சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

British working class families forced to rely on charity food handouts

பிரிட்டிஷ் தொழிலாள வர்க்க குடும்பங்கள் இலவச உணவு அளிப்பில் தங்கியிருக்கும் கட்டாயத்தில் உள்ளன

By Simon Whelan
24 December 2010

Use this version to print | Send feedback

பிரிட்டிஷ் அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கை தொகுப்பினால் சுமத்தப்பட்ட வறுமையும், இன்னல்களும் ஏற்கனவே மிகக்குறைவாகவுள்ள வரவு செலவுத் திட்டத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்ட நிலையில், ஆயிரக்கணக்கான பிரிட்டிஷ் குடும்பங்களும் தனிநபர்களும் பெருகிய முறையில் இலவச உணவுப் பொட்டலங்களை நம்பியிருக்க வேண்டியதாக உள்ளது. இங்கிலாந்து முழுவதும் இதற்கான நீடித்த தேவையின் அளவு பெருகியுள்ள நிலையில், கன்சர்வேடிவ்/லிபரல் டெமக்ராட் கூட்டணியினர் முந்தைய தொழிற் கட்சி அரசாங்கம் 2008ல் நிறுத்திவிட்ட உணவுப் பொட்டலங்களுக்கான சீட்டுக்களை மீண்டும் கொண்டுவர நேர்ந்துள்ளது.

Trussell அறக்கட்டளையின் சார்பில் கிறிஸ் மோல்ட் ஞாயிறன்று Independent  இடம் கூறினார்: “பிரிட்டனில் ஒவ்வொரு ஆண்டும் நூறாயிரக்கணக்கான மக்கள் நெருக்கடியினால் பாதிக்கப்பட்டு பட்டினி கிடக்க வேண்டியுள்ளது என்பது பெரும் அயோக்கியத்தனம் ஆகும். இம்மக்கள் ஒன்றும் தெருக்களில் வீடில்லாமல் வாழும் மக்கள் அல்ல. இவர்கள் குறைந்த வருமானங்களை ஒட்டி வாழ்வதற்கு திணறிக் கொண்டிருக்கின்றனர். இது பெரிதும் ஒரு மறைவான பிரச்சினை ஆகும். இத்தகைய உதவியை அவர்களுக்கு அளிப்பது பற்றி மனத்தளவில் இன்னும் அறிவிற்கு பொருந்தாத தடையுள்ளது.”

Trussell அறக்கட்டளையின் கணக்கீட்டின்படி அவசரக்கால உணவு உதவி தேவைப்படுபவர்களின் எண்ணிக்கை 2009ல் இருந்து 50 சதவிகிதம் அதிகரித்துவிட்டது. இந்த அறக்கட்டளை 70 உணவு வங்கிகளைக் கொண்டுள்ளது. அவை தேவையான மக்களுக்கு முழு நேரத்திற்கு ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவு அளித்து வருகின்றன. வேலை மையத்தின் ஊழியர்கள் இன்னும் உணவு உதவிக்கான சீட்டுக்களை மிக, மிகத் தேவையானவர்கள் என்று கருதப்படுபவர்களுக்கு கொடுப்பர். மற்றவர்கள் சுகாதார உதவியாளர்கள், சமூக சேவை செய்பவர்கள் ஆகியோரால் உணவு வங்கிக்கு அனுப்பப்பட்டு உணவு உதவிச் சீட்டுக்களை பெற்று உணவுப் பொட்டலங்களைப் பெற்றுக் கொள்வர்.

உணவு உதவியை நாடுபவர்களில் பலர் வேலையில் இருக்கும் குடும்பங்களும் நபர்களும் ஆவர். கட்டுமானத் தொழிலாளிகள் இப்பொழுது மாத ஊதியம் பெறுகின்றனர்; திடீரென வாராந்திரத் திட்டத்திலிருந்து மாத வரவு செலவுத் திட்டம் என்று வரும்போது, வீட்டில் உணவுப் பொருட்களுக்கான அலுமாரிகள் காலியாக உள்ளன. குறிப்பாக சுய வேலையில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் நீடிக்கப்பட்டுவிட்ட வருமானம் பெறும் நாட்களில் ஊதியம் இன்றி இன்னல்களை அனுபவிக்க நேரிடுகிறது.

பொதுநல உதவிகள் பெறுவதில் கால தாமதம் என்பது குடும்பங்கள், தம்பதிகள் மற்றும் தனிநபர்களை பல நாட்களுக்குக் கையில் பணம் இல்லாமல் செய்துவிடும். நலன்களுக்காக காத்திருப்பவர்கள் உணவு உதவி தேவைப்படுபவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் ஆவர். உதவிக்காக தங்களிடம் வந்த சிலர் தங்கள் குழந்தைகளையும் தங்களையும் காப்பாற்றிக் கொள்ள குற்றச் செயல்களில் ஈடுபடலாமா என யோசிப்பதாகக் கூறினர் என்று அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

அவசர கால உணவுப் பொட்டலங்கள் தேவையிருப்போர் இவற்றில் மூன்று நாட்களுக்கு தேவையான டப்பாவில் அடைக்கப்பட்ட இறைச்சி, மீன், பழம், பாஸ்டா, தேனிர், பால், சர்க்கரை ஆகியவை இருக்கும் கடந்த இரு ஆண்டுகளில் 25,000த்தில் இருந்து இன்று வியத்தகு அளவில் 60,000 என்று உயர்ந்துள்ளது. இவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் கிட்டத்தட்ட 20,000 பேர் குழந்தைகள் ஆவர். நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கான அவசரகால உணவுப் பொட்டல தொகுப்பு 28 பவுண்டுகள் மட்டுமே ஆகிறது.

தற்போதைய போக்குகளின்படி இந்த எண்ணிக்கை தேவைகளை பூர்த்தி செய்வதற்கான உணவு வங்கிகளின் எண்ணிக்கையை தற்போதைய எண்ணிக்கையிலிருந்து 700 வரை, கிட்டத்தட்ட 10 மடங்கு, அதிகரிக்க கூடும் என்று அறக்கட்டளை மதிப்பிட்டுள்ளது. அப்பொழுதுதான் 2015 ஐ ஒட்டி அரை மில்லியன் மக்களுக்கு உணவு அளிக்கப்பட முடியும். பிரிட்டனின் மொத்த மக்கள் தொகையே 58 மில்லியன்தான்.

வறிய நிலை பற்றிய இத்தகைய அறக்கட்டளையின் மதிப்பீடு சமீபத்திய வேலையின்மை எண்ணிக்கையினால் அடிக்கோடிட்டுக் காட்டப்படுள்ளது. அதன்படி வேலையில்லாதவர்கள் எண்ணிக்கை 35,000 ஆக அதிகரித்து இப்பொழுது 2.5 மில்லியன் என்று உள்ளது. இந்த அதிகரிப்பில் பெரும்பாலானவை பொதுத் துறையில் பணிநீங்கங்களால் ஏற்பட்டவை. அதற்குக் காரணம் கூட்டணி அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகள்தான். அவையோ இன்னும் அவற்றின் முழுப் பாதிப்பைக்காட்டவில்லை.

Joseph Rowntree Foundation வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கை அரசாங்கம் மற்றும் செய்தி ஊடகம்உழைத்தால் பணம் உண்டு என்று கூறும் கருத்துக்களில் உள்ள தவறைக் காட்டுகின்றன அத்தகைய வாதம்தான் பொதுநலத்திற்கான ஒதுக்கீடுகளைக் குறைப்பதை நியாயப்படுத்த பயன்படுத்தப்பட்டன. கிட்டத்தட்ட 2.1 மில்லியன் பிரிட்டிஷ் குழந்தைகள் குறைந்தது ஒரு வயதிற்கு வந்தவர்கள் வேலைபார்க்கும் குடும்பங்களில் வசிக்கின்றன. ஆனால் இவை இன்னமும் உத்தியோகபூர்வஉணவுக்கு வரிசை எனப்படும் மிகக் குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ள அளவில்தான் வாழ்கின்றன. மொத்தம் 3.7 மில்லியன் குழந்தைகள் வறுமையில் வாழ்கின்றன, அவற்றுள் 58 சதவிகிதமனோர் ஒரு பெற்றோர் அல்லது பாதுகாப்பவர் சம்பளம் பெறும் வேலையில் உள்ளனர்.

Joseph Rowntree அறக்கட்டளை ஆய்வு 2008ல் இருந்து 2009க்குள் இங்கிலாந்தில் 13 மில்லியன் மக்கள் வறுமையில் வாழ்கின்றனர் என்ற தகவலையும் வெளிப்படுத்தியுள்ளது. இது மக்களில் நான்கில் ஒரு பகுதி என்பது ஒப்புமையில் வறுமையில் வாழும் எண்ணிக்கையை குறைமதிப்பிற்குத்தான் உட்படுத்துகிறது. உத்தியோகபூர்வ உணவுக்கு வரிசை அல்லது அதற்குச் சற்றே அதிகமான நிலையில் வாழ்பவர்கள் முழு தொழிலாள வர்க்கத்திலும் பாதி என்ற அளவிற்கு உள்ளனர்.

சிக்கன நடவடிக்கைகளின் முழுப்பாதிப்பும் இன்னும் தோன்றாத நிலையிலேயே இத்தகைய நிலைப்பாடு உருவாகியுள்ளது இன்னும் பல வெட்டுக்கள் வரவிருக்கின்றன. வேலை இழப்புக்கள், நலன்களில் குறைப்புக்கள், ஊதிய வெட்டுக்கள் ஆகியவை வரும் காலத்தில் சர்வதேச சந்தைகளில் ஊகம் மற்றும் பற்றாக்குறை இரண்டும் இணையக்கூடிய நிலையில், அடிப்படை உணவுப் பொருட்களில் விலைவாசி ஏறும் என்கின்ற நிலைதான் ஏற்படும்.

இங்கிலாந்தின் Oxfam உடைய தற்காலிக இயக்குனர் ஹெலன் லாங்வொர்த் நிருபர்களிடம் கூறினார்: “கடந்த 10 ஆண்டுகளில் உணவின் விலை 50 சதவிகிதம் உயர்ந்துவிட்டது. ஒவ்வொரு நாளும் குடும்பங்கள் சூப் வழங்கும் நிலையங்களுக்கு, ஏதேனும் உட்கொள்ளக் கிடைக்குமா என்று வரும் கதைகளைத்தான் கேட்கிறோம். இவற்றிற்கு வடக்கு லண்டனிலுள்ள ஐலிங்கடன் பகுதிக் குழந்தைகள் ஊட்டச் சத்துக் குறைவால் ஏற்படும் சொறிகரப்பான் (scurvy) நோய்வாய்ப்பட்டுள்ளனர். இத்தகைய வியாதி 18ம் நூற்றாண்டில்தான் இருந்தது.”

ஒரு வரலாற்று நினைவாக இருக்க வேண்டிய அத்தகைய பல கொடூரங்கள் இப்பொழுது பரந்த மக்கள் தொகுப்பின் சமூக நிலையில் பெரும் கடந்த காலத்திற்கு செல்லும் நிலையை, ஆளும் உயரடுக்கின் முயற்சிகளால் ஏற்பட்டுள்ளன. இத்தகைய நிலைமைகள் விக்டோரியா காலத்தில்தான் இருந்தன.

தன்னார்வ தொண்டர் ஊழியர்கள், நன்கொடைகளால் நிதியளிப்பு முறையில் ட்ரஸ்ஸல் அறக்கட்டளை, சமுக நலன்புரி அரசின் செலவுகள் குறைக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ள இடைவெளியை இட்டு நிரப்புவதற்குக் கூட்டணி அரசாங்கத்தால் அதன் டிக்கன்ஸ் வனப்புரை வகையில், ஈடு செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொழிலாளர்கள் சூப் வழங்கும் நிலையங்களை நாடும் நிலை, உணவுப் பொட்டலங்களை எதிர்நோக்கியிருக்கும் நிலை என்பவை பொதுவாக பஞ்சக் காலத்தில் மட்டுமே நடக்கும் என்பதுடன் தொடர்புடையவை.

Independent  இடம் மோல்ட் கூறினார்: “சமுக நலன்புரி அரசு என்பது 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிடப் பெரும் சரிவுற்ற நிலைமையைச் சமாளிக்க முடியாமல் உள்ளது. தங்களுக்கும் தங்கள் குடும்பங்களும் உணவு மேசையில் உணவைப் பறிமாற முடியாத நிலையில்தான் ஏராளமான மக்கள் உள்ளனர் மேலும் குளிருக்கு வெப்ப வசதி, மற்றும் தங்கள் தலைக்கு மேல் ஒரு கூரை ஆகியவற்றைக் கொள்ளுதல் என்ற இயலாத விருப்பத் தேர்வையும் அவர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.”

நூறாயிரக்கணக்கான மக்கள் ஒப்புமையில் என்றில்லாமல், முழு வறிய நிலையை எதிர்பார்க்க நேரிடும் என்பதுதான் இதன் பொருள். உலகின் மிகப் பெரிய, செல்வம் நிறைந்த பொருளாதாரங்களில் ஒன்றில் மனிதன் வாழ்வதற்கு தேவையான அடிப்படைப் பொருட்கள் இல்லாமல் பலர் வாழ்தல் என்பது அட்டூழியமானது, எந்த அளவிற்கு சமூக சமத்துவமின்மை நிறைந்துள்ளது என்பது பற்றிய பெரும் குற்றச்சாட்டும் ஆகும். இத்தோடு கூட பிரிட்டன், அதன் இராணுவப் படைகளுக்காக அதிகம் செலவழிக்கும் நாடுகள் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது என்பது சிந்திக்க வேண்டியதாகும்.