WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :ஆசியா
:
பாகிஸ்தான்
பாக்கிஸ்தானில் இராணுவ
விரிவாகத்திற்கு நியூ யோர்க் டைம்ஸ் திட்டமிடுகிறது
By Barry Grey
22 December 2010
Use
this version to print | Send
feedback
பெயரிடப்படாத அமெரிக்க இராணுவ,
அரசியல் அதிகாரிகளை
மேற்கோளிட்டு நியூ
யோர்
டைம்ஸ்
செவ்வாயன்று ஒபாமா நிர்வாகம் ஆப்கானிய எல்லையை ஒட்டிய பாக்கிஸ்தான் பகுதிகளில்
தரைவழித் தாக்குதல்களை சிறப்புப் படைப் பிரிவினர் நடத்த பெரும் விரிவாக்கத்திற்கு
ஒப்புதலை விரைவில் கொடுக்க உள்ளது என்று முதல் பக்கக் கட்டுரையில் எழுதியுள்ளது.
இச்செய்தித்தாள் அத்தகைய நடவடிக்கை
“பெருகிய முறையில்
அமெரிக்கர்களுக்கு எதிரான இகழ்வு ஏற்பட்டுள்ள ஒன்பது ஆண்டுப் போரில் ஒரு புதிய
முன்புலத்தைத் திறப்பதற்கு ஒப்பாகும்”
என்று ஒப்புக்
கொண்டுள்ளது.
வாஷிங்டனில்
இருந்து மார்க் மாஜெட்டி மற்றும் காபூலில் இருந்து டெக்ஸ்டர் பில்கின்ஸ் ஆகியோரின்
கருத்துக்களையும் விளக்கியுள்ள இக்கட்டுரை,
“ஆப்கானிஸ்தானத்தில்
உள்ள மூத்த அமெரிக்க இராணுவத் தளபதிகள்”
ஒபாமா நிர்வாகம்
பாக்கிஸ்தானின் பழங்குடிப் பகுதிகளில் கூடுதலான தரைவழித் தாக்குதலுக்கு ஒப்புதல்
தரவேண்டும் என்று அழுத்தம் கொடுக்கின்றனர்,
அங்குதான் வாஷிங்டன்
கருத்துப்படி அல் கைடா தலைவர்கள் புகலிடம் கொண்டுள்ளனர் என்று கூறியுள்ளது.
தாலிபனும் பிற
எழுச்சிச் சக்திகளும் இப்பகுதியை
—குறிப்பாக
வடக்கு வஜீரிஸ்தானை-
எல்லை கடந்து
ஆப்கானிஸ்தான்மீது தாக்குதல் நடத்துவதை தொடங்குவதற்கான அரங்காக பயன்படுத்துகின்றன
என்று அமெரிக்க உறுதியான கருத்தைக் கொண்டுள்ளது.
டைம்ஸில்
கூறப்பட்டுள்ள கருத்துக்களுக்கு நேட்டோ அதிகாரிகள் மற்றும் அமெரிக்காவில்
பாக்கிஸ்தானிய தூதர் ஆகியோரிடம் இருந்து கடுமையான மறுப்புக்கள் வெளிவந்துள்ளன.
அமெரிக்க
கடற்படையின் துணை அட்மைரல் கிரிகரி ஸ்மித்,
நேட்டோவின் சர்வதேச
பாதுகாப்பு உதவிப் படைகள்
(ISAF) ன் துணைக்
கூட்டுத் தலைவர்
—இதுதான்
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கத் தலைமையிலான ஆக்கிரமிப்பு படைகளின் உத்தியோகபூர்வ பெயர்—காபூலில்
வெளியிட்ட ஒரு அறிக்கையில் கூறினார்:
“அமெரிக்கப் படைகள்
பாக்கிஸ்தானுக்குள் தரைவழித் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளன என்று நியூ
யோர்க்
டைம்ஸில்
வந்துள்ள
செய்தியில் எந்த உண்மையும் இல்லை.”
நேட்டோ
“ஆப்கானிஸ்தான்,
பாக்கிஸ்தான்
ஆகியவவை தங்கள் குறிப்பிட்ட எல்லைப் பகுதிகளில் செயல்படும் எழுச்சியாளர்கள்,
பயங்கரவாதிகளை
எப்படித் தொடர வேண்டும் என்ற இறைமையை மதிக்கிறது“
என்று அவர்
கூறியுள்ளார்.
பாக்கிஸ்தானின் செய்தித் தாளான டான்
இடம் தூதர்
ஹுசைன் ஹக்கானி கூறியது:
“எங்கள் எல்லைக்குள்
போராளிகள் அச்சுறுத்தலை சமாளிக்கும் திறனை பாக்கிஸ்தானியப் படைகள் கொண்டுள்ளன;
எங்கள் இறைமைப்
பகுதிக்குள் வெளிநாட்டு படைகள் அனுமதிக்கப்படக் கூடாது,
அத்தேவையும் இல்லை….
எங்கள் நட்பு
நாடுகளுடன்,
குறிப்பாக
அமெரிக்காவுடன் இணைந்து செயல்படுகிறோம்,
அவர்கள் கொடுக்கும்
தளவாத உதவியைப் பாராட்டுகிறோம்,
ஆனால் எங்கள்
மண்ணில் வெளிநாட்டுத் துருப்புக்களை ஏற்க மாட்டோம்,
இந்த நிலைப்பாடு
நன்கு அறியப்பட்டதுதான்.”
கடந்த வாரம்
இஸ்லாமாபாத்திற்கு அமெரிக்கப் படைகளின் கூட்டுத் தளபதிகளின் தலைவர் அட்மைரல் மைக்
முல்லென் வருகை புரிந்ததைக் குறிப்பிட்டு,
ஹக்கானி தொடர்ந்து
கூறினார்: “அவர்
வருகையின்போது விவாதிக்கப்பட்டது எதுவும் ஒரு நன்கு ஆலோசனை செய்யப்படாத விரிவாக்கம்
பற்றியோ அல்லது நேட்டோ துருப்புக்கள் ஆப்கானிஸ்தானத்தில் உரியதை செய்ய வேண்டியதற்கு
அப்பால் ஒருதலைப்பட்ச நடவடிக்கை பற்றியோ அல்ல.”
இக்கட்டுரை
எழுதப்படும் நேரம் வரை,
பென்டகன் அல்லது
ஒபாமா நிர்வாகம் டைம்ஸின் அறிக்கை பற்றி எந்த விடையிறுப்பும் கொடுக்கவில்லை.
டைம்ஸ்
கட்டுரை கூறும்
“பாக்கிஸ்தானில்
இரகசியமாக அமெரிக்கா நடத்தும் போர்”
என்பது ஒரு
வெளிப்படையான இரகசியம்தான்;
ஆனால் அந்தப் போர்
பெரும்பாலும் CIA
செயல்படுத்தும்
விமான ஓட்டி இல்லாத ஏவுகணைத் தாக்குதல்கள் எல்லைப் பகுதிகளில் ட்ரோன்கள் மூலம்
நடத்தப்படுவதுதான்.
இத்தாக்குதல்கள் பெரும்பாலும் சாதாரணக் குடிமக்கள் என்னும் விதத்தில் ஆயிரக்கணக்கான
பாக்கிஸ்தானியர்களை கொன்றுள்ளன.
இத்தாக்குதல்கள்
ஒபாமா நிர்வாகத்தினால் வியத்தகு முறையில் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
டைம்ஸ் கட்டுரை
செப்டம்பர் மாதத்தில் இருந்து
50க்கும் மேற்பட்ட
தாக்குதல்கள் வடக்கு வஜீரிஸ்தானிலும் பிற இடங்களிலும் நடந்துள்ளன என்றும் இதற்கு
முந்தைய எட்டு மாதங்களில் நிகழ்ந்த
60 தாக்குதல்களுடன்
இது ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியதாகும் என்றும் கூறியுள்ளது.
கடந்த
வெள்ளியன்றுதான்,
தொடர்ச்சியான ட்ரோன்
ஏவுகணைத் தாக்குதல்கள் குறைந்தது
54
பாக்கிஸ்தானியர்களையாவது ஆப்கானிஸ்தானிய எல்லைப் பகுதிக்கு அருகே இருக்கும்
பாக்கிஸ்தானின் கைபர் பழங்குடிப் பகுதியில் கொன்றுவிட்டன.
பாக்கிஸ்தானிய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக ட்ரோன் தாக்குதல்களை எதிர்க்கிறது,
ஆனால் நடைமுறையில்
CIA உடன்
ஒத்துழைத்து,
தாலிபன்கள் இன்னும்
பிற எழுச்சியாளர்கள் என்று அப்பழங்குடிப் பகுதியில் இருந்து அகற்றப்பட இலக்கு
கொண்டுள்ளவர்களை பற்றி உளவுத்துறைத் தகவல்களைக் கொடுக்கிறது.
ட்ரோன் தாக்குதல்கள்
பாக்கிஸ்தானிய மக்களிடையே அமெரிக்கா,
பாக்கிஸ்தான்
ஆட்சிகளுக்கு எதிராக ஆழ்ந்த,
பரந்த சீற்றத்தை
தோற்றுவித்துள்ளன.
இன்றுவரை
பாக்கிஸ்தானில் அமெரிக்க தரைப்படைகள் கணிசமாக ஊடுருவிச் செயல்படாமல் இருப்பதற்கு
தேவையானவற்றைச் செய்துள்ளது;
ஏனெனில் அத்தகைய
கொள்கை வெடிப்புத் தன்மையை ஏற்படுத்துவதுடன் சமூக,
அரசியல் விளைவுகளில்
உறுதிகுலைக்கும் நிலையை பெரிதாக ஏற்படுத்தியும் விடும்.
ஆட்சி ஏற்கனவே கடந்த
மாதம் விக்கிலீக்ஸின் மூலம் வெளிவந்த தகவல்களால் அதிர்ச்சியில் உள்ளது;
அவற்றில் அமெரிக்க
தூதரகத் தகவல் தந்திகள் சில சிறப்பு அமெரிக்க துருப்புக்கள் ஏற்கனவே பழங்குடிப்
பகுதிகளில் பாக்கிஸ்தானிய படைகளுடன் இணைந்து செயல்படுகின்றன என்று கூறப்பட்டுள்ளது.
புஷ்
நிர்வாகம் செப்டம்பர்
2008ல்
பாக்கிஸ்தானுக்குள் அமெரிக்க கமாண்டோக்களைத் தாக்குதலுக்கு அனுப்பியதற்கு கடுமையான
எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது;
இவற்றில் பல
பாக்கிஸ்தானியர்கள் இறந்து போயினர்.
இந்த அக்டோபர் மாதம்
ஒரு அமெரிக்க இராணுவ ஹெலிகாப்டர் எல்லையைக் கடந்து பாக்கிஸ்தானிய எல்லை
துருப்புக்களில்
3 பேரைக் கொன்றது.
இதற்கு
விடையிறுக்கும் வகையில் பாக்கிஸ்தான் ஆப்கானிஸ்தானத்திற்கு செல்லும் அமெரிக்கத்
தளவாட சாலைகளை முக்கிய எல்லைப் பகுதியில்
10 நாட்களுக்கு
நிறுத்தி வைத்தது.
ஆனால்
வாஷிங்டன் பழங்குடிப் பகுதிகளில் பாக்கிஸ்தான் அதன் இராணுவ நடவடிக்கைகளை விரிவாக்க
வேண்டும் என்று கடுமையான அழுத்தங்களை கொடுத்து வருகிறது.
ஏற்கனவே இங்கு
100,000க்கும்
மேற்பட்ட பாக்கிஸ்தானிய துருப்புக்கள் வடக்கு வஜீரிஸ்தானில் உள்ளன.
அமெரிக்க அரசியல்,
மற்றும் இராணுவ
அதிகாரிகள் வடக்கு வஜீரிஸ்தானில் ஒரு தாக்குதல் நடத்துவதற்கு இஸ்லாமாபாத் தேதி
குறிக்காமல் இருப்பது பற்றித் தங்கள் அதிருப்தியைத் தெளிவாக்கியுள்ளனர்.
கடந்த
வியாழனன்று ஆப்கானிய போர் பற்றிய நிர்வாகத்தின் பரிசீலனையின் விளைவுகளை அறிவித்த
ஒபாமா இந்த ஆவணத்தில் உட்குறிப்பாக பாக்கிஸ்தான் அதன் பகுதியில் தாலிபனின்
பாதுகாப்பான புகலிடங்களை அகற்றாதது பற்றிய குறைகூறல் பற்றிக் குறிப்பிட்டார்.
“முன்னேற்றம்
விரைவாக நடக்கவில்லை.
பாக்கிஸ்தானிய
தலைவர்களிடம் பயங்கரவாதிகளின் பாதுகாப்பான புகலிடங்கள் அவர்களுடைய எல்லைக்குள்
மோதலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று வாஷிங்டன் தொடர்ந்து வலியுறுத்தும்”
என்றார் அவர்.
வெள்ளியன்று
இஸ்லாமாபாத்திற்கு பயணித்ததை அடுத்து கூட்டுத் தளபதிகளின் தலைவரான முல்லென்
நிருபர்களிடம்,
“நாங்கள் ஒரே நாளில்
இதைத் தீர்க்க விரும்புகிறோம்.
நானும் பிறரும் இது
பற்றி ஒரு மூலோபாயப் பொறுமையின்மையைத்தான் கொண்டுள்ளோம்”
என்றார்.
டைம்ஸ்
கட்டுரை,
வடக்கு
வஜீரிஸ்தானில் தாக்குதலை தொடங்குவதற்கு பாக்கிஸ்தானின் எதிர்ப்புத்தான் அமெரிக்க
தளபதிகள் பாக்கிஸ்தானுக்குள் தரைப்படைத் தாக்குதல்களை அனுமதிக்குமாறு கோருவதற்குப்
பின் உந்துதலாக உள்ளது என்று எழுதியுள்ளது.
அது
குறிப்பிடுவதாவது:
“ஆப்கானிஸ்தான்
மூலோபாயம் பற்றிய விளைவுகளை அறிவிக்கையில்,
ஒபாமா நிர்வாக
அதிகாரிகள் பாக்கிஸ்தானுக்குள் உள்ள அச்சுறுத்தல்களை எப்படி விரிவான அமெரிக்க
செயல்கள் மூலம் சமாளிக்கலாம் என்பது பற்றி பரிசீலிக்கின்றனர்.
ஆனால் குறிப்பிட்ட
திட்டங்கள் எவற்றையும் அவர்கள் முன்வைக்கவில்லை.”
செவ்வாயன்று
பரிசீலனை பற்றிய விவாதத்திற்கு நடந்த பென்டகன் செய்தியாளர் கூட்டத்தில் கூட்டுத்
தளபதிகளின் துணைத் தலைவரான கடற்படைத் தளபதி ஜேம்ஸ் கார்ட்ரைட் எல்லை கடந்து
பாக்கிஸ்தானுக்குள் அமெரிக்கத் துருப்புக்களை அனுப்பும் வாயப்பு பற்றிய கருத்தை
எழுப்பினார்;
அத்தகைய நடவடிக்கை
“ஒருதலைப்பட்சமாகும்”,
“வேறுவழியின்றி
இறுதியில் எடுக்கப்படுவதாக இருக்கும்”
என்றார்.
டைம்ஸ்
கட்டுரைப்படி,
பாக்கிஸ்தானுக்குள்
அமெரிக்க தரைப்படைச் செயற்பாடுகளை விரிவாக்கும் திட்டம்
“வாஷிங்டன் மற்றும்
ஆப்கானிஸ்தானத்தில் உள்ள அமெரிக்க அதிகாரிகளால் விளக்கப்படது.”
இது
பாக்கிஸ்தானுக்குள் இருக்கும்
“போராளிகளை”
கைப்பற்றுவதில்
குவிப்புக் காட்டும்,
அவர்களை
ஆப்கானிஸ்தானுக்கு விசாரணைக்காக அழைத்துவரும்.
இராணுவத் தளபதிகள்
அத்தகைய விசாரணைகளில் இருந்து கிடைக்கும்
“உளவுத்துறைப்
புதையல் தவகல்கள்”
நிறைய இருக்கும்
என்று கருதுகின்றனர்
—இதில்
ஐயத்திற்கு இடமின்றி சித்திரவதையும் ஒரு பங்கைப் பெறும்.
“இப்பொழுது
அமெரிக்க இராணுவ அதிகாரிகள் நம்பிக்கையுடன் உள்ளனர்;
கொள்கையில் ஒரு
மாற்றும் என்பது இன்னும் வாடிக்கையான ஊடுருவல்களை அனுமதிக்கும்.”
என்று செய்தித்தாள்
எழுதுகிறது.
ஒரு மூத்த அமெரிக்க
அதிகாரி, “எல்லை
கடப்பதற்கு அனுமதி பெறுவதில் இதுவரை இவ்வளவு நெருக்கத்தில் நாங்கள் இருந்ததில்லை”
என்று கூறியதாக
டைம்ஸ்
மேற்கோளிட்டுள்ளது.
இக்கட்டுரை,
CIA ஏற்கனவே ஆறு
ஆப்கானிய போராளிகள் குழுவைச் செயல்படுத்துகிறது,
அவை
“ஆப்கானிஸ்தான்
முழுவதும் எழுச்சியாளர்களுக்கு எதிராக சிறப்புப் படைகளாக செயல்படுகின்றன.”
என்று
குறிப்பிட்டுள்ளது.
அத்தகைய போராளிகள்,
அதாவது மரணம்
செலுத்தும் குழுக்கள் காந்தகார்,
காபூல்,
ஜலாலாபாத் மற்றும்
கோஸ்ட்,
குனார் என்னும் கிராமப்புற
மாகாணங்களில் செயல்படுகின்றன.
பாக்டிகா
பாதுகாப்புப் படை என அழைக்கப்படும் ஆறாவது பிரிவு இருமுறை எல்லையை கடந்து
பாக்கிஸ்தானில் நடவடிக்கைகளை மேற்கொண்டதாக டைம்ஸ்
கூறியுள்ளது.
பாக்கிஸ்தானுக்குள் கூடுதலான தரைப்படைத் தாக்குதல்களை அமெரிக்க தளபதிகள் நடத்த
வேண்டும் என்ற கருத்தைப் பற்றி ஒரு கட்டுரை எழுதிய பிரிட்டனின்
Telegraph
அத்தகைய தகவல்களை
அமெரிக்க அதிகாரிகள் வடக்கு வஜீரிஸ்தானில் தாக்குதலை பாக்கிஸ்தான் நடத்துவதற்கு
அழுத்தம் கொடுக்கும் வகையில் கசிய விட்டுள்ளனர் என்று சில பகுப்பாய்வாளர்கள்
கருதுவதாகத் தெரிவிக்கிறது.
“ஆப்கானிய
தாலிபன்”
பற்றிய ஒரு வல்லுனர் என
விவரிக்கப்படும் அஹமத் ரஷித்
“இது
வேண்டுமென்றே வந்துள்ள ஒரு கசிவு.
கடந்த ஆறு மாதங்களாக
அமெரிக்கர்கள் இதுபற்றித்தான் பேசுகின்றனர்”
என்று கூறியதாக
செய்தித்தாள் மேற்கோளிட்டுள்ளது.
வாஷிங்டன்
தரைத் தாக்குதல்களை விரிவாக்க ஒப்புதல் கொடுக்கப் போகிறதா,
அல்லது இப்பொழுது
உள்ளதுபோல் அத்தகைய கொள்கை மாற்றத்தை ஒரு அச்சுறுத்தல் போல் பயன்படுத்தி
பாக்கிஸ்தானிய ஆட்சியை ஆப்கானிஸ்தானில் நடக்கும் காலனித்துவப் போரின் உள்
விரோதிகளுக்கு எதிரான தாக்குதலை விரிவாக்குவதற்கு மிரட்டுகிறதா எது எப்படி
இருந்தாலும்,
அமெரிக்கக்
கொள்கையின் அடிப்படை உந்துதுல் போரை விரிவாக்க வேண்டும் என்பதுதான்.
இதன் தவிர்க்க
முடியாத விளைவு அப்பகுதி முழுவதும் உறுதி சீர்குலையும் என்பதுடன் இன்னும் பரந்த
இராணுவ தீவிர செயற்பாடுகள் விளையும் என்பதுதான். |