. நம்முடைய நாட்டில் - பெரும்பாலும் விவசாயிகள் வசிக்கும் ஒரு நாட்டில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தைக் கொண்டிருக்கிறோம் என்பதை மறந்துவிட வேண்டாம். இரண்டு மைக்கற்களுக்கு இடையே நிறுத்தப்பட்டிருப்பது போல இந்த இரண்டு வர்க்கங்களுக்கும் இடையே அறிவுஜீவிகள் (intelligentsia) நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் சிறிது சிறிதாக மறைந்து, புதிய ஒன்று எழுகிறது. அதை முற்றிலுமாக புதைத்துவிட முடியாது. அதாவது சோசலிசம் முழு வளர்ச்சியடையும் வரையிலும், நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் கலாச்சார நிலையில் ஒரு மிக கணிசமான உயர்வு ஏற்படும் வரையிலும், அது இன்னும் நீண்டகாலத்திற்கு ஓர் அறிவுஜீவிகள் கூட்டமாகவேஇருக்கும். அறிவுஜீவிகள் தொழிலாளர்களினதும் விவசாயிகளினதும் அரசுக்கு சேவைசெய்கின்றனர்; அவர்கள் பாதி பயத்தினாலும், பாதி நம்பிக்கையினாலும் பாட்டாளி வர்க்கத்திற்கு அடிபணிகின்றனர். நிகழ்வுப்போக்குகளையொட்டி, அது தடுமாறுகிறது; தடுமாறும். மேலும் அதன் தடுமாற்றத்திற்கான சித்தாந்த ஆதரவை அது விவசாயிகளிடம் கோர முற்படும்-இது தான் கிராமியப் பாடகர்களின்சோவியத் இலக்கியத்தின் மூலாதாரம். இந்த பள்ளியின் வருங்காலம் எப்படி இருக்கும்? அது நமக்கு விரோதமாக இருக்குமா? அதன் பாதை நம்மை நோக்கி வருமா அல்லது நம்மைவிட்டு விலகி செல்லுமா? இது பொதுநிகழ்வுகளின் போக்கைச் சார்ந்திருக்கிறது. விவசாயிகள் மீது மொத்த மேலாதிக்கத்தைத் தக்கவைத்துக் கொண்டு, அதை சோசலிசத்தை நோக்கி இட்டுச் செல்வதும் பாட்டாளி வர்க்கத்தின் பணியாக உள்ளது. இந்த பாதையில் நமக்கு பின்னடைவு ஏற்பட்டால், அதாவது பாட்டாளி வர்க்கத்திற்கும், விவசாயிகளுக்கும் இடையே பிளவு விழுந்தால், பின்னர்விவசாயிகள்-துதிபாடும்அறிவுஜீவிகள், அல்லது, இன்னும் துல்லியமாகச்  சொல்லப்போனால், மொத்த அறிவிஜீவிகளில் 99 சதவிகிதத்தினர் பாட்டாளி வர்க்கத்திற்கு எதிராக திரும்பிவிடுவார்கள். ஆனால் இத்தகைய சாத்தியக்கூறு முற்றிலும் தவிர்க்கப்பட முடியாதது அல்ல. மாறாக, பாட்டாளிவர்க்க தலைமையின்கீழ், விவசாயிகளை சோசலிசத்திற்கு அழைத்துவருவதை நோக்கமாக கொண்ட ஒரு போக்கைப் பின்பற்றுகிறோம். இது ஒரு மிக, மிக நீண்ட பாதை. இந்த நிகழ்முறையில் பாட்டாளி வர்க்கமும், விவசாயிகளும் அவற்றின் சொந்த அறிவுஜீவிகளை முன்னிற்குக் கொண்டு வரும். பாட்டாளி வர்க்கத்திலிருந்து எழும் அறிவுஜீவிகள் 100 சதவீதம் பாட்டாளி வர்க்க அறிவுஜீவிகளாக தான் இருக்க வேண்டும் என்பதல்ல என்பது குறிப்பிடத்தக்கது. பாட்டாளி வர்க்கம் அதன் நிலைகளிலிருந்து தவிர்க்கமுடியாமல் கலாச்சார தொழிலாளர்களின்ஒரு சிறப்பு பிரிவை உருவாக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்ற சரியான உண்மையானது, அதிலிருந்து உருவாக்கப்பட்ட பாட்டாளிகளுக்கும் ஒட்டுமொத்த வர்க்கத்தில் மீதமிருப்பவர்களுக்கும் இடையே கணிசமான அளவிற்கு குறைவாகவோ அல்லது அதிகமாகவோ கலாச்சார இடைவெளி இருக்கிறது என்பதையே குறிக்கிறது. விவசாய அறிவுஜீவிகளைப் பொறுத்த வரையில் இது இன்னும் அதிகமாக பொருந்துகிறது. சோசலிசத்திற்கான விவசாயிகளின் பாதை, ஒருபோதும் பாட்டாளி வர்க்கத்தின் பாதையைப் போன்றதல்ல. மேலும் அறிவுஜீவிகளைப் பொறுத்த வரையில், ஓர் துடிப்பார்ந்த-சோவியத் அறிவுஜீவிகளாலும் கூட, நிஜமாகவோ அல்லது கற்பனையாகவோ விவசாயிகளுக்கு ஓர் அரசியல்ரீதியான, சித்தாந்தரீதியான, கலைத்துவரீதியான ஆதரவை அளிக்க அது முயலும் வரை, பாட்டாளி வர்க்க முன்னணியின் பாதையோடு அதன் பாதையை இணைக்க முடியாது. இது நாம் கொண்டிருக்கும் ஒரு பழைய ஜனரஞ்சக பாரம்பரிய கதையில் நிறைய தென்படுகிறது. இது நமக்காக இருக்கிறதா அல்லது நமக்கு எதிராக இருக்கிறதா? நான் மீண்டும் சொல்கிறேன்: இதற்கான பதில் முற்றிலுமாக ஒட்டுமொத்த எதிர்கால அபிவிருத்தி போக்கையும் சார்ந்துள்ளது. பாட்டாளி வர்க்கத்தோடு பிணைக்கப்பட்ட விவசாயிகளை நாம் சோசலிசத்திற்காக கொண்டு வந்தால்-நம்மால் அவர்களை கொண்டு வர முடியும் என்று நாம் உறுதியாக நம்பினோம் என்றால்-அப்போது கிராமியப் பாடகர்களின்ஆக்கப்பூர்வமான படைப்புகள், எதிர்கால சோசலிச கலைக்கான ஆழமான சுற்றுவட்ட பாதைகளில் பரிணமிக்கும். இதில் நிறைந்திருக்கும் சிக்கலான பிரச்சினைகளும், அதேநேரத்தில் அவற்றின் யதார்த்தமும், உறுதியும் முற்றிலுமாக Na Postu குழுவிற்கும், அவர்களுக்கு மட்டுமின்றி ஏனையவர்களின் புரிதலுக்கும் கூட அப்பாற்பட்டுள்ளது. இது தான் அவர்களின் அடிப்படை தவறு. இத்தகைய சமுதாய அடித்தளமும், எதிர்கால நோக்கமும் இல்லாமல் உடன்-பயணிப்பவர்களைக்குறித்து பேசுவதென்பது, வெறுமனே ஒருவர் உளறுவதைத் தான் குறிக்கும்.

Na Postuல் வந்த அவருடைய கடைசிக் கட்டுரையைத் தொடர்புபடுத்தி, இலக்கியத் துறையில் தோழர் வார்டினின் தந்திரோபாயங்களைப் பற்றி இன்னும் சற்றுக் கூறுவதற்கு, என்னை அனுமதியுங்கள், தோழர்களே. என்னுடைய கண்ணோட்டத்தில், இதுவொரு தந்திரோபாயமேயல்ல. மாறாக, இதுவொரு அவமதிப்பு! இதுவொரு வியத்தகு கம்பீரமான தொனியில் இருக்கிறது; ஆனால் முற்றிலுமாக குறை அறிவு அல்லது புரிதல் இதில் உள்ளது. அதுவும் குறிப்பாக, மனித படைப்பாற்றலின் சிறப்பார்ந்த துறையாக இருக்கும் கலையைக் கலையாகவே புரிந்து கொள்ளப்படவில்லை; மேலும் நிலைமைகளைப் பற்றிய அல்லது கலை வளர்ச்சிக்கான வழிகளைப் பற்றிய எவ்வித மார்க்சிய புரிதலும் கூட இல்லை. மாறாக, பில்நயக்கின் படைப்புகளைப் பிரசுரித்ததற்காக தோழர் வோரன்ஸ்கியால் பாராட்டப்பட்ட அல்லது அவரை பாராட்ட விரும்பிய White-Guard வெளியீடுகளிலிருந்து இங்குமங்குமாக ஒன்றுக்கும் உதவாத மேற்கோள்கள் அல்லது வார்டினுக்கு எதிராக, ஒருவேளை, வொரோன்ஸ்கிக்காக சொல்லப்பட்ட ஏதோவொன்று, இன்னும், இன்னும் நிறைய இருக்கிறது - இவற்றை நீங்கள் கவனித்தீர்களா?-இவை தான் குறை அறிவையும், புரிதலையும் மூடிமறைக்க "சூழ்நிலை ஆதாரமாக" (circumstantial evidence) இருந்தன. ஒட்டுமொத்த மோதலும், வொரோன்ஸ்கி இலக்கியத்தை இலக்கிய கண்ணோட்டத்திலிருந்து அணுகினார் என்ற புள்ளிக்கு இறங்கி வந்து என்றெழுதியதன் மூலம், White-Guard நாளிதழ் வார்டினுக்கு எதிராக வொரோன்ஸ்கிக்கு ஆதரவு காட்டியது என்ற கருத்தின் மீதுதான் தோழர் வார்டினின் கடைசி கட்டுரை உருவாக்கப்பட்டிருக்கிறது. "தோழர் வொரோன்ஸ்கி, அவருடைய அரசியல் நடவடிக்கையின் மூலம், White-Guard அன்பிற்கு முழு தகுதியைப் பெற்றிருக்கிறார்" என்று வார்டின் கூறுகிறார். இதுவொரு குற்றச்சாட்டே ஒழிய, பிரச்சினையைப் பற்றிய ஒரு பகுப்பாய்வு கிடையாது! இந்த விஷயத்தில் அரித்மெட்டிக் அறிந்திருக்கும் White-Guardஇன் அதே பக்கத்தில் வொரோன்ஸ்கி தம்மைத்தாமே காண்கிறார் என்கிற போது, இந்த பெருக்கல் வாய்ப்பாட்டை வார்டின் ஏற்கவில்லை என்றால், வொரோன்ஸ்கியின் அரசியல் மதிப்பு அதற்காக அஞ்ச வேண்டியதில்லை. ஆம், மனித முயற்சியின் ஒரு சிறப்பார்ந்த துறையாக இருக்கும் கலையைக் கலையாக, இலக்கியத்தை இலக்கியமாக அணுகப்பட வேண்டும். கலையிலும் கூட ஒரு வர்க்க அளவுகோலை நாம் கொண்டிருக்கிறோம் என்பது உண்மை தான். ஆனால் இந்த வர்க்க அளவுகோல் கலைத்துவத்துடன் பிரதிபலிக்கப்பட வேண்டும். அதாவது, நம்முடைய அளவுகோலை எந்த படைப்புத்துறைக்குப் பயன்படுத்துகிறோமோ அந்த துறையின் குறிப்பிட்ட தனித்துவங்களோடு ஒத்திருக்க வேண்டும். முதலாளித்துவம் இதை நன்கு அறிந்துள்ளது; அதற்கேற்ப அது அதனுடைய வர்க்க கண்ணோட்டத்தில் கலையை அணுகுகிறது. கலையிலிருந்து அதற்கு என்ன தேவையென்பதை அது நன்கு அறிந்திருக்கிறது. அதனால் தான் அது கலையை கலையாக மட்டும் அணுகுகிறது. கலையை அரசியல் "சூழ்நிலை ஆதார" (“circumstantial evidence”) நிலைப்புள்ளியிலிருந்தும், ஒர் வர்க்க-கலையுணர்வு (class-artistic criterion) இல்லாமலும் அணுகும் வார்டின் மீது ஒரு கலைத்துவ-இலக்கிய பூர்ஷூவா நல்ல மதிப்பைக் கொண்டிருக்கவில்லை என்றால் அதில் ஆச்சர்யப்படுவதற்கு என்ன இருக்கிறது? நான் வெட்கப்படக்கூடியது ஏதேனும் ஒன்று உண்டென்றால், அது கலையைப் புரிந்துகொள்ளும் White-Guardஇன் ஒருவருடன் இப்பிரச்சினையில் நானும் அதே படகில் உத்தியோகப்பூர்வமாக பயணிப்பேன் என்பதற்காக அல்ல, அதற்கு மாறாக, கலையைக் குறித்து கட்டுரைகள் எழுதும் ஒரு கட்சி பதிப்பாளருக்கு இந்த White-Guardஇன் கண்களுக்கு முன்னாலேயே கலையின் அரிச்சுவடிகளை விளக்க வேண்டியிருக்கிறதே என்பதற்காக தான். இது மார்க்சியத்திற்கு எத்துணை வெட்கக்கேடானது: இப்பிரச்சினைக்கு ஒரு மார்க்சிய பகுப்பாய்வைக் காண்பதற்கு மாறாக, ருல் அல்லது டையன்  போன்றோரின் மேற்கோள்களை ஒருவர் தேட வேண்டியுள்ளது. மேலும் அதைச் சுற்றி தவறான கருத்துக்கள், குற்றச்சாட்டுக்கள் வேறு!

அரசியலை அணுகுவதைப் போல, ஒருவரால் கலையை அணுக முடியாது. கலைத்துவ படைப்பென்பது ஒரு மதச்சடங்கு அல்லது அதுவொரு புதிர் என்று இங்கே யாரோ ஒருவர் வினோதமாக குறிப்பிட்டாரே, அந்த காரணத்தினால் அல்ல. மாறாக அதன் வளர்ச்சிக்கு அது தன்னுடைய சொந்த வளர்ச்சி விதிகளைக் கொண்டிருக்கிறது என்பதாலும், எல்லாவற்றிற்கும் மேலாக மெதுவான, அதிகப்படியாக வெறுமனே இருக்கும், மேலாண்மை மற்றும் வழிகாட்டுதலை மிகக் குறைவாகவே சார்ந்திருக்கும் ஆழ்மன நிகழ்ச்சிப்போக்கு (subconcious processes) கலைத்துவ படைப்பாக்கத்தில் பெரும்பங்கு வகிக்கின்றன என்பதாலும், அவை ஆழ்மனதிலிருந்து வருபவை என்பதாலும் தான். கம்யூனிசத்திற்கு நெருக்கமாக இருக்கும் பில்நயக்கின் எழுத்துக்கள், நம்மைவிட்டு அரசியல்ரீதியாக வெகு தூரத்திலிருக்கும் எழுத்துக்களைவிட மலிவாக இருப்பதாக இங்கே கூறப்பட்டிருக்கிறது. அதற்கு விளக்கம் என்ன? இதைப் போலவே, ஒரு கலைஞராக பில்நயக் எவ்வாறு பகுத்தறிவார்ந்த தளத்தில் முன்னேறியுள்ளார். ஓரளவிற்கு மட்டுமாவது அவருடைய சொந்த அச்சில் நனவுப்பூர்வமாக அவரைச் சுற்றி வருவதென்பது - பெரும்பாலும் ஆழமாகவும், சிலநேரங்களில் தவிர்க்க முடியாத நெருக்கடியோடும் இணைந்திருக்கும் ஒரு கலைஞருக்கு மிகவும் சிரமமான காரியம் தான். நாம் கருத்திற்கொள்வது என்னவென்றால், ஆக்கபூர்வமான முயற்சியில் ஒரு தனிநபர் மாற்றத்தையோ அல்லது ஒரு குழு மாற்றத்தையோ அல்ல, மாறாக, சமுதாய அளவில் ஒரு வர்க்கத்தில் ஏற்படும் மாற்றத்தை. இதுவொரு மிக நீண்ட மற்றும் சிக்கலான நிகழ்முறை. பாட்டாளி வர்க்க இலக்கியம் குறித்து நாம் பேசும் போது, அதிகளவிலோ அல்லது குறைவாகவோ வெற்றிபெற்ற கவிதைகள் அல்லது கதைகள் என்ற உணர்வில் நாம் பேசவில்லை. மாறாக, ஒப்பிடமுடியாத மிக ஆழமான உணர்வில் முதலாளித்துவ இலக்கியத்தைக் குறித்து நாம் பேசுகிறோம்; அதேநேரம் பாட்டாளி வர்க்கத்தில் மேலெழுந்து நிற்கும் பெரும்பான்மையினரின் அசாதாரணமான கலாச்சார பின்தங்கியநிலைமையை ஒரு கணம் மறந்துவிடுவதற்கு கூட நமக்கு உரிமை இல்லை. அன்றாட சம்பவங்கள், கலாச்சாரம், ஒரு வர்க்கம் மற்றும் அதன் கலைஞர்களுக்கு இடையிலான சித்தாந்தரீதியான உள்-உறவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் கலை உருவாக்கப்படுகிறது. பிரபுத்துவத்திற்கும் அல்லது முதலாளித்துவத்திற்கும் மற்றும் அதன் கலைஞர்களுக்கும் இடையில் அன்றாட வாழ்வில் எந்த பிளவும் இருக்கவில்லை. ஒரு பூர்ஷூவா கூட்டத்திற்குள், பூர்ஷூவா கலைக்கூடத்தின் காற்றைச் சுவாசித்து கொண்டு கலைஞர்கள் வாழ்ந்தார்கள், இன்றும் வாழ்கிறார்கள்; அவர்கள் அவர்களின் வர்க்கத்திடமிருந்து உந்துசக்திகளைப் பெற்றார்கள்; பெற்றும் வருகிறார்கள். இது அவர்களின் படைப்புத்திறனின் ஆழ்மன நிகழ்முறைகளை ஊட்டப்படுத்துகிறது. ஒரு புதிய கலைஞர் தன்னுடைய அன்றாட வாழ்க்கையையும் விட்டுவிடாமல், அவருடைய திறமைக்கான வழிவகைகளில் தேர்ச்சிபெற்று கொண்டே அவருக்குத் தேவையான அனைத்து அகத்தூண்டல்களையும் (inspirations) அடைய, இது போன்ற ஒரு கலாச்சார-சித்தாந்த தொகுப்பையும் இன்றைய பாட்டாளி வர்க்கம் அளிக்கிறதா? இல்லை. உழைக்கும் வெகுஜன மக்கள் கலாச்சாரரீதியாக மிகவும் பின்தங்கி இருக்கிறார்கள்; பெரும்பான்மை தொழிலாளர்களின் கல்வி அல்லது குறைந்தபட்ச கல்வியே இதற்கு மிகப்பெரும் தடையாக இருக்கிறது. மேலும் எல்லாவற்றிற்கும் மேலாக, பாட்டாளி வர்க்கம், அது ஒரு பாட்டாளி வர்க்கமாக இருப்பதனாலேயே, அரசியல் போராட்டங்களிலும், பொருளாதாரத்தை மீட்டெடுப்பதிலும், அடிப்படை கலாச்சார தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும், எழுத்தறிவின்மை, வெட்டித்தனம், பாலியல்நோய்கள், இன்னும் பிறவற்றிற்கு எதிராக போராடுவதிலும் அதன் மிகச்சிறந்த சக்திகளைச் செலவிட வேண்டியுள்ளது. பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் வழிமுறைகளையும், புரட்சிகர வழக்கங்களையும் கூட அதன் கலாச்சாரமாக அழைக்கலாம் என்பது உண்மை தான்; ஆனால் இது ஒரு புதிய, நிஜமான கலாச்சாரம் அபிவிருத்தி அடையும் போது, இல்லாமல் போய்விடும் ஒருவகையான கலாச்சாரமாகும். மேலும் இந்த புதிய கலாச்சாரம் தான் - ஒரு பாட்டாளி வர்க்கம் பாட்டாளி வர்க்கமாக இல்லாமல் போனபின், அதாவது முழு வெற்றியுடன், முழுவதுமாக சோசலிச சமுதாயம் வளர்ச்சியுறும் போது வரும் கலாச்சாரமாகும்.

The Thirteen Apostles என்றழைக்கப்படும் ஒரு சக்தி வாய்ந்த கட்டுரையை மாயகோவ்ஸ்கி எழுதினார்; அதன் புரட்சிகரத்தன்மை அப்போது வடிவமில்லாமல் எங்கும் சூழ்ந்திருந்தது. இதே மாயகோவ்ஸ்கி பாட்டாளி வர்க்க தடத்திற்குத் தாவ முடிவெடுத்து 150 Million ஐ எழுதிய போது, அவர் ஓர் அபாயகரமான பகுத்தறிவார்ந்த வீழ்ச்சிக்கு உட்பட்டார். அது அவருடைய தர்க்க சிந்தனையில் அவர் அவருடைய நிஜமான படைப்பாற்றல் நிலைமையை இழந்துவிட்டார் என்பதைத் தான் குறிக்கிறது. நாம் ஏற்கனவே பேசி இருப்பதைப் போல, பில்நயக்கிடம் இருப்பதைப் போலவே, அவருடைய நனவின் போராட்டத்திற்கும், நனவற்ற படைப்பின் நிகழ்முறைகளுக்கும் இடையே ஒரு வேறுபாடு இருப்பதைக் காணலாம். இதை வெறுமனே எதனோடு சேர்க்கலாம் என்றால், துடிப்பார்ந்த-பாட்டாளி வர்க்க படைப்புகள் கூட இன்றைய நிலைமைகளில் நிஜமாகவே அதன் வர்க்கத்துடன் இணைந்திருந்திருக்கின்றன என்பதை நிரூபிக்க எவ்வித உத்தரவாதத்தையும் எழுத்தாளருக்கு அளிக்காது என்பதில் தான் சேர்க்க முடியும். பாட்டாளி வர்க்க எழுத்தாளர்களின் குழுக்களாலேயே கூட இந்த உத்தரவாதத்தை அளிக்க முடியாது. ஏனென்றால், கலைத்துவ படைப்பிற்காக தன்னை அர்பணித்துக் கொண்ட எழுத்தாளரும் கூட, நிலவுகின்றன நிலைமைகளுக்குள், அவரின் சொந்த வர்க்க கூட்டத்திலிருந்து அவரைஅவரே பிரித்துக்கொள்ளவும், அவரின் "உடன்-பயணிப்பாளர்கள்" சுவாசித்ததையே சுவாசிக்க வேண்டிய சுற்றுச்சூழலில் இருக்கவும் நிர்பந்திக்கப்பட்டிருக்கிறார். ஏனைய இலக்கிய வட்டங்களோடு இதுவும் ஒரு இலக்கிய வட்டமாக இருக்கிறது.

வருங்கால வாய்ப்புகளைப் பொறுத்த வரையில், அவை அவ்வாறு அழைக்கப்படுவதால், நான் சில விஷயங்களைக் கூற விரும்புகிறேன். ஆனால் ஏற்கனவே நான் நீண்ட நேரம் பேசிவிட்டேன். (குரல்கள்: "தொடர்ந்து பேசுங்கள்!") "குறைந்தபட்சம் வரவிருக்கும் பாதையைக் குறித்து சிறிதாவது கூறுங்கள்" என்று தோழர்கள் என்னிடம் முறையிடுகிறார்கள். இது எதைக் குறிக்கிறது? ஓர் பரிசோதனைக்கூட வார்த்தையில் கூறினால், Na Postu தோழர்களும், அவர்களின் நேச குழுக்களும் வட்ட முறையால் (circle method) உருவாக்கப்பட்ட ஒரு பாட்டாளி வர்க்க இலக்கியத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். இத்தகைய முன்னேற்றத்தை நான் முற்றிலும் நிராகரிக்கிறேன். நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ மற்றும் பாட்டாளி வர்க்க இலக்கியத்தை ஒரே வரலாற்று பிரிவில் கொண்டு வருவதென்பது சாத்தியமே இல்லை என்பதை நான் மீண்டுமொரு முறை கூறுகிறேன். இத்தகைய ஒரு வரலாற்று பகுப்பு முற்றிலும் தவறானது. இது குறித்து என்னுடைய புத்தகத்தில் நான் பேசியிருக்கிறேன். மேலும் நான் கேள்விபட்ட அனைத்து ஆட்சேபணைகளும் எனக்கு திருப்தியாகவும் இல்லை; சிறுபிள்ளைத்தனமாகவும் இருக்கிறது. பாட்டாளி வர்க்க கலாச்சாரத்திற்கு ஓர் அடித்தளம் அமைக்கும், பாட்டாளி வர்க்க இலக்கியம் குறித்து ஆழமாகவும், நீண்டகாலமாகவும் பேசி வருபவர்கள் பூர்ஷூவா கலாச்சாரத்துடன் இதை ஒப்பிட்டு பார்த்து, இப்பிரச்சினையில் என்ன இருக்கிறது என்று சிந்திக்கிறார்கள். அதிகாரத்தைக் கைப்பற்றிய முதலாளித்துவம் அதன் சொந்த கலாச்சாரத்தைத் தோற்றுவித்தது; அதிகாரத்தைக் கைப்பற்றி கொண்ட அவர்கள், பாட்டாளி வர்க்கம் பாட்டாளி வர்க்க கலாச்சாரத்தை உருவாக்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால் முதலாளித்துவம் ஒரு செல்வவளமிக்க, அதனாலேயே கல்வியறிவுபெற்ற ஒரு வர்க்கமாக இருக்கிறது. முதலாளித்துவம் உத்தியோகபூர்வமாக அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு முன்னாலேயே முதலாளித்துவ கலாச்சாரம் இருந்தது. முதலாளித்துவம் அதன் ஆட்சியை நீடித்து நிறுத்திக்கொள்வதற்காகவே அதிகாரத்தைக் கைப்பற்றியது. முதலாளித்துவ சமுதாயத்தில் பாட்டாளி வர்க்கம் உடைமைகளற்ற, சலுகைகள் மறுக்கப்பட்ட வர்க்கமாக இருக்கிறது. ஆகவே அதனால் அதன் ஒரு சொந்த கலாச்சாரத்தைத் தோற்றுவிக்க முடியாது. அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னால் மட்டும் தான், நிஜமாகவே அதனால் அதன் சொந்த அபாயகரமான கலாச்சார பின்தங்கிய நிலைமையைப் பற்றிய விழிப்புணர்வை அடையும். இதைக் கடந்து வரவேண்டுமானால், அதையொரு வர்க்கமாக வைத்திருக்கும் அந்த நிலைமைகளை இல்லாதொழிக்க வேண்டியதிருக்கிறது. ஒரு புதிய கலாச்சாரத்தின் இருப்பு குறித்து நாம் எந்தளவிற்கு பேசுகிறோமோ, அந்தளவிற்கு இது குறைவான ஒரு வர்க்க பாத்திரத்தைத் தான் ஏற்கும். எதிர்கால பாதையைக் குறித்து இதுவரை நாம் விவாதித்ததில், இது தான் அடிப்படை பிரச்சினையும்-முதன்மையான வித்தியாசமும் ஆகும். பாட்டாளி வர்க்க கலாச்சார கொள்கையிலிருந்து தொடங்கும் சிலர், சோசலிசத்திற்கான இடைமருவுகால சகாப்தத்தை மட்டுமே நாங்கள் மனதில் கொண்டிருக்கிறோம் என்று கூறுவதுண்டு. முதலாளித்துவ உலகம் மாறிவிடக்கூடிய அந்த இருபது, முப்பது, ஐம்பது ஆண்டுகள் குறித்து பேசுகிறார்கள். பாட்டாளி வர்க்கத்திற்காக, அதற்கு பொருத்தமாக, இந்த காலக்கட்டத்தில் உருவாக்கப்படும் இலக்கியத்தைப் பாட்டாளி வர்க்க இலக்கியம் என்று அழைக்க முடியுமா? எல்லாவிதத்திலும், "பாட்டாளி வர்க்க இலக்கியம்" என்ற சொற்பதத்திற்கு, நாம் பேசும் பரந்த அர்த்தத்தில், நாம் ஆரம்பத்திலிருந்தே முற்றிலும் ஒரு வேறுபட்ட அர்த்தத்தை அளித்து வருகிறோம். ஆனால் இது முக்கிய பிரச்சினையல்ல. இந்த இடைமருவு காலத்தின் அடிப்படை கூறுபாட்டை, சர்வதேச அளவில் எடுத்தோமானால், அதுவொரு ஆழ்ந்த வர்க்க போராட்டமாக இருக்கிறது. நாம் பேசும் அந்த இருபதிலிருந்து முப்பது ஆண்டுகள், முதலும் முன்னோடியுமான தடுக்கமுடியாத ஓர் உள்நாட்டு யுத்த காலமாக இருக்கும். மேலும் எதிர்கால சிறந்த கலாச்சாரத்திற்கான பாதையைத் தயாரித்தளிக்கும் அந்த உள்நாட்டு யுத்தம், அதன் சமகால கலாச்சாரத்தின் விளைவுகளை முற்றிலும் விரும்பாத ஒன்றாக இருக்கும். அக்டோபர் புரட்சி அதன் உடனடி விளைவில் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இலக்கியத்தைக் கொன்றுவிட்டது. கவிஞர்களும், கலைஞர்களும் மௌனமாகிவிட்டார்கள். இதுவொரு தற்செயல் நிகழ்வாகவா இருந்தது? இல்லை. ஆயுத சத்தம் கேட்கும் போது, கவித்துவ உணர்வுகள் மௌனமாகி விடுகின்றன என்று நீண்டகாலத்திற்கு முன்னர் கூறப்பட்டது. இலக்கிய மறுமலர்ச்சிக்கு, ஓர் அவகாச-காலம் தேவைப்பட்டது. நம்முடைய நாட்டில் புதிய பொருளாதார கொள்கை (NEP) தொடங்கிய அதே காலகட்டத்தில், அதுவும் புத்துயிர் பெறத் தொடங்கியது. மறுமலர்ச்சியானது, ஒருசமயம் உடன்-பயணிப்பவர்களுக்கு நிறமூட்டியது. உண்மைகளைக் கருத்தில் கொள்ளாமல் இருப்பது சாத்தியமில்லை. நம்முடைய புரட்சிகர சகாப்தம் அதன் உயர்ந்த வெளிப்பாட்டைக் காணும் அந்த பதட்டமான கணங்கள், இலக்கியத்திற்கும், பொதுவாக கலை படைப்பிற்கும் பொருந்தாது. ஜேர்மனியிலோ அல்லது ஐரோப்பா முழுவதிலுமே நாளையே புரட்சி தொடங்கினால், அது பாட்டாளி வர்க்க இலக்கியத்தின் ஓர் உடனடி மறுமலர்ச்சியைக் கொண்டு வருமா? நிச்சயமாக இல்லை. அது கலைத்துவ படைப்பை வலுவிழக்கச் செய்து, அழிந்துவிடுமேயொழிய, விரிவடையாது. பின்னர் நாம் மீண்டும் அதை ஐக்கியப்படுத்தவும், அனைத்தையும் ஆயுதபாணியாக்கவும் வேண்டியதிருக்கும். அது தான் ஆயுத மோதல்களுக்கு இடையில், கலைத்துவ உணர்வுகள் மௌனமாகின்றன என்பது. [குரல்கள்: "டெம்யன் (சோவியத் ரஷ்ய கவிஞரின் புனைப்பெயர்) மௌனமாக இருக்கவில்லை."] ஆம், நீங்கள் தொடர்ந்து அவரை குறை கூறிகொண்டே இருங்கள், ஆனால் அதனால் எந்த பிரயோஜனமும் இல்லை. பாட்டாளி வர்க்க இலக்கியத்தின் ஒரு புதிய சகாப்தத்தைப் பிரகடனப்படுத்த தொடங்குங்கள், நீங்கள் இந்த இலக்கியத்திற்காக இலக்கிய வட்டங்களையும், அமைப்புகளையும், குழுக்களையும் உருவாக்குங்கள். மீண்டும் மீண்டும் டெம்யனைக் குறிப்பிட்டு காட்டுங்கள். ஆனால் டெம்யன் பழைய, அக்டோபருக்கு முந்தைய இலக்கியத்தின் ஒரு விளைபொருளாக இருக்கிறார். அவர் எந்த பாடசாலையையும் ஸ்தாபிக்கவும் இல்லை; எதையும் ஸ்தாபிக்கவும் மாட்டார். அவர் க்ரைலோவ், கோகோல், நெம்ரஸோவ்  ஆகியோரால் வளர்க்கப்பட்டவர். இவ்விதத்தில் அவர் நம்முடைய பழைய இலக்கியத்தின் கடைசியாக பிறந்த புரட்சிகர குழந்தையாக இருக்கிறார். உங்கள் தத்துவத்தை  நீங்களே மறுக்கிறீர்கள் என்பதைத் தான் இந்த உண்மை குறிப்பிட்டுக் காட்டுகிறது.

முன்னோக்கிச் செல்வதற்கான வழியென்ன? அடிப்படையில், எழுத்தறிவு, கல்வி, தொழிலாளர்களுக்கான சிறப்பு வகுப்புகள், சினிமா ஆகியவற்றின் வளர்ச்சி, அன்றாட வாழ்வின் படிப்படியான மறுகட்டமைப்பு, கலாச்சார தரத்தில் இன்னும் முன்னேற்றம் ஆகியவை தான். இது தான் அடிப்படை நிகழ்முறை. உள்நாட்டு யுத்தத்தின் புதிய தீவிரப்பாடுகளில் குறுக்கிட்டு, முழு ஐரோப்பா அளவிலும் மற்றும் உலக அளவிலும் கூட இது தான். இதன் அடிப்படையில், முழு இலக்கிய படைப்பின் போக்கும் முற்றிலும் நெளிவுசுளிவுகள் கொண்ட ஒன்றாக இருக்கும். பாட்டாளி வர்க்கத்தின் கலாச்சார வர்க்க படைப்பாற்றலின் பாதையில் குஜ்நிட்சா, அக்டியபர் மற்றும் இதுபோன்ற ஏனைய குழுக்கள் எதுவும் மைல்கற்கள் கிடையாது. ஆனால் இவை வெறுமனே ஒரு மேம்போக்கான இயல்பின் பாகங்களாக இருக்கின்றன. இந்த குழுக்களிலிருந்து ஒருசில சிறந்த இளம் கவிஞர்கள் அல்லது எழுத்தாளர்கள் தோன்றினால், அது நமக்கு பாட்டாளி வர்க்க இலக்கியத்தை அளித்துவிடாது. ஆனால் அது பயனுள்ளதாக தான் இருக்கும். ஆனால் MAPPஐயும், VAPPஐயும் பாட்டாளி வர்க்க இலக்கிய கூடங்களுக்குள் மாற்ற முயற்சித்தால், இப்போது வரை நீங்கள் தோல்வியடைந்திருப்பதைப் போலவே, நிச்சயமாக நீங்கள் தோல்வி அடைவீர்கள். இந்த அமைப்புகளில் ஒன்றைச் சேர்ந்த ஓர் உறுப்பினர், ஒருவிதத்தில், தம்மைத்தாமே கலையுலகில் பாட்டாளி வர்க்கத்தின் ஒரு பிரதிநிதியாக கருதிக்கொள்கிறார்; மற்றொரு விதத்தில், பாட்டாளி வர்க்க உலகில் கலையின் ஒரு பிரதிநிதியாக கருதிக்கொள்கிறார். VAPP உறுப்பினர்-தகுதியானது (membership) ஒருவகையான பதவியை அளிக்கும். VAPP ஒரு கம்யூனிஸ்ட் வட்டம் மட்டும்தான்; அதில் இளம் கவிஞர்கள் அவர்களுக்குத் தேவையான உட்தூண்டல்களை பெறுகிறார்கள் என்பதும், இன்னும் இவை போன்றவையும் நிராகரிக்கப்படுகின்றன. நல்லது, கட்சியைப் பற்றி என்ன கூறுவது? அவர் ஒரு நிஜமான கவிஞரோ அல்லது ஒரு உண்மையான கம்யூனிஸ்டாகவோ இருந்தால், கட்சி அதன் அனைத்து பணிகளிலும் ஒப்பிடமுடியாத அளவிற்கு MAPP மற்றும் VAPP விட அதிக உட்தூண்டல்களை அளிக்கும். கட்சி திறமைவாய்ந்த ஒவ்வொரு இளம் கலைஞரின் மீது, அதுவும் கட்சியோடு சித்தாந்த ரீதியாகவோ அல்லது ஒத்தத்தன்மையிலோ நெருங்கி இருப்பவர்கள் மீது மிகச்சிறந்த கவனிப்பை நிச்சயமாக அளிக்க வேண்டும்; அளிக்கும். ஆனால் இலக்கியம் மற்றும் கலாச்சாரம் சார்ந்து உழைக்கும் வெகுஜனங்களின் எழுத்தறிவின் அளவை-ஆரம்பநிலை எழுத்தறிவு, அரசியல் அறிவு, விஞ்ஞான அறிவு-
உயர்த்துவது அதன் அடிப்படை பணியாகும். மேலும் அதன்மூலமாக தான் அதுவொரு புதிய கலைக்கான அடித்தளத்தை அமைக்கிறது.  

வருங்காலம் குறித்த இந்த திட்டம் உங்களுக்குத் திருப்தியாக இருக்காது என்பதை நான் அறிவேன். இது போதுமான அளவிற்கு உறுதியாக இல்லாதது போல் தெரிகிறது. ஏன்? ஏனெனில் நீங்கள் கலாச்சார வளர்ச்சி என்பதை இன்னும் ஒழுங்குமுறையாக, இன்னும் புரட்சிகர வகையில் காண முற்படுகிறீர்கள்: அதாவது, தற்போதைய பாட்டாளி வர்க்க இலக்கியத்தின் கிளைகள் வளர்ந்து அபிவிருத்தி அடைந்து தொடர்ந்து செழிக்கும்; அதலிருந்து உண்மையான பாட்டாளி வர்க்க இலக்கியம் தோற்றுவிக்கப்படும்; அது பின்னர் சோசலிச இலக்கியமாக மாறும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். இல்லை, விஷயங்கள் அவ்வாறு வளர்ச்சி பெறுவதில்லை. தற்போதைய அவகாச-காலத்திற்குப் பின்னர், கட்சியாலோ அல்லது அரசாங்கத்தாலோ அல்லாமல், “உடன்-பயணிப்போரால்வலுவாக வண்ணம் பூசப்பட்ட ஓர் இலக்கியம் தோற்றுவிக்கப்படும் போது, உள்நாட்டு யுத்தத்தின் புதிய கொந்தளிப்புகள் நிறைந்த ஒரு காலம் வரும். நாம் தவிர்க்க முடியாமல் அதனுள் ஈர்க்கப்படுவோம். புரட்சிகரக் கவிஞர்கள் நமக்கு வீரம் செறிந்த கவிதைகளைக் கொடுக்கக் கூடும். ஆனால், இருந்தபோதினும், இலக்கிய வளர்ச்சியின் தொடர்ச்சி கூர்மையாக முறிக்கப்படும். எல்லா சக்திகளும் நேரடிப் போராட்டத்தில் ஒருமுனைப்படுத்தப்படும். அப்படியானால் அப்போது நமக்கு இரண்டாம் அவகாச-காலம் தேவைப்படுமா? எனக்குத் தெரியவில்லை. ஆனால் உள்நாட்டு யுத்தத்தின் மிக வலிமையான காலத்தின் இந்தப் புதிய விளைவு, நாம் வெற்றி பெற்றால், நம்முடைய பொருளாதாரத்தின் சோசலிச அடிப்படையை முற்றிலும் பாதுகாத்து, ஒருங்கிணப்பதாக இருக்கும். புதிய தொழில்நுட்பரீதியான மற்றும் அமைப்புரீதியான உதவிகள் நமக்கு கிடைக்கும். நம்முடைய வளர்ச்சி ஒரு வித்தியாசமான விதத்தில் முன்னேறும். மேலும் அந்த அடிப்படையில், உள்நாட்டு யுத்தத்தின் நெளிவுசுளிவுகள், ஏற்ற இறக்கங்களுக்குப் பின்னர் தான், கலாச்சாரத்தின் ஓர் உண்மையான கட்டமைப்புத் தொடங்கும். மேலும், அதைத் தொடர்ந்து, ஒரு புதிய இலக்கியத்தின் உருவாக்கமும் தொடங்கும். ஒற்றுமையால் பின்னி பிணையப்பட்ட கலாச்சாரத்தைக் கடந்து வந்த மக்களுக்கு, கலைஞர்களுக்கும் இடையிலான இடைவிடா தொடர்பில் கட்டப்பட்ட சோசலிச கலாச்சாரமாக இது இருக்கும். இந்த எதிர்கால திட்டத்துடன் உங்கள் சிந்தனையைத் தொடவில்லை: உங்களின் சொந்த குழுவின் ஒரு திட்டத்தை நீங்கள் கொண்டிருக்கிறீர்கள். பாட்டாளி வர்க்கத்தின் பெயரில், நம்முடைய கட்சி உங்களுடைய சிறிய கலைத்துவ கூடத்தை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறீர்கள். ஒரு பூந்தொட்டியில் ஓர் அவரை-செடியை விதைத்து கொண்டு, பாட்டாளி வர்க்க இலக்கிய மரத்தை உங்களால் எழுப்ப முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். அது அவ்வாறு நடக்காது. ஓர் அவரை-செடியிலிருந்து மரத்தை வளர்க்க முடியாது.