Bangladesh police shoot striking garment workers
பங்களாதேஷ் ஆடைத்
தொழிலாளர்கள் மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு
By Wimal Perera
15 December 2010
பிரதமர்
ஷேக் ஹஸினா தலைமையிலான அவாமி லீக் அரசாங்கத்தினால் நிறுத்தப்பட்ட போலீஸார்,
டிசம்பர் 12ம் தேதியன்று போராட்டத்தில் ஈடுபட்ட ஆடைத் தொழிலாளர்கள்
4 பேரை சுட்டு வீழ்த்தியது உலக நடவடிக்கையின் ஒரு கூரிய வெளிப்பாடாகவும்-2008 ல்
ஏற்பட்ட சர்வதேச நிதி நெருக்கடியின் சுமைகளை உழைக்கும் வர்க்கத்தினரின் மீது
திணிக்கும் அரசாங்களின் வன்முறை குரூரத்தின் சுழற்சி அதிகரிப்பாகவுமே உள்ளது.
கொள்கைகளின்
தன்மை நாட்டுக்கு நாடு வேறுபடலாம் என்றாலும்- பங்காளதேஷில் அதிகரித்து வரும் பண
வீக்கத்திற்கிடையே,
ஜவுளி தொழிலாளர்களின் சம்பள உயர்வுக் கோரிக்கையை நசுக்கும் வடிவத்தை
அது எடுத்துள்ளது-அரசாங்கத்தின் தீவிரமான அடக்குமுறையுடன் அவைகள் அமல்படுத்தப்பட்டு
வருகின்றன.
பங்களாதேஷில் நடந்த இந்த நிகழ்வுகள்,
டிசம்பர்
தொடக்கத்தில் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களின் போராட்டத்தை உடைக்க
ஸ்பானிஷ் அரசாங்கம் அவசர நிலையை பிரகடனப்படுத்தி,
இராணுவத்தை நிறுத்தியது மற்றும் ஆகஸ்டில் போராட்டத்தில் ஈடுபட்ட
கிரேக்க லாரி டிரைவர்களுக்கு எதிராக கிரேக்க அரசாங்கம் துருப்புகளை ஏவிவிட்டதன்
தொடர்ச்சியாகவே உள்ளது.
பங்காளதேஷில் நடந்த போலீஸ் துப்பாக்கிச் சூடு,
ஜூலையில் ஆடைத்
தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்திற்கு எதிராக பயன்படுத்தப்பட்ட முறைகளின் ஒரு
அதிகரிப்பாகவே குறிக்கப்பட்டுள்ளது.
பின்னர்,
கலவர போலீஸார்
தடியடி நடத்தியும்,
ரப்பர்
தோட்டாக்களால் சுட்டும்,
கண்ணீர்ப்புகை
குண்டுகளையும் வீசினர்.
போராட்டத்தை
முடிவுக்கு கொண்டுவந்ததில் தொழிற்சங்கங்கள்,
அரசாங்கம் மற்றும்
தொழிலாளர்களுடன் சரணாகதி பேரத்தில் ஈடுபட்டு,
முக்கிய பங்காற்றின.
மாதம் ஒன்றுக்கு 43
அமெரிக்க டாலராக உயர்த்தப்படுவதாக இருந்த குறைந்தபட்ச கூலி,
இன்னமும்
வறுமைக்கோட்டிற்கு கீழேயும்,
என்ன கோரப்பட்டதோ அதில் பாதிக்கும் சற்று கூடுதலாகவே உள்ளது.
ஏற்றுமதி
தயாரிப்பு மண்டலங்களில்
(EPZs)
"சட்டம் ஒழுங்கை"
பராமரிக்க "தொழிற்சாலை போலீஸை" நிறுத்தி,
மேலும் மோதலில்
ஈடுபடுவதற்கு தயாரவதற்காக ஆசுவாசப்படுத்திக்கொள்வதற்கான இடைவெளியை அரசாங்கம்
பயன்படுத்திக்கொண்டது.
சம்பள ஒப்பந்தத்தை
மதிக்க கம்பெனிகள் தவறியதால் தொழிலாளர்கள் இந்த மாதம் போராட்டத்தில் ஈடுபட்டபோது,
போராட்டங்களை நசுக்க
போலீஸார் குவிக்கப்பட்டனர்.
டிசம்பர் 12 ஆம் தேதியன்று போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள்
மீது-இந்த முறை நிஜமான தோட்டாக்களுடன் போலீஸார் சுட்டனர்.
போலீஸின்
இந்த தாக்குதலின் பின்னணியில் சர்வதேச ஆடை நிறுவனங்களிடையே போட்டியை அதிகமாக்கிய
உலக பொருளாதார நெருக்கடி இருக்கிறது.
பங்காளதேஷின்
ஏற்றுமதியில் 80 சவிகிதத்தை கொண்டிருக்கும் ஆடைத் துறை,
கடந்த ஆண்டில் 12
பில்லியன் டாலரை ஈட்டியுள்ளது.
வளர்ச்சி
அதிகரிப்பின் ஒரு அடையாளமாக,
இந்த ஆண்டின் முதலாவது காலாண்டில் வருவாய் கடந்த ஆண்டின் இதே
காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் 37 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
உலகின்
மிகப்பெரிய- டெஸ்கோ,கேப்,ஹெச்&எம்,
வால்மார்ட்,
மார்க்ஸ்&ஸ்பென்சர்,
ஆஸ்டா,
ஜாரா,
கேரிஃபோர்,
லெவி ஸ்ட்ராஸ்
மற்றும் டோமி ஹிலஃபிகர் போன்ற பெயர்கள் கொண்ட கடைகள் மற்றும் துணிகளுக்கான-
குறைந்த-விலை ஆடைகள் கிடைப்பது பங்காளதேஷிலிருந்துதான்.
சீனா மற்றும் வேறு
இடங்களில் அதிகரித்து வரும் தொழிலாளர்களின் போராட்டங்களை எதிர்கொள்ள
வேண்டியதிருப்பதால்,
அதிக ஆதாயம்
ஈட்டுவதற்காக குறைந்த கூலியுடைய இடங்களை தேடி அவர்கள் உலகில்
அலைந்துகொண்டிருக்கிறார்கள்.
"சீனாவின் (தொழிலாளர்) போராட்டத்திற்கு பின்னர் ஆடை நிறுவனங்களும்
ஏற்றுமதியாளர்களும் குறைந்த கூலியுடைய இடத்தை தேடிக்கொண்டிருக்கிறார்கள்" என்று
தி ஃபைனான்சியல் டைம்ஸ் ஜூலையில் குறிப்பிட்டிருந்தது.
சர்வதேச
மட்டத்தில்
போட்டியிடுவதற்காக நாட்டின் சம்பள அளவுகள் நிறுத்தப்பட்டால் தொழில் ஆர்டர்களும்,
இலாபங்களும்
பெருமளவில் காணாமல் போய்விடும் என்று பங்காளதேஷ் தொழிலாளர்கள் அச்சப்படுகின்றனர்.
பங்களாதேஷில்
தற்போது ஒரு ஆடைத் தொழிலாளரின் குறைந்தபட்ச கூலி ஒரு மணி நேரத்திற்கு வெறும் 21
அமெரிக்க சென்ட்களாக மட்டுமே உள்ளது.கம்போடியா,
இந்தோனேஷியா,
இலங்கை,
வியட்நாம்,இந்தியா
மற்றும் சீனா ஆகியவற்றுடன் இந்த கூலி விகிதத்தை ஒப்பிட்டால்,
அவை முறையே 24,
35,
46,
52,
55 மற்றும் 93 சென்ட்களாக உள்ளன.
ஆனாலும்,
2006 லிருந்து
எவ்வித கூலி உயர்வையும் பெறாத தொழிலாளர்கள்,
தற்போதைய சம்பளத்தை
வைத்துக்கொண்டு வாழ முடியாது.
சமீப மாதங்களாக
பணவீக்க விகிதம் கடுமையாக அதிகரித்துள்ளதோடு,
அடிப்படை உணவு
பொருட்களின் விலையும் 10 சதவிகிதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.
இதற்கும் மேலாக,
கூலி இல்லா மேலதிக
நேர வேலை செய்யவும்,
ஒதுக்கப்பட்ட
கடுமையான வேலைகளை செய்துமுடிக்கவும் பங்காளதேஷ் தொழிலாளர்கள்
நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.
அளவுக்கு அதிகமான
கும்பலாக வேலை செய்யும் அவர்களது பாதுகாப்பாற்ற பணிநிலைகள்,
கடந்த வாரம் டாக்கா
EPZ
ல் உள்ள 10 மாடி ஆடை
தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து,
அதில் குறைந்தது 29
தொழிலாளர்கள் பலியானதன்
மூலம் வெளிப்பட்டது.
ஆடை
தொழிலாளர்களின் சமீபத்திய போராட்டங்களை "அயல்நாட்டு சதி" என்று விமர்சித்த பிரதமர்
ஷேக் ஹஸினா,
"நாட்டின்
அதிக-வருவாய் ஈட்டும் ஆடைத் துறையில் கலகத்தை ஏற்படுத்துவதற்கான
சதித்திட்டங்களுக்கு வாய்ப்புள்ளதால் உஷாராக இருக்கும்படி" தமது அமைச்சர்களுக்கு
உத்தரவிட்டார்.
அவருடைய இந்த
கருத்து,
குறிப்பாக பங்காளதேஷில் ஆடை
தொழிலாளர்கள் மேற்கொள்ளும் எந்த ஒரு முயற்சியும்,
வேறு நாடுகளில்
கூலிக்காக இதே போராட்டத்தில் உள்ள அவர்களது வர்க்க சகோதர,
சகோதரிகளுடன் தொடர்புபடுத்தும் எதிரான நோக்கத்துடனேயே உள்ளன.
கம்போடியாவில் செப்டம்பரில்,
போராட்டத்தில்
ஈடுபட்ட 200,000
ஆடை தொழிலாளர்களை அச்சுறுத்தி தாக்குவதற்காக,
இராணுவ போலீஸாரை
அனுப்பி ஹன் சென் அரசாங்கம் பதிலடிகொடுத்தது.
அதன்
பின்னர் வேலைக்கு
யாராவது வராமல் இருந்தால் அவர்கள் வேலையைவிட்டு நீக்கப்படுவார்கள் என்று
முதலாளிமார்கள் மிரட்டியதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.
அரசாங்கம்,
முதலாளிமார்கள் மற்றும் சில தொழிற்சங்கங்களால் தொழிலாளர்களுக்கு
ஆதரவாக ஏற்படுத்தப்பட்ட சம்பள ஒப்பந்தத்திற்கு எதிரானதாகவே இந்த தொழில் நடவடிக்கை
இருந்தது.
ஆசியாவில்
வறிய மட்ட சம்பளத்திற்காக போராடும் தொழிலாளர்களின் போராட்டங்கள்,
ஐரோப்பாவில்
மேற்கொள்ளப்பட்ட கடுமையான நடவடிக்கைகளுக்கு எதிராக எழுந்த எதிர்ப்புகள் மற்றும்
போராட்டங்களுடன் நெருக்கமான தொடர்புடையதாகவே உள்ளன.
அது பங்காளதேஷில்
இருந்தாலும் அல்லது கம்போடியா மற்றும் சீனா அல்லது ஸ்பெயின்,
கிரேக்கம் மற்றும்
பிரிட்டனில் இருந்தாலும்,
முதலாளிமார்களால்
ஒரேமாதிரியாக செய்யப்படும் முடிவில்லாத சம்பள மற்றும் வாழ்க்கை தர குறைப்பு
அவமதிப்பை தொழிலாளர்கள் எதிர்கொள்ள வேண்டியதுள்ளது.
இந்த நிர்ப்பந்தம் உலக முதலாளித்துவத்தின் மோசமான நெருக்கடியாகவே
உள்ளது.
உழைக்கும்
வர்க்கத்தினரின் எந்த ஒரு ஐக்கியப்பட்ட சர்வதேச
ரீதியான
போராட்டத்திற்கும் முதல் தடையாக இருப்பவை தொழிற்சங்கங்கள்தான்.
ஒவ்வொரு நாட்டிலுமே,
தொழிற்சங்கங்களின்
செயல்பாடுகள்,
தொழிலாளர்களின் அதி
அடிப்படை நலன்களை கூட காக்க முடியாததாகவே உள்ளன,
ஆனால் "தங்களது"
முதலாளிமார்கள் சர்வதேச போட்டியில் இலாபம் ஈட்டுவதை மட்டும்
உறுதிபடுத்திவிடுகிறார்கள்.
டிசம்பர் 12 ஆம்
தேதியன்று நடந்த போலீஸ் கொலைகளுக்கு அடுத்த மறுதினமே,
பங்காளதேஷில் உள்ள
ஆடை தொழிற்சங்கள்,
தொழிலாளர்களின்
எதிர்கால போராட்டங்களை நசுக்குவதற்கான செயல்முறையை வகுப்பதற்காக,
தொழிலாளர் துறை
அமைச்சர் மோன்னுஜாம் சுஃபியான் மற்றும் முதலாளிமார்களின் பிரதிநிதிகளுடன் அமர்ந்து
பேசினார்கள்.
"பிரச்சனைகளை
தீர்ப்பதற்காக" ஒவ்வொரு தொழிற்சாலையிலும் தொழிற்சங்க-முதலாளிமார்-அரசாங்க கூட்டு
கமிட்டிகளை அமைக்கலாம் என்று அமைச்சர் தெரிவித்த திட்டத்திற்கு,
தொழிற்சங்கங்கள் உடனடியாக ஒப்புக்கொண்டுவிட்டன.
முதலாளித்துவ உத்தரவுகளை ஏற்றுக்கொள்வதும்,தொழிலாளர்
சம்பளத்தை வரையறை செய்வதில் ஏமாற்றுவதும் தொழிற்சங்க
வாதத்தின் மிக
இயல்பானதாகிவிட்டது.
ஆனாலும்,
கடந்த முப்பதாண்டு
காலத்திற்கும் மேலான உற்பத்தி உலகமயமாக்கல்,
எந்த ஒன்றுக்காகவும்
சம்பள பிரச்சாரம் செய்யும் எந்த ஒரு திறனையும்,
நாட்டின் அரசாங்க
வரையறைக்குட்பட்ட குறைவான சீர்திருத்தங்களை கூட,
முற்றிலும்
சிதைத்துவிட்டது.1980 களில் சம்பளத்திற்காக சட்டவிரோத தீவிரவாத தொழிற்சங்கங்கள்
கடுமையான போராட்டம் நடத்திய தென் கொரியா மற்றும் தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில்,
தற்போது அதே தொழிற்சங்கங்கள்தான் நாட்டின் நிறுவனங்கள் மற்றும்
அரசியல் ஸ்தாபனங்களை தாங்கிபிடிக்கும் மையமாக உள்ளன.
தொழிலாளர்களின் போராட்டத்திற்கு எதிரான சமீபத்திய அடக்குமுறை,
ஒவ்வொரு நாட்டிலும்
உள்ள உழைக்கும் வர்க்கத்தினருக்கு விடப்பட்ட ஒரு எச்சரிக்கையாக உள்ளது.
தொழிலாளர்கள்
தங்களது வாழ்வாதாரங்களையும்,
அடிப்படை ஜனநாயக
உரிமைகளையும் பாதுகாப்பதற்கான ஒரு சர்வதேச போராட்டத்தில் ஒன்றுசேரவேண்டும்,
பிளவுபட்டால்
அவர்கள் வீழ்ச்சியடைவார்கள்.
அதுபோன்ற போராட்டம்,
உழைக்கும்
வர்க்கத்தினரிடத்தில் தற்போதுள்ள துரோக தலைவர்களுக்கு எதிரான புரட்சியில் மட்டுமே
நடைபெறும்.
ஒரு சோசலிச
வேலைத்திட்டத்தின் அடிப்படையில்,
தொழிலாளர்களை
அவர்களுக்கு எதிரான பொதுவர்க்க எதிரியான- இலாப அமைப்புக்கு எதிராக ஒன்று
திரட்டுவதற்காக ஒரு புரட்சிகர கட்சியை கட்டியெழுப்புவது அதற்கு தேவையாக உள்ளது.
அதுதான் நான்காம்
அகிலத்தின்
அனைத்துலக
குழு
மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தின் முன்னோக்காக உள்ளது. |